Wednesday, January 07, 2009

வரவேற்பூ:-))))))))))))

ரெண்டுவாரம் லீவு விட்டாலும் விட்டேன், கை அரிப்பு தாங்கலை. நிறைய சம்பவங்கள் என்னைத் துரத்தித் துரத்தியடிக்குது. லீவைக் கேன்ஸல் செஞ்சுறலாமான்னு துடிக்கிறேன், துவளுறேன்...... மாணவமணிகளுக்கு அதிர்ச்சி தரணுமா? ஊஹூம்ம்........

அதிசயமா இந்த வருசம் இவருக்கும் ஒரு ப்ரேக் கிடைச்சிருக்கு. வீட்டுவேலை செஞ்சு ஆனந்திக்கட்டுமே ஃபார் அ சேஞ்ச்:-))))
நமக்கு இப்போக் கோடை காலம். அதுவும் இப்போ மூணுநாளா வெய்யில் சக்கைப்போடு போடுது. ஒரு நாள் 30 டிகிரி செ. வந்துச்சு. ஓஸான் லேயர்லே பெரிய ஓட்டை இருக்காம் இங்கே நியூஸிக்கு மேலே. போதாக்குறைக்குப் பொன்னமான்னு தெந்துருவக் காத்தும் அடக்கி வாசிச்சதா...... ஐயோ...செமச் சூடு. பொழுதன்னிக்கும் குளுருன்னு புலம்புவயே...இனி வாயைத் திறப்பயான்னு மிரட்டல். கோகிவேற சடாமுனியா இருக்கானா...சூடு தாங்காம அடுத்த வீட்டுத் தோட்டத்துலே போய் பதுங்கிட்டான். அங்கே நிறைய மரங்கள் இருக்கு.

மரங்கள்னு சொன்னதும் கொஞ்சம் அப்படியே பின்னோக்கி ஒரு சரித்திர நிகழ்வைப் பார்க்கலாமா?

ஆதாம் ஏவாள் எங்கூரில் தின்ன முதல் பழம் எது? பேரிக்காய்!!!!!

1846இல்.டீன் சகோதரர்கள் நட்ட மரம். இவுங்களைப் பத்திக் கொஞ்சம் கூடுதலான விஷயம் இருக்கு. அப்புறம் ( இன்னும் ரெண்டொரு நாளில்) சொல்றேன்.இது நம்ம ஆயிரத்து நூறில் வராது:-))))

ஏவான் நதிக்கரையில் 1863 ஜூலை 9 ஆம்தேதி இளவரசர் ஏழாம் எட்வர்டு & இளவரசி அலெக்ஸாண்ட்ராவின் திருமணத்தை நினைவுகூரும் விதமா தோட்டத்துக்காக ஒதுக்குன இடத்தில் ஒரு OAK மரத்தை நட்டாங்க. ஊருக்கு நடுவுலே வளைஞ்சு நெளிஞ்சு போகும் ஆத்தையொட்டி 405 ஏக்கருக்கும் கொஞ்சம் கூடுதலா வரும் இடத்தைத் தோட்டத்துக்குன்னேத் தனியா எடுத்துவச்சாச்சு:-))))


இதுக்கு அடுத்தவருசமே 1864 இல் ஹார்ட்டிகல்ச்சுரல் சொஸைட்டி ஒன்னு ஆரம்பிச்சு, என்னென்ன பூச்செடிகளைக் கொண்டுவரலாமுன்னு திட்டம் போட்டாங்க. தாவர இயல் பூங்கா. இதுக்கு ஒரு 52 ஏக்கர். மானாவரியா ஆளில்லாமக் கிடக்கும் இடத்தை அள்ளிக்கோ அள்ளிக்கோன்னு .....


இங்கிலாந்தில் இருந்து Beech, Chestnut, Oak,Elm, Pine மரக்கன்னுகளைக் கொண்டுவந்து நட்டாங்க. அப்படி நட்டவங்க, உள்ளூர் மரங்களை(Ferns, Tussock, Cabbage trees, and Flax )யும் புதர்களையும் அங்கங்கே எடுத்து வீசிட்டு அவுங்க ஊர் மரத்தை நட்டாங்க. அதுபாட்டுக்கு அது இது பாட்டுக்கு இதுன்னு விட்டுருக்கலாமுல்லே. எல்லாம் பூனைக் குசும்பு. இதனாலேயும் மவோரிகளுக்கும் வெள்ளைக்காரகளுக்கும் கொஞ்சம் லடாய் ஆச்சு.அஞ்சாறு வருசத்தில் நர்ஸரியில் மேலும் மரக்கன்னுகளை வச்சு வளர்த்தாங்க. ஊர்முழுசும் மரம் நட ஏற்பாடுகள் நடந்துச்சு. கொஞ்சநஞ்ச எண்ணிக்கை இல்லை. ஏழுலட்சத்துச் சொச்சம். சரியாச் சொன்னா 763,034 மரக்கன்னுகள். இது போதாதுன்னு ரெயில்வே லைன் போட்ட கம்பெனி தெற்குத்தீவுப் பாதைகளில் ஓக் மரங்களை நட்டுக்கிட்டே போச்சு.

