Monday, October 26, 2009

பதினாயிரம் கோவில்கள் = ?

தீபாவளிக் கொண்டாட்டத்தில் நாலாம் நாளா, இன்னிக்குக் கோவர்தன பூஜை. நம்மூர்லே(?) இருந்துருந்தால், நம்ம 'ஹரே க்ருஷ்ணா'வில் கன்னுக்குட்டிகளுடன் கொண்டாடி இருப்போம். அது இங்கேயும் வாய்ச்சது.
கலைமகள் (குடி இருக்கும்) கோவிலுக்குப் போனோம். பேய் மழையில் இருந்து தன் மக்களைக் காப்பாற்றக் குன்றைக் குடையாகப் பிடித்தான். இப்போக் கலி காலமாம். எதிர்பாராத நிகழ்வுகளில் அவனே நேரில் வரமுடியாதாம். சம்பவம் நடப்பது நடந்து முடிஞ்சாலும் பின்விளைவுகளிலாவது உதவிக்கு யாராவது வந்தால் நல்லா இருக்குமே.... அப்படி வந்த உதவிகளில் இதுவும் ஒன்னு.

"அக்கா, ஊருக்கு வரும்போது கட்டாயம் வந்து பாருங்க"ன்னு பலமுறை அழைச்சாலும் வாய்க்கும்போதுதானே வாய்க்கும். நியூஸித் தோழி ஒருத்தர் விடுமுறைக்கு வந்துருக்காங்க. சேர்ந்தே போகலாமுன்னு கிளம்பினோம். தோழியின் கூட அவுங்களோட ரெண்டு அக்காக்களும் தம்பியுமா நாலுபேர்.

கிழக்குக் கடற்கரைச்சாலையில் இன்னைக்கும் பயணம். மகாபலிபுரத்தைக் கடந்து கல்ப்பாக்கம் அணுபுரமும் தாண்டி புதுப்பட்டினம். மெயின் ரோடில் எங்களுக்காகக் காத்திருந்து, வழிகாட்டிக் கூட்டிப்போனார் சந்தோஷ். கிழக்கு நோக்கிக் கொஞ்சம் உள்ளே போகவேண்டி இருக்கு. சுத்திவர சுநாமிக் குடியிருப்பு. நடுவில் அட்டகாசமா கம்பீரமா நிக்குது இந்தப் பள்ளிக்கூடம். வர்ற நவம்பர் வந்தால் ரெண்டு வயசு இந்தக் கட்டிடத்துக்கு.

வாசலில் மழலையர் நின்னு வரவேற்பு. அழகானக் கோழிக்கொண்டைப் பூக்களைக் கொடுத்துச்சுங்க. பள்ளித் தலைமை ஆசிரியர் நம்ம நளினி, முதலில் பாலர் வகுப்புக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.

முப்பத்தியெட்டுப் பிஞ்சுகள். பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் செய்யும் முதல் வேலை பல் தேய்ச்சுக்கரதுதான். சின்னதா ஒரு பல் தேய்க்கும் ப்ரஷ், சீப்பு, குட்டியா ஒரு டவல் எல்லாம் அடங்கிய பெட்டி ஒன்னு ஒவ்வொரு குழந்தையின் பேரோடு தனித்தனியா இருக்கு. மாண்டிஸோரி முறையில் கல்வி. ரெண்டு பகுதியா பிரிச்சு ரெண்டு அறைகளில் . ஒரு வகுப்பு விளையாட்டாகவே பொம்மை, கட்டைகள், புதிர்களில் பாடம் கத்துக்கும்போது இன்னொரு பிரிவு படம் வரைதல், வண்ணம் தீட்டுதல்னு மனசுக்குத் தோணியதைச் சின்னக் கைகளால் செஞ்சுக்கிட்டு இருக்கு.

