ஆளாளுக்குப் பெயரைச்சொல்லிக் கதற ஆரம்பிச்சதும், அந்த முகம் தெரியாத 'இயான் தாமஸை' நானும் தேட ஆரம்பிச்சேன். யோவ்.... எங்கெய்யா இருக்கீர்? பாரு, பஸ் கிளம்பிப்போயிருச்சு. உன்னை விட்டுட்டுத்தான் பறக்கப்போகுது கிங்ஃபிஷர்! பெயரைப் பார்த்தால் இங்கே கொஞ்ச நேரமுன்னால் நம்ம கண் முன்னே அங்கே இங்கேன்னு உக்கார்ந்துருந்த வெள்ளைக்காரரகளில் ஒருத்தரா இருந்துருக்குமோ? ஃப்ளைட் அறிவிச்சதும் வரிசையில் போன கும்பலில் உள்ளே போயிருப்பாரோ? இந்த ஆளுங்கதான் நம்பரை க்ராஸ் செய்யத் தவறி இருப்பாங்களோ?
தோ........... கிளம்பிடுச்சு கோவா! கதறுன ஆட்கள் நிராசையோடு எங்களில் யாராவது ஒருத்தர்தான் இயான் தாமஸோன்னு சந்தேகத்தோடு பார்த்தமாதிரி ஒரு தோணல். "யப்பா........ நானில்லைப்பா...................."
பவநகர் ஃப்ளைட்டுலே டெக்னிக்கல் ப்ராப்ளமாம். லேட்டாப் போகுமாம். பெரிய வெள்ளை முண்டாசுகள் ஒருபக்கம் கவலையோடு உக்கார்ந்துருந்தாங்க. உதய்பூர் ன்னு போர்டு மாட்டுனதும்......சரசரன்னு மக்கள் கூடுனாங்க. முந்தானையை இழுத்து முகம் முழுசும் மறைச்சு முக்காடு போட்டுருந்த ஒரு பொண்ணை, கண்ணு தெரியாம எங்கியாவது போய் இடிச்சுக்கப்போறாளேன்னு ரெண்டு பக்கத்திலும் ஒவ்வொரு கையைப் பிடிச்சு நடத்திக் கூட்டிவந்த ரெண்டு பொண்களும் ஜீன்ஸும் டாப்புமா இருந்தாங்க. ஆச்சு அடுத்த அறிவிப்பு நமக்குத்தான். மேய்ஞ்சுக்கிட்டு இருந்த தமிழ்மணத்தை மூடிட்டுக் கிளம்ப ஆயுத்தமானேன்.
இந்த விமானம் கொஞ்சம் பெருசாவே இருக்கு. உள்ளே போனால் சீட்டுக்கு முன்னால் ஒரு சின்ன டிவி ஸ்கிரீன். ஃப்ளைட் பாத் காமிக்குது. ஒன்னரை மணி நேரத்துலேக் கொண்டுபோய்ச் சேர்த்துருவாங்களாம். அட! பரவாயில்லையே! நாலுமணிக்குப் போயிருவோமா!!! சாப்பாடு வந்துச்சு. பாவ்பாஜி, சுண்டல், ஃப்ரூட் ஸாலட், சீஸ்கேக், பிஸ்கட், இன்னிக்குக் காலையில் சென்னை டு மும்பையில் ஒரு குண்டான் சாம்பாரில் மிதக்கும் நாலு மினி இட்லியும் ஊறிக்கிடந்து உப்பிப்போன வடையும், ஒரு மேங்கோ ஜூஸும் கொடுத்தாங்க. ஏம்ப்பா....வாங்குற காசில் ஒரு பத்து சதமாவது சாப்பாட்டுக்கு ஒதுக்கக்கூடாதா? இப்படி ஒன்னரை சதமுன்னா எப்படிப்பா............
வெ.நீலகண்டன் எழுதுன 'ஊர்க்கதைகள்' வழித்துணையா இருந்துச்சு. முந்தி எப்பவோ குங்குமத்தில் வந்த தொடராம். நம்ம அரசு எந்திரங்கள் எப்படித் துருப்பிடிச்சுக் கிடக்குதுன்னு பார்த்தால் வெறுப்பாத்தான் இருக்கு. சாதி வேணாமுன்னு ஒரு பக்கம் கூவிக்கிட்டே சாதிக்கான இட ஒதுக்கீடுகள் சலுகைகள் எல்லாம் இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் அரசும். அதை உண்மைன்னு நம்பி ஒரு சான்றிதழ் வாங்க ஏழை படும் அவலமும் கண்ணராவிதான் போங்க:(
ஒன்னரை மணிப் பயணமுன்னு சொல்லி ரெண்டரை மணிநேரம் பறந்து, தரை இறங்கியது விமானம். குட்டியா ஒரு கட்டிடம். ரெண்டு வாசல். ஒன்னு புறப்பட, இன்னொண்ணு வந்திறங்க. சின்னதா ஒரு பெல்ட். பத்துப்பதினைஞ்சடி நீளம். லொட் லொட்டுன்னு சத்தம் வேற. பெட்டி வந்ததும் எடுத்துக்கிட்டு வெளியே வரும்போது அஞ்சு அடிச்சது.
