Monday, June 22, 2009

திற்பரப்பும் மகாதேவரும்.........(2009 பயணம் : பகுதி 34)

ரப்பர் எஸ்டேட்டுகள் அடர்த்தியாக் காடா இருக்குது. டிஐ குரூப்க்குச் சொந்தமானதுன்னு கேள்வி. அன்னாசிப் பழப்புதர்களை வழிநெடுகிலும் பார்த்தேன். சுமார் ஒருமணி நேரத்தில் திற்பரப்பு என்னும் இடத்துக்கு வந்தோம். இங்கே இருக்கும் நீர்வீழ்ச்சிபற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும் இன்னிக்கு இங்கே வருவோமுன்னு எதிர்பார்க்கலை. தெரிஞ்சுருந்தா கோபாலுக்காவது ஒரு மாற்றுடை கொண்டுவந்துருக்கலாம். இனிமேல் பயணங்களில் தினப்படி வெளியே போகும்போதும் எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு செட் உடைகளை எடுத்துக் கையோடு கொண்டு போகணும். நாமா சுமக்கிறோம், கார்தானே?
நீர்வீழ்ச்சிக்குப் போக ஒரு சின்னக் கட்டணம். ரெண்டே ரூபாய். கெமெராவுக்கும் அஞ்சு ரூபாய்தான். வீடியோ கெமெரான்னா எழுபத்தியஞ்சு. பூந்தோட்டமா இருக்குமிடத்தில் படிகள் இறங்கிக் கீழே போனால் வலது பக்கம் நீர்வீழ்ச்சி. ரொம்ப ஜோரா இல்லாமச் சுமாராத் தண்ணி விழுந்துக்கிட்டு இருக்கு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனிப் பகுதிகள். அதுக்காகக் கம்பித்தடுப்பு எல்லாம் போட்டு அராஜகமாப் பிரிச்சு வைக்கலை:-) கீழே விழும் தண்ணீர் சின்னதாத் தேங்கி, வழிஞ்சு போகுமிடத்தில் குழந்தைகளுக்கான சிறுவர் பூங்காவும் நீச்சல் குளமும் கட்டி வச்சுருக்காங்க. பசங்க விளையாடும் பார்க் பகுதியில் 'ஆ'வென்று வாய்பிளந்து நிற்கும் யானை. வயிறு வழியாகச் சறுக்கி வரக் குட்டியா ஒரு சறுக்கு மரம்.
புல்வெளியும் பூச்செடிகளுமா நல்லா இருக்கு அந்த இடம். பூங்காவில் உணவு அருந்தாதீர்கள் என்ற அறிவிப்புப் பலகையை 'மதிச்சு', நம்ம சனம் அந்தப் பலகையைச் சுத்தி உக்கார்ந்து சோத்துமூட்டைகளைப் பிரிச்சுச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. மாலை நாலரை மணிக்கு என்ன சோறு வேண்டி இருக்குன்னு நினைச்சாலும் கட்டுச் சோறைப் பார்க்கும்போது கூடப் போய் உக்கார்ந்துக்கலாமான்னு இருந்ததென்னவோ நிஜம்:-)

