Monday, August 01, 2005

வேகம் வேகம் வேகம்!!!!

இந்த மீள்பதிவின் காரணம் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. காவல்துறையினருக்கும்,
பிரதமரின் காரோட்டிக்கும் என்ன ஆகும் என்பதை வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் எழுதுவேன். இங்கெயும் ஒரு வழக்கு நீதிமன்றம்
வர ஒரு வருடம் ஆகிவிட்டது பாருங்கள்!!



ஒரு வேடிக்கை/உண்மை நிகழ்ச்சி
***********************


இந்த நாட்டுப் பிரதம மந்திரியின் 'கார்' வேகக் கட்டுப்பாட்டை மீறி சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் தேசிய தொலைக்காட்சி களில் தோன்றி, அப்படி அந்த'கார்' மற்றும்
காவல்துறையைச் சேர்ந்த பாதுகாப்புக் கார்களும் கடும் வேகத்தில் (குறிப்பிட்ட இடத்தில் வேகம் 50 கிலோ மீட்டர்)
அதாவது 140 கிலோ மீட்டரில் சென்றதாகவும் சொல்லியிருக்கின்றனர்.

இங்கே தெற்குத்தீவைச் சேர்ந்த 'டிமரு'என்னுமிடத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து போகவேண்டிய
விமானம் ரத்து செய்யப்பட்டதால், பிரதம மந்திரி 'கிறைஸ்ட் சர்ச்' என்னும் ஊருக்கு வந்து, அங்கிருந்து
புறப்படும் விமானத்தைப் பிடிப்பதற்காக வேகக் கட்டுப்பாட்டை மீறி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு நாளாக, ரேடியோவிலும், தொலைக்காட்சிகளிலும் இதேதான். மக்களுக்கு ஒரு நீதி, மந்திரிக்கு
ஒரு நீதியா?

உடனே, ஒரு இந்திய நாட்டைச் சேர்ந்த என் மனக்கண்ணில் விரிந்த காட்சி இது.

நம் இந்திய நாட்டில் இது போல நடந்திருந்தால்............

1. யாரும் 'கண்ணால் கண்ட சாட்சி'என்று முன் வந்திருக்க மாட்டார்கள். அப்படி யாரேனும் கூறும்
பட்சத்தில், காவல்துறையே அவர்களைப் பயமுறுத்தி, அடித்து நொறுக்கி இருக்கும்.வாயைத் திறக்க முடியுமா?

2. பிரதமரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் 'சாட்சிகளை' இல்லாமல் செய்திருப்பார்கள். இன்னேரம்
சாட்சிகள் 'மேலே' போயிருப்பார்கள். சாட்சிகளின் குடும்பம் சின்னாபின்னமாயிருக்கும்.

3. 'டிமரு' விமானம் ரத்து செய்யப்படாது. விமானம் இல்லாவிட்டால் என்ன ? ஹெலிகாப்ட்டர் இல்லையா ?

4. 'கிறைஸ்ட் சர்ச்' விமானத்தைப் பிடிக்க விரைவானேன்? பிரதமர் வரும்வரை விமானம் காத்திருக்காதா, என்ன?

5.முதலாவதாக அரசாங்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதையெல்லாம் காண்பிக்குமா? கட்சித்தொண்டர்கள் இந்த
அக்கிரமத்தை சகிப்பார்களா? இன்னேரம் நிகழ்ச்சி வழங்கியவர் கதி என்னாவாயிருக்கும்?

இப்படிப் பல...


PM's Speeding Motorcade Investigated
21/07/2004 07:29 AM
NewstalkZB

The speeding prime ministerial motorcade has been reported to the Police Complaints Authority.

Police National Headquarters has also appointed a Dunedin inspector to investigate the incident on Saturday, when Helen Clark's motorcade broke the speed limit while travelling from Waimate to reach a flight at Christchurch.

Eyewitnesses say the cars hurtled through several built up areas, after Miss Clark's flight to Wellington out of Timaru was cancelled.

Waimate mayor David Owen recalls Miss Clark and her team leaving the township very quickly.

The Police Commissioner's office says police have to balance competing duties, including security, urgency and the safety of road users.

Miss Clark needed get back to Wellington to attend the Bledisloe Cup match.

Tulsi Gopal
from New Zealand




14 comments:

Anonymous said...

அக்கா!., அட நம்மூர்ல பிரதமர் தனி விமானத்துலல்ல போவாரு?.

said...

//Miss Clark needed get back to Wellington to attend the Bledisloe Cup match.//

இதுக்கா இவ்வ்ளோ பறப்பு?

maleஅதிகாரி முன்னாலே இருப்பதாலே பயமில்லாம வாசிக்கலாம்; அவர் நடந்து திரிஞ்சாத்தான் எப்ப வருவார் என்று தெரியாம வாசிச்சுக் கொண்டிருந்து மாட்டுப்படணும்! கடவுளே அவர் pc anywhere பாவிக்கக்கூடாதே.. ;o)

said...

அக்கா, இதுவே நம்முரா இருந்தா முதல்லே ஒரு பத்து கிலோமீட்டருக்கு traffic எல்லாம் நிறுத்தியிருப்பாங்க. அப்புறம் விமானம் ஒரு மூணு மணி நேரம் தாமதமா கிளம்பும். விமானத்துலே பைசா கொடுத்து டிக்கெட் வாங்கினவங்க ஒரு பத்து பேரை இறக்கிடுவாங்க (PM கூட இருக்கிற ஜால்ரா எல்லாம் போக தேவல்லை??)

said...

