Saturday, March 27, 2010

குடும்பச் சண்டையில் மனைவி தீக்குளிப்பு:(

புருஷன் மனைவி சண்டையில் மனைவி தீக்குளிப்பு. இறந்த உடலுடன் கணவனின் வெறியாட்டம். பத்திரிகை செய்திக்குன்னு பரபரப்பான தலைப்பு. ஆனால் சம்பவம் நடந்த சமயம் இருந்த மீடியா(?!) ....வெறும் செவிவழிச்செய்தி மட்டும்தான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கணும். காலம் அப்படி ! வெறும் சன் & மூன் தான்.

பொதுவா புருசன் பெண்டாட்டி சண்டைன்னாவே அது ரெண்டுபேரில் யாராவது அடுத்தவுங்க குடும்பத்தைக் குறை சொன்னதுலேதான் ஆரம்பிக்கும். அதான் உப்புப்போட்டுச் சோறு திங்கறமே...ரோசம் இருக்காதா?

பொண்ணோட பொறந்த வீட்டுலே ஒருவிசேஷம். பொண்ணு மாப்பிளைக்கு அழைப்பு இல்லே. மருமகனுக்கு எரிச்சல். சேதி கேள்விப்பட்ட பொண்ணு, புருசனை மதிச்சுக் கூப்புடலைன்றது ஒரு பக்கம் இருந்தாலும், அது நம்ம பொறந்தவீடாச்சே, அங்கே நமக்கில்லாத உரிமையான்னு எண்ணம். 'நீங்க சும்மா இருங்க. அதெப்படி எங்க வீட்டாம்பளையை மருவாதையில்லா நடத்தறேன்னு நாக்கைப் புடுங்கிக்கிறமாதிரி எங்கப்பனை நாலு வார்த்தைக் கேட்டுட்டு வாரேன்'ன்னு கிளம்புனா. 'அடிப்போடி....பைத்தியகாரச்சி. மதியாத வீட்டு வாசலை மிதிக்கலாமா'ங்கறான் புருசன். 'மரியாதை தெரியாத குடும்பம் உங்களுது. நல்ல வம்சத்துலே போய் பொண் எடுத்தேன். என்னைச் சொல்லணும். உங்கப்பனுக்கு நேரம் சரியில்லை. பொட்டுன்னு போகப்போறான் பாரு'ன்னான். 'அட நீங்க வேற. என்னாத்துக்கு எங்கப்பனுக்குச் சாபம் கொடுக்குறீர்? எங்க வம்சத்துக்கு என்னா கொறச்சல்? நான் போய் அங்கே என்னதான் நடக்குதுன்னு பாத்துட்டு வரேன். எங்கூடு தானே? கூப்புடாமப்போனா என்ன'ன்னா இவ.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ தா தைன்னு குதிக்காம உள்ளாற போய் வீட்டு வேலையைப் பாரு."

"இல்லே போகத்தான் போறேன். போனா என்ன செய்வே?"

"போவே? உன் காலை ஒடிச்சு அடுப்புலே வச்சுருவேன்."

"வப்பே வப்பே. நான் அங்கே விருந்து தின்னவா போறேன்? நீ என் அப்பனே இல்லைன்னு சொல்லிட்டு வரப்போறேன். இன்னியோட உன் சங்காத்தமே இல்லேன்னு காறி மூஞ்சுட்டு வரத்தான் போறேன்."

"போ போ. என் பேச்சை மீறிப்போனா...அப்படியே போயிறனும். திரும்பி இங்கே வர்ற வேலை வச்சுக்காதே."

பேசாம இருந்துருக்கலாம். ஆனால் இவளுக்கு இப்போ நேரம் சரியில்லை. வீம்பு புடிச்சுக்கிட்டுக் கிளம்பிப்போனா அப்பன் வீட்டுக்கு. 'எங்கே வந்தே' ன்னு கேட்டான் அப்பன். இவளுக்கு வந்துச்சே ஒரு கோவம்! 'அதெப்படி நீ மருமகனைக் கூப்புடாம விசேஷம் நடத்தப் போச்சு'ன்னு குதிக்கிறாள்.

"அவன் என் மருமகனே இல்லை. என்னோட எதிரி நம்பர் ஒன்."

"நல்லா இல்லே உம் பேச்சு. நீதானே, அவரு உன் மருமகனா வரணுமுன்னு தவமான தவமிருந்தே? அவர் சரின்னதும் என்னைப் பெத்து வளத்து ஆளாக்கி அவருக்குக் கட்டிவச்சே. இப்போ எதிரி கிதிரின்னா என்னா அர்த்தம்?"

