Wednesday, November 24, 2010

எங்கிருந்தோ வந்தான்

சந்தின் குறுக்கே இடதுபக்கம் ஒரு நுழைவு வாசல். உள்ளே நுழைஞ்சால் திண்ணைகள் வச்ச வளாகம். நடுவில் ஒரு திறந்தவெளியா முற்றம். கடந்தால் நந்தனின் மாளிகை. முற்றத்தின் இடதுபுறம் சதுரமா ஒரு சேண்ட் பிட். நடுவில் ஒரு ஆரஞ்சு நிற மரத்தண்டு நம் இடுப்பளவு உசரத்தில் நிக்குது, ஒரு பக்கமா தண்ணீர் டேங்க் ஒன்னு குழாய் வச்சது. சுவத்தில் 'நந்தன் யசோதா கஉ ஷாலா' ன்னு எழுதி வச்சுருக்கு. நம்ம பார்வை போன இடத்தைப் பார்த்ததும் பசுக்களை க உ என்றுதான் சொல்லணும். ஆனா அது பேச்சுவழக்கிலே Gகாய்ன்னு ஆகிப்போயிருச்சுன்னார்.
முற்றத்தில் நின்னு முக்கியக் குறிப்புகளைச் சொன்னார் திவ்ய ஷர்மா. 'கருவறை மண்டபத்துக்குள்ளே நாம் நிக்கக்கூடாது. உக்கார்ந்தே சேவிக்கணும். காரணம் இங்கே எல்லா இடத்திலும் கண்ணன் பரிபூரணமா நிரம்பி இருக்கறான்னு ஒரு ஐதீகம். ரெண்டாவதா....... கும்பிட்டும்போது கைகளைத்தட்டி ஆஹா ஆஹான்னு கோஷமிட்டு வணங்கணும். மகிழ்வோடு அவன் முன்னே நிக்கிறோமுன்னு அவனுக்குத் தெரியணும். (டிவி நிகழ்ச்சிகளில் காட்டுவதைப்போல Clap ன்னு எழுதித் தூக்கிப்பிடிச்சால் ஆச்சு!)மூணாவதா.....பிரசாதம் எல்லோருக்கும் கொடுப்பாங்க. அதை பக்தியோடு வாங்கிக்கணும்'. இவை முக்கியமான மூன்று.
கோபாலுடன் திவ்ய ஷர்மா

அப்புறம் சொன்னார் பத்தாயிரம் பசுக்களை இங்கே வளர்க்கறாங்க. எல்லாமே கறவை நின்னுபோனவைகள். அவைகளை வேறெங்கும் அனுப்பாமல் கடைசிவரை வச்சுக் காப்பாத்தறாங்க. இந்த ஊர் மாடுகளை வெளியூருக்கு விற்பதில்லை. இங்கேயே பிறந்து வாழ்ந்து இங்கேயே மடிஞ்சு போகுது.

கோவில் வகையில் ரெண்டாயிரம் விதவைப்பெண்களுக்கு உணவு உடை கொடுத்துத் தங்கவச்சுருக்காங்க. இவுங்களுக்கு உற்றார் உறவினர் யாருமே இல்லை. மரணம்வரை அவுங்களைக் காப்பாற்றும் பொறுப்பு கோவிலுக்கு இருக்கு.

நீங்க பாக்யசாலிகள். இன்னிக்குத்தான் தங்கத்தொட்டில் கடைசிநாள். இந்தக் கோவிலில் வருசத்துக்கு மூணு முறை இப்படித் தொட்டில் வைபவம் நடக்கும். தீபாவளிக்குத் தங்கத்தொட்டில். 51 கிலோ தங்கம். ஹோலிப் பண்டிகை சமயம் வெள்ளித் தொட்டில். கோகுலாஷ்டமி சமயம் வைரமும் முத்தும் பதிச்ச தொட்டில். மற்ற நாட்களில் சாதாரண மரத்தொட்டில் இருக்குமாம்.
முதலில் அந்த மணல் நிறைச்சுருக்கும் இடத்துக்குள்ளே போய். அந்தக் குழாயில் கைகளை அலம்பிக்கிட்டுக் கொஞ்சம் தண்ணீரைத் தலையில் தெளிச்சக்கணுமாம். சொன்னதைச் செஞ்சோம்.