இளவயதுப் பெண்கள் ஏராளமா வந்து அருவியில் நனைஞ்சபடி இருந்தாங்க.
நாங்க அஞ்சு நிமிஷம் தண்ணீரில் கால் நனைச்சுட்டு படிகளில் ஏறி வெளியே வருமிடத்தில் நிறையக் கடைகள். குளியலுக்குப் பிறகு வவுறு பசிக்குமேன்னு சுடச்சுட பஜ்ஜி போண்டா எல்லாம் போட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க. நம்மாளுக்கு கொஞ்சம் எச்சில் ஊறுது. போனாப்போகட்டுமுன்னு மனசு வந்து ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து அங்கே போனால்........ நம்ம விடியா மூஞ்சிக்கேத்தமாதிரி எல்லாம் வித்துப்போய் இருந்துச்சு. ஆனால் புதுசா மாவைக் கலக்கிப் போட்டுத்தரேன்னு சொன்னதை நம்பி எண்ணி மூணு சொன்னோம். இந்த 'மூணு' கோபாலுக்கு ஆகிவந்த எண். கால் டஜன் ! இதைபத்தி ஒரு 'கதை' இருக்கு. அதை 'அப்புறம் கதைகளில்' சொன்னால் ஆச்சு. காத்திருக்கும் நேரத்தில் வீடியோ எடுத்துத் தரும் ஒரு வியாபாரத்தின் ஏஜெண்ட் ஒருத்தரைப் பார்த்துப் பேசிக்கிட்டு இருந்தேன். எல்லா விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் சகாயவிலையில் படம் புடிச்சுத் தந்துருவாங்களாம்.
பேப்பரில் மடிச்சுக் கிடைச்ச சூடான பஜ்ஜியைச் சுமந்துக்கிட்டு மகாதேவரைப் பார்க்கப் போனோம். திற்பரப்பு மகாதேவர் ஆலயம் ரொம்பப் பழமை மட்டுமில்லாமல் பெருமையும் வாய்ந்தது. குமரி மாவட்டத்தில் இருக்கும் பனிரெண்டு சிவாலயங்களில் ஒன்னு. தட்சனை வதம் செஞ்சபிறகும் கோபம் அடங்காமல் உக்கிரமா இருந்த சிவன் இங்கே வந்து இந்த ஆற்றங்கரையோரம் கோயில் கொண்டார். எப்பவும் சிவன் முகம் நோக்கி உட்கார்ந்துருக்கும் நந்தி தேவர், கோப முகத்தைப் பார்க்கப் பயந்து வேறு திசை நோக்கி உக்கார்ந்துருக்கார் இங்கே. அதானே? சாமியா இருந்தாக்கூடக் கோவமா இருக்கும் மூஞ்சியில் யார் முழிப்பாங்க?

மகாசிவராத்திரியன்னிக்கு இந்த பனிரெண்டு கோயில்களையும் ஒரே நாளில் ஓடி ஓடிப் பார்ப்பாங்களாம். இதுக்கு சிவாலய ஓட்டமுன்னு பெயர். மாரத்தான் ஓட்டமுன்னு வச்சுக்கலாம். எப்படி இந்த வழிபாடு ஆரம்பிச்சதுன்னு தெரியலை. ஆனால் வருசாவருசம் ஓடும் மக்கள் தொகை கூடிக்கிட்டே போய் இந்த வருசம் இருபதாயிரம் பேர் ஓடுனாங்கன்னு ஜெ.மோ.வின் பதிவில் பார்த்த நினைவு.. கோயிலுக்குப் போகும் வழியில் தரையில் ஒரு பாம்பு. தாண்டிப்போனோம்.
இடதுபக்கம் நீர்வீழ்ச்சியின் மேற்பகுதி தெரியுது. இது இயற்கையான நீர்வீழ்ச்சி இல்லையோன்னு ஒரு சம்சயம் ஆரம்பிச்சது அப்போதான். சின்ன ஆறாக வரும் தண்ணீர் பாறைகளின் மேல்பரவி நேராகப் போகாமல் ஓவர்ஃப்ளோ ஆகி தண்ணீர் வெளியே விழுவது போல அமைப்பு. நேராப் போகவிடாமல் கற்களால் தடுத்துவிட்டதுபோலத் தெரியுது. படத்தைப் பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க. மழைக்காலங்களில் ஆற்றில் அதிகத் தண்ணீர் வரும்போது கல்படியைத் தாண்டி அந்தப் பக்கம் போகுமோ?

வலது பக்கம் இருக்கும் கோவிலுக்குப் போனால் கோவிலின் முன் வாசலுக்கு முன்னால் நதிக்கரையில் இருந்து நதியின் நடுவே இருக்கும் நீராழிமண்டபத்துக்கு நடைபாதை போட்டுருக்கு. விழா நாட்களில் ஸ்வாமியை அலங்கரிச்சு அந்த மண்டபத்தில் கொண்டு வைக்க அமைச்சிருப்பாங்களோ?

