Monday, March 31, 2008

போற போக்கில்.....

காலையில் நாள்காட்டியின் தாளைக் கிழிச்சப்பத்தான், கா(ல்)வருசம் ஓடிப்போச்சேன்னு இருந்துச்சு. இப்பத்தான் வருசம் பொறந்தமாதிரி இருக்கு! அதுக்குள்ளே..... வார நாட்களைவிட வார இறுதிகளுக்கு இறக்கை கட்டி விட்டுருக்கு போல.

வீட்டுக்குப் பக்கம் ஒரு அஞ்சு நிமிட நடையில் இருக்கும் பள்ளியில் வருடாவருடம் நடக்கும் பள்ளிக்கூடச் சந்தை நேத்து. இதைப் பத்திப் போனவருசம் வந்த நியூஸிலாந்து பகுதி 57 பதிவில் எழுதியாச்சு. மறுபடி என்னத்துக்கு அதையேத் திருப்பிச் சொல்லணும்.

விவரம் இங்கே

அதிசயமா இந்த சமயத்தில் எங்க இவர் ஊரில் இருக்காரேன்னு கிளம்பிப்போனோம். எல்லாம் வழக்கம்போல். விசேஷமா இருந்த ஒண்ணைச் சொல்லணுமுன்னா, நம்ம ஊரின் இந்தப் பக்கத்துக்கான காவல்துறையின்
வண்டியைக் காவலர் ஒருவர் கொண்டுவந்து நிறுத்திவச்சுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு வண்டியின் உட்புற அமைப்புகளைக் காமிச்சு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார். பொத்தானை அமுக்கியதும் 'ஊய்ங் ஊய்ங்'ன்னு சத்தம் போட்டுக்கிட்டே, வண்டியின் தலையில் ஒளிர்ந்து பாயும் சிகப்பு விளக்குப் பசங்களைக் கவர்ந்துக்கிட்டு இருந்துச்சு. சில பிள்ளைகள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கற்பனை உலகில் பறந்துக்கிட்டு இருந்தாங்க. எதிர்கால காவல்துறை ஊழியர்கள்!!!


இந்த வண்டிக்கு அருகிலே இன்னொரு விளையாட்டு நடந்துக்கிட்டு இருந்துச்சு. வாளியில் இருக்கும் தண்ணீரில் செங்கல் அளவுள்ள ஸ்பாஞ்சை நனைச்சு எதிரில், முகத்துக்கு மட்டுமுன்னு வெட்டப்பட்ட துளையுள்ள ஒரு பலகையின் பின்னே நின்னுக்கிட்டு இருப்பவர்மேல் எறியலாம். ஒரு டாலருக்கு அஞ்சுமுறை எறியலாம். அங்கே ஒரு ஆசிரியர் நிக்கறார். அவரது மாணவர்கூட்டம் காசு கொடுத்து வாத்தியாரை முகத்தில் அடிக்குது. பிடிக்காத ஆசிரியருன்னா இன்னும் கூட்டம் கூடுமோ ? பசங்களுக்கு இன்னும் நம்ம வாத்தியாராச்சேன்னு மனசுலே குறுகுறுப்பு இருக்குமோ என்னவோ....பலருக்கும் குறி தப்பல்தான்:-)


இதுக்குப் பக்கத்துலே, புத்தகங்கள் என்று விளம்பரம் செய்திருந்த அறைக்குப் போனோம். சூப்பர்மார்கெட் கேரி பேக் நிறைச்சுப் புத்தகங்கள் அள்ளிக்கலாம். ரெண்டே டாலர் கொடுத்தாப் போதும். இப்ப நான் கொஞ்சம் மாறியிருக்கேன்னு எனக்கேத் தெரிஞ்சது. முந்தியெல்லாம் அள்ளோ அள்ளோன்னு அள்ளிக்கிட்டு வருவேன்.(அப்புறம் இதுகளை வீட்டைவிட்டு வெளியேத்துறது தனிக்கதை) இப்பக் கொஞ்சம் நல்லதா....அதாவது உண்மையாவே வேணுங்கறது எதுன்னுப் பார்க்கும் 'பக்குவம்' வந்துருக்கு.(அப்படி ஒரு நினைப்பு)