இந்த மணல்தான் கண்ணன் விளையாடிய இடம். ஆஹா....சேண்ட் பிட்ன்னு நினைச்சது கரெக்ட்:-) இந்த மரத்தண்டுதான் கண்ணனை உரலோடு சேர்த்து முடிஞ்சு மரத்தில் கட்டிப்போட்டு வச்ச இடம்.
அதெப்படி? அது ரெட்டை மரமால்லே இருந்துச்சு. கடம்ப மரமோ இல்லை மருதமரமோன்னு நினைப்பு இருக்கே.

அந்த ரெட்டை மரத்தின் அடிப்பகுதிதானாம் இது. காலப்போக்கில் இத்தனூண்டு அடிமரம்தான் 'தண்டா' நிக்குதாம்.

மனசே...அடங்கு. நம்புனால்தான் தெய்வம். மனத்தின் உள்ளே ஒலிக்கும் அசரீரி

ரெண்டு பக்கமும் திண்ணை வச்ச ஒரு வீட்டுக்குள்ளே நுழையறோம். நிலைவாசல் மேலே ஸ்ரீநந்த யஷோதா பவன், ஸ்ரீ பல்ராம், யோகமாயா ஜன்மஸ்தான், கோக்குல் மதுரான்னு ஒரு போர்டு. ரொம்பச்சரி. பலராமன் பிறந்த இடமும் யோகமாயா பிறந்த இடமும் இதுதான்., கண்ணன் வேறொரு இடத்தில் பிறந்து, தந்தை வசுதேவர் தன் தலையில் தூக்கிவந்து இங்கே விட்டுட்டு, யோகமாயயைத் தூக்கிட்டுப்போன கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே?

தெரியாதவங்க கொஞ்சம் பொறுத்துக்குங்க. ஜன்மபூமி கோவிலுக்குக் கூட்டிப்போகும்போது சொல்றேன்.
வாசலைக் கடந்து உள்ளெ போனால்.....சுத்திவர தாழ்வாரம் ஓடும் பெரிய முற்றம். நாம் நிற்கும் தரையில் வெள்ளைப்பளிங்குக் கற்கள் பாவி இருக்காங்க. எல்லாக் கல்லிலும் அந்தந்தக் கல்லுக்குக் காசு கொடுத்து உபயம் செஞ்சவங்க பெயர்.
இடதுபக்கம் சுவற்றில் சிவன் தவம் செய்யறார். வலப்பக்கம் சுவற்றில் யஷோதா இடுப்பில் குழந்தைக் கண்ணனுடன். நம் முதுகுப்பக்கம் இருக்கும் சுவரில் கோவர்தனமலையைத் தன் விரலால் தாங்கி நிற்கும் கண்ணன்.
வலப்பக்கமாப் போகணும். ஒரு மாடிப்படி தெரியுது. அது நமக்கல்ல. படிக்கு இந்தப் பக்கம் ஒரு வாசல். உள்ளே போனால் நமக்கு நேரெதிரே சுவரில் இன்னொரு ஓவியம். நந்தன், யஷோதா இருக்காங்க. ஒரு பக்கம் சின்ன ஆசனத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தையாய்!
இன்னவரிக்கும் ஊரில் பிறக்கும் புதுக் குழந்தையைத் தூக்கிவந்து இங்கே வச்சுப் பூஜை செய்து எடுத்துப் போவாங்களாம். .அப்படி ஒரு பழக்கம் காலங்காலமாய்த் தொடருதுன்னார் திவ்யஷர்மா.

நமக்கிடது பக்கம் இருக்கும் வாசலுக்குள் நுழைஞ்சோம். கருவறை கூடம். இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை. நுழைஞ்சதும் சட்னு உக்கார்ந்துடணும். அதான் நிக்கக்கூடாதே! சுற்றிக் கண்ணையோட்டினால்..... இது முற்றத்தை அடுத்து இருக்கும் நீளமான ஹால். கடைசியில் சுவரை ஒட்டி ஒரு மேடை. மேடையில் ஒரு பக்கம் நந்தன், மறு பக்கம் யஷோதா. நடுவில் ஏழுதலை நாகம் தலைக்குப் பின் குடை பிடிக்க பலராமனின் திரு உருவச்சிலை. இது மூணும் பெரிய லைஃப் சைஸ் சிலைகள். இவுங்களுக்கு முன்னே கொஞ்சம் சின்ன அளவில் (அரை ஆள்) கண்ணன், யோகமாயா, ரோஹிணி, சிலைகள் அதே மேடையில் இருக்கு.

