Wednesday, October 29, 2008

இதெல்லாம் என்னன்னு கொஞ்சம் பாருங்களேன்.

புதிர் வகையில் சேர்த்துறலாமான்னு இருக்கேன். தமிழை இப்படி 'முழி' பெயர்த்து இருக்காங்க!

கொஞ்சம் சிரிச்சு வைக்கலாமேன்னு:-))))))


******************
Love has started
It gives me happiness
I didn't sleep from 7 to 8 days
thinking you
**********************

If both we join together, it is a festival
our eyes and hands have joined.
It is a good time.
*************************
It's a non sleeping day.
Don't sleep
We won't sleep on
our first night
************************

Your touch is like jasmine & cool like konai!
This girl will live & talk with me forever
******************************
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

38 comments:

said...

நான் முதல்

said...

துளசி
தீபாவளி வாழ்த்துகள்
அன்புடன்
செல்லி

said...

யாரு டீச்சர் இப்படி முழி பெயர்த்தது.

:)))))))))))))

said...

உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர் அம்மா

said...

யாருப்பா எழுதினது. ஆங்கிலத்தில் எழுதி மொழி பெயர்க்கச் சொல்றாங்களா:)

said...

காதல் வந்திருச்சி ஆசையில் ஓடி வந்தேன்

said...

வாழ்த்துக்கள் மேடம்.

வாழ்த்த வருபவர்களை வாய் நிறைந்த சிரிப்போடு அனுப்பி வைக்கிறீர்கள்.

said...

கொனையா?? அப்டீன்னா:0)

said...

தமிழ்ப் பாட்டுப் போட்டு விடுங்கப்பா. மண்டை காயுது.

said...

வாங்க பெருசு.

முதலா வந்தது சரி. விசயத்தைச் சொல்லாமப்போனா எப்படி? :-))))

said...

வாங்க செல்லி.

உங்களுக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க தூயா.

வெறும் சிரிப்பா?

என்ன பாட்டுக்கள்ன்னு தெரிஞ்சால் இன்னும் சிரிப்புத்தான்:-))))

said...

வாங்க குடுகுடுப்பை.

'யாரு'ன்றதா இப்ப முக்கியம். அதுக்கெல்லாம் ஆள் இருக்காங்க பாஸ்!

பாட்டுக்களைக் கண்டிபிடியுங்க.

said...

வாங்க நசரேயன்.

உங்களுக்கும் அன்பான வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

ச்சும்மாச் சிரிச்சுட்டுப்போகாமல் புதிரையும் விடுவிக்கப் பாருங்க:-)

said...

வாங்க வல்லி.

தமிழ்ச் சினிமாப் பாட்டுக்கள்தான்ப்பா!!!

இப்படி முழி பெயர்த்துவச்சுருக்காங்க.

இதுவரை வந்த பின்னூட்டங்களில் நீங்க ஒருத்தர்தான் பாட்டுக்கு முழிபெயர்ப்புன்றதைக் கண்டுபிடிச்சீங்க. அதுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!!!

நாலே பாட்டுதான் போட்டுருக்கேன்.

முயற்சி திருவினை ஆகும்:-)

said...

வழக்கம் போல் புதிருக்கான விடைக்காகக் காத்திருக்கிறேன்

said...

கவிதைகள் எல்லாம் சூப்பர்...
(ஹிஹிஹிஹி புரியல அதனால டெம்ப்ளேட்டை மட்டும் போட்டுட்டு அப்பீட்டாகிக்கிறேன்.. ;)))

said...

கொனையா?? அப்டீன்னா:0)

??????????

said...

வாங்க சீனா.

விடை? வழக்கம்போல் நாளை:-)

said...

கொஞ்சம் லேட்டான தீபாவளி வாழ்த்துக்கள்.. அந்த முழி பெயர்ப்போட ஒரிஜினல் பாட்டை கண்டுபிடிக்க முடியல.. அவ்ளோ அழகா முழி பெயர்த்திருக்காங்க.. :)))

said...

