Wednesday, March 17, 2010

சண்டிகரின் ரெண்டு சொந்தங்கள்.

அமெரிக்கக் கட்டகலை நிபுணர் ஆல்பர்ட் மெயர் (நியூயார்க்) (Albert Mayer, Whittleslay, Glass & Mathew Nowicki) மேத்யூ நோவிக்கி என்றவருடன் கூட்டாகச் சேர்ந்து இன்னும் சிலபல கட்டிடக்கலை நிபுணர்களுடன் திட்டம் வகுக்க ஆரம்பிச்ச வேலை, சட்னு நின்னுபோச்சு. காரணம்? மேத்யூ ஒரு விமானவிபத்தில் போய்ச் சேர்ந்துட்டார். கொஞ்சநாள் இடைவெளிக்குப்பிறகு மறுபடி திட்டத்துக்கு உயிர்வந்து 1952 இல் கட்டிடம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ ப்ரான்ஸ் நாட்டுக் கட்டடக்கலை நிபுணர் Le Corbusier கூட்டுச் சேர்ந்துக்கிட்டார். கட்டிடங்களின் வெளிப்புறம் செங்கல்லும் காரையுமாவே நிக்கணுமுன்னு ஏற்பாடு. நமக்கென்னமோ இது 'பணித் தீராத வீடு' என்ற நினைப்பையே ஏற்படுத்துது. கடைசியில் இது சண்டிகர் ஸ்டைல் கட்டிடக்கலை ன்னு பெயர் வாங்கிருச்சு. முக்கியமாக அரசாங்க அலுவலகங்கள், கடை கண்ணிகளுக்கான ஷாப்பிங் ஏரியா, இன்னும் சமூகநலனுக்கான பொதுவான கட்டிடங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கணும்முன்னு வச்சுருக்காங்க.(தனியார் வீடுகளுக்கு இந்த விதி இல்லை) அதனால் பார்க்க எல்லாமே ஒன்னுபோல இருக்கு. முக்கியமாக ஷாப்பிங் கட்டிடங்கள் பார்க்கக் கொஞ்சம் போரடிக்குது. ஆனா...இந்த விதி இல்லைன்னா விதவிதமான நிறங்களை அடிச்சு 'பேஜார்' பண்ணி இருந்துருப்பாங்க நம்ம மக்கள்ஸ், இல்லையா?இப்போ சமீபத்துலே கட்டப்பட்டவைகள் செங்கல் தெரியாம சிமெண்ட் பூச்சோடு இருக்குதுகள். இனி இப்படியே இருக்கட்டுமுன்னு ஆகி இருக்கலாம். 58 வருசமாப் பார்த்துப் பார்த்து அவுங்களுக்கே செங்கல் போரடிச்சுப்போச்சு போல!

இந்த வளாகங்களில் எல்லாத்திலும் ஒரே மாதிரிக் கடைகள். பேங்க்ன்னா வரிசையா எல்லா பேங்க் கிளைகளும். செல்போன் கடைன்னா வரிசையா இதே கடைகள். எல்லா செக்டர்களிலும் இதேதான். அடையாளம் வச்சுக்க முடியாது. பெரிய அகலமான வெராந்தாக்கள். அதுலே அங்கங்கே கேஸ் அடுப்புலே சாயா கொதிக்குது! நாலைஞ்சு பெரிய எவர்சில்வர் டப்பாக்களில் உணவு வகைகள். ப்ரெட் பஜ்ஜி ஏராளம். கையேந்தி பவன்கள். ரொம்ப சுத்தமான இடமுன்னு சொல்ல முடியாது. தரையில் குப்பைகூளங்கள் உண்டு. ஆனால் நம்ம சிங்காரச் சென்னைக்கு இது தேவலை. குறைஞ்சபட்சம் சாப்பிட்டு முடிச்சதும் பேப்பர் ப்ளேட்டைக் குப்பைக்கூடையில் போடுது சனம்.

