Monday, March 08, 2010

புலி இருந்த இடமாம்!

"எல்லாம் உயிர் பயம்தான். எப்படி ஏறுனேன்னே தெரியலைங்க. இறங்கும்போது, எங்கே திரும்ப வந்துருமோன்னு பயந்துக்கிட்டே காலையில் இருந்து சாயங்காலம்வரை உக்காந்துருந்தேன். நான் எளநி கொண்டுவந்த பாத்திரம் எல்லாம்........."


எத்தனைமுறை இந்தப் பக்கம் போயிருக்கேன்.அதென்னமோ ஒரு முறைகூட நின்னு பார்த்துப்போக முடியலை. இன்னிக்கும் கடந்துதான் போயிருப்போம். சட்னு ஒரு தோணல். வண்டியை ஓரங்கட்டச் சொன்னோம். அரசாங்க அனுமதியுடன் ஒரு வழிகாட்டி இருந்தார். பெயர் ஜெயராஜ்.
வழிகாட்டி ஜெயராஜுடன் நம்ம கோபால்.

தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பில் இருக்குமிடம். நல்ல சுத்தமா இருக்கு. புலிக்குகை. பெரிய பாறையின் முன்னே சதுரமா ஒரு குளம். செம்மண் நிறத்தில் தண்ணீர் இருக்கு. பாறையில் பெருசா 12 புலி முகங்கள். சின்ன உருவங்களா இன்னும் ஒரு நாலு நிக்குது. நடுவிலே சதுர மாடமா ஒரு இடம். புலிகேசி தியானம் செஞ்ச இடமாம். அகலம் குறைவா இருக்கே. எப்படிக் காலை மடக்கி உக்கார்ந்துருப்பார்னு எனக்குக் கவலை.

புலி முகங்கள்ன்னு சொன்னாலும் கவனிச்சுப் பார்த்தால் தலைக்குப் பக்கம் யானையின் துதிக்கைகள் இருக்கு. குகையின் வலது புறம் சிவலிங்கம், அதன் கீழே ரெண்டு யானைத் தலைகள். சிவலிங்கத்தின் இருபுறமும் மாடங்களில் சிவன், பார்வது ரூபங்கள்.

பல்லவர்கள் மேல் போர் தொடுக்க வாதாபியில் இருந்து புலிகேசி வந்து முகாம் இட்ட சமயம். ஏழாம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்கள். ராஜா வர்றாருன்னா சும்மாவா? கேம்ப் ஏற்பாடுகள் செய்ய ஆள் அம்பு படை, பொழுதுபோக்காக இசை, நடன நிகழ்ச்சி நடத்த கலைஞர்கள், இன்னும் அரசரின் சொந்த ஹாபியை அனுசரிச்சு ஓவியர்கள் சிற்பிகள், நடக்கும் சம்பவங்களை எழுதிவைக்க (ஆஹா.... பதிவர்கள்!) குறிப்பாளர்கள்ன்னு பெரும்படை ஒன்னும் கூடவே வந்துருக்குமில்லே?

ஆனா ஒன்னு, பாரதப்போர் மாதிரி 18 நாளில் முடிஞ்சுருக்காது. ஆற அமர நின்னு நிதானமாத்தான் நடந்துருக்கணும். இல்லேன்னா இப்படிச் சிற்பங்களும் கோவில்களுமா எப்படி செதுக்கி இருக்க முடியும்?

