Tuesday, October 06, 2009

பட்டுக்குரலும் புள்ளிமான் குட்டியும்

" பட்டுப்பொடவை மாதிரிப் பட்டுக்குரல்"

ஓ எஸ். சொன்னது சரின்னுதான் சொல்லத் தோணுச்சு.' சக்தி மசாலா, கரூர் வைஸ்யா பேங்க்'ன்னு விளம்பரங்களில் எல்லாம் குரல் கொடுத்துருக்காங்களாம். பன்முகங்களில் ஒரு முகம் டிவி சீரியலில் கூடக் காட்சி கொடுத்துருக்கு, அதுவும் பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் கையளவு மனசு. ஹிந்தியையும் விட்டுவைக்கலை. 'சோட்டி ஸி ஆசா'ன்னு ஒரு சீரியல். ஆறு மொழிகளில் பாடுறாங்களாம். அதெல்லாம் கூட விட்டுறலாம்....... முக்கியமாச் சொல்ல வேண்டியது சுதா ரகுநாதனின் சிஷ்யை. சமஸ்கிரதத்தில் எம்.ஏ. பி.டெக் முடிச்சு ஈஷ்வர் எஞ்சிநீயரிங்லே வேலை. கட்டியங்கூறுனவர் ஓ எஸ் அருண்.
இடம் பாரதீய வித்யாபவன் ஹால். திரை உசந்தது. தீபிகா. 'சிக்'ன்னு சின்னப் பொண்ணு. பக்க வாத்யங்கள் கன்யாகுமாரியின் சீடப்பிள்ளையும் காரைக்குடி மணியின் சீடப்பிள்ளையும். ராஜீவ் வயலின் & மணிகண்டன் மிருதங்கம். எலெட்ரானிக் சுருதிப்பெட்டி முன்னால் வச்சுருந்தாலும் கீதா வரதராஜன் தம்பூரா.
நவராத்ரி கடைசி நாள். பொருத்தமான முதல் பாட்டு ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே. அப்புறம் சிலபல பாடல்கள். தமிழ்ப்பாட்டு இன்னும் வரலையேன்னுச் சின்னதா ஒரு தவிப்பு. 'என்னை நீ மறவாதே...அங்கயற்கண்ணி' அருமை.

ஜிஎன்பிக்கு இது நூற்றாண்டு விழா. குருபரம்பரையில் கணக்குச் சொல்லணுமுன்னா எம் எல் வி, சுதா, தீபிகா இப்படி வரிசை போகுது.அவர் எத்தனையோ பாடல்கள் இயற்றி இருக்கார். அதுலே ஒன்னு பாடப்போறேன்னு சொல்லி 'ஸ்ரீசரணாம்புஜ' பாடுனாங்க. மங்களம் பாடுமுன் ஒரு அஷ்டபதி. தோழியிடம் சொல்வதுபோல் 'சகி' ன்னு ஆரம்பம். 'ஜெயதேவர் அஷ்டபதி மாதிரின்னா இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா இன்னும் நன்னா இருக்கும்' நினைவுக்கு வந்து தொலைக்குதே:-)

( ஐயோ என் தமிழ் சினிமாவே)


சென்னையில் யூத் ஃபெஸ்டிவல் (இசை & நடனம்) நடக்குதாம். அதையொட்டி ஆலாபனா ட்ரஸ்ட் நடத்தும் விழா இது. ஏழெட்டுநாட்களா நடந்துக்கிட்டு இருக்கு நாளுக்கு ரெண்டு வீதம். பூதலிங்கம் என்ற பெரியவர் இளைஞர் விழாப் பொறுப்பாளர்களில் ஒரு முக்கியப்புள்ளி.( எங்களுக்கு ரெண்டு சீட் தள்ளி உட்கார்ந்துருந்தார். போறவங்க வாரவுங்க எல்லாம் அவருகிட்டே ரொம்ப பவ்யமா நின்னு பேசுனதைக் கவனிச்சுட்டு, யார் என்னன்னு விவரம் சேகரிச்சேன். இல்லாட்டாதான் தலைக் குடைச்சல் வந்துருமே.... அதுபாருங்க, இளைஞர் அணிக்கு எப்பவுமே இளைஞரேத் தலைவரா இருக்க முடியாது) மணிகண்டா, அருமையா வாசிச்சேப்பா. ராஜீவ், ரொம்ப நல்லா இருந்ததுன்னு, தீபிகா நன்னாப் பாடுனே இப்படிக் கூப்புட்டுச் சொல்லி, ஊக்குவித்துக்கிட்டு இருந்தார். நல்ல ஊக்கம்தான்.

