பொதுமக்களின் ( அதாவது ஒருத்தர்) வேண்டுகோளை முன்னிட்டு இந்த வாரம்
'தலைவர் வாரம்'!!!! நம்ம வீட்டுலே பாதி ( இதுவும் ஒருத்தர்தான்)ஆளுங்க தலைவரோட ரசிகர்கள்.
(பொது மக்களுக்கு 'சிங்குலர்' என்ன? )
கிடைத்த படங்களின் விவரங்கள்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
மதுரை வீரன்
கலங்கரை விளக்கம்
மன்னாதி மன்னன்
தேடிவந்த மாப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
நேத்துப் பார்த்தது அலிபாபா.
'அண்டா கா கஸம், அபுல் கா ஹூக்கும். திறந்திடு சிஸேம்!!!!!'
மாடர்ன் தியேட்டர்ஸ். வந்த வருஷம் 1955. கவனிங்க, அரை நூற்றாண்டுக்கு
முன்னே இருந்த வசதிங்களை வச்சு நல்லாவே எடுத்திருக்காங்க. 'தலையில்லாத முண்டம்'கூட வருது.
இதுலே நடிச்சப்பவே எம்ஜியாருக்கு 38 வயசு!!!! கூடவே அவரோட அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியும் அண்ணனாவே
வரார்.
பானுமதியம்மா நல்லா நடிச்சிருக்காங்க. மார்ஜியானா ஒரு ஆட்டக்காரி. துணையா ட்ரம் அடிக்கற
அன்னாடங்காய்ச்சிக்குப் பேரு 'தவுலத்'!!!
நடனத்துக்குன்னு தனி ஆளுங்க வேற. ஒரு நடனம் சாயி, சுப்புலட்சுமி சகோதரிகள். 'நாங்க ஆடுவதும் பாடுவதும்
காசுக்கு, சிலர் ஆளைக்குல்லாப் போடுவதும் காசுக்கு'
கதாநாயகன் எவ்வளவு 'வெள்ளந்தி'பாருங்க! பாட்டுலேயே 'க்ளியரா' இருக்கு எதுக்கு அந்த விருந்துன்னு!! ஹூம்ம்ம்..
இன்னொரு நடனம், சொன்னா நம்பணும், நம்ம 'வஹீதா ரெஹ்மான்'( சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க
தங்கக்கையினாலே காசை அள்ளி வீசுங்க)
தமாசு நடிகருக்கும் டூயட் இருக்கு. 'சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனாக் கல்கண்டே' தவுலத்துக்கு ஜோடி புல்புல்!
சாரங்கபாணியும் எம்.என், ராஜமும் பாடி ஆடறாங்க.
தங்கவேலுக்கும் ஒரு பாட்டு. 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
ஜல்ஸா செய்யடா' (கண்டசாலாவின் குரலில்)
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
மாசில்லா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
என்னை அன்பினாலே ஆள வந்த அழகுபூபதி
உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
இதெல்லாம் பாடுனதும் நம்ம பானுமதியம்மாதான்!
இசை யாருன்னா, தட்சிணாமூர்த்தி. இசைகுழு நல்லா அடக்கி வாசிச்சிருக்கு.
பாட்டுங்க எல்லாம் நல்லா இருக்கறது மட்டுமில்லை, இன்னும் மனசுலே நல்லாவே நினைவில் இருக்குது.
பாடலோட வரிகள் தெள்ளத் தெளிவா காதுலே விழுது. மனசுலே நின்னதுக்கு அதுவும் காரணமோ? கூடவே
சேர்ந்து பாடிக்கிட்டு ஜோராப் படம் பார்த்தோம். நம்ம பூனைங்க தான் மிரண்டு போச்சுங்க. அம்மாவும் அப்பாவும்
நல்லாத்தானே இருந்தாங்க, திடீர்னு என்ன ஆச்சுன்னு! பாடல்வரிகளும் கதையோடு சம்பந்தப்பட்டதுதான் விசேஷம்.
மறக்காம சொல்லவேண்டியது பி.எஸ். வீரப்பாவின் குரல்!!! நல்ல அழுத்தமான உச்சரிப்பு. அழகாக வசனம்
பேசறார், கூடவே அந்தச் சிரிப்பு ஹா ஹா ஹா ஹா.......
படம் ஆரம்பிச்சப்ப, வசனத்துலே நான் கவனிச்சது, ரெண்டு மூணு இடத்துலே 'கடவுள்'ன்ற வார்த்தை. அட! பரவாயில்லையே,
அந்தக் காலத்துலே கூட கவனமா இருந்திருக்காங்களே! கதை நடக்கற ஊரு 'பாக்தாத்'ஆச்சே. அவுங்க 'அல்லா'ன்ற
பேரைத்தானே சொல்லியிருக்கணும்?
