Monday, October 30, 2006

பிருந்தாவனத்தைத் தேடி......... (A t d - பகுதி 5)
நம்ம ஹொட்டல் கட்டிடம் இருக்கும் பேஸ்மெண்ட் முழுசுமே சாப்பாடே சாப்பாடு. அதுலேயே நடந்து பிட்(Pitt) தெருவுக்குப் போயிறலாம். மறுபடி அடுத்தபக்கம் சிட்டி மாலுக்குள்ளேயே நடந்தா அடுத்த தெருவான Castlereaghக்குப் போயிரலாம். அப்படிவெளியே போறதுக்கு முன்னாலே இதே கட்டிடத்துலே ஒரு முக்கியமான கடை இருக்கு. 'பெட்ஸ் பேரடைஸ்' ஜிகேவை விட்டுட்டுப் போயிருக்கோமே, அவனுக்கு எதாவது பொம்மை வாங்கலாமுன்னு அதுக்குள்ளெ நுழைஞ்சால்,அங்கே இருக்கற பொம்மைகள் எல்லாம் ஏற்கெனவே அவன்கிட்டே இருக்கு. புதுசா ஒண்ணுமேயா வரலை?அப்பத்தான் அங்கே விற்பனைக்கு வச்சுருக்கற பெட்ஸ் கூண்டு கண்ணுலே பட்டுச்சு. Smoky Grey Persian.நம்மஜிகேவின் குழந்தை உருவம் அங்கே. ரெண்டு பேர் இருக்காங்க. ஒரே ஆட்டம், குதிப்பு, விளையாட்டு. ஜென்மமேசாபல்யம் அடைஞ்சதுபோல இருக்கு. ஜிகே நல்லா வளர்ந்த பிறகுதான், ஒரு 7 வயசா இருக்கும்போது நம்ம கிட்டே வந்து சேர்ந்தான். குழந்தையா இருக்கும்போது எப்படி இருந்துருப்பான்னு அப்பப்ப நினைச்சுப் பார்ப்பேன். இப்ப,தரிசனம்ஆச்சு.


திரும்ப அறைக்கு வந்து கொஞ்ச நேரம் தமிழ்மணம். அஞ்சே முக்காலுக்கு இவர் வந்தாச்சு. ஆறு மணி டிவி செய்திகொஞ்ச நேரம். இங்கே நியூஸியிலே ஆஸி செய்திகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு. அங்கத்துப் பிரதமர் தும்முனாக்கூடப் போட்டுருவாங்க. ஆனா அங்கே? எங்களைச் சட்டை செய்யலை(-: அவுங்களைப் பொறுத்தவரைநாங்க இல்லவே இல்லை. இது எப்படி இருக்கு?


நியூஸிக்கும் ஆஸிக்கும் இருக்கும் ஒப்பந்தப்படி, ரெண்டு நாட்டுக் குடிமக்களும் விஸா இல்லாம இங்கேயும் அங்கேயுமாப் போய்வரலாம். வசிக்கலாம். வீடு, நிலம் புலம் சொத்து வாங்கலாம். வொர்க் பர்மிட் இல்லாம வேலை செய்யலாம்.இங்கே இருந்து அங்கெ போன முதியோர்களுக்கு சூப்பர்( Superannuation)கூடக் க்கிடைக்கும். பத்து லட்சம்கிவிக்கள் அங்கே ஆஸியில் வசிக்கிறாங்க. அவுங்க டாலர் நம்மதை விட ஸ்ட்ராங். வேலை வாய்ப்பும் நிறைய இருக்கு.பெரிய நாடாச்சே. சம்பளமும் இங்கெ கிடைக்கிறதை விடவும் கூடுதல். அதனாலே படிச்சு முடிச்சதும் நைஸா பலர் அங்கே போய் வேலைக்குச் சேர்ந்துடறாங்க. புலம் பெயர்ந்து வர்ற நம்ம மக்களூம், இங்கே 3 வருசம் இருந்து குடி உரிமைவாங்கிக்கிட்டு அங்கெ போயிடறாங்க. நியூஸி ஒரு ஸ்டெப்பிங் ஸ்டோன் போல ஆயிருச்சு. இப்ப இங்கே நியூஸிஅரசாங்கம் 5 வருசம் கழிச்சுக் குடி உரிமைன்னு மாத்தி இருக்கு.


