Wednesday, March 26, 2008

பீர்க்கங்காய் ....(வாட் எவர் இட் ஈஸ்)

எச்சரிக்கை: இது ஒரு சமையல் பதிவு:-)


எந்தக் காய்க்கும் இல்லாத ஒருதனிச்சிறப்பு இந்தப் பீர்க்கங்காய்க்கு இருக்கு. தோலையும் விடவேணாம்:-)))) ரெண்டுவகையாக... ஒரே காயில் & ஒரே நாளில்.

பீர்க்கந்தோல் துவையல். பீர்க்கங்காய் கூட்டு, பொரியல் இல்லேன்னா இந்த வாட் எவர் இட் ஈஸ்:-)))


கிடைப்பதே அபூர்வம். அதுலேயும் ரெண்டு காய் (600 கிராம்) வாங்குனாலே ஜாஸ்தி. இப்ப யாரோ செஞ்ச புண்ணியத்தால் பீர்க்கங்காய், பாவக்காய், வெள்ளைப்பூசணி, சுரைக்காய் இங்கே உள்ளூரிலேயே 'ஹாட் ஹவுஸ்'லே பயிர்செஞ்சு ஞாயித்துக்கிழமை சந்தைக்கு வருது. அதுவும் ஒரே ஒரு கடைதான். ஒரு மாசம்வரை மட்டுமே யாவாரம்.



ஒரு பெரிய சுரைக்காயைக் காயவச்சு அதுக்கு பச்சைச் சுரைக்காய் வர்ணமடிச்சுக் கடையில்( கடை என்ன கடை? ட்ரக் பின்னாலேதான் கடையே)
தொங்கவிட்டிருக்கார். அலங்காரமாம். சுரைக்குடுக்கை. நம்மூர்லே இதுதான் நீச்சல் கத்துக்கப் பயன்படும் ' லேர்ன் டு ஸ்விம், ஃப்ளோட்' னு சொன்னதும் கடைக்காரருக்கு ஒரே ஆச்சரியம்:-)



இனி சமையல் குறிப்பைப் பார்க்கலாம். வகுப்பில் நம்ம ரங்குகளுக்கு முன்னுரிமை.:-))))




முழுப் பீர்க்கங்காயைக் கழுவிக்கணும். தோல்சீவும் கருவியால் முதலில் நம்ம கைவிரலில் தட்டுப்படும் ரிட்ஜ் இருக்கு பாருங்க, அதை மெலிசா வரிவரியா (நூல்போல வரும்)சீவி அதைக் குப்பையில் சேர்க்கவும்:-)


அடுத்து தோலைச் சீவணும். கொஞ்சம் சதைப்பற்று வந்துட்டாலும் கவலை இல்லை. முழுசும் சீவி எடுத்து வச்சுக்குங்க. ரெண்டு காய்களுக்குச் சொல்லும் அளவு இவை.



துவையல்: செய்முறை.

துவையலுக்கும் சட்டினிக்கும் என்ன வித்தியாசம்? துவையலுக்குத் தாளிக்க வேணாம். அது இருக்கட்டும்.




தோலோடு கூடிய உடைத்த உளுத்தம் பருப்பு: காலேயரைக்கால் கப்



கொட்டையில்லாத புளி : கமர்கட் அளவு



மிளகாய் வற்றல் : 5 இல்லே 6



பெருங்காயத்தூள் : ஒரு அரை டீஸ்பூன்



பீர்க்கம்தோல்: அந்த 2 காய்களின் தோல் சீவி வச்சது



தேங்காய்த் துருவல்: கால் கப்.



எண்ணெய் : ஒரு டீஸ்பூன்.



உப்பு: ஒரு முக்காலே அரைக்கால் டீஸ்பூன்


வெறும் வாணலியில் உளுத்தம் பருப்பைக் கொஞ்சம் சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதை ஒரு தட்டில் எடுத்து வச்சுக்கணும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெய் அதே வாணலியில் சேர்த்து மிளகாய் வத்தல், பெருங்காயத்தை வறுக்கணும். மிளகாய் கருகிடப்போகுது. கவனம் தேவை. பிறகு அதுலேயே பீர்க்கந்தோலைப் போட்டு வதக்கணும். அடுப்புத் தீ 'சிம்'லெ இருக்கட்டும். வதங்குனதும் தேங்காய்த்துருவலைச் சேர்த்து ஒரு கிளறிகிளறிட்டு அடுப்பை அணைச்சுருங்க.



கொஞ்சம் ஆறுனதும் உப்புப் புளியையும் கூடச் சேர்த்து துவையல் ஜார்லே அரைச்சுக்குங்க. கடைசியா வறுத்துவச்ச உ.பருப்பு சேர்ந்து கரகரன்னு அரைச்சு எடுத்துட்டாப் போதும்.


தோலோடு கூடிய உ.ப. இல்லாதவங்க வெறும் வெள்ளை உ.ப. சேர்த்துக்கலாம். தோலுக்கு என்ன மவுஸ்? அது ஒண்ணுமில்லை. ஏதோ தெரியாத்தனமா வாங்கிவச்சது வீட்டிலே கிடக்கு. இப்படியாவது தீர்த்துடலாமுன்னுதான்:-)



கொத்ஸ், வீட்டில் அரைக்கும்போது தேங்காய் வேணாம். மிளகாயை ஒன்னுரெண்டு குறைவாப் போடுங்க கொத்ஸ்.


