சின்ன வயசில் இருந்தே..படத்தைப் பார்த்துத்தான், 'சாமின்னா எப்படி இருக்கணும்? எந்தமாதிரி ஆடை அணிகள்' இப்படி எல்லா நுணுக்கமான விவரங்களும் தெரிஞ்சுக்கிட்டேன்.
மனுசனுக்குச் சாமி தேவையான்னு கேட்டால்.....கண்டிப்பாத் தேவை. குறைஞ்சபட்சம் குறை 'கேட்கும்' கோமகன் ஒருத்தர் வேண்டித்தான் இருக்கு. மனக்குறை இல்லாத மனித ஜென்மம் உண்டோ? எனக்குத் தெரிஞ்சவரை கவலை இல்லாத உயிர்னு எதுவுமே இருக்கமுடியாது. அதனதன் நிலைக்குத் தகுந்தமாதிரி ஏதோ ஒரு கவலை. நம்ம கோகிக்குக்கூட, 'நம்மைக் கொண்டுபோய் கேட்டரியில் விட்டுட்டு, இவள் சட்னு கிளம்பிப் போயிருவாளோ?'ன்னு இருந்துருக்க ச்சான்ஸ் உண்டு.
மறுபாதி, நண்பர்கள், உறவினர்கள்னு ஏகப்பட்ட நபர்கள் நம்மைச் சுத்தி இருந்தாலுமே எல்லாத்தையும் (நான் சொல்வது மனக்கவலைகளை) எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. காது கொடுத்து (?) கேட்கும் நபர்கள் கூட மூணாம்பேருக்கு முரசு அறையாமல் இருக்கணும். அதுவும் அவுங்க எழுத்தாளருன்னா......(புனைக்) கதையா எழுதிருவாங்க. பதிவர்ன்னா இன்னும் விசேஷம்..... 'நேற்று நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது......' அனுபவம் தலைப்பில் வரும் அபாயம் இருக்கு!
இந்த இடத்தில்தான் 'சாமி' வர்றார். குடும்பப் பழக்கத்தின் படி அவர் யாராக வேணுமானாலும் இருக்கலாம். வழிவழியா வந்ததைத்தானே நாமும் வழிபட்டுக்கிட்டு இருக்கோம்! நம்ம வீட்டுலே இது விஷ்ணு. மகா விஷ்ணு மட்டுமே. நாராயணா, கோவிந்தா, கோபாலான்னு சொல்லியே வளர்க்கப்பட்டவள்.
மகிழ்ச்சியோ, மனக்கவலையோ சாமி முன்னால் நின்னு சொல்லி, (பலசமயங்களில் கவலையால் உருகிக் கண்ணீர் மல்கி) வாழ்த்தியோ, இல்லை வசை பாடியோ (இதுதான் முக்கால்வாசி நாட்கள்) வருவதுதான் வழக்கம். பாவம் பெருமாள். என்ன திட்டுனாலும், எது சொன்னாலும் புன்முறுவலோடு (காதுலே போட்டுக்காமல்) பொறுத்துக்கொள்வார். சுருக்கமாச் சொன்னால்..... நம்ம கோபால்! (அய்ய..... கோபாலை எடுத்துக்காட்டாச் சொன்னது, 'எது சொன்னாலும் அந்த காதுலே போட்டுக்காத கலையைக் கற்றவர்' என்பதால் மட்டும்)
சிலநாட்கள் , சாமிகிட்டே ஒன்னும் சொல்லாமல் வந்தால் சாமிக்கே கவலை வந்துரும், 'என்ன ஆச்சு இவளுக்கு? இப்படிப் பேசாமல் போறாளே? ஒடம்பு கிடம்பு சரி இல்லையோ?ன்னு.
