அட ராமா! இது என்ன? சகவாச தோஷமா? அன்னிக்கு 'அவன்'தான் குளிக்கும் பெண்களை வேடிக்கை பார்த்தான்னா..... இன்னிக்கு இவனுமா?
அவனாவது ஒளிஞ்சுருந்து பார்த்தானாம். இவன்? டைரக்டா பப்ளிக்கா மேடை மேலே ஏறி உக்காந்து குளத்தையே கண்கொட்டாமலா பார்ப்பது? அரைக் கண் மூடி இருக்கேன்னு யாரும் சொல்லப்பிடாது:-)
தானேஸர் என்ற ஊர்! அதென்ன குருக்ஷேத்ரத்தைப் பத்தியில்லே இப்பச் சொல்லிக்கிட்டு இருந்தேன்னு கேக்காதீங்க. ரெண்டுமூணு கிலோமீட்டர் தூரம்தான் அதுக்கும் இதுக்கும். பக்தர்கள் தேடித்தேடிப் போவதால் இப்ப எல்லாம் ஒரே ஊராகிப் போச்சோ? பத்தே நிமிஷ ட்ரைவ். ஸ்தானேசர் கோவில் வாசலில் நிக்கிறோம். சாமி பெயர்தான் ஊருக்கு வச்சு அப்புறம் மருவி இருக்கலாம். ஸ்தானேஸ்வர்......தானேஸ்வர்.... தானேசர். (எனக்கு நம்ம சுசீந்த்ரம் (ஸ்)தாணுமால்யன் கோவில் நினைவுக்கு வருது)
குப்தர்கள் காலத்துக்குப்பின்னே (வட இந்தியாவில்) துண்டுதுண்டா சில ராஜ்ஜியங்கள் வந்துச்சு. புஷ்பபூதி குடும்பத்தினர் அரசர்களானார்கள். காலம் 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. ப்ரபாகர் வர்தன் அப்போ ஆட்சி செஞ்சார். வர்தனர்களின் சாம்ராஜ்யத்தில் இந்த தானேசர்தான் தலைநகரமா இருந்துருக்கு. இவருக்கு ரெண்டு பிள்ளைகளும் ஒரு பொண்ணும். ராஜ்ய வர்தன், ஹர்ஷ வர்தன், & ராஜ்யஸ்ரீ. பொண்ணை மௌகாரி அரசர் க்ரஹவர்மனுக்குக் கட்டிக்கொடுத்தாங்க. அடுத்த கொஞ்ச காலங்களில் மால்வா நாட்டு அரசன் தேவகுப்தன், போருக்கு வந்து க்ரஹவர்மனைக் கொன்னுட்டு, அவர் மனைவி ராஜ்யஸ்ரீயை ஜெயிலில் போட்டுட்டார்.
இதுக்குள்ளே இங்கே ராஜ்யவர்தன் பட்டத்துக்கு வந்துருந்தார். உடன்பிறந்தாளைக் காப்பாத்த அண்ணன், தேவகுப்தனுடன் போருக்கு போனார். சண்டையில் ஜெயிச்சார். உதவிக்குன்னு அவருடைய நண்பனும், கிழக்கு வங்காளத்துலே இருந்த கௌடா நாட்டு அரசனுமான சஸாங்கன் வந்தான். இந்த சஸாங்கன், ரகசியமா எதிரி தேவகுப்தனோடு கூட்டு வச்சுக்கிட்டு, நண்பனைத் தந்திரமாக் கொன்னுட்டான்.
சேதி அறிஞ்ச தம்பி ஹர்ஷன், ஆவேசமாப் புறப்பட்டுப்போய் சண்டை போட்டு தேவகுப்தனையும், சஸாங்கனையும் கொன்னுட்டு, அரசனில்லாத தன் நாட்டுக்கு வந்து இங்கே மன்னராப் பட்டம் கட்டிக்கிட்டார். அப்போ அவருக்கு வயசு வெறும் 16 தானாம். இளங்கன்று பயமறியாது என்றது உண்மைதான்!
