Friday, August 05, 2005

சிவகாமி, சிவகாமி...

மொதல்லே மூணு கேள்விக்குப் பதில் சொல்லுங்க.

1. மனிதன் ஒரு பொருளைச் செய்வான், எல்லாருக்கும் விற்பான்.ஆனா, அந்தப் பொருளைத் தனக்காகச்
செய்யறப்ப அவனாலே அதைப் பாக்க முடியாது. அது என்ன?

2.கன்னங்கரேல் என்றிருக்கும். இருள் அல்ல,காலம் போகப்போக வெளுக்கும் பகல் அல்ல.
ஆண்டவனை வேண்டிக்கொண்டு, போகும்போது இருக்கும், திரும்பி வரும்போது இருக்காது. அது என்ன?

3. உங்க குழந்தை காணமப் போயிருச்சு. ஒரு வாரம் கழிச்சுத் திரும்பக் கிடைச்சிருச்சு. உங்க குழந்தையைப்
பாத்ததும் நீங்க என்ன செய்வீங்க?



இதெல்லாம் என்னன்னு யாருக்காவது நினைவில்லேன்னா, நீங்க செய்யவேண்டியது என்ன? ரொம்ப சிம்பிள்.
'கலங்கரை விளக்கம்'படம் பாக்கணும்!

மன்னாதி மன்னனா அல்லது கலங்கரை விளக்கமான்னு ச்சீட்டுப் போட்டதுலே க.வி.தான் விழுந்துச்சு!

சரோஜாதேவி, ஜி.சகுந்தலா, கே.எஸ். கோபால கிருஷ்ணன், எம்.என். நம்பியார், நாகேஷ், வீரப்பன், மனோரமா
இவுங்கெல்லாம் நடிச்ச தலைவரோட படம்! 1965 லே வெளிவந்திருக்கு!

வக்கீல் ரவி( எம்.ஜி.ஆர்) தன்னோட நண்பன் டாக்டர் கோபாலைப்( கே.எஸ். கோபால கிருஷ்ணன்)பார்க்க, மஹாபலிபுரம்
போறார். அங்கே மனநிலைசரியில்லாம தற்கொலை செஞ்சுக்கப்போகும் நீலா( சரோஜா தேவி)வைக் காப்பாத்தறார்.
அதுக்கப்புறம் ஒரு நாள் சரோஜாதேவி கலங்கரை விளக்கத்தின் மேலே இருந்து விழுந்து இறந்துடறாங்க.

மனக்கவையோடு இருக்கும் ரவியை ஒரு நிகழ்ச்சிக்குக் கூட்டிக்கிட்டுப் போறார் கோபால். அப்ப சொல்ற வசனம் நல்லா
இருக்கு. 'பாரதிதாசன் கவிதைகளுக்கு விழா நடக்கின்றது. நல்ல தமிழைக் கேட்டால் கொஞ்சம் மனக்கவலையை மறக்கலாம்'

( நான் எழுதற தமிழ் உங்க மனக்கவலையைக் கூட்டிரும்(-: ஆமா)

சங்கே முழங்கு!!! பாரதிதாசன் அவர்களின் அருமையான பாடல். அங்கே கலைக்குழுவினரோடு சேர்ந்து ஆடறது யார்?

உங்க ஊகம் சரி. சரோஜா தேவியேதான்? இறந்தவங்க, எப்படி வந்தாங்களா? வெள்ளித்திரையில் காண்க!!!

சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படம்!! ரவி எப்படி இதைத் துப்பறிந்து உண்மையைக் கண்டுபிடிக்கறார்னு கதை போகுது.

பாட்டுங்க நல்லாவே இருக்கு. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

என்னை மறந்ததேன் தென்றலே..

பொன்னெழில் பூத்தது புது வானில்....

பல்லவன் பல்லவி பாடட்டுமே.....

சங்கே முழங்கு....

என்ன உறவோ என்ன பிரிவோ....

காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கிவந்தேன்...

கதை நடக்கற இடம் மகாபலிபுரம். நாப்பது வருசத்துக்கு முன்னாலெ அங்கெல்லாம் ஏகப்பட்ட இடம் காலியா
இருந்துருக்கு. சின்னக் குன்று மேலே நடனக்காட்சி வர்றப்ப சுத்துப்பக்கம் எல்லாம் 'ஜிலோ'ன்னு கிடக்கு!

கறுப்பு வெள்ளைப் படம்தான். ஆனாலும் மகாபலிபுரத்து சிற்பங்கள், கோயில்கள், காட்சிகள் எல்லாம் தெளிவா இருந்துச்சு.

