Tuesday, January 13, 2009

இனிய பொங்கல் வாழ்த்து(க்)கள்

என்னதான் டேட்லைனில் இருக்கேன்னு பெருமை பீற்றிக்கிட்டாலும், இந்த 'இடும்பி', திங்க(ட்)க்கிழமையே பொங்கல் வச்சது கொஞ்சம் கூடிப்போச்சோ......


அதெல்லாம் பரவாயில்லை.சாமி கோச்சுக்கமாட்டார்.
கஷ்டப்பட்டுச் செஞ்சதைத் தின்னப் பசு வேணாமா? 'பாழாப்போறது பசு வாயிலே'ன்னு பழமொழி இருக்கேப்பா!!!

கோபால் பண்டிகைநாள் இங்கே இருக்கமாட்டார். ஒரு கப் அரிசியும், அரைக் கப் பாசி & கடலைப் பருப்பும் சேர்த்து, அதிலே ரெண்டுவகையா 2/3 பாகம் சக்கரைப் பொங்கலும், 1/3 பாகம் வெண்பொங்கலும் வச்சு விழாவைக் கொண்டாடி முடிச்சேன்னு வச்சுக்குங்க.


செர்ரிப் பழம்?

நம்ம வீட்டுக்கு வரும் வழியில் இருக்கும் ஒரு காய்கறி & பழக்கடையில் தினமும், 'அன்றைய ஸ்பெஷல்' என்னன்னு கரும்பலகையில் பிரமாண்டமான எழுத்தில் எழுதி எல்லார் கண்ணுலேயும் படும் விதத்தில் வைப்பது வழக்கம். அதன்படி ஞாயித்துக்கிழமை செர்ரீஸ்.

"சூப்பர்மார்கெட்டில் பத்து டாலருக்குப் போட்டுருக்கான். இங்கே நாலுன்னா அதோட லட்சணம் எப்படி இருக்குமுன்னு தெரியாதா?. அதுவுமில்லாம நேத்துதான் ஒருகிலோ வாங்கி வெட்டியாச்சு"

இன்னிக்குன்னு பார்த்து இதே ரோடில் நாலைஞ்சுமுறை போகும்படியா வேற ஆச்சு. ஒவ்வொருமுறையும் 'வா வா வா வா'ன்னு கூப்புடுது செர்ரீஸ். தாங்கமுடியாமப்போய் என்னென்னு பார்த்தோம். ரெண்டு சின்ன அட்டைப் பெட்டிகளில் இருக்கு. அந்தப் பெட்டியிலேயே சின்னச் சின்ன ப்ளாஸ்டிக் பைகளில் செர்ரிகள், பையில் பாதி அளவுவரை நிறைச்சு வச்சுருக்கு. இதென்ன ப்ரீ பேக்கா? இல்லையே ....யாரோ ஜனங்க பொறுக்கி எடுத்துப் பையில் போட்டுட்டு, அப்புறம் மனசு மாறி வேணாமுன்னு விட்டுட்டுப் போனது போல இருக்கே.....

திறந்து பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு. கடைக்காரருக்கு உதவியாளிபோல எல்லாத்தையும் பிரிச்சு அந்த அட்டைப் பெட்டிகளில் கொட்டினேன். இன்னொரு ப்ளாஸ்டிக் பை எடுத்துக் கோபால்கிட்டே கொடுத்துப் பிடிச்சுக்கச் சொல்லி நல்ல பெருசா இருக்கும் பழங்களைப் பொறுக்கி ஒருகிலோ அளவுவரை நிரப்பி எடுத்துக்கிட்டேன். நாலு எட்டு எடுத்து வைக்கும்போது, கடையின் பின்பகுதியில் இருந்து ஒரு அட்டைப்பெட்டியைச் சுமந்துக்கிட்டு சீனப்பெண்மணி ஒருத்தர் வெளியே வந்தாங்க. செர்ரீஸ்.

அட! எத்தனை கிலோ பெட்டி? அஞ்சுகிலோவாம். உங்களுக்கும் வேணுமுன்னா உள்ளே நிறைய இருக்கு எடுக்கலாமுன்னு சொல்லி அவுங்க பெட்டியைத் திறந்து பார்த்தால்.......ஹைய்யோ.....குண்டுகுண்டா முழிச்சுப் பார்த்துக்கிட்டு மின்னுது எல்லாம். உள்ளே திரும்பிக் குரல் கொடுக்கும் முன்னால் பெரிய ட்ராலியில் இருவது முப்பது பெட்டிகளா உள்ளே இருந்து வந்துக்கிட்டு இருக்கு.