சாய்வா நிற்கும் ஒரு பெரிய பாறைதான் லுக் அவுட் மாதிரி கண்காணிப்பு செய்யப் பயன்பட்டு இருக்கு. அங்கே இருந்து பார்க்கும்போது, மல்லையில் ஆயனசிற்பியின் சீடப்புள்ளைகள் கல்கல்ன்னு கல்லில் இருந்துவரும் 'உளியின் ஓசை'யுடன் சிற்பங்கள் செதுக்கிக்கிட்டு இருந்துருப்பாங்க. பல்லவ அரசர் வேலை எவ்வளவு தூரத்துலே இருக்குன்னு பார்க்க வந்து போய்க்கிட்டு இருந்துருப்பார்.
பல்லவர்களுக்கிடையிலான பல போர்கள் ஒன்றில் கடைசியில் புலிகேசி கொல்லப்பட்டது முதலாம் மஹேந்திரவர்மனோடு நடந்த போரில்தான். பல்லவர்களும் வாதாபிவரை போய் அந்நகரைத் தீக்கிரையாக்கிட்டு வந்துருக்காங்க. (கல்கியின் சிவகாமியின் சபதம் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் சொல்லுது)
இந்த லுக் அவுட் பாறைமேல் ஏறப் பிடிமானம் ஒன்னுமே இல்லை. சின்னச்சின்னத் துளைகள் சில இருக்கு. ராக் க்ளைம்பிங் செய்வதுபோல் ஏறணும். ஆனால் உயிர் பயத்தில் எப்படின்னே தெரியாம விடுவிடுன்னு அதுமேலே ஏறி இருந்துருக்கார் நம்ம ஜெயராஜ். சுநாமி வந்த நாள். அதிகாலையில் அமைதியா இருந்த இடத்துக்கு ஒரு பாத்திரத்தில் ஏழெட்டு இளநீரை எடுத்துக்கிட்டு வந்துருக்கார். அன்னிக்கு ஒரு பெண்கள் கல்லூரியில் இருந்து இந்த இடங்களைப் பார்வையிட வருது ஒரு குழு. அவுங்க வரும்போது குடிக்கச் சில்லுன்னு இருக்கட்டுமேன்னு இளநிப் பாத்திரத்தைக் கொண்டுவந்து கற்பாறைகளுக்கிடையில் தண்ணீரில் வச்சுட்டு நிமிர்ந்து பார்த்தா................ ஆளுயர அலை எழுந்து பொங்கிக்கிட்டு வருதாம். தண்ணீர் சுவரைப் பார்த்ததும் என்ன ஏதுன்னு புரியாமல் வச்ச பாத்திரத்தைத் தூக்கிக்கிட்டு ஓடறார். (அப்போ அங்கே இருந்த ஒரு வெள்ளைக்காரப் பயணி படம் எடுத்து இருக்கார். அதை இவருக்கு பின்னாளில் அனுப்பி வச்சாராம்.. அதையே நான் இன்னொரு படமா எடுத்துக்கிட்டேன்) பின்னாலேயே சுவர் நெருங்குது, ஒரே தாவல். பாறை உச்சிக்குப் போயிட்டார். எல்லாம் ப்ராண பயம் கொடுத்த அசுர சக்தி!.
இந்தக் கல்லில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் இன்னும் சில கற்பாறைகள் கிடக்கு. அங்கேயுள்ள படிகளில் இறங்கிப்போனால் சின்னதா ஒரு கோவில். சிவனுக்கு. துவாரபாலகர்கள் பக்கச்சுவர்களில். ஆனால் சிவன் பட்டை போட்டுருக்கார். லிங்கத்தின் பின்புறச்சுவரில் பார்வதி பரமேஸ்வரர், பிரம்மா, விஷ்ணு இருபுறமும் இருக்காங்க. இவருக்கு எதிரில் நந்தி. ஸ்லைஸ் செஞ்ச துண்டு போல ரெண்டா உடைஞ்சு இருக்கு. ரெண்டுக்கும் நடுவில் இன்னொரு சிலிண்டர் வடிவத்தில் ப்ளெயினா ஒரு லிங்கம். குகை மாதிரி குடைஞ்சு இருக்கும் கோவில். சுவரின் ரெண்டு பக்கமும் அந்தக் கால எழுத்துக்கள்.


