Tuesday, July 29, 2008

விடை சொன்னால் அடிக்க வராதீங்க.....

அசராம அடிச்சு ஆடுன அன்புள்ளங்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்கறேன்.





இது என்னன்னு இப்பத் தெரியுதுங்களா?


Olive Boat. ஒலிவ ஓடம்.




சும்மா ஒரு கிண்ணத்துலே வச்சுத் தின்னால் ஆகாதா? இந்தப் படகுலே வச்சு ரொம்ப ஸ்டைலாப் பறிமாறணுமாம்!!



ஒரு கடையில் பார்த்தப்ப 'நாவல்ட்டியா' இருக்கேன்னு ஆசையா விலை பார்த்தேன். 20$. சீச்சீ.... இந்தப் படகு, புளிப்பா இருக்கு.



கொஞ்சநாள் போனதும் அதே கடையில் 'சேல் டேபிளில்' உக்கார்ந்து இருக்கு,

ரெண்டு டாலர் ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு. இவரும் 'வேணுமுன்னா வாங்கிக்கோயேன்'னு ரொம்ப தாராள மனசோட சொல்றார். வேணாம் விலை அதிகமா இருக்குன்னு ஒரு வேகத்துலே சொல்லிட்டேன்.



இவர்வேற இருவது டாலர் சாமானை வெறும் ரெண்டுன்னு போட்டுருக்கான். இது அதிகமாப்போச்சான்னு எரியும் தீயில் நெய்யை வார்த்துக்கிட்டு இருக்கார். இவருக்கு நெய் சாப்பிடத்தான் தடா போட்டுருக்கு:-)



பாழாப்போன மனசு கேக்குதா? அடுத்தவாரம் அந்தப் பக்கம் போனப்ப எட்டிப்பார்த்தேன். இன்னும் அங்கேதான் இருக்கு எனக்காகக் காத்துக்கிட்டு. துணிஞ்சு கையில் எடுத்துப் பார்த்தால்........ 50% கழிவு. ஒரு டாலருக்குக் கிடைக்கும்.



அப்புறம்?



புதிர் போடலாமேன்னு வாங்கியாந்தேன்:-)



நம்ம ஹெய்டியும், ராகவனும் பழத்தைச் சரியாக் கண்டு பிடிச்சாங்க. அப்படியும் அவுங்க அரைக்கிணறுதான்:-))))



ஏற்கெனவே திவா...... கடைசி முயற்சியும் செஞ்சு பார்த்துட்டுச் சோகமா இருக்கார்.



சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்காப்பணமுன்னு ஒலிவ ஊறுகாய் வாங்கத்தான் செலவாயிருச்சு. தின்னு தீர்க்கத்தானே போறோமுன்னு சமாதானப்படுத்திக்கிட்டேன்.



நம்ம சந்திரன் 'நாவாய்'ன்னு அழகாச் சொன்னார். அவரையும் அதே கிணத்துலே தள்ளிட்டேன். எதுகான நாவாய்ன்னு சொல்லலை பாருங்க....அதுக்கு:-)

நம்ம நானானி, சின்ன அம்மிணி, ராஜ நடராஜன்( நீங்கதான் அந்த நட்டுவா?)வெயிலான், விவேக் எல்லாம் நாவல்பழமுன்னு சொல்லி எச்சியூற வச்சுட்டாங்க:-)

மறுபடியும் சொல்லிக்கறேன்..... நம்ம வகுப்புக் கண்மணிகளுக்கு நன்றி.

37 comments:

said...

அட முன்னாடியே பாக்காம போனேனே.
ஃபர்ச்ட் ப்ரைஸ் அடிச்சிருக்கலாம்.
:)

said...

/////சும்மா ஒரு கிண்ணத்துலே வச்சுத் தின்னால் ஆகாதா? இந்தப் படகுலே வச்சு ரொம்ப ஸ்டைலாப் பறிமாறணுமாம்!!////

ஓஹோ அவ்வளவுதானா? கொத்தனாருக்கு ஒன்னு வாங்கிக்கொடுங்க சந்தோஷப்படுவாரு!

said...

திரு சுப்பையா அவர்களுக்கு, (அவர்கள் சமூகத்திற்கு அப்படின்னு எழுதணும். ஆனா அதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு ரீச்சர் வகுப்பில் சாதிப் பிரச்சனை அப்படின்னு பேச்சு வரும் என்பதால் அது கட்)

நீங்கள் சென்ற பதிவிலே சொன்ன மானிட்டர் ஆகட்டும், அதற்குப் பின் அன்பு அண்ணன் ஸ்ரீதர் சொன்ன சரக்குகள் ஆகட்டும். இவை அனைத்துக்குமே இந்த ஆலிவ் வழ வழா கொழ கொழா மேட்டர் எல்லாம் உதவாது என்பதால், தங்கத் தலைவி மாதாமகி அவர்களை இந்தக் கப்பல் முழுவதும் நெய்யில் வறுத்த முந்திரி பேக் செய்து அனுப்புமாறும் அதனை தங்கமணிக்குச் சொன்னால் அனுப்புமாறு போய் விளக்குமாறுதான் கிடைக்கும் என்பதால் அந்தத் தவறைச் செய்யாது இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.

