Wednesday, July 16, 2008

பழனி மலை முருகா பழம் நீ திருக்குமரா (ஃபிஜிப் பயணம் பகுதி 2)

நேத்துச் சொல்லி வச்சுருந்த வாடகைக்கார் இன்னிக்குக் கிடைச்சது. சுதந்திரமா அங்கே இங்கே சுத்தணுமுன்னா போக்குவரத்துச் சாதனம் எவ்வளோ அவசியமுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? கிளம்பிப் போகுமுன் ஏர்ப்போர்ட்லே விட்டுறலாமுன்னு பேசி(?) முடிச்சோம். பட்ஜெட் ரெண்டல் கார். ஏஸி இருக்கான்னு பார்த்துக்கிட்டோம். நம்ம கம்பெனிக்குத்தான் வண்டியைக் கொண்டுவரச் சொல்லி இருந்துச்சு.


அது என்ன இவ்வளோ உரிமையோட நம்ம கம்பெனி'ன்னு சொல்றேன்? இதை ஆரம்பிக்கத்தானே இந்தியாவிலிருந்து கிளம்பி வந்தோம்:-) போன பகுதியில் குறிப்பிட்டிருந்த தீபக் (அண்ணன்) பைய்யாதான் பூனாவில் நம்ம வீட்டுக்கே வந்து கோபாலை இண்ட்டர்வியூ செஞ்சவர். அப்ப, அவர் இங்கே தலைநகரில் சிட்டிக் கவுன்ஸிலில் சீஃப் எஞ்சிநீயரா இருந்தார். இப்ப ஒரு பத்து வருசமாச்சாம் ஓய்வு வாங்கி. ஆனால் இப்பத்தான் இவர் ரொம்ப பிஸின்னு அண்ணி சொன்னாங்க. ஃபிஜியின் தலைநகரான சுவா(Suva City)வில் இருக்கும் இவர்கள் சமூக சங்கத்துக்கு கடந்த மூணு வருசங்களாத் தலைவர் பதவியில் இருக்கார். இவர்கள் சங்கம் அங்கே மட்டும் 4 பள்ளிக்கூடம் நடத்தறாங்க. எல்லாமே இலவசப் பாடசாலைகள்தான். (கல்வியில் பணம் கறக்க இன்னும் கத்துக்கலை) அரசாங்க உதவியும், இவர்கள் சமூகத்தினர் கொடுக்கும் நன்கொடைகளும் போதுமானதாக இருக்காம். பள்ளிக்கூடத்துக்கான கட்டிடங்கள் கட்டுவது, சங்க வேலைகள்னு வாழ்க்கை ஓடுதாம்.



காரை எடுத்துக்கிட்டு நா(ன்)டி வரை போய் வரலாமுன்னு கிளம்பிட்டோம். அங்கேதான் ஸ்ரீ சிவ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் இருக்கு. ரோடு இருக்கும் அழகில் நமக்கு அங்கே போய்ச் சேர எப்படியும் 105 நிமிஷம் ஆகும். அதுவரை தலப்புராணம்' சொல்றேன். ' இது பரிட்சைக்கு வரும் பகுதி:-)


ராமசாமிப் பிள்ளை. வயசு 38. மனைவியுடன் வந்துருக்கார். வருசம் 1906, ஏப்ரல் 28. சேலம் ராசிபுரம் பக்கத்தில் சிங்கராந்தபுரம் ஆளு. ( இந்த ஊர்ப்பெயர் சரியான்னு தெரியலை. இவர் சொன்னதைப் புரிஞ்சு வெள்ளைக்காரர் யாரோ எழுதிவச்ச ரெக்கார்ட்.) இதைத்தவிர வேற குறிப்பு ஒன்னும் இல்லை பதிவேடுகளில். வெள்ளைக்காரன் செஞ்ச அக்கிரமமுன்னு சொல்லணுமுன்னா இப்படி, எங்கே எவ்வளோ தூரமுன்னு ஒன்னும் சொல்லாம ஆட்களைப் பிfடிச்சுக் கொண்டுவந்து இங்கே கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய விட்டதுதான். ( இதை பற்றி விரிவா கரும்புத்தோட்டத்திலே என்னும் தொடரில் சில வருசங்களுக்கு முன் எழுதி இருக்கேன்)



இப்ப நாமெல்லாமும்தான் வெளிநாட்டில் வேலைக்குன்னு போறோம். இது நம்முடைய சொந்த விருப்பம். போற இடத்தில் நமக்கு எதாவது உதவின்னா நம்ம அரசாங்கத்து ஹை கமிஷன் இருக்கு. அப்ப அந்தக் காலத்தில் இதெல்லாம் ஏது?



அங்கே போனபிறகு அவங்களைக் கூட்டி வச்சு அஞ்சுவருசம் வேலை செஞ்சுட்டா விட்டுருவோமுன்னு அக்ரிமெண்ட் போட்டுருவாங்களாம். மாட்டேன்னு சொல்ல முடியாது. வேணாமுன்னாலும் எப்படித் திரும்பி வரமுடியும்? 8000 மைல்கள் நீந்தியா?



பிள்ளைக்கும் அஞ்சு வருச ஒப்பந்தம், நடந்து முடிஞ்சது. அதுக்குப்பிறகு திரும்பி இந்தியா வர பயணத்துக்கு ஏற்பாடு ஒன்னுமே இல்லையே. ஒப்பந்தக் கூலியா இல்லாம சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சுக்கிட்டு அங்கே இருந்தார். ஊர் நினைவுகள் கொசுவத்தியாச் சுத்திக்கிட்டு இருந்துருக்கு. ரொம்ப தெய்வபக்தி உள்ள மனுசர் என்றதால் கோயில்னு ஒன்னு இங்கே இல்லையேன்னு கவலைப்பட்டுருக்கார். கையில் இருந்தக் கொஞ்சம் காசை வச்சு, நதிக்கரையில் இருக்கும் ஒரு ஏக்கருக்குக் கொஞ்சம் கூடுதலா இருந்த ஒரு இடத்தை லீஸ் (15 ஷில்லிங் வருசத்துக்குன்னு) எடுத்துருக்கார். இங்கே எல்லா நிலங்களும் ஃபிஜியன்களுக்குச் சொந்தம். அதுவும் தனிப்பட்ட ஃபிஜியன் இல்லை. அந்தந்த கிராமக் குழுக்களுக்குச் சொந்தம். 99 வருச ஒப்பந்தம் போட்டுக்கலாம். இதைப் பத்தி அப்புறமாச் சொல்றேன். (1987 புரட்சி நடந்த பிறகு ஒரு சில இடத்தை மட்டும், முக்கியமா கம்யூனிட்டிக்கு பயனா இருக்கும் இடங்களைப் போனாப்போகுதுன்னு ஃப்ரீ ஹோல்டா ஆக்குனாங்களாம். அதுலே புதுக் கோவில் இருக்கும் இடம் ஒன்னு.)