ராஜாக் கதைகளை எடுத்தாலே ஏகப்பட்ட துரோகமும் ரத்தமுமா இருக்கு.ப்ச்.....
இங்கே வரும்வழியில் இருக்கும் தத்தாத்ரேயா கோவிலுக்குப் போகலாமுன்னா அது பூட்டி இருந்துச்சு. இங்கேயும் வெங்காயக் கூம்பைத் தவறவிட்டுருந்தோமுன்னா (இது வெங்காயம் இல்லையாம் நெல்லிக்காயாம். தமிழ்நாட்டுக்காரி என்பதால் வெங்காயம்தான் மனசுலே நிக்குது) இங்கே ஸ்தானேசர் கோவில் இருப்பதே வெளியில் தெரியாது. ஒளிஞ்சு நிக்குது! கோவிலுக்கு எதிரே நந்தி. நல்ல பெரிசு. பளிங்குச் சிலை.
அவருக்குப்பின்னால் கொஞ்சம் பெரிய அளவிலான குளம். நடுவிலே உசரமா 'ஹை ஸ்டூலில்' சப்பளம் போட்டு உக்காந்துருக்கார் சிவன். குளத்துலே ஜனம் குளிக்குது. அதுவும் நேரெதிர்மூலை பெண்களுக்கானது போல! சில பெண்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். நல்லவேளை. குளம் படுசுத்தம். எங்கிருந்தோ சலசலன்னு தண்ணீர் வந்து குளத்துலே விழுந்துக்கிட்டே இருக்கு. ரொம்ப புனிதமான நீராம். இதை தற்செயலாத் தன் மேல் தெளிச்சுக்கிட்ட பானு என்ற மன்னன், தொழுநோயில் இருந்து குணமாயிட்டாராம்! (அதானே வியாதியோடு குளத்துலே இறங்குனா நல்லாவா இருக்கும்?)
இந்தக் குளத்தையொட்டி அக்கரையில் ஹரிஹரனுக்கு ஒரு கோவில். வலப்பக்கம் ஹரியும் இடப்பக்கம் ஹரனுமா அழகா படம் வரைஞ்சு வச்ச மண்டபம். அதையொட்டி ஒரு குருத்வாரா இருக்கு. சீக்கியர்களின் 9 வது குரு தேக் பஹதூர் இங்கே வந்து தங்கி இருந்தாராம். பக்தர்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை இங்கே!
பாரதப்போரில் வெற்றி கிட்டணுமுன்னு பஞ்சபாண்டவர்கள் வந்து பூஜித்த சிவன் இவர். . முதல்முதலில் லிங்க ரூபத்தில் சிவனை வழிபடத்தொடங்கியது இங்கேதானாம். (ப்ராச்சீன்? ). கோவில் முகப்புலே புதுவித த்வாரபாலகர்கள். உள்ளே முற்றத்தில், ஹனுமான் & ஹனுமான் சிலைகள் சின்ன மாடங்களில். ஒருத்தர் 'ஹரே ராம் ஹரே ராம்'னு சொல்ல, மற்றவர் 'சீதாராம் சீதாராம்'னு உருப்போடறார். அப்புறம் நேரே கருவறைதான். தரையோடு பதிச்சமாதிரி சங்குபோல டிஸைனில் பளிங்கு ஆவுடையார். நடுவில் சின்னதா லிங்கம். எல்லா வட இந்தியக் கோவில்களைப்போல நாம் 'கடவுளை'த் தொட்டுக் கும்பிடலாம். கருவறையில் ரெண்டு வாசல். நுழைஞ்சு போக ஒன்னு, வலம்வந்து வெளியேற நமக்கு வலப்புறம் ஒன்னு.