அதென்னமோ தெரியலை, சாமியார்களைச் சின்னவயசுலே இருந்தே எனக்குப் பிடிக்கறதில்லை. அதுவும் சந்நியாசிகளாப் போன மனுஷர்களைக் கண்டாலே ஒரு வெறுப்பு. ஒருவேளை 'சந்நியாசி'யாகப்போன தந்தை காரணமா இருக்கலாம். அப்புறம் சில நெருங்கிய சொந்தங்கள், ஆளாளுக்கு ஒரு சாமியாரின் அடிப்பொடிகளாக மாறி 'தெய்வீக சக்தி' அடைஞ்சதுபோல வெளி உலகுக்குத் தரும் தரிசனங்களாகவும் இருக்கலாம். அடுத்திருந்து, மறு பக்கம் பார்த்து நொந்து போயிருக்கேன்.
நம்ம நட்பு வட்டாரங்களும், தெரிந்தவர்களும் அவரவர்களின் ஆஸ்தான சாமியார்களைப் போற்றிப் புகழும்போதெல்லாம் நட்புக்கு மரியாதை கொடுத்துப் பேசாமல் இருக்கும் நேரங்களும் உண்டு. ஒரு பிரபல சாமியார் சுவற்றில் இருக்கும் உலகப்படத்தைத் தொட்டதும், எதிரில் இருந்த பக்தை அதே நொடியில் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டாங்களாம். அச்சச்சோ.... அப்ப அந்தம்மா கொண்டுவந்த லக்கேஜ்? அதுவும் மாயமா நாடுவிட்டு நாடு போயிடுச்சா? இன்னொரு சாமியாருக்கு மக்கள்ஸ் சேந்து கட் அவுட் கலியாணமெல்லாம் பண்ணி வைக்கிறாங்கப்பா! அதுவும் வெளிநாடுகளில்! இன்னொரு அம்மா, தன்னோட செருப்பை ஊருரா அனுப்புதாம். அதுக்குப் பாதபூஜை செய்யறாங்களாம் விசுவாசிகள். போதுண்டா 'சாமி'! எனக்கு என்ன ஆச்சரியமுன்னா..... இவ்வளவு நல்ல பெரிய படிப்பு படிச்சவுங்க கூட எப்படி இதையெல்லாம் நம்பறாங்க!!!!
இன்னும் சிலர் 'ஸோ அண்ட் ஸோ வுக்கு ஸோ அண்ட் ஸோ சாமி ப்ரத்யக்ஷம்னு சொல்லும்போது..................சாமிக்கு வேற வேலையே இல்லையா? கூப்ட்டவுடன் ஓடிவந்து நிப்பானாக்கும்? போங்கடா..............
சாதாரணமா ரத்தமும் சதையுமா இருக்கும் மனுசர்களை எப்படித்தான் சாமி லெவலுக்குக் கொண்டு போறாங்களோன்னு எரிச்சல் மண்டுவதும் உண்டு. மனுசனா இருக்கறவனுக்கு உள்ள எல்லா விஷயங்களும் உபாதைகளும் மகிழ்ச்சிகளும் இந்த 'அவதாரங்களுக்கும்' இருக்கும்தானே? இவுங்க தலையில் எல்லாம் இல்லாத பெருமைகள் ஏற்றி வச்சு உச்சாணிக் கொம்பில் வச்சதும் சாதாரண மக்கள்ஸ்தானே? இவுங்க போற்றப் போற்ற 'அட! நமக்கெல்லாம் இவ்வளவு பவரா இருக்கு? அப்ப நாந்தான் சாமி!' ன்னு ஊருக்கு உபதேசம் எடுத்திவிட ஆரம்பிச்சுடறாங்க.
சிலபல சமயங்களில் சிலபல சாமியார்களின் 'லீலைகள்' அம்பலத்துக்கு வரும்போது. 'ஆஹா.... ஆப்ட்டுக்கிட்டான்யா. நான் அப்பவே நினைச்சேன். இதுமாதிரி ஏதாவது நடக்கும். இந்த ஆட்களின் குட்டு வெளியே வரும்' னு நினைச்சுக்குவேன். சரியா ஊகிச்சுருக்கோமுன்னு ஒரு பெருமிதம் கலந்த மகிழ்ச்சி மனசுக்குள்ளே வரும். என் அல்பத்தனத்தை நானே நொந்துக்கிட்டாலும் அல்ப மகிழ்ச்சி அடைஞ்சதென்னவோ உண்மை.