ஆனால் இப்போ அதுக்கு வேற உபயோகம் கண்டுபிடிச்சாச்சு. புதுமணத் தம்பதிகள் கலியாணம் முடிஞ்ச கையோடு குலதெய்வம் கோவில்களுக்கோ , இல்லை அந்த ஊரில் இருக்கும் கோவிலுக்கோ போய்க் கும்பிட்டு வருவாங்க இல்லையா? இப்போ அதுங்கூடவே ஒரு வீடியோ ஷூட்டிங் வச்சுக்கறாங்க. கலியாணத்தைப் புரோகிதர் நடத்துன காலம் மாறி இப்போவெல்லாம் வீடியோக்காரர் சொற்படிக்குத்தான் எல்லாமே நடக்குது. அதன்படி மணமக்கள் உல்லாசமா இயற்கை அழகை ரசிச்சு கைத்தலம் பற்றிக் கனாக்கண்டு நடப்பதையெல்லாம் வீடியோ எடுக்கறாங்க. டைரக்டர் 'ஸ்டார்ட், ஆக்ஷன், கட் ' எல்லாம் சொல்வாரோ என்னவோ தெரியலை. பட்டுப்புடவை பளபளக்க ஒரு ஜோடி நடைபயிலுவதைப் பார்த்தோம்.
கோயில் திறக்கும் நேரம் ஆகலை என்றதால் உள்ளே போகலை. எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கிட்டாச்சு:-) வெளியே மண்டபத்தில் டெர்ரகோட்டா பாவைவிளக்குச் சிலைகள் தூணில் இருந்தன. கோவில் மதிலுக்குப் பட்டைப்போடும் சமயம் இதுக்கும் அடிச்சுவிட்டுருப்பாங்க.

அடுத்த இடம் பார்க்கப்போகலாமுன்னு வெளியே வந்தோம். கடயல் பஞ்சாயத்தைச் சேர்ந்த பகுதி இந்த திற்பரப்பு. அருமையா நடைபாதை, டூ வீலர் பார்க்கிங் ஏரியா, அங்கே இருக்கும் பொழுதுபோக்கும் வசதிகளின் விளம்பரங்கள் எல்லாம் அட்டகாசமா இருந்துச்சு. பஞ்சாயத்துப் போர்டு தலைவரைப் பாராட்டத்தான் வேணும்.. தரையில் அதே பாம்பு இன்னும் இருக்கு. இப்பத்தான் கவனிச்சேன் அது ஒரு தவளையைப் பிடிக்க அங்கே ஊர்ந்து வருது. காலங்காலமாய்க் காத்திருக்கும் பாம்பு. ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்தும் ஒருத்தரைக் கவனிச்சபடியே ரமேஷைத் தேடினோம். கேஸ் அடுப்பு வந்தபிறகு டீக்கடை பாய்லர் எல்லாம் போயே போச்.

சின்னச் சின்ன வேன்களில் வந்த பள்ளிக்கூடப் பிள்ளைகளும், ஜோடிகளா வந்த இளைஞர் கூட்டமுமா கலகலன்னு இருக்கு. நமக்குத்தான் நேரப் பற்றாக்குறை.

தொடரும்....:-)

22 comments:

said...

திற்பரப்பு நல்லா இருக்கு.ஜில்லுன்னு அருவி படம் அருமை.மழை சமயத்தில் அருவி நெறய தண்ணீர் வரும்போது குத்தாலம் மாதிரி இருக்கும். நீராழி மண்டபம்...அருவில குளிச்சிட்டு, அப்புறம் கொண்டு வந்த சோத்தை அங்க வச்சி சாப்புட்டுட்டு, அப்புறம் குளிச்சிட்டு,அப்புறம் ... இப்பிடியே போகும்.மண்டபத்தில் இருக்குறது கல்சிலைதான். காவி அடிச்சு டெரகோட்டா மாதிரி ஆக்கி வச்சிருக்காங்க.

said...