ப்ரி கே. ஜிக்கு அடுத்துள்ள வகுப்பு கே ஜி. அங்கே எண்ணும் எழுத்தும் முக்கியம். ரெண்டு பிரிவாப் பிரிச்சு வட்டமா உக்காரவச்சு ரெண்டு ஆசிரியைகள் சொல்லிக் கொடுக்கறாங்க. எல்லாம் கண் வழியேதான். நாலு பேனாவை வச்சுக்கிட்டு எத்தனைன்னு கேட்டதும் அப்படியே எண்ணிச் சொல்லுதுங்க. அதுலே ஒரு பேனாவை எடுத்துட்டால்? மறுபடி யோசிச்சு எண்ணனும்.
இன்னொரு வட்டம், எழுத்தின் உச்சரிப்பு. எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு அந்த டீச்சரை. நான் பார்த்தப்ப ' h' என்ற எழுத்தைக் காட்டி, நெஞ்சில் கை வச்சு 'ஹ' ஹ'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இது ஏ, இது பி ன்னு சொல்லிக்கிட்டு இருக்காம அந்தந்த எழுத்தைக் காட்டி அதை எப்படி உச்சரிக்கணுமுன்னு ..... எந்த ஒரு அட்டையைக் காமிச்சாலும் குழந்தைகள் கவனிச்சுப் பார்த்துச் சரியா உச்சரிக்குதுங்க.

இந்த ரெண்டு வகுப்பிலும் காலணி போட்டு உள்ளே வர அனுமதி இல்லை. காரணம்? குழந்தைகள் தரையிலே உக்காருவதுதான்! யு கே ஜியில் ஆரம்பிச்சு எல்லா வகுப்பறைகளிலும் கணினி ஒன்னு வச்சுருக்காங்க.
டீச்சர் போட்டக் கணக்கைச் சீக்கிரமா முடிச்சுக் கொடுத்த மாணவி, கணினியில் கூட்டல் கணக்குப் போட்டுப் பார்த்துக்கிட்டு இருந்தாள். சரியான விடையைத் தட்டுனதும் 'யூ ஆர் கரெக்ட்' ன்னு கணினி, தட்டிக்கொடுக்குது:-)

பள்ளிக்கூடத்துக்கான சகல புத்தகங்களும் வகுப்பறைகளில் பயன்படுத்தும் சி.டி.களும், (இன்னும் பாட்டு, கதை, கணக்கு, ஸ்பெல்லிங், இப்படி எல்லாத்துக்குமே சி.டி.கள் ) 'COMPUGEN' என்ற கம்ப்யூட்டர் கம்பெனி ஒன்னு தயாரிச்சு விக்குதாம் அங்கே இருந்து வாங்கி இருக்காங்க.
பள்ளிக்கூடத்துலே நாலாப்பு வரை மட்டும்தான் இப்போ. சுநாமி சம்பவத்துக்குப் பின் இங்கே பார்வையிட வந்த ஹோப் பவுண்டேஷன் கவனிச்சது..... பெரியவங்க எல்லாம் அவுங்கவுங்க வேலைகளில் மூழ்கி இருக்க இந்தப் பிள்ளைகள் மட்டும் செய்வதறியாது இங்கேயும் அங்கேயும் ஓடிப் பொழுதை வெத்தாக் கழிச்சுக்கிட்டு இருந்ததைத்தான்.
நாலாப்புக் குழந்தைகளில் முக்கால்வாசிப்பேர் 'சம்பவத்தில்' பெற்றோரைப் பறி கொடுத்தவர்கள். ஆனால் ஒன்னு..... யாருமே அநாதைகளாத் திரியலையாம். இந்த மீன்பிடிக் கிராமத்து மக்கள் தங்கள் பிள்ளைகளோடு பிள்ளைகளா இவர்களை ஏத்துக்கிட்டாங்க. சொந்தக்காரர் இருந்தால் அவர்களும்.

ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து, அந்தப் பிள்ளைகளை வச்சுத் தொடங்குன பள்ளிக்கூடம், இன்னிக்குப் பக்காவானக் கட்டிடத்தில் நிக்குது. வெளிச்சமான வகுப்பறைகளுடன் அருமையான, காற்றோட்டமான கட்டிடம். இந்த நவம்பர் வந்தால் ரெண்டு வருசமாகப்போகுது. பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு செடி நட்டுப் பராமரிக்கிறாங்க. வாழை மரங்கள் கூட இருக்கு. பள்ளிக்கூடத்துக்குன்னே ஒரு நாய் கூட இருக்கார்:-))))
தனியா ஒரு அறையில் பத்துப்பதினைஞ்சு கணினிகள் வச்சுருக்காங்க. அங்கேயும் பிள்ளைகள் கணினியைப் பயன்படுத்தக் கத்துக்குதுங்க.
மகேஸ்வரி இவுங்கதான்.