இது சாண்ட்விச்சுக்கும் நல்லாவே இருக்கு.



அடுத்தது: இந்தப் பதிவின் தலைப்பு.


கூட்டுன்னு சொல்லலாமா இல்லையான்னு தெரியலை. வழக்கமான செய்முறையில் இருந்து மாறுபட்ட சேர்வைகள்.அதான் முன் ஜாக்கிரதை
முனியம்மாவா இருக்கேன்.



பாசிப்பருப்பு: கால் கப்

க. பருப்பு: ரெண்டு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியா நறுக்குனது)

தக்காளி- 2 (துண்டுகளா நறுக்கி வச்சுக்கணும்)

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்.(நான் போட்டது MTR சாம்பார் மசாலா)

மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்

உப்பு - ஒரு டீஸ்பூன்

கருவேப்பிலை- ஒரு இணுக்கு

சீரகம் - அரை டீஸ்பூன்

எண்ணெய்- 3 டீஸ்பூன்


தோலெடுத்த அந்த ரெண்டு காய்களின் துண்டங்கள். கொஞ்சம் பெருசாவே நறுக்கிக்கலாம். 1 அங்குல அளவு.


சமையல் ஆரம்பிக்குமுன்னே ரெண்டு பருப்பையும் நல்லாக் கழுவிட்டுக் கொஞ்சம் தண்ணீரில் ஊறவிடுங்க. அதுக்கப்புறம் காய்களின் தோல் சீவி, துவையலுக்கு வறுத்து, அரைச்சுன்னு வேலை நடக்கட்டும்.


ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் இந்தப் பருப்புகளைச் சேர்த்து அரைக் கப் தண்ணீரும் ஊத்தி 100% பவரில் 3, 50% பவரில் 8 நிமிஷமும் வையுங்க. அதுபாட்டுக்கு வேகட்டும்.

வாணலியில் எண்ணெய் ஊத்தி அடுப்பில் ஏத்துங்க. சூடானதும் சீரகம் போட்டு வெடிக்க விட்டு, கருவேப்பிலை, வெங்காயம்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கணும். நல்லா வதங்குனதும், ம.பொடி, சா.பொடியைச்சேர்த்து ஒரு 20 வினாடி புரட்டிட்டு அதில் தக்காளித் துண்டங்களைச்சேர்த்து வதக்குங்க. ஆச்சா..... நல்லா வதங்குனதும் பீர்க்கங்காய்த் துண்டு சேர்க்கணும். தக்காளி சேர்த்தும் தண்ணீர் விட்டுக்கும். பத்தலைன்னா அரைக் கப் தண்ணீர் சேர்த்து உப்பையும் போட்டுக் கிளறி மூடிவைச்சு வேகவிடுங்க. 'சட்'ன்னு நாலைஞ்சு நிமிசத்தில் வெந்துரும். இப்ப வெந்துகிடக்கும் பருப்புக்களைச் சேர்த்து நாலு நிமிஷம் ஒரு கொதி கொதிக்கவிட்டு அடுப்பை அணைச்சுடலாம்.


சப்பாத்திக்கு நல்லா இருக்கும்.


இருக்குன்னு சொல்லி கோபால் சாப்பிட்டார்:-)


பாசிப்பருப்பு நல்லா மசிய வெந்துபோய், க.பருப்பு மட்டும் கண்ணை முழிச்சுக்கிட்டு இருக்கு. தேங்காய் சேர்க்கலை. (கொத்ஸ் கவனிக்க)


சொந்த சாகுபடியில் தோழி வீட்டுச் செர்ரி டொமாட்டோவும் நம் வீட்டு வெங்காயமும்.

59 comments:

said...

//சப்பாத்திக்கு நல்லா இருக்கும்.
இருக்குன்னு சொல்லி கோபால் சாப்பிட்டார்:-)//

அக்கா!
அவர் நல்லா இல்லை என்னு எப்படி சொல்லுவார். நீங்க சமைச்சதாச்சே!
பகிடி...
படமெல்லாம் போட்டு பதிவே நல்லாத்தான் இருக்கு!

said...

ஹை. எங்க வீட்டுல என் தங்கமணி செய்யுற மாதிரியே செஞ்சு அழகழகா படம் புடிச்சுப் போட்டிருக்கீங்களே. தங்கமணியையும் இந்த இடுகையைப் பாக்கச் சொல்லோணும். எங்க வீட்டுலயும் இப்படி ரெண்டையும் செய்வாங்க. எனக்கு ரெண்டும் பிடிக்கும். எங்க அத்தை (அதாவது என் மாமியார்) இங்கே வந்திருந்தப்ப இவங்க தான் அவங்களுக்குச் சொல்லி குடுத்தாங்க. அதுவரைக்கும் எங்க அத்தை சுரைக்காயும் சமைச்சதில்லையாம்; பீர்க்கங்காயும் சமைச்சதில்லையாம். அமெரிக்கா வந்து என்னென்னமோ காய்கறியெல்லாம் செய்யத் தொடங்கிட்டன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. :-)

said...

