Friday, August 26, 2005

நியூஸி வலைப்பதிவர் மகாநாடு.

அன்புள்ள சகவலைப்பதிவர்களே,

செப்டம்பர் மாதம்...செப்டம்பர் மாதம்ம்ம்ம்ம்ம் னு பாட்டுக் கேக்குதா?
வரும் செப்டம்பர் மாதம் 30, 31 தேதிகளில் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த
தமிழ் வலைப்பதிவர்களின் மகாஆஆஆஆஆஆஆஆநாடு நடைபெற இருக்கின்றது.



தெள்ளுத் தமிழிலே எழுதறதுக்கு வராததாலே, அப்படியே என் போக்குலே
சொல்லிடறேன்.

இங்கே இந்த நாட்டிலே இருக்கற தமிழ் வலைப்பதிவர்களில் 66.6% நபர்கள் ஏற்கெனவே இதுலே
கலந்துக்கறதா 'உறுதிமொழி' கொடுத்துட்டாங்க. இந்த சிறப்பு மகாநாட்டுலே கலந்துக்க இன்னும்
வேற யார்யாருக்கு 'வசதி'ப்படுமோ அவுங்க கட்டாயம் தகவல் தெரிவிச்சா நல்லது.
எதுக்காகவா? எத்தனை ஜாங்கிரி, எத்தனை போண்டா தேவைப்படுமுன்னு தெரிஞ்சுக்கிட்டு
ஆர்டர் கொடுக்கத்தான்:-)))))))

அப்புறம் 'ஏன் முன்னாடியே சொல்லலை? தெரிஞ்சிருந்தா வந்திருப்போமே'ன்னு குத்தம்
சொல்லக்கூடாது,ஆமாம். சரியா இன்னும் 35 நாள் இருக்கு.

என்றும் அன்புடன்,
துளசி.

பி.கு: டிக்கெட்டுக்கு ஷ்ரேயா ஏற்பாடு செய்வாங்க. பணம் அவுங்களுக்கு அனுப்பிருங்க.

36 comments:

said...

அப்போ அண்ணாக்கண்ணன் பதிவு போட்ட மாதிரி ஒவ்வொரு நாளாக் குறைச்சு ஒவ்வொரு பதிவா மொத்தம் 35 பதிவு போடப்போறீங்க.

அதுசரி, ஒத்துக்கொண்ட அந்த மற்ற வலைப்பதிவாளர் யார்?

said...

"நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் வலைப்பதிவர்கள்" மட்டும்தானா அல்லது செப்டம்பர் மாதம் 30, 31 திகதிகளில் Welington இல் பராக்குப் பார்த்து சுற்றிக் கண்டிருப்பவர்களும் கலந்துகொள்ளலாமா?

கூடவே அந்த 66.6% ஆனோரின் விபரங்களையும், இடத்தையும் தெரிவிக்கலாமே

said...

துள்ஸ் - செப்டெம்பர் மாதத்துக்கு ஏது 31ம் திகதி??

said...

துளசி மட்டும் வாசிக்கவும்!! :O)

டிக்கெட் காசில் உங்களுக்கான கமிஷன் எவ்வளவு என்று சொல்லவில்லையே!!

said...

மகாநாடு ஆரம்பமே பிழையாப்போச்சே(-:

செப்டம்பர் 30 & அக்டோபர் 1 ன்னு திருத்தி வாசிங்கப்பு.

said...

கொழுவி,
அதென்ன மற்ற வலைபதிவாளர்(!) யார்ன்னு கேட்டுட்டீங்க.

சனம் திரள்திரளா வருதுங்கோவ்

said...

குமரேஸ்,

நீங்க வெலிங்டன்னிலே பராக்குப் பார்த்துக்கிட்டுச் சுத்தப்போறீங்களா?

மாநாடு நடக்குறது 'கிறைஸ்ட்சர்ச்'லே!

said...

v//எத்தனை ஜாங்கிரி, எத்தனை போண்டா தேவைப்படுமுன்னு தெரிஞ்சுக்கிட்டு ஆர்டர் கொடுக்கத்தான்//
ஏங்கா.வயசான காலத்தில வாயக் கட்டி இருக்காம,எங்க சாக்கில போண்டா,ஜாங்கிரி எல்லாம் சாப்பிடவா பிளேன் போட்டு இருக்கீங்க??? :-)

அது சரி மாநாட்டை முன்னிட்டு இதுவரை திரைக்கு வாராத படம் ஏதாவது வோர்ல்ட் ப்ரீமியர் செய்யப்போறீங்களா???

said...

ஷ்ரேயா,

கமிஷன் வேணாம். நீங்க வந்துருங்க. அது போதும்.

said...