மேற்கே பார்த்த ஒரு குடிசைதான் கோவில். அதுக்குள்ளே எந்த மாதிரி சாமி சிலை இருந்துச்சு என்றதுக்கெல்லாம் குறிப்புகள் ஏதும் கிடைக்கலை. ஃபிஜித்தீவுகளில் வருசாவருசம் புயல் திருவிழா வந்துரும். இந்த கூரைக்குடிசை என்னன்னு தாங்கும்?



அங்கே இருக்கும் இன்னும் சில தென்னிந்தியர்கள்கிட்டே பேசுனப்ப எல்லாருமா சின்னச்சின்னதா காசு உதவி இருக்காங்க. குறிப்பா ஏன் தென்னிந்தியர்ன்னு சொல்றேன்னா....... அங்கே வேலைக்காகக் கொண்டுவரப்பட்ட இந்திய மக்களில் முதன்முதலா வந்தவங்க(1879 வருசம்) உத்திரப் பிரதேசம், போஜ்புரி, பீஹார், ஒரிஸ்ஸான்னு வடக்கத்து மக்கள். (அதான் ஹிந்தி அங்கே அங்கீகரிச்ச அரசு மொழியா இடம் வாங்கிருச்சு). அவுங்களுக்கு தென்னிந்திய மக்கள்ன்னா கொஞ்சம் மதிப்புக் குறைவுதான். யேத் தோ மந்த்ராஜி (மதராஸி)ஹை.............



இந்த மாதிரி இந்தியாவிலே இருந்து ஆள் புடிச்சுக்கிட்டு வந்த கொடுமை 1916 வருசம் நின்னுபோச்சு. ஆனா இந்த 37 வருசங்களில் சுமார் 61 ஆயிரம் பேரைக் கொண்டுவந்துட்டாங்க.



பாவம் நம்ம ஜனங்க பொறுமையா இருந்துருக்காங்க. வேற என்ன செய்ய முடியும் சொல்லுங்க. போக்குவரத்துக்கு ஒன்னும் இல்லாத காலம். எல்லாருமே ஏழைகள். வச்சுக்கிட்டா வஞ்சனை? அந்தக் காசை வாங்கவே பத்து நடை நடக்கணுமாம்.



சிலபேர் சேர்ந்துக் கோயிலைக் கட்டச் செங்கல் செய்யலாமுன்னு தீர்மானிச்சு களிமண்ணுலே செங்கல் செஞ்சு 'சூளை' மாதிரி ஒன்னு தயாராக்கிச் சுட்டு எடுத்து ஒரு வழியா சின்ன அறைபோல ஒன்னு கட்டிட்டாங்க. முன் மண்டபமா ஒரு வராந்தாவில் மேற்கூரையா தகரம் போட்டுக் கோயில் வந்துருச்சு. இது நடந்த காலக்கட்டம் 1914/1915 ஆக இருக்கலாமுன்னு கோவில் குறிப்புகள் சொல்லுது.


படம்: நாங்கள் அங்கிருந்தப்ப (1982)கோயில் இப்படி இருந்துச்சு.



கோவிலுக்குக் கொடிமரம் வேணுமுன்னு வேற ஒரு இடத்துலே இருந்து 40 அடி நீள மரத்தைக் கொண்டுவந்தாங்க. எப்படி? அதான் கரும்பு ஆலைக்கு கரும்பு ஏத்திவரும் ரயில் வருதே. வேற எந்த விதமான போக்குவரத்து வாகனமும் இல்லாததால் வெள்ளைக்காரங்க போட்டுக் கொடுத்த ரயில் வண்டி காலியாப் போகும்போது அதுலே ஓசியாத் தொத்திக்கிட்டுப் போறதுதான். இது எந்த மாதிரி ரயில்?



நம்மூர் குழந்தைகள் பூங்காவிலே புள்ளைகளுக்காக ஓடும் பொம்மை ரயில்தான். ரெண்டு தண்டவாளத்துக்கும் இடையில் ரெண்டடிதான் இருக்கும். பயங்கர வேகத்தில்(!) போகும். எப்ப வேணுமுன்னாலும் ஏறலாம் இறங்கலாம்.
ரோடுகளில் குறுக்கும் நெடுக்குமா போய்க்கிட்டு இருக்கும். கரும்பில்லாமக் காலியா இருந்தா இந்தப் பக்கம் ஏறி அந்தப் பக்கம் இறங்கிக்கலாம். இதுக்குப்பெயர் ஷுகர் கேன் எக்ஸ்ப்ரெஸ் (Sugarcane Express).குதிரைகள் இழுத்துக்கிட்டுப் போகுமாம்.




படம்: இப்ப டீஸலில் ஓடும் ரயில்.



இந்த ரயிலில் மூணு பெட்டிகளைக் கெஞ்சிக்கேட்டு அதுலே மரத்தை நீட்டிவச்சுக் கொண்டு வந்தாங்க. ஒரு வளைவில் ரயில் திரும்பும்போது மரம் உருண்டு விழுந்து ரெண்டா உடைஞ்சுருச்சு(-: அதே மரத்தை, ரெண்டு துண்டுகளையும் சேர்த்துக் கொஞ்சம் ரிப்பேர் செஞ்சு கொடிமரமும் நட்டாச்சு. இது நடந்தது 1917ல்.