எவ்வளோ பெரிய பாடகர்....பந்தா ஒன்னுமே இல்லாம வளரும் கலைஞர்களைப் புகழ்ந்துதள்ளிக்கிட்டு இருக்கார் நம்ம ஓ.எஸ். அருண். எல்லாம் திரைக்குப்பின்னே! இவர் ஆலாபனா அறக்கட்டளையைச் சேர்ந்தவர். அடுத்த நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன் ஒலி ஒளி எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து, அதைக் கண்ட்ரோல் செய்யும் ஆட்களுடன் சேர்ந்து அமர்ந்து எல்லாத்தையும் ஒருமுறை சோதிச்சுட்டு மைக் பிடிச்சார் அருண்.

ரெண்டு வயசுலே இருந்தே நாட்டியம் கத்துக்க ஆரம்பிச்ச நடனக் கலைஞர் காவ்யலக்ஷ்மி. சுருக்கமாச் சொன்னால் காவ்யா முரளிதரன். நாங்க போனதே இவுங்க பெயரின் பின்பகுதிக்காகத்தான். ரெண்டு வருசமுன்பு நடந்த டிசம்பர் இசைவிழா சீஸனில் ராமாயண நாட்டியம் ஒன்னு மதுரை முரளிதரன் அவர்களின் தயாரிப்பில் பார்த்துட்டு வாயடைஞ்சு போயிருந்தேன். அதெல்லாம் அப்பவே எழுதியாச்சு. விடமுடியுமா? (இங்கே பாருங்க)

முரளிதரனின் மகளாக இருக்கணுமுன்னு அனுமானம். ரொம்பச் சரி. பதிமூணு வயசு இருக்கலாம். முயல் குட்டியும், ஒரு புள்ளிமான் குட்டியும் ஆடுனா எப்படி இருக்கும்? ஹைய்யோ..............துள்ளல், அமெரிக்கை, அழகு, அபிநயம் இப்படி எல்லாமே ஒன்னாச் சேர்ந்து எங்கள் கண்முன்னே ஆடுதேப்பா!!
புஷ்பாஞ்சலியில் ஆரம்பிச்சு, நடனத்துக்கு எடுத்துக்கிட்ட எல்லாப் பாட்டுகளுமேத் தமிழ்ப் பாட்டுகள். ஒவ்வொரு நடனத்துக்கும் முன்னுரையா முரளிதரன் அவர்கள் கொடுத்த விளக்கத்தில் நான் கவனிச்சது அந்த உச்சரிப்பு. துல்லியமா.... சொற்களை எப்படிச் சொல்லணுமோ அப்படி. இப்படி ஒரு திருத்தமான உச்சரிப்பில் தமிழைக் கேட்டே பலவருசங்களாச்சு. இவரும் மதுரைக்காரர்தான்! நட்டுவாங்கமும் இவரேதான். ஹப்பா..... என்ன ஒரு கம்பீரமான குரல்!!!!

பாட்டுகளைப் பாடுன மானஸி ப்ரஸாத் அவர்களைப் பற்றி ஒரே ஒரு சொல்தான் சொல்ல முடியும், அட்டகாசம். எங்கிருந்துதான் இப்படிப் பாடவும் உச்சரிக்கவும் கற்றுக்கொண்டார்களோ? ஏன்னு தெரியலை....என் மனசுலே சடார்னு பட்டது என்னன்னா..... முரளிதரனும் சரி, மானஸியும் சரி. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லை என்பது! (உண்மையா இல்லையான்னு தெரிஞ்சவுங்க வந்து சொல்லுங்கப்பா) டி.எம் எஸ், எம் என் ராஜம் எல்லாம் மனசுக்குள்ளே வந்துட்டுப் போனாங்க.

தமிழ்நாட்டுலே அங்கங்கே பேச்சுகளையும், தெருக்களில் விளம்பரங்கள், தொலைக்காட்சியில் வரும் மக்களின் உச்சரிப்புகள், நிகழ்ச்சிகள் நடக்கும்போது திரையினடியில் ஓடிவரும் விளக்கக் குறிப்புகள் (எ.கா: மகளை பரி கொடுத்தவர்) இப்படிக் கேட்டும் பார்த்தும் தமிள் நல்லாத்தான் வாளுது. வாள்க தமிள்!னு நொந்துபோய் கிடக்கிறேன்(-:

ரசிகப்ரியா, சிவரஞ்சனி, ராகமாலிகா, கதனகுதூகலமுன்னு ராகங்களையும் கண்டசாபு, மிஸ்ரம்ன்னு தாளங்களையும், பதினெட்டு அக்ஷரம், முப்பது அக்ஷரமுன்னு தாளக்கட்டுகள் ஒவ்வொன்னும் விவரிச்சப்ப............ 'ஆ' ன்னு தொறந்த வாயை என்னால் மூட முடியலை.
மகா திரிபுரசுந்தரின்னு ஆரம்பமே வெகுஜோர். கங்கைத்தாயே வணக்கம் னு ஒரு பாட்டும் அதுக்குண்டான அபிநயமும். கார்முகில் வண்ணன் கருநீல வர்ணன் என்ற ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் பாட்டுக்கு (இதுவரைக் கேட்டதே இல்லை) காளிங்கநர்த்தனமும் அப்படியே நம்மை இழுத்துக் கொண்டுபோய் கங்கைக்கரையிலும் கோகுலத்திலும் விட்டுருச்சு.

வயலினில் சுரேஷ் பாபு, மிருதங்கத்தில் கேசவன், வீணைக்கு வி.எல், நாராயணசுவாமி, தபேலா சந்திரஜித், வாய்ப்பாட்டு மானஸி ப்ரஸாத் இப்படி ரொம்பக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்குழு.

காவ்யாவுக்கு ஒரு பதிமூணு பதினாலு வயசு இருந்தாலே அதிகம். களங்கமில்லாத தெய்வீக அழகுள்ள முகம், அதில் மாறாத புன்சிரிப்பு, கவனமாகவும் அதேசமயம் இயல்பாகவும் அலட்டல் இல்லாமலும் ஆடும் பாங்கு. எதைச் சொல்ல எதைவிட? கடைசித் தில்லானாவின்போது மூக்கில் இருந்த நத்து கீழே விழுந்துருச்சு. குழந்தை எங்கே காலில் மிதிச்சுருமோன்னு என் கவலை. நல்லவேளை அப்படி ஒன்னும் நடக்கலை ( இதுக்குத்தான் சினிமா ரொம்பப் பார்க்கக்கூடாதுன்றது) அருண் அவர்கள் நடனத்தைப் பாராட்டிப் பூங்கொத்து கொடுத்தவுடன் அதை வாங்குன கையோடு 'சட்'னு குனிஞ்சு மேடையில் விழுந்துருந்த நத்தை எடுத்ததுகூட நடனத்தின் ஒரு பகுதியாத்தான் எனக்குத் தெரிஞ்சது.

இந்த முத்தைப் பெற்றெடுத்து நடனக்கலையில் சிறந்தவரா ஆக்குன நடனமணிகள் முரளிதரன் சித்ரா தம்பதியினருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்து(க்)களையும் நம்ம துளசிதளத்தின் மூலம் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த அபூர்வ நிகழ்ச்சியைக் காண நமக்கு ஒரு வாய்ப்பும் கொடுத்த ஆலாபனா அறக்கட்டளை அருண் அவர்களுக்கு நம் நன்றி. ( ஓ.எஸ்.ன்னு நீங்க சொல்றது எனக்குக் கேக்குது. மைக் எப்போ என் கைக்கு வந்துச்சுன்னு கேக்கப்பிடாது...ஆமாம்)


பலவெளிநாடுகளிலும் நடன நிகழ்ச்சி கொடுத்துருக்காங்க, நம்ம நியூஸி உட்பட. அங்கே கலைஞர்கள் யார் வந்தாலும் ஆக்லாந்து, வெலிங்டனோடுதான். நம்மூரான கிரைஸ்ட்சர்ச்க்கு அபூர்வமா ஒருத்தர், ரெண்டுபேர் வர்றதோடு சரி(-:

எங்கூர்லே கூட்டமே இல்லையே....... அதுதான் எங்களுக்குப் ப்ளஸும் மைனஸும்.



டிஸ்கி: கலை நிகழ்ச்சிகள், கோவில்கள் பற்றித்தான் அதிகமா எழுதப்போறேன். என்னடா.... ஊர்சுத்தறாளேன்னு நினைச்சுக்காதீங்க. முப்பத்தியஞ்சு வருசமா விட்டதைப் பிடிக்கணுமுல்லே? இல்லேன்னாக் கட்டை வேகாது:-)

35 comments:

Anonymous said...

//கையளவு மனசு.//
ஒரு சின்னக்குழந்தை அழகா பாடுமே. அதுவா இந்தப்பொண்ணு !!! நல்ல எதிர்காலம் வாய்க்க வாழ்த்துக்கள்

said...

