Wednesday, March 24, 2010

ப்ரம்ம ஸரோவர் ஆஃப் குருக்ஷேத்ரா

பிரம்மன் படைச்ச இந்த பிரமாண்டத்தின் முன்னே நின்னப்போ மூச்சே அடைச்சுப்போச்சு. 360 x 150 மீட்டர்கள். 'பூ உலகை'யே படைச்சவனுக்கு இந்த சைஸ், ஜூஜுபிதான். ஆனா.... நமக்கு? ரொம்பப் பக்கம்தான். ரவுண்டாச் சொன்னா, ஒரு 100 கிலோமீட்டர்தான். போறவழியிலே பார்த்துக்கிட்டுப் போகலாமேன்னு.....................

என்னமோ குதிரைக்குக் கடிவாளம் போட்டாப்புலேதான் சண்டிகர் டெல்லின்னு எங்கேயும் திரும்பாம நேராப் போய்வந்துக்கிட்டு இருக்கார் இவர். இனிமேலும் அப்படித்தானாம். இப்போ நான் வந்துருக்கேனேன்னு.....

குதிரைன்னதும்.....
அடடா......... என்ன ஒரு கம்பீரம்! எதோ அச்சுலே வார்த்துப்போட்டாப்போல அந்த நாலும் கழுத்தைச் சிலுப்பி, கடிவாளத்தைப் பொருட்படுத்தாம, பார்வையில் ஒரு அலட்சியத்தோடு திமிறி அப்படியே ஒரு எட்டு முன்னே வைக்குது. உடம்பில் தசைகள் எல்லாம் முறுக்கேறி..... சரியான பாடி லேங்குவேஜ்:-) கடிவாளம் பிடிச்சுருக்கும் 'தேரோட்டி' முகத்தைப் பின்னால் திருப்பி 'ஏமானோடு' பேசுறார். கொஞ்சம் அசந்தால் கனைச்சுக்கிட்டே இது நாலும் நம்மமேலே பாய்ஞ்சுரும். அப்படி ஒரு வேகம்.
அங்கே நின்ன நேரத்துலே முக்கால்வாசி இந்தக் குதிரைகளைத்தான் பார்த்துக்கிட்டு நின்னேன். அடடா...... என்னமாத்தான் செஞ்சுருக்கான் பாருங்களேன். உயிரோட்டமா இருக்குல்லே!!!!! (பாவம். காது புளிச்சுருக்கும் நம்மாளுக்கு)

சீக்கிரம் கிளம்பினோமுன்னா 'ஆராமா' பார்த்துக்கிட்டுப் போகலாமுன்னு ரோஹித் சொன்னதை நம்புனேன். இந்த ஊரைவிட்டுக் கிளம்புற கடைசிநாள்ன்னு ஹொட்டேல் ப்ரேக்ஃபாஸ்டில் பிரியா'வடை' ஸ்பெஷல் கொடுத்தாங்க. நம்ம விஷயம் இவுங்க காதுவரை எட்டிப்போயிருக்கு! சண்டிகரில் நம்ம பதிவர்கள் யாராவது இருப்பாங்களோ?

ஞாயித்துக்கிழமை, ட்ராஃபிக் கம்மின்னுக்கிட்டே சீறிப்பாய்ஞ்சு ஓடுது நம்ம வண்டி. நகர எல்லையைக் கடந்து 'டேரா பஸ்ஸி'ன்ற ஊரைக் கடந்து தேசீய நெடுஞ்சாலை 22 இல் போறோம். நேத்து வந்த அதே சாலைதான். அப்போ வடக்காலே மேலே போனது இப்போ கீழ்நோக்கித் தெக்காலே.

டோல் ரோடு ஆரம்பிக்குது 'அம்பாலா சண்டிகார் எக்ஸ்ப்ரெஸ் வே.' அருமையாப் போட்டுருக்காங்க. இங்கே இருந்து ஆரம்பிச்சு டில்லிவரை வழியில் எக்கச்சக்க டோல் கேட்டுகள். ஒருவழியாக் காசு வாங்கினா பயந்துருவோமுன்னு துண்டுதுண்டா ரோடு போட்டுவச்சுருக்காங்களோன்னு சம்சயம்.

