ஷிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் இருக்கும் ஊர் பிலாஸ்பூர். இந்தக் குன்றுகள் இமயமலைத் தொடர்களில் அப்படியே கடைசியில் சேர்ந்துக்கிட்டதாம். இளவயசு மலைன்னு சொல்றாங்க. ரொம்ப உசரமான பகுதி 1200 மீட்டர்கள்) ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து ஆரம்பிச்சு அப்படியே சைடுவாக்கில் கீழே ஹரியானா மாநிலத்தில் வந்து சேருது.
மணிமாஜ்ரா (இந்தப் பெயர் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு1) என்ற ஊர் வழியா (இது பஞ்ச்குலா மாவட்டத்தில்தான் இருக்கு) பயணம் செஞ்சு பிலாஸ்பூர் வந்து சேர்ந்தோம். இன்னிக்கும் அந்தச் சண்டி கோவிலைத் தேடிக் கிளம்புனதுதான். நம்ம ட்ரைவர் பையர் ரோஹித், மனசா, சண்டி மந்திர்கள் எல்லாம் ஒரே லைனில்தான் வருது. பிரச்சனையே இல்லை. போயிறலாமுன்னு சாதிச்சார்.
இப்போ ஒரு முன்குறிப்பு: பாவம் கோபால். வேலைக்கும் வீட்டுக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டார். கடைசியில் முற்பகல் வீட்டுக்கும், பிற்பகல் வேலைக்கும் ஒதுக்கி வச்சதால் கொஞ்சமா ஊர் சுத்திப் பார்க்க முடிஞ்சது. இதுக்குத்தான் சொல்றாங்க 'ஆத்துலே ஒரு கால் சேத்துலே ஒரு கால்.'
மணிமாஜ்ரா ஒரு ரெண்டுங்கெட்டான் கிராமம்போல இருக்கு. கடைவீதிகள், நெருக்கமான மண்தெருக்கள், வீடுகள்ன்னு வளைஞ்சு நெளிஞ்சு போகுது. ஊரைவிட்டு வெளியில் வந்து கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு இடத்தில் ரயில்பாதையைக் கடந்து போகணும். இப்போ அங்கே சுரங்கப்பாதை ஒன்னு போட்டுக்கிட்டு இருக்காங்க. அநேகமா வேலை முடியும் தறுவாயில் இருக்கு. இதனால் நாங்க இன்னும் கொஞ்சம் சுத்துவழியாப் போகவேண்டியதாகிப்போச்சு.
போற வழியில் இந்த இடத்துக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாம அட்டகாசமான அடுக்கு வீடுகள். மூணு பெட் ரூம் ஃப்ளாட்டுகள். ரெண்டு கோடியாம். ஏன் இப்படித் தீ பிடிச்ச விலை? ( இது ஒரு மலையாள வாக்கு) அடுத்துக் கொஞ்சதூரத்துலே' ராஜீவ் காந்தி டெக்னாலஜி பார்க்' வந்துக்கிட்டு இருக்கு. ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏகப்பட்ட இடத்தை வளைச்சுப்போட்டு, அந்தப் பக்கம் சண்டிகர் நகரின் எல்லையைத் தொட்டுக்கிட்டு நிக்குது. கட்டிடங்கள் வர ஆரம்பிச்சு எல்லாம் ஒவ்வொருவித நவீன டிஸைன்கள். ஏர்டெல் அட்டகாசமா நிக்குது!