மரம், ஷ்ரேயா, ரம்யா கருத்துக்களுக்கு நன்றி. இந்த ஊர்லே இன்னும் 'ஆட்டோ' வரலை. அதனாலே தைரியமா எழுதலாம்:-)))

said...

ரம்யா,

வீட்டுக்காரர் வந்துட்டாரா? மும்பையிலே மீண்டும் பயங்கர மழையாமே.

said...

துளசிக்கா, ஒரு வழியா மும்பாயிலிருந்து கிளம்பிட்டார்.. வேறோரு வேலை முடிச்சுட்டு நாளைக்கு சிங்கப்பூர் வராரு... நன்றிக்கா....

said...

அட என்னக்கா பிரதம மந்திரிக்கு போயிட்டீங்க.. ஒரு MLA , MP க்கு கூட இதெல்லாம் இங்கே நடக்காது...
அப்படியே நடந்தாலும், mla வேகமா போனாருனு வழக்கு வராது.... அந்த விமானம் ஒரு மக்கள் பிரிதிநிதிய மதிக்காம சீக்கிரம் கிளம்பி போச்சுனு விமான பைலட், ஊழியர்கள் மேல தான் வழக்கு வரும்... இல்லை தொண்டர்கள் விமானத்துக்கு தீ வெச்சாலும் ஆச்சரியமில்லை

வீ எம்

said...

நீங்கள் எல்லாம் நம் நாட்டை பற்றி தப்புகணக்கு போடுகிறீர்கள்.. நம் நாட்டில் நீதி நேர்மை என்ன அவ்வளவு மோசமாகவா போய்விட்டது..

இது போன்ற ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்திருந்தால், தனி நபர் விசாரணை கமிஷன் போட்டிருப்பர்... அவர் விரைந்து 30 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார்.. அதை அப்படியே சட்டசபையில் தாக்கல் செய்து தேவைப்படின் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்திருப்பர் நம் தலைவர்கள்... அவர்கள் மீது தப்பென்றால் சிறையில் முதல் வகுப்பு கூட தவிர்த்திருப்பர்..

இதுவரை இது போன்ற சம்பவம் நம் நாட்டில் நடைபெற்றதில்லை (யாரும் வேக அளவை மீறி சென்றதில்லை) என்பதால், நீங்கள் எல்லாம் தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்

said...

"பிரதமரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் 'சாட்சிகளை' இல்லாமல் செய்திருப்பார்கள்"

தவறாகச் சொல்லிவிட்டீர்கள்; மக்களே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், 'அவர்களை' குற்றம் சொல்லிப் பயனில்லை; பஸ்ஸோடு எரிப்பார்களாம் -ஆனால் அதிலிருந்து சில மாதங்களில் அந்த இடத்திலேயே நடக்கும் தேர்தலில் 'அவர்களை' வெற்றுபெறச் செய்வார்களாம்.

தருமி: "எங்களுக்கு வேணும்..வேணும்..நல்லா வேணும்; இதுவும் வேணும்; இன்னமும் வேணும்"

said...

வீ.எம், முகமூடி & தருமி
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.

ரெண்டு வாரத்துக்கு முன்னே இங்கே ஒரு எம்.பி. சொன்னதுலே இருந்த கருத்து சரியில்லேன்னு சொல்லி உண்மையை அவருக்கு எடுத்துரைச்சேன். பாவம் அவர்.
'தெரியாம சொல்லிட்டேன், இனிமே கவனமா இருப்பேன். ரியலி வெரி சாரின்னு பலமுறை சொல்லிட்டார். அப்புறம் எனக்கே ஐய்யோன்னு போச்சு.

அப்புறம்தான் நினைச்சுப் பார்த்தேன். இதுவெ நம்ம நாடா இருந்திருந்தா, நான் இப்ப இதையெல்லாம் சொல்றதுக்குக்கூட இல்லாம 'எங்கேயோ' போயிருப்பேன் இல்லே?

said...

// ரெண்டு வாரத்துக்கு முன்னே இங்கே ஒரு எம்.பி. சொன்னதுலே இருந்த கருத்து சரியில்லேன்னு சொல்லி உண்மையை அவருக்கு எடுத்துரைச்சேன் //

நீங்க என்ன வேலை பாக்குறீங்க... நியூசில சிலந்தி கூடு எல்லாம் இருக்கற ஒரு லைப்ரரில, வெளியில பூட்டப்பட்ட இருட்டு ரூம்ல (பூட்ட தொறந்தா தெறிச்சி ஓடிற மாட்டீங்க) உக்காந்து இந்தியால ரிலீஸ் ஆகாத தமிழ் படங்கள பாக்கற வேலைன்னு இல்ல நாங்க நெனச்சிகிட்டு இருக்கோம்

said...

akka,
u r welcome to view my recent postings. it is totally free of cost.. !!

V M

said...

துளசி நீங்க என்ன வேலை செய்றீங்க? எதுக்கு MPயிடம் போய் கதைக்க வேண்டி வந்தது?

வீ எம்...இது வரை வலைப்பதிவு விளம்பரத்துக்கு ஞானபீடம், முகமூடி & மாயவரத்தான் தான் என்று நினைச்சிருந்தேன்...நீங்களுமா!!!

said...

முகமூடி & ஷ்ரேயா,

என்ன வேலைன்னு குறிப்பிட்டுச் சொல்ல இயலாத நிலை.

பலவேலைகளில் இதுவும் ஒண்ணு.