Friday, August 19, 2005

குப்புசாமி பூஜை?

'அடுத்த சனிக்கிழமை குப்புசாமி பூஜை இருக்கு நீங்க கட்டாயம் கலந்துக்கணும்.'

நம்ம ருசிகாவோட பாட்டி இந்தியாவுலெ போனவாரம் இறந்துட்டாங்க. ருசிகாவும்
அவுங்க பாட்டியும் ரொம்ப க்ளோஸ். அதனாலெ எங்க வீட்டுலே ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு
செஞ்சிருக்கோம். பெரூசா ஒண்ணுமில்லை. பகவத் கீதை 18வது அத்தியாயம் படிக்கறோம்.சொன்னது
ருசிகாவோட வீட்டுக்காரர்.


அடடா, பாட்டி இறந்துட்டாங்களா? ( ஐய்யோ இதென்ன பாட்டிங்களுக்குப் போறாத காலமா?
இப்பத்தான் நம்ம ரம்யாவோட பாட்டி இறந்துட்டாங்க. அதுக்குள்ளெ ருசிகாவோட பாட்டி......த்சு த்சு த்சு)
கட்டாயமா பூஜைக்கு வர்றோம். போனோம். எல்லாம் நல்லபடியா நடந்தது.
அப்பத்தான் தெரிஞ்சவுங்க ஒருத்தர் குப்புசாமி பூஜைக்கு நம்மை அழைச்சது!

இந்தக் குப்புசாமி யார்? எதுக்காக இவருக்குப் பூஜை? இதை யார் நடத்துறது? மேல்விவரம் வேணுமேன்னு
கொஞ்சம் 'ஆராய்ஞ்சது'லெ கிடைச்சது இதுதான்.

வெள்ளைக்காரர்கள் ஃபிஜித் தீவுகளிலே, கரும்புக்காடுகளிலே வேலை செய்யறதுக்கு இந்தியர்களைப்
பிடிச்சுக்கிட்டு வந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியுமுல்லே. 'பாரதியின் கரும்புத் தோட்டத்திலே' நினைவு
வருதா? அப்பத் தமிழ்நாட்டுலே இருந்து வந்தவங்களிலே, (ஒரு ரெண்டு தலைமுறைக்குப் பிறகு) கொஞ்சம் விவரமான
மனிதரா இருந்த குப்புசாமி 'சங்கம்'என்ற அமைப்பை உருவாக்கி இருக்கார். இதுதான் ஃபிஜியின் முதல் தமிழ்ச் சங்கம்!
மொழியைத் தக்கவச்சுக்க வேண்டி உண்டானது. இந்தக் காலக்கட்டத்துலேதான் மூணாம் தலைமுறை ஜனங்க
தமிழை மறக்கவேண்டியதா ஆயிருச்சாம். மொதமொதல்லெ வந்தவங்க வடக்கத்திக்காரங்கன்றபடியாலே ஹிந்தி மொழி
ஏற்கெனவே அங்கெ இடம் புடிச்சிருச்சு. அதுக்கப்புறம் வியாபாரம் செய்யவந்த குஜராத்திங்களும் ஹிந்தியையே பேச
( ஆனா வீட்டுலே மட்டும் கட்டாயம் குஜராத்திதான் பேசுனாங்க, பேசறாங்க, பேசுவாங்க) ஆரம்பிச்சதாலே அங்கே ஹிந்தி
ஒரு தேசிய மொழியாவும் ஆயிருச்சு.