கொஞ்சம் புரட்டிப் பார்த்தவுடன், 'அட!'ன்னு சொல்லவச்சது Geoffrey Moorhouse
எழுதுன India Britannica. 1784 ஆம் வருச இந்திய வரைப்படம், 'சதி' நடந்தகாலக் கட்டங்களில் வரைஞ்ச பெயிண்டிங் (painting of suttee by tilly kettle 1771) ஜாலியன்வாலா பாக் வில்லன் Brigadier General Reginald Dyer, ராணுவச்சீர் உடைகள்(Military uniforms of the British empire overseas) புதுடில்லி நிர்மாணத்தின்போது வைஸ்ராய் மாளிகை ( இப்போது ஜனாதிபதி மாளிகை) எப்படி சரிவுள்ள சாலையின் காரணம், ராஜ்பாத் லே இருந்து பார்க்கும்போது கண்ணுக்குத் தென்படாமல் போனதுக்கான தப்புக்கணக்கு' ன்னு படங்கள் நிறைய இருக்கு. இன்னொரு இடத்துலே 'Annie Besant adopted a young madrassi named Krishnamurti' இந்த வரி கண்ணுக்குச் 'சட்'ன்னு தெரிஞ்சது. முழுசையும் படிச்சுப் பார்க்கணும். பழங்காலப் புத்தகமோன்னு பார்த்தால் இதுதான் முதல் பதிப்பு. 1982லே வெளிவந்துருக்கு. (நாங்க நாட்டைவிட்டுவந்த வருசம்)


கொட்டிக்கிடந்த நாவல்களில் ஒண்ணையும் எடுத்துக்கலை. அப்படி இப்படின்னு அலைஞ்சுட்டு, அறையை விட்டு வெளிவந்தப்பக் கீழ்க்கண்டவைகள் பையில்.

The blue day book

Cambodia -- கானாபிரபா சரியா எழுதராறான்னு செக் பண்ணிக்க:-)

Japanese gardens

Newyork apartments

Practising the power of now

Good House keeping step by step cook book --மகளுக்குப் பயன்படலாம்

Collins colour cookery --- சென்னையில் ஒரு தோழிக்காக ( வீட்டிலேயே பிஸ்கெட்ஸ் செய்யணுமாம் அவுங்களுக்கு)

வெளியில் ஈர ஸ்பாஞ்சு எறிதல் இன்னும் நடந்துக்கிட்டு இருக்கு. அதுலே இப்போ முகம்காட்டி நிக்கறது நம்ம கம்யூனிட்டி கான்ஸ்டபிள்!! நான் பார்த்தவரை நாலைஞ்சு முறை 'பச்சக்'ன்னு தண்ணீரோடு ஸ்பாஞ்சு முகத்தில் அறைஞ்சது.:-)))) அந்த இளைஞருக்குச் சிரிப்போச் சிரிப்பு. ஏனோ நம்மூர் போலீஸ்காரர்களின் அனாவசிய அதிகார மிரட்டல் மனசில் வந்து போனது.

இன்னிக்குக் கெமெரா கொண்டுபோகலை. கோபாலின் செல்லில் எடுத்தது இது.





பச்சை நிறத்தில் ஆறு பிளாஸ்டிக் சாப்பாட்டுத் தட்டுகள்( பெரிய அளவு) கிடைச்சது. குளிர்காலம் நெருங்கியாச்சு. வெளியில் இருக்கும் பூத்தொட்டிகளை (ட்ராப்பிக்கல் ப்ளாண்ட்ஸ்) வீட்டுக்குள் கொண்டு வரணும். இனி இவை, அந்தத் தொட்டிகளுக்கு அடியில் வைக்கும் சாஸர்கள். அதுக்குண்டான கடையில் ஒவ்வொண்ணும் ஆறு டாலர். இப்ப முப்பத்தியஞ்சை மிச்சம் பிடிச்சேன்:-)


மாலை ஏழுமணிக்கு ஸ்வாமிநாராயண் கோவிலில் இருந்து நியூஸிக்கு விஸிட் வந்திருக்கும் இரண்டு சாமியார்களின் பேச்சைக் கேட்கப் போனோம்.