இங்ஙனம்

உண்மைத் தொண்டன்*

கொத்ஸ்

*(தலைவருங்க எல்லாம் அப்படித்தான் சொல்லிக்கணுமாமே. இந்த வகுப்புக்கு நான் தலைவர் அப்படின்னு ரீச்சர் சொன்ன ஒரே காரணத்திற்காக நானும் சொல்லிக்கறேன். மத்தபடி ரெண்டு வார்த்தையுமே வழக்கம் போல பொய்தான்!)

said...

வேறெதற்கு உப்யோகப் படும் நாவப்பழம் போன்ற (ஆலிவ் இத்தனை பெரிசா அங்க கிடைக்கும்னு நினைக்கல) இதை வரிசையா அடுக்கி வச்சு சாப்பிட வேண்டியதுதான்னு நான் கூட அட, சத்தியமா நினைச்சேங்க..:)! மறுபடி கிணற்றுக்கு அந்தப் பக்கம்தான்னு ரிமார்க்ஸ் வந்திடுமோன்னு தேமேன்னு போயிட்டேன்:)! தமாம் பாலா பழக் கிண்ணம்னு சொல்லிட்டாரே..:)!

said...

ஹய்யோ ஹய்யோ..

said...

ஆலிவ் வைக்கிறதா?..... நல்லா இருக்கு... ஒரு டாலருக்கு ஓகே டீச்சர்.. :)

said...

அது பழதட்டா.. அது சரி... ஆனா அதை ஒரு டாலருக்கு நீங்க வாங்கியது ஒரு நாளை ய பதிவுப்புதிருக்குன்னு சொன்னீங்க பாருங்க..பதிவுக்காக செலவெல்லாம் செய்யறாங்கப்பான்னு நான் அசந்து போயிட்டேன்..

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................................;எக்கச்சக்க க்ளோசப் போட்டோ போட்டு ஏமாத்திட்டீங்க.

said...

//இன்னும் அங்கேதான் இருக்கு எனக்காகக் காத்துக்கிட்டு//
பின்ன எங்க எல்லோரையும் ஒரு வழி
பண்ணனும்முல்ல? அதுக்குத்தான் காத்திட்டுருந்திருக்கு!!!
செல்லமாவாவது ஒரு அட்றா சக்கை அட்றா சக்கைனு சொல்லணும். ஓகேயா?

said...

வாங்க வல்லி.

இதுக்குத்தான் அடிக்கடி வந்து போகணுங்கறது:-)))

said...

வாங்க வாத்தியார் ஐயா.

அதென்னங்க கொத்தனாருக்கு(மட்டும்) வாங்கிக்கொடுங்கன்னு சொல்றீங்க.

அவர் உங்க வகுப்புக்கும் மானீட்டரா இருப்பதாலா?

said...

வாங்க கொத்ஸ்.
கப்பலில் அனுப்புனா நாறிப்போயிரும் வந்து சேரும்போது(-:

விளக்குமாறுன்னதும் நினைவுக்கு வருது. ஃபிஜி மார்கெட்டுலே வித்துக்கிட்டு இருந்தாங்க!

said...

அடடா நாவல் பழம்னு சொல்லிடலாம்னு நேத்து வந்து பாத்துட்டு எதுக்கு வம்பு?னு சத்தம் போடாம திரும்பிட்டேன். :))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கேமெராவை இன்னும் பக்கத்துலே கொண்டுபோயிருந்தா இன்னும் பெரூசா இருந்துருக்கும்:-))))

தமாம் பாலா சொன்னதுபோல இது பழக்கிண்ணம் இல்லை. (ஊறு)காய்க் கிண்ணம்தான்.

said...

வாங்க கிரி.

நன்றி:-))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

இதைப்போய் 20 டாலர்ன்னு போட்டுவச்ச தைரியத்தை என்னன்னு சொல்றது???

சும்மா வுட்டுப்பார்க்கறது போல ,ஏமாளி
எவராவது ஆப்ட்டுக்குவாங்கன்னு!

said...

வாங்க கயலு.

இதுக்கே அசந்துட்டா எப்படி?