பாக்கவே நல்லாயிருக்கு

said...

இன்னைக்கு பீர்க்கங்காய் தான் செய்யறதா இருந்தோம். உங்க பதிவை பார்த்திட்டு பீர்க்கங்காய் வாட் எவர் இட் இஸ் உடனே செய்ய ஆரம்பிச்சாச்சு. எங்க தங்கமணி உங்களை ரொம்ப விசாரிச்சாங்க.

said...

வாங்க யோகன்.

முப்பத்தி மூணேமுக்கால் வருசமா வாயைத் தொறக்காமச் சாப்புட்டுக்கிட்டு இருக்கார். இப்பத்தான் நல்லா இருக்குன்றார். அதுவும் நான் கேட்ட பிறகு:-))))

பூரிக்கட்டை படம் எடுக்கலை:-))))

said...

வாங்க குமரன்.

பீர்க்கங்காய் பித்தம்னு சொல்லி நம்மூர்லே அவ்வளவாச் செய்யறதில்லை போல. காய் வாங்கப்போகும்போது நாட்டுவைத்தியரைக் கூட்டிக்கிட்டுப் போகக்கூடாது. பிரிவோம் சந்திப்போம் பாஸ்கர் மாதிரி:-))))

said...

வாங்க மாதங்கி.

தின்னாலும் நல்லாவே இருக்கு:-))))

said...

வாங்க பிரேம்ஜி.

செஞ்சு ருசிச்சுப் பார்த்துட்டுச் சொல்லுங்க. ஒரு ரங்கு சொன்னால்தான் மற்ற ரங்குகளுக்கு நம்பிக்கை வரும்:-))))

உங்க தங்கமணிக்கு என் அன்பு.

said...

அழகழகா படம் போட்டு சொல்லியிருக்கீங்க. சமச்சுபுடுவோம் :) நான்(ங்க) இதுவரைக்கும், பீர்க்கங்காய்+ இறால் மட்டும்தான் செஞ்சுருக்கோம். துவையல், கேள்விப்பட்டிருக்கேன். இனிமேதான் செய்யனும்!

//சுரைக்குடுக்கை. நம்மூர்லே இதுதான் நீச்சல் கத்துக்கப் பயன்படும் ' லேர்ன் டு ஸ்விம், ஃப்ளோட்' //

நாங்க முந்தி கள்ளுக்கடை வச்சுருந்தப்போ, சுரைக்குடுக்கையில்தான் ஒவ்வொரு மரத்துலேருந்தும் கள் எறக்குவாரு எங்க 'நாடாவி' :)

//பூரிக்கட்டை படம் எடுக்கலை:-))))//

இது இருந்தா போதுமே, எப்பிடி சமச்சாலும் நல்லா இருந்துதான் ஆகனும் :)

நன்றி, அக்கா!

said...

பீர்க்கங்காய் பிடிக்கும், செய்வேன்.. உங்க செய்முறையும் கத்துக்கலாம்னு வந்தேன். படம் நல்லா இருக்கு, பாத்தாலே பசிக்குது!

//முப்பத்தி மூணேமுக்கால் வருசமா வாயைத் தொறக்காமச் சாப்புட்டுக்கிட்டு இருக்கார். // எப்படிங்க? இல்ல, எப்படி இது? :-)

இந்த சாப்பாட்டுக்காகவே அங்க வரணும் போலிருக்கே...

said...

பீர்க்கங்காய் என்றாலே...
வேகமாக ஸ்குரோல் பண்ணி இங்கு வந்துட்டேன். :-)

said...

ரீச்சர், நேத்துதான் பீர்க்கங்காய் செஞ்சோம். உங்க வாட்டெவர் இட் இஸ் ரெசிபி இருந்தா தூள் கிளப்பி இருக்கலாம். நாங்க செஞ்சது உங்க முதல் ரெசிபி. ஆனா அதில் வெறும் தோலைப் போடாமல் வெட்டி வெச்ச பீர்க்கங்காயையும் போட்டுச் செஞ்சுட்டேன். அப் கோர்ஸ் தேங்காய் கிடையாது.

//எந்தக் காய்க்கும் இல்லாத ஒருதனிச்சிறப்பு இந்தப் பீர்க்கங்காய்க்கு இருக்கு. //

இதை வாழைக்காய் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். வாழைக்காய் தோலில் எங்க அம்மா துவையலும் பொரியலும் செய்வார்களே!

said...

//பீர்க்கங்காய் என்றாலே...
வேகமாக ஸ்குரோல் பண்ணி இங்கு வந்துட்டேன். :-)//

குமார் சின்ன வயசில் நானும் இப்படித்தான். ஆனா இப்போ நானே செய்யற அளவு வந்தாச்சு!!

said...

அதானே பார்த்தேன் என்னடா கருப்புளுந்தை சொல்றீங்களேன்னு....இதனால் துவையல் கலர் மாறிவிடாதா?....

இட்லி, தோசைக்கு இந்த துவையல் நன்றாக இருக்கும்.