வாசு( நாகேஷ்) தேவா( வீரப்பன்) ரெண்டுபேரும் மகாபலிபுரத்துலே இருக்கற 'கைடு'ங்க. மனோரமா அவுங்க அப்பாவோட
ஊரைச்சுத்திப்பார்க்க வர்ற டூரிஸ்ட். இதுலே மனோரமா வாசுவைக் காதலிக்க, அவுங்க அப்பா, தேவாவை மருமகனாத்
தவறுதலா நினைச்சுக்கறார். எல்லாம் ஒரு தொப்பியால வந்த வினை. ச்சின்னவயசு நாகேஷ் & மனோரமா. நல்லா
இருக்காங்க!

கடைசியிலே மாப்பிள்ளை தேர்வுக்கு 'வாத்தியார்' கொடுத்த ஐடியாதான் மேலெ கேட்ட மூணு கேள்விங்க. சரியான
பதிலைச் சொன்னது யார்? மீண்டும் வெள்ளித்திரையிலேயே காண்க.

பழைய படங்களிலே ஒண்ணு கவனிச்சமுன்னா, இப்ப இருக்கறது போல எந்தப் பாட்டுன்னாலும் 40, 50 பேரு
கூட்டமா வந்து ஆடுறதெல்லாம் கிடையாதுங்க. கதைக்குத் தேவைப்பட்டா ச்சும்மா ஒரு ஏழெட்டு ஆளுங்க
ஆடுறாங்க. அவ்வளவுதான்.( அப்ப நாட்டோட ஜனத்தொகை எவ்வளவு, இப்ப எவ்வளவுன்றீங்களா? அப்பக்
கணக்குச் சரியாப் போச்சு!)

படம் பாக்கறப்ப 'இப்பத்தானே குழலி 'பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி'ன்னு ஒரு பதிவு போட்டிருந்தார்.
அருள் குமாரும் தன் தோழியின் நினைவாய் மகாபலிபுரம் கடற்கரைக் கோயிலை அற்புதமாக வரைந்திருந்தார்.
நாகேஷைப் பத்தி இன்னைக்குத்தானே மாலன் ஒரு பதிவு போட்டுருக்கார்.'ன்னு
நினைவு வந்துக்கிட்டே இருந்தது.



17 comments:

said...

முதல் கேள்விக்கு பதில் தலை முடி, இரண்டாவது கேள்விக்கு பதில் தலை முடி. மூன்றாம் கேள்விக்கு பதில் அளிக்கும் வாய்ப்பை மற்றவர்களுக்கு விட்டு கொடுக்கிறேன்.

கலங்கரை விளக்கம் ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ என்னும் படத்தின் தழுவல். ஜேம்ஸ் ஸ்டூவர்ட் மற்றும் கிம் நோவாக் நடித்தது. அப்படம் வெளி வந்த வருடம் 1964.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

மன்னிக்கவும் முதல் கேள்விக்கு விடை சவப்பெட்டி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோண்டு,

மன்னிக்கணும். நான்தான் வருசத்தைத் தப்பாப் போட்டிருக்கேன்.
சென்ஸார் சர்டிஃபிகேட் லே 1963ன்னு இருக்கே!

என்றும் அன்புடன்
துளசி.

said...

இந்தப் படத்துக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு???

அது என்ன?என்ன?என்ன?

கண்டுபிடிச்சுச் சொல்லுங்களேன் பார்ப்போம்...

said...

உங்கட விடுகதைகளைப் பாத்தோடன..என்னடா அதுக்கிடையில படமெல்லாம் பாத்து முடிச்சிட்டா துளசி என்று யோசித்தேன் .

இப்பத்தானே தெரியுது!!! :O)

3க்கு விடை?? இதை மாதிரி ஒரு கேள்வி தெரியும்....அதுக்கு விடையும் தெரியும். உங்கடதுக்கு தெரியவில்லையே! :O(

said...

ஷ்ரேயா,

விடுகதை விடை இருக்கட்டும். இப்ப சுதர்சன் கேட்டுருக்கறதுக்கு விடை கண்டு பிடியுங்க ப்ளீஸ்.

said...

அதுக்கு படத்தையில்ல பாத்துட்டு வரணும்!

அதுசரி..3ம் கேள்விக்கு உங்களுக்கும் விடை தெரியாதா? ;O)

said...

இன்னுமா கண்டுபிடிக்கல???

ஹா..ஹா..ஹா(வீரப்பா இஷ்டைல்ல படிக்கவும்).

said...