அப்பு நாயர் என்றவர் முருகனுக்குக் காவடி எடுத்து 60 மைல்தூரம் நடந்துவந்து வழிபாடு செஞ்சாராம் 1920இல். இதுதான் முதல் காவடி வழிபாடு அங்கே.



சில வருசங்களுக்குப் பிறகு தென்காசிக்காரர் ஒருத்தர்( எம் என் நாயுடு) அங்கே எதாவது வியாபாரம் செய்யலாமுன்னு வந்துருக்கார். இருக்கற நாட்டையெல்லாம் விட்டுட்டு அங்கே ஏன் வந்தாருன்னு அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவர் 1924 லே ஊருக்கு வந்து போகத் திட்டம் போட்டப்ப, கோயிலுக்கு சாமி சிலை ஒன்னு ஏற்பாடு செய்ய முடியுமான்னு கேட்டுருக்கார் பிள்ளை.




மூலவரும் சாமித் தாத்தாவும்(1984) பழைய கோவிலில்( இவரைப்பற்றி அடுத்த பகுதியில்)



நாயுடு தென்காசியில் ஒரு தண்டாயுதபாணி சிலைக்கு ஏற்பாடு செஞ்சுட்டார். கற்சிலை தயாராகி நாயுடுவின் உறவினர்கள் மூலமா கப்பலில் பயணப் பட்டுருக்கு. சிலை வந்து சேர்ந்தது 1926. பயணம் முருகனுக்கு ஆகலை. சாமிக்கு வலது காலில் பாதத்துக்கு மேல் விரிசல் விட்டுருந்துச்சு. கையில் பிடிச்சிருந்த தண்டம் உடைஞ்சு போய் இருந்துச்சு. என்ன செய்யறதுன்னு குழப்பமா இருந்தாலும் வேற சிலை இனி எப்படி எங்கே எப்போ வாங்குவதுன்னு தெரியாததால் அந்தச் சிலையையே பிரதிஷ்டை செஞ்சாங்க. இதெல்லாம் ஆகம விதிகளின்படி சரியில்லை என்ற விவரமெல்லாம் (அப்போது) யாரு கண்டா?


கால் உடைஞ்ச மூலவருக்கும், இடுப்பு உடைஞ்ச கொடிமரத்துக்கும் ஒரே மாதிரிக் கணக்கு சரி ஆச்சு. இதே வருசம் 1926 இல் சாது குப்புசாமி என்றவர் (அவரைப்பத்தி முந்தி எழுதுனது இங்கே இருக்கு) தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ( TISIS)




இவர் ஒரு போலீஸ்காரரா மெட்ராஸ் ராஜதானியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர் அதை விட்டுட்டு இங்கே ஃப்ரான்ஸிஸ் என்ற வெள்ளைக்காரரின்
உதவியாளரா 1912 லே ஃபிஜி வந்து சேர்ந்துருக்கார். இந்த சங்கம் நம்ம பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் எல்லாம் கட்டுனாங்க. மொழி இல்லாமப்போனா பிள்ளைகளுக்கு நம்ம பாரம்பரியம், கலை கலாச்சாரம் தெரியாமப் போயிருமேன்னு இந்தப் பள்ளிக்கூடங்களில் தமிழும் தெலுங்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சது அப்போதான். (இப்போ 21 ஆரம்பப் பள்ளிக்கூடங்களும் 5 உயர்நிலைப்பள்ளிகளும் இருக்கு. இங்கே எல்லாருக்கும் ஃபிஜியன் மொழிகூடச் சொல்லித் தர்றாங்க. ஆனா.... தமிழ்?)



இதுலே பெண்களையும் இளைஞர்களையும் சேர்த்துப் பொது சேவை செய்யத் திட்டம் போட்டு ஒரு மாதர் சங்கமும், வாலிபர் சங்கமும் உருவாக்கினாங்க.
இன்னும் ஒரு 5 வருசம் கழிச்சு 1931 லே உற்சவ மூர்த்திகள் ஐம்பொன் சிலைகளா வந்து சேர்ந்தாங்க. குமாரசாமி, சின்னய்யா, குப்புசாமி, வேலாயுதன் கவுண்டர்களும், வெங்கட், கிருஷ்ணா, கோபால் ரெட்டிகளுமாச் சேர்ந்துக் காசைப்போட்டு, அந்தக் காலக்கட்டத்தில் ஊருக்குப்போன ஏகம்பர ரெட்டி மூலமா வரழைச்சாங்களாம். சிலை வந்த நாள் இங்கே திருக்கல்யாண உற்சவம் நடத்துனாங்களாம்.



எல்லாரும் இங்கே தங்கள் சாதிகளைச் 'சர் நேம்' ஆக வச்சுக்கிட்டாலும் ஒன்னுமண்ணாத்தான் இருக்காங்க. ஜாதிச் சண்டைகள் ஒன்னும் இதுவரை இல்லை. கலியாணம் காட்சின்னு எல்லாரும் எல்லாச் சாதிகளிலும் பொண்ணு எடுத்துக்கறாங்க. உசத்தி, மட்டமுன்னு ஒன்னும் கிடையாது. ஆனா தென்னிந்தியா, வட இந்தியான்னு பிரிவுகள் சம்பந்தம் வச்சுக்கறதில்லை. அதிலும் காதல் கல்யாணங்கள் சில நடந்துருது. 'வோ (த்) தோ ஹிந்துஸ்தானி. மகர் ஹம் மந்த்ராஜி' னு பொண்ணுங்க சொல்றதைக் கேட்டுருக்கேன்:-)