கொஞ்சம் பொறுங்க (பாவிக்காத) நாட்குறிப்பைப் பாத்து அந்த 2 நாளும் வசதிப்படுமா என்டு சொல்றேன்! ;O)

என்னது..வெள்ளிக்கிழமை(யும்) வைச்சிருக்கீங்க! அதுவும் மாசக்கடைசி வெள்ளிகிழமை ..எங்க அலுவலகத்திலே "திரவக் கொண்டாட்டம்" நடக்குமே. மாநாட்டுக்கு வந்தா அந்தக் கூத்தையெல்லாம் காணக்கிடைக்காதே! :O(

said...

சுதர்சன்,

போண்டா, ஜாங்கிரி தின்னறதுக்குன்னு இன்னொருபிறவி எடுத்து வரணுமா? இப்பவே தின்னுட்டுப் போயிரலாமுன்னுதான்.....

படம், வர்றவுங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்து:-))))

said...

//ஜாங்கிரி, எத்தனை போண்டா தேவைப்படுமுன்னு... //

பயத்தம் பணியாரம் தரப்படும் என்று அறிவிக்காததனால் நான் வருவதற்கில்லை என்பதை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன். (ஆஹா...லீவு கிடைக்காது, அதனால வரமுடியாது என்று சொல்லாம எப்பிடியெல்லாம் கதை விட வேண்டியிருக்கு பாருங்க! ;O)

said...

ஏனுங்கோ.. உதை (அதாவது உந்த மாநாட்டை) டிசெம்பருக்கு தள்ளிப்போடேலாதே..? அங்காலிப்பக்கம் வாறதொரு ஐடியாவில இருக்கிறன்.. பக்கத்தில தானே என்று நினைச்சு கொண்டிருந்தன்.. Map எடுத்துப் பாத்தால் ஒஸ்ரேலியால இருந்து எவ்வளவோ தள்ளிப் போய் இருக்குது உங்கடை நாடு!

said...

சயந்தன்..அப்பிடியே இங்கால சிட்னிக்கும் தலையக்காட்டுமன். நானும் வலைப்பதிவர் மாநாடு நடத்திறண்டு அறிக்கை விடலாம்...

said...

இப்படி உலகம் முழுதும் ஆங்காங்கே வலைப்பதிவர்கள் மாநாடு நடாத்துவது, வெகுஜன ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டிருப்பதாக எமது ஏஜண்டுகள் கூறுகிறார்கள்!

இணையத்தில் இப்போதெல்லாம் பத்திரிக்கைகளுக்கு வரும் வாசகர்களின் வருகை பெருமளவில் குறைந்துவிட்டதற்கு Blog தான் காரணம் என்றும் கூறுகிறார்கள்!!

ஆகவே, மாநாட்டிற்கு உச்சகட்ட பாதுகாப்பை ஏற்பாடு செய்துகொள்ளும்படி ஏஜண்ட் 8860336 எச்சரிக்கிறார்!!!

Alert Level: ORANGE!

said...

ஜாங்கிரி, எத்தனை போண்டா தேவைப்படுமுன்னு தெரிஞ்சுக்கிட்டு ஆர்டர் கொடுக்கத்தான்// - ஆர்டர்தானா? நீங்களா செய்யப்போறீங்களோன்னு நினைச்சேன்.


'மழை' ஷ்ரேயா said... துள்ஸ் //
கோலங்கள் 'தொல்ஸ்' (அதெல்லாம் அங்கே தெரியுங்களா?) மாதிரி இருக்குதே! நல்லா இருக்குங்க இப்டி கூப்டறது.

"..எங்க அலுவலகத்திலே "திரவக் கொண்டாட்டம்" நடக்குமே. ""
- இந்த ஷ்ரேயா பொண்ணு ஆபிசில என்னதான் நடக்குது? ஏங்க, ஒரு வரைமுறையே இல்லியா? கேட்டா ஆபிசிலிருந்து பதிவு போட்றேங்கிறாங்க; வெள்ளிக்கிழமை 'கொண்டாட்டம்'...ம்..ம்.. ஒண்ணும் சரியில்லப்பா!!

said...

'உதயகீதம்' படத்துல தேங்காய்-ல Bomb வெச்சாங்களாம்!!

போண்டா-வில் Bomb வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன;

அதுவும் போண்டா துள்ஸ் வீட்டில் செய்யப்படாமல் ஆர்டர் செய்யப்படுகிறது; ஒருவகையில் பிழைத்தீர்கள் என்று நினைத்தால் மறுவகையில் Bomb அபாயம் உள்ளது!!

போண்டாவைக் கடித்தாலோ, உடைத்தாலோ! டமார்....

Danger in: BONDA!!

said...

சயந்தன்,

அப்படி என்ன தூரம் ? நீங்க இருப்பது மெல்பேர்ண்தானே?

ச்சும்மா ஒரு மூணரை மணிநேரப் பயணம்தான்.