மேடைக்குக் கீழ்ப்பக்கம் தரையில் ஒரு தொட்டில். ஃப்ரீ ஸ்டேண்டு டிஸைனில் இருக்கு. அதுக்கு முன்னே சின்னதா ஒரு பக்தர்கள் கூட்டம். வலப்பக்க ஓரத்தில் சின்ன ஆசனத்தில் ஒரு பண்டிட் உக்கார்ந்துருக்கார். மெதுவான குரலில் பக்தர்களிடம் என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கார்.இடப்பக்கம் ஒரு பெரிய வாசல். அவர் சொன்னதைக்கேட்டுமுடிச்ச பக்தர்கள் அவர் அருகில் இருக்கும் ஒரு அண்டாவில் இருந்து எடுத்துக் கொடுத்ததை வாங்கிக்கிட்டு எழுந்து இடப்பக்க வாசலில் வெளியேறுனாங்க.

நம் முறை வரும்வரை நாம் காத்துக்கிட்டு இருக்கோம். வரிசை வரிசையா பக்தர்கள் வெளியேற நாமும் உக்கார்ந்த வாக்கிலேயே நகர்ந்து நகர்ந்து முன்னேறணும்! பிஞ்சுக் குழந்தையா இருந்தப்ப இப்படி அசஞ்சஞ்சு அரக்கியரக்கி நகர்ந்துருப்போம். அதெல்லாம் யாருக்கு நினைவிருக்கு? இப்படி நகரும்போது எனக்கு சிரிப்பா வருது ஒருபக்கம். பரவாயில்லை.அதான் சந்தோஷமாச் சிரிச்சு 'ஆஹா' சொல்லச்சொல்லி இருக்காங்களே! கோபால் சுலபமா நகர்ந்து போறார். எனக்குத்தான் ப்ராப்லம்! ஹைய்யோ ஹைய்யோ:-)))

பல்ராம் இதே மாதிரி ஒரு திருவுருவம் கருவறை மேடையின் நட்டநடுவில் இருக்கு

ஒருவழியா நம் முறை வந்தது. தொட்டிலுக்கு முன்னால் இருக்கும் இடத்தில் ரெண்டு மார்பிள் ஸ்லாப் மிஸ்ஸிங். அங்கே மட்டும் வெறும் மண்தரையா இருக்கு. அதுதான் கண்ணன் மண்ணை உண்ட இடமாம். மண்ணைத் தின்ற வாயைத் திறந்து காமிச்சப்ப அம்மாவுக்கு ஈரேழுலகமும் தெரிஞ்சதுன்னு ஒரு கதை இருக்குல்லே! அந்த 'சம்பவம்' நடந்த இடம்! அந்த மண்தரையில் நம்மை நகர்ந்து உக்காரச் சொன்னார் பண்டிட்.

கோபால் பண்டிட்டுக்கு சமீபம். நம்ம பேரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட பண்டிட் நம்ம பிள்ளைகுட்டி விவரங்களைக் கேட்டார். அப்புறமும் குடும்பநலன், இங்கே இவ்வளவு ரூபாய்கள் செலுத்தினால் அதுக்கு இன்னின்ன பலம், புண்ணியம் வகைகளை விஸ்தாரமா எடுத்துச் சொல்றார். சுவரில் பெரிய பட்டியல் ஒன்னு எழுதிவச்சுருக்காங்க. எனக்கோ...கண்முன்னே இருக்கும் சாமிச்சிலைகளைக் கூர்ந்து பார்த்து மனசில் வச்சுக்கணும். அதுலே கவனம் செலுத்தவிடாமல் பண்டிட் என்னென்னவோ சொல்லிக்கிட்டே இருக்கார். நான் க்ரஹலக்ஷ்மி என்பது (மட்டும்) நல்லாவே காதுலே விழுந்தது:-)

' எவ்வளவு பணம், லிஸ்ட்டுலே எந்த ஐட்டம் கொடுக்கப்போறே?'ன்னு கோபாலைக் கேக்கறார். கோபாலுக்கும் எனக்கும் கொடுக்கப்பிடிக்கும். ஆனா அது நம்ம மனசுலே தோணுன தொகையாவும். நம்ம மனசுலே தோணும் காரணங்களுக்காகவும் இருக்கணும். தானம் என்பது நாமாக விரும்பிக் கொடுப்பதுன்னு ஒரு கொள்கை. நிர்பந்தம் பிடிச்சு, 'தா, தா'ன்னா இவருக்குக் கொஞ்சம் எரிச்சல் வரும்.