ஆசிரியைகள் அன்போடு சொல்லித் தர்றாங்க. சிலர் தன்னார்வத் தொண்டர்கள். சிலருக்குச் சம்பளம் உண்டு. ( அப்படி ஒன்னும் ரொம்ப இருக்கச் சான்ஸ் இல்லை) மஹேஸ்வரின்னு ஒரு பள்ளிக்கூட ஊழியர். இவுங்க இல்லைன்னா....அவ்ளோதானாம்! அப்படி ஒரு கவனம்.

நம்ம நளினியின் கணவர் சந்தோஷ், பள்ளிக்கூடச் செலவுகளுக்காகும் தொகையைத் திரட்டுவதில் எந்நேரமும் ஓடியாடிக்கிட்டு இருக்கார். இந்தப் பள்ளிக்கூடத்துக்கு அரசாங்க உதவி ஒன்னும் கிடைக்கறதில்லையாம். சுநாமி சம்பவத்துக்குப் பின் ஒரு வருசம் மட்டுமே ஏதோ கொஞ்சம் உதவி செஞ்சதுதானாம். இவுங்க ரெண்டு பேரும்தான் முந்தி ஹோப் ஹோமைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க

நம்ம ஹோப் பவுண்டேஷன் பிள்ளைகள் எல்லாம் தாம்பரத்தில் இருக்காங்கன்னு சொல்லி இருக்கேன் முந்தி. இப்போ போன வருசக் கடைசியில் ஹோப் ஹோம் கட்டக் கொஞ்சம் நிலம் வாங்கி ( மேல்மருவத்துர் பக்கம். சென்னைக்கு அருகில்னு சொல்வாங்க:-) அங்கே ஒரு கட்டிடம் கட்டத் துவங்கி இந்த வருசம் 2009 ஆகஸ்ட் முதல் அங்கே இடம் மாறிட்டாங்க.

இப்போ அங்கேயும் இங்கேயுமுன்னு செலவைச் சமாளிக்க முடியலை. அதனால் பள்ளிக்கூடத்துக்கு நீங்களே முடிஞ்சவரையில் கொஞ்சம் நிதி நிலையைப் பார்த்துக்குங்க என்ற அளவில் வந்துருக்கு. போனவருசம் வரை இலவசக் கல்வியா இருந்ததாம். இப்போ மாசம் அம்பது ரூபாய் கொடுக்கச் சொல்லிப் பெற்றோர்களைக் கேக்கறாங்க.

அம்பதுன்றது கணக்குப் பார்த்தால் ஒன்னும் இல்லைதான். ஆனால் ஒரு சிலர் மட்டுமே கொடுக்கறாங்க. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இப்போதும் கல்வி இலவசம்தான். மற்றவர்களிடம் எப்படி விளக்குவதுன்ற கவலை தலைமை ஆசிரியைக்கு......."என்ன செய்யலாம்க்கா? நீங்க ஐடியா தாங்கக்கா"

இதுக்கிடையில் இவுங்க சொன்ன ஒரு தகவல், பிள்ளைகள் படிப்பு விவரமாப் பேசப் பெற்றோர்களைப் பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லி அனுப்புனா, எப்பவுமே தாய்மார்கள் மட்டுமே வருவாங்களாம். தகப்பன்கள் மறந்தும் இங்கே ஒதுங்குவதில்லை! அவுங்களுக்குத்தான் டாஸ்மாக் இருக்கே(-:

நம்முடைய மேலான ஆலோசனைகளை இப்போச் சொல்லலைன்னா வேற எப்போச் சொல்ல முடியும்?

"ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைஞ்ச ஒரு சங்கம் அமைச்சு அதில் சில தாய்மார்களையும் அங்கத்தினராச் சேர்த்துக்குங்க. கொஞ்சம் படிச்ச அம்மாக்கள் கட்டாயம் இருப்பாங்க இந்த மீனவர் கிராமத்தில். அவுங்ககிட்டேப் பள்ளிக்கூட வரவு செலவை விவாதிச்சு, என்ன செய்யலாம் ஏது செய்யலாமுன்னு ஆலோசனை கேக்கணும். அவுங்க போய் மற்ற தாய்களிடம் எடுத்துச் சொன்னால் கொஞ்சம் புரிஞ்சுக்குவாங்க. வாரம் பத்து பதினைஞ்சு ரூபாய்ன்னுகூட கொடுக்கலாம். புள்ளைங்க படிச்சு நல்லா ஆகணும் என்ற ஆசை தாய்களுக்கு அதிகம்."