மத்திய அரசாங்கத்தின் நேரடிப்பார்வையில் இருக்கும் இடம். பஞ்சாப், ஹரியானா ரெண்டு மாநிலங்களுக்குமான தலை நகர் இது. சண்டிகர்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் 'அங்கே' போயிட்ட லாஹோருக்கு பதிலா புதிய தலைநகர் பஞ்சாபுக்குத் தேவைப்பட்டதால் பொருத்தமான இடம் தேட ஒரு குழு அமைச்சாங்க. குடிதண்ணீர், பாதுகாப்பு, தட்பவெப்பம் இப்படியான சமாச்சாரங்களைக் கவனத்தில் வச்சு இதுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டு 'நிர்மாணிச்ச நகரம் இது. திட்டமிட்டு செஞ்ச நகரங்களில். சுதந்திர நாட்டுலே இதுதான் முதல் என்ற பெருமையை அடைஞ்ச ஊர். 'சிடி ப்யூடிஃபுல்' ன்னு இதுக்கு ஒரு பெயர் கூட இருக்கு!
கட்ட ஆரம்பிச்சது 1952இல். நல்ல அகலமான சாலைகள். வழி நெடுக நாற்சந்திகளில் பெரூசா ரவுண்டாணாக்கள். அசப்பில் பார்க்க எல்லாமே ஒன்னு போல! ஆனா.... இதை மொட்டையா விட்டுவைக்காமல் அழகான செடிகளை நட்டுப் பராமரிக்கிறாங்க. ஒவ்வொன்னும் ஒருவித அழகில் இருக்கு. கடைசியில் இதைவச்சுத்தான் அடையாளம் கண்டுபிடிக்க வேண்டி இருந்துச்சு எங்கே போறோமுன்னு!
அரசாங்கக் கட்டிடங்கள் அனைத்துக்கும் ஒரே அமைப்பு. செக்டர் செக்டராப் பிரிச்சு எண்களைக் கொடுத்துருக்காங்க. ஒரு செக்டருன்னு சொன்னால் 8 கிலோமீட்டர் நீளமும் 1.2. கிலோ மீட்டர் அகலமும் இருக்கணும். 246 ஏக்கர் பரப்பளவு. ஒவ்வொன்னிலும் ஒரு ஷாப்பிங் பகுதி. பள்ளிக்கூடம், குழந்தைகள் விளையாட ஒரு பார்க். இப்படி தேவையான எல்லா வசதிகளும் இருக்கணுமுன்னு திட்டம் போட்டுக் கட்டுன ஊர். தெருவுக்குன்னு ஒரு பெயர். அப்புறம் அதுலே சாதியை ஒழிக்கறோமுன்னு சொல்லி அதை வெட்டித் துண்டுபோடுவது. புதுப்புது திடீர் நகர் உண்டாக்கி அதுக்கு அரசியல்வியாதி பெயர் வச்சு, கட்சிக் கொடி நட்டு ஓட்டுவங்கியா மாத்திக்கிட்டு அட்டகாசம் செய்வது. அப்புறம் வீட்டுக்கு ஒரு பழைய & ஒரு புதிய எண் வச்சுவிடறதுன்னு ஒன்னும் இல்லை. விஞ்ஞானப் புனைக்கதைகளில் வருவதுபோல எல்லாம் எண்களே. ஒவ்வொரு தெருமுனையிலும் எந்த எண்ணில் இருந்து எந்த எண்வரை வீடுகள் இருக்குன்னு தெளிவா எழுதிவச்ச விவரம் இருக்கு. ஒவ்வொரு செக்டரின் நுழைவுப்பகுதியிலும் நகரின் செக்டர் விவரங்கள் அடங்கின தகவல் பலகையும் அதில் நீங்கள் நுழையும் பகுதி எங்கே இருக்கு என்ற விவரம் இருக்கு. செக்டரில் நுழைஞ்சு கொஞ்சதூரம் போனதும் அந்த செக்டரின் லே அவுட் அமைப்புக்கான விவரங்களும் (பள்ளிக்கூடம், பொது இடங்கள், பார்க். கடைகண்ணி எந்த எண் வீடுகள் எந்த வரிசை இப்படி எதெல்லாம் எங்கே இருக்குன்னு) தகவல் பலகையில் படமாக் கிடக்கு. இடம் இருக்கேன்னு இங்கே தகவல் பலகைமீது யாரும் போஸ்டர் ஒட்டலை. உண்மையைச் சொன்னால் இதுவரை போஸ்டரோ பேனரோ ஒன்னுமில்லாம நகரமே வெறிச்!!!!