ராச்சாப்பாட்டுக்கு எங்கேயாவது போகணுமே, அது இந்தியனா இருக்கட்டுமுன்னு ரெஸ்ட்டாரண்டை மஞ்சப்பக்கத்துலே தேடுனோம். குஜராத்லே இருந்து இங்கே வந்து ஹொட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சுட்டு, கொஞ்சநாள் பயிற்சி எடுக்கணுமுல்லையா அதுக்காக வேலை செஞ்சுக்கிட்டு இருக்கற இளைஞர் ஒருத்தர் 'விருந்தாவன்' லெ சாப்பாடு நல்லா இருக்குமுன்னு சொன்னார். அவரே டாக்ஸி பிடிச்சுக் கொடுத்து பஞ்சாபி ட்ரைவருக்கு இடத்தையும் ஹிந்தியிலேசொன்னார்,'ஹாரீஸ் ரோட்மே பவர்ஹவுஸ் ம்யூஸியம்கோ யே பாஜூ மே ஹை'


ஹாரீஸ் ரோடுக்குப் போகாம இன்னொரு தெருவுலே காரைத் திருப்புனார் சர்தார்ஜி. இன்னொரு இடத்துலெ இதைவிட சாப்பாடுநல்லா இருக்குமாம்.


" சச் ஹை க்யா? "


" ஹாங்ஜி!"


" பர்வா நஹி. ஆஜ் ஹம்லோக் வ்ருந்தாவன் ஜாயேகா"


மறுபடி ஹாரீஸ் ரோடு பக்கம் வண்டியைத் திருப்புனார். குடும்பத்தோட இங்கெ வந்து ஏழு வருசம் ஆச்சாம். நல்லபடியா வாழ்க்கை ஓடுதாம். இன்னிக்கு இங்கே குருத்வாராவுலெ விசேஷமாம். இவரோட ரெண்டு பசங்களும் அங்கெயே ஒரு வாரமாத் தங்கி உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம். இங்கே நாலு குருத்வாரா இருக்காமே. நிறைய பஞ்சாபிகள் இருக்காங்களோ?

"ஹாஞ்ஜி:-)))"


பவர் ஹவுஸ் ம்யூஜியம்(!) வந்தாச்சு. வ்ருந்தாவனைக் காணொம்!யே பாஜுலேயும் இல்லை, வோ பாஜுலேயும் இல்லை. இன்னும் ரெண்டு தெரு தள்ளிப் போறோம்.


"வோ லட்கா யெ பாஜுமே போலா ந:"


அந்தப் பையன் சொன்னப்ப 'ஹாங் ஹாங்'ன்னு தலை ஆட்டுனவர்தான் இவர். அங்கே இருந்த ஒரு மலேசியன் சாப்பாட்டுக்கடையில் விசாரிச்சா, 'வந்த வழியே திரும்பிப்போங்க, மூணு ட்ராஃபிக் லைட்டைத் தாண்டி வந்துட்டீங்க'


ஓசைப்படாம வண்டியைத் திருப்புனார். வண்டியிலே ஓடிக்கிட்டு இருந்த மீட்டரையும் நிறுத்திட்டார்.


ஏன்னு கேட்டா, அவர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாராம். இப்படியும் சிலர்! மூணாவது சிக்னலைக் கடந்தப்ப, எங்க இவரோடக் கழுக்குக் கண்ணுலே வ்ருந்தாவன் மாட்டிக்கிச்சு. துளசியைக் கண்டு பிடிச்சவருக்கு வ்ருந்தாவன் மாட்டாதா என்ன? :-))))


ஆனா, எங்க இவருக்கு ஒரு சந்தேகம். அது என்ன பிருந்தாவனம் இல்லையா? பிருந்தாவனம் நமக்கு. ஹிந்தியிலே ப வரும் இடத்துலே வ தான் சொல்றாங்க. அப்ப 'பாரத்'க்கு 'வாரத்'துன்னா சொல்றோம்?


குதிரைக்கு குர்ரமுன்னா ஆனைக்கு அர்ரமா? :-))))


ஒரு பழைய கடை. என்னவோ ஒரு அலங்காரம். அங்கங்கே யானைகள் படங்களும், மயில் இறகும்.