//சிவாலய ஓட்டமுன்னு பெயர். மாரத்தான் ஓட்டமுன்னு வச்சுக்கலாம். எப்படி இந்த வழிபாடு ஆரம்பிச்சதுன்னு தெரியலை.//
இதுக்கு ஒரு கதை இருக்கு.புருஷாமிருகம் என்று ஒன்று இருந்தது. இடுப்புக்கு மேல் மிருகம், கீழெ மனிதன்.மிகுந்த சிவபக்தி கொண்டது,பலசாலியும் கூட. பஞ்ச பாண்டவர்கள் ஒரு யாகம் செஞ்ச போது அதன் பால் தேவைப்பட்டது. அர்ஜூன், அதைக்கொண்டு வரும் பலம் எனக்கு மட்டும்தான் உண்டு,என்று சொல்லி புறப்பட்டார்.அப்போது கிருஷ்ணர் அவர் கையில் பன்னிரண்டு சிவலிங்கங்களை கொடுத்து, அந்த மிருகம் தாக்க வந்தால் சிவலிங்கத்தை அதன் முன் வைத்து உன்னைக் காத்துக்கொள் என்று சொல்லி அனுப்பினார்.
அதன்படி அர்ஜூனும்,தவம் செய்துகொண்டிருந்த மிருகத்தை அணுகி பால் கறக்க முற்பட்டபோது, அது விழித்துக்கொண்டு அவரை துரத்தியது. உடனே அர்ஜூன் ஒரு சிவலிங்கத்தை கீழே வைத்தார். லிங்கத்தை கண்டதும் புருஷாமிருகம் மறுபடியும் தவத்தில் ஆழ்ந்தது. அர்ஜூன் மறுபடியும் பால் கறக்க முயல அது மறுபடியும் துரத்தியது. இப்படியே இரண்டுபேரும் காட்டின் எல்லைக்கே வந்து விட்டார்கள்.லிங்கங்களும் தீர்ந்து விட்டன்.
புருஷாமிருகம் அவரைப்பிடித்துக்கொண்டது. அர்ஜூன், நான் உன் எல்லையை தாண்டிவிட்டேன். என்னைவிட்டுவிடு என்று வாதாடினார். இருவரும் தர்மரிடம் சென்றார்கள். எல்லைக்கோட்டில் கால் இருந்ததால் பாதிஉடல் மிருகத்துக்கு சொந்தம் என்று தர்மர் தீர்ப்பளித்தார். நியாயமான தீர்ப்பில் மகிழ்ந்துபோன மிருகம் யாகத்துக்கு வேண்டிய பாலை கொடுத்து உதவியது. அர்ஜூனனின் கர்வமும் அழிந்தது.
அப்போது சிவலிங்கம் அரியும் அரனும் சேர்ந்த உருவமாக காட்சி அளித்தது. அதை தரிசித்த மிருகம் அரியை நிந்திப்பதை விட்டது. இவர்கள் ஓடியதை நினைவுபடுத்துவதுதான் சிவாலய ஓட்டம்.
ஷ்...அப்பா.... மூச்சு வாங்குது.:-))

said...

வாங்க ஐம்கூல்.

ஆஹா.... போகுறபோக்கிலே எவ்வளவு அருமையான கதையைச் சொல்லிட்டீங்க!!!!
அதுக்கே ஒரு ஸ்பெஷல் நன்றி.

அப்ப இந்தப் புருஷாமிருகம் மாதிரிதான் நரசிம்ம அவதாரமும் இல்லையா?

மனிதனும் மிருகமும் சேர்ந்து செய்த கலவை:-))))

said...

ஏன் பா பாம்பைக் காட்டிப் பயமுறத்திரீங்க:)
இந்த இடம்தான் எல்லாப் படத்திலியும் வருமே.

இந்த ஆண்பாவம் படத்தில சீதாவும், பாண்டியனும் சந்திப்பாங்க.
கிளீப் பேச்சு கேக்கவா படத்துல கூடப் பார்த்திருக்கேனே:)

நம்ம சென்னையிலியும் பவுர்ணமி அன்னிக்கு மூன்று அம்மன் கோவிலைத் தரிசிச்சா அவ்வளவு நல்லதுன்னு ஒரே கூட்டமாப் போவாங்க.

மேலூர், திருவொற்றியூர் அப்புறம் இன்ன்னோரு ஊர்.வடிவுடை அம்மன்...
மறந்து போச்சு.

கட்டு சாதம்தானே. அவங்க பிக்னிக்கைப் போட்டோ எடுத்து இருக்கலாம்.
பசிக்குது:)
வாழைக்காய் பஜ்ஜியா கோபால் கையில்:)

said...

KADAVUL PAATHI MIRUKAM PAATHI:)))))

said...

\தெரியுது. இது இயற்கையான நீர்வீழ்ச்சி இல்லையோன்னு ஒரு சம்சயம் \\

எனக்கும் அப்படி தான் தோணுது டீச்சர்..!

@ ஐம்கூல் - நன்றாக கதை சொல்லிறிங்க...கதைக்கு நன்றி ;)

said...

டீச்சர், 'அப்புறம் கதைகள்' கூடிட்டே போகுது..கவனிங்க :)

said...

நல்லாவே இருக்கு உங்க பயண கட்டுரை ரசிக்கும்படி,

ஐம்கூல், படிக்கற எங்களுக்கே மூச்சு வாங்குது. ஸ் அப்பா, இருந்தாலும் உங்க விளக்கம் அருமை.

said...