போற போக்கில் ஒரு ஃப்ளாட்டை ஒருநாள் பார்த்தோம். நாலு மாடிதான். ஆனால் சின்ன டப்பாக்களை அடுக்கி வச்சதுபோல அறைகள். நீச்சல் குளம், ஜிம் இப்படி நவநாகரீக வாழ்க்கைக்கு எல்லாம் தேவைப்படி அமைஞ்சுருக்கு. ஆனால்..... 'யே ஹமாரா ச்சாய்ஸ் நஹி ஹை பேபி! '
சரி வாங்க கோவிலுக்குப் போலாம். மணிமாஜ்ரா அரசர் ( இங்கே ஒரு கோட்டை கூட இருக்காம். போகலை) கோபால் சிங் இந்த மனஸா தேவி கோவிலைக் கட்டி இருக்கார். காலம் 1811 முதல் 1815 வரை. சின்னதா ஒரு குன்றின் மேல் இருக்கு. இங்கே நித்யப்படி பூஜைக்குன்னு பூஜாரிகளை நியமிச்சு இருந்தார். சுதந்திர இந்தியாவோடு சமஸ்தானங்கள் இணைஞ்சப்ப இந்தக் கோவில் மட்டும் தனியா சுதந்திரமாவே நின்னுருக்கு. கோவிலுக்குச் சேர்ந்த நிலபுலன்கள், வருமானம் இதெல்லாம் பூஜாரிகள் வசம் போனதால் கோவிலோட பராமரிப்பு பூஜ்யம். பக்தர்கள் வருகை குறைஞ்சுக்கிட்டே போச்சாம். சில நல்ல உள்ளங்கள் சேர்ந்து கோவிலை க்ஷீணமடையாமல் காப்பாத்த முன்வந்து ஒரு போர்டு அமைச்சாங்க. கமிட்டி சேர்மேன் ஹரியானா மாநில முதலமைச்சர். அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்ததும் பரபரன்னு வேலைகள் நடந்து இப்போ அருமையா இருக்கு. குன்றுக்குப் போகும் அகலமான பளிங்குப் படிகளுக்கு மேல் கூரை. நெடூக மின்விசிறி, ரெண்டு பக்கமும் அங்கங்கே உட்கார்ந்து போகத் திண்ணைன்னு சூப்பரா இருக்கு. படு சுத்தமும் கூட. கீழே செருப்புகளை விட்டுப்போக இலவச ஜூத்தா கர், குடிநீர் இப்படிப் பக்தர்களுக்கு பல சேவைகள். கோவிலுக்கு முன்னால் இருக்கும் மைதானத்தில் பூஜைப்பொருட்கள் கடை, சாப்பாட்டுக்கடைகள். மக்கள் உட்கார மரத்தைச்சுற்றிக் கட்டி இருக்கும் மேடைகள் எல்லாமே வசதிதான்.
இமயமலைப் பகுதிகளில் சக்தி வழிபாடு ஆதிகாலம் முதலே நடந்துருக்குன்னு காமிக்கும் கண்ணாடி இது. ஹிமயமலையில் சிவன் இருக்கார் என்ற நம்பிக்கை. அதனால் சிவனின் மனைவி பார்வதியும் அங்கேதானே இருக்கணும். மலையில் சிவன், ஷிவாலிக் குன்றில் தேவி. அந்தப்புரமோ?
முதலில் இங்கே தேவியின் உருவம் சின்னதா வெறுங்கல்லா இருந்துருக்கு, பிண்டின்னு சொல்றாங்க. அப்புறம் கோவிலா எடுத்துக் கட்டுனபிறகு பளிங்கில் ஒரு முகம் செஞ்சு, அந்தச் சிறுகல்மேல் சார்த்தி இப்போ தலைமட்டும் உள்ள சிலையா இருக்கு. தலையை மட்டும் பார்த்ததும் இது 'அந்த' சக்தி பீடங்களில் ஒன்னா இருக்குமோன்னு சம்சயம். தலை விழுந்த இடமுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க சிலர். ஆனால் இது, அது இல்லை. (இதைப்பற்றி வரும் இடுகைகளில் பார்க்கலாம்) இது சித்த பீடமாம். இஷ்ட சித்தி வாய்க்கும் என்றொரு நம்பிக்கை. இது உண்மைன்னு நிரூபிக்கும் வகையில் தலவிருட்சத்தில் கைக்கு எட்டும் உயரம்வரை சரிகை வச்சச் சிகப்புத் துணிகளை பக்தர்கள் கொண்டுவந்து சாத்தி இருக்காங்க. மரம் இருக்கும் ஏரியா முழுசும் செக்கசெவேலுன்னு ஜரிகையும் அதுவுமா வெய்யிலில் ஜொலிக்குது. மக்கள் கூட்டம் பெருகப்பெருக கோரிக்கைகள் கூடும்தானே?