கொஞ்சம் டொனேஷன் கொடுக்கலாமுன்னு இருக்கேன்னார். எவ்வளவு எவ்வளவுன்னு அரிக்க ஆரம்பிச்சார் பண்டிட். பாவம் ஒவ்வொரு முறை அவர் அரிக்கும்போதும் நினைச்ச தொகை கொஞ்சம் கொஞ்சமா கீழே போகுதுன்ற விவரம் அவருக்குத் தெரியாதுல்லை!!!!

இவர் ஒரு தொகை சொன்னதும்......ஒரு மாதிரி தலையை ஆட்டிட்டு எங்களை தங்கத்தொட்டில் கண்ணனை ஆட்டிவிடச்சொன்னார். அதுக்குன்னு ஒரு நீளத் தங்கச்சங்கிலி வாசலைக் கடந்து நீண்டு வெளியே வந்துருக்கே!
அப்புறம் பிரசாதமா அண்டாவில் இருந்து காகிதப்பொட்டலம் எடுத்துக் கொடுத்தார்.

இப்போ எழுந்து வர்றதா? இல்லை உக்கார்ந்தே சறுக்கி வாசலுக்குப் போணுமான்னு யோசிக்கிறேன். அதுக்குள்ளே கோபால் எழுந்து நின்னு 'நடந்து' வாசலை நோக்கிப்போனார். நானும் எழுந்து நின்னுட்டேன். மேடையில் இருக்கும் கடவுளர் சிலைகளுக்கு கும்பிடு போட்டுட்டு வெளியே வந்தேன். இந்த வாசல் முற்றத்தின் ஒரு பக்கத்துக்கு நம்மைக் கொண்டுவந்துருது. அங்கே வலப்புறம் கை காமிச்சார் திவ்யஷர்மா. அங்கே ஒருத்தர் தீர்த்தம் தர்றார். தட்டுலே காசு போட்டுட்டுத் தீர்த்தம் (பால்) வாங்கிக்கிட்டோம். இடதுபக்கம் இருந்த கவுண்ட்டரில் கோபால் அந்தத் தொகையைக் கொடுக்கும்போது இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் ரசீது தருவோமுன்னு சொன்னாங்களாம். ரசீதுக்குன்னு ஒரு மினிமம் அமௌண்டு இருக்காம். இவர் ஒன்னும் சொல்லாமக் கொடுத்துட்டு ரசீதுடன் வந்தார். இப்போ முற்றத்தின் அடுத்த தாழ்வாரம் போறோம். சின்னதா சந்நிதிகள். கம்பி அழிக்குள் பார்க்கலாம்.
இங்கே படம் எடுத்துக்கலாமான்னு திவ்யஷர்மாவைக் கேட்டால் தாராளமா எடுத்துக்கோங்கன்னார். பலராம், வசுதேவர் குழந்தையுள்ள கூடையைத் தலையில் சுமந்து வருவது, நந்தன் யஷோதா கண்ணன், பலராமன். கண்ணன் தன் நண்பர் கூட்டத்தோடு உறியில் இருந்து வெண்ணை திருடும் ஸீன் இப்படி சில.


மாக்கன்சோரி
"கருவறையில் எலிகள் நடமாட்டம் பார்த்தியா? சுத்தமா வைக்கக்கூடாதா?"