கபால்னு பாய்ஞ்சு எடுக்கறோம் ஆளுக்கு ஒரு பெட்டின்னு. கோபாலுக்குப் பெட்டியைத் தூக்க வசதியா இருக்கட்டுமேன்னு அவர் கையில் இருந்த ஒருகிலோ செர்ரிஸ் பையை வாங்கி பழைய இடத்தில் அட்டைப்பெட்டியில் வச்சேன்.

சிரிப்பை என்னால் அடக்க முடியலை.....இப்பப் புரிஞ்சது, முதலில் அங்கே ஏன் செர்ரீஸ் நிறைச்ச பைகளா இருந்துச்சுன்னு:-)))))

எக்ஸ்போர்ட் ஆர்டர் கேன்ஸலாகிருச்சு போல. க்ராம்வெல் என்ற ஊரில் இருந்து வந்த டொப்ஸன் செர்ரீஸ். நம்ம ரமண் அண்ணனுக்குக் கொஞ்சம் கொண்டுபோய் கொடுத்துட்டு வந்தோம்.

ரெண்டுநாட்களாப் பழம் தின்னுக் கொட்டை போட்டாறது. கோபாலுக்குப் பழங்கள் என்றாலே பயங்கர விருப்பம். "பழங்கண்ட பின்னாலும் தின்னாத கோபாலா" ன்னு பாடுவேன். பயணம்வேற கிளம்புறாரா...... பரிதாபமாப் பழப்பெட்டியைப் பார்த்தார். எனக்குத் தாங்கலை. அதே சமயம் பத்துப்பன்னெண்டுநாள் அதுகளும் தாங்காதே.....

"வேணுமுன்னா எத்தனை இருக்குன்னு எண்ணிவச்சுட்டுப் போங்களேன்"


அனைவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்து(க்)கள்.

60 comments:

said...

பொங்கல் வாழ்த்துக்கள் டீச்சர்! சக்கரை பொங்கலும் வெண்பொங்கலும் வாயில் தண்ணி வரவெக்குது. அதோட செர்ரிஸ் வேற எனக்கும் பேவரிட். டீச்சர் தளத்தில் நாங்களும் பொங்கல் இன்னைக்கே கொண்டாடிட்டோம்.பொங்கலோ பொங்கல்.

Anonymous said...

பொங்கல் வாழ்த்துகள்

said...

ரிச்சர்! நான் அவசர அவசரமா ஃபஷ்ட்டு போட்டுக்கறேன்!இப்பல்லாம் ரொம்ப கூட்டம் அலையுது ரீச்சர்!!!!!!!!!!!!!

said...

பொங்கல் வாழ்த்துக்கள். செர்ரிப் பழம்போல கதையும் சுவையாக இருக்கு

said...

நானும் இந்த வாரம் செர்ரி வாங்கினேன். கொட்டை துப்பல் நன்றாகவே நடக்கிறது! :)

said...

ஆங்

அதென்ன சொல்லணும்? பொங்கள், பொங்கல் புத்தாண்டு - என்னமோ ஒண்ணு. வாழ்த்துகள். நல்லா இருங்க.

said...

ரீச்சர் ! வேணாம், விட்டுட சொல்லுங்க! கொத்ஸை நிப்பாட்ட சொல்லுங்க! நானும் நிப்பாட்டிகிறேன்!


------------------------------------


மின்னல் சொன்ன மாதிரி இந்த கோட்டுக்கு அப்புறம் அவரும் வரக்கூடாது நானும் வர மாட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-)))

said...

பொங்கல் வாழ்த்துக்கள் ரீச்சர்!! அப்படியே 2 ஸ்பூன் பார்சல் சக்கரை பொங்கல் மட்டும் . பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கு. கறிவேப்பிலையும் கருப்பு திராட்சையும் படம் சூப்பர். செர்ரி அதிகமா சாப்பிட்டா ஒன்னும் ஆகாதா ரீச்சர்??!!! அதுவும் கோபால் சார் வேற 'கண்' வைச்சிட்டு போறாரே??

said...

பொங்கல் வாழ்த்துக்கள் ரீச்சர்...

said...

பொங்கல் ஸ்பெஷல் ரெண்டு பதிவா...

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

said...

வாங்க சிந்து.