பத்தே நிமிஷத்துலே 'கவனிச்சுட்டாங்க' போல. ஊருக்கேத்த பேரும் வந்துருச்சு!!!
இது கலர்ப் படம். கேவா கலராம்! ப்ரவுனும், மரூனும் தூக்கலா இருந்துச்சு.
மொத்தத்துலே ரசிக்கவேண்டிய படம்தான்!!!! ஆங்.. அந்த மாளிகை இருக்கற இடம் 'ஒஹேனக்கல்'லா?
அட்டகாசமா இருக்கு!
'அண்டா கா கஸம், அபுல் கா ஹூக்கும். மூடிடு சிஸேம்!!!!!'
ஒரு நாளைக்கு மருதவீரனோடு வாரேன்.
Wednesday, August 03, 2005
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்!!!
Posted by துளசி கோபால் at 8/03/2005 11:04:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
சின்னஞ்சிறு சிட்டே பாட்டை மிக சமீபத்தில் கூட கேட்டு இருப்பீர்களே?
அது இங்கே
ஆனந்த்,
அண்டங்காக்காக்கும், சின்னஞ்சிறு சிட்டுக்கும் கொஞ்சம்சின்னதா வித்தியாசம் இருக்கு. ஆனா வேற ஒரு பாட்டு அப்படியே அச்சான காப்பி இருக்குங்க. ரெண்டுமே பழையபடங்கள்தான்.
அதுக்கு ஒரு பதிவு தனியா எழுதிக்கிட்டு இருக்கேனுங்க.
---பொது மக்களுக்கு 'சிங்குலர்' என்ன---
பொது மக்கர் ;-))
ஒரு சின்ன சந்தேகம் - அலுவலகத்துலயிருந்து வாசிக்கறவர்களின் வயித்தெரிச்சலைக் கொட்டிகொள்றதுக்குத்தான் நீங்க படம் பாத்து பதிவு போடுறீங்களா?? ;O)
ஹ்ம்..நானும் ரிட்டையர் ஆகுற காலம் வரும் தானே!!
பாலா & மஞ்சுளா
மக்கர் மக்குன்னு வச்சுக்கலாமா?
ஷ்ரேயா,
//ஹ்ம்..நானும் ரிட்டையர் ஆகுற காலம் வரும் தானே//
வரும்தான். அப்ப அந்நியனைப் பார்த்துட்டு ஒரு பதிவு போடுங்க மக்கா!
நல்ல ஐடியா துளசி. :O)
ஆனா நீங்க சொல்ற மாதிரி 1955ம் ஆண்டு வந்த படத்தை நீங்க இப்ப 2005ல பாத்தா... நான் 1983-85 ல் வந்த படத்தைத்தானே பார்க்கணும்?
1955ம் ஆண்டு உங்களுக்கு 4 - 7 வயசு என்று நினைக்கிறேன்..வயசுக் கணக்கு சரியா இருக்கா? :O)
Manjula said...
>> பொது மக்களுக்கு 'சிங்குலர்' <<
பொது மக்கு !
:)))
தலைவர் வாரம் என்பது தப்பு. தமிழ்நாட்டுக்கு இருக்கும் ஒரே தலைவர் ரஜினி மட்டுமே ;-) இவர் "வாத்தியார்" ஆகவே இதனை வாத்தியார் வாரம் என்று சொல்லுங்கள். :-)))))))
ஷ்ரேயா, கொஞ்சம் கூட்டிட்டீங்க.
இந்தப் பொம்பிளைங்களுக்கு கணக்கு ரொம்பவே புடிக்குதுப்பா. அதுலேயும் வயசுக்கணக்குன்னா போதும். அடுத்தவுங்களுக்கு தாராளமாக் கூட்டுறதும், தனக்கு ஒரேடியாக் கழிக்கறதும்
இதே மாதிரித்தான் வருமானக் கணக்கும். அதுலே ஒரே பெருக்கலும் வகுத்தலும்தான். தன் கணவரோடதைப் பத்தாலே பெருக்குறதும், தோழி(!)யின் கணவரோடதைப் பத்தாலே வகுக்குறதும்!
எங்கியோ எப்பவோ படிச்சது:-)))))
என்னங்க நாராயணன்,
'தனிப் பெரும் தலைவரை' இப்படிச் சொல்லிட்டீங்க? இவரு
உங்க தலைவருக்கே வாத்தியாராச்சே!