நாங்க போனப்ப ரெண்டு பேர் சிவனுக்குப் பால் அபிஷேகம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவுங்க கையில் கைப்பிடியோடுள்ள ஒரு ஐஸ்க்ரீம் கோன் போல ஒன்னு.(பித்தளை/வெங்கலம்) அதுலே கீழ்ப்பாகத்துலே சின்னதா ஒரு மாட்டுத் தலை. மாட்டு வாயில் ஒரு ஊசிமுனை அளவுள்ள துளை. இந்த ஆட்கள் ரெண்டுபேரும் சிவனுக்குரிய மந்திரங்களைச் சொல்லிக்கிட்டு அந்தக் கோனை உயர்த்தி லிங்கத்து நேராப் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. ஷவர்லே வர்றது போல ஒரே ஒரு தாரையா பீச்சியடிக்கும் பால் லிங்கத்துக்கு மேலே பொழியுது. பெரிய பித்தளை வாளியில் பால் நிறைய வச்சுக்கிட்டு ஒரு பெண் சொம்புலே பாலை முகர்ந்து கோன்களில் ரொப்பிக்கிட்டே இருந்தாங்க. என்ன ஒரு சூப்பர் ஐடியா பாருங்களேன்! தண்ணீரைக்கூட இப்படி அபிஷேகம் செய்யலாம் இல்லே!!!!
(பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பமில்லை. அதை ஒரு குழந்தைக்கு உணவாக் கொடுக்கலாமேன்னுதான் எப்பவும் தோணும். இது என் சொந்தக்கருத்து)
(நெல்லிக்காய் என்பது ரொம்பச் சரி. கீத்துகீத்தா இருக்கே. இந்தப் பகுதிகளின் கட்டடக்கலையாம் இது. நான் மொகல் ஸ்டைலோன்னு நினைச்சுருந்தேன். முகலாயர்கள் கட்டிடங்களில் இந்தக் கீத்து வராது,இல்லே? சும்மா மொட்டையாத்தான் இருக்கும்)
கோவிலுக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் தோளோடு சேர்த்து நிக்குறாப்போல இன்னும் ரெண்டு கட்டிடங்கள். வலப்பக்கம் பெரிய ஹாலில் மடங்களில் சில தேவிகள். இடப்பக்கம் சாக்ஷி கோபால் வேத பாடசாலை. சைவ வைஷ்ணவ பேதமே இல்லாம ஒன்னுக்கொன்னு தாயாபிள்ளையா இருக்காங்க இங்கே. அதான் 'இவரும் அவரைப்போல பார்த்துக்கிட்டு' இருக்கார்!
Friday, March 26, 2010
சேர்க்கை ஒன்னும் சரியில்லை போல ........
Posted by துளசி கோபால் at 3/26/2010 11:52:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
சரித்திரமே இப்படித்தான் இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் ஜெயித்தால்தானே நிலம் வசப்படும்!!ஆசையட்டும் இல்லைன்னால் உலகத்தில சரித்திரமே இருக்காதோ:)
தானே ஈஸ்வர்னு சொல்கிறாரோ இந்த பகவான்.
குளம் அழகா இருக்குப்பா.
வாங்க வல்லி.
நீங்கதான் போணி:-)
ஆசைகளால் செலுத்தப்படும் வாழ்க்கை!!!
குளம் அழகு மட்டுமில்லை, ரொம்பச் சுத்தமாவும் இருக்கு. கோவில்களும் எக்கசக்கமான யாத்ரீகர் வரவு இருக்குன்னாலும் இவ்வளவு சுத்தமா இருப்பதே வியப்பா இருக்குப்பா.
நம்மூர்லே ஏம்ப்பா.... சுத்தத்தை மறந்துட்டாங்க:(
தலைப்பு சூப்பரு ;)
வாங்க கோபி.
இதுக்கே இப்படின்னா...
வரப்போகும் அடுத்த பதிவின் தலைப்பு?
படம் பதிவு அருமை!