'kகுரு' ன்னு ஒரு மகாராஜா முந்திக் காலத்துலே இருந்தார். இவர் நம்ம கௌரவர் & பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருத்தர். ரொம்ப நல்ல மனுஷரா இருந்து அஷ்ட தர்மங்களையும் கடைப்பிடிச்சு 'நல்லபடி நாட்டை ஆட்சி செய்தார்.' இந்த நாட்டுக்கே தர்மக்ஷேத்ரமுன்னு பெயர் வந்துருச்சு. நம்ம மகாவிஷ்ணுவுக்கு இவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 'இந்தா பிடிச்சுக்கோ'ன்னு ரெண்டு வரம் கொடுத்தார். ஒன்னு இந்த நாட்டை இனி குருக்ஷேத்ரமுன்னு பெயர் மாத்திக்கலாம். ரெண்டு, இங்கே இறப்பவர்கள் யாரா இருந்தாலும், மகா பாவியாகவே இருந்தாலும்கூட அவுங்களுக்கு டைரக்ட்டா சொர்க்கவாசம்தான். அதுசரி. தர்மம் தவறாத நாட்டுலே பாவி எங்கே இருக்கப்போறான்னு....நல்ல விவரமான சாமிதான் விஷ்ணு:-)

ஒருவேளை, பாரதப்போருக்கு இடம் தேடிப்பார்த்து இதைத் தெரிஞ்செடுத்ததுகூட இந்த சொர்க்கலோக வாசத்துக்குத்தானோ என்னவோ!

இந்த இடத்துக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் வாய்ச்சுருக்கு. ஒன்னு கிருஷ்ணன் செஞ்ச கீதை உபதேசம் ரெண்டாவது, போரில் அடிபட்டு அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தப்ப, சோகமா அவரைச்சுத்தி நின்ன குடும்ப அங்கத்தினர்களில் தருமர், 'எந்தச் சாமி, பெரிய சாமி'ன்னு கேட்க அவர் மகாவிஷ்ணுதான்னு சொல்லி விஷ்ணுவை ஆயிரம் பெயர்களால் (சகஸ்ரநாமம்) போற்றினார்.

நெடுஞ்சாலையில் இருந்து வலது பக்கம் பிரியும் ஊருக்குள் போகும் வழியில் நுழைவுவாயில் அலங்காரத்திலேயே இடத்தோட முக்கியத்வம் தெரிஞ்சுருது.

ஊருக்குள்ளே தடுக்கிக் கீழே விழுந்தா............ அது ஒரு கோவில் வாசலாத்தான் இருக்கும். பிரம்ம சரோவர் இருக்கும் பகுதியில் எக்கச்சக்க யாத்ரீகர் கூட்டம். வெளியே இருந்து பார்த்தால் சாதாரணமா இருக்கும் நுழைவு வாசலில் போனதும் கண்கள் விரிய அப்படியே நின்னுட்டேன், குளத்தின் சைஸைப் பார்த்து. சரோவர், ரொம்பச் சரியான பெயர்தான். கடல்! இந்தப் பகுதியில் மட்டும் 48 புண்ணிய தீர்த்தங்கள் இருக்குன்னு ஹரியானா மாநில சுற்றுலாத்துறை தகவல் பலகை வச்சுருக்கு. கூடவே அவை அமைஞ்சுருக்கும் இடங்களும்.
குளத்தின் முன்னே திருப்பிப்போட்ட 'ட' போல அகலமான மேற்கூரையுடன் வெராந்தா நீளமா ஓடுது. இதை அடுத்து அகலமான நடைபாதை. குளத்தோட அளவுக்குப் பொருத்தமா இப்படித்தான் அமைக்கணும். கட்டில்கள் போல வரிசையா போட்டுவச்சுக்கிட்டு
பூஜை சாமான்களும், குழைச்சுவச்ச கோதுமைமாவு உருண்டைகளுமா 'பண்டிட்'கள் காத்துருக்காங்க பக்தர்கள் வரவை நோக்கி. முன்னோர்களுக்கான காரியங்களும் தர்ப்பணங்களும் செஞ்சு வைக்கும் ஸ்பெஷலிஸ்ட்டுகள். பித்ருக்களுக்குப் பிண்டம் போட நம்ம பக்கம் சோற்றுருண்டை. வடகத்திக்காரங்களுக்கு சப்பாத்தி மாவு உருண்டை! அவுங்கவுங்க சாப்பாடு அவுங்கவுங்களுக்கு. மேலே போனாலும்கூட உணவுப் பழக்கம் மட்டும் மாறாது போல!