அச்சச்சோ!!! :o(
சரி..இத்தால் எல்லாருக்கும் அறிவிப்பது என்னவென்றால் 1955ல் துளசிக்கு 3வயது அல்லது அதற்கும் குறையவே இருந்தது. ;O)
எங்கியோ எப்பவோ படிச்சதை நைசா சமயம் பாத்து எடுத்து விடுறாங்க.. :o)
துளசி அக்கா,
'தேடி வந்த மாப்பிள்ளை' தவிர அனைத்தும் நான் ரசித்த படங்கள்.
அடுத்தவாரம் 'நடிகர் திலகம்' வாரமா?
Narin,
//தலைவர் வாரம் என்பது தப்பு. தமிழ்நாட்டுக்கு இருக்கும் ஒரே தலைவர் ரஜினி மட்டுமே ;-) //
இதெல்லாம் நகரங்கள்ள தான் .எங்க கிராமத்துல இப்படி சொன்னீங்கன்னா டின்னு கட்டிடுவாங்க..அங்க இப்பவும் 'வாத்தியார்' தான் 'தலைவர்'.
என்னங்க ஜோ,
தேடிவந்த மாப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்' இதிலெல்லாம் அம்மா 'ச்சிக்'ன்னு
அட்டகாசமா இருப்பாங்களே. மறந்துட்டீங்களா? நானே 'அம்மா'வோட ஃபேன் தாங்க.
இப்பவும் நான் அம்மாவோட 'ட்வின்ஸ்'ன்னு ( உருவத்துலே)மகள் சொல்லுது:-)
//துணையா ட்ரம் அடிக்கற அன்னாடங்காய்ச்சிக்குப் பேரு 'தவுலத்'//
:-)))
//மன்னாதி மன்னன்//
இந்தப் படத்தில் வரும் "கண்களிரண்டும் என்று உம்மைக் கண்டு சேருமோ" என்ற பாடல் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல்.
//பொது மக்களுக்கு 'சிங்குலர்' என்ன?//
பொது மக்கள்கள்
இன்னைக்குத்தான் மதுரைவீரன் முடிச்சோம். மன்னாதிமன்னன் நாளைக்குத்தான்.
மும்பையிலே மழை ஓய்ஞ்சதா?
//நானே 'அம்மா'வோட ஃபேன் தாங்க//.
அடடே இது வேறயா? ஐயா 'புரட்சி தலைவர்' விசிறி .அம்மா 'புரட்சி தலைவி' விசிறியா? நல்லாயிருக்கு.
'மன்னாதி மன்னன்' -ல முதல் பாட்டு 'அச்சம் என்பது மடமையடா'-ல ஆரம்பிச்சு 'ஆடாத மனமும் உண்டோ' ,'கண்களிரண்டும்' ,'காவிரித்தாயே' என்று அத்தனை பாடல்களும் தேன்சுவை . அப்புறம் "ஆடாத மனமும் உண்டோ" பாட்டுக்கு பத்மினியோட போட்டி போட்டு நம்ம வாத்தியார் நாட்டியமாடி புலி ஓவியம் வரைவார் பாருங்க!
என்னங்க ஜோ,
அம்மா 'பாட்டும் பரதமும்'லே மயில் டான்ஸ் அட்டகாசமா ஆடுவாங்க. அப்புறம் சிங்கம் வரைய்வாங்களே அது ஞாபகம் இருக்கா?
அப்போ எனக்கு வயசு பதினொண்ணா? கலர் படம் பார்க்கணும்னு மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு இருந்தேன். பக்கத்து வீட்டு மாமா மதுரை சிந்தாமணி தியேட்டரில் ஆப்பரேட்டர். அவர் கூட்டிகிட்டுப் போய் மாட்னி ஷோ இண்டர்வெல் முடிஞ்சதுமே உள்ளே உட்காரவச்சுட்டார். உள்ளதே 'மொடாக்கு'. என்ன புரிஞ்சுச்சோ.
அன்னைக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா...மாட்னி முடிஞ்சதும் தியேட்டரே காலி. நான் மட்டும் தியேட்டரில் தனியா. மாமாட்ட இருந்து முருக்கு (முறுக்கு ..? எது சரி?) வந்தது. கொஞ்சம் கொஞ்சமா தியேட்டர் என் கண் முன்னாலேயே நிறைஞ்சது நல்லா இருந்தது. தங்கவேலு பிடிக்கும்; பிடிச்சுது. வேற என்ன? அடுத்த இண்டவெல்லுக்கும் முருக்கு (ரு-தான் சரி; இல்ல?) வந்தது.
அது என்னமோங்க..அப்ப இருந்தே எம்.ஜி.ஆர்,னா பிடிக்காதுங்க.