புள்ளைங்க தமிழ் படிக்கவும் பேசவும் வழி செய்யணுமுன்னு இந்த 'சங்கம்'தான் அங்கங்கே பள்ளிக்கூடங்களை
ஆரம்பிச்சது. இந்தப் பள்ளிக்கூடங்களிலே தமிழ் வழிக் கல்வி தொடங்கினாங்க. 'சங்கம் ஸ்கூல்' லே தமிழ் சொல்லிக்
கொடுக்க தமிழ்நாட்டிலிருந்தே அந்தக் காலத்துலே சில ஆசிரியர்கள் வந்தாங்க.ஆனா காலக்கிரமத்துலே அவுங்க
எல்லோரும் ஹிந்தி பேசக் கத்துக்கிட்டாங்க. இப்ப ஆறேழு தலைமுறைக்குப் பிறகு 'ஹம் பி மந்த்ராஜி ஹை. மகர்
மந்த்ராஜி நை ஜானே.நானிகோ சக்கே'ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க தமிழ்க்காரப் புள்ளைங்க. இந்த 'மந்த்ராஜி'ன்னா
என்னவா? மதராஸி. தமிழுக்கு இவுங்க வச்சுருக்கற பேரும் மந்த்ராஜி. அட தேவுடா!

ஆகக்கூடித் தமிழ்ச் சங்கத்தை ஸ்தாபித்தவர்தான் குப்புசாமி. அவர் மறைந்தபிறகு அவரது சேவையைப் பாராட்டி
அவருக்காக ஒரு பூஜையும் செய்ய ஆரம்பித்து இதுநாள்வரை அதை விடாமல் செஞ்சுக்கிட்டும் இருக்காங்க. நிறைய
ஃபிஜி ஆட்கள் குறிப்பாக மந்த்ராஜிகள் இங்கே நியூஸிக்கு குடியேறியதும், இங்கேயும் அந்த 'சங்கம்' வந்துவிட்டது.
எப்படியாவது ஒரு கோயில் கட்டிவிடவேண்டுமென்பதுதான் இப்போதைக்கு இவுங்க குறிக்கோள்.அதே சமயம்
இனியாவது மந்த்ராஜிகளுக்கு மந்த்ராஜி கற்றுக்கொடுக்கவேணும் என்று இப்ப இதனோட தலைவர் முயற்சி செய்யறார்.
பாவம், அவருக்கும் தமிழ் பேச வராது(-:


சனிக்கிழமை வந்தது. குப்புசாமி பூஜைக்குப் போனோம். அங்கெ அவருடைய உருவப்படம்( ஃபோட்டோ)
அலங்கரிச்சு வச்சிருந்தாங்க. கீழே ஜமக்காளம், பாய் எல்லாம் விரிச்சு எல்லோரும் உக்கார்ந்து சாமிப் பாட்டுக்களைப்
பாடிப் பஜனை நடந்தது.அது முடிஞ்சதும் தீபாராதனை. அவுங்கவுங்க வீடுகளிலே இருந்து கொண்டு வந்திருந்த
பிரசாதங்களைப் படைச்சிட்டு எல்லோருக்கும் விநியோகம் செஞ்சாங்க. அது முடிஞ்சவுடனே 'சங்கம்' ஏற்கெனவே
சமைச்சு வச்சிருந்த சாப்பாடு. ஃப்ரைய்டு ரைஸ், வெள்ளைச் சாதம், பருப்பு, பூரி, தக்காளிச் சட்டினி, பரங்கிக்காய்
கறி,ஆலூ பைங்கன்( கத்தரிக்காய்+உருளைக்கிழங்கு) அப்புறம் ஒருசாலட். இதுதான் இங்கே ஃபிஜி மக்கள்கிட்டே
எப்பவும் இருக்கற செட் மெனு!

அந்த மொத்தக் கூட்டத்துலேயும் இந்தியாவிலிருந்து வந்த ஒரே குடும்பம் நாங்கதான்.அதனாலே விசேஷ மரியாதை.
பின்னே சும்மாவா? தமிழ் பேசற ஆளுங்களாச்சே!

கோயில் கட்ட, வேண்டிய உதவியைச் செய்யறதாச் சொன்னார் கோபால். இது நம்ம ரொம்பநாள் ஆசையாச்சே.ஊர்கூடித்தானே
தேர் இழுக்க முடியும்? தனியா நடக்கற காரியமா என்ன?