"ஆமாம். இல்லேங்கலை. உலகத்துக்கே ராஜாவை, மகளுக்குக் கட்டிவச்சு
மருமகனாக்குனா என் பேச்சு கேட்டு நடப்பான்னு இருந்தேன். ஆனா....இவன் சொல்பேச்சும் கேக்கறதில்லை. மதிச்சும் நடந்துக்கலை. சுடுகாட்டுலே திரியற சொறிப்பயலை உனக்குக் கட்டிவச்சதுதான் இப்போ தப்பாப் போயிருச்சு."

விசேஷத்துக்கு வந்துருந்த எல்லாப் பெருந்தலைகளுக்கும் முன்னாலே, தன் புருசனை அவமானப்படுத்திப் பேசுனதைக் கேட்டவுடன் இவ சாமியாடறாள். போன இடத்துலே இவளுக்கு என்ன ஆகுமோன்னு அதுக்குள்ளே அவ புருசன், ஒரு அடியாளைப் பின்னாடியே அனுப்பி வச்சான். அவன் வந்து எல்லாததையும் அடிச்சு நொறுக்கி அப்பன்காரனையும் கொன்னுபோட்டான்.

இந்த கலாட்டாலே அந்த இடமே பத்தி எரியுது. இவ பார்த்தா..... போவாதே போவாதேன்னு சொல்லச்சொல்ல அதைக் கேக்காமப் போயிட்டேனே.... இப்ப எந்த மூஞ்சை வச்சுக்கிட்டு அங்கே திரும்பப்போறதுன்னு அழுதுகிட்டே ஆங்காரத்தோடு அந்த தீயிலே விழுந்து உயிரை மாய்ச்சுக்கிட்டாள்.

விஷயம் தெரிஞ்சு புருசன்காரன் மார்லே அடிச்சுக்கிட்டு ஓடியாந்தான். வந்தா, இவ பொணமாக் கிடக்கா. 'ஐயோ பாதகத்தீ, என் பேச்சைக் கேக்காம இப்படி வந்து உசுரை விட்டயே'ன்னு அலறிக்கிட்டே, அவ பொணத்தை எடுத்துத் தோளில் போட்டுக்கிட்டு வெறிபிடிச்சு ஆடிக்கிட்டே உலகமெல்லாம் சுத்தறான். சரி....... கொஞ்ச நேரத்துலே துக்கம் அடங்கிருமுன்னு பார்த்தா .............எங்கே? இவன் ஆடுற ஆட்டத்துலே அகில உலகமே நடுங்குது.

மச்சினன்காரன் பார்த்தான். இதென்னடா கோராமைன்னு..... செத்த நேரத்துலே அடங்குவான்னு பார்த்தா............ வெறி கூடிக்கிட்டே போகுது. இது நல்லதில்லை. போனவளை நல்லடக்கம் செய்யாம பொணத்தை வச்சுக்கிட்டே இதென்ன போராட்டம்? நாமாச்சும் போய் அதை வாங்கி செய்யவேண்டியதைச் செஞ்சுறலாமுன்னாலும் அவன் முன்னே போகவே பயமா இருக்கு. பேசாம ஒரு காரியம் நாமே செய்யவேண்டியதுதான்னு தீர்மானிச்சு, கையிலே சுத்திக்கிட்டு இருந்த சக்கரத்தை ஏவுனான். சர்ன்னு அது போய் பொணத்தைத் துண்டுதுண்டா அறுத்து வீசிறிச்சு. மிக்ஸியிலே அடிச்சமாதிரி ஆகிருச்சு. மொத்தம் 51 துண்டு:(

மூக்கொரு பக்கம்,. கண்ணொரு பக்கம், காது ஒரு பக்கம், கையொரு பக்கம், காலொரு பக்கம்ன்னு ஊர் உலகமெல்லாம்(ஒரு பேருக்குத்தான் உலகமுன்னு சொன்னது. இங்கே பாரத தேசத்துலேதான் (பிரிவினைக்கு முன்னால் இருந்த பாரதம்) போய் விழுந்துச்சு. இந்த 51 இடங்களைத்தான் சக்தி பீடமுன்னு சொல்றாங்க. அதுலே வலது கால் வந்து விழுந்த இடம்தான் இப்போ நாம் நிக்குமிடம்.

பத்ரகாளி கோவில்ன்னு பெயர் போட்டு வச்சுருக்காங்க. கோவிலில் பராமரிப்பு, பழுது பார்த்துப் பெயிண்ட் அடிக்கும் வேலை ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருக்கு. திருவிழா வருதாம். அவ்வளவாக் கூட்டமில்லை.