டிசம்பர் என்றாலும் பரவாயில்லை. அப்ப ஒரு மாநாடு கூட்டிறலாம்.

said...

தருமி,

இந்த போண்டா ஜாங்கிரி எல்லாம் ச்சும்மா ஒரு பேச்சுக்கு. எல்லா வலைப்பதிவாளர் மாநாட்டுக்கும் இது ஒரு 'செட் மெனு'ன்னு கேள்விப்பட்டது:-)

இன்னும் தோரணவாயில், அலங்காரம், போஸ்டர் அடிக்கிறதுன்னு எத்தனை வேலைகள் நிக்குது.

வர்றவுங்க எண்ணிக்கைக்குத் தகுந்தபடி 'ஹால்' ஏற்பாடு செய்யணும். வேலைகள் குமிஞ்சுகிடக்கப்பு.

said...

ஞானபீடம்,

இது என்ன பாம் பயமுறுத்தல்?

போண்டாவைக் கடிச்சே தட்டுலே வச்சுறவா?


பி.கு:
எங்க வீட்டுலே 'பாம்'ன்னா சாதம். வீட்டுப் பேச்சுவழக்கு!

said...

TulsiG,

My mails to yr .nz id are bouncing. Could u pl contact me? thanks

said...

//சயந்தன்..அப்பிடியே இங்கால சிட்னிக்கும் தலையக்காட்டுமன்//
ஷ்ரேயா Virgin Blue எப்போதுமே தனது தொகையை 100 $ க்கு அதிகமாகவே வைத்திருக்கிறதே!

Bus ல் 10 மணிநேரங்கள் தனிய உட்கார்ந்து வர விருப்பம் இல்லை. (குறித்துக் கொள்ளுங்கள்.. தனிய உட்கார்ந்து வர விருப்பம் இல்லை)

said...

ப்ளாக் உலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற முகமூடியென்ற பட்டத்தினை எனது USA வலை பதிவாளர் டெலிகான் சந்திப்பு எனக்கு பெற்றுத்தந்தது.. இப்போது உங்கள் வலைப்பதிவர் சந்திப்பில் ஒரு webcam போட்டு எனக்கு தகவல் தந்தால் முதல் அகில உலக வலைப்பதிவாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பெருமையும் 'விஷன் வலையர்' பட்டமும் கிடைக்கும். செய்வீங்களா...

66.6% நீங்க, உங்க கணவர் ஆச்சி.. 33.3% ஆரு, உங்க பெண்ணா.. அவங்க வலைப்பதிவு வைச்சிருக்காங்களா..

said...

சயந்தன்,

இதுக்கு என்ன இவ்வளவு கஷ்டம்?
ஒரு டிக்கெட் அனுப்புங்க. நான் வந்து 'பஸ்'லே உங்களைக்கூட்டிட்டுப் போய் சிட்னியில் விடுறேன்.
10 மணிநேரம் உங்களைத் தொணப்புறதாலே உங்களுக்கு இந்த உலகவாழ்க்கையே வெறுத்துப் போனால்( போனால் என்ன போனால்? போகும்)நான் பொறுப்பல்ல.

said...

முகமூடி,

உங்க பதிவு படிச்சேன்.

//நீங்க, உங்க கணவர் ஆச்சி.. //
அதுசரி, எப்ப என் கணவர் 'ஆச்சி'யானார்? பாவம்!

மாநாட்டுக்கு ஆளுங்க நிஜமாவெ வெளியூர்லே இருந்து வர்றாங்கப்பு:-)

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

said...

நான் கேட்கிறேன்.. இதோ பக்கத்தில் இருக்கும் கலிபோர்னியாவில் இருக்கும் சக தமிழரை டிக்கெட் ஸ்பான்ஸர் செய்து வரவழைத்து வலைபதிவர் மாநாட்டில் பங்கு பெற செய்து உபசரிக்கும் தமிழ் பாங்கு நியூசி வாழ் தமிழர்களுக்கு உண்டா.. இல்லை என சொல்லி நியூசி வாழ் தமிழர்களின் விருந்தோம்பல் குணத்தை கேவலப்படுத்தப்போகின்றீரா, அல்லது டிக்கெட்டுக்கான ஏற்பாட்டில் இறங்கப்போனின்றீரா (சிரமம் ரொம்ப இல்லையின்னா பிஸினஸ் க்ளாஸ்)

said...

"எங்க வீட்டுலே 'பாம்'ன்னா சாதம். வீட்டுப் பேச்சுவழக்கு!"
சரி, 'பாம்'னா சோறு. இந்த குழம்பு, கூட்டு இதுக்கெல்லாம்...?

said...