நானும் இங்கே நம்ம தமிழ்ச்சங்கத்துலே தமிழ்ப்பள்ளி நடக்கறதைச் சொல்லி அங்கே வந்து சேரச் சொன்னேன். இதுலேயும்
ஒரு கஷ்டம் இருக்கு. நம்ம தமிழ்ச் சங்கத்துலே எல்லோருமே தமிழ்ப் பேசத்தெரிஞ்சவுங்க. வீட்டுலே தமிழ் கதைக்கறதாலே
பிள்ளைங்களும் அதைக்கேட்டு வளர்ந்து வராங்க. இந்த ஃபிஜி ஜனங்க யாருமே தமிழே பேசாத குடும்பம். வாரம் ஒரு நாள்
மட்டும் தமிழ் வகுப்புக்கு ஒரு மணிநேரம் வர்றதாலே எவ்வளவு தூரம் கத்துக்க முடியும்? எவ்வளவு ஆர்வம் இருக்கும்னெல்லாம்
தெரியாது. மேலும் அவுங்களுக்கு விளக்குறப்ப ஆசிரியருக்கு ஹிந்தி தெரிஞ்சிருக்கறது ஒரு அட்வாண்டேஜ்.
இதையெல்லாம் யோசிச்சுப் பார்த்துட்டு, 'அவுங்களுக்குத் தனியா தமிழ் சொல்லிக் கொடுக்கணுமுன்னா நான் உதவறேன்'னு
சொல்லிட்டு வந்தேன். ஏதோ நம்மாலான உதவி. நீங்க என்ன சொல்றீங்க? தமிழ் சொல்லிக் கொடுத்தரலாமா?


20 comments:

said...

// தமிழ் சொல்லிக் கொடுத்தரலாமா?//

Oh Yes!
அப்புடியே கொஞ்ச நாள் படிப்பிச்சுட்டு வலைப்பதிவுப்பக்கமும் அவங்களை இழுத்திட்டு வாங்க! ;O)

said...

வலைப் பதிவு படிக்கிற அளவுக்குத் தமிழ்?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நோ சான்ஸ்.

துளசி.

said...

அக்கா, என்ன இப்படி கேட்டுட்டீங்க!?? கண்டிப்பா சொல்லிக் கொடுங்க. யாருக்குத் தெரியும் இன்னும் 100 வருஷங்கள் கழிச்சு தன்யாவோட பேத்தி ந்யூஸியிலே துளசியக்கா கோவிலுக்கு போனாலும் போவா!! :-)

said...

ரம்யா,

:-)))))

செஞ்சுரலாம்.

said...

அறியாமை எனும் இருளை போக்குபவன் இறைவனுக்குச் சமம். ரம்யா சொல்லற மாதிரி உங்களுக்கும் கோயில்தான் (அட அட்லீஸ்ட் அவங்க இதயத்துலயாவது கட்டுவாங்களே?) தெரியாதவங்களுக்கு சொல்லிக்குடுக்க வேண்டியத செய்யவான்னு யார கேக்றீங்க?

said...

சுரேஷ்,

நம்ம வலைப்பதிவுக் குடும்பங்கிட்டேதான் கேட்டேன்.

வூட்டுக்குத் தெரியாம ஒண்ணும் செய்யக்கூடாதில்லெ.

said...

தமிழ் சொல்லிக் கொடுத்தரலாமா?
யக்கா, நல்லா சொல்லிகொடுங்க...அப்படியே முடிஞ்சா கொஞ்சம் ஹிந்தியும் சொல்லிக்கொடுங்க... பின்னாடி ஒரு காலத்துக்கு தேவைப்படும்... ( பி கு : குழலிக்கு தெரியாம சொல்லிக்கொடுங்க)

//....விசேஷ மரியாதை.
பின்னே சும்மாவா? தமிழ் பேசற ஆளுங்களாச்சே//
கேட்கவே சந்தோஷமா இருக்கு !!

வீ எம்

said...

அதானே பார்த்தேன். நம்ம வலைப்பதிவர் கொசப்பேட்டை குப்சாமிக்குத்தான் பூசையோ என்னவோன்னு நினைச்சேன். அதேமாதிரி மந்த்ராஜியையும்கூட தப்பா... சரி வேண்டாம்.

said...

அன்புள்ள வீ.எம் & சிலந்தி,

நன்றிகள்.