மனஸா தேவி கருவறைன்னு சின்னதா அலங்காரத்தோடு வட இந்திய டிசைனில் ஒரு வெராந்தாபோல முன்மண்டபத்தோடு இருக்கு. அழகான சாண்ட்லியர் ஒன்னும் போட்டுருக்காங்க. கருவறையின் பின்புறத்தில் சின்னச்சின்னதா தேவியின் கருங்கல் உருவங்கள் சுவற்றிலே பதிச்சு வச்சுருக்காங்க. இடப்பக்கம் தல விருட்சமா அரசமரம். ஒரு மூலையில் பத்துப் படிக்கட்டு உசரத்துலே மாடம். ஏறிப்போனால் சிவன் லிங்க உருவில். பளிங்குக்கல்லில் சின்னதா இருக்கார். அரை உடம்பா வளைஞ்சு குனிஞ்சு போகணும் என்பதுபோல் இறங்கும் வழிப் படிக்கட்டுகள்.
மசூதிபோல வெங்காய டிசைனில் இந்தக் கோவில் இருக்கு. நாலுபக்கமும் மினாராக்கள். ஒருவேளை முகமதிய கலாச்சாரம் ஊடுருவியதால் இருக்கலாம். முன்பக்கம் அவ்வளவா இது தெரியலை. ஆனா.... பின்பக்கத்தோற்றம் பார்க்கும்போது அசல் மசூதியேதான்! இந்துக்கோவிலை எப்படி இப்படிக் கட்டுனாங்க என்பதே ஆச்சரியமா இருக்கு.
இங்கே இருந்து இன்னும் ஒரு 200 மீட்டர் ஏறிப்போனால் இன்னொரு மனஸா தேவி கோவில். ஒன்னு வாங்கினால் ஒன்னு ஃப்ரீ என்பது போல!
'ச்சோட்டுக்கே பாஸ் போலோ...'பயபக்தியுடன் சாமிகிட்டே பேசிக்கிட்டே போறாங்களோ? செல்லை விடமாட்டேங்கறாங்களேப்பா:(
போகும் வழியெங்கும் விஸ்தாரமான பளிங்குப் படிக்கட்டுகள். ஏற்றம் தெரியாம அப்படியே சும்மா நடந்து போவது போல அமைச்சிருக்காங்க. பத்து மீட்டர் நடை. ரெண்டு படிகள். அப்புறம் பத்து மீட்டர் நடை இப்படிப்போகுது. ரெண்டு பக்கமும் திண்ணைகளின் தொடர்ச்சி. பாதி வழியில் ஒரு பைரவர் சந்நிதி. அந்தப்பக்கம் இருக்கும் விஸ்தாரமான இடங்களைச் சமன்படுத்தி ரெண்டு அழகான கட்டிடங்கள், யாக சாலையும் தியான மண்டபமும். நிழல்தரும் மரங்களும் பூச்செடிகளுமா அருமையான தோட்டம்.
நடைமுடியும் இடத்தில் எதிரில் இன்னொரு கோவில். இடையில் ஒரு சின்ன ரோடு, காரிலும் நேராக இங்கே வர ஒரு பாதையாக. பாட்டியாலா மன்னர், கரம் சிங் கட்டிய கோவில். இதுவும் மனஸா தேவிக்கே! இந்தக்கோவில் 1840 வதுவருசம் கட்டப்பட்டது. வட இந்திய ஸ்டைலில் கூம்பு கோபுரத்துடன் விஸ்தாரமான இடத்தில் இருக்கு. நாலு பக்க மூலைகளிலும். சிவன், பிள்ளையார், காளி, ஹனுமன் இப்படி சின்னதா நாலு சந்நிதிகள்.
நட்டநடுவில் இருக்கும் பெரிய ஹாலின் நேர் எதிர்ப்புறத்தில் மனஸா தேவியின் முகம். ரெண்டு பூஜாரிகள் தீர்த்தம் கொடுப்பதும் பக்தர்கள் கொண்டுவரும் நிவேதனங்களை வாங்கி சாமிக்குக் 'காமிச்சுத் திருப்பித்தருவது'மா ரொம்ப பிஸி. இடைக்கிடைக் கலெக்ஷனையும் பார்த்துக்கணுமே! இங்கே நைவேத்தியத்துக்கு பொரிதான் விசேஷமாம். வெளியே இருக்கும் சந்நிதிகளில் இங்கே நிவேதனத்தை போடாதீங்கன்னு நாலு மூலை கம்பிக் கதவிலும் ஹிந்தியில் எழுதித் தொங்கவிட்டுருந்தாலும் அதைப் படிச்சுப் பார்த்துட்டு ஜனங்கள் பயபக்தியோடு பொரிப் பொட்டலத்தைப் பிரிச்சு கம்பி வழியா மூர்த்தங்கள் முன் போட்டுட்டே போறாங்க. வெறுமனே 'போடாதே'ன்னு சொல்லாம 'போட்டால் உங்கள் இஷ்டங்கள், சித்தி ஆகாது. கேன்சலாகிரும்' னு எழுதிப்போடலாம்.