உள்ளேன் டீச்சர்
http://www.virutcham.com
இடுகை என்பது எத்துணை தார்மீக நெறியுடன் படைக்கப்பட வேண்டியது என்பதை உங்கள் வரலாற்று எழுத்துக்கள் உணர்த்துகிறது.
உண்மையிலேயே அருமையான டீச்சர் தான் நீங்க!
சின்ன விஷயத்தைக்கூட விட்டுவிடாமல் பதிக்கிறீர்கள்!
இந்தியாவுக்கு வரும்போது நான் பார்க்க வேண்டிய இடங்களின்
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது உங்கள் புண்ணியத்தில்!
அன்புடன்,
எழிலரசி பழனிவேல்
இந்த இடுக்கையை படித்தவுடன்... நான் சிங்கையில் இருந்து அமெரிக்கா புறப்படும் போது என் நண்பர்கள் சொன்னது என் நினைவிற்க்கு வந்தது... "உன் விழி வழி நாங்கள் அமெரிக்கவை பார்க்க போகிறோம் என்று". நான் உங்கள் விழி வழி (என் வழி... துளசி தளம் வழி) பல புண்ணிய தளங்ககளை பார்க்கிறேன். நன்றி
டீச்சர்... பதிவில் சேர்க்கை எல்லாம் சரியாத்தனே இருக்கு... குசும்பு தலைப்பா இருக்கு. நல்லா பாருங்க நந்தியார் பார்ப்பது ஆலயத்தில் உள்ள பகவானை. அவ்வ்வ்வ்.
அடேடே, இப்பதான் பார்க்கிறேன்.
என்ன, சம்மர் டூரா? உருப்படியா ஏதோ செய்யறீங்க போல இருக்கு!
நல்லா இருக்கு. மொத்த சீரிசையும் படிச்சுட்டு மறுபடியும் எழுதறேன்.
வாங்க அன்புடன் அருணா.
நன்றி. நன்றி.
வாங்க விருட்சம்.
ஆஜர் பட்டியலில் பதிஞ்சாச்சு.
வாங்க ஜோதிஜி.
என்ன இப்படியெல்லாம் சொல்லிட்டீங்க?
போற போக்கில் ச்சும்மா ஒரு 'கோடி' காட்டிக்கிட்டே போறேன்.
ஆர்வம் இருப்பவர்கள் இதை இன்னும் நல்லாத் தேடிப்பார்த்து வேறெங்கிருந்தாவது வாசிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்.
வாங்க எழிலரசி..
ஆஹா.... அந்த சமயம் நான் இந்தியாவில் இருந்தால் என்னையும் கண்டுக்கிட்டுப்போங்க. பட்டியலில் பெயரைச் சேர்த்துருங்க:-)
வாங்க அரசூரான்.
அப்ப தண்ணி மேலே உக்காந்துக்கிட்டு சிவன் பார்ப்பது அந்த நந்தியைத்தானா?
ஆஹ்ஹா........:-)))))
வாங்க எல்லே ராம்.
உருப்படியா நான் செஞ்சுட்டாலும்..........
ஒரு வாரம் டூர்தான். வெறும் 11 பதிவுகள். இது பத்தாவது.
இப்பெல்லாம் சின்னசின்னப் பயணங்கள்தான். ரொம்ப நாள் சுத்த முடியறதில்லையாக்கும்.
நான்வேற ஆக்கும் ஆக்கும்ன்னு.....:-))))
வணக்கம் டீச்சர்..:))
பழங்கால அரசர்கள் வரலாறு எல்லாத்திலும் ரத்தம்தான். நல்லவேளை அதெல்லாம் பழங்கதையாச்சு
//பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பமில்லை. அதை ஒரு குழந்தைக்கு உணவாக் கொடுக்கலாமேன்னுதான் எப்பவும் தோணும்//
இது சூப்ப்பரு.வேணும்னா சம்பிரதாயத்துக்கு ஒரு ஸ்பூன் பாலை அபிஷேகம் பண்ணிக்கலாம்.