அனந்தபத்மநாபன் முன்னே நிக்கும்போதெல்லாம் 'எப்படிடா உனக்கு இப்படி ஒரு விட்டேத்தியான மனசு?'ன்னு நினைப்பேன். யாரோ எக்கேடாவது கெட்டுப்போங்க. எனக்குத் தூங்கணும்னு மனுசர் நிக்கும் பக்கம்கூடத் திரும்பிப் படுக்காமல் அண்ணாந்து ஆகாசத்தைப்பார்த்த நிலையில் ரொம்ப அலட்சியமா வலதுகையை நீட்டி கீழே இருக்கும் சிவலிங்கத்தைத் தொட முயற்சிப்பதைப்போல ஒரு ஸ்டைல்.
பட்டர்கள் அநியாயம் இந்தக் கோவிலில் 'அவ்வளவாக' இல்லைன்னாலும் தப்பித் தவறிக் கண்ணில் படும் காட்சிகள் கோபத்தை வரவழைக்கும். படுத்துருக்கறவன் 'சட்'னு எழுந்து உக்காந்து 'டேய் என்னடா பண்றீங்க?'ன்னு கேக்கமாட்டானான்னு ஏங்குவேன்.
ஆனா ஒன்னு, சாமியே ஆனாலும் இப்படி உயிரோடு எழுந்து வந்துட்டான்னா................ நான் நம்பவே மாட்டேன்.
என் சாமி, வெறும் கல்லா இருக்கணும். நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கணுமே தவிர திருப்பி எதிர்க் கேள்வி கேக்கப்பிடாது...ஆமாம்.
அடையார் அனந்தபத்மநாபன் கோவிலில் போனவாரம் நடந்து முடிந்த ப்ரம்மோத்சவத்தில் இருந்து சில காட்சிகள் இனி.
எனக்கு மட்டும் அனந்தசயனம் பிடிக்காதா, என்ன? இன்றைக்குப் பிள்ளையாரும் மூலவர் வேஷத்தில்!
நவநீத கிருஷ்ணன் வெண்ணெய்க் குடத்துடன் புஷ்பப் பல்லக்கில்
விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியில் கத்ரி கோபால்நாத் ஸாக்ஸஃபோன், கன்யாகுமரி வயலினுடன்!
PINகுறிப்பு: 'சாமி'யாரைப் பற்றிச் சொன்னது ப்ளொக் ஸ்பாட்டுக்குப் பிடிக்கலை போல! பதிவு எதையும் எடிட் பண்ண முடியலை. எர்ரர்ன்னு சொல்லுது:(
Friday, March 05, 2010
நான் நம்பும் சாமி ...யார்......?
Posted by துளசி கோபால் at 3/05/2010 03:57:00 AM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
சாமியை விட்டுட்டு யாரையோ நம்புறவரை இது ஒரு தொடர்கதையாத்தான் இருக்கும் போலிருக்கு. :-(((
//என் சாமி, வெறும் கல்லா இருக்கணும். நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கணுமே தவிர திருப்பி எதிர்க் கேள்வி கேக்கப்பிடாது...ஆமாம்.//
இந்த டீலிங் நல்லாயிருக்கு டீச்சர் :)))
நீங்களுமா..:)
சரிதான் ம் கொட்டற சாமியார் :)
முன்பெல்லாம் கோவிலில் தரைக்கு மேல் உயரமான இடங்களில் உட்காரக்கூடாது என்று கட்டாயப்படுத்துவார்கள் ஆனால் இப்போது பாருங்க எல்லோரும் சேரில் தான்.பலரால் நிற்ககூட முடிவதில்லை போலும்!! இல்லை வயசான ஆட்கள் அதிகமோ? அதோடு முட்டி வலி வேறு இப்போது பல மக்களை பாடாய்படுத்துகிறது.