இவ்வளவு ஜனக்கூட்டம் இருந்தும் குளத்துத் தண்ணீர் படு சுத்தமா இருக்கு. தண்ணீரின் நடுவே அழகா ஒரு கோவில். அங்கே போக வர ஒரு பாலம். குளத்துக்கு அந்தாண்டை வலப்பக்கம் ப்ரமாண்ட அளவிலே இந்தியக்கொடி ஒன்னு பட்டொளி வீசிப் பறக்குது. குளத்துக்குப் பின்பக்கம் சில கோபுரங்களும் தெரியுது. கூடவே அந்தக் குதிரைகளும் தேரும்.

கோவிலுக்குள்ளே போனோம். சிவன் இருக்கார். ரெண்டாங்கட்டத்துலே மகாவிஷ்ணு. பிள்ளையார், ஹனுமன் இப்படி. தரிசனம் முடிச்சு வெளியே வந்து கோபுரத்தைப் பார்த்தால், கண்ணைமூடித் தவம் செய்யும் யோகாஞ்சநேயர்!
குளத்துக்குப் பின்பக்கம் இருக்கும் கோவில்களுக்குப்போக பெரிய அகலமான பாலம் ஒன்னு போட்டுவச்சுருக்காங்க. காத்யாயினி தேவி கோவில். சிவன் கோவில் எல்லாம் இருக்கு. எல்லாமே ப்ராச்சீன் மந்திர்கள்தானாம். புதுசா இப்போ வரலைன்னு அடிச்சுச்சொல்றாங்க!
மரத்தடியில் டெர்ரகோட்டாவில் செஞ்ச காத்யாயினி கையில் அரக்கனின் தலையோடு கருப்புப்புடவையில் அட்டகாசம். இத்தனை அழகை எப்படி மண்ணில் சுட்டாங்க!!!!!
ஒரு பெரிய மேடையில் கிருஷ்ணர் கீதை உபதேசம் செய்யும் சிற்பம். இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய வெண்கலச் சிற்பமாம்! (அச்சச்சோ....அதுக்கு ஏன் இப்படி ஸ்டீல் க்ரே பெயிண்ட் அடிச்சு வச்சுருக்காங்க?) 50 அடி நீளம், 35 அடி அகலம், 25 அடி உயரச்சிலை. கனம் 45 டன்.. ரெண்டு கோடி ரூபாய் செலவாச்சு. (ஆனால், இது தோட்டா தரணி போட்ட செட் இல்லை!) ஸ்ரீ ராம் ஸுதார் & அனில் ஸுதார் என்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்டது. (ஹிந்தியில் உள்ள தகவல் பலகையிலும், ஆங்கிலத்தில் உள்ள தகவல் பலகையிலும் அளவெல்லாம் வெவ்வேறா எழுதி இருக்காங்க. தாய்மொழித்தகவல் உண்மை என்று நம்புவோமாக:-) ( மொழிபெயர்ப்புலே சொதப்பி இருக்கலாம். யே அங்ரேஜி மே லிகா, வோ டீக் நஹி ஹை)
பார்த்தனுக்குப் பெரிய மீசை இருக்கு. ஆனால் 'பார்த்த(னின்)சாரதி'க்கு மீசை மிஸ்ஸிங்! தில்லக்கேணியில் விட்டுட்டுப்போயிட்டாரோ? பார்த்தனுக்கு வயசான முகம். சாரதிக்கு இளமை முகம். எல்லாம் இந்த மீசைதான் காரணமா இருக்கணும்:-) ஆசாமி பார்த்தனுக்குக் கவலைப்பட்டே வயசு கூடி இருக்கும். ஆனா சாமிக்குக் கவலை இல்லாத வாழ்க்கை.ன்னு நினைச்சேன். தேர்க்குடையில் நம்ம 'நேயுடு' ஸ்மார்ட்டா gகதையைத் தூக்கித் தோளில் வச்சுக்கிட்டு ஓசைப்படாமல் கீதையைக் கேக்கறார். விட்னெஸ்.
அங்கங்கே காவிகள் உக்கார்ந்துருக்காங்க. டைம்பாஸ் & வரும்படின்னு நேரம் போகுது!
த்ரௌபதிக்கு ஒரு கோவில் இருக்கு. (ப்ராச்சீன்னு தனித்தனியாச் சொல்லவேணாம். எல்லாமே ஆதி முதலே இருக்காம்) சந்திர வம்சத்து பாண்டவர்களின் த்ரௌபதி க்ருபா. கோவிலின் உள்ளே மகாவிஷ்ணு, கண்ணன் சிலைகள். ஷ்யாம் தர்பார். குறுகலா ஒரு வாசலில் சின்ன படிகள் கீழே இறங்கிப்போகுது. கீழே பெரிய முற்றத்தின் நடுவில் ஒரு கிணறு. அடிப்பம்பு போட்டு தீர்த்தம் எடுத்துக் குடிச்சுத் தலையில் தெளிச்சுக்கறாங்க. கஷ்டமில்லாம நாம் கோவிலுக்கு வெளியில் நின்னே பார்த்துக்கலாம். இங்கேதான் கிணத்துக்குப் பக்கத்துலே அந்த ப்ரமாண்டமான கொடிக்கான கம்பம் நிக்குது. இந்திய ஒருமைப்பாட்டை கண்குளிரப் பார்க்கும்விதமா நாடு முழுவதிலும் இருந்து வந்து கூடி நிற்கும் மக்கள். (சென்னை ரெப்ஸ், கோபால் & துளசி) பெண்களுக்காகன்னு சத்யபாமா காட், கௌசல்யா காட்ன்னு அங்கங்கே நீராட அமைத்த படித்துறைகள் எல்லாம் அமர்க்களமாக இருக்கு போங்க!