கோபாலை அறிமுகம் செஞ்சுவச்சப்ப, ஒரு சாமியார் அவர்கிட்டே அதிகநேரம் பேசிக்கிட்டு இருந்தார். இவரும் தலையை ஆட்டி ஆட்டி எதோ சொல்லிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சேன். என்னன்னு அப்புறம் விசாரிச்சால்,
'சென்னையில் தாசப்பிரகாஷ் ஹோட்டல் பக்கத்தில் இப்பப் புதுசா ஒரு ஸ்வாமி நாராயண் கோயில் கட்டி இருக்காங்க'ன்னு தகவல் சொன்னாராம்.


ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))

27 comments:

said...

துளசி மேடம்

"செப்டம்பர் 19ம் தேதி நான் எழுதிய ஒரு மடலிலிருந்து....

{{முதன் முதலாக எனது மெயில் பாக்ஸ் நிரம்பி வழிகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர், கம்ப்யூட்டர் வாங்கிய புதிதில் மெயில் அனுப்பவோ, பெறுவதற்கோ யாருமின்றி எனது ஒரு மெயில் விலாசத்திலிருந்து மற்றொரு விலாசத்திற்கு எனக்கு நானே மெயில் அனுப்பி மகிழ்ந்திருக்கிறேன். பின்னர் எந்த வலைத்தளத்திற்குச் சென்றாலும் முதல் வேலையாக ரிஜிஸ்டர் செய்து விடுவேன். முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பின்னர் அதுவே பெரிய தொல்லையாகி அன்சப்ஸ்கைரப் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ஆனால் எந்த நேரத்தில் சொன்னேனோ எல்லா படைப்புகளையும் அக்னாலட்ஜ் செய்யுங்கள் என்று, திடீரென வேலைப்பளு அதிகமாகி, எல்லா மெயில்களையும் சரியாகப் பார்க்கக்கூட நேரமின்றிப் போய் விட்டது}}

எத்தனை ஆங்கில வார்த்தைகள்... வரவரக் குறைந்து போனது. அக்னாலட்ஜ் என்ற வார்த்தைக்கு என்ன தமிழ் வார்த்தை என்று ஒரு விவாதம் நடைபெற்றது"

http://www.maraththadi.com/article.asp?id=299

மரத்தடி என்ற இணைய விவாதக்குழு ஆரம்பித்து ஒரு வ்ருட நிறைவில் பழைய விவாதங்களை அசை போடுகையில் நான் எழுதியது.

உங்களுக்கு நம்பிக்கை வருமே!

***

அப்புறம், நான் சொல்ல வந்தது உங்களைப் போன்ற தன்னார்வ எழுத்தாளர்களுக்கானது அல்ல!

said...

வாங்க பிரபு.

//உங்களுக்கு நம்பிக்கை வருமே!//

ஏன் வராம? என்னை மரத்தடிக்குக் கூட்டிவந்தது நீங்கதானே:-)))

இப்ப நான் படுத்தும்பாட்டுக்கு யாரையாவது நண்பர்கள் வையணுமுன்னா அது உங்களைத்தான்:-)))))

சொல்லவந்தது எனக்கல்லன்னாலும், கூடியவரைத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தணுமுன்னு எண்ணம் வராம இருக்கா?


தன்னார்வலர்.....பின்னே யாராவது காசுகொடுத்து வெளியிட்டாலும்:-)))))))))))))

said...

என்னது “வாத்தியாரை” ஸ்பாஞ் வைத்து அடிப்பதா?
தப்பாக நினைத்து “ஜெயமோகன்” என்று நினைத்துவிடப்போகிறார்கள். :-))

said...

அப்படியே பள்ளிக்கூடத்துக்குப்போய்
ஸ்பான்ஞ்சில் தண்ணீர் தோய்த்து முகத்தில் அடித்து,
புத்தகங்கள் துழாவி...
சந்தோஷம் அனுபவித்து
பின்னர்
சாமியார்கள் உரை கேட்டது வரை
நாங்களும் கூட இருந்த
உணர்வு!

நல்லா இருக்கும்மா!

said...

வாங்க குமார்.

இங்கே யாருக்கும் ஜெமோ வைத்தெரியாது, என்னைத்தவிர:-))))

said...

வாங்க சுரேகா.

கூட(வே)வந்ததுக்கு(ம்) நன்றி.

said...

இந்த வாத்தியாரைக் கலாட்டா செய்றது நல்லா இருக்கே.