ஹாலின் சுவர்களில் 'சந்த்ரகண்டா, க்ருஷ்மாண்டா, ஷைலபுத்ரி, ப்ரஹ்மச்சாரிணி, ஸ்கந்தமாதா, காத்யாயனி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி, காலராத்ரி' ன்னு ஓவியங்களை வரைஞ்சு வச்சுருக்காங்க. கொஞ்சம் பழசாகி அங்கங்கே மூக்கு, வாய் எல்லாம் மிஸ்ஸிங். மக்களும் சித்திரத்தைத் தொட்டுக் கும்பிட்டே ஆகணும் என்ற நிர்பந்தத்தில் இருக்காங்களே:(
நல்ல பெரிய வளாகம். நிறைய மாமரங்கள் மேடைகளுடன் அங்கங்கே இருந்தாலும் ஆலமரம் ஒன்னுதான் வேண்டுதல் முடிச்சுகளைத் தாங்கி நிக்குது. தரையெல்லாம் பளிங்குகள், பளிச்சுன்னு சுத்தம். கோவிலுக்கு வெளியே வலப்புறம் 'பாபா பாலக்நாத் மந்திர்' ஒன்னு கூப்பிடு தூரத்தில் இருக்கு. கொஞ்சம் படிகளேறிப் போகணும். வீட்டுக்கான 'அரைநாள்' தீரும் நிலமை. அதனால் போகலை.
பண்டாரான்னு பெருசா எழுதி வச்சக் கட்டிடத்தில் புகுந்து பார்த்தால் அது பக்தர்களுக்கு இலவசமா உணவு அளிக்கும் இடம். இதைப்போல் இங்கே மூன்று இடங்களில் பண்டாராக்கள் இருக்கு. வரிசையாய் இலைமுன் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு ஏற்றத்தாழ்வில்லாமல் உணவு அளிக்கிறாங்க.
நவராத்திரி திருவிழாக்காலங்களில் கூட்டம் நெரியுமாம். நான்கு நவராத்ரிகளில் ரெண்டு (மக்/ குப்த் நவ்ராத்ரி & சைத்ர நவ்ராத்ரி) ரொம்பவே விசேஷம், சம்மருக்கு ஒன்னு விண்ட்டருக்கு ஒன்னு. இந்த மாதம் 16 க்கு சைத்ர நவராத்ரி ஆரம்பிக்குதாம். (ஆமாம். யுகாதி வேற. வருசப்பிறப்பு. சைத்ர மாசம் ஆரம்பம். ) மொத்தம் 9 நாள் உற்சவம். முதல் ஆறு நாட்கள் கோவில் திறந்தே இருக்குமாம். ஏழு & எட்டாம் நாளில் மட்டும் ராத்திரி ஒரு ரெண்டு மணி நேரத்துக்குக் கோவிலை மூடுவாங்களாம். இது சுத்தம் செய்வதற்காக மட்டுமே.
திருவிழாக் காலங்களில் தேவஸ்தானம் யாத்திரீகர்களுக்கு தங்குமிடம்,. கம்பளி, போர்வை, தாற்காலிகக் கழிவறை, ஆஸ்பத்ரி, மக்களுக்குப் பாதுகாப்பா போலீஸ் ன்னு எல்லா ஏற்பாடுகளையும் அருமையாச் செஞ்சு கொடுக்குதாம். புண்ணீய யாத்திரைக்கான கோவில் என்பதால் விழாக்காலம் தவிர்த்தும் தினமும் மக்கள் எங்கெங்கிருந்தோ வந்துக்கிட்டேதான் இருக்காங்க. காலை அஞ்சு முதல் இரவு 10 வரை கோவில் திறந்தே இருக்கு.