210 ஆயிரம் டாலரு கட்டுனா அடுத்தவருசம் விண்வெளிக்குக் கூட்டிக்கிட்டுப்போறதா வர்ஜின் ப்ளூ ஏர்வேஸ் ஓனர் சொல்றார்.

போயிட்டுவந்து ஒரு பதிவு போடணும்:-))))

said...

வாங்க ராப்.

இன்னும் க்ளோஸா எடுத்துருக்கலாமோ?
:-))))

said...

வாங்க நானானி.

எல்லாம் நான் பெற்ற இன்பம்தான்.

வகுப்புலே எல்லாரும் தூங்கறமாதிரி
'கனவு' கண்டேன்.

எல்லார் கண்ணுலேயும் ஸ்டிக்கர் ஒட்டி இருந்துச்சு:-))))( க.ஜூ பதிவைப் படிச்சுட்டாங்க போல)

அதான்.....
புதிர்போட்டு எழுப்பிவிட்டேன்:-)

said...

மேடம்! நாவலும் செர்ரியும் நினைவுக்கு வந்துச்சு.இங்கே ஒலிவப்பழங்களை தண்ணிக்குள்ளேயே அமுக்கிவச்சிடறாங்க.அதனால திடீர்ன்னு நினைவுக்கு வரல.எப்படியோ படகுக்குள் ஒலிவச் சவாரி அதுவும் வரிசையா நல்லாவும் இருக்கு.தடிப்பசங்க ஏழெட்டுப்பேரு படகுப்போட்டிக்கு போவாங்களே அத நினைவு படுத்தறமாதிரியும் இருக்கு:)

said...

<==
50% கழிவு. ஒரு டாலருக்குக் கிடைக்கும்.
++.
அடடா,மிஸ் பண்ணிட்டீங்களே ரீச்சர். இன்னும் 2 வாரம் பொறுத்திருந்தால் கழிவு - $2 அதாவது, அத வாங்கினா, கடைக்காரர் வாடிக்கையாளருக்கு பணம் தருவார் =)))

said...

<==
210 ஆயிரம் டாலரு கட்டுனா அடுத்தவருசம் விண்வெளிக்குக் கூட்டிக்கிட்டுப்போறதா வர்ஜின் ப்ளூ ஏர்வேஸ் ஓனர் சொல்றார்.
==>
ஓ,அதுவும் $2க்கு வரும்போது , சரியா?

said...

//Olive Boat. ஒலிவ ஓடம்.//

:-O.டீச்சர் மீ த 'எஸ்'.

படம் மேக்ரோ ஷாட்-ஆ ? இல்ல இவ்ளோஓஓஓ பெரிய ஆலிவ்வாஆஆஆஆஆ :-O ? :P

20-ஐ , 1 ஆக்கிய டீச்சரின் சாமர்த்தியத்திற்காக, மீ த 'அவ்வ்வ்வ்வ்'...ஆனந்தக் கண்ணீர். :)))).

said...

துளசி மேடம்

அதுவா இது?? உங்களுக்கென்று இதெல்லாம் எங்கே கிடைக்கிறது டீச்சர்? நான் கடைக்கு போனால் நேரா துணிக்கடை, செருப்புக்கடை அல்லது ஆக்சஸ்சரீஸ் பக்கமே ஒதுங்குவேன். :)

said...

வாங்க ராஜ நடராஜன்.

ஒவ்வொன்னும் ஒரு டூத் பிக் குத்திவச்சால், துடுப்புப்போட்டுப் படகு ஓட்டற மாதிரி இருந்துருக்கும்

said...

வாங்க சாமான்யன்.

கடைக்காரர் காசு தர்றதா? ஊஹூம் நோ சான்ஸ்(-:

வானவெளிக்கு 2 டாலர் ஆஃபர் வரவே வராது. ஆனாலும் நமக்கு ஏதும் சான்ஸ் கிடைக்காதான்னு ஸ்டேண்ட்பை பாஸஞ்சரா புக் பண்ணி வச்சுருக்கேன்.

ஏற்கெனவே 250 பேர் டிக்கெட் ரிஸர்வ் செஞ்சுருக்காங்களாம். கடைசியில் பலரும் பயந்துட்டுப் பின்வாங்கிட்டா இருக்கும் சிலருடைய முன்பாரம் பின்பாரம் அட்ஜஸ்ட்மெண்டுக்கு என்னை வரச்சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.:-))))

said...

வாங்க புதுவண்டு.

ஆனந்தக் கண்ணீரே ஆனாலும் அப்பப்பத் தொடைச்சுக்கணும்,ஆமா:-))))

said...

வாங்க க.ஜூ.

காலம் மாறிப்போச்சுப்பா. நீங்க சொன்ன இடத்துலே ஒதுங்குனதெல்லாம் 'இறந்த காலம்'.

said...