அருமை ...அருமை .... என்ஜாய் !!!!!.

said...

நல்ல அருமையான கட்டுரை, ஊத்துக்காடு வெங்கிட சுப்பையரின் அந்த பாடலை நானும் கேட்டதில்லை. படங்கள் அருமை.
டீச்சர் நான் திருக்கோவில் தரிசன முறை என்ற பதிவை இட்டுள்ளேன், படித்து தவறு இருந்தால் சொல்லவும், திருத்திக் கொள்கின்றேன்.

said...

சிறப்பு... வாழ்த்துக்கள்.

said...

//" பட்டுப்பொடவை மாதிரிப் பட்டுக்குரல்"//

இந்த புதுமொழி குரல் நல்லாயிருக்குதே டீச்சர்!

said...

//தமிழ்நாட்டுலே அங்கங்கே பேச்சுகளையும், தெருக்களில் விளம்பரங்கள், தொலைக்காட்சியில் வரும் மக்களின் உச்சரிப்புகள், நிகழ்ச்சிகள் நடக்கும்போது திரையினடியில் ஓடிவரும் விளக்கக் குறிப்புகள் (எ.கா: மகளை பரி கொடுத்தவர்) இப்படிக் கேட்டும் பார்த்தும் தமிள் நல்லாத்தான் வாளுது. வாள்க தமிள்!னு நொந்துபோய் கிடக்கிறேன்(-://

நானும் இதற்கான காரண காரியங்களை ரொம்ப நாளா யோசிக்கிறேன்.விடைதான் சரியா வரமாட்டேங்குது.

தமிழ் தாய் மொழி இல்லாமல் தமிழ் நல்லா உச்சரிச்சவங்களில் டி.எம்.சௌந்தர்ராஜன்,எம்.என்.ராஜம்சொன்னீங்க.பி.சுசிலா,பி.பி.சீனிவாஸ்,எஸ்.பி.பி போன்றவர்களை விட்டுட்டீங்களே.

said...

அழகா சொல்லியிருக்கீங்க டீச்சர்....

படங்கள் அனைத்தும் அருமை.

said...

பாடற பொண்ணு அழகா இருக்கணும்னு இலக்கணம் இல்ல. ஆனா இந்தப் பொண்ணு அழகா இருந்துகொண்டு அழகாவும் பாடுகிறதே.
அதே போல இந்த மதுரைப் பொண்ணும் தான்.
கைவண்ணம் கால் வண்ணம் அழகு. உங்களுக்கு இப்படி நல்லதைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பது எனக்கும் மகிழ்ச்சி.

said...

aaga arumiayana thalam ivlo naala enga poi iruntatthu en kannil thattu padave illaiye ,prabakar1982@gmail.com,

www.sathuragiri.ning.com

said...

Enjoy the good days! ! !

Very good coverage.

said...

மேடம் படங்கள் அருமை :-)

said...

வாங்க சின்ன அம்மிணி.
நான் கையளவு மனசு பார்த்ததில்லையேப்பா(-:

நல்ல எதிர்காலம் காத்துருக்குன்றது உண்மைதான்.

said...

வாங்க அது ஒரு கனாக் காலம்.

நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

உங்க வீட்டுக்கு இனிமேல்தான் வரணும்.
கொஞ்சம் வேலை வந்துருச்சு(-:

said...

வாங்க பிரபா.

ஒலிபரப்பாளர் வந்தது ரொம்ப மகிழ்ச்சி.

said...

வாங்க ராஜநடராஜன்.

புதுமொழி சொன்னவர் ஓ.எஸ். அருண்:-)

மத்தவங்க பேர் நினைவில் வராததுக்குக் காரணம், தற்பெருமை வேணாமுன்னுதான்:-)

said...

வாங்க துபாய் ராஜா.

நூறுவிழா நடக்கும்போதும் வகுப்புக்கு மட்டம் போடாமல் வந்துருக்கீங்க?

போனஸ் மார்க் பத்து:-))))

said...

வாங்க வல்லி.

ஏதோ என் முன்னோர்கள் செஞ்ச புண்ணியம் இப்போக் கொஞ்சமாப் பலன் கொடுக்குதுப்பா!!!

said...

வாங்க பிரபாகர்.

முதல் வருகைக்கு நன்றி.
நலமா?

பின்னூட்டங்களைத் தமிழில் தட்டச்சு செஞ்சுருங்க. அனைவருக்கும் எளிதாக இருக்கும்.

said...

வாங்க நன்மனம்.

சென்னைக்கு வந்துட்டு ஒன்னும் செய்யலைன்னு யாரும் நம்மை ஒன்னும் சொல்லிடக்கூடாது பாருங்க....அதான்:-)))))

said...