பி.கு: படங்கள் ஏனோ ஓவரா எக்ஸ்போஸ் ஆனமாதிரி வெள்ளை அடிச்சுக்கிடக்கு. கேமெரா செட்டிங் மாறிடுச்சோ இல்லை மொட்டை வெயிலோ எதோ ஒன்னு காரணமா இருக்கலாம்.
Friday, March 19, 2010
மனஸா & மனஸா
Posted by துளசி கோபால் at 3/19/2010 03:46:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
//படங்கள் ஏனோ ஓவரா எக்ஸ்போஸ் ஆனமாதிரி வெள்ளை அடிச்சுக்கிடக்கு//
வெயில் அதிகம் அதனாலன்னு நினைக்கிறேன்.
வாங்க சின்ன அம்மிணி.
எனக்கும் இப்படி ஒரு சம்சயம் இருக்கு. செட்டிங்ஸ் மாத்தணுமான்னு தெரியலை.
வெயிலும் காரணம் .வெள்ளை மார்பிளும் காரணம்னு நினைக்கிறேன்:)
எப்படியிருந்தா என்ன. என்ங்அள்ளுக்குப் பார்த்துப் படிக்க இன்னோரு இடம் கிடைச்சுது. அரை நாள் போயே இவ்வளவு விஷயம் சேகரிச்சுட்டீங்களே. இங்க பக்கத்துவீட்ல மாடிலேருந்து யாரோ குதிக்க இருந்து ,காப்பாத்தப்பட்டதையே நான் தெரிஞ்சுக்க அரை நாள் ஆச்சு! நல்லா இருக்குப்பா எல்லா இடமும். அந்தத் தாழ்வார நடையே போதும் . அழகு கொஞ்சுது.ம்ம்.நம்ம ஊரும் இருக்கே.
வாங்க வல்லி.
//தரை மார்பிள்....//
அட! இருக்கலாம்ப்பா. எனக்குத் தோணலை பாருங்க!
வெயிலின் பிரதிபலிப்பு அதனால்தான் தூக்கலா இருக்கு!
தாழ்வார சைடு முழுசும் திண்ணை அட்டகாசமா இருக்குப்பா. ஜாலியா அங்கே உக்காந்து பதிவு எழுதலாம்:-)
அருமை!
நல்ல தரிசனம்!
aaahaa excellent. that marble flooring and a roof and fan facilities are wonderful. Namma oor kovilgalum ippai irundhal evlo nalla irukkum.
பண்டாராக்களில் பக்தர்களுக்கு ஏற்றதாழ்வில்லாமல் உணவு அளிப்பது பாராட்ட தக்கது.
// இதுக்குத்தான் சொல்றாங்க 'ஆத்துலே ஒரு கால் சேத்துலே ஒரு கால்.' //
அந்த காலத்திலே வயசாயிப்போச்சுனா, சம்சார பந்தங்களிலிருந்து சட்டுன்னு விலகி சன்யாசி ஆயிருவாங்களாம்.
ஒரு அம்பது இல்ல அறுபது வருசத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா, எல்லா வீட்டுலேயும் ஒத்தர் சன்யாசியாயிட்டாரு
அப்படின்னு சொல்வாக.
அப்படி போனவங்க மனசுலே இன்னமும் வீட்டப்பத்தியே நினைச்சுக்கிட்டு இருப்பாங்களாம். வீட்டுக்காரி என்ன செய்யறாளோ , உடம்பு எப்படி இருக்குதோ ! பையன் பொண்ணு என்ன செய்யுதோன்னு கவலை வாட்டி எடுக்குமாம்.
அதுனாலே அப்பப்ப, வீட்டாண்ட வந்து வாசல் வரை நிப்பாங்களாம்.
அவுகளைப்பத்திச் சொல்லும்போதுதான் சொல்வாங்க, ஆத்துலே ஒரு கால், சேத்துலே ஒரு கால் அப்படின்னு.
மீனாட்சி பாட்டி.
கட்டிடம் எல்லாம் பார்த்தா கோவில் மாதிரியே இல்லையே டீச்சர்...இங்க (துபாய்) கூட இந்த மாதிரி தான் இருக்கு.
mmm... donno when i'll get such opportunities.
Its good that u share it all with us
http://www.virutcham.com
பயபக்தியுடன் சாமிகிட்டே பேசிக்கிட்டே போறாங்களோ? செல்லை விடமாட்டேங்கறாங்களேப்பா:(
:)))))) மனிதர்களின் குணாதியங்களை இயான் தாமஸ்லருந்து செல் சாமிக வரைக்கும் நல்லா கவனிக்கிறீங்க டீச்சர்.