நந்திக்குப் பக்கம் இருக்கும் கல்லில் மகிஷனுடன் போர் புரியும் காட்சி மகிஷனின் முக பாவனை அற்புதம்! எந்தக் கல்லைப் பார்த்தாலும் விடமாட்டாங்க போல! ச்சும்மா டைம்பாஸ்க்கு அப்படியே செதுக்கல்தான்! நம்ம மக்கள் பக்தி மேலிட்டு, கற்பூரம் கொளுத்திக் கறுப்பாக் கறை பண்ணிட்டாங்க:(
இந்தக் குடைவரைக் கோவிலுடன் புலிக்குகையின் எல்லை முடிஞ்சுபோனதுக்கு அடையாளமா ஒரு கேட் போட்டுவச்சுருக்காங்க. இதைத் திறந்து மறுபக்கம் போனால் (இது பொது வழி இல்லையாம். ஆனால் வழிகாட்டி நம்மைக் கூட்டிட்டுப்போய் காமிப்பார்) இந்தப் பக்கம் வேலியை ஒட்டி ஒரு கோவில் இருக்கு. ச்சும்மா வெய்யில் மழை கொண்டு திறந்த வெளியா இருந்த 'கோவிலை' கிராமத்தார் இப்போ சுவரெடுத்துக் கட்டி இருக்காங்க. மக்கள்ஸ், வந்து போன அடையாளமா சுவரெங்கும் ஆட்டோகிராஃப் போட்டு வச்சு அலங்கரிச்சும் இருக்காங்க:( கடலை நோக்கி வீற்றிருக்கும் கடலம்மை. உள்ளே அஞ்சாறு சிற்ப உருவங்கள் இருக்கு. வராக முகத்துடன் ஒருத்தர் இருக்கார். சங்குசக்ரத்துடன் ஒருவர், மழுவோடு ஒருவர் இப்படி ஆறு பேர். சந்நிதி முன்னால் சூலாயுதம் நிக்குது.
சுநாமி வந்த பிறகு இந்த இடத்தில் ஒரு முருகன் கோவில் இருந்தது தெரியவந்திருக்கு. தொல்பொருள் இலாகா பாதித் தோண்டி போட்டு வச்சுருக்கு. (இப்ப ஒரு மூணு மாசம் கழிச்சுப் போனபோதும் அப்படியேதான் கிடக்கு. ஃபண்டிங் கிடைக்கலையாம். பலிபீடம், கல் குத்துவிளக்கு, செங்கலால் கட்டுன கோவில் எல்லாம் ப்ளாஸ்டிக் போர்வையுடன் வெளிப்படுத்திக்கக் காத்துநிக்குது.!)

மகளின் சமீபத்திய சென்னை விஜயத்தில் சில இடங்களுக்குப் போய்வந்தோம். அதில் சில இடங்கள் நமக்கு ரிப்பீட்டாயிருச்சு. முதல்முறை போனபோதே எழுதணுமுன்னு நினைச்சு முடியாமப் போனது 'எல்லாம் நன்மைக்கே'!

இந்த முறை வாட்ச்மேன் (பெயர், துரை)மட்டுமே இருந்தார். . நம்ம அஃபிஸியல் கைடு ஜெயராஜ் வீடுவரை போயிருக்காராம். பரவாயில்லை. நானே மகளுக்கு வழிகாட்டியா இருந்தால் ஆச்சு!

புலிக்குகை முன்னே இருந்த தண்ணீர் எல்லாம் காணோம். நடந்து பக்கத்துலே போய் பார்க்கலாம். ஆரோக்கியமான கன்னங்கள் உப்பிய புலிகள். சும்மாச் சொல்லக்கூடாது. பார்க்கவேண்டிய சமாச்சாரம்தான்.
ஆமாம். புலிகேசி புலிகேசின்னு சொல்லியும் எழுதியும் வர்றோமே..... சரியான பெயர் புலகேசி(யாம்). அப்போ? புலி முகம் செதுக்கியதால் இவருக்குப் புலிகேசி என்று பட்டப்பெயர் வந்ததுன்னு அறிவிச்சுடலாமா?

36 comments:

said...

மனுசனுக்கு அந்த நேரத்தில் எளநி பாத்திரம் எதுக்காம் ..கீழ போட்டுட்டு ஓட வேண்டியது தானே..

Anonymous said...

எப்பேர்ப்பட்ட வீரரா இருந்திருப்பார் புலிகேசி. இம்சை அரசன்னு காமெடியனாக்கிட்டமே

said...

குகை,கோயில்,உடைந்த நந்தி, எல்லாம் அருமையாக இருக்கிறது.
ஜெயராஜ் சுனாமி படம் மனத்தை உருக்குகிறது.

said...