எனக்கென்னமோ கூட்டு டேஸ்டை விட இந்த துவையல் சூப்பரா இருக்குன்னு தோணும். :)

said...

வாங்க தஞ்சாவூரான்.

படம் போட்டுக் கதை(பதிவு) எழுதுன்னு இப்படி ஒன் வுமன் ஷோ ஆகிப்போச்சு:-)))

வீட்டுக்கு வீடு வாசப்படி மட்டுமில்லை பூரிக்கட்டையும் இருக்கு:-)))))

said...

வாங்க கெக்கேபிக்குணி.

எப்படி இப்படியா?
அப்படி இப்படின்னு அல்வா எல்லாம் செஞ்சு வாயைக் கட்டிவச்சுருக்கேன்ப்பா:-)))

வாங்க நம்ம வீட்டுக்கு. சமையலறை ரகசியங்களைச் சொல்லித் தர்றேன்:-))))

said...

வாங்க குமார்.

நம்ம டாக்டர் சொன்னதைப் பாருங்க.
நல்லதைக் கோட்டைவிடறது நல்லால்லே..... ஆமாம்:-)

said...

வாங்க கொத்ஸ்.

நேந்திரங்காய் தோல் கூட்டுன்னு ஒன்னு மீனாட்சியமாளில் இருக்கு. செஞ்சு பார்த்ததில்லை.

அம்மாகிட்டே இருந்து ரெஸிபி வாங்கிப் போடுங்க.

வாழைப்பழத்தோலை என்ன செய்யலாமுன்னும் கேளுங்க. குப்பையில் வீசுன்னு சொல்லிடப்போறாங்க:-)

ஆமாம். சின்ன பிள்ளையா இருக்கும்போதே நீங்க ஸ்க்ரோல் செய்வீங்களா?!!!!!!

said...

கொத்ஸ்,

//ஆனா இப்போ நானே செய்யற அளவு வந்தாச்சு//

எது?

ஸ்க்ரோலா?:-)))

said...

வாங்க மதுரையம்பதி.

இப்பெல்லாம் கலர் பார்க்கறதை விட்டாச்சு:-)

said...

வாங்க டெல்ஃபீன்.

நல்வாக்கு சொன்னதுக்கு நன்றி.

இனியாவது குமார் திருந்தணும்:-))))

said...

பீர்க்கங்காய் ரொம்ப நல்லது. இதுல பருப்பு நான் வேற மாதிரி செய்வேன். அதச் சாப்புட்டுட்டு என்னோட பெங்காலி நண்பன்...அதுக்கு ஜிங்கே தால்னு பேரு வெச்சிட்டான். ஜிங்கேன்னா வங்கத்துல பீர்க்கையாம்.

தோலுரிச்சித் துண்டாக்குன பீர்க்கை. வெங்காயம் தக்காளி நறுக்கிக்கனும். குக்கர்ல எண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து போட்டு அப்புறம் வெங்காயம் தக்காளி போட்டு.... அதுல கொஞ்சம் சாம்பார் பொடியும் போட்டு.. பீர்க்கங்காய்த் துண்டுகளையும் போட்டு.. பாசிப்பருப்பும் போட்டு.. தேவையான தண்ணி ஊத்தி குக்கர்ல குண்டு போட்டு வேக வைக்க வேண்டியதுதான். அருமையானா ஜிங்கே தால் தயார்.

said...

அம்மா இது ரெண்டும் தவிர எங்க பக்கத்திலெ வேர்கடலை போட்ட பொரியலும் செய்வோம்,மத்த ரெண்டை விட இது தான் என் பெண்ணுக்கு உள்ள போகும்(வயசு 5 தான் ஆவுது) :)

Anonymous said...

தோலுரிச்ச பீர்க்கங்காய் frozen-ஆ கிடைக்குதே. அதை வைச்சு இங்கெ ஆந்திரா நண்பி செஞ்சிருந்தாங்க. சுப்பரோ சூப்பர். இதையும் செஞ்சு பாத்திருவோம். ஜிராவோட குறிப்பையும் பண்ணிப்பாத்திருவோம்.

said...

வாங்க ராகவன்.

ரெஸிபிக்கு நன்றி. ஆனால் (இனி)குண்டெல்லாம் போட முடியாது:-))))

ஜிங்கான்னா ஹிந்தியில் இறால் மீன் இல்லையா?

said...

வாஅங்க மீனா அருண்.

இப்படி மொட்டையா வேர்க்கடலை போட்டதுன்னு சொன்னா சம்மதிக்க மாட்டோம். ரெஸிபி எங்கே?

நம்ம ராகவன் பாருங்க எப்படி நல்லாச் சொல்லி இருக்காருன்னு.

சீக்கிரம் ரெஸிபி சொல்லுங்க. அடுத்தவாரம்தான் கடைசியா இந்தக் காய் கிடைக்கும். செஞ்சு பார்த்துடணும்.

said...

எங்கம்மா நல்லா செய்வாங்க இது இரண்டுமே.. அம்மா அளவு இல்லாட்டியும் நானும்கொஞ்சம் செய்வேன்.. உங்க செர்ரி டொமோட்டா நல்லா இருக்கே...