ஹோப் நடத்தும் பள்ளி என்றதால் வெளிநாட்டுலே இருந்து ஏராளமா நிதி உதவி வருதுன்னு பலர் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. பல நிறுவனங்களுக்கு இப்படி நிதி வருதுன்றது வேற விஷயம். ஆனா இதைப் பொறுத்தவரை ஹெச் ஐ வி பாஸிடிவ் இருக்கும் பிள்ளைகளுக்கு மருந்துச் செலவு கூடுதல். அதுலே சுணக்கம் பண்ண முடியாது. இதில்லாமல் உணவு உடைன்னு செலவு வந்துக்கிட்டுத்தானே இருக்கு?

பிள்ளைகள் நம்மைப் பார்த்தவுடன் காகிதத்தில் பொம்மை, படங்கள்ன்னு வரைஞ்சு கொண்டுவந்து நீட்டறாங்க. நாம் செய்யவேண்டியதெல்லாம் கொஞ்சம் அன்பை அவர்களுக்குக் கொடுப்பதுதான். கூடவே இந்தப் பள்ளிக்குக் கொஞ்சம் பொருளுதவி செய்ய முடிஞ்சால் ரொம்ப நல்லது.
பள்ளிக்கூடத்துலே புதுசா கழிவறைகள் கட்டிவச்சுருக்காங்க. சுநாமி வீடுகளிலும் சின்னதா ஒரு இடம் கழிப்பறைக்குன்னு வச்சுருந்தாலும் அநேகமா எல்லோருமே அந்த இடத்தையும் புழங்க வச்சுக்கிட்டு, வழக்கம்போல் கடற்கரைகளிலேயே எல்லாத்தையும் முடிச்சுக்கறாங்களாம். அவுங்களைத் திருத்தும் ஆயுதமா இப்பப் பிள்ளைகள்தான் இருக்கு. பிள்ளைகளுக்குக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்ததும், அவர்கள் போய் பெற்றோர்களிடம், 'வெளியிடங்களில் போக முடியாது. கழிப்பிடத்துலேதான் போவேன் போகணுமுன்னு' வற்புறுத்துவதால் கொஞ்சம் இந்தப் பழக்கங்கள் மாற ஆரம்பிச்சுருக்குன்னு தகவல் கிடைச்சது.

பள்ளிக்கூடத்தில் தரமான கல்வி கிடைக்குதுன்றதால் இப்போ மீனவர் கிராமம் தவிர வெளியே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவங்க பிள்ளைகளை இங்கே சேர்க்க விருப்பப்பட்டுக் கேக்கறாங்களாம். மீனவர் குடியிருப்பு மக்களுக்குப் போகச் சில இடங்கள் இருந்தால் அவர்களையும் சேர்த்துக்கலாமுன்னு இப்போ எண்ணம் வந்துருக்கு. எப்படி ஆனாலும் ஒரு ஆசிரியருக்கு இருபத்தியஞ்சுக்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை கூடாதுன்ற முடிவும் இருக்கு.

"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று முண்டாசு அன்றே சொல்லி வச்சது உண்மைதான்.



நம் பதிவுலக நண்பர்கள் யாராவது அந்தப் பக்கம் போகும்போது, இங்கேயும் ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வாங்க.. விருப்பம் இருப்பவர்களுக்கு சந்தோஷின் தொலைபேசி எண்ணை அனுப்பி வைக்கிறேன்.

இதெல்லாம் பார்த்து முடிக்கும்போதே ஒன்னேகால் ஆகிருச்சு. பகல் உணவு எங்களுக்காகத் தலமை ஆசிரியர் வீட்டில். புதுப்பட்டினம் என்ற கிராமம். இவுங்க குடி இருக்கும் வீட்டின் ஓனர்தான் கல்பாக்கம் அணு மின்நிலைய இடத்துக்கும் ஒருசமயம் சொந்தக்காரரா இருந்தாராம். ஓனர் வீட்டு மாடியில்தான் நளினியும் சந்தோஷும் தங்கள் மூன்று மக்களுடன் வசிக்கிறாங்க.