தீ பிடிச்ச விலை,மொட்டை வெயில் ரசிச்சேன்:)
தாழ்வார சைடு முழுசும் திண்ணை அட்டகாசமா இருக்குப்பா. ஜாலியா அங்கே உக்காந்து பதிவு எழுதலாம்:-)//
:)
வாங்க நாமக்கல் சிபி.
வருகைக்கு நன்றி.
அழகா இருப்பதைச் சொல்லத்தானே வேண்டி இருக்கு:-)
வாங்க ப்ரசன்னா.
அந்தப் பக்கங்களில் மார்பிள் மலிவாக் கிடைக்குதுன்னு இழைச்சு வச்சுருக்காங்க.
நம்மூரில் எல்லாம் கருங்கல் சிற்பங்கள்தான். அதனாலேயே கொஞ்சம் இருட்டா ஆகிருது. இதுலே வெயில், மழைன்னு பாதுகாப்புக் கருதி கோபுரவாசலில் தகரத்தில் ஒரு விதானம் போட்டு வச்சு அழகைக் கெடுத்துவச்சுடறாங்க.
கொடுக்கும் குங்குமம், விபூதி எல்லாம் நெத்திக்குப்போக ப்ரகாரங்களின் சிலைகளுக்கு அபிஷேகம்.
பிடிப்பிடியா அள்ளிக்கொடுக்காம ஒரு தட்டுலே வச்சுட்டா நாமே தொட்டு நெத்தியில் பூசிக்கலாம். குறைஞ்சபட்ச அளவு அந்த சிலகளாவது தப்பிக்கும். இதுலே பெயிண்ட் அடிக்கிறோமுன்னு கருங்கல் தூண்களுக்கும் அடிச்சு வைக்கும் கொடுமையை எங்கே போய் சொல்வது:(
வாங்க கோமதி அரசு.
எல்லோரும் வரிசையில் உட்கார்ந்து இருந்தது ரொம்ப அழகா இருந்துச்சு. ஆனால் சாப்பிடும்போது படம் எடுக்கவேணாமுன்னு விட்டுட்டேன்.
வாங்க மீனாட்சி அக்கா.
ஆஹா.... இப்படி ஒன்னு இருக்கா!!!!
ஆத்து வாசலில் வந்து நிக்கும்போது மண்டையில் ரெண்டு வச்சு விரட்டணும்க்கா.
பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஆட்களைக் கண்டாலே எரிச்சலா இருக்குக்கா
வாங்க விருட்சம்.
முதல் வருகை போல? நலமா?
கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது!
இந்தப் பயணத்தில் இது கிடைக்குமுன்னு போகும்வரை எனக்குத் தெரியாது.
எதுக்கும் வேளைன்னு ஒன்னு வரணும்.
வாங்க ராஜ நடராஜன்.
காது & கண்ணைத் திறந்து வச்சாலே
மேட்டர் தானா சிக்கிடுது பாருங்களேன்:-)
வாங்க கயலு.
பார்க்கவே ஆசையா இருந்துச்சுப்பா அந்த இடம். அதனால்தான் ப்ரியமான 'வேலை' அங்கே செய்யலாமுன்னு....:-)))))
வாங்க கோபி.
நமக்குத்தான் கோவில் என்றாலே மனசுக்குள்ளே ஒரு சித்திரம் பதிவாகி இருக்கே. அதனால்தான் இப்படித் தோணுது.
டிஸைன் எதுவா இருந்தாலும் சுத்தமா இருக்கணும் என்பதுதான் கனக்கு.
டீச்சர்! வடை போச்சேன்னு உடைஞ்ச பீங்கான்ல புலம்பிட்டிருந்தீங்களே!
படம் ரிலிஸாக தாமதமாயிடுச்சாம்.உடனே அன்னப்பறவைய தூது விடுங்க.பறந்து போய் ஜெயிக்குதோ இல்லையோ முகத்தையாவது காட்டிட்டு வரட்டும்.
thanks for the post, when u get time read Balakumarn's book Manalnadhi on maanasa devi temple.
//கோபிநாத் said...