முறுக்குதான் சரின்னு நான் நினைக்கிறேன்.
அது போட்டும். தருமிக்குப் பிடிச்சவர் யாரு? நாகேஷ்?
"முறுக்குதான் சரின்னு நான் நினைக்கிறேன். "
'முறுக்குக்கம்பி'என்பது சரி. மாவு முறுக்கப் படுவதால் இப்படி சொல்கிறீர்களோ? எனக்கு 'முருக்கு' சரியென்று படுகிறது.
" தருமிக்குப் பிடிச்சவர் யாரு? நாகேஷ்? "
அய்யோ ரொம்ப..ஆனாலும் எங்க தலைவர் சிவாஜிக்கு அடுத்துதான்.
இதுவரை நாகேஷை நளினமான நடன மூவ்மெண்ட்டுகளில் அடிச்சுக்க ஆள் கிடையாது. அதேமாதிரி நளினம் பெண்களில் யார் தெரியுமா? - of course, என்னுடைய taste-ல். three guesses for you!
தருமி,
ஆஹா,நீங்களும் நம்மைப் போல நடிகர் திலகம் ரசிகரா? அப்படிப்போடு!
//அதேமாதிரி நளினம் பெண்களில் யார் தெரியுமா? - of course, என்னுடைய taste-ல். three guesses for you!//
தேவிகா தானே?
தருமி,
சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி.
சரியா?
ஜோ,
நம்ம வீட்டுலே நடிகர் திலகம்கூட
ஃபேவரைட்தான்!
கணேசன் கவலைப்படாதீங்க..எங்களுக்கும் காலம் வரும்!! :O)
பொதுமக்கள் --> பொதுமகன்/பொதுமகள் ஹு..ஹும், இது நல்லா இல்லையே!
அந்த 'முருக்கு' விஷயம் என்ன ஆச்சு; மக்கள் யாரும் அந்தப் பக்கமே வரமாட்டேங்கிறாங்க! மாயவரத்தானிடம் சொல்லி ஒரு ஓட்டெடுப்பு நடத்த வேண்டியதுதான்!
தம்பி அலங்காரநல்லூர் கணேசு,
"என்னப்பா இது எல்லா ரிட்டையர்டு பார்ட்டிகளும் சேந்து இப்படி எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க.
நற..நற..நற..நற..நற..நற.."
இப்படிச் சொல்லி நம்மகூட யாரையும் சேரவிட மாட்டீங்க போல. same side goal போடாதப்பு; ஒரே ஊருல்லியா? கண்ணுல்ல!
"சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி." அது என்னங்க, நானென்ன அவ்வளவு மோசமான டேஸ்ட் உள்ள பேர்வழியா? இவங்களுக்கும் நடன, நளினங்களுக்கும் ஏதுங்க தொடர்பு? ஒரு clue: நான் சொன்னது bollywood ஆளு; பழசு.
ஜோ - நம்மாளு நீங்க. வாழ்க தலைவர் புகழ்.
துளசி - "நம்ம வீட்டுலே நடிகர் திலகம்கூட
ஃபேவரைட்தான் - வன்மையாகக் கண்டிக்கிறேன். அது என்ன? 'கூட' ?
ஆனாலும், கோபால் நல்லவர்தான்..நீங்கதான் இப்படி?
அதுசரி, மகள் ஒண்ணும் வாசிக்கலையா?
ஷ்ரேயா - ஆமா, உங்களுக்கும் இன்னும் 'நாலைஞ்சு' வருஷம் இருக்குமில்ல??
//நான் சொன்னது bollywood ஆளு; பழசு//
நீங்க சொல்ற அம்மிணி வைசயந்தி மாலாவா இல்ல ஹேமாமாலினியா??
தருமி சொல்ற ஆளு ரேகா!!!
சரியா?
மகள் இன்னும் ஒண்ணும் வாசிக்கலைங்க.
ஏங்க தருமி, இவுங்கெல்லாம் பல்லைக் கடிக்கறதைப் பார்த்தா 50+ங்களை ஓரங்கட்டிடுவாங்களா?
என்னது நாலைஞ்சா?? எப்பிடியும் இன்னும் 30+ வருஷத்துக்குக் கிட்ட இருக்கு. ஆனா..ஓய்வூதியம் தந்தா இப்பவே ரிட்டையராக நான் ரெடி.
ரேகாவா? நான் நினைச்சேன் ஸீனத் என்று. நூரி படத்திலே யார் நடிச்சது? நான் பார்த்த முதல் ஹிந்திப் படம் அது.
"முறுக்கு"ல என்ன குழப்பம் Goldies??
Post a Comment