இன்னும் கொஞ்சம் படங்கள் இங்கே ஆல்பத்தில்


பி.கு: பதிவின் நீளம் கருதி இங்கே நிப்பாட்டிக்கிறேன். தமிழ்மண நட்சத்திரத்துக்கு போட்டியா இருக்கக்கூடாது பாருங்க. மற்றவைகளை அடுத்த இடுகையில் தொடர்ந்தால் ஆச்சு.

15 comments:

said...

குதிரை‍- அருமையான‌ கை வ‌ண்ண‌ம்.

said...

வாங்க குமார்/

கூகுள் ஒரே தகராறு. எதையும் எடிட் செய்ய முடியலை. எர்ரர் ன்னு கூச்சல்.

ஆல்பம் திறக்க வருகிறதா?

said...

வாங்க கோபி.
அது நல்லா இருந்ததால் நல்லா(வே) வந்துருக்கு:-)

said...

சிற்பங்கள் மிக அருமை. Photos நல்லா இருக்கு.

Thanks for sharing
Ram

said...

அடடா அர்ஜுனன் என்ன கம்பீரம்!! கிருஷ்ணன் சாத்வீகம். குதிரைகள் அட்டகாசம். சரோவர் மஹா பெரிசுப்பா. ஒரு போட்டொல கொண்டுவரமுடியாது இல்ல! துளசியின் கைவண்ணத்தில இத்தனை இடங்களைப் பார்க்க முடியறது.

said...

வாங்க ராம்.

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

said...

வாங்க வல்லி.

