எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. சந்தோஷமா இருக்கவேண்டிய இந்த சமயத்துலே எனக்கு
மனசுக்குள்ளெ பயமா இருக்கு. காரணம் நான் கல்யாணம் செய்யப்போறவங்க என்னைவிட உயரம் கூடுதல்.
அது மட்டுமா என்னைவிட அழகுகூடுதல். நல்ல நிறம் வேற.
இன்னும் ஒரு மாசம்தான் இருக்குக் கல்யாணத்துக்கு. அதுக்குள்ளே என்னை அழகா மாத்த முடியுமா? நாலு வாரத்துலே
உயரமா வளர்றதுக்கு ஏதாவது மருந்து இருந்தாச் சொல்றீங்களா? எதுவுமே இல்லைன்னா குறைஞ்ச
பட்சம் என் கறுப்பு நிறம் மாற எதாவது வழி இருக்கா? இது எதுவுமே சாத்தியம் இல்லைன்னா.... என் வாழ்க்கைக்
கஷ்டமாப் போயிரும். என் மனைவி என்னை மதிக்க மாட்டாள். உடல் அழகைக் கொண்டு ஒண்ணும் சாதிக்கலேன்னாலும்
என்னுடைய மூளையை, அறிவுத்திறனை வச்சு அவளை எப்படியாவது என் 'முதலிரவு'லெயே அடக்கிரணும். இதுக்கு
எதாவது வழி இருந்தாச் சொல்லுங்க.இது என் வாழ்க்கைப் பிரச்சினை. சீக்கிரமா நீங்க வழக்கமா பதில் சொல்லுற
வார இதழில் பதில் எழுதுங்க. சீக்கிரம் சீக்கிரம்.
இப்படி ஒரு மனுஷன் இருப்பானோ? இருக்கானே! எக்கச்சக்கமான தாழ்வு மனப்பான்மை. அதனாலே வர்ற கஷ்டங்கள்.
வீட்டில வயசுக்கு வந்த தங்கை, வேலை கிடைக்காத தம்பி, விதவைத் தாயார் இவுங்களையெல்லாம் சமாளிச்சுப்
புதுமனைவியோட இதயத்தை வெல்லறதுக்கு இவன் எடுக்குற ஒவ்வொரு நடவடிக்கையும் அபத்தமா முடிஞ்சிருது.
புதுமனைவியை ஒரு சினிமாவுக்குக் கொண்டு போறான். அங்கேயும் சினிமாவைப் பார்க்காமல் தன் மனைவியை
யாராவது எதாவது செஞ்சிருவாங்களொன்னு கவலை. சாதாரணமா காலை முன் சீட்டில்( மனைவி உக்கார்ந்திருந்த சீட்)
வச்ச ஒரு ஆளிடம் சண்டை போட்டு, பாதியிலேயே தியேட்டரைவிட்டு மனைவியோடு கிளம்பிவிடுகிறான்.
வீட்டுக்கு வந்த மனைவி, 'நல்ல சினிமா. பாதியிலேயே கூட்டிட்டு வந்துட்டீங்க. எனக்கு மோகன்லால் படம் ரொம்பப்
பிடிக்கும். எவ்வளவு அழகான நடிகன். எவ்வளவு அருமையான நடிப்பு'ன்னு யதார்த்தமா சொல்லப்போக இவனோட
தாழ்வுமனப்பான்மை இன்னும் கூடிப்போகுது. மனைவி மேல சந்தேகம், ரொம்ப பொசஸிவ்னஸ்ன்னு எல்லாம் கூடிக்கூடி
மனநிலை மருத்துவரைப் பார்க்கும் அளவுவரைபோய், கொஞ்சநாள் சிகிச்சையெல்லாம் எடுத்துக்கிட்டுக் குணமாகி(!)
வந்து சேர்றான்.
குணமானானா? தெரிஞ்சுக்கணுமுன்னா நீங்க பார்க்க வேண்டியது,'வடக்கு நோக்கி யந்திரம்'ன்ற மலையாளப் படத்தை.