செர்ரீஸ் வேணுமுன்னா டிசம்பர் ஜனவரியில் இங்கே ஒரு நடை வந்துட்டுப்போங்க:-)

said...

வாங்க கடையம் ஆனந்த்.

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க அபி அப்பா.

இன்னிக்கும் நீங்க ஃபஷ்ட்டு இல்லை. சிந்து, முந்திக்கிட்டாங்க:-)

said...

வாங்க டொக்டர் ஐயா.

முந்தியெல்லாம் இங்கே செர்ரீஸ் பிக்கிங்
விளம்பரம் வரும். நாமே போய் வேணுங்கறதைப் பறிச்சுக்கிட்டு, அதுக்குண்டான காசை( தின்னது எல்லாம் போக)கொடுத்துட்டு வரலாம்.

அதிலும் சீனக் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாய் வந்து அங்கேயே பிக்னிக் லஞ்ச் எல்லாம் கொண்டுவந்து சாப்பிட்டு மகிழ்ந்துக்கிட்டு இருந்தாங்க.

இப்போ வெள்ளையர்களுக்கும் பழத்தோட்டப் பண்ணை அலுத்துப்போச்சு போல. உடனே சீனர்கள் பண்ணைகளை வாங்கிக்கிட்டாங்க.

யாரையும் உள்ளே விடாம முழு அறுவடையும் அவுங்களே செஞ்சு ஜமாய்க்கிறாங்க.

said...

வாங்க கொத்ஸ்.

இப்ப உங்களுக்கு சீஸன் இல்லையே.... இறக்குமதி சரக்கா?

கல்/கள் வாழ்த்து(க்)கள்.

said...

அபி அப்பா.

இதென்ன லக்ஷ்மண ரேகா மாதிரி அபிஅப்பா ரேகை!!!!

said...

வாங்க இலா.

செர்ரி அதிகமாச் சாப்பிட்டா ஒன்னும் ஆகாதுன்னு நினைக்கிறேன். ஆனா கொட்டையை முழுங்கிட்டா மரம் முளைச்சுரும்:-)))))

said...

வாங்க தமிழன்-கறுப்பி.

உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க நரேன்.

பொங்கலும் ரெண்டு நாள் வருதே.
ஒன்னு மனுசருக்கு, ஒன்னு எனக்கு:-)

said...

வாங்க இனியவள் புனிதா.

இனிப்பான வாழ்த்து(க்)கள்.

said...

//
நம்ம வீட்டுக்கு வரும் வழியில் இருக்கும் ஒரு காய்கறி & பழக்கடையில் தினமும், 'அன்றைய ஸ்பெஷல்' என்னன்னு கரும்பலகையில் பிரமாண்டமான எழுத்தில் எழுதி எல்லார் கண்ணுலேயும் படும் விதத்தில் வைப்பது வழக்கம். அதன்படி ஞாயித்துக்கிழமை செர்ரீஸ்.
//


அன்றைய ஸ்பெஷலா? வழக்கமா "இன்றைய ஸ்பெஷல்"னு தான எழுதுவாங்க :0)))

டீச்சர் கிட்டயே தப்பு கண்டு பிடிச்சிட்டோம்ல :0)))

said...

செர்ரி பழமா? உங்க ஊர்ல வித்தியாசமா இருக்கே...எங்க ஊர்ல வேற மாதிரி இருக்கு....அப்ப என்னை ஏமாத்தறாங்களா :0(

ஆனா உங்க பொங்கல் பொசுங்காம நல்லா வந்துருக்கு :0)) வாழ்த்துக்கள் டீச்சர்...

said...

வாங்க அது சரி.

இன்னிக்கு யுவர் டே!!!!!!

கரும்பலகையில் மொட்டையாத்தான் இருக்கும்.

அன்றன்றுக்கான ஸ்பெஷல்ஸ்தான் அன்றைய ஸ்பெஷல்ஸ்:-)))

செர்ரிப் பழங்களில் நாலைஞ்சு வகை இங்கே விளையுது.

ஆனால் இது ப்ளாக் செர்ரி. ப்ளம் பழங்களில் கூட இதைப்போல ப்ளாக் ப்ளம் பார்த்துருப்பீங்களே.

சிகப்புச் செர்ரியைவிட இது இனிப்புச் சுவை கூடுதலாக்கும்:-))))

said...