பிள்ளைக்கு ஊரோடு போய்ச் சேரணுமுன்னு மனசுலே எண்ணம் வந்துச்சு. ( நாமும் இப்படித்தானே பல சமயங்களில் நினைக்கிறோம். பேசாம மூட்டையைக் கட்டலாமான்னு) கோயில் இருந்த இடத்தை பக்கத்து நிலத்தை ஒப்பந்தம் செஞ்சுருந்த ' ஜஹூர் கான்' என்றவர், தானே இந்த இடத்தையும் வாங்கிக்கறேன்னு சொல்லி இருக்கார். கோயிலும் போயிருமேன்ற பயத்துலே அய்யாக்கண்ணு என்பவர் நான் வாங்கி நடத்தறேன்னதும், சில பல பக்தர்கள் ஒன்னு சேர்ந்து விவாதிச்சு, கோவில் ஒருத்தரின் தனிப்பட்ட இடமா இருந்தா பிற்காலத்துலே கஷ்டம். பேசாம எல்லாருமாச் சேர்ந்து வாங்கிறலாமுன்னு முடிவாச்சு. ஆசை இருக்கு. ஆனால் காசு? போலா மகாஜன் என்ற வட இந்தியர் (ஹிந்துஸ்த்தானி) காசு கடன் கொடுக்கறேன்னு சொன்னதும் அப்படியே வாங்கினாங்க. காசு வாங்குனதால் அவரையே கோவிலுக்கு ட்ரஸ்டியா ஆக்கினாங்க. இவர்தான் முதல் ட்ரஸ்டி.



சங்கத்தில் இருந்த மாரப்ப கவுண்டர், சுப்பா நாயுடு, மாதவன் நாயர், எம்.என் நாயுடுன்னு வியாபாரிகள் சிலர் ஆளாளுக்குக் கைக்காசு போட்டு போலா மகாஜன் கிட்டே வாங்குன 150$ கடனை அடைச்சுட்டுக் கோவிலை சங்கத்துச் சொத்தா ஆக்கிட்டாங்க. இதெல்லாம் நடந்தது 1934 வது வருசம்.




ரெண்டு வருசம் கழிச்சு(1936) மெட்ராஸ்லே இருந்து இங்கே வந்துருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷினைச்சேர்ந்த ஸ்ரீ அவிநாஷ் ஆனந்தாஜி என்ற சாமியார்
சங்கத்துக்கு மூணு விதிமுறைகளையும் உண்டாக்கிக் கொடுத்தார்.



1. பிடி அரிசித் திட்டம்



2. சங்கத்துக்கு உறுப்பினரா ஆகணுமுன்னா நாலணா கட்டணும்.



3. எல்லாக் கல்யாணங்களையும் கோவிலில் வச்சு நடத்தணும்.



பள்ளிக்கூடத்துலே படிக்கறதுக்காக அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து வந்து இங்கேயே தங்கிப் படிக்கும் பசங்களுக்கு இந்த பிடி அரிசித் திட்டத்தில் கிடைச்சதை வச்சு இலவசமா சோறு போட்டாங்க. வாரம் ஒரு நாள் ஒரு ஏரியான்னு கணக்கு வச்சு மாதர் சங்கம் பெண்கள் வீடுவீடாப்போய் அரிசியை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம்.


இதுவரை இந்தக் கோவிலுக்குப் பிள்ளையார் இல்லாம இருந்தார். சாமியார் வருகையைக் கொண்டாடும் விதமா சம்பூர்ணம்மாள் என்ற பக்தை ஒரு பிள்ளையார் சந்நிதியைக் கட்டிக்கொடுத்தார். இதுக்குப் பிள்ளையார் சிலை வேணுமுல்லே? கொடிமரத்துக்கு மரம் எடுத்த அதே டாங்கி டாங்கி(Tagi Tagi) என்ற கிராமத்துலே ( அங்கேயும் இதுக்குள்ளே ஒரு கோயில் வந்துருச்சு)கிடைச்சக் கருங்கல்லுலே செதுக்கித் தர்றோமுன்னு ஒருத்தர் சொல்லி இருந்தார். சிலை வடிவு அருமையா அமைஞ்சதுலே அங்கே இருக்கும் ஜனங்களுக்கு இதை நாமே வச்சுக்கணுமுன்னு தோணிப்போயிருக்கு.

புள்ளையாரை ஒளிச்சு வச்சுட்டாங்க.

அப்புறம்?





அடடே ((புதுக்) கோவிலுக்கு வந்து சேர்ந்துட்டோம். 12 மணிக்குக் கோவிலை அடைச்சுருவாங்க. இப்பவே 11.45 ஆயிருச்சு. சாமி கும்பிட்டுட்டு வந்து மீதியைச் சொல்றேன்.


கல்யாண வீட்டு விஷயங்கள்:


இரண்டாம் நாள்.


காலை நிகழ்ச்சிகள் என்ன நடந்ததுன்னு தெரியாது. நாம்தான் நா(ன்)டி கோயிலுக்குப் போயிட்டோமே.


இவுங்க குஜராத்தைச் சேர்ந்தவர்கள். கத்ரி ( Khatri) சமூகத்தினர். க்ஷத்ரியர்கள் என்பதுதான் மருவி கத்ரின்னு ஆகி இருக்கு. குஜராத்தில் இருக்கும் நௌஸாரி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். யாரைக்கேட்டாலும் சொந்த ஊர்னு இதைத்தான் சொல்றாங்க. ஒரே ஊர்க்காரங்களா மொத்தமா வந்துட்டாங்க போல இருக்கு.


வந்த புதுசுலே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் இருக்காங்க. யாரும் கரும்புத் தோட்ட வேலைக்கு வரலை. வியாபாரம், துணிக்கடை, தையல்கடைன்னு சின்ன அளவில் ஆரம்பிச்சதுதான். முக்கியமான ஒவ்வொரு டவுனிலும் இவுங்கதான் இப்பவும் கடைகள் நிறைய வச்சுருக்காங்க. ஹார்ட்வேர், சூப்பர் மார்கெட், மருந்துக்கடை, எலெக்ட்ரிக் & எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஜவுளிக்கடைன்னு எக்கச் சக்கம். எல்லாம் ஜப்பானில் இருந்து நேரடி இறக்குமதி. தரமான பொருட்கள். அழகழகான புடவைகள் ஜப்பான்காரன் செஞ்சு அனுப்பறான். இது இல்லாமல் நிறைய தொழிற்சாலைகள் ஆரம்பிச்சதும் வளமான வாழ்க்கை இவுங்களுக்கு மட்டுமில்லாம மற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைச்சு நாடும் நல்லா ஆகி இருக்கு.
அதிலும் தீவின் மேற்கில் இருக்கும் இந்த ஊர் MBA பா தான் நாட்டின் பொருளாதரத்தின் முதுகெலும்பு. அழகான பிரமாண்டமான வீடுகள் இங்கேதான் அதிகம்.