வாங்க தமிழ் பிரியன்.

சூப்பரா முழி பெயர்த்துட்டாங்கன்னு நாளைக்குச் சொல்லப்போறீங்களா? :-)))

said...

வாங்க தருமி.

இந்த கொனை மட்டும்தான் எனக்கும் விளங்கலை. ஆனால் அவுங்க போட்டதை அப்படியே தட்டச்சு செஞ்சேன்.

(ஆமாம். இந்த கொனையைத் தவிர மத்ததெல்லாம் புரிஞ்சு 'போச்சா'?)

said...

வாங்க வெண்பூ.

யாருக்குமே 'முழி' புரியலை என்றதால் ஒரு சின்ன க்ளூ மட்டும் கொடுக்கறேன்.

எல்லாம் சினிமாப் பாட்டுக்கள் தான்:-)

said...

நல்லா "முழி" பெயர்த்திருக்காங்க, மெதுவா வந்து தெரிஞ்சுக்கிறேன்! :)))))

said...

First song is Ram bam bam arambhambam bam bam perinbam, 7 8 natkalachu kanne unnmeethu ekkam kondu thonga villai pennea...correctanu neenga than sollanum.

said...

Ram bam bam arambam bam bam perinbam,7 7 natkalachu kanne unn methu ekkam kondu thoongavillai kanne...eithuthan first songkoda arthamanu sollunga....tamil typing software ippothan download pannivachuiruken..let me pratice.

said...

வாங்க சிந்து.

ஆஹா.... உங்களுது சரியான விடை.

இப்போதைக்கு ரிலீஸ் பண்ணாம வைக்கிறேன். இன்னும் சிலர் முயற்சிக்கட்டும்:-)

said...

வாங்க கீதா.
அவசரமே இல்லை. மெதுவா யோசிச்சு அப்புறமா நாளைக்குச் சொன்னாலும் போதும்:-)

said...

All the songs from Micheal Madhana Kamarajan..sariyanu neenga than sollanum.Malarum nineyvugala madam?

said...

சிந்து,

எல்லா விடையும் சரி:-)

தனித் தனியாச் சொல்லுங்க.
அதான் தமிழ் எழுத்துரு வந்துருச்சே:-)

said...

ரம்பம் பம் ஆரம்பம் பம் பம் தனின்பம்

சுந்தரன் நானும் சுந்தரி நீயும் செர்திருந்தால் திருஓணம்

பெர் வச்சாலும் வக்காம பொனாலும்

pls excuse me...i took 1 hour to type this.

said...

சிந்து,

தேறிட்டீங்க. வெல்டன்!!!!

இனி அடுத்தபடி ஒரு பதிவு போடவேண்டியதுதான்.

ஒன்னாப்புலே இருந்து ரெண்டாப்புக்கு பாஸ்:-)

said...

;-)

வாழ்த்துக்கள் டீச்சர் ;)

said...

வாங்க கோபி.

நாலைஞ்சு டெம்ப்ளேட் பின்னூட்டம் வச்சுருக்கீங்க. அதுலே இருந்து ஒன்னுதானே இங்கே?

பொருத்தமானதைப் போட்டுருக்கலாமுல்லெ:-)))

said...

oo ஓஹோ இப்படிப் போறதா கவுஜை:)

மில்கும் ஃப்ரூட்டும் ஹாண்டில் ஏந்தி மாதிரி.....

said...

அடப்பாவமே. இதை நானு பாக்கவே இல்லையே...

1. two eyes are yours
eyelids are yours
dreams only mine mine
days are gone
when you went somewhere
why punishment
me live here
only thought
your thought

:)))))
ஏதோ நம்மால முடிஞ்சது:)

said...

மது,

என்ன பாட்டுன்னு கவிதாயினி விளக்கம் கொடுங்கப்பா:-)))

கண்களும் உனதே இமைகளும் உனதே
கனவு மட்டும் எனதே:-))))