அலங்கார தோரணவாசலில் ரெண்டு பக்கமும் சிங்கம் உறுமுது. ஒரு பக்கம் ஹனுமன் நிக்கிறார். அடுத்த பக்கம் கவனிக்க விட்டுப்போச்சு:(
அளவான சின்ன கோபுரம். உள்ளே நுழைஞ்சவுடனே ஒரு பெரிய தாமரை மலர் பீடம். அதுலே நடுவாந்தரமா கணுக்கால் வரையில் ஒரு பளிங்குக்கால். கொலுசு அணிஞ்ச அழகான பாதம்.
அதைக் கடந்தால் சின்னதா கருவறை. பளிங்குலே தேவி உருவம், கால் எல்லாம் இருக்கு. அழகா ஒரு க்ரீடம் போல காலுக்குச் சார்த்தி இருக்காங்க. நவராத்ரி காலங்களில் கூட்டம் நெரியுமாம். பஞ்ச பாண்டவர்கள் பாரதப்போரில் வெற்றி கிடைக்கணுமுன்னு இங்கே வந்து தேவியிடம் பிரார்த்தனை செஞ்சாங்களாம். இவுங்க கூடவே ஸ்ரீ கிருஷ்ணனும் வந்தாராம். கேட்ட வரம் கிடைக்குமாம். அதுதான் இன்னும் சிறப்புன்னு ஹரியானா டூரிஸம் வச்ச தகவல் பலகை சொல்லுது.
எங்க பாட்டி எப்பவும் சொல்றது, 'யத்தனம், ப்ரயத்தனம், தெய்வத்தனம்'ன்னு. அதாவது ஒரு காரியம் நிறைவேறணுமுன்னா கடவுள் அனுக்கிரஹம் வேணும். அது எப்போ கிடைக்குமுன்னா, நாம் தீவிரமா அதைப்பற்றி ஆலோசிக்கணும். அப்புறம் அதை அடையத் தேவையான எல்லா முயற்சியையும் எடுக்கணும். அதைப் பார்த்துட்டுத்தான் கடவுள் ,உண்மையான முயற்சி வெற்றி அடையட்டுமுன்னு நிறைவேற்றிக் கொடுப்பார். (கடவுளே பார்த்து நடத்தித் தரட்டும்னுன்னு ச்சும்மா உக்கார்ந்திருந்தா ஒன்னும் நடக்காது!)

பஞ்சபாண்டவர்கள் ஒரு பக்கம் போருக்குத் தேவையான எல்லா முயற்சிகளும் எடுத்துக்கிட்டே, ஒரு கோவில் விடாமப்போய் கடவுளை வேண்டிக்கிட்டு இருந்துருக்காங்க.
கோவிலை விட்டு வெளியே வரும்போது மணி பனிரெண்டரை. என்னோட அரைநாள் முடிஞ்சு போச்சு. ஆனால் இன்னிக்குத்தான் ஞாயித்துக்கிழமை லீவாச்சே!
நாலு தெரு சந்திக்கும் இடங்களில் எல்லாம் அழகான சிலைகளை வச்சுருக்காங்க. ரெண்டு பக்கமும் வெவ்வேற சிலைகள். கதைதான் தெரியலை:(

ஜ்யோதிசர் சரோவர்ன்னு பெயர் பார்த்தமே. அங்கே போகலாமுன்னு சொன்னால்................. அங்கே ஒன்னும் இல்லையாம் வெறும் குளமாம். முக்கிய கோவில்களை நீங்க விட்டுறக்கூடாதுன்னுதான் இங்கெல்லாம் கொண்டு வந்தேன்னு ரோஹித் சொன்னதும், ஆமாமாம். நேரமாகுது. லஞ்ச் டைம் வேற 'எங்கியாவது போய் சாப்டுட்டு டெல்லி போற வழியைப் பார்க்கலாம் 'என்றார் கோபால்.

"இல்லையே...அங்கே முக்கியமா என்னவோ இருக்குன்னு எங்கியோ படிச்சேனே"

"அதையெல்லாம் அடுத்தமுறை (?) பார்த்துக்கலாம். பாவம் இந்த ரோஹித். காலையில் 7 மணிக்கு வந்த ஆள். பசிக்காதா? ம்ம்ம்ம்...சலோ...கிதர் பி அச்சா ஜாகா மே கானா காயே(ங்)கா "
கடைசியில் 'குருக்ஷேத்ரத்தில் அரை க்ஷேத்ரம்' பார்த்துட்டு வந்துருக்கேன். அடுத்து எப்பவாவது போனால் கீதை உபதேசம் நடந்த இடத்தைப் பற்றி எழுதுனால் ஆச்சு.