//என் சாமி, வெறும் கல்லா இருக்கணும். நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கணுமே தவிர திருப்பி எதிர்க் கேள்வி கேக்கப்பிடாது...ஆமாம்.//
இது நல்லாருக்கே சாமிக்கிட்டயே டீச்சர் வேலையா:))
வாங்க அமைதிச்சாரல்.
சாமி யாருங்க வேணாம்ப்பா. வெறும் கல்லுச்சாமி போதும். கவுன்ஸிலிங் செய்யும் கவுன்ஸிலர்.
வாங்க நான் ஆதவன்.
சாமியாருங்க மட்டும் என்னத்தைப் புதுசாச் சொல்வாங்க.
உன் மனக்கவலை தீருமுன்னு அருளாசி வழங்கல் மட்டும். ஆனா எப்போன்னு சொல்வாங்களா? கூடிய சீக்கிரம்!
ஆனா 'தட்சிணை' நாமல்லவோ அள்ளி வழங்கணும்.
வாங்க கயலு.
காலத்தே பயிர் செய். அதுவும் எழுத்தாளர்ன்னா சமூக நோக்கு வேணுமாமே! அதான் என் பங்குக்கு:-)
வாங்க குமார்.
தரையிலே உக்காரணுமுன்னா ஒருத்தரும் கோவிலுக்குப் போகமாட்டாங்க. யாரால முடியுது?
அதுக்குத்தான் நானே ஒரு கல்ட் ஆரம்பிச்சு ஆஸ்ரமம் தொடங்கலாமுன்னு பார்த்தா..... இப்ப
ஹூம்.... நேரம் சரியில்லை. கொஞ்சநாளில் மக்கள்ஸ் மறந்துருவாங்க. அப்பச் செஞ்சுறலாம்.
நம்ம ஆஸ்ரமத்துலே அறையே இருக்காது. ஆமாம்:-)
வாங்க கண்மணி.
இல்லேன்னா பெஞ்சுமேலே ஏத்திருவேன்:-))))
//எல்லா விஷயங்களும் உபாதைகளும் மகிழ்ச்சிகளும் இந்த 'அவதாரங்களுக்கும்' இருக்கும்தானே? //
நச் வரிகள். அது புரிஞ்சா மனுஷன் என்னைக்கோ திருந்தி இருப்பனே!.
இது எப்ப தான் முடிய போகுதோ? :(((
"ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்” - Osho
//நேற்று நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது......' அனுபவம் தலைப்பில் வரும் அபாயம் இருக்கு!
//
இது இல்லாம பதிவர்னு எப்படி சொல்லிக்கறதாம் :)
\\கோபாலான்னு சொல்லியே வளர்க்கப்பட்டவள்.
\\
சூப்பரு ;-)
நான் இன்றும் என்றும் வணங்குவது அந்த சிவனைத்தான். அவருக்கு அடுத்து நான் நம்புவது மஹா பெரியவாள் . வேற யாரையும் நம்புவது இல்லை அருமையான படங்கள்
//வசை பாடியோ//
:))))
வாங்க முகுந்த் அம்மா.
மக்கள் கூட்டம் பெருகப்பெருக சாமியார் கூட்டமும் பெருகுது. விகிதாசாரப்படி இருக்கணுமுல்லே:-)
புதுகூட்டம் நம்பும். அது நம்புவதை நிறுத்தும்போது இன்னொரு பத்துப் புதுக்கூட்டங்களும் சாமியார்களும் 'தோன்றி' இருப்பாங்க.
வாங்க சூர்யா.
ஓஷோவா?
அடடா....
மறுபடியுமா? விடியவிடிய ராமாயணம் கேட்டும்.....
வாங்க சின்ன அம்மிணி.
முதல் தகுதியே...கண்ணையும் காதையும் (மட்டும்) திறந்து வச்சுக்கணும் என்பதுதானே!
வாங்க கோபி..
எஸ் எஸ்:-))))
வாங்க எல் கே.
எல்லாருமே 'இசை பாட' மட்டும் இருந்தால் சாமிக்கு போர் அடிக்காதா?
