Tuesday, March 16, 2010

சண்டி எங்கே, சண்டி எங்கே என்று தேடு

பிரசித்தமான சண்டிதேவியின் கோவில் இந்தப்பகுதியில் இருக்கு. புதுநகரத்துக்கு பெயர் கொடுத்ததும் இந்த தேவியின் பெயரை வச்சுதான். காலையில் கிளம்பி முதலில் மாதா சண்டிதேவி கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். ட்ரைவரா வந்த ஆள் சரியில்லை. காரைத் திறந்தவுடன் ஒரே gகப்பு. சிகரெட் நாத்தம் குடலைப்பிடுங்குது.

"யோவ் சிகரெட் பிடிப்பியா?"

"ஹாஞ்ஜி."

'இனிமே வண்டியில் புகை பிடிக்காதே ன்னு சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் ஒரு ரகசிய மொழியில் (எல்லாம் தமிழ்தான்!) 'இந்த வண்டி வேணாம் . நாள் முழுக்க மூக்கைப்பிடிச்சுக்கிட்டு இருக்கமுடியாது. பேசாமத் திருப்பி அனுப்பிட்டு வேற ஒன்னு வரச் சொல்லணும். இந்த ஊர் முழுக்கப் பொது இடங்களில் புகைபிடிக்கத்'தடை இருக்கு. அதான் காருக்குள்ளேயே யாகம் பண்ணி இருக்கார் இந்த ஆள்.'

எல்லா ஜன்னல்களையும் பரக்கத் திறந்து வச்சோம். நாத்தம் போய்த் தொலையட்டும். 28 டிகிரி கொளுத்துது காலையிலேயே! ரொம்பக் குளுருன்னு ட்ரைவர் பனிக்குல்லாவேற போட்டுக்கிட்டு........ ! கண்முன் ரியர்வ்யூ மிரர்ரில் மயிலுடன் முருகன் தொங்கிக்கிட்டு இருக்கார். 'அட! எப்படி? இவன், சண்டிகர்வரை வந்துட்டானா????'


'ஆனது ஆச்சுன்னு கோவிலுக்குப் போயிட்டே வந்துறலாம். சாமுண்டி கோவிலுக்குப்போ'ன்னு ஜம்பமாச் சொன்னார் கோபால். முழி பிதுங்க திரும்பிப் பார்த்து 'எந்தக்கோவில், எங்கே இருக்கு'ன்னு நம்மையே திருப்பி ஒரு கேள்வி. அதானே? சாமுண்டி இங்கே எங்கே வந்தா? சண்டி மாதா கோவிலுக்குப் போன்னு சொன்னேன். தெரியுமான்னாதுக்கு தலையை ஆட்டிக்கிட்டே வண்டியை ஓட்டுறார். கைடு புக்கில் பத்துக்கிலோ மீட்டர் தூரமுன்னு போட்டுருக்கு. ஆனால் போய்க்கிட்டே இருக்கோம். வழியெல்லாம் புதுசா சாலைகள் போட்டுக்கிட்டு இருக்காங்க. சாலையின் ரெண்டு பக்கங்களிலும் ' gகம் ட்ரீ' ன்னு யூகலிப்டஸ் மரங்களின் ஒரு வகை, உசரமா கூட்டமா நிக்குது. ஆர்மி அலுவலகங்கள், Indian Army Western Command, வாசலில் சின்னச்சின்ன பீரங்கி அலங்காரத்துடன் அங்கங்கே.(இதைப்பார்த்ததும் எனக்கு பூனா/புனே நகர் நினைவுக்கு வந்துருச்சு. சதர்ண் கமாண்ட் அங்கே இருக்கு. இதைப்போலவே அங்கே(யும்) ஊர் முழுக்க ஆர்மி ஆட்கள் நடமாட்டம்தான். இதையெல்லாம் 'ரெடிமேட்' தொடரில் எழுதி இருக்கேன்) கட்டக் கடைசியா ஒரு கோவிலுக்கு முன்னே கொண்டுபோய் நிறுத்துனார்.
சின்னதா ஒரு வளைவு வாசல். உள்ளே குரங்குகளின் நடமாட்டம். சின்னதா ஒரு வளாகம். வலதுபக்கம் சின்னதா வீடுகளின் வரிசை ஒன்னு. சண்டி ஏன் இப்படி இருக்காள்ன்னு இடது பக்கம் கொடிமரத்தோடு இருந்த சந்நிதியில் பார்த்தால் மயிலோடு முருகன். அவருக்கு அடுத்த சந்நிதியில் சங்கடமோசன ஹனுமான். கொஞ்சம் பயத்தோடு எட்டிப்பார்த்தேன். பெண்களுக்கு 33 சதம் இட ஒதுக்கீடு வந்தபிறகும் ஏறிமிதிச்சா நல்லா இருக்காதுன்னு அவர் சாதாரணமா தரையில் நின்னுக்கிட்டு இருந்தார்.