அங்கே போய்ச் சேர்ந்தால் எனக்கொரு இன்ப அதிர்ச்சி. சுமதியும் ஜானும் ஓனரின் குழந்தைகள். ஜானுக்கு என்னைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுருச்சு(எனக்கும்தான்) என் துப்பட்டாவைப் பிடிச்சுக்கிட்டு விடவே இல்லை. பிறந்து 20 நாளே ஆன பிஞ்சு. அம்மா எங்கேன்னு கேட்டேன். பஜார்லே இருக்காளாம்!

சுமதிக்கு ரெண்டரை வயசு. ஒய்யாரம் ஜாஸ்தி. போறதும் வாரதுமா இருந்தாள். வீட்டுக்கார அம்மா, ஒருநாள் வந்து அவுங்களோடு தங்கணுமுன்னு எனக்கு அழைப்பு வச்சுருக்காங்க. போகத்தான் வேணும், ஜானுக்காகவாவது:-))))
லிட்டில் ஜான்

படங்கள் கொஞ்சம் எடுத்ததுலே நம்ம கோவியாருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு. வீட்டு வாசல் நிலை!

ஆல்பம் இங்கே:-)

19 comments:

said...

//யாருமே அநாதைகளாத் திரியலையாம். இந்த மீன்பிடிக் கிராமத்து மக்கள் தங்கள் பிள்ளைகளோடு பிள்ளைகளா இவர்களை ஏத்துக்கிட்டாங்க. //

இன்னும் மனிதம் இருக்கத்தான் செய்கிறது.....நல்லாப் பதிவு...

said...

நன்றி மேடம்...

கண்டிப்பாய் பார்த்துவரவேண்டும். ஊருக்கு செல்லும்போது தொடர்பு கொள்கிறேன்... உண்மையில் பள்ளிதான் கோவில்...

மிக நல்ல பதிவு.

பிரபாகர்.

Anonymous said...

சென்னை போனா கண்டிப்பா பாத்துட்டு வர்றேன். நன்கொடை எப்படி தருவது போன்ற விவரங்களை பதிவில் தந்திருக்கலாமே டீச்சர்.

said...

நல்ல பதிவு டீச்சர். சுனாமி அடித்த தினம் நானும் இந்த சதுரங்கப் பட்டின கடற்கரையில்தான் இருந்தேன். கடலில் இரு பர்லாங் தூரத்தில் இருந்த நான் எனக்கு சில மீட்டர் தூரம் வரை வந்து போனது கடல் அலைகள். என் அண்ணாவின் அனுமின் நிலைய வீட்டின் பின்புறம் வரை வந்து சென்றன கோர அலைகள். அன்று நான் கண்ட காட்சிகள் மிக பயங்கரம். இதை எழுதும்போது கூட என் கை நடுங்க, நெஞ்சு நெக்குகின்றது. விரைவில் புதுப்பட்டினம், சதுரங்கப் பட்டினம் சுனாமிப் பதிவு எழுதுவேன். சுனாமி அடித்த பின் ஒரு பள்ளி சிறுமி எடுத்த சீ டி யும் என்னிடம் உள்ளது.

அப்புறம் அங்க சதுரங்கப் பட்டினத்தில் கிரிவரதர் என்னும் வரதுவைப் பார்க்கலையா?. அங்க தலையின் மீது வாலை வைத்துருக்கும் ஆஞ்சி விக்கிரமும் உள்ளது. திருவட்டீஸ்வரர் என்னும் அற்புதமான சக்தியுள்ள ஸ்தலமும் உள்ளது. அங்க இருந்து கொஞ்ச தூரத்தில் கூவத்தூர் பொருமாள் கோவிலும் உள்ளது. இந்த பகுதியில் மொத்தம் 7 கோவில்கள் உள்ளன. அனைத்தும் நாயக்க மன்னர்கள் கால கோவில்கள். மீண்டும் சென்றால் பார்க்கவும். நன்றி.

said...

எத்தனை அழகாக் கட்டி இருக்காங்க துளசி.
எப்படியாவது உதவணும்.