ஆஹா,

பூஜை செய்யாம சாப்பிட முடியாது என்பதால இப்போதைக்கு கண்ணால பாத்துகிட்டேன். அப்புறமா வந்து பொங்கல்களைசாப்பிடறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் வலைப்பூவிற்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

பொங்கல் வாழ்த்துகள் :)

said...

பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் !!

said...

Hello Thulasi madam,

I have been a silent visitor to your blog for quite sometime now.

I enjoy your blogs and the first thing I do every morning is to check your blog for new entries.

Your "Akka" was a moving one and the interesting part is, I now have a picture of your patti's, akka's, and chithappa's house and the characters involved.

I believe this is the greatest achievement for a writer.

Keep up the good work!

Wishing you a very happy pongal!!!

said...

நீங்கள் பொங்கிய பொங்கலை உண்டு மகிழ்ந்து அது ‘செர்ரித்து’ம் விட்டது எங்களுக்கு:))! மிக்க நன்றி மேடம்!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

said...

பொங்கல் வாழ்த்துக்கள்!

said...

டீச்சர் இப்பல்லாம் தமிழ்மணத்துல 3 நிமிஷத்துக்கு மேல எந்தப் பதிவும் நிக்க மாட்டேங்குதா..? அதான் பார்க்கத் தவறிட்டேன் டீச்சர்.. மன்னிக்கணும்..

ஏதோ செர்ரீஸ் பழம்னு சொல்றீங்களே.. அப்படீன்னா.. நான் சாப்பிட்டதே இல்லை.. வரும்போது பார்சல் கட்டி கொண்டாந்திருங்க..

அதென்ன இது மாதிரி பார்சல் தூக்குற வேலைன்னா மட்டும் கோபால் ஸாரை கூப்பிட்டிட்டே போறீங்க.. பாவம்ல்ல அவரு..

நான் இன்னும் பொங்கல் சாப்பிடலை டீச்சர்.. இனிமேதான் ஹோட்டலுக்கு போய் வயித்தை ரொப்பிக்கணும்..

நல்லா கொண்டாடுங்க..

said...

படமெல்லாம் பெரிதுபடுத்தி பார்க்கிறப்ப நன்றாக இருக்கு.
வாழைப்பழம் - Super Energy Food தான்.ஸ்டிக்கர் சொல்லுது.
ஹூம்!இந்த வருடம் உங்க பொங்கலை பார்த்து ஆறுதல் அடைய வேண்டியது தான்.

said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் ரீச்சர்.

said...

பதிவுகளில் படம் பார்த்து பார்த்து இந்த வருஷமும் பொங்கல் கொண்டாடி ஆச்சு ;))

ரெண்டு கப்புக்கு ரொம்ப நன்றி டீச்சர் ;)

இனிய வாழ்த்துக்கள் ;)

said...

யக்கோவ் எனக்கு பொங்கல் படையல் போட்டீங்களா..

பொங்கல் வாழ்த்துக்கள்

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் டீச்சர். வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் சூப்பர்.

said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

said...

//.....இப்பப் புரிஞ்சது, முதலில் அங்கே ஏன் செர்ரீஸ் நிறைச்ச பைகளா இருந்துச்சுன்னு:-)))))//
நானும் சிரிச்சேன்! ஏன்னா? இதே போல் சிகாகோவில் ஒரு பண்ணைக்கடையில் ஸ்வீட் கார்ன் வாங்கினேன், நல்ல இளசா பாத்துப்பாத்து. பில் போடப் போகும் போது அப்போதுதான் அறுவடையாகி வந்த புத்தம் புது ஸ்வீட்கார்ன் ஒரு மினி லாரியில் வந்திறங்கியது. டப்புன்னு முதலில் வாங்கியதை அதோட இடத்தில் கொட்டிப்புட்டு
புதிதாய் வந்ததைப் பொறுக்கி வந்தேன். அதான்!!!

said...

வாழ்த்துக்கள்

said...

பொங்கல் வாழ்த்துக்கள் ! சக்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செர்ரிஸ் வேற . sakkai podu. பொங்கலோ பொங்கல்.

Mr.Gopal is here listening to the song recited by Madam Kavinaya.and sung by me to Greet all Tamils all over the world.

http://uk.youtube.com/watch?v=dXy4xvOjo80

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நீங்கள் சமையல் மன்னி. உங்க வீட்டுப் பொங்கலைத் திங்க எனக்கு ஆசையா இருக்கே!!!
இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க தூயா.

குசினியில் சமையல் ஆச்சா?