நல்ல இடத்தைத் தேடித்தேடி ஒரு மணி நேரம் கழிச்சு வரும் வழியில் கர்னால் என்ற ஊரைக் கடந்ததும் நெடுஞ்சாலையில் பகலுணவு ஆச்சு. நடுக்காட்டிலே முளைச்ச அற்புதமான கட்டிடம். கலைப்பொருட்கள் விற்கும் கடையுடன் சேர்ந்த 'வசதியான ' நியூ வொர்ல்ட் ஃபாஸ்ட் ஃபுட். படு சுத்தம். சாப்பாடும் நல்லாவே இருந்துச்சு. என் கவலை எல்லாம் இவ்வளவு அழகான கலைப்பொருட்களை யார் இங்கே வந்து வாங்குவாங்க? ன்றது. கடையின் உரிமையாளர் சொல்றார் இந்தியாவில் எந்த இடத்துக்கும் அனுப்பி வைப்பாராம். எல்லாமே வெளியூருகளுக்குத்தான் போகுதாம்!

ஒன்னரை மணி நேரம் பயணம் செஞ்சு டெல்லியின் எல்லைக்கு வந்து, அங்கிருந்து ஊர்ந்து ஊர்ந்து ஹொட்டேல் போக ஒன்னரை மணி நேரம்(தான்) ஆச்சு. ஏன்னா....ஞாயித்துக்கிழமை பாருங்க. அதான் ட்ராஃபிக் அவ்வளவா இல்லையாம்:-)

மறுநாள் நடக்கவிருந்த பதிவர் சந்திப்பை ( ஜஸ்ட் ஒன் டு ஒன்) கேன்ஸல் செய்யும்படியா ஆயிருச்சு, அங்கே போக வர நாலு மணிநேரம் ஆகும் என்பதால்:( ஒரு முக்கால் மணி நேரம் தொலைபேசி வழியா பதிவர் சந்திப்பு நடந்துச்சு.

போகட்டும். பொழைச்சுக்கிடந்தா அடுத்த முறை பார்க்கலாம். வரட்டா.......

53 comments:

said...

thanks for sharing, super place, photos,

said...

டீச்சர், ஆரம்பப் பந்திகள்ல பதற வச்சுட்டீங்க.. பாதியில விட்டுட்டு ஜூனியர் விகடன்ல தேடிப் பார்த்தேன் இப்படி ஏதாவது வந்திருக்கான்னு :-(

டீச்சர், பேசாம டீவி சீரியல் பக்கம் போகலாம் கதை,வசனம் எழுத :-)

Anonymous said...

திருவிளையாடல்ல பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுட்டே படிச்சேன்.

said...

க‌தை என்ன‌வோ இப்ப‌ ந‌ட‌ந்த‌ மாதிரி இருந்த‌து...இன்னும் சில‌ இட‌ங்க‌ளில் இப்ப‌டியும் ந‌ட‌க்கிற‌து.அப்ப‌ப‌ நாம் மாற‌வில்லையோ என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ருது.

said...

நல்லா போகும் தொடரை இத்தோட
நிறுத்திடுவேங்களோனு கவலையா இருக்கு.

said...

வாங்க ராம்ஜி யாஹூ.

தொடர்ந்து வருவதற்கு என் நன்றிகள்.

said...

வாங்க ரிஷான்.

டிவி சீரியல்ஸ்க்கா?

ஊஹூம் சரிப்படாது. அழுகாச்சி காவியமா எழுதணும் அங்கே! எல்லாம் செண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி மண்ட்ட்ட்ட்ட்ட்டு.

said...

வாங்க சின்ன அம்மிணி.

க்ரேஸ் மார்க் 10!

எங்கேயும் 'பாத்திரங்கள்' பெயர் குறிப்பிடலையேன்னு இருந்துச்சு.

said...

வாங்க குமார்.

இந்தச் சண்டைகளும் நிகழ்வுகளும் கூட ப்ராச்சீன் தான்:(

said...

வாங்க சிஜி.

நல்லாப் போகுதா? அதைக் கடைசி பகுதியில் மட்டும் வந்து சொன்னா எப்படி?

முந்தியே சொல்லி இருந்தால் இன்னும் நல்லா டெவலப் பண்ணி மெகாவா இழுத்துருப்பேனே:(

இப்ப வடை போச்சே!!!

said...