கூட்டம் அறவே இல்லை. ஆர்டர் கொடுத்தாச்சு. இங்கே எங்கூர்லே மெயின்ஸ் ஆர்டர் செஞ்சா அதுகூடவே சோறுவந்துரும். இங்கே சோறுக்கும் தனிக் காசாம். போயிட்டுப் போட்டும். நான் ரொம்ப நல்லா மிருதுவா இருந்துச்சு.பாலக்& தால்தான் ஒரு வாசனை(-: மெதுவாக் கூப்புட்டு ஓதினேன். எடுத்துக்கிட்டு போயிட்டார். மட்டர் பனீர் தரட்டுமா? வேணாம்ப்பா.நீயே வச்சுக்கோ. ஆனா 'ஆன் ட்ரெய்' நல்லாவே இருந்துச்சு. அதென்னங்க எல்லா இந்தியன் ரெஸ்டாரண்டிலேயும் 'ஸ்டாட்டர்' மட்டுமே அருமையா இருக்கு? ஒருவேளை, அதுலெயே பசி அடங்கிர்றதாலே மெயின்ஸைக் கவனிக்கமாட்டொமுன்ற என்னமோ? பேசாம சர்தார்ஜி சொன்ன இடத்துக்கேப் போயிருக்கலாம்.


அடுத்த மேசைக்கு நாலுபேர் வந்தாங்க. ரெண்டு இந்தியன் பாய்ஸ் & ரெண்டு வெள்ளைக்காரப் பொண்ணுங்க.பையனுங்க முகத்துலே லிட்டர் லிட்டராய் வழியுது. அதுலே ஒரு பையனுக்குப் பொறந்தநாள். பொண்ணு கொடுத்த பரிசை நாணிக்கோணி வாங்கிப் பிரிச்சார். போட்டோ ப்ரேம். அதுலே ப்ரெண்ட்ஸ்னு போட்டுருக்கு. மகர 'ஜோதி'பையன் முகத்துலே!


'வீடு'திரும்புறப்ப அங்கே இருந்த அட்ரஸ் கார்டு ரெண்டு எடுத்துக்கிட்டு வந்தோம். Concierge Desk லே இருந்த இந்திய இளைஞர் ஹரிஷ், சாப்பாடு நல்லா இருந்தான்னு விசாரிச்சார். அவர்கிட்டே ரெஸ்ட்டாரண்டுக் கார்டைக் கொடுத்து, 'இனிமேப்பட்டு அட்ரஸ் கரெக்ட்டா சொல்லுங்க'ன்னேன்:-)


வாழ்க்கையை நாம் எப்படி நினைக்கிறோம்ங்றதைப் பத்தி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கு. முதல்நாள் டாக்ஸிக்காரர், 'ஊரு ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லே, பசங்க கெட்டுருவாங்க'ன்னு சொன்னார். இப்ப இவர் வாழ்க்கை நல்லாவே இருக்கு. பசங்க நல்லாப் படிக்கிறாங்கன்னு சொல்றார். மனம்போலத்தான் வாழ்க்கை அமையுது.இல்லீங்களா? இல்லே, புலம் பெயர்ந்து வர்றப்ப, நாட்டைப் பத்தின முன்முடிவுகளோடு வந்துட்டு அதெ கண்ணோட்டத்துலேயே எல்லாத்தையும் பாக்கறமா?


கொஞ்சநேரம் சிட்னி(??) யில் இருக்கும் அக்காவோட தொலை பேசினேன். வீட்டுக்கு வரலைன்னு கத்திக்கிட்டுஇருந்தாங்க. இப்ப ஏப்ரல் மாசம்தான் இங்கே வந்து என்னோடு ஒரு வாரம் தங்கிட்டுப் போனாங்க. அதனாலேஅவுங்களுக்கு நேரம் ஒதுக்கலை. தமிழ்மணம் மேய்ச்சலுக்குப் பிறகு தூக்கமே தூக்கம்.


மறுநாள் பொழுது விடிஞ்சது, பொற்கோழி கூவுச்சு.


தொடரும்.................


பின் குறிப்பு: பதிவுக்கும், படங்களுக்கும் சம்பந்தமே இல்லைன்னு நினைக்கிறீங்களா?


நம்ம ராகவனுக்காக இங்கே நம்ம சிட்னி சிங்காரவேலனின் படங்கள்.
என்னங்க ராகவன், நல்லா இருக்கா?

24 comments:

said...

இந்த பதிவுல போட்டோஸ்தான் டாப்!! தேங்க் யூ!!

said...

வாங்க கொத்ஸ்.

போட்டும். அதாவது பிடிச்சிருந்ததே:-)))

said...