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

ஃப்ரெஷாக் கிடைக்கும்போது ஃப்ரோசன் எதுக்குன்னேன்?

நண்பி சொற்பிரயோகம் சரியா?

வேர் இஸ் கொத்ஸ்?

said...

வாங்க கயல்விழி.

குட்டியா குண்டு குண்டா கோலியாட்டம் இருக்குல்லே?
அப்படியே 'லபக்' கிடலாம்:-)))

தோழி வீட்டு ட்ரைவ் வே முழுசும் ரெண்டு பக்கமும் போட்டுவச்சுருக்காங்க.

said...

//முப்பத்தி மூணேமுக்கால் வருசமா வாயைத் தொறக்காமச் சாப்புட்டுக்கிட்டு இருக்கார். //
புத்திசாலி. ===)))))))

said...

கோபால் நல்லா இருக்காரா?

said...

செய்முறை தானே சொல்லிட்டா போச்சு,
பீர்க்கங்காய்
வெங்காயம் 1 பொடியா நறுக்குனது
வேர்கடலை 1கப் (பிரெஷ்ர் குக்கரில் வேகவத்து கொள்ள்வும்)
மஞ்சள தூள்
மிளகாயத்தூள்
உப்பு
கறிவேப்பிலை 1 ஈர்க்கு
தேங்காய் துருவல் 1 டீஸ்புன்

கூட்டுக்கு நறுக்கின மாதிரியே காயை நறுக்கிங்க
ங்க்,வாணலியிலே கொஞ்ச்ம் எண்ணெய் விட்டு,கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தாளிச்ச்தும்,வெங்காய்ம் சேர்த்து வதக்கன பின்னாடி,பீர்க்கங்காய சேர்க்கனும்,காய் தண்ணி விட ஆரம்பிக்கும்.அப்ப வேர்கடலை,மிளகாய்த்தூள்,மஞ்சதூள் சேருங்க.உப்பை கொஞசமா சேருங்க,இல்லனா பீர்க்கங்காய பிஞ்சா இருந்தா உப்பு கரிக்கும்.தண்ணி வத்தின பிறகு தேங்காய் துருவல கறிவேப்பிலை சேர்த்து ஒரு தடவை கிளறிட்டு இற்க்கிடுங்க.

அவ்வள்வு தான்

said...

//புளி : கமர்கட் அளவு// டீச்சர், முதல் முறையா இப்படி ஒரு அளவு கேள்விப் படறேன். பொதுவா சமையல் குறிப்பு சொல்றவங்க நெல்லிக்காய் அளவு புளி, எலுமிச்சம் பழம் அளவு இப்படியாகத்தான் சொல்லி பார்த்திருக்கேன். டீச்சர்ன்றதால சின்னப் புள்ளைங்க பாஷைலயே பேசறீங்க போல...

எங்க அம்மாவும் இந்த பீர்க்கங்காய் அடிக்கடி செய்வாங்க. பஜ்ஜி கூட இதுல போடுவாங்க. ஹ்ம்ம்... ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே...

said...

இங்கு பீர்க்கங்க்காய்க்கு பஞ்சமே கிடையாது :) ஆனால் அதை எப்படி சமைப்பது என்பது புரியாத வயது?!

இதோ ஆரம்பித்துவிட்டேன் அக்கா உங்க பதிவின் உதவியோடு !

ஊர்லனா பீர்க்கங்காய் சட்னி (துவையல் சட்னி ரெண்டும் 1தானே!) சுடச்சுட இட்லியும், இறக்கிய காலங்கள் நினைவுக்கு வந்தது :)

said...

// பீர்க்கங்காய் பித்தம்னு சொல்லி நம்மூர்லே அவ்வளவாச் செய்யறதில்லை போல. காய் வாங்கப்போகும்போது நாட்டுவைத்தியரைக் கூட்டிக்கிட்டுப் போகக்கூடாது.//

நம்மூர்லே செய்யாததற்கு காரணம் வேற. பீர்க்கை வாங்கும்போது மித்தலா, இளசான்னு பார்த்து வாங்கவேண்டும். இரண்டு அல்லது 3 நாட்களுக்குள்ளாகவே பீர்க்கை முத்தலாகிவிடுகிறது.
இன்னொரு காரணம் சில பீர்க்கங்காய்கள் கசக்கும். நீங்கள் வாங்கும் 4 அல்லது 5 காய்களில் 1 கசந்தாலும்
எல்லாம் வீணாகிவிடும். இந்த கசக்கும் பீர்க்கங்காயை பாம்பேறியது என்பார்கள். பயப்படாதீர்கள். பாம்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஒருவித வழக்குச் சொல்லே.