வாங்க கிரி.

ஏகப்பட்டது எடுத்துத் தள்ளிட்டு அதுலே நாலைஞ்சு தேறுதான்னு தேடறதுதான்.

இன்னும் புதுக்கேமெரா செட்டிங்ஸ் எல்லாம் படிக்கணும்.

said...

\\டிஸ்கி: கலை நிகழ்ச்சிகள், கோவில்கள் பற்றித்தான் அதிகமா எழுதப்போறேன். என்னடா.... ஊர்சுத்தறாளேன்னு நினைச்சுக்காதீங்க. முப்பத்தியஞ்சு வருசமா விட்டதைப் பிடிக்கணுமுல்லே? இல்லேன்னாக் கட்டை வேகாது:-)\\

ஒன்னும் பிரச்சனை இல்லை டீச்சர்..நாங்க இருக்கோம் ;)

said...

/--போறவங்க வாரவுங்க எல்லாம் அவருகிட்டே ரொம்ப பவ்யமா நின்னு பேசுனதைக் கவனிச்சுட்டு, யார் என்னன்னு விவரம் சேகரிச்சேன். இல்லாட்டாதான் தலைக் குடைச்சல் வந்துருமே....--/

இந்த வியாதி உங்களுக்கும் இருக்கா? தொல்சி கோவாலு...

/-- கலை நிகழ்ச்சிகள், கோவில்கள் பற்றித்தான் அதிகமா எழுதப்போறேன். என்னடா.... ஊர்சுத்தறாளேன்னு நினைச்சுக்காதீங்க.--/

உங்களுடைய முயற்ச்சி சிறக்க வாழ்த்துக்கள் தோழி...

/-- முப்பத்தியஞ்சு வருசமா விட்டதைப் பிடிக்கணுமுல்லே? இல்லேன்னாக் கட்டை வேகாது :-) --/

:-)

enathu.payanam@gmail.com - உங்கள் தோழியுடைய பதிவிற்கு செல்ல என்னுடைய மின்னஞ்சல் முகவரி-இல உரலை அனுப்பவும். நன்றி...

said...

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

said...

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். இந்த சீஸனில் தீபிகாவைக் கேட்கிறேன்.

லலிதா ராம்

said...

நான் ஜூலையில் புடிச்சதை டிசம்பரில் வெளியிட்டேன். நல்ல வேளை ரொம்ப பிரபலமாகுமுன் வந்துடுச்சு.

சுடச்சுட பரிமாறுவதில் உங்களை அடிச்சுக்க ஆளேது?

said...

அன்பின் துளசி


புகைப்படம் - எழுத்து - நினைவாற்றல் - இசை பற்றிய அறிவு - எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் - அனுபவித்த அத்தனையும் பகிர வேண்டும் என்ற துடிப்பு - பன்முகம் கொண்ட துளசி

இடுகை அருமை அருமை

நல்வாழ்த்துகள் துளசி

said...

yes, manasi sings well... i played for her and wrote a review for that concert too...

http://rasikas.org/forum/topic7628-concert-of-manasi-prasad-121208.html

said...

முதலில் ஒரு மன்னிப்பு ப்ளீஸ்.

கச்சேரிகளில் 'மூழ்கி' இருந்துட்டு இங்கே பதில் சொல்லக் கோட்டை விட்டுட்டேன்!

said...

வாங்க கோபி.

நீங்க எல்லாம் இருக்கீங்க என்ற துணிவுதான் இப்படி ஆட்டம் போட்டுக்கிட்டே இருக்கேன்:-)

said...

வாங்க கிருஷ்ண பிரபு.

தோழியுடைய வலைப்பக்கத்தை ஏற்கெனவே தனி மடலில் அனுப்பி இருக்கேன்.

said...

வாங்க லலிதா ராம்.

தீபிகாவைப் பற்றி நானானிகூட ஒரு இடுகை போட்டுருக்காங்க

said...

வாங்க நானானி.

ஆறிப்போனாத்தானே ஐஸ்க்ரீமுக்கு அழகு:-)

இப்பத்தான் நம்ம லலிதா ராமுக்கு உங்க இடுகை பற்றிச் சொன்னேன்.

said...

வாங்க சீனா.

ஊர் திரும்பியாச்சா?

said...

வாங்க நாகராஜ்.

மானஸிக்கு குரல் அருமை.

உங்க இடுகையும் பார்த்தேன். சூப்பர் போங்க.

எனக்கு ஞானம் போறாது!