அடேங்கப்பா !!

ஒரு ஹிட்ச் காக் படம் மாதிரில்ல் இருக்கு !!

போகப்போகத்தான் தெரியுது !! அடே நம்ம சிவாசி, சாவித்ரி நடிச்ச படமாச்சே இதுன்னு
பாத்தா
தக்ஷன் செஞ்ச யாகம். அது சரி... என்னதான் கோவம் இருந்தாலும் வீட்டு மாப்பிள்ளையை கூப்பிடாம இருக்கறது அ நியாயம் இல்லியா ?

அதுதான் இருக்கட்டும். வந்த பொண்ணுகிட்ட தகப்பன் பேசுற பேச்சா அது !!

" அடே பார்வதியா ! வாடி என் கண்ணம்மா ? இப்பதான் வந்தியா அம்மா ! எங்கடி உன் புருசன் !!
அம்புட்டு தரம் ஃபோன் பண்ணினேன். ஆன்சரிங்க் மெசின் தான் பேசுது.
அஞ்சு ஈ மெயில் போட்டேன். நாட் டெலிவர்டு அப்படின்னு திரும்பி வருது. "

அப்படின்னு ஒரு தடாலடி வசனம் பேசிட்டு ஒரு இளநியோ சோடாவோ
வாங்கிக்கொடுத்திருந்தா சிச்சுவேசனே மாறிப்போயிருக்குமே ! என்ன செய்யறது ?
என் தம்பிக்குத் தெரிஞ்சது தக்ஷனுக்கு தெரியலையே !!!!!

என்ன தான் இருந்தாலும் பொண்ண பெத்தவங்களுக்கு இத்தன ராங்கியா ? ...
நாங்க இல்ல ?

மீனாட்சி பாட்டி.

said...

திருவிளையாடல் படத்தில் வரும்...ஆனா அதுல கடைசி கட்டம் வேற மாதிரில்ல இருக்கும். அதுவும் இல்லமால் அப்பா தான் பெண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை வேணுமுன்னு கேட்டது இப்போது தான் தெரியும். படத்தில் அப்படிப்பட்ட செய்தி எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.

;-)

said...

ரீச்ச்ர், நல்லா உசுப்பேத்தரீங்க!!!...:) நக்கீரன்ல எடிட்டர் வேலை காலியா இருக்காம்...;)

said...

சம்பவமும் அதனைப் பதிவோடு தொடர்புபடுத்திப் படத்தோடு வெளியிட்ட முறையும் அருமை.



விறு விறுப்பாகப் போய் கொண்டிருந்த கதையைத் திடீரென ஆன்மிகப் பக்கம் சரித்து விட்டீர்கள். ஆனாலும் குடும்பச் சண்டையினை வீதிக்குக் கொண்டு வந்தமைக்காக ’’அடக்கப்படும் அப்பாவி ஆண்கள்’ கழகம் சார்பில் எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்)):

said...

வாங்க மீனாட்சி அக்கா.

ஆமாங்க்கா. என்ன இருந்தாலும் இந்த தக்ஷனுக்கு புத்தி கொஞ்சம் கம்மிதான்:(

பொழைக்கத் தெரியாம இருந்து தானும் செத்து, பொண்ணையும் சாகடிச்சுட்டான்.ப்ச்....

நான் அவனைப் பார்க்கும்போது , 'சண்டை ஒத்து நைனா. சமாதானங்கா போதே எந்த மஞ்சிதி'ன்னு சொல்லி வைக்கவாக்கா?

said...

வாங்க கோபி.

அது நிழல். இது நிஜம்:-)

said...

வாங்க தக்குடுபாண்டி.

ஆஹா.... நான் ரெடி.

ஆமாம்....கோபாலுக்கு வேற வேலை கிடைச்சுடுச்சா?

ஐ மீன், நக்கீரன் கோபாலுக்கு வேலை?

said...

வாங்க கமல்.

பதிவுக்கான சம்பவம்தான் அது. ஆனால்...இப்பவும் அந்நிலை, மாறலை என்பதுதான் சோகம்:(


குடும்பச்சண்டையை வீதிக்குக் கொண்டுவந்தது யாரு? அந்த சிவன் அல்லவா? பொணத்தோட ஊர் உலகமெல்லாம் ஆடுனது யாரு?

முதல்லே சிவனை நிறுத்தச் சொல்லுங்க. அப்புறம் நான் நிறுத்துவேன்:-)

said...