தோட்டம் ஒரு பக்கம் தாவர இயல் பூங்கா ஒரு பக்கமுன்னு வேலைகள் பரபரன்னு நடந்து இன்னிக்கு உலகப்புகழ்(???)பெற்ற ஹேக்ளி பார்க், உலகம்பூராவும் உள்ள தாவரப் பிரேமிகளைக் கவர்ந்து இழுக்குது. வருசம் 365 நாளும் திறந்து வைக்கிறாங்க. மேலும் உள்ளே நுழைஞ்சுச் சுற்றிப் பார்க்க அனுமதி இலவசம். வண்டிகளைப் பார்க் செய்யவும் ஏராளமான இடங்கள். அதுவும் இலவசம்தான்.சும்மாக் கிடைச்சா, சும்மா இருக்க முடியுதா? அதான் வகுப்புக் கண்மணிகளுக்காக வாரிக்கிட்டு வந்தேன்.


வரவேற்பூ:-)

ரோஜாவுக்குன்னே ஒரு தனி இடம். அதுக்கு முன்னாலே வரவேற்புக்குன்னு வருசம்பூராவும் மலர்ந்து சிரிக்கும் பூ.இந்தப் பூக்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
(சந்தடிச் சாக்கில் நம்மூட்டுப் பூக்களையும் கோர்த்துவிட்டுருக்கேன்)


என் கண்ணுக்கு ஒரு யானைக்குட்டி தெரியுது. உங்களுக்கு????

52 comments:

said...

டீச்சர் நானும் ஒழுங்கா பாடம் படிச்சி
பின்னூட்ட பூ போட்டுவிட்டேன்

said...

ரொம்ப்ப்ப்ப நாள் கழிச்சு வந்துட்டு விஷயத்தைச் சொல்லாம இப்படி படங்காட்டினா எப்படி? இதெல்லாம் ஒத்துக்க மாட்டோம்.

said...

பூவெல்லாம் அழகா இருக்கு

ஆனா நான் இன்னும் மத்தத படிக்கல

said...

முதல் வணக்கம்.....

said...

\\\? அதான் வகுப்புக் கண்மணிகளுக்காக வாரிக்கிட்டு வந்தேன்.\\

நல்லவேலை முதல்நாள் வகுப்புக்கு நோட்டும் போனாவும் எதுவும் எடுத்துக்கிட்டு வரல....நீங்க வாரிக்கிட்டு வந்ததில் இருந்து நானும் ஒன்னு உஷார் பண்ணிக்கிட்டேன் ;))

எனக்கும் யானை குட்டி மாதிரி தான் தெரியுது..;))

said...

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..
ஜோர் என்றால் என்றைக்கும் அது
துளசி தளமே..”

said...

...(ப்)பூ இவ்வளவு தானா !

:))))))

நீண்ட நாள் கழித்து வந்திருக்கிங்க, அடுத்தடுத்த பதிவில் பல கட்டுரைகளும் படங்களும் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம் தானே.

said...

பூக்கள் ரொம்பவும் அழகு

said...

வாங்க நசரேயன்.

பூ போட்டதுக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

வெறும் பூ மட்டுமா இருக்கு? கொஞ்சூண்டு சரித்திரம் பின்னாலே ஒளிஞ்சுருக்குதே கவனிக்கலையா?

இது தேர்வுக்கு வரும் பகுதி:-))))

said...

வாங்க குடுகுடுப்பை.

நிதானமாப் படிங்க. மரங்களின் எண்ணிக்கை முக்கியம்:-))))

said...

வாங்க நரேன்.

வணக்கம். வகுப்பு ஆரம்பிச்சாச்சு:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பாட்டு பலே ஜோரு:-)

நன்றிப்பா.

said...

வாங்க கோவியாரே.

சரியாச் சொன்னீங்க. பதிவுகள் எழுத ஆரம்பிச்சாச்சு.

விடுமுறையைப் பாழாக்காமக் கொஞ்சம் சரித்திரத்தைப் புடிச்சுக்கிட்டு வந்துருக்கேன்.

said...

வாங்க ஜாக்கிசேகர்.

பூக்களின் அழகை எவ்வளவு ரசிச்சாலும் மாளாதுதான்!!!!

said...

துளசி, பூங்கா பூராவும் படமெடுக்கலியா.