Vazhakkai Bajjina namakku aagi vantha thogai 8 than! Ashtabajji illaiyel andru kashta bajji than :)

said...

திற்பரப்பு எனக்கு மிக மிகப் பிடித்த சுற்றுலாத் தலம். குறிப்பாக அந்த அருவி. கல்லூரியிலிருந்தும் வீட்டிலிருந்தும் சிலமுறையும் சென்றிருக்கிறோம். ‘ஆண்பாவம்’ படம் வந்த நேரம். அந்த நீராழி மண்டபத்தில்தான் பல காட்சிகள் படமாக்கப் பட்டிருக்கும்:). எல்லோரும் அதை ‘ஆண்பாவ மண்டபம்’ என்பார்கள் அப்போது:))!

said...

வாங்க ரிஷான்.

உடம்பு தேவலையா?

சரியான நேரம் கிடைக்கமாட்டேங்குதேப்பா...அப்புறம் கதைகள் அப்புறமாத்தான் எழுதணும்

said...

வாங்க வல்லி.

பாம்பு நம்மைக் கண்டு பயந்தா?

ஆண்பாவம் பார்க்கலைப்பா. ஆனால் அதோட தொடர்ச்சி மாதிரி 'கை வந்த கலை'ன்னு ஒரு படம் பார்த்தேன்.

அதுலே வர்றதும் இந்த இடம்தானோ!!!!

புருஷ மிருகத்தில் மனுஷன்பாதி மிருகம் பாதிதானே?

said...

வாங்க கோபி.
கூல் சொன்ன கதை கூலா இருக்கு:-)))

நீர்வீழ்ச்சி சம்சயம் சரிதான் போல!

said...

வாங்க ஜானி வாக்கர்.

அரியர்ஸ் நிறைய இருக்கும்போல !!

தொடர்ந்து வாங்க. நன்றி

said...

வாங்க ராஜ்.

எட்டா? அப்போ வாழைக்காயைக் குறுக்கா ஸ்லைஸ் செஞ்சுக்கலாம்.

இல்லேன்னா வாய்வுப் பதார்த்தம். ஆளைத் தூக்கிருமுல்லே:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

விளக்கத்துக்கு நன்றிப்பா.

இங்கே எப்பவுமே தண்ணீர் வற்றாம வரும் என்பதும் விசேஷம்தானே?

நாங்க போனப்பவும் கல்லூரி மாணவிகள் கூட்டம் இருந்துச்சு:-)

said...

கடைசி போட்டோ - இவர் கிட்ட, டீ மீட்டர் எவ்ளோன்னுதான் கேக்கணுமோ!

said...

வருசம் முழுக்க அருவியில் நீர் கொட்டும் மணிமுத்தாறு போல் திற்பரப்பிலும் கொட்டும். காலமில்லாத காலத்திலே அருவி குளியல் வேண்டுமென்றல் இவற்றில் ஓரிடத்துக்குத்தான் போவோம்.

ஐம்கூல் ஹாட்டாக ஒரு கதை சொல்லி இனி பக்தர்களை சிவாலய மாரத்தான் ஓட்டத்தையும் கிரிவலம், சபரிமலை போல் பிரபலமாக்கிவிட்டார். யாருக்குத்தெரியும் அடுத்த வருசம் இந்த மாரத்தான் ஓடுவீர்களோ என்னவோ...?

said...

வாங்க நவாஸுதீன்.

புதுசா? முதல் முறையா வந்துருக்கீங்க போல.

நலமா?
எல்லாம் காயத்ரியின் பலன்:-)

said...

வாங்க நானானி.

வருசம் முச்ச்சுடும் அருவியில் தண்ணி என்பது கொஞ்சம் விசேஷம்தான்.

குற்றாலமேக் கோடையில் வறண்டுபோகுதே!

இந்த வருசம் மாரத்தான் இருவதாயிரம் பேர் ஓடுனாங்களாம். அன்னிக்கு மட்டும் இந்த 12 ஆலயங்களுக்கும் மவுசோ மவுசு!

said...

திற்பரப்பின் காமெடி அறிவிப்பு...

http://erodenagaraj.blogspot.com/2009/06/blog-post_22.html

said...

வாங்க ஈரோடு நாகராஜ்.

படித்தேன் & ரசித்தேன்:-)