வாலி முதன் முதலில் பாட்டெழுதியது இந்த படத்துக்குத்தான்... மேலும் நீண்ட காலமாக கண்ணதாசனுக்கு உதவியாக இருந்த பஞ்சு அருணாசலம் முதன் முதலில் இப்படத்துக்குத்தான் பாட்டெழுதினார் (பொன்னெழில் பூத்தது)

- இதுதான் சுதர்சன் கேட்ட கேள்விக்கு பதிலா தெரியாது.. இதுதான் தூள்.காம் தளத்தில் இப்படம் பற்றி இருக்கும் செய்தி. ஹிஹி...

said...

கலங்கரை விளக்கம் 1965-ல் தான் வந்தது. நான் பேசியது வெர்டிகோ படத்தைப் பற்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

// அப்படம் வெளி வந்த வருடம் 1964 //

// நான் பேசியது வெர்டிகோ படத்தைப் பற்றி //

vertigo ரிலீஸ் ஆன ஆண்டு 1958.. ஒரு வேளை நீங்கள் வெர்டிகோ சென்னையில் ரிலீஸ் ஆன வருடம் சொல்கிறீர்களோ??

said...

ஹூம்...

எல்லார்த்துக்கும் நல்லா வேலை குடுத்திட்டேன்னு நினைக்கிறேன்.

மெல்லிசை மன்னர்களின் பிரிவுக்குப் பின்னால்,எம்.எஸ்.வி. அவர்கள் தனியா இசையமைச்ச முதல் படம் இது தான்...

"யாரங்கே,இந்த அரிய தகவலைச் சொன்ன சுதர்சன் அவர்களுக்கு நாட்டின் பாதியை.."அப்படின்னு நீங்க
சொல்ரது எனக்குக் கேக்காம இல்லை.

:-)

said...

குழந்தை எப்போ என்ன சாப்பிட்டதோ தெரியாததால் முதலில் உணவூட்டுவேன்

(வாத்தியாரின் க.வி. இன்னும் பார்க்கவில்லை. ஆனால் எல்லாப் பாடல்களையும் கேட்டு இரசித்திருக்கிறோம்)

said...

//கலங்கரை விளக்கம் ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ என்னும் படத்தின் தழுவல். ஜேம்ஸ் ஸ்டூவர்ட் மற்றும் கிம் நோவாக் நடித்தது//
அதே அதே ! அதில் Salvatore Dali யின் சித்திரங்கள் "கனவு" சீன்களில் வரும். impressioning ..

said...

அனைவருக்கும் நன்றீயோ நன்றீ!!!!

இப்ப விடைகள்.

நம்ம டோண்டு சொன்னது முதல் ரெண்டு விடைகளும் சரி.

1. சவப்பெட்டி
2. தலைமுடி
3. தேடறதை நிறுத்திடுவேன். அதான் குழந்தை கிடைச்சிருச்சே!!

இதுலே ரெண்டு சரியான விடையை( படத்துலேதாங்க) சொல்லி, மனோரமாவைக் கல்யாணம் செஞ்சுக்கறாரு நாகேஷ்!

சுதர்சன், நீங்க சொன்னதைத்தான் நானும் நினைச்சேன். அப்புறம் அது சரியான்னு சரியாத்தெரியாததாலே சும்மா ஷ்ரேயாவைக்
கேட்டுவச்சேன். வயசு சின்னதா இருந்தாலும், இது சினிமா நியூஸ் பாருங்க எந்தப் புத்துலே என்ன பாம்பு இருக்கோ:-)))

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகூறி 'விடை'பெறுவது

துளசி.

said...

"ஒரு வேளை நீங்கள் வெர்டிகோ சென்னையில் ரிலீஸ் ஆன வருடம் சொல்கிறீர்களோ??"

அட, ஆமாம். சாதாரணமாக அந்தக் காலகட்டங்களில் ஹாலிவுட் படங்கள் உடனுக்குடன் இந்தியாவில் ரிலீஸாகி விடும். அந்த ஞாபகத்தில் கூறி விட்டேன் போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//சுதர்சன், நீங்க சொன்னதைத்தான் நானும் நினைச்சேன். அப்புறம் அது சரியான்னு சரியாத்தெரியாததாலே சும்மா ஷ்ரேயாவைக்
கேட்டுவச்சேன். //

உங்களுக்கே தெரியாமத்தான் என்னிடம் கேட்டீங்களா? :oP

//வயசு சின்னதா இருந்தாலும், இது சினிமா நியூஸ் பாருங்க எந்தப் புத்துலே என்ன பாம்பு இருக்கோ:-)))
//

ஆனாலும் இது கொஞ்சம் டூ மச்! ;O)