" அடடா.... நான் கவனிக்கலையே:( சாமிகள் முகத்தையே உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன். புண்ணியம் உங்களுக்குத்தான். காலடி சேவிக்கணும். நெய்யும் பாலுமா இருக்குமிடத்தில் எலிகள் வருவது சகஜம்தானே? அதுவுமில்லாம சாமி அறையில் எலி மருந்தெல்லாம் வைச்சால் நல்லாவா இருக்கும்? "


மாளிகையை விட்டு வெளியே வந்தோம். வந்தவழியாகத் திரும்பிப் போகும்போது இடப்பக்கம் பிரிந்த ஒரு சந்தருகே வந்ததும், 'தரிசனம் நல்லாக் கிடைச்சதா? உங்களுக்குத் திருப்திதானே? கஷ்டம் ஒன்னும் இல்லையே?'ன்னு திவ்யஷர்மா கேட்ட கேள்விக்கு 'எல்லாம் சரியா இருந்துச்சு'ன்னோம். 'திருப்திதானே?'ன்னார். ஆமாம்னு சொன்னோம். 'நேராப்போங்க. உங்க வண்டி வந்துருமு'ன்னு சொல்லிட்டு, சட்னு அந்த சந்தில் நுழைஞ்சு போயிட்டார்.

நாங்களும் வண்டிக்கு வந்து சேர்ந்தோம். நம்மைக் கூட்டிவந்த ராஜேஷ் ஷர்மாவுக்காகக் காத்திருந்தோம். பத்து நிமிசமாச்சு.யாரும் வரலை. அப்பக் கோபால் சொல்றார், ' நாம் வெளி வரும்போது அங்கே யாரிடமோ ராஜேஷ் பேசிக்கிட்டு நின்னதைப் பார்த்தேன்'. நான் பார்க்கலையேன்னு நம்ம ப்ரதீப்பை (டிரைவர்) அனுப்பிக் கூட்டி வரச்சொன்னோம். அவரும் பத்துப்பதினைஞ்சு நிமிசம் ரெண்டு பேரில் யாராவது ஒருத்தராவது கிடைப்பாரான்னு தேடிப்பார்த்துட்டுக் கிடைக்கலைன்னு திரும்பி வந்துட்டார். எதுக்கும் இருக்கட்டுமுன்னு இன்னும் கொஞ்சநேரம் காத்திருந்தோம்.

இனி காத்திருப்பது வீண்வேலைன்னு நாங்க வந்தவழியே 12 கிமீ திரும்பி வந்து, ஜென்மபூமி கோவிலுக்கு நாளைக் காலை வந்தால் ஆச்சுன்னு அறைக்கே போயிட்டோம்.

அம்பத்தியொன்னு கொடுக்காமப் போயிட்டோமேன்னு எனக்கு மனக்கஷ்டமாப் போயிருச்சு.

ரெண்டு பேரும் எங்கே இருந்து வந்தாங்க? எப்படிச் சட்னு காணாமப்போயிட்டாங்க?
ஒன்னும் புரியலை.

இந்தக்கோவில் அந்த 108 இல் ஒன்னு!

தொடரும்...............................:-)30 comments:

said...

ரொம்ப சுவாரசியமாக எழுதுறீங்க....

said...

க உ - எழுத்துப்பிழை - டீச்சர்னா சரியான சீசர் - எப்பவோ எழுதி வச்சதுக்கு இப்ப கொற சொல்ற டீச்சர். திவ ஷர்மாவின் மூன்று கட்டளைகள் சூப்பர் - உண்மையாகவும் இருக்கலாம். 10000 மற்ரும் 2000 - கிரேட் ஜாப் - தங்கத் தொட்டில் - பார்க்க கொடுத்து வைத்தவர்கள் துளசியும் கோபாலும். நம்பினால் தான் தெய்வம். உபயம் செய்தவர்கள் பெயருடன் பளிங்குக் கற்கள். விடாக்கண்டன் பண்டிட் - கொடாக்கண்டன் கோபால் - ரசீது கொடுக்க மினிமம் டொனேஷனா ? அப்ப அதுக்குக் கீழே கொடுத்தா கணக்கு கிடையாதா ? எங்கிருந்தோ வந்தான் கைடு நானென்றான் மறைந்து விட்டான் - இரு ஷர்மாக்களும் வாழ்க !

said...

நல்ல பதிவு. படங்கள் அருமை. வாழ்த்துகள்
-இரா. தங்கப்பாண்டியன்
vaigai.wordpress.com

said...