நம்ம தமிழ் நாட்டில் இதன் தாத்பரியம் என்னன்னா... சிலைபிரதிஷ்டை செய்யும்போது சிலபல மூலிகைக்கலவையை பீடத்தில் வெச்சி அதுமேலதான் பிரதிஷ்டை நடக்கும். அபிஷேகம் செய்யும்போது அந்த மூலிகையுடன் சேர்ந்து வரும் தண்ணீர் மருந்தாகி நோய்களை தீர்க்கும் என்பதுதான் உண்மை. பிரதிஷ்டை செஞ்ச கொஞ்ச நாட்களில் தரும் தீர்த்தம் பயங்கரமா கசக்கும்.
லீவு முடிஞ்சு அரியர்ஸெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. அவ்வளவும் அருமை.
வாங்க ஷங்கர்.
வணக்கம்.
அதென்ன வகுப்புக்குள்ளே வராம வணக்கம் சொல்லிட்டுப்போறீங்க?
வாங்க சின்ன அம்மிணி.
மண்ணாசைதான் காரணம்.
//......பழங்கதையாச்சு//
மன்னராட்சி போயிருச்சா? நெசமாவா சொல்றீங்க!!!!
அப்ப அந்த வீரவால், மலர்க்கிரீடம் அரியணை இதெல்லாம்........?
oops........வீரவாள்
வாங்க அமைதிச்சாரல்.
பழனி முருகன் முழுக்க முழுக்க நவ பாஷாணமாமே. அதான் குருக்களைக் கண்டுக்கிட்டா கிள்ளியெடுத்துக் கொடுக்கறாங்கன்னு கேள்வி.
கோவில்கள் என்றாலே நோய் தீர்க்கும் மருந்துதான், மனநோயையும் சேர்த்து.
(பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பமில்லை. அதை ஒரு குழந்தைக்கு உணவாக் கொடுக்கலாமேன்னுதான் எப்பவும் தோணும். இது என் சொந்தக்கருத்து)
நானும் அப்படித்தாங்க நினைக்கிறேன். இருந்தாலும் கோவிலுக்கு போறப்போ அங்க சிவனுக்கு பால் அபிஷேகம்
பண்றத பாக்கும்போது என்னை அறியாம கன்னத்துலே போட்டுப்பேன். சாமிகிட்ட அவசியம் இல்லாம்
வம்பு நமக்கு எதுக்குங்க ?
அது இருக்கட்டும். சாமிக்கு பால் அபிஷேகம் பண்றத பத்தி சொல்றீக. இங்க நம்ம சென்னைல புதுப்படம்
வெளி வர அன்னிக்கு ரசிகங்க எல்லாம் அவங்க ஹீரோவுக்கு பானர் கட்டி பானருக்கு பால் அபிஷேகம்
செய்றாகளே !
ஒரு 3, 4 வருசம் முன்னாடி, அது ரஜனி படமோ விஜய் படமோ ஞாபகம் இல்ல.. வடபழனில் இருக்கற தியேட்டர்லே
ப்ரும்மாண்டமா பானர் கட்டி பால் அபிஷேகம் செஞ்சிட்டு இருந்தப்போ,
என்னோட ஃப்ரென்ட் ஒத்தரு,
அவங்ககிட்ட போய்,
த
ய்
ங்
கித்
தயங்
கி.....
என்னங்க...இத்தன பால இங்கன வேஸ்ட் பண்ரதுக்கு, பக்கத்துலே இருக்குதே ஒரு குழந்தக இல்லம், அங்கன
கொடுக்கலாமே அப்படின்னு சொன்னப்ப,
என்ன நடந்துச்சு தெரியுங்களா ?
" அட ! நாங்க கொடுக்க மாட்டோம்னா சொல்றோம். இந்தாங்க.. எங்க தலவரு படம் வெளிவர்ற் நேரத்துலே
அந்த குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுங்க " அப்படின்னு சொல்லி ஒரு குடம் பால கொடுத்தாகளாம்.