இளசா ஒரு 1 கிலோ வாங்குங்கள். தோல் கிட்டத்தட்ட 300 கிராம் போய்விடும். மீதம் 600 கிராம் கூட்டுக்கு ரெடி.
அப்ப தான் கோபாலும் சாப்பிட்டு துளசி அம்மாவும் சாப்பிட போதுமானதா இருக்கும்.
100 கிராம் பீர்க்கங்காயில் : (கிராமில்)

புரதம் .5; கொழுப்பு .1, நார்ப்பொருள் .5, மாவுப்பொருட்கள் 3.5 கால்சியம் 18 மி.கி. பாஸ்பரஸ் 26 மி.கி இரும்பு .5 மி.கி. தயமின் .5 மி.கி. ரிபொஃப்ளோவின் .01 மி.கி. நியாசின் .2 சோடியம் 2.9 பொட்டசியம் 50 மி.கி தாமிரம் .16 மி.கி. கந்தகம் 14 மி.கி. குளோரின் 7 மி.கி ஆக்சாலிக் ஆசிட் 11 மி.கி. கரோட்டின் 33 மி.கி. கலோரிகள் 17

குளிர்ச்சியைத்தரும். குடலில் உள்ள புழுக்களை நீக்கும். காய்ச்சலையும் பித்த ஆதிக்கத்தையும் ( பதிவு வுலகத்தில் யார் யார் என்று டீச்சர் அம்மாவுக்குத்தான் தெரியும் ) குறைக்கும். காச நோய், இருமல் ஆகியவற்றையும் குறைக்கும்.

பீர்க்கை விதைக்கு மலமிளக்கும் தன்மை உண்டு.
பீர்க்கை விதைகள் மற்றும் இலைகளை கம்போடியா நாட்டில் ரிங்க் வோர்ம் படை நோய் (ரத கஜ துரக பதாதி அல்ல) இது வேற படை.. ) தீர உடல் மேல் பூசுகிறார்கள்.

இத்தனை நன்மை இருந்தாலும் ஒன்று சொல்லவேண்டும். நாட்டு வைத்தியத்தின் படி இது ஒரு நீர்ப்பண்டம்.
அதாவது diuretic.
வாய்க்கு ருசியாக இருக்கிறதே என்று ஒரு பிடி பிடிக்காதீர்கள். கொஞ்சம் அன்று முழுக்க பாத் ரூமில் இருக்கவேண்டி இருக்கும். மற்றபடி வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை பீர்க்கை கூட்டு, அல்லது துவையல் செய்து சாப்பிடுங்கள். ஒரு சின்ன மாற்றம். மிளகாய்க்கு பதிலாக மிளகு சேருங்கள். ஒரு இரண்டு கொத்தமல்லி இலைகளையும் நன்றாக பொன் முறுவலாக வறுத்துச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

துளசி அம்மாவின் பீர்க்கைக் கூட்டுக்கு ஜே ஜே. துவையலுக்கு ஜே ஜே.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

said...

ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.
பீர்க்கங்காய் செய்யும்போது அன்று முள்ளங்கி, சுரை, பறங்கி, பூசணி இவற்றினை தவிர்க்கவும்.
இரண்டாவது விஷயம். மணத்தக்காளி அல்லது சுண்டக்காய் வத்தக்குழம்பு வைத்த அன்றைக்கு
இந்த பீர்க்கங்காய் கூட்டு ஒரு எக்ஸலன்ட் காம்பினேஷன். அரிசி அப்பளமும் வடாமும் சேர்ந்து
விட்டால் கேட்கவே வேண்டாம்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

said...

துளசி மேடம்,

பீர்க்கங்காய் வாட் எவர் இட் இஸ் செஞ்சு சாப்பிட்டோம். ரொம்ப சுவையா நல்லா இருந்துச்சி. இந்த ரெசிபியை மத்த ரங்கு-தங்கு க்களுக்கும் அனுப்பிட்டேன். நன்றி.

said...

யக்கோவ் நீங்க சொன்ன ரெண்டும் நல்லா இருக்கும்.அத்தோட அசைவப் பிரியர்களுக்கு ஒன்னு சோல்றேன்.
இந்த பீர்க்கங்காய் செய்முறையில் பபசிப் பருப்பை மட்டும் கட் பண்ணிட்டு பச்சை இறால் [பச்சைனா கலர் இல்லை பிரஷ்]சேர்த்து கூட்டு மாதிரி பிரட்டினா சும்மா தூக்குமாம்.[ஆனா நான் சைவம் சாப்பிட்டதில்லை]

said...

துளசிகோபால்,

சமைத்துப்பார்னு சொல்வாங்களே அப்படி த்தானே இதுவும் சமைத்துப்பார்ப்பதோடு சரி சாப்பிடக்கூடாது தானே ! :-))

ருசி எப்படியோ பார்க்க நல்லா இருக்கு!பீர் காய் சமையல்.

"பீர்"க்கங்காய்ல இருந்து தான் பீர் தயாரிக்கிறாங்களா? :-))

////முப்பத்தி மூணேமுக்கால் வருசமா வாயைத் தொறக்காமச் சாப்புட்டுக்கிட்டு இருக்கார். //

வாயைத்திறக்காம சாப்பிடு வித்தை எப்படினு எங்களுக்கும் சொல்லிக்கொடுக்கலாம்ல, ஒரு வேளை மூக்கால சாப்பிடனுமோ :-))
------------------------

ராகவன்,
//குக்கர்ல குண்டு போட்டு வேக வைக்க வேண்டியதுதான். //

குண்டு போட்டா குக்கர் வெடிச்சிடாது! நீங்க என்ன சமையல் தீவிரவாதியா? :-))

said...