நினைச்ச இடத்தில் பொட்டிக்கடை வச்சுக்க முடியாது. வீட்டுக்கு முன்னால் நடைபாதையை ஒட்டிச் சின்னதா தோட்டம், ஏராளமான மரங்கள் இப்படி பசுமை பளிச்சிடுது ஊரெங்கும். அதே சமயம் தரையெங்கும் காய்ந்த சருகுகள். கற்றில் சுற்றிவந்து சாலைகளின் நடைபாதை முழுசும் மெத்தை விரிச்சு வச்சுருக்கு. மாசக்கணக்கா கிடக்கா? மெத்தை மக்கிப்போயிருக்கு:( ஹொட்டேலுக்குப்போய் சேர்ந்த கொஞ்ச நேரத்தில் இருட்டிப்போச்சு. போயிட்டுப்போகுது. மறுநாள் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம்.
தொடரும்................)
Monday, March 15, 2010
இயான் தாமஸே.... எங்கெய்யா இருக்கீர்?
Posted by துளசி கோபால் at 3/15/2010 03:40:00 PM
Labels: சண்டிகர்
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
//முந்தானையை இழுத்து முகம் முழுசும் மறைச்சு முக்காடு போட்டுருந்த ஒரு பொண்ணை, கண்ணு தெரியாம எங்கியாவது போய் இடிச்சுக்கப்போறாளேன்னு//
புதுசா கல்யாணம் ஆன பொண்ணா?
நிறைய வடக்கத்திக்காரங்க மெல்பர்ண்ல கூட இப்படி இருக்காங்க. கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு பாத்தாலே தெரியும் புதுப்பொண்ணுன்னு.
உள்ளேன் டீச்சர்...(இப்போதைக்கு) ;-)
மேப் மேல போஸ்டர் ஒட்டமாட்டாங்களா.. சொர்க்கம்ங்க..:)
சன்டிகர் தொடரா???
வரட்டும் வரட்டும்...ஆர்வமாக உள்ளேன்.
வாவ்! மொத்தத்துல தமிழ்நாடை தவிர எல்லா மாநிலமும் சுத்தத்திலேயும் கட்டுமானத்திலேயும் பொறுப்பா தான் இருக்காங்க போலயே டீச்சர்!
presant Mam!
சண்டிகரைப் புதுக் கண்ணோட்டத்தில் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம்.
அடுத்த ஊருக்கு போயிட்டு வந்தாச்சா டீச்சர்?
பெங்களூரை மட்டும் மறந்துபோறிங்க டீச்சர்.
உங்கள் தளத்தின் படங்கள் எப்போதும் சோதிக்காது. அளவு சரி பார்த்து ஏற்றுங்கள். எனக்குமட்டும் தானா?
வாங்க சின்ன அம்மிணி.
புதுப்பொண்ணாட்டம் தெரியலைங்க. கைகளில் மெஹந்தி மிஸ்ஸிங்.
அவுங்களைப் பார்த்ததும் 'ஏனோ' இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்துச்சு.
வாங்க கோபி.
ப்ரஸெண்ட் போட்டுருக்கேன் (இப்போதைக்கு):-)
வாங்க கயலு.
அதாங்க...... சீக்கிரமா இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்.
வாங்க குமார்.
பெரிய தொடரா இருக்க வாய்ப்பில்லை. ஊர் சுற்ற நேரம் கிடைக்கலை!
வாங்க நான் ஆதவன்.
தமிழனுக்கு ஒரு தனி குணவிசேஷம் இருக்கே. அப்படித்தான் நாடும் இருக்கும். நாம்தானே 'நாடு'
வாங்க சிஜி.
அப்ப ஸ்டேட்டஸ் மெஸேஜை கண்டின்யூ பண்ணப் போறீங்களாக்கும்:-)
வாங்க வல்லி.