பீன் ஷோ ல பார்த்த ஞாபகம் வருது:)
சாமியார்கள் பேசாட்டாப் போறாங்கம்மா.
நம்ம வீட்டு சாமி பேசினா போதும்:)

said...

வாங்க வல்லி.

வீட்டுச்சாமி அங்கே சாமியாரிடம் ஒரே தலையாட்டல்:-))))


வாத்தியார் கையைப்பிடிச்சுக்கிட்டு அப்படியே தொங்கும் பசங்களும் இருக்காங்க. ப்ரைமரி ஸ்கூலில் எல்லாம் சலேகா:-))))

said...

கேமிரா எல்லாம் எடுக்காம எப்படி போகலாம்.. நீங்க ஒரு பதிவர் அதுவும் எதையும் விசயமுள்ள பதிவாக்கும் திறமை கொண்டவர் இப்படி சொல்லலாமா???

Anonymous said...

நான் நேத்து வெலிங்டன் நூலகத்துல ஏதாவது தமிழ் புத்தகம் புதுசா வந்திருக்கான்னு பாக்க போனேன். என்ன புத்தகம் பாத்தேன்னு நினைக்கறீங்க. புத்தகம் பேரு துளசி தளம். எண்டமூரி வீரேந்திரநாத் எழுதினது

said...

//நியூஸிலாந்து பகுதி 57 பதிவில் எழுதியாச்சு. மறுபடி என்னத்துக்கு அதையேத் திருப்பிச் சொல்லணும்//

அப்போ இனி மீள்பதிவே போடப்போறதில்லை-ன்னு வெரதம் எடுத்திருக்கீங்க! வெல்டன் டீச்சர்! :-)

//'சென்னையில் தாசப்பிரகாஷ் ஹோட்டல் பக்கத்தில் இப்பப் புதுசா ஒரு ஸ்வாமி நாராயண் கோயில் கட்டி இருக்காங்க'//

தாசப்பிரகாஷ் எங்க வூட்டுப் பக்கம்! என்ன தான் பேஸ்கின் ராபின்ஸ் வந்தாலும் தாசப்பிரகாஷ் ஐஸ்க்ரீமே தனி தான்!

//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))//

ச்சீ...இவங்கல்லாம் சாமியாரே இல்லை! :-)

said...

//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))//

அய்யே.. அப்ப இவங்களை எதுக்கு 'சாமியார்கள்'ன்னு கூப்பிடுறீங்க..? பொருத்தமாவே இல்லையே டீச்சர்..

said...

வாங்க கயல்விழி முத்துலெட்சுமி.

வயசாயிருச்சுல்லே...அதான் கெமெரா மறந்து போகுது:-)

கோபால் கூடவர்றதாலே 'மெய்' மறந்துட்டேன்

இப்படி எதாவது காரணம் சொல்லவா? :-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

நீங்க கொடுத்து வச்சவங்க. இல்லேன்னா துளசிதளம் கிடைக்குமா?

இங்கே நம்மூர்லே
'நல்வரவு'னு வாசக் கண்ணாடிக் கதவில் எழுதி இருக்கு.

அம்புட்டுதான் தமிழ்

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஆஹா சரியான ஆள், சரியான நேரம்.

பொடிநடையா அந்தக் கோவிலுக்குப்போய் படம் எடுத்து அனுப்புங்க. (படம் உள்ளே எடுக்க விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்)

குறைஞ்சபட்சம் வெளியில் இருந்தாவது ஒரு படம் அனுப்புங்க.

சாமி.........யார் சொன்னதை நம்ப முயர்சிக்கிறேன்:-)))

said...

வாங்க உண்மைத்தமிழன்.

சாமியார் இல்லைதான்....

'குரு ஜி'யாம்.

said...

//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))//
அக்கா!
எல்லாம் சரி ,இதை நம்ப முடியவில்லை. சிலர் சாமியாராவதே...அதுக்குதானே...

said...

//அதாவது உண்மையாவே வேணுங்கறது எதுன்னுப் பார்க்கும் 'பக்குவம்' வந்துருக்கு/
நெறய படிச்சுட்டீங்களோ?

said...

