இப்ப என்ன திடீர்ன்னு காளிங்கனைப் பத்திப் பேச்சு? அது போட்டும், மொதல்ல இந்தக் காளிங்கன் யாரு?
அதைச் சொல்லுன்னு, யாருப்பா அங்கே குரல் விடறது?
கிருஷ்ணஜெயந்தி வந்துக்கிட்டே இருக்குல்லெ. இந்த வருசம் அந்தநாள் வெள்ளிக்கிழமையாப் போச்சு.
நல்ல கிழமைதான், ஆனா வேலைநாளாப் போச்சே. ஆற அமர கிருஷ்ணனைப் பத்திப் பேச நேரம்
வேணாமா? அதுக்காக நேத்தும் முந்தாநேத்துமா ரெண்டு நாளா பூஜை வச்சுருந்தாங்க. வழக்கம்போல
எனக்கும் அழைப்பு.( நான் இல்லாம இங்கே ஒண்ணும் நடந்துராது! அப்படி நடக்க விட்டுருவேனா?) நமக்கும்
ஒரு ஃபிஜி கனெக்ஷன் இருக்குல்லே!
இங்கே ஃபிஜியைச் சேர்ந்த இந்தியர்கள் ஒரு 'சத் சங்கம் ' வச்சிருக்காங்க. இதுக்குப் பேரு 'ராமாயண் மண்டலி'
வாராவாரம் ராமாயணம் படிக்கிறது, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி, தீபாவளிக்கு ஸ்பெஷல் பூஜைன்னு
நடக்கும். கொண்டாட்டமுன்னா ச்சும்மா ஒரு நாளுலே முடியாது. எல்லாமே பத்து நாள் உத்சவம்தான்.
ரொம்ப ஒழுங்குமுறையா இது பலவருஷங்களாவே நடந்துக்கிட்டு இருக்கு.
1879வது வருஷம் மே மாசம் 14ஆம் தேதி 498 இந்தியர்கள் ஃபிஜி மண்ணில் காலடி எடுத்துவச்சாங்க. அந்தக்
காலத்துலே கப்பல் யாத்திரைதானே. அதுவும் வந்து சேர மூணுமாசம் ஆகுமாம். வர்றவழியிலேயே பலர்
கடல்பயணம் ஒத்துக்காம சீக்கு வந்து 'போயிட்டாங்க'ளாம்! போனதுபோக பாக்கி ஆளுங்கதான் வந்தது.எதுக்கு?
கரும்புக் காட்டுலே கூலி வேலைக்கு வெள்ளைக்காரங்களாலே கொண்டுவரப்பட்டவங்க. அப்புறமும் கொஞ்சம்
கொஞ்சமா ஆளுங்களைக் கொண்டுவந்துக்கிட்டே இருந்தாங்கதான். இந்தப் பழக்கம் 1916லே நின்னுபோச்சு.
அதுவரைக்கும் வந்தவுங்களோட எண்ணிக்கை எவ்வளவுன்னா கிட்டத்தட்ட அறுபதினாயிரம்!!!! போனவருசம்
மே மாசம் 125 வருசமானதைக் கொண்டாடுனாங்க.
எல்லா ஜனங்களுக்கும் உள்ள பொதுவான குணம் என்ன? எங்கே போனாலும் சம்பிரதாயத்தையும், பழக்க
வழக்கங்களையும் கூடவே கொண்டு போறதுதானே? அது இவுங்ககிட்டேயும் இருந்துச்சு. இந்த 126 வருசமா
விடாம இதைச் செஞ்சு ஒரு பாரம்பரியத்தைக் காப்பாத்திக்கிட்டு இருக்கறதைக் கட்டாயம் புகழத்தான் வேணும்.
அநேகமா எல்லாப் பூஜைகளுக்கும் குழந்தைகுட்டிங்களோட வர்றாங்க. பிள்ளைங்களும் இதையெல்லாம் பார்த்துப்
பழகறதாலேதான் இந்தச் சங்கிலி இதுவரை அறுந்துபோகாம தொடர்ந்துக்கிட்டு இருக்கு!