'இடும்பியின் பார்வையில் சண்டி' ன்னு தலைப்பு வச்சுருக்கலாமோ!!!!
வாங்க சிந்து.
அதென்னமோ பெண்களூரு அமையலைப்பா. ஜாதகத்தின்படி வடநாடுதான் இப்போதைக்காம். பாலத்து ஜோசியர் சொல்லிட்டார்!
வாங்க ஜோதிஜி.
இதுவரை எல்லாம் சரியாத்தான் இருக்கு. கோபாலின் கணினியில் சோதிச்சேன்.
வேற யாருக்கும் இதே பிரச்சனை இருக்கான்னு பார்க்கணும்.
I thought you forgot us all since your daughter is there.The pictures are there, I can view it too. Have a good trip!
//உண்மையைச் சொன்னால் இதுவரை போஸ்டரோ பேனரோ ஒன்னுமில்லாம நகரமே வெறிச்!!!!//
அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்களே!!! :-)))).
வாங்க சந்தியா.
எப்படிப்பா மறக்க முடியும்? மூச்சுக் காத்துபோல இல்லே ஆக்கிவச்சுருக்கு இந்த வலைவிவகாரங்கள்!
வாங்க அமைதிச் சாரல்.
அதான்ப்பா இங்கே.......
நம்ம நாட்டுலே அநியாயத்துக்கு நல்லவங்க, அநியாயத்துக்குக் கெட்டவங்க இப்படி...
எதுலேயும் எக்ஸ்ட்ரீம்தான்.
எனது ஊர்கதைகள் நூல் பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள். நன்றி.
வெ.நீலகண்டன்
வாங்க நீலகண்டன்.
உங்க ஊர்க்கதைகள் புத்தகம் எனக்குக் கண்டிப்பாப் பிடிக்குமுன்னு சந்தியா பதிப்பக உரிமையாளர் கொடுத்தார்.
எனக்கு ஊர் ஊராப் போய் பார்க்கப் பிடிக்கும். ஆனால் சின்ன கிராமங்களுக்குப் போகும் வாய்ப்பு கிட்டவில்லை.
உங்க 'கதை'களில் மக்கள் சிந்தும் கண்ணீர் ரொம்ப யோசிக்க வச்சது. அடிப்படை வசதிகளைக்கூடச் செஞ்சு கொடுக்க அரசுக்கு மனம் வரலை. ஆனால் கோடிகள் வீண் விரயம் செஞ்சு விழா நடத்துது.
நீங்களும் அதில் அரசின் மெத்தனத்தை அநேகமா எல்லா இடங்களிலும் சுட்டிக் காட்டி இருக்கீங்க. குறைஞ்சபட்சம் அதையெல்லாம் 'வெட்டாமல்' வெளியிட்டது 'குங்குமம்' என்று அறிந்தபோது உண்மையாவே எழுத்து சுதந்திரம் இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சு இருக்கேன்.
Present Thulasiji..!
காசு செலவில்லாம நல்லாத்தான் ஊர் சுத்தி காண்பிக்கிறீங்க டீச்சர்!அதுவும் அழகான கதை சொல்லிகிட்டே.
கதை கேட்கிற கவனத்துல இயான் தாமஸ மறந்துட்டேனே!கிடைச்சாரா காணமவே போயிட்டாரா?
'சிடி ப்யூடிஃபுல்' ன்னு படங்களும் சொல்லுது. நன்றி.
அருமையான துவக்கம். கொஞ்சம் லேட்டா பின்னூட்டம் .
வாங்க உண்மைத் தமிழன்.
என்னது, துளசி ஜி யா?
நீங்கதானா இல்லே யாராவது ப்ராக்ஸி கொடுத்தாங்களா? :-))))
வாங்க ராஜ நடராஜன்.
அவர் கிடைக்கலை. காணாமப் போயிட்டார். அவரை விட்டுட்டு ப்ளேனும் போயிருச்சு:(
வாங்க மாதேவி.
இந்த நாலு சீஸன்கள் இருக்கும் ஊர்கள் பொதுவாகவே நல்லாதான் இருக்கு.
இங்கே நம்ம மக்களுக்குப் பொது இடச் சுத்தம் கொஞ்சம் போதாதுதான்:(
வாங்க எல் கே.
இதுக்கெல்லாம் கவலைப்பட வேணாம். லேட்டானாலும் லேட்டஸ்ட்டுன்னு கொஞ்சம் உதார் விட்டுக்க வேண்டியதுதான்:-)))))
Post a Comment