டீச்சர் தகவலுக்கு மன்னிக்கவும், யாரோ உங்களுக்குத் தப்பா கதை சொல்லி விட்டார்கள். இது பல்லவர்களால் செதுக்க்ப்பட்டது. சிற்ப வேலைப்பாடுகளையும், பணிகளையும் கவனிக்க வரும் மகேந்திர சக்கரவர்த்தி அமரும் ஆசனம்தான் இது. சித்திரகாரப் புலி என அழைக்கப் பட்ட அவர் அமரும் புலிக்குகை ஆசனம் இது. இது பின்னாளில் சோழர்கள் காலத்தில் ஆதித்தன், முதலாம் பராந்தகனின் இடமாகப் போன போதுதான் இது புலிக்குகை என அழைக்கப் பட்டது. பக்கத்தில் மாமல்லபுரம் நுழையும் இடத்தில் புலி உறங்கும் பள்ளிப் படையும் காணலாம். படமும் தகவலும் அருமை.

said...

//பல்லவர்களும் வாதாபிவரை போய் அந்நகரைத் தீக்கிரையாக்கிட்டு வந்துருக்காங்க. (கல்கியின் சிவகாமியின் சபதம் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் சொல்லுது//

அருமையான நாவல் இல்லையா?... வாதாபி கணபதி தமிழகத்துக்கு அவங்க கொண்டு வந்தவர்தானே.

சுனாமி பயங்கரமா இருக்கு.

said...

வாங்க கயலு.

போணி!!!!

கடைசியில் பாத்திரம் போயே போச்:(

(நல்லவேளை, அது எவர்சில்வர் இல்லை!)

said...

வாங்க சின்ன அம்மிணி.

நாம் எப்பவுமே அடுத்தவனைக் கொஞ்சம் இளக்காரமாத்தான் நினைப்போம். என்ன இருந்தாலும் புலிகேசி 'தமிழ்க்காரன்' இல்லை பாருங்க!!!

said...

வாங்க மாதேவி.

ஜெயராஜின் சொற்களில் அந்தப் பீதி இன்னும் இருந்ததா ஒரு நினைவு.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

அட! அரசாங்க அனுமதியுடன் இருக்கும் வழிகாட்டி சரித்திரத்தை மாத்தி எழுதிட்டாரா?

நான் ஏற்கனவே ஒன்னு சொல்ல நினைச்சு எழுத விட்டுப்போச்சு. ஆக்சுவலா, மல்லை பதிவுகள் எழுதும்போது குறிப்பிட நினைச்சது. சரி கேட்டுட்டீங்க.இங்கேயே சொல்லிடலாம்.

இங்கே இருக்கும் குடவரைக்கோவிலும், மல்லையில் அஞ்சு ரதப் பகுதியிலும், பீமன் கல்லின் பின்னால் இருக்கும் குடவரைக்கோவில்களும் ஒரே ஸ்டைலில் இருப்பதைக் கவனிச்சேன். அஞ்சு ரதப் பகுதியில் இருக்கும் சிவலிங்கமும் இதே போலப் பட்டைப் போட்டதுதான். அதுலே ஒன்னு மேல்பாகம் உடைஞ்சும் கிடக்கு. இன்னொண்ணிலே சிவலிங்கம் இருந்த பகுதி 'காலி'யா தோண்டி எடுத்ததுபோல் குழி மட்டும் இருக்கு. எல்லா லிங்க உருவின் பின்புறச்சுவற்றிலும் ஒரே மாதிரி பார்வதி பரமேச்வரச் சிற்பங்கள்தான்.

என்னுடைய கணிப்பு என்னன்னா.... புலிமுகக் குகை புலகேஸியாலும், மற்ற பகுதியில் உள்ள குடவரை பல்லவர்களாலும் உருவாகி இருக்கும். பல்லவன் சிற்பக்கலையை ஆராதிப்பவன் என்பதால் புலி செதுக்குனதை அழிக்காமல் விட்டு வச்சுருப்பான்.