இவுங்க பேசறது போஜ்புரி வகை ஹிந்தி. சாமிப் பாட்டுங்களும் இதுலேயே இருக்கு. டோலக், தப்லா, ஹார்மோனியம்னு
இசைக்கருவிங்களோடதான் பஜனைப் பாட்டுங்க பாடறது. அநேகமா எல்லாமே ஒரே ட்யூன் தான். கணேசவந்தனம்,
அப்புறம் எந்த சாமியோட பூஜையோ, அதுக்குண்டான பாட்டு, ஆரத்தி, ராமாயணம்/பாகவதம் படிச்சு விளக்கம் சொல்றது
பிரசங்கம், கடைசியா சாந்தி சொல்லி முடிக்கிறது.
நேத்துப் பிரசங்கத்துலே கண்ணனோட சிறுவயது விளையாட்டுக்களைச் சொன்னாங்க. கோவர்த்தன மலையைக் குடையாப்
பிடிச்சது, பூதகியைக் கொன்னது, வெண்ணெய் திருடித்தின்னதுன்னு. இதுலே காளிங்கன் என்னும் பாம்பைக் கொன்னதும்
வந்துச்சு.
ஒரு மடுவிலே காளிங்கன் என்னும் விஷப் பாம்பு இருந்துச்சு. அதோட மூச்சுக் காத்துலேயும் கடுமையான விஷம்.
அதனாலே அந்தப் பக்கம் வர்ற ஜீவராசிங்க எல்லாமே மூர்ச்சை போட்டு விழுந்துருமாம். அந்த மடுவிலே இருக்கற
தண்ணியைத் தப்பித்தவறிக் குடிக்கிற ஆடு, மாடுங்க எல்லாமே மேலே போயிரும். அவ்வளவு விஷம்.
இதையெல்லாம் பார்த்த கண்ணன் ஒரு நாள் அந்த மடுவிலே விழுந்த பந்தை எடுக்குற சாக்குலே அங்கே போறார்.
அந்தத் தண்ணிக்குள்ளெ குதிச்சு அந்தப் பாம்புகூட சண்டைப்போட்டு அதைக் கொல்லப்போறார். அப்ப அந்தப் பாம்போட
மனைவி தனக்கு மாங்கல்யப் பிச்சை(!) கொடுக்கணுமுன்னு வேண்டிக்கறதாலே, இந்த கோகுலத்துலே ( கண்ணனோட ஊர்)
இனி இருக்கக்கூடாது. வேற எங்கேயாவது போயிடணுமுன்னு சொல்றார். அதேபோல அவுங்க போயிட்டாங்க.
அதுலே இருந்து கோகுலத்துலே பாம்பே கிடையாது. இதைவச்சுப் பார்த்தா ஃபிஜிதான் 'கோகுலமா' இருந்திருக்கணும்.
அங்கேதான் பாம்பு கிடையாதேன்னு சொன்னார். அப்ப அந்த காளிங்கன் போன இடமோ? ஒரு வேளை அது ஆஸ்தராலியாவா
இருக்ககூடும். அங்கேதான் விஷப் பாம்புகளும், விஷச் சிலந்திகளுமா இருக்கு. இதையும் அவரேதான் சொன்னார்.
அப்பத்தான் நான் நினைச்சேன், ஒருவேளை கோகுலம், நியூஸியோன்னு. இங்கேயும்தான் பாம்பு இல்லை!!! அதுமட்டுமா
கோபாலும், நம்ம கோபாலகிருஷ்ணனும்கூட இருக்காங்களே:-)))))
பி.கு: பண்டிகைக் காலங்கள் வந்துக்கிட்டு இருக்கு. அதனாலே பெரியமனுஷியா, லட்சணமா பல விசேஷங்களிலே
கலந்துக்கிட வேண்டிய கட்டாயம்.
எல்லோருக்கும் 'மூத்தோர் சொல்' வேண்டியிருக்கே:-))))
அதனாலே அப்பப்ப இதுமாதிரி எதாவது எழுதநேரிடும். கோச்சுக்காதீங்க.
Wednesday, August 24, 2005
காளிங்கன் எங்கே?
Posted by துளசி கோபால் at 8/24/2005 02:33:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
ஐஸ்லாந்துலேயும் பாம்பு இல்லையே? அப்ப அது(வும்)தான் கோகுலமோ?