எல்லா முக்கிய டவுன்களிலும் கத்ரி ஹால் கட்டிவச்சுருக்காங்க. ஊர் முழுசுக்கும் சமைக்கப் பாத்திரங்கள், சாப்பாடு பரிமாறும் பாத்திரங்கள்,
பந்தி போட நீண்ட மேசை, இருக்கைகள்ன்னு அவுங்களுக்குள்ளேயே வசூல் செஞ்சு அமர்க்களமா வச்சுருக்காங்க. இவுங்க சமூகத்தின் பயனுக்குப்போக மற்றவர்களுக்கு வாடகைக்கும் விட்டு, அதுலே வரும் வருமானத்தில் ஹால் பராமரிப்பு. தன்னிறைவான சமூகமுன்னா இந்தக் கத்ரிகளைத்தான் சொல்லணும். ஊர் ஊருக்கு ராதாகிருஷ்ணா கோயிலும் (மார்பிள் சிலை) கட்டிவச்சுருக்கறதும் இவுங்கதான். (அம்பானிகளும் இந்த சமூகத்தினர் என்பது ஒரு கூடுதல் தகவல்)



மாலையில் வீட்டில் ஒரு பார்ட்டி. முன்புறம் விசாலமான பந்தல் போட்டு கலர் லைட்ஸ் எல்லாம் பளிச் பளிச்ன்னு ஜொலிச்சுக்கிட்டு இருக்கு. ஆண்கள் எல்லாரும் பாரில். வெளியே ஒரு 'சில்லர்' வச்சு தீர்த்தங்கள், ஜில்லுன்னு பரிமாறிக்கிட்டு இருக்காங்க. பெண்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே ஹாலில், நொறுக்ஸும் ஜூஸுமா அமர்க்களப்படுது.



அப்புறம் சாப்பாட்டு பந்தி. கல்யாணவீட்டுச் சாப்பாடு எல்லாம் தினம் ஒரு வகையான மீன் ஐட்டங்கள். வெஜிடேரியன்களுக்கு ரெண்டு வகைக் கறிகள். ருமால் ரோட்லி, சோறு, கொஞ்சமா இனிப்புச் சேர்த்த (பருப்பு)தால்.


ஒரு நூத்தம்பது பேருக்கு ரெண்டு வேளையும் மெல்லிசா ருமாலி ரொட்டி செய்யணுமுன்னா.................


தொடரும்............:-)))))



47 comments:

said...

எவ்வளவு விஷயங்கள். அத்தனையும் இப்படி சுவையா எழுத துளசி மேடத்தால தான் முடியும். பின்னி பெடலெடுக்கும் பதிவு. அசத்தல்.ரொம்ப ரசிச்சி படிச்சேன்.

said...

வாங்க பிரேம்ஜி.

//ரொம்ப ரசிச்சி படிச்சேன்//

அப்பாடா.........

நீளம் கூடிப்போச்சோன்னு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்துச்சு. ஆனா எங்கே 'கட்' செய்யணுமுன்னு ஒரு தவிப்பு.

இனி இதுபோல நீளமா அமையும் பதிவுகளை அடுத்தடுத்து ரெண்டுநாளாப் பிரிச்சுப்போடலாமுன்னு இருக்கேன்.

உண்மைத்தமிழனுக்குப் போட்டின்னு யாரும் நினைச்சுறக்கூடாது பாருங்க:-))))

said...

எங்களூர் அப்பனின் (பழனி முருகன்) பெயரைப் பார்த்ததும் ஆவலாய் படிக்க வந்தனன். இங்ஙென்னாடாவென்றால் கடல்கடந்து கோயில்கொண்ட கந்தவேலின் கதை! குன்றிருக்குமிடமெல்லாம் சொல்லப்பட்ட கதை. மாங்கனிக்காய் நடந்த ஒரு எத்திக்கும் தித்திக்கும் கதை! நன்றி!

said...

டீச்சர்,

ஏகப்பட்ட செய்திகள், படங்கள், சுவாரஸ்யங்கள். வழக்கம் போல இனிமையாக இருந்தது பதிவு படிப்பதற்கு

said...

வாங்க செல்லா.

முருகன் எப்படி 'ஓசை'யின்றி ஆசையாய் வந்துட்டான் பாருங்க:-)

said...

வாங்க சதங்கா.

இனிமையா இருந்ததுன்னு நீங்க சொன்னதைக் கேக்கவே எனக்கு இனிமையா இருக்கு:-)))

said...

நீளம் அதிகமானாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத தகவல்கள். ஒரே பகுதியா தந்தாலும் படிப்போம் நாங்க. ஏன்னா பிள்ளையார் பிறகு எங்கே அமர்ந்தார் அருள் பாலிக்க என சஸ்பென்ஸில் அல்லவா நிற்கிறது..?

//அதுவரை தலப்புராணம்' சொல்றேன். ' இது பரிட்சைக்கு வரும் பகுதி:-)//

எல்லோரும் குறிச்சு வச்சுக்கோங்க:)!

said...

//புள்ளையாரை ஒளிச்சு வச்சுட்டாங்க.//

என்னய்யா இது ! புதுசா ஒரு பிள்ளையாரு நம்ம வீட்டாண்டை வந்திருக்குன்னு
பார்த்தா அது உங்க ஊரு பிள்ளையாரா ! கவலைப்படாதீக .. எங்க பக்கத்திலே தான்
இருக்கு.

//(புதுக்) கோவிலுக்கு வந்து சேர்ந்துட்டோம். 12 மணிக்குக் கோவிலை அடைச்சுருவாங்க. இப்பவே 11.45 ஆயிருச்சு. சாமி கும்பிட்டுட்டு வந்து மீதியைச் சொல்றேன். //

அதே தான் அப்படியே வீடியோ எடுத்து இங்க நாங்க போட்டிருக்கோம்ல..

http://ceebrospark.blogspot.com

துளசி டீச்சர் வாய் திறந்து சொன்ன முகூர்த்தம் எங்க அபார்ட்மென்ட் லேயும்
இப்படி ஒரு வினாயகர் கோவில் வரணும். அதற்கு அந்த வினாயகர்
அருளும் வேண்டும். ஆமாம். கட்டி முடிச்சோன்ன துளசி டீச்சர் வந்து
கோவில் கும்பாபிஷேகத்துலே கலந்துக்கணும்.