கண்ணன் இடங்களைக் காண்பித்துக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிப்பா துளசி.இதெ வேளுக்குடி காண்பித்த போது பெரிய இடமாத் தெரிந்தது. எல்லோரும் மணலில் விழுந்து புரண்டு விளையாடிக் களித்தார்கள்.
உங்களுக்கோ இது கண்ணன் காட்டிய வழி என்றே நினைக்கிறேன். தேடுங்கள் ஒருநாள் வருவேன்னுட்டுப் போய்விட்டான் போல.உங்களோட நானும் வரலியேன்னு இருக்கு. ஆனாலும் இந்த தக்ஷிணை,டொனெஷன் ....ம்ஹூம்.கஷ்டமா சங்கடமா இருக்கும் போல இருக்கே.டிமாண்ட் செய்யக் கூடாதில்லையா.

said...

அருமையான பதிவு, டீச்சர்

அந்த ஊரில் வசிக்கும் விதவைகளைப் பத்தி எழுதி இருந்தீங்க. அதை பார்த்த உடனே சமீபத்தில் படித்த (படிக்க முயன்ற) Dr Kusum Ansal எழுதிய The Widow of Vrindavan என்றநாவல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. விருந்தாவனில் அபலையாக உறவினர்களால் கைவிடப்படும் விதவையான ஒரு சின்னப் பெண் மற்றும் அங்கிருக்கும் மற்ற விதவைகளைப் பற்றிய ஒரு கதை. என்னால் நூறு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாமல் கைவிடப்பட்ட ஒரு நாவல். இந்த இன்டர்நெட் யுகத்தில் பெண் விடுதலை பேசித் திரியும் நம்மைப் போன்ற ஒரு generation - ல் இப்படியும் ஒரு நகரமா என்று என் மனதைப் பிழிய வைத்த ஒரு கதை. ம்.... நாம் எங்கே போகிறோம்?

said...

வாங்க நட்சத்திரமே!

திடீர்னு பதிவு இந்த ஜொலிப்பு ஜொலிக்குதேன்னு அசந்துபோயிட்டேன்!!!!

said...

வாங்க சீனா.

அந்த க உ தான் சரின்னு சொல்றார் திவ்ய.

அப்படி திடீர்னு மறைஞ்சதுதான் வியப்பாவும் கொஞ்சம் கஷ்டமாவும் போச்சு. அந்த அம்பத்தி ஒன்னு!!!!!

பேசாம கண்ணனும் பலராமனும் வந்து சுத்திக்காமிச்சாங்கன்னு வச்சுக்கணும்!

said...

வாங்க் தங்கபாண்டியன்.

முதல் வருகைபோல இருக்கே! வணக்கம். நலமா?

தொடர்ந்து உங்க ஆதரவு வேணும்.

நன்றி.

said...

வாங்க வல்லி.

வீடியோவில் பார்க்கும்போது சின்ன இடம்கூட பிரமாண்டமாத் தெரியுமேப்பா!

டிமாண்டுகள் இந்தப் பக்கங்களில் அதிகம்ப்பா. இப்பத்தானே முதல் பகுதி வந்துருக்கு...இன்னும் இருக்கு பாருங்க:-)))))

said...

வாங்க விஜி.

அவுங்க கண்ணீர் கதைகள் இன்னும் கொஞ்சம் கிடைச்சது:( அதை வரப்போகும் பதிவுகளில் பார்க்கலாம்.

said...

//ரெண்டு பேரும் எங்கே இருந்து வந்தாங்க? எப்படிச் சட்னு காணாமப்போயிட்டாங்க?
ஒன்னும் புரியலை.//

பகவான் மனுஷ்ய ரூபேண ன்னு இப்படி நடப்பதை நானும் பல தடவை உணர்ந்திருக்கேன்.
நீங்க சொல்றாப்ல "நம்பினாதானே கடவுள்!"

said...

உங்க அண்ணாத்தை தவழவே இல்லை தெரியுமா.. ஒன்லி அரக்கி அரக்கி தான் :))

said...

வெரி,வெரி,இண்ட்ரெஸ்டிங்க். நல்லபதிவுக்கு நன்றிகள்.

said...

arumai. enkkennavo naama ariviyala sariththiram pola kadayaap padikkirom aanaa merku sariththiraththa ariviyal pola padikkiraargalnu thonudu. appuram oru vivaram thevai. www.anyindian.com irukkaa illayaa? munbellaam tamil puththagangal avanga moolamaa vaanguven ippo avangalukku ezhudunaalum badile illa. anyindian.com maadiri vera yaarum veli naattukku books anuppuvaangalaa? nandri teacher. thodarndu unga payana anubavangalai ezhudunga swarayamaavum informativa aavum irukku.

said...