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க மணியன்.

வணக்கம். நலமா?

இப்படிப் பண்டிகை சமயத்தில்தான் உங்களைப் பார்க்க முடியுது!

விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க விஜி.

நல்வரவு.

உங்க பாராட்டுகள் எனக்குக் கிடைச்சப் பொங்கல் பரிசு!!!!

ஆதரவுக்கு நன்றிகள்.

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

'செர்ரி'க்கலைன்னாதான் சிரமம்:-)))))

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க பாஸ்கர்.
நலமா?
ரொம்பநாளைக்கு ரொம்ப நாள்!!!!!

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

பார்ஸல் என்னங்க பிரமாதம்? கொண்டுவந்தால் ஆச்சு.

இப்பெல்லாம் நாலாயிரத்துச் சொச்சம் பேர் எழுதுறாங்க. அதனால் அஞ்சு பத்து நிமிஷத்துலே வரிசை நகர்ந்துக்கிட்டே இருக்கு.
போகட்டும்.
அதுவரை இத்தனை மக்களுக்குத் தமிழில் எழுதும் ஆர்வம் இருக்கே அதை முதலில் போற்றணும்தானே?

அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க குமார்.

வாழைதான் விலை உயர்ந்த ஃபாரீன் சரக்கு இங்கே:-))))

நம்மூர்லே கிடைக்கும் வகைகள்தான் இங்கே வர்றதில்லை(-:

கொஞ்சமாப் பொங்கல் செஞ்சுச் சாப்புட்டு இருக்கலாமுல்லே? நீங்கதான் இப்ப சமையலில் வல்லுனர் ஆச்சே:-)

said...

வாங்க மதுரையம்பதி.

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கைலாஷி.

இது என்னங்க.....
உங்க பதிவுகளில் இருக்கும் படங்களை விடவா?

ஒவ்வொன்னும் கண்ணில் ஒத்திக்கலாம்.

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க திகழ்மிளிர்.

பெயரே கவிதைதான்!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கோபி.

ரெண்டு கப்பையும் காலி பண்ணிட்டு இங்கே அனுப்புங்க.

அடுத்தமுறை நைவேத்தியம் வைக்க அது வேணும்:-)

சாமிக்கே அளவுச் சாப்பாடுதான் நம்மூட்டுலே!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

மங்கை வாங்க வாங்க.

பொங்கலில் பாகு ஊத்திக் கிளறும்போதே உங்களை நினைச்சுக்கிட்டேன்.

நம்ம மக்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகாரம் இருக்கே:-))))

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க நானானி.

புத்தம் புதூசா வேண்டி இருக்கேப்பா:-)))))


இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க தெய்வசுகந்தி.

நல்லநாளும் அதுவுமா தெய்வீகமணம், அள்ளிக்கிட்டுப் போகுது.

ஆமாம்...... தெய்வீகமணமுன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது.

இந்த சவ்வாது பவுடரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமுன்னு நம்ம மக்கள் யாராவது சொன்னால் நலம். கிரியில் பார்த்து ஒன்னு வாங்கிவந்தேன். சந்தனத்தில் கொஞ்சம் கலந்தப்ப அப்படியே தெய்வீக மணம்)

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

பொங்கலோ பொங்கல் பாட்டு அருமை.
கோபாலையும் கேக்கச் சொல்லி இருக்கேன் சீனாவில் இருந்து!

said...

உங்களுக்கும் கோபால் சார்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் டீச்சர்..

பொங்கல் படத்துலயே அள்ளுது.. ம்ம்ம்.. சாப்பிட முடியலயே...:(((

said...

வாங்க வெண்பூ.

ஏன் அள்ளாது? ஆண்டாளம்மா கொடுத்த ரெஸிபியாச்சே......:-)))))

மூடநெய் பெய்து, முழங்கை வழிவார.....


இனிய வாழ்த்து(க்)கள்.

said...

நானும் உங்கள் பொங்கல் பதிவை மிஸ் பண்ணிவிட்டேன். கண்டு களிக்க முடியாமல் போய்விட்டது.

said...

வாங்க கோவியாரே.

உங்க வீட்டுலே செய்வதுபோல சம்பிரதாயமான பொங்கல் இப்பெல்லாம் வைக்கறதில்லை.
கரும்பு, மஞ்சள், இஞ்சின்னு கடுதாசியில் எழுதி வச்சுக்கணும்.
எல்லாமே 'சுருக்'தான்.