கட்டிடம் எல்லாம் பார்த்தா கோவில் மாதிரியே இல்லையே டீச்சர்...இங்க (துபாய்) கூட இந்த மாதிரி தான் இருக்கு.
//
அதே அதே டீச்சர். கலை ஆர்வம் கம்மியோ அவங்களுக்கு?
துளசி டீச்சர், வெகு நாட்களுக்கு பிறகு உங்க வீட்டுப்பக்கம் வர்றேன்.. எப்படி இருக்கீங்க? இன்னுமா இந்தியாவில்??? :O கொடுத்து வெச்ச மவராசி, நல்லா என்சாய் பண்ணுங்க! :)
இவ்ளோ நாளாச்சு இன்னும் அந்த அப்புறம் கதைகள் 1500 ஆரம்பிக்கலியா??? சீக்கிரமா மெட்ராஸ் வந்து அதை ஆரம்பிப்பீங்களாம்..
ஆஹா.. கோவில் கலக்கலா இருக்கே! எப்படி ஃபோட்டோ புடிச்சீங்க இவ்ளோ வெள்ளையை, கண்ணு கூசலியோ?
//மணிமாஜ்ரா (இந்தப் பெயர் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு1)//
//மணிமாஜ்ரா அரசர் ( இங்கே ஒரு கோட்டை கூட இருக்காம். போகலை) கோபால் சிங் இந்த மனஸா தேவி கோவிலைக் கட்டி இருக்கார்//
உங்களுக்கு ஏன் மணிமாஜ்ரா பிடிச்சிருக்குன்னு தெரியுமே. இஃகிஃகி.
//நான்கு நவராத்ரிகளில்// நான்கு நவராத்ரிகளா?? கேள்விப்பட்டதில்லை.
present teacher
வாங்க குறும்பன்.
நம்ம பக்கம்தான் புரட்டாசி மாசத்துலே வரும் நவராத்ரியைக் கொண்டாடுறோம்.
வடக்கே நாலு பருவகாலங்களுக்கும் ஒவ்வொன்னு இருக்கு.
சைத்ர மாசத்தில் வசந்த நவராத்திரி.
ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி.
புரட்டாசியில் சாரதா நவராத்திரி.
தை மாதத்தில் சியாமளா நவராத்திரி.
தகவலுக்கு நன்றி ராஜநடராஜன்
வாங்க ராம்ஜி யாஹூ.
மனஸா தேவி கோவில்கள் நிறைய இருக்கு வடநாடுகளில். குறிப்பா இமயமலைப்பகுதிகளில்.
மணல்நதி? இன்னும் வாசிக்கலை. கிடைக்குதான்னு பார்க்கணும்.
நன்றி.
வாங்க நான் ஆதவன்.
கலை ஆர்வம் கம்மி??? ஊஹூம்..... நோ ச்சான்ஸ். ஸ்வாமி நாராயணன் கோவில்களைப் பார்த்துருக்கீங்களா?
இங்கே ரொம்ப சிம்பிளாவும் ஸ்வீட்டாவும் கட்டி வச்சுருக்காங்க. பராமரிப்பு சுலபம். சுத்தமா வச்சுக்க முடியுது.
வாங்க பொற்கொடி.
பார்த்தீங்களா...... பதிவுக்காக என்னெல்லாம் செய்யவேண்டி இருக்குன்னு. கஷ்டப்பட்டுப் படம் எடுத்துப்போடறேன்னு உங்களுக்குப் புரியுது:-)))))
1500க்கு அச்சாரம் போட்டு வச்சுருக்கேன். ஆரம்பிக்கணும்.
வாங்க எல் கே.
ப்ரெசெண்ட் போட்டாச்சு.
நார்த் சைடு அதிகமா பார்த்ததேயில்லை..அதனால நீங்க எழுதறதை மட்டும் கவனிக்கறதால போட்டோ க்ளாரிட்டியை அதிகமா கவனிக்கறதில்லை.
வாங்க சிந்து.
அப்பாடா..... எழுத்தை மட்டும் கவனிச்சுப் படிக்கிறீங்களா!!!!
அம்மாடியோவ்:-)
மணிமாஜ்ரா,மனஸா தேவி கண்டுகொண்டேன்.
வாங்க மாதேவி.
அன்னை அருள் புரிவாள்.
Post a Comment