//நம்ம ஊரின் இந்தப் பக்கத்துக்கான காவல்துறையின்
வண்டியைக் காவலர் ஒருவர் கொண்டுவந்து நிறுத்திவச்சுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு வண்டியின் உட்புற அமைப்புகளைக் காமிச்சு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார்.//

நம்ம் ஜூனியர் பள்ளிக்கூடத்தில் கூட இந்த மாதிரி செய்வாங்க. தீயணைப்பு வண்டியையும் கொண்டு வருவாங்க.

//அருகிலே இன்னொரு விளையாட்டு நடந்துக்கிட்டு இருந்துச்சு//

இந்த விளையாட்டு நம்ம கிளாசில் எப்போ? ஆனா ஸ்பாஞ்சுக்குப் பதிலா பின்னூட்டம் அப்படின்னு சொல்லிடுவீங்கதானே!! :))

//அதாவது உண்மையாவே வேணுங்கறது எதுன்னுப் பார்க்கும் 'பக்குவம்' வந்துருக்கு.(அப்படி ஒரு நினைப்பு)//

கூட உங்க அவர் வந்ததுனாலதானே பக்குவமெல்லாம்!! :))

//Newyork apartments//

அடுத்து வாங்கப் போறது இங்கதானா!!

//இன்னிக்குக் கெமெரா கொண்டுபோகலை. //

:-X

//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))//

எல்லாம் எதுக்கு வம்புன்னுதான். இவங்க எல்லாம் ஞானம் பெற்றவர்கள் போல!! :)))

//வயசாயிருச்சுல்லே...அதான் கெமெரா மறந்து போகுது:-)//

ரீச்சர், உண்மையிலேயே வயசாகிப்போச்சு போல. இப்படி உண்மையெல்லாம் சொல்லறீங்களே!!

//கோபால் கூடவர்றதாலே 'மெய்' மறந்துட்டேன்//

என்னவெல்லாம் பொய் சொன்னீங்க? :))

//நீங்க கொடுத்து வச்சவங்க. இல்லேன்னா துளசிதளம் கிடைக்குமா?//

ஆனா இந்த வகுப்புப் பசங்களுக்கு துளசிதளம், மாதவிப்பந்தல் எல்லாமே கிடைக்குதே!! :)

said...

இன்னொரு இடத்துலே 'Annie Besant adopted a young madrassi named Krishnamurti' இந்த வரி கண்ணுக்குச் 'சட்'ன்னு தெரிஞ்சது. முழுசையும் படிச்சுப் பார்க்கணும். பழங்காலப் புத்தகமோன்னு பார்த்தால் இதுதான் முதல் பதிப்பு. 1982லே வெளிவந்துருக்கு. (நாங்க நாட்டைவிட்டுவந்த வருசம்)
------
i want to know more about Annie"please write about her son krishnamurti

said...

கோமா,

இங்க பாருங்க!
http://en.wikipedia.org/wiki/Jiddu_Krishnamurti

ரீச்சர் அந்த புத்தகத்தைப் படிச்சுட்டு அப்புறமா மேல்விபரங்கள் தருவாங்க.

said...

//Cambodia -- கானாபிரபா சரியா எழுதராறான்னு செக் பண்ணிக்க:-)//

aahaa aahaa ;-))

said...

வாங்க யோகன்.

அதெப்படிச் சொல்ல முடியும்? ஜெனரலைஸ் பண்ணக்கூடாதுன்னு மகள் அடிக்கடி சொல்வது இப்பத்தான் என் தலையில் கொஞ்சமா ஏறுது:-)))

ஒருவேளை நாம் சந்திக்க நேரிட்டவர்கள் இப்படியானவங்களோ?

said...

வாங்க இளா.

என்னத்தை நிறையப் படிக்கிறது?

ஆனா...... ஏகப்பட்டது வாரிவந்து அதை அப்புறம் தள்ளிவிடும் பாடு இருக்கே அதான்.... யோசிக்க வச்சது:-)

said...

வாங்க கொத்ஸ்.

இன்னிக்குத்தான் வகுப்புத்தலைவனின் 'கடமை'யைச் சரியாச் செஞ்சுருக்கீங்க.

வாழ்க. வாழ்க.

said...

வாங்க கோமா.
அதான் நம்ம கொத்ஸ் சொல்லிட்டாரே. அதே அதே:-)

said...

வாங்க பிரபா.

ஒண்ணையும் விட்டுறாம எழுதுங்க:-)))