அடுத்து மஞ்சள் வர்ணப் புலிகள் இருக்கும் படிக்கட்டில் ஏறி மேலே போனோம். கொடுவாள் மீசையும் அருவாள் பல்லுமா 'ஆ'ன்னு திறந்து வச்சுருக்கும் அரக்கனின் வாய்க்குள்ளே லிங்க ரூபத்தில் சிவன் சந்நிதி. எதிரில் முற்றத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் நந்திமீது உக்கார்ந்து காட்சி கொடுக்கறார். ஒரு மூலையில் உள்ள சந்நிதியில் பீஷ்மர் மாதிரி வெண்ணிற தாடியுடன் ஒரு முனிவர் இருக்கார். காலின் கீழ் அன்னம்.

தேடி வந்த சண்டியைக் காணோமேன்னு கீழே இறங்கிவந்து இன்னொரு அரக்கன் வாயில் நுழைஞ்சோம். சின்னதா ஒரு ஹால். கடவுளர் படங்களா மாட்டிவச்சுப் பூஜை நடந்த அடையாளம். அங்கே இருக்கும் மூணு கதவுகளுக்கு மேலே, நிலையில் அரக்கனின் ரூபங்கள். எல்லாம் கொம்புள்ள புலி முக அரக்கன்களின் வாயில் புகுந்து போகணும் நாம். புலிக்குகையைப்பத்தித் தப்பான விவரம் போன பதிவில் கொடுத்ததுக்குப் பழி வாங்குதோ?

வெளியே வளாகத்தில் இன்னொரு சந்நிதி. மண்டபம் போல அமைச்சு அதில் சிலையாக ஒரு முனிவர் உருவம். கழுத்தில் செம்புப் பாம்பு.ஒரு வயசான அம்மா தேங்காயை உடைச்சு சிலைக்குமுன்னே வச்சுக் கும்பிட்டாங்க. 'யே பாபா கா நாம் க்யா ஹை'ன்னேன். ரத்னசாமி பாபான்னாங்க. அந்தம்மாவின் முகத்தில் தமிழ்ச்சாயல். 'ஆப் தமில் ஹை க்யா?' ஆமாவாம். சொந்த ஊர் ஈரோடு. பெயர் பவுனம்மா. இங்கே ஒரு முப்பதுவருசமா இருக்காங்க.
பாபா ரத்னசாமி மிலிட்டரிக்காரர். இங்கே ஆர்மியில் இருந்து ரிட்டயர் ஆனதும் இதே ஊரில் 'சாமியாரா' உக்கார்ந்துட்டார். அவருக்குக் கிடைச்ச பென்ஷன் காசையெல்லாம் வச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக் கட்டுன கோவில் இது. அதான் மயிலோடு முருகன் வந்துருக்கான்! அரசமரத்தடி மேடையைச் சுத்தி நவகிரகங்கள். சுவரில் வரைஞ்சுருந்த படங்களின் ஸீன்களில் முனிவர் படங்களில் மட்டும் தலைப்பகுதி கட் & ரத்னசாமி பாபா படம் பேஸ்ட்டு:-) குரங்கார் போறதும் வாரதுமா இருக்கார்.