நீங்கள் சொல்வதுபோல் கண்ணனும்,பலராமனும் வந்து சுற்றி காண்பித்தது போல் உள்ளது டீச்சர்:))))

said...

ஆமாங்க விஜி.
//பகவான் மனுஷ்ய ரூபேண..//

நாம் கஷ்டத்தில் இருக்கும்போது எங்கிருந்தோ நமக்குத் தெரியாத இடத்தில் இருந்து யார் மூலமாவோ உதவி கிடைக்குது பாருங்க, அப்பெல்லாம் நான் அப்படித்தான் நினைச்சுக்குவேன்.

said...

வாங்க கயலு.

ஆஹா.... அண்ணாத்தையும் அப்படித்தானா? எல்லாம் குடும்பப் பழக்கம்:-)))))

said...

வாங்க கோமு.

ஆதரவுக்கு நன்றிங்க.

said...

வாங்க குலோ.

எனி இண்டியனைப் பற்றித் தெரியலை. ஆனா புத்தகம் வாங்கணுமுன்னா உடுமலை.காம் இருக்கே!

http://www.udumalai.com/

said...

வாங்க சுமதி.

இருக்குமோ இருக்குமோன்னுதான் மனசு நினைக்குது.

பொதுவா உடனே படம் எடுக்கும் நான் அன்னிக்கு ராஜேஷை ஒரு படம்கூட எடுக்கலை. தோணவும் இல்லைன்னா பாருங்க!

said...

Dear author,
Your chapter on ''engiruntho vanthan'' is very interesting. The amazing quotes of various aspects of the conditions of widows in that place are heart rending; the feeling of pity for the widows forced into asylums for their daily bread is pitiable indeed.


It seems prior to the Sangam period, widows re-marrying her husband's brother was the norm...in the case where no brother of the husband was available, she was permitted to marry outside of the husband's family.

The advent of Buddhism in the 6th century changed this.Widows were not allowed to re-marry. The asylum (pally) practice seems to have come into vogue during this period. We see in the Silapathikaram that one Madhavi, a devout Buddhist turned monkish, after the assassination of her love husband kovalan by the pandian king, Nedunchezihan, she declares in the king's court that she didn't want to lead a widow's life.

In the Purananooru that one widow, Perungkopendu, had attempted immolation at the funeral pyre of her husband..and she speaks about the capricious state widows. From this we learn about the pathetic conditions under which widows lived..where widows were denied ghee in their foods, and instead their foods were cooked with a white gingelly paste; they had to sleep on the bare floor without any mat, etc.


Thus we are familiar with the conditions under which widows widows lived in the Sangam period..

by shivayadav.

said...

Dear author,
Please read the sentence as Kovalan by the Pandian King, Nedunchezhian.Request you to
delete the line 'she declares
......widow's life'.

shivayadav

said...

Om Siva ..Dear brother well. please make corrections in my writings..i will going to post this
article in thulasidhalam.blogspot.com only after getting ur correction..


Dear author,
Your chapter on ''engiruntho vanthan'' is very interesting. The evocative quotes on the conditions of widows in that place are indeed heart rending; widows forced into asylums for their daily bread is pitiable indeed.


It seems prior to the Sangam period, widows re-marrying her husband's brother was quite the norm...in the case where no brother of the husband was available, the widow was permitted to marry outside of the husband's family. in other words, she was still regarded in a dignified manner by society.


The advent of Buddhism in the 6th century seems to have changed this.Widows were not allowed to re-marry. The asylum (pally) practice seems to have come into vogue during this period. We see in the Silapathikaram that one Madhavi, the lover of Kovalan who was wrongly killed by the Pandian king, Nedunchezihan, for gold anklets theft, became a Buddhist nun, after the death of her love husband; she declares that she didn't want to lead a widow's life. in other words, she would have greater dignity as a sannyasini than as a widow.
''பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
கடையிடைக் கிடைத்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கொட் டீமம்
நுமக்கரி தாகுக தல்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்தென வரும்பற
வள்ளித ழவிழ்த்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே''...
In the Purananooru a widow, Perungkopendu, had attempted immolation at the funeral pyre of her husband..and she speaks about the capricious state of the widows. From this we learn about the pathetic conditions widows were subjected to: they were denied ghee in their foods, and instead their foods were cooked with a white gingelly paste; they had to sleep on the bare floor without any mat, etc.