இலவச கொத்தனார் சொல்றது நிஜந்தாங்க
ஆனாலும் 'மனம்போல உலகம்'ன்றத மறக்க முடியாதுங்க

said...

சிஜி வாங்க.

'ரெண்டு வரி'க்கு நன்றி:-)

said...

நியூசிலாந்து மாத்திரம் "அம்மிக்கல்"(stepping stone) அல்ல சிங்கையும் தான்.நம்ம மனவாடுகள் அட்டக்காசமாக உபயோகப்படுத்துகிறார்கள்.

said...

hi akka,
Post elam romba super... Chennaila nalla mazhai. anga eppadi

said...

வாங்க குமார்.

இந்த விஷயத்துலே எல்லா மனுஷரும் அநேகமா ஒண்ணுதான்.

பெட்டர் சாய்ஸ் தேடுதல்.

said...

வாங்க மீனாப்ரியா.

இங்கெ குளிர். போன ( மச்சான்)விண்டர் திரும்பி வந்துருச்சு பூ மணத்தோட(-:

said...

ஏன்னு கேட்டா, அவர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாராம். இப்படியும் சிலர்! மூணாவது சிக்னலைக் கடந்தப்ப, எங்க இவரோடக் கழுக்குக் கண்ணுலே வ்ருந்தாவன் மாட்டிக்கிச்சு. துளசியைக் கண்டு பிடிச்சவருக்கு வ்ருந்தாவன் மாட்டாதா என்ன? :-))))
ஆமா ஆமாம்.

வ்ரிந்தாவனே துளசிதானே.
கோபால் துளசியைக் கண்டுபிடிக்காமல்
இருக்க முடியுமா.
போட்டோக்கள் ரொம்ப நல்லா இருக்கு துளசி.

said...

போட்டோ பிடிக்கத் தடைன்னு சொல்லிருந்தீங்க. இப்போ இத்தனை போட்டோக்கள வலைபரப்பினதப் பாத்துட்டு யாராவது கேஸ் போட்டுறப் போறாங்க. போட்டோ எல்லாம் நல்லா இருக்கு.

said...

அடுத்த மேசைக்கு நாலுபேர் வந்தாங்க. ரெண்டு இந்தியன் பாய்ஸ் & ரெண்டு வெள்ளைக்காரப் பொண்ணுங்க.பையனுங்க முகத்துலே லிட்டர் லிட்டராய் வழியுது. அதுலே ஒரு பையனுக்குப் பொறந்தநாள். பொண்ணு கொடுத்த பரிசை நாணிக்கோணி வாங்கிப் பிரிச்சார். போட்டோ ப்ரேம். அதுலே ப்ரெண்ட்ஸ்னு போட்டுருக்கு. மகர 'ஜோதி'பையன் முகத்துலே!//

துளசி! நாலு பக்கமும் பாக்க வேண்டியதுதான். அதுக்காக இத்தனை டீடெயில்ட எப்படித்தான் பாக்க முடிஞ்சுதோ.

said...

செய்திகள் அருமை பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

சிங்காரவேலனின் சிங்கார தோற்றம் தங்களது கைவண்ணத்தில் அருமை.

said...

வல்லி வாங்க வாங்க.


விருந்தாவன்லே துளசிங்களா ரொம்பிக் கிடந்தாலும் 'சரியான துளசி'யைக்
கண்டுபிடிச்சதுக்கு ஒரு சபாஷ் போட்டுறலாமா? :-)))))

அங்கே நாங்களும், அந்த அடுத்த மேஜைக்காரங்களும்தான். அதிலும்' பர்த்டே பாய்'
எனக்கு நேரா இருக்கார். அப்ப எப்படிங்க பார்வையில் இருந்து தப்ப முடியும்?,
அவருக்கு:-))))

said...

மதி,
வரவர வகுப்புலே கவனமே இல்லை உங்களுக்கு(-:

இந்த சிவ விஷ்ணு கோயிலில் படமெடுக்கத் தடை. சிட்னி முருகன் கோயிலில் படம்
எடுக்க தடையே இல்லை. அங்கே எடுத்த முருகனைத்தான் போட்டுருக்கு. அதிலும்
அந்த மூணாவது படம் மூலவராக்கும்:-)))

said...