இங்கே வரவங்க எல்லோரும் இந்த சுட்டிக்கு வந்து வினாயகர்
பிரசாதம் வாங்கிகினு போங்க.

சுப்பு தாத்தா.
தஞ்சை.
http://ceebrospark.blogspot.com

said...

அட்டகாசம் துளசி.. முருகன்கோயில் கதை.
ம் அப்பறம்...

said...

/ ஏன்னா பிள்ளையார் பிறகு எங்கே அமர்ந்தார் அருள் பாலிக்க என சஸ்பென்ஸில் அல்லவா நிற்கிறது//

சஸ்பென்ஸே இல்லை. அவர் இங்கே சென்னைலே தான் இருக்காரு. அருள் பாலிக்கராரு.
ஏதுய்யா திடீரென்னு எங்க அபார்ட்மென்டுலே ஒரு பிள்ளையாருன்னு பார்த்தேன்.
துளசி டீச்சர் சொன்னப்பிறம் தான் புரிஞ்சது.

விக்னங்களை உண்டாக்குபவனும் அவன் தான்.
விகனங்களைத் தீர்ப்பவனும் அவன் தான்.
அதனால்தான் அவனை விக்னேச்வரன் என்றும்
வினாயகன் என்றும் வழி படுகிறோம்.

ஏம்மா, ராம லக்ஷ்மி, நீங்கள் எல்லாம் ந்யூ சீ வரைக்கும் போவணும்னா எத்தனை விசா, ப்ளேன்
சார்ஜ் எல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதானே வினாயகனே இங்கு வந்து
குந்திகினு இருக்காரு.

வந்து ஒருவாட்டி அந்த பிள்ளையாருக்கு ஒரு பாட்டு கேளுங்கம்மா
இந்தப் பாட்டை உங்கப் பிள்ளைங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுங்கம்மா !

மீனாட்சி பாட்டி.

தஞ்சை.
http://ceebrospark.blogspot.com

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பெரிய சஸ்பென்ஸ் வைக்கத் தெரியலைப்பா இந்த அப்பாவி டீச்சருக்கு:-)

அடுத்த பகுதியைப் படிச்சுட்டு ஆட்டோ அனுப்பாம இருந்தாச் சரி:-)

said...

வாங்க சுப்பு.

எப்ப வச்சுருக்கீங்கன்னு சொல்லுங்க 'டான்'ன்னு வந்துறமாட்டேனா?

அட்லீஸ்ட் மனப்பயணம்:-)

said...

வாங்க கயல்.

முந்தாநாள்தான்(போனா ஞாயிறு) உங்க மலைமந்திர் போயிட்டு, மாலையில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிக்கும்(ஓஸிதானாம்) போயிட்டு வந்துருக்கார் கோபால்.

மலைமந்திர் மயில் ஃபோட்டோக்கூட வந்த்ருக்கு:-)

முருகன் எப்படியெல்லாம் கூப்புடுறான் பாருங்க.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

ஐயோ....என்னன்னு சொல்வேன். யானையாரையும் பாட்டையும் போட்டுத் தூள் கிளப்புறீங்களே!

முருகன் பாட்டுன்னா எனக்கு சீர்காழி பாடுறதுதான். மத்தவங்க எல்லாம் ஒரு படி கீழேதான் இல்லையா?

என்னாக் குரலுன்னு அதிசயிச்சு நிப்பேன்.

said...

விட்டு போன பதிவுகளையும் இப்ப தான் படிச்சேன்.

பாரதியார் கூட ஒரு கவிதை எழுதி இருக்கார் இல்ல,

"கரும்பு தோட்டத்திலே!
இந்த கரும்பு தோட்டத்திலே!"

ஹிஹி, முத ரெண்டு வரி தான் நினைவுல இருக்கு. :))

said...

//உண்மைத்தமிழனுக்குப் போட்டின்னு யாரும் நினைச்சுறக்கூடாது பாருங்க//

முருகன் வேற தலைப்புல வெச்சு இருக்கீங்க, அப்ப நீங்க தான் உண்மை தமிழனா?ன்னு கேக்காம இருந்தா சரி. :p

said...

மிகவும் அருமையாக எழுதி ஆர்வமாப் படிக்க வைக்கிறீங்க டீச்சர்.. :)

said...

துளசி மேடம்,நீங்க எழுதுற ஃபிஜி பயணம், அந்த தீவோட வரலாறையே சொல்ற மாதிரி இருக்கு. டாக்குமெண்ட்ரி போல இல்லாம, ஒரு கதை போல சுவாரசியமா இருக்கு.

இந்தியர்கள் எங்கே போனாலும் அவங்க இறைநம்பிக்கை, கலாசார அடையளத்தை மறக்கறதில்லைன்னு ரொம்ப அழகா பதிவு செஞ்சுருக்கீங்க.. அதுல சஸ்பென்ஸ் வேறே.. :))

said...

//வெள்ளைக்காரன் செஞ்ச அக்கிரமமுன்னு சொல்லணுமுன்னா இப்படி, எங்கே எவ்வளோ தூரமுன்னு ஒன்னும் சொல்லாம ஆட்களைப் பிfடிச்சுக் கொண்டுவந்து இங்கே கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய விட்டதுதான். ( இதை பற்றி விரிவா கரும்புத்தோட்டத்திலே என்னும் தொடரில் சில வருசங்களுக்கு முன் எழுதி இருக்கேன்)//


abhi said:


//விட்டு போன பதிவுகளையும் இப்ப தான் படிச்சேன்.

பாரதியார் கூட ஒரு கவிதை எழுதி இருக்கார் இல்ல,

"கரும்பு தோட்டத்திலே!
இந்த கரும்பு தோட்டத்திலே!"