\\வடுவூர் குமார் said...
க‌தை என்ன‌வோ இப்ப‌ ந‌ட‌ந்த‌ மாதிரி இருந்த‌து...இன்னும் சில‌ இட‌ங்க‌ளில் இப்ப‌டியும் ந‌ட‌க்கிற‌து.அப்ப‌ப‌ நாம் மாற‌வில்லையோ என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ருது// ;)

இத்தனை இடத்துல கோயில் வச்சி சொல்லியும் இந்த பொம்பளைங்க சொன்னாக் கேக்காம அப்பா வீட்டுக்குப் போறதும் தீக்குளிக்கிறதுமா இருக்காங்களா.. :))

said...

இந்தக் கதையை இப்படிக் கூட சொல்ல முடியுமா ?
டீச்சரால் மட்டும் முடியும்


டீச்சர், கொஞ்சம் என் வலை பக்கம் வந்து மார்க் போட்டுட்டு போங்களேன்

said...

வலை - http://www.virutcham.com

said...

I really thought it was a real story in the firt paragraph ...Very Nice

said...

திருவிளையாடல் ரீமிக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு.நிஜமாலுமே இப்படித்தான் பேசியிருப்பாங்களோ என்னவோ :-))

said...

வாங்க கயலு.

தீக்குளிக்கறது குறைஞ்சு போச்சு. அதான் பாதுகாப்புச் சட்டம் வந்துருச்சே.

ஆனா...கோச்சுக்கிட்டு அப்பா வீட்டுக்குப்போறது இன்னும் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு!

said...

வாங்க விருட்சம்.

ஸ்டோரீஸ் ரீ டோல்ட் ன்னே அநேகம் இருக்குங்களே!

எனக்குத் தெரிஞ்ச ஒரு எழுத்தாளர் (நியூஸியில்) பழங்காலக் கதைகளை (யார் எழுதுனாங்கன்னே தெரியாதவைகள்) ரீ டோல்ட் ஸ்டோரீஸ்ன்னெ எழுதிக்கிட்டு இருக்கார். ஆனா அருமையான படங்கள் நிறைஞ்சுருக்கும். நல்ல ஆர்டிஸ்ட் கிடைச்சுருக்கார் அவருக்கு. எல்லாமே குழந்தைகள் புத்தகம். அவை இப்போ வெவ்வேற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பலநாடுகளில் அபார விற்பனை!

உங்க வலைப்பக்கம் வந்து பார்க்கிறேன். நோ ஒர்ரீஸ்:-)

said...

வாங்க இலா.

இன்னிக்கும் நடக்கும் சம்பவங்கள்தானேப்பா:(

said...

வாங்க அமைதிச்சாரல்.


ஒருமுறை ராமாயணத்தை மலபார் முஸ்லீம்கள் பேசும் மொழியில் ஒரு மிமிக்ரி கேட்டேன்.

சிரிச்சுச்சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு.

said...

டீச்சர், தலைப்பைப் பாத்து நானும் குழம்பித்தான் போயிட்டேன், நீங்க எப்பருந்து டிராக் மாறி நியூஸ் போட ஆரம்பிச்சீங்கன்னு!! அப்றந்தான் புரிஞ்சுது.. ஹி.. ஹி..

ஆனா, ஒண்ணு யோசிச்சுப் பாருங்க, இப்பல்லாம் பொண்ணப் பெத்தவங்கல்லாம் இப்படித் தைரியமாப் பேசிடமுடியுதா என்ன? ஹூம்.. அது அந்தக் காலம்..

said...

வாங்க ஹுஸைனம்மா.

மக்கள் பரபரப்பான செய்திகளைத்தான் விரும்பறாங்கன்னு தினசரித் தலைப்புகளைப் பார்த்துக் கத்துக்கிட்டேன். ட்ராக் மாறமுடியாம ஒரே லைனில்தானே போகணும். இது ஒன்னுதானே இருக்கு:-))))

பொண்ணைப் பெத்தவங்க, இந்த வரதட்சிணைச் சுமையால்தான் ரொம்பவே 'அடங்கி'க் கிடக்குறாங்கப்பா.

அந்தக் காலத்துலே யாரு பணத்தை அதிகம் பார்த்தாங்க? குணம்தானே முக்கியமா இருந்துச்சு.

said...

தலைப்புல பயமுறுத்திட்டீங்களே துளசி. ஆட்டம் கொடுத்துடுச்சு:)
அப்புறம் திருவிளையாடல் நினைவு வந்தது. எப்படிப் பதிவு எழுதுவது என்பதுன்னு ஒரு பதிவு ஆரம்பிங்க ப்ளீஸ்!! அந்தக் கடைசிப் படத்தோட கதை தெரியாம மண்டை:)

said...