தியரி சரியா இருக்கா இல்லையான்னு நிபுணர்கள் சொல்லணும்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

கல்கின்னாவே சரித்திரப் புனைவுக் கதைகள் தானே நினைவுக்கு வருது. அது என்னவோ பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும் ஈர்த்த அளவு, அலை ஓசை மனசுலே நிக்கலை எனக்கு:(

said...

good............

said...

வாங்க விடிவெள்ளி.

நம்ம வீட்டில், முதல்வரவுக்கு நன்றி.
நலமா?

மீண்டும் வருக.

said...

நந்தியை பாத்தாக்க பிரெட் ஸ்லைஸ் மாதிரி தான் இருக்கு டீச்சர்.

பெங்களூரில் கடல் இல்லைன்னாலும் சுநாமினு கேட்ட போது ரொம்பவே கலக்கமா தான் இருந்துச்சு....ஜெயராஜ் பக்கத்திலே பார்த்திருக்கார்ன்னா...அந்த ஒரு நிமிஷம் எப்படி தான் இருந்திருக்கோமோ!!!

said...

//மனுசனுக்கு அந்த நேரத்தில் எளநி பாத்திரம் எதுக்காம் ..கீழ போட்டுட்டு ஓட வேண்டியது தானே..//I really wonder why he was picking it while running for life..

said...

டீச்சர், எனக்குத் தெரிந்து மாமல்லபுரத்தில் புலிக்கேசி சிற்பங்களை உருவாக்கினதா இல்லை. ஒற்று அறிய அவன் ஆயன சிற்பியைத் தவறாக பயன் படுத்திக் கொண்டான். மாமல்லை சிற்பங்கள் எல்லாம் பரமேஸ்வரப் பல்லவன்,மகேந்திர வர்மர், நந்திவர்மப் பல்லவர், விஷ்ணு வர்மர்,நரசிம்மர் மற்றும் இராஜசிம்ம வர்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப் பட்டவை. நன்றி.

said...

கடைசியில் புலிகேசி கொல்லப்பட்டது முதலாம் மஹேந்திரவர்மனோடு நடந்த போரில்தான். //

இல்லையே, மஹேந்திரபல்லவன் மகன் நரசிம்ம பல்லவன் தான் ஒன்பது வருடங்கள் படை திரட்டிக் கொண்டு போய் வாதாபியையும் தீக்கிரையாக்கிட்டுப் புலிகேசியையும் கொன்றார். தப்பாய்ச் சொல்லி இருக்கீங்க. மாத்துங்க. கல்கியின் சிவகாமியின் சபதமும் இப்படியே தான் சொல்லிட்டு இருக்கு!:))))

அது சரி, இது எந்த இடம்?? புரியலையே எனக்கு?? சுநாமி வேறே வந்திருக்குனு சொல்றீங்க??/

ம்ம்ம்ம்ம்??? ஆறு பட்டைகளுடன் கூடிய லிங்கம்???? ஜொலிப்பைப் பார்த்தால் மரகதலிங்கம் மாதிரி இருக்கு./கடலை நோக்கி வீற்றிருக்கும் கடலம்மை. உள்ளே அஞ்சாறு சிற்ப உருவங்கள் இருக்கு. வராக முகத்துடன் ஒருத்தர் இருக்கார். சங்குசக்ரத்துடன் ஒருவர், மழுவோடு ஒருவர் இப்படி ஆறு பேர். சந்நிதி முன்னால் சூலாயுதம் நிக்குது.//

ம்ம்ம்ம்?? சப்தகன்னியர்னு நினைக்கிறேன். ஆறுபேர்தான் இருக்காங்க போல, இன்னொரு அம்மா எங்கே?? கடலம்மைனு சொல்றவங்க தான் ஏழாவது அம்மனோ?? நேரில் பார்க்கணும், இடத்தைச் சொல்லுங்க, எங்கே இருக்கு, எப்படிப் போகணும்னு எல்லாம். ஆமாம் படத்தைப் பெரிசு பண்ணிப் பார்த்துட்டேன். சப்தகன்னியரே தான் அவை.. இவை எல்லாம் மிகப் பழங்காலத்தவை எனத் தோன்றுகிறதே. தொல்பொருள் இலாகாவின் குறிப்புகள் சொல்லும் அறிவிப்புப் பலகை எதுவும் வைக்கலையா?? கல்வெட்டும் பழைய எழுத்தாய்த் தெரியுது. அருமையான இடம். சரித்திரச் சின்னம் போற்றிப் பாதுக்காக்கத் தெரியணும், நம் மக்களுக்கு.