ஹிஹி, முத ரெண்டு வரி தான் நினைவுல இருக்கு. :))//



ஆகா ! இதுவரை பாரதியின் இந்தப்பாடல் " பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் " எந்த
சந்தர்ப்பத்திலே இயற்றப்பட்டதெனத் தெரியாமலிருந்தேன்.

அபியின் பின்னோட்டம் என்னை உலுக்கிவிட்டு எழுப்பிவிட்டது. திரும்பவும் தங்களது
பதிவினைப் படித்தேன். அன்றைய நாட்களிலே தமிழர் மட்டுமல்ல, வட இந்தியா விலிருந்தும்
கூலி வேலை செய்ய ) எவ்வாறு பிஜி தீவுக்கு
கொண்டு செல்லப்பட்டனர், அவர்கள் பட்ட துன்பமெல்லாம் பாரதி வருணித்திருக்கிறார்.
" கரும்புத்தோட்டத்திலே " எனும் இப்பாடலிலே:

கரும்புத்தோட்டத்திலே = அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே = ஹிந்து
மாதர் தம் நெஞ்சு கொதித்து கொதித்துமெய்
சுருங்குகின்றனரே = அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்ததற்கில்லையோ = செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றனர் = அந்தக் கரும்புத்தோட்டத்திலே

பெண்ணென்று சொல்லிடிலோ = ஒரு
பேயும் இரங்கும் என்பார். தெய்வமே ! நினது
எண்ணம் இரங்காதோ ! அந்த
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கோ
கண்ணற்ற தீவினிலே = தனிக்
காட்டினிற் பெண்கள் புழங்குகின்றன = அந்தக் கரும்புத்தோட்டத்திலே

நாட்டை நினைப்பாரோ = எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? அவர்
விம்மிவிம்மி விம்மி விம்மியழும் குரல்
கேட்டிருப்பாய் காற்றே ! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ? அவர்
விம்மி அழவுந்திறங்கெட்டுப் போயினர். = அந்தக் கரும்புத்தோட்டத்திலே

நெஞ்சம் குமுறுகிறார் = கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் = துன்பப்
பட்டு முடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே = அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ ? ஹே!
வீர கராளி சாமுண்டி காளி = கரும்புத்தோட்டத்திலே

அந்தக் காலத்தில் பெண்கள் தோட்டத்தொழிலாளர் எதிர் நோக்கிய‌
அவமானங்களை பாரதி எடுத்துச் சொன்ன விதம் தான் என்னே ?

அதற்குப் பலன் கிடைத்ததா ? தெரியவில்லை !

துளசி டீச்சர் பிஜி தீவின் சரித்திரத்தை ஆராய்ந்து எங்களுக்கு
இதுபற்றிய விவரம் அளித்திடல் வேண்டும்.


மீனாட்சி பாட்டி.
தஞ்சை.

said...

துளசி,
நீண்ட பதிவு - தகவல்கள் அடங்கிய பதிவு - படிக்கணும் - உள் வாங்கணும் - சிந்திக்கணும் - மறு மொழி சரியாப் போடணும் - இதுகெல்லாம் கொஞ்சநேரம் வேணும் - இப்போதைக்கு உள்ளேன் துளசி மட்டும் தான்

said...

வாங்க அம்பி.

உங்களுக்காகப் பாரதி பாட்டைத் தேடும் சிரமம்கூட எனக்கு வைக்காம மீனாட்சி(அக்கா) பாட்டி பின்னூட்டி இருக்காங்க பாருங்க.

அந்தக் காலத்தில் இந்தப் பாட்டை எழுதுன கணவரிடம், 'எங்கியோ இருக்கும் பிஜித்தீவுப் பெண்களின் கஷ்டம் பற்றி எழுதுனவர் என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கலையே'ன்னு சொன்னதாக்கூட வலையில் எங்கோ படிச்சேன்.

said...

வாங்க ரிஷான்.

தொடர்ந்து வகுப்புக்கு வர்றதுமில்லாமக் கவனமாப் படிக்கிறீங்க. அதுக்கும் சேர்த்து ஒரு நன்றி.

said...

வாங்க தமாம் பாலா.

உண்மையைச் சொன்னாச் சரித்திரம் என்பதே ஒரு சுவாரசியமானதுதான்.

ஆனா அதைப் போரடிக்கும் விதமா நம்மப் பாடப்புத்தகங்களில் எழுதிவச்சுருக்கும் விதம்தான் நமக்கு சரித்திர அலர்ஜியை உண்டாக்கி வச்சுருக்கு.

said...

மீனாட்சி அக்கா....
என்னோட வணக்கங்கள் உங்களுக்கு.

அருமையா முழுப்பாட்டையும் பதிஞ்சதுக்கு என் நன்றிகள்.

முடிஞ்சவரை விரிவா எழுதப்பார்க்கிறேன்.

தங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.

said...

வாங்க சீனா.

ஆறுதலாப் படிங்க. இப்ப என்ன அவசரம்?

தேர்வுக்கு முன் பகுதிகளைப் படிச்சு முடிக்கணும். அம்புட்டுதான்:-)

said...

பாட்டுக்கு ரொம்ப நன்றி மீனாட்சியம்மா (பாட்டிக்கு இது பெட்டர் இல்லையா?) :p

btw, me அபி இல்ல, அம்பி. :))

said...

எங்களையும் தீவுக்கே கூட்டி போய் மினி வேகேஷன் கொடுத்துவிட்டீர்கள். அருமையான எழுத்து நடை துளசி மேடம் :)

said...

// btw, me அபி இல்ல, அம்பி. :))//

அப்ப , அபி அப்பான்னு ஒரு நேயர் வராரே, அவர் வேறயா ?
சரிதான். அவருதானாக்கும்னு நினைச்சேன்.
அபி இல்ல, அம்பி.
சரிதானே !

மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
http://ceebrospark.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

said...

அசத்தல்.
ரொம்ப ரசிச்சி படிச்சேன்
முருகன்கோயில் கதை,அட்டகாசம்
மிகவும் அருமையாக எழுதி ஆர்வமாப் படிக்க வைக்கிறீங்க

said...