வாங்க அம்பி.

நீங்க ரொம்ப நல்லவர்.

நல்லவங்களுக்கு அடையாளமே இதுதான்:-)))

said...

//வாங்க க.ஜூ.

காலம் மாறிப்போச்சுப்பா. நீங்க சொன்ன இடத்துலே ஒதுங்குனதெல்லாம் 'இறந்த காலம்'.

//

ஏன் டீச்சர், இப்போ ஒதுங்கினால் கடை தள்ளி விட்டுடுமா என்ன? எல்லாமே நாம நினைப்பு தான். இந்த டெமி மூர் எல்லாம் பாருங்க இந்த வயதிலும் கலக்கறாங்க, புதுசா ஆஷ்டனுடன் திருமணம் வேற.

said...

க.ஜூ,

இப்படிச் சொல்லிக்கிறதெல்லாம் இங்கே எனக்கேத்தமாதிரி ஒன்னும் கிடைக்கலைன்றதுனாலேதான்.

எனக்கு இந்த ரெடிமேட் துணிகளில் விருப்பமே இல்லை. ஒரு சீஸன் வந்துச்சுன்னா பார்க்கற எல்லாருமே அதே மாடல் & கலர் போட்டுக்கிட்டுப் போவாங்க.
நான்வேற ஒரு இடும்பி ஆச்சா.... என் வழி தனி வழி.

எனக்கு வேண்டிய எல்லா உடுப்பும் துணி வாங்கி நானே தச்சுக்குவேன். அப்பத்தானே எக்ஸ்க்ளூசிவா இருக்கும்:-)

இந்தியா போனவுடன் கடைகளில் கொஞ்சம் பூந்து வெள்ளாடறதுதான்.

அங்கேயும் துணிகள் எடுத்துத் தைக்கக்குடுக்கறதுதான்.

டெமி மூர் சென்னை சில்க்ஸ், போத்தீஸ், தங்கமாளிகையில் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு யோசிக்கணும்:-)

கல்யாணத்தைப் பொறுத்தவரை கோபால் ஈஸ் ஓக்கே. 34 வருசமாச்சு. எல்லா ப்ளஸ் அண்ட் மைனஸ் தெரிஞ்சுபோச்சு:-)))

said...

//நான்வேற ஒரு இடும்பி ஆச்சா.... என் வழி தனி வழி.
//

இடும்பி என்றால் என்ன டீச்சர்?

said...

//டெமி மூர் சென்னை சில்க்ஸ், போத்தீஸ், தங்கமாளிகையில் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு யோசிக்கணும்:-)//

டெமியை அப்படி இமேஜின் பண்ணிப்பார்க்கிறது கஷ்டமா தான் இருக்கு.

ஆனால் நான் பாருங்க, போத்தீஸ், தங்கமாளிகையிலும் பரபரவென்று இருப்பேன் அதே மாதிரியே மேசி, ஜெசி பென்னியிலும் அதே பரபரப்பு :) :)

நான் ஒரு equal opportunity shopper. ரெடிமேடும் போடுவேன், துணி எடுத்து தைப்பதும் ஓகே :) :)

said...

இடும்பனுக்குப் பெண்பால்:-)

இடும்பன்?

கடோத்கஜனின் பிள்ளை.
எல்லாரும் போகும் வழியில் அவன் போகவே மாட்டானாம். அதுதான் இப்படி ஒரு பழமொழி வந்துருக்கு.

எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்குத் தனிவழி:-)

said...

க.ஜூ,

உடம்பு ஒல்லியா இருக்கும்போது எல்லாமும் ஓக்கேதான்:-))))

உங்க மெயில் ஐடி அனுப்புங்க.
பப்ளிஷ் பண்ணமாட்டேன்.

ஜிடாக்லே போட்டுவச்சுக்கிட்டா, அப்பப்ப வரும் சந்தேகம் தீர்க்கலாம்:-)

said...

ஓஓஓஓடம்..நதியினிலே..
ஒருத்தி மட்டும் கரையினிலே!
-சீர்காழி கோவிந்தராஜன் பாடல்

(ஓடாத) ஒரு ஆலிவ் ஓடத்தை வச்சு எங்களுக்கெல்லாம் சும்மா.. தண்ணி காட்டிடீங்க.. டீச்சர்! :)))

said...

வாங்க தமாம் பாலா.

தண்ணியில் போகமுடியாத ஓடம் இப்படித் தண்ணி காட்டிருச்சு:-)

நம்ம வீட்டுலே சீர்காழி ரசிகர்களா இருந்தாலும் அவரோட சினிமாப் பாட்டுக்களை அவ்வளவாக் கேட்பது இல்லை.