சாயா குடிச்சுட்டுப் போம்மா''ன்னு சொன்னாங்க. 'வேணாம்மா. குடிச்சுட்டுத்தான் வந்தோம். நீங்க தனியாவா இருக்கீங்க'ன்னேன். இல்லையாம் மகன்கள் இங்கேயே வேலை செய்யறாங்க. குடும்பத்தோடு இருக்கோமுன்னாங்க. தேங்காய் மூடி ஒன்னைப் பிரசாதமாக் கொடுத்தாங்க. சட்னியா அரைக்கப்போறோம்? கல்லில் ஒரு தட்டுத்தட்டிச் சின்னதா ரெண்டு துண்டு எடுத்துக்கிட்டு அந்தம்மா கையிலே திருப்பிக் கொடுத்துட்டார் கோபால்.
அதுக்குள்ளே மருமகள் வந்து சாயா குடிச்சுட்டுப் போகணுமுன்னு உபசாரம். விருந்தோம்பலை மறக்கலை. சண்டிகரில் தமிழ்க் குடும்பம் பார்த்துச் சந்தோசமாச்சு. சண்டி கோவில் எங்கேன்னு கேட்டேன். இன்னும் கொஞ்சம் தூரம் போகணுமாம். அப்புறம் பார்க்கலாமுன்னு கிளம்பினோம்.குரங்காரைத் தேடினால் அனுமனின் கோபுரத்தின்கீழே படுத்தவாக்கில் தரிசனம் கொடுத்தார்!
மத்ராஸின்னதும் நேரா இன்னொரு மத்ராஸி கோவிலுக்குக் கொண்டுப்போய் விட்டுருக்கார் புத்திசாலி ட்ரைவர்! ட்ராவல் ஆஃபீஸ் போய் வண்டியை மாத்திக்கணுமுன்னு சொல்றார் கோபால். அது எங்கே இருக்கோ? அலைய முடியாது பேசாம இன்னொரு வண்டியை ஹொட்டேலுக்கு அனுப்பச் சொன்னால் ஆச்சு. நாம் போய்ச் சேரும்போது வண்டி ரெடியா அங்கே இருக்கட்டுமுன்னு செல்லில் தாக்கீது கொடுத்தோம். அதேபோல் ஆச்சு.

நண்பர்கள் அனைவருக்கும் யுகாதி பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
புதுவருடம் நன்மையைத் தரணும்.

தொடரும்..............:-)

21 comments:

said...

யுகாதி வாழ்த்துக்கள் துளசி டீச்சர்.

Anonymous said...

அர்த்தநாரீஸ்வரர் அழகா இருக்கார்.
உகாதியா - யுகாதியா டீச்சர்?

எதுவா இருந்தாலும் வாழ்த்துக்கள்

said...

வாங்க அமைதிச்சாரல் & சின்ன அம்மிணி.

உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

யுகாதின்னுதான் நினைக்கிறேன். யுகத்தில் ஒரு வருடம் கடந்துபோய் புதுவருசம் வருதே!

said...

படமா இருக்கறததான் சண்டியா டீச்சர்? யுகாதி வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

அன்பு துளசிக்கு யுகாதி, உகாதி வாழ்த்துகள். திருப்பதில உகாதிலோ அப்டீன்ன்னுதான் பஞ்சாங்கம் வாசிச்சாங்க,.
எப்படியி நமக்கு நல்ல தரிசனம் செய்து வச்சீங்க.
பவுனம்மாவைப் பார்த்ததும் திருவேங்கடம் -ஹரி நினைவு வந்துடுத்து:)

said...