வாங்க மதுரை சிட்டிசன்.

முதல் முறையா வந்துருக்கீங்க போல!
நலமா?

நீங்க எல்லாம் ரசிக்கும்படி அமைஞ்சுருக்குன்னு மகிழ்ச்சியா இருக்கு.

தொடர்ந்து வரணும். ஆமா....

சரித்திரத்தில் 'போர் 'இருக்கலாம். ஆனால் சரித்திரமே 'போரா' இருக்கவேணாம் தானே? :-)

said...

வாங்க க.ஜூ.

எட்டுநாள் பயணம்தான். நல்லா அனுபவிச்சேன். அதான்..... உங்களையும்(இப்ப) கூட்டிட்டுப்போறேன்:-)

said...

எந்த இடத்துல கதையை எப்படி நிறுத்தணும்ன்னு உங்க கிட்ட தான் கத்துக்கணும் அக்கா. :-)

கோவில் வரலாற்றை நன்றாக எழுதியிருக்கிறார்கள்/கிறீர்கள். நன்றி.

said...

யீஈச்சர்ர்ர்ர்,

ஓகே, படிச்சாச்சி....கேள்வி சொல்லுங்க. (யாருப்பா, பின்னால உக்காந்து இருக்கறது. பதிலை சின்ன சீட்டுல எழுதி பென்ஞ்சிக்கி கீழ குடுப்பா)

said...

வாங்க குமரன்.

நீஈஈஈஈஈஈண்ட தொடரை எங்கியாவது நிறுத்தணுமேன்னு நினைச்சேன். பிள்ளையார் உதவிக்கு வந்துட்டார்:-))))

said...

வாங்க விஜய.

'அவசரப்படேல்'

இன்னும் பல பகுதிகள் வரும்.

போர்ஷன் முடிச்சாத்தான் பரீட்சை:-)

said...

சாரி டீச்சர், சும்மா ஜாலியா சொன்னது. தப்பா எடுத்துக்க வேணாம். உங்களை விட நல்லா அருமையா சொல்லி கொடுக்க யாராலயும் முடியாது. உங்க கிட்டயே சரியா படிக்கலைனா நாம் பாஸ் ஆக சான்ஸே இல்ல. நெஜமாவே ஆர்வமா, படிச்சேங்க. பரிட்சை வரட்டும் டீச்சர் அப்புறம் பாருங்க.

said...

துளசி அக்கா, நமஸ்தே.. பாக உன்னாரா?? மா இண்டிகி ரண்டி. அக்கட சமையல் லேது.. சஞ்சாரம் லேது.. அதி வேறே ஒக டிப்பரெண்டு வொர்ல்டு! :))

ரிஷான்,சுப்பு தாத்தா,மீனாட்சி பாட்டி மற்றும் எல்லாரும் கூழ் குடிக்க வாங்க !!!!!

bala-win-paarvai.blogspot.com/2008/07/blog-post_20.html

said...

முருகா...

இந்தச் சுற்றுலாவுல என்னைய நெனைக்கும் படியான சந்தர்ப்பம் வந்துச்சுன்னு நீங்க சொன்னப்ப எதுனாலன்னு யோசிச்சேன். இப்பப் புரிஞ்சது. முருகா முருகா...

அதென்னவோ தமிழ்நாட்டுக்காரங்களுக்குன்னு வந்து சேந்தான் இந்த முருகன். எங்க போனாலும் விடாம.

நீங்க தொடர்ந்து சொல்லுங்க டீச்சர். கேக்குறோம்.

said...

வாங்க ராகவன்.

அடுத்த பகுதியைப் போட்டுருக்கேன்.

இப்போதைக்கு அது தமிழ்மணத்தில் வலதுபக்கம் மறுமொழிகள் இருக்கு பாருங்க.அங்கேதான் தெரியுது!

said...

விஜய்,
கலாட்டா செய்யவும் வகுப்புக்கு ஒருத்தர் வேணும் இல்லையா?:-))))

மூணாம் பகுதியத் தேடிப்பிடிச்சுப் படிச்சுட்டுச் சொல்லுங்க பார்க்கலாம்:-)

said...

தமாம் பாலா.

உங்க டிஃப்பரண்ட் ஒர்ல்டு சூசேஸேனு:-)))

said...

மந்த்ராஜி?? அவங்க நம்ம ஊர் நடிகை இல்ல?!! :))

இதுக்கு மேல க்ளாசில் கவனமே இல்லைன்னு சொன்னா திட்டுவீங்க!! :)))

said...

வாங்க கொத்ஸ்.

வரும்போதே இப்படியா? தங்கமணிகிட்டேச் சொல்லி வைக்கணும் போல:-)

நீங்க ஃபிஜிக்குப்போனா நீங்களே ஒரு மந்த்ரா(ஜி) ஆயிருவீங்க:-)

said...

துளசி மாதாஜி..

உண்மையா சொல்லணும்னா நான்தான் உங்களுக்குப் போட்டியா பக்கம், பக்கமா எழுதுறேன்னு நினைக்கிறேன்..

அப்புறம், கடல் கடந்து போனாலும் என் அப்பன் முருகன் தன் பக்தர்களை அழைக்காமல் இருக்க மாட்டான். உண்மையான பக்தர்களால் அவனை நாடாமலும் இருக்க முடியாது.

ரீச்சர்.. பின்றீங்க.. படிக்கத் துவங்கினால் முடிக்காமல் விடக்கூடாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு சுவாரஸ்யம் உங்களது எழுத்தில் இருக்கிறது.

வாழ்க நீவிர்..

said...

நேரில் கதை சொல்வது போல் எளிமையாக,இனிமையாக இருந்தது.நன்றி.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

டிவி சீரியலுக்கு எழுத நானும் வரட்டுமா?

உங்க உதவியாளராத்தான்:-)

said...

வாங்க வேளராசி.

நான் அடிப்படையில் ஒரு கதை சொல்லி. story Teller

எழுதுவது இப்பக் கொஞ்சகாலமாத்தான்.

அடிக்கடி வந்து போவீங்கதானே?
வரணும்.ஆமா...