புலிகேசி எதுவும் இங்கே வந்து சிற்பங்கள் எல்லாம் செதுக்கிட்டு இருக்கலை. அஜந்தா ஓவியங்கள் தான் புலிகேசி காலத்திலே ஆரம்பிச்சோ, அதுக்கும் முன்னால் ஆரம்பிச்சோ தொடர்ந்து வரையப் பட்டன என்று சொல்கின்றனர். தன் சித்தப்பன் மங்களேசனுக்குப் பயந்து புத்தபிக்ஷுக்களின் பாதுகாப்பில் புலிகேசி யாரும் அண்ட முடியாத (இப்போவே கஷ்டமாய்த் தான் இருக்கு அஜந்தாவிலே போக) அஜந்தா மலைக்குகைகளில் தங்கி இருந்தான். கல்கி அந்த ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு புலிகேசிக்கு அண்ணன் என நீலகேசி(நாகநந்தி அடிகள்)யைப் படைத்துக் கதை சொல்லி இருக்கிறார். மற்றபடி புலிகேசி அஜந்தாவில் மறைந்திருந்ததும், காஞ்சியை நோக்கிப் படை எடுத்து வந்ததும் சரித்திர பூர்வமான தகவல்கள் தான்.

said...

அந்தக் கல்வெட்டுப் படிச்சுப் பார்க்கணும், அப்போத் தான் சரியான தகவல்கள் தெரியவரும்.

said...

வாங்க சிந்து.

பாவம் மனுஷர் ஆடிப்போயிட்டார். நல்லவேளை இங்கே இந்த இடத்தில் வீடுகள் ஒன்னும் இல்லாததால் உயிர்சேதம் இல்லை.

said...

வாங்க சந்தியா.


அதானே.....ஆபத்து சமயத்தில் அதை என்னத்துக்கு சுமக்கணும்? அனிச்சையா நடந்துருக்கலாம்!!!!

said...

ஏம்ப்பா பித்தனின் வாக்கு. அப்போ அந்த புலிமுகமும் பல்லவன் செதுக்குனதா? ஏன் எதுக்குன்னு இன்னும் துருவிப்பார்க்கணும் போல இருக்கே!

said...

வாங்க கீதா.

ரொம்பச் சரி. முதலாம் நரசிம்மவர்மன் ன்னு எழுதணும். நாந்தான் தப்பா தட்டச்சிட்டேன். அதை எடிட் பண்ணிடலாமுன்னா ப்ளொக் ஸ்பாட் உள்ளே விடறதில்லைப்பா. ரெண்டு வாரமா எடிட் பண்ணமுடியாம அப்படியே டைரக்ட்டா பப்ளிஷ் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

லிங்கத்துக்கு 12 பட்டை இருக்கும்போல இருக்கே. இது மகாபலிபுரம் போகும் வழியில் ஈ ஸி ஆர் ரோடிலேயே வரும் புலிக்குகைதான். இங்கிருந்து மகாபலிபுரம் ஒன்னரை கி.மீ. இருக்கும்.

இதே டைப் சிவலிங்கம் மல்லையிலும் இருக்கு.

தொல்பொருள் இலாகா , இது பாதுகாக்கப்பட்ட இட்முன்னு ஒரு போர்டு வச்சுருக்கு.

said...

எனக்கிப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

புலி மூஞ்சு செதுக்குனது யாரு??????

said...