நல்ல பதிவு, போன பதிவில் நீங்க போட்ட படங்களைப் பார்த்ததும் இது சிங்கை என்று நினைத்தேன். அந்த அளவுக்கு உள்ளது.
குஜராத் முடிந்து சண்டிகரா?. இம்ம் நல்லா சுத்தி வாங்க. எங்களுக்கும் நல்ல பதிவுகள் கிடைக்கும். நன்றி.

said...

வாங்க சிந்து.

சண்டியை எதுக்குத் தேடறே? கண்ணாடியில் போய்ப் பார்ன்னு கோபால் சொல்றார்:-)))))

said...

வாங்க வல்லி.

பெரியவங்க சொன்னாப் பெருமாளெ சொன்ன மாதிரியாம். ஆனால் இப்போ பெருமாளே உகாதின்னுட்டாரா.... அப்போ அதுதான் சரியா இருக்கணும்.

ஹரி -திருவேங்கடம் எழுதுனப்போ இப்படி பஞ்சாப் போய் பார்ப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. நேரில் பார்த்துருந்தால் இன்னும் நல்லா எழுதி இருக்கலாம். பரவாயில்லை. ஷூட்டிங்கை பஞ்சாபிலேயே வச்சுக்கிட்டால் ஆச்சு:-)))))
நமக்கெதுக்கு 2 கோடி ரூபாய் செட்?

said...

வாங்க பித்தனின் வாக்கு.\

பதிவு எழுத வைக்கணுமுன்னு அந்த ஆண்டவன் தீர்மானிச்சுட்டான். அதான் பயணம் அதுவாவே வாய்க்குது.

'நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்'ன்னு க்ருஷ்ணுடு சொல்லிட்டார்.

said...

சண்டிகர் ல முருகன் தனியா சன்னதி கொண்டு இருக்காரா! புகைப்படங்கள் அருமைங்க.

தங்களுக்கும் யுகாதி வாழ்த்துக்கள்

said...

சிலைகள் எல்லாம் நல்லா வடிவாக இருக்கு. ;-)

said...

அரக்கன்களின் வாயில் எல்லாம் நன்றாக இருக்கிறது.

உங்களுக்கும் யுகாதி வாழ்த்துக்கள்.

said...

ஆஹா எங்கும் தமிழ்! :)

said...

அருமை

said...

வாங்க முகுந்த் அம்மா.

அவன் தனியா நின்னுக்கிட்டு, நம்மளையும் அங்கே கூப்புட்டான் பாருங்க, அங்கே அவன் 'நிக்கிறான்':-)

இது அங்கே பிரசித்தியான கோவில் இல்லை. நமக்குத் தெரியாமப் போயிருக்கவும் கூடும்!

said...

வாங்க கோபி.

'வடிவா' இருக்கணும்தான். இப்போதான் கொஞ்ச நேரம் முன்னால் 'வடிவுடை அம்மனை' தரிசனம் செஞ்சோம். உங்க நினைவு வந்துச்சு ஊருக்குள் போகும்போது!

said...

வாங்க மாதேவி.

பாபாவுக்கு அரக்கன்மேல் பிரியம் ரொம்ப! அதான் அரக்கன் வாய்கள் ஏழெட்டு இருக்கு:-))))

said...

வாங்க நான் ஆதவன்.

ஆமாமாம். யே பாபா கா நாம் ரத்னசாமி ஹை:-)

said...

வாங்க எல் கே.

நன்றி.

said...

சண்டிகரை கண் முன்னே நிறுத்திடீங்க.

வழக்கப்படி பதிவும் படங்களும் கலக்கல்.

வேலை மிகுதியால் படிக்க முடியலை. இனிமே படிக்கிறேன்.

தொடருங்கள்.

said...

வாங்க சூர்யா.

இன்றுவரை நாலே நாலுதான்:-)

நேரம் கிடைக்கும்போது படிச்சுட்டுச் சொல்லுங்க.