ஃபார் அ சேஞ்ச், வசை பாட நான்!
//சாமியே ஆனாலும் இப்படி உயிரோடு எழுந்து வந்துட்டான்னா................ நான் நம்பவே மாட்டேன்.//
சாமி இங்கே உயிரோட இருப்பதா, வந்திருப்பதா இவரு சொல்றாரே !!
http://www.youtube.com/watch?v=Ad357O6hgOM
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
//பெருமாள். என்ன திட்டுனாலும், எது சொன்னாலும் புன்முறுவலோடு (காதுலே போட்டுக்காமல்) பொறுத்துக்கொள்வார். சுருக்கமாச் சொன்னால்..... நம்ம கோபால்! //
இல்லையா பின்னே !
கணவனே கண்கண்ட தெய்வமாச்சே.
மீனாட்சி பாட்டி.
சாமின்னா சரி ஆசாமி(அதான் சாமியார்)னா எனக்கும் அலர்ஜிதான். ஒதுங்கியே இருந்திடுவேன். நாமே சாமியிடம் பேசிக்க முடியும். அதுக்கு நடுவில் தரகர் எதுக்கு??
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
அருமையான படம். பலமுறை பார்த்தாச்சு.
ஆனால் ஓடலையாமே! நெசமாவா?
வாங்க மீனாட்சி அக்கா.
இல்லையா பின்னே? :-)
பெரியவுங்க சொன்னா....பெருமாளே சொன்ன மாதிரி(யாம்)
வாங்க புதுகைத் தென்றல்.
அதான் சாமிக்கும் நமக்கும் நடுவிலே யாரும் வேணாமுன்னு 'குரு' கூட வச்சுக்கலை:-)
அர்ச்சகர், பட்டர்கள் மூலமும் அப்பீல் செய்வதில்லை. வக்கீல் வேணாம். நானே வாதாடுவேன்:-)
கடவுளை தவிர வேறு யாரிடமும்
நம்பிக்கை வைக்க கூடாது.
நல்ல கருத்து, என் கருத்தும் அதுவே.
நல்ல விழிப்புணர்வு பதிவு தந்தீர்கள்,
நன்றி.
சாமிகள பத்தி சொன்ன மஹாபாரத,இராமயணத்தையே யாரும் கண்டுக்கறதில்லை ஆனா சாமியார் சொன்னா மட்டும் நல்லாவே கேட்டுக்கறாங்க!!!
வாங்க கோமதி அரசு.
எதுக்குங்க மனுசனை சாமி ரேஞ்சுக்கு நாம் உயர்த்தி, இல்லாத கல்யாணகுணங்களை கற்பிச்சுக்கிட்டு அப்புறம் குத்துதே குடையுதேன்னு புலம்பணும்?
அதான் நம்ம 2 செண்ட்ஸ் இங்கே பதிஞ்சது:-)
வாங்க சிந்து.
இப்படிச்சொன்னால்? கண் எதிரே 'அற்புதங்கள்' காமிக்கிறவரைத்தானே நம்பணும்!
என்னமோ போங்க.
நம்ம மக்களுக்கு மன்னிக்கும் குணமும் மறதியும் நிறையப்பா:(
unga blog romba arumai!
வாங்க மாதங்கி.
முதல் வரவா? நலமா? வருகைக்கு நன்றி.
தொடர்ந்து வாங்க. வருவீங்கதானே?
//அதென்னமோ தெரியலை, சாமியார்களைச் சின்னவயசுலே இருந்தே எனக்குப் பிடிக்கறதில்லை. அதுவும் சந்நியாசிகளாப் போன மனுஷர்களைக் கண்டாலே ஒரு வெறுப்பு. ஒருவேளை 'சந்நியாசி'யாகப்போன தந்தை காரணமா இருக்கலாம்.//
எனக்கு மாமனார்.அதுவும் திருவண்ணாமலை சாமியார்.
வாங்க ராஜ நடராஜன்.