ஒரு ஷாப்பிங் ஏரியாவுக்குக் கொண்டுபோகச் சொன்னோம் புது ட்ரைவரை. (இது நல்ல வண்டி & நல்ல சுத்தமான டிரைவர்) சின்னப் பையந்தான். நமக்கேத்தமாதிரி சரியா, தப்பான வளாகத்துலே கொண்டுபோய் விட்டார்:-)
பத்திரம் எழுத, தட்டச்சு செய்ய, பதிவு செய்யன்னு ஏகப்பட்ட வேலைகளுக்கான வக்கீல் குமாஸ்தாக்கள் & வக்கீல்கள் எல்லாம் கலந்துகட்டி இருக்கும் இடம். சனங்களுக்கு ஏகப்பட்ட அத்தியாவசியமான வேலைகள். கூட்டம் அம்முது. வளாகத்தை விரிவுபடுத்தும் வேலை வேற நடக்குது. ஆனால் எனக்குப்பிடிச்ச விஷயம் ஒன்னு பார்த்தேன். பெரிய மரங்களைச்சுற்றி நல்ல அகலமான மேடைகள் வட்டவட்டமாக் கட்டி விட்டுருக்காங்க. வெய்யிலில் கால் கடுக்க அலையாம உக்கார நல்லாவே இருக்கு
சண்டிகருக்கு ரெண்டு கைகள் முளைச்சதுபோல் (ஸாடிலைட் சிட்டிகளாம்) வலதும் இடதுமா ரெண்டு இருக்கு. இடதுபுறம் பஞ்சாப் மாநிலத்தைச்ச் சேர்ந்த மொஹாலி என்னும் ஊர். மூளையில் மணி அடிக்குதா? கேள்விப்பட்ட பெயரா இருக்குமே! இங்கேதான் இப்போ ஐபிஎல் மேட்சுகள் நடக்குது. நாம் அங்கே இருந்தப்ப, முதலில் மூணு நாள்தான் ஹொட்டேல் புக் பண்ணி இருந்தோம். வசதியா இல்லைன்னா வேற இடம் மாத்திக்கலாமேன்னு..... அப்புறம் இதுவே பரவாயில்லைன்னு இன்னும் மூணுநாள் கூடுதலாக் கேட்டா............ 'மேடம் ப்ரெய்ட்டி ஜிந்தா தன்னுடைய குழுவோடும் மீடியா பட்டாலியனோடும் வந்துட்டாங்கன்னு எல்லா இடமும் நிறைஞ்சு வழியுது'ன்னு தகவல். கொஞ்சம் பார்த்துக்கொடுங்கன்னு ஹீனமா ஒலிச்ச நம் குரல், மேனேஜர் மனசைப் பிழிஞ்சுருச்சு. ரெண்டு நாள் தரேன்னார். சரி ரெண்டெங்கில் ரெண்டு.
வலதுபக்கம் ஹரியானா மாநிலத்தைச்சேர்ந்த 'பஞ்ச்குலா' என்னும் ஊர். 'குலா' = கால்வாய்/வாய்க்கால். அஞ்சு வாய்க்கால்கள் இங்கே வெட்டியிருக்காங்க விவசாயவேலைகளுக்காக. அதான் பஞ்ச்குலா. அதுலே ரெண்டு மூணு காய்ஞ்சு காணாமப் போயிருச்சு. ஆனாலும் பெயர் நிலைச்சு நின்னுருச்சு பாருங்க! இப்போ இங்கேயும் நகரை விரிவுபடுத்தும் வேலை நடக்குது. சண்டிகரில் இருக்கும் ஹரியானா மாநில அரசு அலுவலங்களை இங்கே மாற்றிக்கலாம் என்று எண்ணம் வந்துருக்காம். இந்த ஹரியானா என்பதுக்கே மகா விஷ்ணுவின் இருப்பிடம் என்று பொருளாம். இந்தப் பகுதிகளில் இந்துக்கள் அதிக அளவில் இருக்காங்க. சண்டிகர் பகுதிகளில் சீக்கியர்கள் கூடுதல். போட்டோ எடுக்கும்போது தலைப்பாகை நடுவில் விழாத படங்கள் எடுக்கக் கூடுதல் கவனமா இருக்க வேண்டியதாப் போச்சு. க்ளிக் பண்ணும் சமயம எங்கிருந்தோ ஒரு டர்பன் ஒரு மூலையில் விழுந்திருக்கும்:-) (படத்தில்தான்)