//எல்லாம் ப்ராண பயம் கொடுத்த அசுர சக்தி!.//

உங்க பதிவை படிச்சுட்டு அப்படியே தூங்கியிருக்கேன் போல இருக்கு. நடு நிசிலே புலி புலின்னு நான் கத்த‌
வீட்டு கிழவி என்ன என்னன்னு கேட்டு ஓடி வர ஒரே ரகளை ஆயிடுச்சு. என்னங்க புலி ! எங்கன இருக்கு !
அப்படின்னு கேட்க, ஹி..ஹி.. கனவு போல இருக்கு, துளசி கோபால் பதிவு படிச்சேனா.. அதனால போல இருக்கு..அப்படின்னு சொல்லிட்டு, நா உங்க பதிவ காட்ட, வீட்டுக்கிழவி சொல்லுது,

" புலி புலி அப்படின்னு மன்சுலே இருக்கிற கிலியே இந்த பயத்துக்கெல்லாம் காரணம்.

நம்ம ஊரு கோவிலுக்கு போகும்போது இனிமே
பயப்படாம இருக்க்றதுக்கு ஒரு தாயத்து கட்டிடுவோம். அப்படின்னு சொல்லிப்போட்டாங்க "

வரும்போது கோபாலுக்கும் ஒரு தாயத்து வாங்கி வரவா ? !!

சுப்பு ரத்தினம்..

said...

//புலி மூஞ்சு செதுக்குனது யாரு??????//

இப்படி அதட்டினா சொல்லி விடுவாங்களா என்ன ?
ஆனா, நிசமா சொல்றேன்.
எங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் தெரியாது. எலி பக்கத்துலே வந்தாலே ஏ.டி.எஸ் . இன்ஜக்சன்
போட்டுக்க்றவரு, ஏங்க புலியப்போய் செதுக்கப்போறாரு...

மீ.பா.

said...

புலி மூஞ்சியை செதுக்கியவர்கள் பல்லவர்கள்தான். அது மகேந்திர வர்மர் தான். எங்கன பாறையைக் குடைந்து சிற்பங்கள் பார்த்தாலும் அது மகேந்திர வர்மர் என நினைவில் கொள்ளுங்கள். ஏன்னா தமிழ் நாட்டில் இந்த டெக்னாலஜியை யூஸ் பண்ணியவர் அவர் ஒருவர்தான். வல்லம்,திருச்சி மலைக்கோட்டை,திருக்கழுகு குன்றன், மகேந்திரவாடி என எல்லா இடங்களிலும் குடைவரைக் கோவில்களும், குடைவரைச் சிற்பங்களும் ஏற்படுத்தியவர் அவர் ஒருவரே.

அது எல்லாம் சரி, புலிகேசியைக் கொன்னது நரசிம்மவர்மப் பல்லவர் அல்ல. வாதபியின் மீது படை நடத்தியது மட்டும் அவர்தான். ஆனால் புலிகேசியுடன் போர் புரிந்து வாட்போரில் அவனைக் கொன்றது, நம் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான பரஞ்சோதி என்று அழைக்கப்படுவர். இவர்தான் தளபதி மற்றும் நரசிம்ம வர்மரின் நண்பர். வாதபிப் போரின் முழுப் பொறுப்பும் இவரிடம் தான் இருந்தது. இப்போருக்குப் பின்னர்தான் இவர் சாமியார் ஆகிவிட்டார். அசோகர் மாதிரி. நன்றி டீச்சர். டீச்சர் இன்னைக்கு நம்ம பிளாக் பக்கம் வந்து சிரிச்சுட்டுப் போங்க.

said...

நாங்களும் பார்த்த இடம்தான். ஆயினும் உங்கள் படங்களும் பதிவின் அழகும் விரிவும் பல புதியவற்றையும் சொல்கின்றன. நன்றி

said...

மாமல்லபுரத்தில் பார்க்காத இடங்களை காட்டியதற்கு நன்றி.

மறுபடி போனால் பார்க்க குறித்து வைத்துக் கொண்டேன்.

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா.

கோபாலுக்குப் புலி பயமே இல்லையாம். பயம் தெளிஞ்சே வருசம் 35 ஆச்சாம்! இதுக்கு மேலே வேறொன்னு அதிபயங்கரமா இருக்கச் ச்சான்ஸே இல்லைன்றார்!!!!

said...

வாங்க மீனாட்சி அக்கா.