வாங்க வல்லி.

பதிவு என்ன, கதை கட்டுரை எழுதுவது என்பதுக்கெல்லாம் பிரபலங்கள் நிறைய டிப்ஸ் கொடுத்துருக்காங்க.

சம்பவத்தை எப்படிக் கோர்க்கணும், திடுக் திருப்பம் எங்கே வைக்கணும், மொழி நடை எவ்வாறு இருக்க வேண்டும்(?!) இப்படி ஏகப்பட்ட விஷயங்கள்.

எல்லாத்தையும் ஒன்னுவிடாமல் பலமுறை படிக்கணும். மனசுக்குள்ளே உருப்போடணும்.

அப்புறம்?

அது எதுக்கும் பொருந்தாத முறையில் நம்ம சொந்த நடையில் சரக்கை எடுத்து விடணும். மறந்தும்கூட அதில் ஒன்னையும் 'கடை'ப்பிடிக்கக்கூடாது. அம்புட்டுதான்:-)))))


கடைசிப்படமா? இல்லே அதுக்கு முந்தினதா?

முந்தினதுன்னா...... பெஸ்ட் பதிவர்களுக்குப் பொற்கிழி கொடுக்குறார் மகாராசா. 'யூ ஆர் நம்பர் 1' கையில் இருக்கு பாருங்க.

ராசா மஞ்சள் சட்டை போட்டுருக்காருப்பா!


கடைசிப்படமுன்னா.... அது ஒன்னுமில்லை. அர்ச்சுனன் பதிவராகணுமாம். எப்படி எழுதணும், தமிழ் ஃபாண்ட் எப்படி டவுன்லோடு, பின்னூட்டம் மடரேஷன் இப்படி [பதிவுலக சம்பந்தப்பட்ட விஷயங்களை ஸ்ரீ க்ருஷ்ணபகவான் உபதேசிக்கிறார். புதிய கீதை.

said...

நல்ல கதை பெண்ணானவள் புருஷனுக்கு கட்டுப்பட்டவளாக, வேண்டுமென்றால் பெற்றோர்களை எதிர்பவளாக இருந்தால் அவள் கொண்டாடப்பட வேண்டியவள் என்கிற பெண் மூளை சலவையை முறையாக செய்கிறது.

:)


அந்த காலத்தில் மனமுறிவு கேட்கும் குடும்ப நீதிமன்றங்களோ வாய்பே இல்லை என்றே விளங்குகிறது.

said...

வாங்க கோவியாரே.

அது நியாயமில்லைன்னு 'அவர்' உணர்ந்துதான் அப்புறம் இன்னொரு 'கதை'யில் பாதி இடம் கொடுத்து உமையொரு பாகனாக ஆனார்ன்னு வச்சுக்கலாம்:-))))

இங்கே 33க்கே தவிச்சுத் தண்ணி குடிச்சாச்சு பலவருசங்களா. நியாயமுன்னு பார்த்தால் 50 கொடுக்கணும் இல்லையா.

'சாமி' யே கொடுத்துருச்சு. ஆசாமிங்க கொடுக்கத்தயங்குறாங்க பாருங்க:-)

said...

முன்கதை தெரியும்.

பின்னால் உள்ள"மொத்தம் 51 துண்டு"
புதிய கதை. அறிந்து கொண்டேன். பாதம் கீரிடம் அழகாக இருக்கிறது.

said...

I am the regular reader of your blog Amma. I am your adorant fan for atleast last 4 years. I admire your writings...it gives lot of energy to one who is reading your blog. Thanks!

said...

சிவன் சக்தி என்பதன் பின் பெரிய அர்த்தம் ஒன்று இருக்கிறது. இந்த கதைகளை தனித் தனியா பார்த்தா அது புரியாது என்பது என் எண்ணம். சிவன் கோவில்களில் சக்தி தனிப் பெரும் சக்தி. அவளுக்கென்று சிவனுக்கு இணையான room தனி அதான் சன்னதி, மட்டுமின்றி இவளே அதிக கவனம் பெறுகிறாள். நமக்கு தந்தையை விட தாயே நெருக்கமானவள் பல சமயங்களிலும் என்பது போலே, சிவன் கோவில்களில் இந்த அம்மையே அதிக கவனம்பெறுகிறாள்.

http://www.virutcham.com

said...

நல்ல பதிவு டீச்சர், அப்பா சளைக்காமல் எழுதுகின்றீர்கள். உங்களிடம் இருந்துதான் சலிப்பு இல்லாமல் எழுத கத்துக் கொள்ள வேண்டும். படங்களும்,கட்டுரைகளும் மிக அருமை. நன்றி.

said...