நம்மூர் எக்ஸ்க்ளூஸிவ் புடவைக்கடைகள் போல இங்கே டர்பனுக்குன்னே தனிக்கடைகள் ஏராளமா இருக்கு விதவிதமான நிறங்களில் அடுக்கி வச்சுருக்காங்க. எல்லாமே ப்ளெயின் துணிகள். இன்னும் ப்ரிண்டட் டிசைன் வரலை போல!
நகரில் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் மாமரங்கள். இளவேனில்(??) ஆரம்பமாயிருச்சுன்னு 'கொல்'ன்னு பூத்துக்கிடக்குதுங்க ஊர் முழுசும்! ஜூன் மாசத்தில் இங்கே மாம்பழத் திருவிழான்னு கோலாகலமா ஒன்னு நடக்குமாம். நாடெங்கும் இருக்கும் மாம்பழ வியாபாரிகளுக்கும், மாம்பத்தை வச்சு ஜூஸ் ஜாம் அது இதுன்னு பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கும் அந்த சீசன் ஒரே கொண்டாட்டமாம். நமக்கும் ஜாலிதான். எல்லாவகைகளையும் ஒரு கை பார்த்துரலாம், அந்த சமயம் அங்கே இருந்தால். ஆனா இங்கே ரெண்டே காலம்தான் இருக்காம். மார்ச் முதல் ஜூன்வரை கோடை. நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை குளிர். அப்ப இடையில் இருக்கும் ஜூலை முதல் செப்டம்பர்வரை என்னவா இருக்கும்? காலநிலைன்னு பார்த்தால் கோடையில் 45 டிகிரி செல்ஷியஸ் சர்வ சாதாரணமாம். குளிரில் மைனஸ் ஒன்னு வரை சிலசமயம் போகுமாம். அது எப்பவாவதுதான், ரெண்டு இல்லே மூணு டிகிரி இருக்குமாம். ஆனால் பகல் நேரத்தில் சூரியன் வருவதால் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்குமாம். எனக்கென்னமோ இப்போவே ஊர்மேல் புகை மூட்டம்போல ஒன்னு இந்த வெய்யிலிலும் இருப்பதுபோல் தோணல். படங்களில் மசமசன்னு இது நல்லாத் தெரியுது.

தொடரும்....:-)

20 comments:

said...

//ப்ரெட் பஜ்ஜி ஏராளம்.//

குறுக்கு நெடுக்கா கட்பண்ணி நறுக்கின வெங்காயமும், கொத்தமல்லி இலையும் தூவி லேசா சாஸ் போட்டா...ஸ்.. சொர்க்கமே கண்ணில் தெரியுமே :-)))

said...

நல்ல பதிவு, நல்ல பயண அனுபவம். ஆமா எங்க பிரித்தியைப் பார்க்க வில்லையா?. படங்களும் அருமை. டீச்சர் நான் ஆரஞ்சுப் பழத்தோலில் வத்தக்குழம்பு பண்ணுவது பற்றிப் பதிவு போட்டேன் படிக்கவில்லையா?. நன்றி.

said...

நாங்க லீவுக்குப் போற மாசமா பாத்து மாம்பழத்திருவிழா வச்சா என்ன அர்த்தமாம்.. ஒருதடவை லீவுக்கு போகாம இருந்து அட்டெண்ட் செய்துபாக்கனும் போல..

said...