எனக்கு அங்கே ஹைலைட் அந்தக் குதிரைகள்தான்ப்பா.

இடங்கள் எல்லாம் பாண்டவரோடு சம்பந்தப்பட்டவைகள் என்பதுதான் ஆச்சரியமா இருக்கு.

said...

அந்த ரதம் முதல் தடவை போனப்ப இல்லை ரெண்டாவது த்டவை போனப்ப்ப ப்ரம்மாண்டமா நின்னுச்சு.. அதே மாதிரி அந்த பாலத்துல போற கோயிலும் நல்ல அழகு முதல் தடவைபோனப்ப ரிப்பேர் ஒர்க் நடந்துட்டுருந்தது..

நான் எழுதிய குருஷேத்த்ரம் படிச்சிட்டீங்களா.. ;)

நமக்கு எல்லாமே ரெண்டு ட்ரிப் தான்.. ஒரு முறை மாமனார் மாமியாருக்கு ஒருமுறை அம்மா அப்பாக்குன்னு.. அதனால் நிறைய மாற்றங்களை கவனிக்கிறது ம் மேம்படுத்தப்பட்ட டூராவும் ஆக வாய்ப்பு.. :)

அந்த கிணறு திரௌபதி கோயில் பாக்கல..

said...

சுவாரஸ்யமான கட்டுரை. வழக்கப்படி புகைப்படங்கள் பிரமாதம். உங்க காமிராவே எதைப்பார்த்தாலும் நல்லாப் பார்க்குதா அல்லது காமிரா எதை நல்லாப் பார்க்கும்ங்கிறதை நீங்க சரியாப் பார்க்கறீங்களா அல்லது உங்களையும் உங்க காமிராவையும் காட்சிகள் நல்லாப் பார்க்குதா இல்லை நீங்க பார்த்த இடம்ங்கிறதினாலே நாங்க சரியாப் பார்க்கிறமா

பார்க்க பார்க்க புகைப்படம் பொலிவுற
நோக்க நோக்க நிழற்படம் தெளிவுற

ந்னு காமிரா சஷ்டிக் கவசம் சொல்லலாம் போலிருக்கு!

http://kgjawarlal.wordpress.com

said...

வாங்க கயலு.

உங்க 'குருஷேத்ரம்' முந்தி படிச்சுருக்கேன். இந்தப்பயணத்துலே எதிர்பாராமல் இங்கே போகச் சான்ஸ் கிடைச்சப்ப, கிளம்பும் முன்னால் ஒரு ரெஃபரன்ஸ்க்கு உங்களுதைத் தேடுனப்பக் கிடைக்கலை. சென்னை வந்து நிதானமாத் தேடுனப்பக் கிடைச்சது. ட்டூ லேட்.

த்ரௌபதி கிணறுக்கு மூணாம்முறை போனால் ஆச்சு. ரதத்துக்கு பின்பக்கம் ஒரு அம்பதடி தூரத்துலே இருக்கு.

said...

வாங்க ஜவஹர்,

இந்தப் பின்னூட்டத்தைக் கோபால் கண்ணுலே படாம வச்சுக்கணும்:-)

கேமெரா சரியில்லைன்னு இன்னொன்னு வாங்க அடி போட்டுக்கிட்டு இருக்கேன்.

(எல்லாம் ஆடமாட்டதவ.......கூடம் கோணலுன்னு....)

said...

நாலு குதிரைகளின் வேகம் படத்திலேயே அசத்தலாக தெரிகிறது.

said...

வாங்க மாதேவி.

கடிவாளத்தை விட்டா ஒரே பாய்ச்சல்தான்:-)))))

said...

ஆடமாட்டாதவ .... கூடம் கோணல்னாளாம் - யாரு துளசி கிட்டயா - கிடையவே கிடையாது - உண்மையிலேயே கூடம் தான் கோணலு - கோபால் நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்

said...

வாங்க சீனா.

இப்படி ஒரு ஆதரவு எனக்குக் கிடைக்குமுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட் ஆல்ஸோ:-)