ஆரம்பமே அழகு. எத்தனை வண்ணம்.நல்லாத் தெளிவா எடுத்திருக்கீங்க.
இங்க தினமுமே 30 டிகிரி தான் அதனால நோ வொர்ரீஸ்.:)
ரொம்ப நாள் கழிச்சு எல்லாரையும் இங்க பார்க்கிறேன்:)

said...

ரோஜா பூக்களில் எத்தனை வண்ணங்கள்
ஜோராய் எல்லாம் மின்னுகிறதே !!!!

ஆரு, படம் புடிச்சது நீங்க தானா ? அட்டகாசம். சூப்பர். கலக்கிட்டீங்க :)))

said...

வணக்கம் ரீச்சர்!!! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பூக்களெல்லாம் சூப்பர்
முதல் பூ மட்டும் ஆர்டிபிஷியல் போல இருக்கு வித்யாசமா.. நான் தான் சரியா பார்க்கிறேனான்னு ரெண்டு மூணு தடவை முழிச்சி பார்த்ததில் கண் வலிக்கி :)) . யானை ஒரு கோணத்தில எடுத்திருக்கீங்க போல... பேசாமா இது என்னனு கண்டுபிடிக்க சொல்லி எல்லாருக்கும் கண்வலி வர வச்சிருக்கலாம் .. ஒரு சான்ஸ் கோட்டை விட்டீங்க... இன்னும் சொல்லுங்க ஆவோடீரோ (Aotearoa) பத்தி சரியா சொன்னது ??

said...

பூக்கள் எல்லாம் கொள்ளை அழகு!

said...

Happy New Year அக்கா,

புது வருஷ ஆரம்பத்தில் பூ பூவாக நல்ல ஆரம்பம்.

ஸ்ரீவித்யா

said...

டீச்சர்,

ரொம்ப நாள் கழிச்சு வர்றதால ஒரு அட்டன்டஸ் போட்டுக்கிறேன்...

பூக்கள் படங்கள் அருமை.. இந்த மாசம் பிட் போட்டியில பூக்கள்னு தலைப்பு வெச்சா உங்களுக்குதான் பரிசு...

said...

ஒவ்வொரு பூவும் அழகோ அழகு!!! ரோஜாவை கொஞ்சம் அனுப்பிவைங்க.ஆனா 30 டிகிரி? இங்க சம்மரில் 48ல் இருந்து 54 டிகிரி வரைக்கும் இருக்கு.

Anonymous said...

உங்க கண்ணுக்கு எல்லாமே யானைகுட்டியா தான் தெரியுது ;)

:)

said...

பூக்கள் நச்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

ஆனைக்குட்டி தெரியுதே நல்லா...

பூக்கள் அருமை...

said...

டீச்சர் நானும் ஒழுங்கா பாடம் படிச்சி
பின்னூட்ட பூ போட்டுவிட்டேன்//

நானும் மறுக்கா கூவிக்கறேன்.

said...

வாங்க வல்லி.

தோட்டம் பூராவும் படம் எடுத்தாச்சு. அதையே வகைவகையாப் போட்டு இந்த வருசத்தை ஓட்டிறலாம்:-))))

நேத்து எங்க ஊர்லே 35 டிகிரி. இதுக்கு முன்னால் இதைப்போல் வந்து சரியா 100 வருசம் ஆச்சாம். இன்னிக்கு 27. நாளைக்குப் பழைய குருடி கதவைத் திறடின்னு 15.

(குருடின்னு சொன்னது கொஞ்சம் மரியாதை இல்லாத சொல்தான். ஆனால்.... இது அந்தக் காலப் பழமொழி)

said...

வாங்க சதங்கா.

இந்த வருசத்துக் கணக்குலே இது வந்துரும்:-)

said...

வாங்க இலா.

நல்ல முயற்சி.

அவடியரோஆ ன்னு சொல்லணுமாம்.

முதல் பூதான் 365 நாளும் பூத்து நிக்குதுன்னு க்ளூ கொடுத்தேனே:-)))))

யானைப்போட்டியைக் கோட்டை விட்டுட்டேன்(-:

said...

வாங்க மீனா.

வருகைக்கு நன்றி.
அதென்ன வாயில் நுழையாம ஒரு பூனைப்பெயர்????

said...

வாங்க ஸ்ரீவித்யா.

மங்களமா இருக்கட்டுமுன்னுதான் இப்படி:-))))

said...

வாங்க வெண்பூ.

பிட்டுக்குக்கிட்டே கூட வரமுடியாதுப்பா. அங்கே வில்லாதிவில்லன்கள் இருக்காங்க:-))))

said...

வாங்க சிந்து.

ரோஜா மட்டும் போதுமா? நாளைக்கு இன்னொண்ணு வந்துக்கிட்டு இருக்கு.
ஒரு கூடைப்பூ:-)

said...

வாங்க தூயா.