"இந்த வளாகங்களில் எல்லாத்திலும் ஒரே மாதிரிக் கடைகள்" வித்தியாசமாக இருக்கிறது.

உங்கள் பயணம்களால் எல்லா ஊர்களையும் சுற்றி வருகின்றோம். நன்றி.

said...

பஜ்ஜி கடைக்குப் பதிலா போண்டா கடை போட்டு இருக்கலாமில்ல.:0)
பதிவர் யாரும் இல்லையா துளசி அங்க?

ஒரு இதமான பனிக்காலத்தில் பதிவர் மாநாடு போடலாமா.

டாபிக்ஸ்

சாப்பாடு,
சாப்பாடு,
சாப்பாடு/.

said...

அருமையான ஊர்ல்ல டீச்சர்? ஒரு தடவையாவது அங்க போகனும்.

said...

//இந்த வளாகங்களில் எல்லாத்திலும் ஒரே மாதிரிக் கடைகள். பேங்க்ன்னா வரிசையா எல்லா பேங்க் கிளைகளும். செல்போன் கடைன்னா வரிசையா இதே கடைகள். எல்லா செக்டர்களிலும் இதேதான். அடையாளம் வச்சுக்க முடியாது. பெரிய அகலமான வெராந்தாக்கள்.//

nallaathu

said...

வாங்க அமைதிச்சாரல்.

சொர்க்கமாவே இருந்தாலும் 'வெறுங்கண்ணில்' பார்ப்பதோடு சரிப்பா. இன்னும் சோதனைக்கு 'தில்' வரலை:(

said...

வாங்க பித்தனின் வாக்கு.

அதெல்லாம் ஒரு 12 வருசத்துக்கு முன்பே எங்கூர்லே பார்த்தாச்சு.
நொப்பி நொப்பின்னு அழுதாங்க பச்சை குத்திக்கும் ஸீனில்:-)))))

படம்: ப்ரேமண்டே இதேரா

said...

வாங்க கயலு.

அது ஐடியா. தெற்குக்குப் பதிலா வடக்குக்கு டிக்கெட் போட்டுருங்க:-)

said...

வாங்க மாதேவி.

கூடவே வர்றதுக்கு நன்றிப்பா. அதான் பயமில்லாம ஊர் சுத்திக்கிட்டு இருக்கேன்!

said...

வாங்க வல்லி.

அதானே?

சண்டிகர் பதிவர் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்:-)

said...

வாங்க நான் ஆதவன்.

அதான் வல்லியம்மா சொல்லிட்டாங்களே. பேசாம அங்கே ஒரு 'இண்டிப்ளாக் மீட்' வச்சுக்கலாமா!!!!

said...

வாங்க எல் கே.

நல்லதுதான். ஆனால் எதாவது ஒரு பேட்டைக்குள் போனோமா அங்கே இருக்கும் துணிக்கடைகளில் வாங்குனோமான்னு இல்லை. உள்ளூர்க்காரர்களுக்கு விவரம் இருக்கும். நமக்கு?

said...

ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..!

said...

சென்னையை தவிர எல்லாமே கலக்கலாக இருக்குற மாதிரி தெரியுது ;))

said...

'மாம்பழத் திருவிழான்னு' படித்ததும் மாம்பழத் தாகம் வந்துவிட்டது. உங்கள் சுற்றுலா எங்களுக்கு விருந்து.

said...

வாங்க உண்மைத் தமிழன்..

கோர்ட்டுலே வேலை கிடைச்சுருச்சா?????

said...

வாங்க கோபி.

அது என்னவோ இதுவரை நான் பார்த்த நகரங்களில் சி.செ.வைப்போல் ஒன்னைக் கண்டதில்லை.

அதெப்படி நம்மூர் ஆட்களுக்கு ப்ளாட்பாரம் என்பது பாத்ரூமா தெரியுது:(

said...

வாங்க டொக்டர் ஐயா.

விருந்தும் மருந்தும் மூணே நாளுன்னு இருந்துறாதீங்க:-))))