வரலக்ஷ்மி நோம்புக்குப் போய்க்கிட்டு இருக்கேன்( புதுப் பட்டுப் புடவை ரிலீஸ்!)

இனிமே நாளைக்குத்தான் இந்தப் பக்கம் வருவேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

கலக்கலான ஆளுப்பா நீங்க. உங்களை சந்திக்கணுமே?!

நிர்மலா.

said...

என்னங்க நிர்மலா,

நீங்கதான் இந்தவாரத் தாரகை. நீங்க என்னைச் சந்திக்கணுமுன்னு சொல்றீங்க!

(ஆஹா,நம்ம ரேஞ்ச் உயர்ந்துக்கிட்டு இருக்கோ?)

அது ஒண்ணும் பிரச்சனை இல்லீங்க. நியூஸிலாந்துக்கு ஒரு டிக்கெட்டுப் போட்டுருங்க. இங்கெ வாங்க. மத்ததை நான் பாத்துக்கறேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

புதுப் பட்டுப் புடவை ரிலீஸ்!)

paavam Mr. Gopal :)

said...

"மொத்தக் கூட்டத்துலேயும் இந்தியாவிலிருந்து வந்த ஒரே குடும்பம் நாங்கதான்."

இந்த மொடாக்குக்குப் புரியலையே, துளசி! நடத்துரது நம்ம ஆளு குப்புசாமிக்கு; நடத்துனது யாரு? நீங்க மட்டும் தமிழ் ஆளுன்னா எப்படி?

ரொம்ப திட்டாதீங்க..எல்லா வலைப்பதிவர்களும் டியூப் லைட் அல்ல; டியூப் லைட்டெல்லாம் தருமிதான் !!

said...

தருமி,

தனி மடல் போட்டுருக்கேன். பாருங்க.

துளசி.

said...

வீ.எம்.

ரொம்பப் பரிதாபப்படாதீங்க கோபாலுக்காக.

போனமுறை இந்தியா போனப்ப அவராவே மும்பை நல்லி யிலே இருந்து தானே(!) வாங்கிவந்தது.
( நான் கேக்கலை)

மொத்தம் நாலு. இதுலே ஒண்ணுதான் ரிலீஸ். இன்னும் நவராத்திரி,தீபாவளி, கிறிஸ்மஸ் எல்லாம் வருதில்லே:-)

துளசி.

said...

துளசி... அதென்ன அந்த பதிவுக்காக போட்ட பின்னூட்டமா? பின்னூட்ட சேம்பேறி ரொம்ப நாளா சொல்லனும் சொல்லனும்னு சேர்த்தி வச்சதாக்கும்.

நியூஸியா... அதையேன் கேக்கறீங்க. ... வேலையில்லை, இருக்க நேரமில்லை கதைதான். நீங்க எப்ப இந்தியா வரப் போறீங்க?

நிர்மலா.

said...

//அதனாலே விசேஷ மரியாதை.
பின்னே சும்மாவா? தமிழ் பேசற ஆளுங்களாச்சே!
//
ம்... இந்த நிலமை இங்கே வராமல் இருந்தால் சரிதான்

// பி கு : குழலிக்கு தெரியாம சொல்லிக்கொடுங்க//
வீ.எம். என்ன நாரதர் வேலையா?

said...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!
அதனால செய்யுங்க தெய்வமே!!

====
நாரதர்கள் இப்போது செல்லாத இடமே பாக்கி இல்லை என்ற நிலை வந்துவிட்டது!

said...

குழலி,
//ம்... இந்த நிலமை இங்கே வராமல் இருந்தால் சரிதான்//

இப்ப நீங்க இருக்கற ஊர்லே தமிழும் ஒரு ஆட்சிமொழியாச்சே. இந்த கதி அங்கே கண்டிப்பா இப்போதைக்கு வராது.

said...

ஞானபீடம்,
//நாரதர்கள் இப்போது செல்லாத இடமே பாக்கி இல்லை என்ற நிலை வந்துவிட்டது! //

உண்மையோ உண்மை!!!! இப்பெல்லாம் எல்லோரும் உண்மையே பேசுவதுன்னு இருக்காங்க போல:-)