Story was narrated in a different way. Nice narration.

Ram

said...

அன்பின் துளசி

தமிழ் மணத்துல பாத்துட்டு ஓடி வந்தேன் -படிக்க ஆரம்பிச்ச உடனேயே
புரிஞ்சி போச்சு - நல்லாக் கொண்டு போய் இருக்கீங்க - ரசிச்சேன்

நல்வாழ்த்துகள் துளசி

said...

// ஜூனியர் விகடன்ல தேடிப் பார்த்தேன் இப்படி ஏதாவது வந்திருக்கான்னு :-(//

ரிஷான் ஷெரீப் சொன்னது போல் நானும் தினத்தந்தி நியூஸோன்னு நெனச்சேன். நல்ல லோக்கல் லங்வேஜ். கொஞ்ச நாள் சென்னை வாசம் நல்ல வேலை செஞ்சிருக்கு.

அது சரி தமிழ்நாட்டில் விழுந்த பாகம் எது? எங்கு விழுந்தது?

said...

வாங்க மாதேவி.

பளிங்குப் பாதம் மாசு மருவில்லாமல் ஜொலிப்பது பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சுங்க.

said...

வாங்க கனவுகளின் தோழி.

(அடடா.... என்னமாப் பேர் வச்சுருக்கீங்க!!!!!)

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிப்பா.

said...

வாங்க விருட்சம்.

சக்தி இல்லைன்னாத்தான் சீவன் இல்லையே!!!!!!

said...

வாங்க ராம்.

'கதை சொல்லி'யாத்தானே இருக்கேன். அதான்:-)))))

I am a story teller

said...

வாங்க பித்தனின் வாக்கு.

எழுதன்னு வந்தபிறகு சோம்பல் பட்டால் ஆகுமா?

அதுதான் 24 மணிநேரமும் 'தியானம்' போல மூளைக் குடைச்சலா இருக்கே!

said...

வாங்க சீனா.

நன்றி நன்றி நன்றி

said...

வாங்க நானானி.

இல்லையா பின்னே? கவனமுன்னா அப்படி ஒரு கவனம். மொழி அறிவை எப்படி விருத்தி பண்ணி இருக்கேன் பாருங்க:-))))

காஞ்சீபுரம், மதுரை & கன்னியாகுமரி சக்திபீடங்கள் கோவில்களாம்.

என்ன பார்ட்டுன்னு பார்க்கணும். நான் போய் வந்த இடங்கள்தான். ஆனால்... இதைக் கவனிக்கலை.ஒருவேளை நான் வந்தபிறகு 'விழுந்து இருக்குமோ!!!'

said...

நானானி,

குட் நியூஸ்!

காஞ்சியில் விழுந்தது ஒட்டியாணமாம்!

ஆஹா..... ரொம்ப நாள் ஆசை. கோபால்தான்.......

முந்தி இருந்த உடம்புன்னா பரவாயில்லை. ஆனா.....இப்ப? முழிக்கிறார்.

ஹூம். முந்தியே வாங்கியிருக்கலாம்:-)))))

said...

அன்பின் பெரு மதிப்பிற்குரிய கோபால் அவர்களுக்கு

ஒட்டியாணமாமே - முழிக்காம வாங்கிக் கொடுத்துடுங்க - ஆமா சொல்லிப்புட்டேன் - இல்லன்னா குடும்பச் சண்டைதான் - சாக்கிரத

நல்வாழ்த்துகள் துளசி
நட்புடன் சீனா

said...

வாங்க சீனா.

இதோன்னு கிளம்பிட்டார் நியூஸிக்கு.

வீட்டை வித்துட்டு வந்து ஒட்டியானம் வாங்கணுமாம்:-)))))

said...

//
டீச்சர், பேசாம டீவி சீரியல் பக்கம் போகலாம் கதை,வசனம் எழுத :-)/

சினிமாக்கு ட்ரை பண்ணுங்க.. செம சூப்பரா எழுதறீங்க

said...

வாங்க எல் கே.

சினிமாவுக்கா????

ஓ அதுதான் அடுத்த கட்டம் ஏகுவதோ:-))))

said...

விரிவான கதை..

சக்தி பீடங்கள் பற்றி தெரிந்திருக்கும் என கதையாக இழுக்கவில்லை! :)

சிறப்பான விவரிப்பு.....

படங்களும் நன்று.

எனது பக்கத்தில் வந்து சுட்டி தந்தமைக்கு நன்றி.