திடீர் சந்நியாசிகளாப் போயிட்ட இவுங்களால் குடும்பம் படும்பாடு கொஞ்சநஞ்சமில்லை:(
கோழைகள்ன்னு மனசுக்குள்ளே வசைபாடுவேன்.
//என் சாமி, வெறும் கல்லா இருக்கணும்//
நடுவில் கொஞ்சம் உலோகம், மரமாக எல்லாம் கூட இருந்துட்டுப் போகட்டும் டீச்சர்! பர்மிஷன் குடுங்க! :)))
//நான் என்ன சொன்னாலும் கேட்டுக்கணுமே தவிர திருப்பி எதிர்க் கேள்வி கேக்கப்பிடாது...ஆமாம்//
ஆமாம் இது ரொம்ப முக்கியம்!
நானே முந்தா நேத்து சாமி கிட்ட ஒன்னு சொல்லியிருப்பேன்...
இன்னிக்கி எக்ஜாக்ட்லி ஆப்போசிட்டா வேற ஒன்னு கேக்குவேன்...
ஏய்...அன்னிக்கி அப்படிக் கேட்டியே, இன்னிக்கி இப்பிடிக் கேக்குறியே-ன்னு எதிர்க் கேள்வி கேட்டா...நல்லாவா இருக்கு? சாமியா லட்சணமா இருக்க வேணாமா? :))
எனக்கு எது வேணும்-ன்னு எனக்கே தெரியாதே!
அதுனால சும்மா எதிர்க் கேள்வி எல்லாம் கேட்காம...சொல்றதைக் காதுல வாங்கிக்கோ! அப்பாலிக்கா...
யாம் வந்த காரியம்
** ஆராய்ந்து **
அருளேலோ ரெம்பாவாய்! :))
Agreed 200%.
வாங்க கே ஆர் எஸ்.
அந்த உலோகம் தங்கமாத்தான் இருக்கட்டும். பிரச்சனையே இல்லை(யாக்கும்)
நீங்க வேற..... அவன் பார்த்துப் பார்த்துச் செஞ்சாலும் அதை(யும்) மீறி நம்ம குயுக்தியால் (புத்திசாலித்தனமா நடந்துக்குறோமாம்) தேவை இல்லாததை எடுத்து மடியில் விட்டுக்கிட்டுக் குத்துதே குடையுதேன்னு புலம்பி ஆகாத்தியம் செய்வதையும் 'ஆராய்ஞ்சு' பார்த்துக்கணும்,இல்லே?:-)
வாங்க சந்தியா.
அதே அதே. இன்னொரு பூஜ்யம்('ர்' இல்லை) சேர்த்தாலும் நோ ப்ராப்ஸ்:-)
ah!!! I am coming here after a long time... Nice Post!!! I have the same idea about sami becoming aa-saami :))
Anyhow... if only people knew how to deal with thier own problems without taking shortcuts such AA-Sameess wont be here...
will be back for the refresher course teacher ...
எனக்கும் அதே கருத்து தான் . கடவுளுக்கும் எனக்கும் நடுவே அர்ச்சகர் கூட வேண்டாம் .
கோவில்ல இந்த அர்ச்சகர்கள் அடிக்கற கூத்து இருக்கே , அந்தகோவிலுக்கே போக தயங்கும் அளவுக்கு கொண்டு போய்டுவாங்க :( highly disgusting .
//போதுண்டா 'சாமி'! எனக்கு என்ன ஆச்சரியமுன்னா..... இவ்வளவு நல்ல பெரிய படிப்பு படிச்சவுங்க கூட எப்படி இதையெல்லாம் நம்பறாங்க!!!!
இன்னும் சிலர் 'ஸோ அண்ட் ஸோ வுக்கு ஸோ அண்ட் ஸோ சாமி ப்ரத்யக்ஷம்னு சொல்லும்போது..................சாமிக்கு வேற வேலையே இல்லையா? கூப்ட்டவுடன் ஓடிவந்து நிப்பானாக்கும்? போங்கடா..............//
ச ரியாசொல்லி இருக்கீங்க :))
Post a Comment