யானையின் கண்ணுக்கு அதன் குட்டி(மட்டும்) தெரிவதில் என்னப்பா புதுமை:-))))

said...

வாங்க சந்தனமுல்லை.

மாணவமணிகளுக்குப் பூக்களால் வரவேற்பு கொடுத்த டீச்சர் என்ற புதுமையைப் படைச்சுட்டேனா?

நாலு பூ இதுலே பப்புவுக்கு:-)))

said...

வாங்க பாசமலர்.

கையைக் கொடுங்க இப்படி. உங்களுக்காவது யானைன்னு தெரிஞ்சதே:-)))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நானும் மறுக்காக் கூவுறேன் நன்றி நன்றி.

said...

வாங்க கோபி.

உங்க பின்னூட்டம் யானைமாதிரி ஆடிஆடி வந்து ஒளிஞ்சுக்கிட்டு இருக்கு.

இப்பத்தான் பார்த்தேன்..

சரியான விடை:-)))))

said...

ஆஹா..டீச்சர்..புது வருஷத்துல பூவோட வந்திருக்கீங்க..வாங்க..
'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறை' ஆரம்பிக்கலாமா டீச்சர் ? நான் பின்னூட்டக் கொப்பியை ரெடியா வச்சிருக்கேன் :)

said...

என் கண்ணுக்கு ஒரு யானைக்குட்டி தெரியுது. உங்களுக்கு????

உங்க கண்ணாலயே பார்த்ததால எனக்கும் ஆனைக்குட்டி தான் தெரிஞ்சுது டீச்சர்.

(ஆ அடிக்காதீங்க)

said...

'பச்சை ஆனையும், சில ரோஜாக்களும்..' அழகு.!

said...

ரோஜா மலரே இராஜகுமாரி... கொள்ளை அழகு...

said...

/ரெண்டுவாரம் லீவு விட்டாலும் விட்டேன், கை அரிப்பு தாங்கலை. நிறைய சம்பவங்கள் என்னைத் துரத்தித் துரத்தியடிக்குது//

:-)))

//அஞ்சாறு வருசத்தில் நர்ஸரியில் மேலும் மரக்கன்னுகளை வச்சு வளர்த்தாங்க. ஊர்முழுசும் மரம் நட ஏற்பாடுகள் நடந்துச்சு. கொஞ்சநஞ்ச எண்ணிக்கை இல்லை. ஏழுலட்சத்துச் சொச்சம். சரிஒயாச் சொன்னா 763,034 மரக்கன்னுகள். //

இதை எல்லாம் நம்ம ஊர்ல ஒரே நாள்ல செய்வாங்க..ஆனா செடி தான் வளராது ஹி ஹி

said...

வாங்க ரிஷான்.

அ.க.ஆ.நூ எழுத ஆரம்பிக்குமுன் வாழ்க்கையைக் கொஞ்சம் ரீசார்ஜ் செஞ்சுக்கணும். பழைய கதைகள் சக்தியை அப்படியே உறிஞ்சுவிட்டுருது.

இன்னும் ஒரு நாலைஞ்சு வாரம் உள்ளூர்க் கதைகளை எழுதலாமுன்னு இருக்கேன். இந்த 15 நாள் லீவுலே நிறைய தேத்தியாச்சு:-))))

said...

வாங்க அமித்து அம்மா.
இப்படி என் கண்ணைப் பிடுங்கினா நான் என்ன செய்யறதாம்? :-))))

said...

வாங்க அமுதா,

உங்க பாட்டுக்கு எசைப்பாட்டுன்னா....அமுதைப் பொழியும் நிலவேதான்:-))))

said...

வாங்க கிரி.

'ஹிந்தி வகுப்புக்கு' இடையிலும் தமிழ்ப் பதிவுக்கு நேரம் கிடைச்சதா? :-))))))

said...

கவிதை அல்லது அழகு!

said...

வாங்க ஜோதி பாரதி.

//கவிதை அல்லது அழகு!//

கவிஞர் சொல்லுக்கு அப்பீல் ஏது?

நன்றிங்க.

said...

வாங்க தாமிரா.

பச்சை யானை - பிடிச்சிருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

ஒரு முறை ப்ளவுஸ் வாங்கக் கடைக்குப்போய்( புடவையை வீட்டுலே மறந்துவச்சுட்டு) யானைக்கலர் வேணுமுன்னு கேட்டேன்:-)))

said...

Nice pictures. Yes I see elephant.

(last picture)

Removed my old unwanted comments, it appeared twice!

said...

வாங்க ரமேஷ்.

இத்தனை நாளுக்குப்பிறகு, ஒளிஞ்சுக்கிட்டு இருந்த இந்த கமெண்ட்ஸ் வந்துருக்கே!!

டிலீட் செஞ்சுட்டேன்.

நோ ஒர்ரீஸ்:-)