//இணையத்தில் இப்போதெல்லாம் பத்திரிக்கைகளுக்கு வரும் வாசகர்களின் வருகை பெருமளவில் குறைந்துவிட்டதற்கு Blog தான் காரணம் என்றும் கூறுகிறார்கள்!!
//
ஞானபீடம் முதன்முறையாக உண்மையை கூறியுள்ளீர், வலைப்பதிவு பற்றி தெரியும் முன் தமிழன் எக்ஸ்பிரசையும் கூட இணையத்தில் படித்தவன் நான், தற்போது இணைய பத்திரிக்கைகளுக்கு சென்று படிப்பது மிக குறைந்துவிட்டது

said...

மாற்றான் தோட்டத்து தாழம்பூவுக்கும் மணமுண்டு என்பதை ஒப்புக்கொள்ள உமக்குத்தான் தாமதம் குழலியே!

மை, ஸச் க ஷிவ் குச் நஹி ககூங்கா!!

எனிக்குக் கள்ளம் பறயான் அறியில்லா!

said...

முகமூடி,

எல்லா வலைஞர்களுக்கும் (மொத்தம் எத்தனை? 698 இன்னைக்குவரை) முதல் வகுப்பு
எடுக்கறதா, இல்லை ஒரு ப்ளேனையே மொத்தமா எடுத்தா எப்படின்னு யோசனையா
இருக்கேன். அதுலே பாருங்க மகள் டூரிஸம் & ட்ராவல் படிக்கறதாலே அவளுக்கு அந்த வேலையைக்
கொடுத்துட்டேன். இப்ப என்னன்னா அதைப் பாதியிலே விட்டுட்டு, நம்ம தமிழ் விருந்தோம்பலை
இப்படி எல்லோரும்(?) சந்தேகப்படும்படியா ஆகிப்போச்சு(-:

said...

தருமி,
மொத்தச் சாப்பாடையுமே இப்படித்தான் சொல்றது. 'பாம்' சாப்ட்டாச்சா?ன்னு.
அதுலேயும் இந்த புளிசாதம் இருக்கே அதுக்கு எங்க வீட்டுலே சொல்றது.
'டைகர்பாம்'. அது இப்பச் சுருங்கி 'டைகு'ன்னு ஆயிருச்சு!

தயிர்சாதம்னா தச்சுபாம்

said...

குழலி,
வருகைக்கு நன்றி.

said...

//இந்த ஷ்ரேயா பொண்ணு ஆபிசில என்னதான் நடக்குது? ஏங்க, ஒரு வரைமுறையே இல்லியா//

தருமி - கொஞ்சம் வந்துதான் பாருங்களேன். சூப்பர் அலுவலகம் இது. இங்கே ஒருத்தர் இருக்கிறார். "திரவம் & chocolate" தான் அவருக்கு பிரதான் உணவு. காலைல 8 மணிக்கு கொடுத்தாலும் லிக்கரிஷ் கடிப்பார்.

அலுவலகத்துலேர்ந்து தான் பதிவு போடுறது..அதுவும் மேலதிகாரி முன்னால உட்கார்ந்திருக்கும் போது. ஏனா? நடந்து திரிஞ்சா என் பின்னால் வந்து நின்றாலும் தெரியாதே.. நாமதான் மெய்மறந்து வாசிக்கிற ஆளாச்சே! ;O)

said...

யாரங்கே!! துளசியின் விருந்தோம்பலைச் சந்தேகிப்பவரை வலைப்பதிவு மாநாடுகளில் அடுத்த ஒருவருடத்திற்கு கலந்து கொள்ள முடியாத வண்ணம் தடையுத்தரவு பிறப்பியுங்கள். :O)

//குறித்துக் கொள்ளுங்கள்.. தனிய உட்கார்ந்து வர விருப்பம் இல்லை)//

சயந்தன் - உம்மட இலங்கைப் பயணப் பதிவுதான் ஞாபகம் வந்துது. எதுக்கும் பஸ்ஸில ஏறினாம்பிறகு யாரும் அகப்படமாப் போயிடுவினமோ! ;O)

said...

ThuLasi,
super.

yaaru menu sollappoRAnga.
vadai, muRukku uNdaa.

nerila vanthaathaan tharuveengaLA.
parcel anuppuveengaLA.

bloggger and spouse welcome band uNdaa?

kalai nikazhccikaL, 5 velai sappaadu ellaam poottu,banner thiraNam ellaam pottu
vaikkavum:))))))
vanthuvidukiROm.

said...

வாங்க வல்லி.

இது போனவருசம் இதே நாளில் போட்ட பதிவு.

இதுலே ஒரு சுவாரசியமான புள்ளிவிவரம் இருக்கு பார்த்தீங்களா?

//எல்லா வலைஞர்களுக்கும் (மொத்தம் எத்தனை? 698 இன்னைக்குவரை) //
ஆனா இன்னிக்குக் கணக்குக்கு 2173.
எப்படி வளர்ந்துருக்கோம் பாருங்க !!!!!