வாங்க சாமான்யன் சிவா.

புத்திசாலியா இல்லேன்னா என்னோடு குப்பைகொட்ட முடியுமா? :-))))

said...

வாங்க சிஜி.

எதோ அவர் முன்னோர்கள் செஞ்ச புண்ணியத்தால் நல்லாத்தான் இருக்கார்:-)))

said...

மீனா,
ரெஸிபிக்கு நன்றி. செஞ்சுட்டுச் சொல்றேன்.

வேர்க்கடலை அவிக்கறதும் நம்மூட்டுலே மைக்ரோவேவ்லேதான்:-)

said...

வாங்க லக்ஷ்மி.

கமர்கட் அளவுப் புளின்னு போன சமையல்பதிவுலேயே ஆரம்பிச்சுட்டேனே:-)

இங்கே எலுமிச்சங்காய் நம்மூரு சாத்துக்குடி சைஸ்லே இருக்கு.

பஜ்ஜியும் செய்யலாமா? செஞ்சுறலாம்.
தகவல் புதுசு. நன்றி.

said...

துளசி,

ஒரு சமையல் குறிப்புக்கு இவ்வளவு மறு மொழிகள் வரவழைக்கும் திறமை துளசிக்குத் தான் உண்டு. செய்வன திருந்தச்செய் - செய்யும் தொழிலே தெய்வம் - இதெல்லாம் துளசிக்காகவே எழுதப்பட்டவை. எவ்வளவு குறிப்புகள். சிறு சிறு நுணுக்கங்கள். முழு ஈடுபாட்டுடன் எழுதப்பட்ட பதிவு.

படம் வரைந்து பாகங்களைக் குறித்த விதம் டீச்சர் என்பதை நினைவு படுத்தியது. (எங்க டீச்சரும் இருக்காங்களே !)

600 கிராம் காய் - மெலிசா வரிவரியா நூல்போல் வருமே அப்படிச் சீவி மறக்காம அதெக் குப்பையிலே சேக்கணும் ( தோல் சீவுறதுக்கு இவ்வலவு பில்டப்பா ?) கவிதை எழுதுகிறீர்களா அல்லது சமையல் செய்கிறீர்களா ?

இந்த கால் அரைக்கால் வீசம் இதெல்லாம் 50 வருசத்துக்கு முன்னாடிங்க - இப்பப் போய் .....

காலே அரைக்கால் கப் ( 37.5 %)
கமர்கட் அளவு ( நான் சாப்பிடுற கமர்கட்டா - பேரன் சாப்பிடுற கமர்கட்டா - அளவு சொன்னா சரியாச் சொல்லணும்)
முக்காலே அரைக்கால் ( 87.5 %)
மிளகா கருகிடக் கூடாது - சிம்மிலே வைக்கணும். கரகரன்னு அரைக்கணும்
அடுப்பை அணைக்கணும்

அடடா - இவ்வளவு அருமையா வகுப்பெடுக்க யாருங்க இருக்காங்க - பலே பலே

பின்னூட்டமா ப்திவான்னு கேக்கறதுக்கு முன்னாடி நிறுத்திக்கறேன்.( தனியா எங்க வூட்லே கவனிக்கறேன் - என் வலைப்பூவிலே இதப் பத்தி ஒரு பதிவு போடறேன்னு சொல்றேனுங்க)

எங்க வூட்லே பூரியும் கிடையாது கட்டையும் கிடையாது

அப்புறம் சாவகாசமா எழுதுறேன் ( பேசுறேன்)

said...

வாங்க ஆயில்யன்.

அங்கே இந்தியாவிலிருந்து காய்கறிகள் இறக்குமதியா? பஞ்சமே இல்லைன்றீங்க!!!!!

விலைதான் இங்கே கொஞ்சம் கூடுதல். அதுக்குப் பார்த்தா முடியுதா?

said...

வாங்க சுப்புரத்தினம்.

பார்த்தீங்களா....சத்துக்கள் பற்றிய எல்லா விவரங்களையும் அழகாச் சொல்லி இருக்கீங்க. இதுக்குத்தான் பெரியவங்க வேணுங்கறது.

அடுத்தமுறைக்கு மிளகுதான். (அதுவேற மூணு கிலோ அப்படியே கிடக்கு)

//இந்த கசக்கும் பீர்க்கங்காயை பாம்பேறியது என்பார்கள். பயப்படாதீர்கள். //

ஊஹூம். நோ பயம். இந்த நாட்டுலே பாம்பு, தேள்னு எதுவும் இல்லை:-))))

said...

நானும் இன்னொண்ணு சொல்ல விட்டுப்போச்சுங்க. இந்த மணத்தக்காளி இருக்கு பாருங்க. இங்கே நம்ம வீட்டில் முந்தி ஏழெட்டுச் செடி இருந்துச்சு. அந்தப் பழங்களைப் பறிச்சுத் தின்றது உண்டு. ஒருநாள் பருப்பு சேர்த்து அந்தக் கீரையைச் சமைச்சும் சாப்பிட்டோம்.