எப்படி இருக்கு !
அப்ப நினைச்சுகிட்டேன்.
ஆண்டவன் எல்லா இடத்துலேயும் இருக்காரு. கட் அவுட் லே இல்லன்னு நினச்சுகிட்டா எப்படின்னு?
என்னமோ புரியல ...உலகத்துலே
மீனாட்சி பாட்டி.
வாங்க மீனாட்சி அக்கா.
சிவன் அபிஷேகப்பிரியனாம். அதுக்காகத்தான் இப்படி. பலகோவில்களில் ஒரு சின்ன துளையிட்ட செம்பு லிங்கத்தின் மேலே தொங்குறமாதிரி மாட்டி வச்சு அதுலே தண்ணீர் விட்டுவச்சுத் துளித்துளியா சிவன் தலையில் விழறதுமாதிரி வச்சுருக்காங்களே!
கங்கையையேத் தலையில் வச்சுருக்கவனுக்குன்னு இப்படி ஒரு ஏற்பாடு!
தண்ணின்னா சுத்தமா இருக்கும். பால் ஊத்துனா பிசுபிசுன்னு ஆகிடாதா? சிவன் என்ன க்ளியோபாட்ராவா பாலில் குளிக்க!
அந்தந்த நடிகர்களே, '(ஒரேதா) எனக்குப் பால் ஊத்தாதீங்கப்பா'ன்னு சொல்லிட்டால் நல்லது.
ஆனாலும் உங்க நண்பர் ரொம்பவே தயங்கிட்டாரேக்கா. ரசித்தேன்:-)))))
அந்த சிவ பெருமான் குளத்திலே உட்கார்ந்து இருக்காரே அந்த ஃபோட்டோ
ரொம்ப சூபரா இருக்காம்.
அவரை அப்படியே தூக்கிகிட்டு போய்
எங்க வீட்டுக்காரரு அவரு ப்ளாக் லே வச்சுகிட்டாரு
துளசி அம்மாகிட்டே பர்மிஷன் வாங்கிகிட்டீகளான்னு
கேட்டேன். அந்த சிவன்கிட்டேயே வாங்கியாச்சு,
நீ செத்த சும்மா இரு
அப்படின்னு சொல்றாரு.
எதுக்கும் ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லிப்போட்டேன்.
வயசாயிடுச்சு அவருக்கு. கேசு, கீசு எதும் அவர் மேல
போட்டுடாதீக.
மீ.பா.
http://movieraghas.blogspot.com
பரவாயில்லை மீனாட்சி அக்கா. படம் எப்படியும் நம்ம குடும்பத்துலேதானே இருக்கப்போகுது!
ஆனால்.... மாமா மேலே ஒரு கண் வச்சுக்குங்க. அவனைப்பார்த்து இவன். இப்போ இவனைப்பார்த்து இவர்ன்னு ஆகிறப்போகுது:-))))))
வரலாற்றுத் தகவல்களும் அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமும் நன்றாக உள்ளன. அது சரி எப்போ நியூசியிலை இருந்து இந்தியாவிற்குத் திக் விஜயம் மேற்கொண்டீங்கள்?
வாங்க கமல்.
அதுவா?
கோபாலுக்கு இங்கே ஒரு ப்ராஜெக்ட். அது காரணம் 10 மாசமா இங்கே இருக்கோம்.
முடிஞ்சவுடன் மூட்டை கட்டவேண்டியதுதான்.
ஸ்தானேஸ்வர்.நந்தி,குளம் அழகாக இருக்கின்றது.
நல்ல வர்ணனை. படங்கள் வர்ணனைக்கு மெருகேற்றுகின்றன..
Ram
வாங்க மாதேவி..
துளசிக்குள்ளே ஒரு ஃபோட்டோ நிபுணர் ஒளிஞ்சுருக்குறார்:-))))))
வாங்க ராம்.
ஃபோட்டோக்காரர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்:-))))
Post a Comment