பாவம் கிருஷ்ணன். ஐஸ்லாந்துலே கோபிகைகளுக்கு எங்கே போவான்!
ஷ்ரேயா,
அங்கே ரொம்பக் குளுராச்சே. அதனாலே பாம்பு இல்லை போல!
ஆஹா சிலந்தி, போட்டீரே ஒரு போடு:-))))))
நம்ம கிருஷ்ணனுக்கு இந்திய ஆட்கள் வேணுமுன்னுதான் ஃபிஜிக்கு இந்தியர்களை வரவழைச்சானோ?
யாரறிவார் அவன் 'லீலை'
//ஐஸ்லாந்தில் பொண்ணூங்களே கிடையாதா //
இல்லாம என்ன? அந்தக் குளுருலே ''ஜலக்கிரீடை' முடியுமோ?
//நம்ம கிருஷ்ணனுக்கு இந்திய ஆட்கள் வேணுமுன்னு..// & //அந்தக் குளுருலே 'ஜலக்கிரீடை' முடியுமோ//
ஐயோ ஐயோ!! தருமி - எங்கேய்யா போய்ட்டீர்? இதெல்லாம் நீர் இன்னும் வாசிக்கல்லயா? இந்தப்பின்னூட்டத்தை விட்டிட்டு என் பதிவுக்கு வந்து அதை ஆபாசமென்றீரே..இது தகுமோ..இது முறையோ..இது தருமம் தானோ..ஓ..ஓ! ;O)
ஷ்ரேயா,
ரொம்ப குதர்க்கமான பேர்வழியா?
கடவுளே, இப்படியெல்லாம் வேற அர்த்தம் இருக்கா?
ஐய்யோடா......
ஐயோ..ச்சும்மா வெளாட்டுக்கு துளசி..தப்பா எடுத்துக்காதீங்க! :O|
மன்னிப்புக்கு - பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் மாதிரி கிருஷ்ணனுக்கு என்ன? துளசிக்கு என்ன?
//அதனாலே பெரியமனுஷியா, லட்சணமா பல விசேஷங்களிலே கலந்துக்கிட வேண்டிய கட்டாயம்.//
அது சரி.பண்டிகைக்குப் பண்டிகையும் ஆச்சு.(ஓசி)பலகாரத்துக்குப் பலகாரமும் ஆச்சு.
என்சாய் பன்ணுங்க.
//பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் மாதிரி கிருஷ்ணனுக்கு என்ன?//
கிருஷ்ணனோட பரிகாரம் சிம்பிள் தான்.கிருஷ்ணரோட பேர் வச்சிருக்கிற ஆட்களுக்கு(எக்.சுதர்சன்,கோபால்,முகுந்தன்) கோகுலம் போரதுக்கு ரௌன்ட் ட்ரிப்
டிக்கெட் வாங்கித் தரணும்.
//துளசிக்கு என்ன?//
இன்னும் திரைக்கே வராத,திரைக்கு வந்தாலும் யாராலும் பார்க்க சகிக்காத படங்களோட DVD(தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,துளு,ஹிந்தி,போஜ்புரி..) வாங்கி அனுப்புங்க.
பயணச்சீட்டு பிரச்சனையேயில்ல..காசு எப்ப அனுப்புறீங்க சுதர்சன்? ;O)
//இன்னும் திரைக்கே வராத,திரைக்கு வந்தாலும் யாராலும் பார்க்க சகிக்காத படங்களோட DVD//
இங்கே ஸ்பைஸ் கடையில் நிறையக் கிடைக்கும். துளசி, நியூஸீ வரும் போது (இன்ஷா அல்லாஹ்)கொண்டு வாறன்.
சுதர்சன்,
பலகாரம் மட்டுமா? சாப்பாட்டை விட்டுட்டீங்களே:-)))))
அப்புறம், பஞ்சாபி, பெங்காலி. குஜராத்தி மொழிப் படங்களை விட்டுட்டதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
//அப்புறம், பஞ்சாபி, பெங்காலி. குஜராத்தி மொழிப் படங்களை விட்டுட்டதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.//
மாப்பு.மாப்பு.தெரியாம சொல்லீட்டேன்.என்னை மன்னிச்சிக்கிடுங்க...
Post a Comment