இங்கே இருந்த ஒரு இலங்கைத் தோழியிடம் இதைச் சொல்லப்போய்,
ஏண்டா சொன்னோமுன்னு ஆகிருச்சு.
அவுங்க வீட்டிலும் இருக்காம். அதை இங்கே யூனியில் உள்ள பரிசோதனைச்சாலையில் கொண்டுபோய் சோதிக்கச் சொன்னதுக்கு, அது விஷச்செடின்னு பதில் வந்ததாம். அதனால் நாங்கள் சமைக்கறதில்லைன்னு சொன்னாங்க.

அதுக்கப்புறம் ரெண்டுமனசாப்போய் நானும் அதைச் சமைக்கிறதை விட்டுட்டேன்.

இன்னொரு தோழியின் மாமியார் ஊருலே இருந்து வந்தப்ப, இந்தக் காய்களை எடுத்து மோரில் ஊறவச்சு வத்தல் எல்லாம் போட்டாங்க. அதையெல்லாம் தின்னும் ஒண்ணும் ஆகலை.

வெள்ளைக்காரனுக்குத் தெரியாத விஷயமெல்லாம் விஷமோ என்னவோ?

said...

பிரேம்ஜி,
இன்னும் ரெண்டு ரெஸிபி பின்னூட்டம் வழியாக் கிடைச்சிருக்கு. அதையும் விடேல்:-)))

said...

வாங்க கண்மணி.
நானும் இதைக் கேள்விப்பட்டுருக்கேன். நம்ம ராகவன் சொன்ன ஜிங்காவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்துச்சு.

said...

வாங்க வவ்வால்.

தலைகீழாத் தொங்கறதுனாலே என்னெல்லாம் சந்தேகம் வருது பாருங்க:-))))

இதுக்குத்தான் தமிழில் ப, க, ச எல்லாம் ஒண்ணுமட்டும் இருக்கறது கஷ்டமாப்போச்சு.

பார்க்கமட்டுமில்லை, சாப்பிடவும் செய்யலாமுன்னு நம்ம பிரேம்ஜி செஞ்சுபார்த்துச் சொல்லிட்டார்:-))))

said...

வாங்க சீனா.

பேசாம கமர்கட்டுக்குப் பதிலா என்ன சொல்லலாமுன்னு யோசிக்கணும்போல.

மாறாத அளவு எதாவது இருக்கா?

வீட்டுவீட்டுக்குக் கிச்ச்சன் ஸ்கேல் வரட்டும். கிராமில் சொல்லிடலாம்.. சரியா?

உங்க வீட்டில் பூரி இல்லாமப்போனா பரவாயில்லை. கட்டையும் இல்லையா? பாவம் தங்கமணி:-)

said...

துளசி....அதே போல் (chow chow)பெங்களூர் கத்ரிக்காய்ல தோலி தொகையல் செய்யலாம்....same recipe as yours:):)

said...

வாங்க ராதா.

//பெங்களூர் கத்ரிக்காய்ல தோலி தொகையல் //

அட! தெரியாமப்போச்சே.... இங்கேயும் எப்பவாவது கிடைக்குது Choko என்ற பெயரில். விடமாட்டேன் இனி:-)

தகவலுக்கு நன்றிப்பா

அதுலே முள்மாதிரி மெலிசா ஒரு fur இருக்கேப்பா சிலதுலே!

said...

சீமை கத்திரிக்காய் மேல முள் இருந்தா முத்தினதுன்னு சொல்லுவாங்க. நான் பாத்த வரை, முத்தின சீ. க. வுக்குள்ள கசகசன்னு ஒட்டிக்கும், அரிய/நறுக்க கஷ்டமா இருக்கும். முள் இல்லாதது தான் வாங்குவேன். (பீர்க்கங்காய் ஒரே சமனா இருக்கறது தான் வாங்குவேன். அதுக்கு தொப்பை! இருந்தா முத்தி இருக்கும்).

தெரிஞ்சவங்க இன்னும் சொல்லலாம்.

தோலி துவையல் அம்மா வீட்டுல தான். இங்க ரங்கமணிக்கு பிடிக்காது.

said...

வாட்டெவர் இட் இஸ் ஹேப்பண்ட் டுடே!! தேங்க் யூ வெரி மச்!! :))

said...

வாங்க கெக்கேபிக்குணி.

அப்படி 'முள்' எல்லாம் இல்லை. லேசா பூனை முடிபோல ஒரு ஃபர்:-))))

இனி தொப்பை இல்லாத பீர்க்கைத் தேடுவேன்:-))))

கிடைக்கும்தானே? இது என்ன போலீஸா?:-)))))

said...

வாங்க கொத்ஸ்.

ஒண்ணும் ஆகலைதானே? :-)))))

said...

Romba nalla iruku (test panni paathuten). Innum niraya receipe podungalen.

said...

வாங்க Never give up.

உங்க துணிவைப் பாராட்டுகின்றேன்:-)

அப்பப்ப அடுக்களை விசயத்தைப் போட்டுறலாம்:-))))

ரசிகர் கிடைச்சா விடமுடியுமா? :-))))