ஹோப் ஃபவுண்டேஷனுக்கும் சந்தோஷ் தமபதியருக்கும் னன்றி.
பித்தனின் வாக்கு சீக்கிரம் பதிவு போடுங்க,.
எங்க பெற்றோரும் சட்ராஸ்ல நாலு வருஷம் இருந்தாங்க. அந்தக் கடற்கரையொட்டியே ஒரு இருநூறு கஜம் தூரத்தில் வரிசை வீடுகள்.

said...

\\விவரங்களை பதிவில் தந்திருக்கலாமே டீச்சர்.\\\

விபரங்களை பதிவிலே அல்லது தனியாகவே கொடுங்கள் டீச்சர் முடிந்ததை செய்வோம் ;)

நல்ல பதிவு ;)

said...

இன்னும் நல்ல மனிதர்களும் மனிதமும் வாழ்வதற்கு ஒரு உதாரணம்.நிறைவாய் எழுதியிருக்கீங்க துளசி.

said...

எழுத்து என்பது முதலில் சிந்தனை. பிறகு நல்ல சிந்தனை. தொடர்ச்சியாக வருவது உங்களைப் போன்ற மனிதாபிமானத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்று புரிகிறது. புகைப்படம் கைபேசியின் மூலமாகவா இல்லை தனிப்பட்ட புகைப்பட கருவி மூலமாகவா? மிகத் தெளிவு? சென்னைக்கும் திருப்பூருக்கும் வெறுமனே 400 கிமீ என்று தான் நினைத்து இருந்தேன். ஆனால் வந்த மின் அஞ்சலுக்கு பதில் ஏதும் வராத பின் காரணங்கள் உண்டா?

said...

வாங்க புலவன் புலிகேசி.

முதல் வருகையா?

நலமா?

மனிதம் இன்னும் மிச்சம் அங்கங்கே நிறையவே இருக்கு. கண்ணுலே படறதுதான் கஷ்டமாப் போச்சு!

said...

வாங்க பிரபாகர்.

வரும்போது தகவல் சொல்லிருங்க. போயிட்டு வரலாம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

உதவணுமுன்னு நினைக்கறவங்க தொடர்பு கொண்டால் சொல்லலாமுன்னு இருக்கேன்ப்பா.

வற்புறுத்தி உதவச் சொல்வது போல் ஆகிருமுன்னுதான் ஒன்னும் சொல்லலை.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ந்ன்னைத் தவிர என்கூட வந்தவர்கள் எல்லோருமே வேற மதத்தைச் சேர்ந்தவர்கள். அதுவுமில்லாம கோயில் போறதெல்லாம் இந்தப் பயணத்தில் வச்சுக்கலை. அதான் பள்ளிக்கோவிலைப் பார்த்துட்டமே!

said...

வாங்க வல்லி.

சந்தோஷ் & நளினி நல்ல வேலையில் இருந்தாங்கப்பா பெங்களூரில். அதை விட்டுட்டுத்தான் இப்படி சேவை செய்யறாங்க.

அந்தப் பக்குவம் எனக்கில்லையேப்பா(-:

said...

வாங்க கோபி.

தனிமடலில் விவரம் அனுப்பவா?


சந்தோஷின் தொலைபேசி எண் தர்றேன். நீங்களே பேசிக்கலாம்.

said...

வாங்க ஹேமா.

நல்லவங்க இருக்கப்போய்த்தான் உலகம் இன்னும் நடக்குது.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜோதிஜி.

என்ன, மடல் அனுப்புனீங்களா?

ஒன்னும் வரலையேங்க(-:

கஷ்டம் இல்லைன்னா இன்னொருக்கா அதைத் திருப்பி அனுப்புங்க ப்ளீஸ்.

said...

திரு.சந்தோஷ் அவர்களின் தொலைபேசி எண் கொடுக்கமுடியுமா? என் மின்னஞ்சல் haran13@gmail.com.

அன்புடன்
ஹரன்

said...

பாத்தீங்களா இங்கே ஏற்கனவே நான் வந்துள்ளேன். புலிகேசி சொன்னது போல் இன்னமும் எனக்கு மனிதம் மேல் நம்பிக்கை நிறைய உள்ளது.

said...

வாங்க ஜோதிஜி.

எனக்கும்தான்!