Through the important texts from the Sangam period we have become familiar with the conditions under which widows widows lived in the Sangam period..

by shivayadav.

said...

Dear author,
Your chapter on ''engiruntho vanthan'' is very interesting. The amazing quotes of various aspects of the conditions of widows in that place are heart rending; the feeling of pity for the widows forced into asylums for their daily bread is pitiable indeed.


It seems prior to the Sangam period, widows re-marrying her husband's brother was the norm...in the case where no brother of the husband was available, she was permitted to marry outside of the husband's family.

The advent of Buddhism in the 6th century changed this.Widows were not allowed to re-marry. The asylum (pally) practice seems to have come into vogue during this period. We see in the Silapathikaram that one Madhavi, a devout Buddhist turned monkish, after the assassination of her love husband kovalan by the pandian king, Nedunchezihan, she declares in the king's court that she didn't want to lead a widow's life.
புறநானூறு 246
பாடியவர் : பூதபாண்டியன் பொஞ்சாதி பெருங்கோப்பெண்டு

பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
கடையிடைக் கிடைத்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கொட் டீமம்
நுமக்கரி தாகுக தல்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்தென வரும்பற
வள்ளித ழவிழ்த்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே


In the Purananooru that one widow, Perungkopendu, had attempted immolation at the funeral pyre of her husband..and she speaks about the capricious state widows. From this we learn about the pathetic conditions under which widows lived..where widows were denied ghee in their foods, and instead their foods were cooked with a white gingelly paste; they had to sleep on the bare floor without any mat, etc.


Thus we are familiar with the conditions under which widows widows lived in the Sangam period..

by shivayadav.

said...

Dear author,
Your chapter on ''engiruntho vanthan'' is very interesting. The amazing quotes of various aspects of the conditions of widows in that place are heart rending; the feeling of pity for the widows forced into asylums for their daily bread is pitiable indeed.


It seems prior to the Sangam period, widows re-marrying her husband's brother was the norm...in the case where no brother of the husband was available, she was permitted to marry outside of the husband's family.

The advent of Buddhism in the 6th century changed this.Widows were not allowed to re-marry. The asylum (pally) practice seems to have come into vogue during this period. We see in the Silapathikaram that one Madhavi, a devout Buddhist turned monkish, after the assassination of her love husband kovalan by the pandian king, Nedunchezihan, she declares in the king's court that she didn't want to lead a widow's life.In the Purananooru that one widow, Perungkopendu, had attempted immolation at the funeral pyre of her husband..and she speaks about the capricious state widows...புறநானூறு 246
பாடியவர் : பூதபாண்டியன் பொஞ்சாதி பெருங்கோப்பெண்டு

பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
கடையிடைக் கிடைத்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கொட் டீமம்
நுமக்கரி தாகுக தல்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்தென வரும்பற
வள்ளித ழவிழ்த்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே
From this we learn about the pathetic conditions under which widows lived..where widows were denied ghee in their foods, and instead their foods were cooked with a white gingelly paste; they had to sleep on the bare floor without any mat, etc.


Thus we are familiar with the conditions under which widows widows lived in the Sangam period..

by shivayadav.

said...

வாங்க ஷன்முகம்.

புறநானூறு பாடல் எடுத்துப்போட்டதுக்கு மிகவும் நன்றி.

கைம்பெண்கள் நிலையை நினைச்சால் வருத்தமாகத்தான் இருக்கு.

ஒரு சிலரைத்தவிர அனைவரும் சொந்தங்களால் ஒரு வகையில் ஏமாற்றப்பட்டவர்கள்:(

கண்ணீர்கதைகள்தான்.

பணம் என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமுன்னு இவுங்க கதைகள் உணர்த்துது.

said...

மாயக் கண்ணன்(கள்)......

said...

வாங்க மாதேவி.

அதே அதே!!!!!

said...


எங்கிருந்தோ வந்தானில் வரும் இடம் எது.?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

//கோக்குல் மதுரான்னு ஒரு போர்டு.//

பதிவில் இப்படி எழுதி இருந்தேனே!

இது கோகுலம், கண்ணன் வளர்ந்த யசோதா, நந்த கோபன் வீடு.

தொடராப் படிச்சாத்தான் புரியும், இல்லே?