கொஞ்சம் கொழுமோர் காய்ச்சிக் குடுங்க. அத்திம்பேரின் பயப்ராந்தி 'தெளியட்டும்'

said...

பித்தனின் வாக்கு.

சிரிச்சுட்டு வந்துட்டேன்:-)))))

said...

வாங்க டொக்டர் ஐயா.

சொன்னதும் சொல்லாததும் , இன்னும் வரிகளுக்கிடையில் படிக்கவும் நிறைய இருக்கு(ம்) நம்ம இடுகைகளில்:-)

said...

வாங்க கோமதி அரசு.

மாமல்லபுரம் இடுகை ஒன்னு எழுதிப் பாதியில் கிடக்கு. அதுக்கும் ஆதரவு தரணுமுன்னு இப்பவே கேட்டுக்கறேன்:-)

said...

>>>>என்னுடைய கணிப்பு என்னன்னா.... புலிமுகக் குகை புலகேஸியாலும், மற்ற பகுதியில் உள்ள குடவரை பல்லவர்களாலும் உருவாகி இருக்கும். பல்லவன் சிற்பக்கலையை ஆராதிப்பவன் என்பதால் புலி செதுக்குனதை அழிக்காமல் விட்டு வச்சுருப்பான்.<<<<<

எப்படிங்க இதெல்லாம்:)

நீங்க பார்த்தவை அன்னைத்தும் ராஜசிம்மன் காலக் கட்டுமானங்கள். சிற்பக் கூறுகள் இவ்வுண்மையை தெளிவாக்கும்.

அங்கு இருக்கும் அனைத்து உரருவங்களுமே யாளிகள்தான். ஒன்று கூட புலி இல்லை. நீங்க போன இடத்துக்குப் பேரு சாளுவன்குப்பம்.

அங்க இருந்த சிவன் கோயில் அதிரணசண்ட பல்லவேஸ்வரகிகம். கிரந்தம் நாகரி ஆகிய இரண்டு எழுத்துகளிலும் அங்க (ஒரே) கல்வெட்டு உண்டு.

நிறைய கட்டுகதைகளை உண்மைன்னு நம்பீட்டங்களோன்னு தோணுது.

>>>உள்ளே அஞ்சாறு சிற்ப உருவங்கள் இருக்கு. வராக முகத்துடன் ஒருத்தர் இருக்கார். சங்குசக்ரத்துடன் ஒருவர், மழுவோடு ஒருவர் இப்படி ஆறு பேர். சந்நிதி முன்னால் சூலாயுதம் நிக்குது.<<<

அவங்கதாங்க சப்தமாதர். பிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி, இந்திராணி, கௌமாரி, வாராஹி, சாமுண்டியத்தான் பாத்து இருக்கீங்க! (யாராவது ஒருத்தர் miss ஆகியிருக்கலாம்.)

said...

Btw. that post was from me.

- Lalitha Ram. (http://carnaticmusicreview.wordpress.com/)

said...

வாங்க .

அதானே.... கு'தர்க்க'புத்தி எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்களேன்:-)
இந்த யாளிகளுக்கு எப்படிப் புலிக்குகைன்னு பெயர் வந்திருக்கும் என்பதுதான் இப்போதைய யோசனை!

கட்டுக்கதைகளைக் கட்டிவிட்டது யாரு? அதெப்படி புனைவை அபுனைவாக்கிட்டாங்க!!!!

நான் ரொம்பவே அப்பாவின்னு இப்போ புரிஞ்சுருக்குமே:-)

சப்தமாந்தர் ரொம்பசரி. வராஹியை மறந்தேபோயிட்டேன். எல்லோருக்குமா ஒரே புடவையை இழுத்து அணிவிச்சதால் ஏழாம் எண் மாது மிஸ்ஸிங்:(

நம்ம பதிவுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்த இடுகைமூலம் இன்னும் பலவிவரங்கள் தெரியவந்திருக்கும்.

உங்கள் விளக்கத்துக்கு நன்றி.

said...

இன்னொண்ணு சொல்ல விட்டுப்போச்சு. தாமதமான பதிலுக்கு மாப்பு ப்ளீஸ். பயணத்தில் இருக்கேன்.