இத்கு 1989லே வந்த படம். நம்ம ஸ்ரீநிவாசனோட கதை, இயக்கம் & நடிப்பு. சந்தேகப் பிராணியா இருக்கற கணவனா
ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார். அவருக்கு ஆலோசனை(!) சொல்ல ஒரு நண்பரும் இருக்கார். அவர்தான் இன்னொசெண்ட்.
படத்தோட தலைப்பே விஷயத்தைச் சொல்லிடுது இல்லே? எப்பவும் வடக்கு நோக்கி இருக்குற இயந்திரம் என்ன?
அதே போல 'கொக்குக்கு ஒன்றே மதி'ன்னு இருக்கானாம்!!! பாவம் தானே இந்தமாதிரி ஆட்களுக்கு வாழ்க்கைப் பட்ட
மனைவிகள்?
Monday, August 22, 2005
டியர் டாக்டர்.......
Posted by துளசி கோபால் at 8/22/2005 02:43:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
வாரதழ்கள்ல வருகிற "மருத்துவக்" கேள்விகளைக் கிண்டலடிக்கிறீங்களோ என்று முதல்ல நினைச்சேன். :O)
சந்தேகம் ஒரு நோய்! அந்த நோய் இருந்தா குடும்ப நலத்துக்குத்தான் கேடு!
ஷ்ரேயா,
பொதுவா இந்த 'காம்ப்ளெஸ்' இருந்தாவே கஷ்டம்தான்.
ஜிகிடி,
அதென்ன மாமனார்? (பணக்கார)கணவன்னு இருக்கலாமே!
ஜிகிடி,
இப்பக் கவித புரிஞ்சுபோச்சு!!!!
மனம்போல வாழ்வு கிடைக்கட்டும்.
வாழ்த்துக்கள்!!!!!
( புடிச்சாலும் புளியங்கொம்பா இருக்கோணும்!)
க்ரைஸ்ட்சர்ச்க்கு தெக்கால போனா ஒரு
காயலான் கடமாதிரி ஒரு இடமிருக்குன்னு இங்கிடு வெலிங்டன்ல பேசிகிட்டாக. நானும் அடுத்த மாசம் போறப்பா பாத்துறனும்னு நெனச்சேன். அட அது நம்ம துளசியக்கா வீடுதான்னு புரிஞ்சிபோச்சி.
இப்போ 1989ல வந்த படம் இதுக்கு முன்னாடி
//மதுரைவீரன் படம் பார்த்துக்கிட்டு இருந்தேன்// அப்டீன்னாங்க.
[இப்ப வரதெல்லாம் லாயக்கில்லேன்னு அர்த்தம்]. பேரீச்சம்பழம் எவ்வளவுன்னு வாங்குறீங்க?
//பேரீச்சம்பழம் எவ்வளவுன்னு வாங்குறீங்க? //
அதெல்லாம் இல்லையாம் சுரேஷ் .. வெத்திலை பாக்கு மட்டுந்தானாம்.. ;O)
சுரேஷூ,
உங்களுக்கும் 'பேரீச்சம்பழம்'வாங்கிவச்சுருக்கேன்.
வர்றப்ப எடுத்துக்கிட்டுப் போங்க:-)
இப்ப வேறொரு படம் பாத்துக்கிட்டு இருக்கேன்.
சொன்னா அடிக்கவந்துருவீங்க.
மோகன்லாலோட படம். 'இருபதாம் நூற்றாண்டு' 1987 படம். அப்ப மோகன்லாலுக்கு என்ன வயசுன்றீங்க? 27தான். நல்ல மெலிஞ்ச லால்.
ஜிகிடி,
சரியான குசும்பரா இருப்பீங்க போலெ:-))))
எனக்குப் பேரீச்சம்பழ சப்ளையரே ஷ்ரேயாதான்:-)))
கவுத்துட்டீங்களே! :O\
படம் பார்த்துவிட்டு "கதை" சொல்கிறேன்
கணேஷ்,
கட்டாயம் பாருங்க. ஸ்ரீநிவாசனோட படங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு. ஒண்ணுரெண்டு சுமார் ரகம்!
Post a Comment