வாங்க சிவமுருகன்.
பதிவுலே அங்கங்கே புதுசுன்னு நான் நினைக்கிற செய்திகளையும், மத்த விவரங்களையும்
போட்டு வைக்கிறதுதான். கவனிக்கிறவங்களுக்கு அது நியூஸ். மத்தவங்களுக்கு.....?

said...

//இந்திய இளைஞர் ஹரிஷ், சாப்பாடு நல்லா இருந்தான்னு விசாரிச்சார். அவர்கிட்டே ரெஸ்ட்டாரண்டுக் கார்டைக் கொடுத்து, 'இனிமேப்பட்டு அட்ரஸ் கரெக்ட்டா சொல்லுங்க'ன்னேன்:-)//

அவர் முகத்தில் 'மகர ஜோதி' அல்லது வேறு ஒரு ஜோதி ஏதாவது பாத்தீங்களா டீச்சர்.

//கொஞ்சநேரம் சிட்னி(??) யில் இருக்கும் அக்காவோட தொலை பேசினேன். வீட்டுக்கு வரலைன்னு கத்திக்கிட்டுஇருந்தாங்க//

அச்சச்சோ, எப்பிடி சமாளிக்கப் போறீங்களோ? மாணவர்கள் சப்போர்ட் இருக்குன்னு நீங்களா நினைச்சிக்கிட்டீங்களா டீச்சர்? :-)

//நம்ம ராகவனுக்காக இங்கே நம்ம சிட்னி சிங்காரவேலனின் படங்கள்.
என்னங்க ராகவன், நல்லா இருக்கா//

ராகவன் வருவார் பின்னே, அடியேன் வந்தேன் முன்னே; அவர் சார்பாக...
படங்கள் அழகு டீச்சர்;
அதுவும் மூலவர் முருகன், முற்றிலும் அழகன்!!
முருகு என்றாலே அழகு; அப்பிடின்னா 'அழகா இருந்துச்சு'-ன்னு சொல்வதற்குப் பதிலா வேற என்ன சொல்லலாம்? யோசிக்கிறேன்!

said...

anbu akka,
back from hybernation..... still cannot access tamil fonts.... sydney trip has been narrated very well.....

said...

KRS,

பாவம். ஹரிஷ் முகத்துலே ஒரு அசட்டுச் சிரிப்பைத்தான் கண்டேன்.


அட தேவுடா..... இப்படி டீச்சரைக் கைவிடும் மாணவர்களா? (-:

பேசாம 'முருகா' இருந்துச்சுன்னு சொல்லிறலாம்:-))))

said...

வாங்க க.பெ.

உண்மையைத்தானே எழுதி இருக்கென். இல்லெ,
உ.வுக்குப் புறம்பா எதுவாச்சும் இருக்கா? :-)))

வந்து 'ஜோதி'யில் கலந்துக்கிட்டதுக்கு சந்தோஷம்.

said...

பிருந்தாவனத்தைத் தேடி.. முருகன் படங்கள் அருமை. சிட்னி போனால் ஓபரா ஹௌஸ் போகிறேனோ இல்லையோ சிட்னி முருகன் கோவில் பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்த்தாயிற்று. ( அப்படியாவது முருகன் சிட்னி வர அருள் புரிய மாட்டானா ?)

ஆமாம், ஜிகேக்கு ஏதாவது வாங்கினீர்களா இல்லை விண்டோ ஷாப்பிங்க் தானா ?

said...

வாங்க மணியன்.

அதெல்லாம் அருள் புரிஞ்சுருவான். பின்னே எதுக்கு 'காலண்டரில்' நாமிருக்க
பயம் ஏன்?'ன்னு கேள்வி இருக்காம்?:-)))

முன்கூட்டியே வரவைச் சொல்லிருங்க. நம் வலை உலக(கழக)க் கண்மணிகள்
மாநாட்டுக்கு தோரணம் கட்டிருவாங்க. பக்கத்துலெதான் நியூஸி. அப்படியே இங்கேயும்
வந்துட்டுப்போங்க.

ஜிகேவுக்கு ஒண்ணும் வாங்கலை(-:

said...

ஆகா, இப்படி 'வரவேற்க' கண்மணிகள் இருக்க கவலை எதற்கு ? வசுதேவ(வலைப்பதிவர்) குடும்பகம் . அடுத்த வேனிற்காலத்திற்காவது ,இன்ஷா அல்லா, வருவோம்.

said...

பிருந்தாவனத்தில் மகரஜோதி தரிசனம் அருமை. :-)

said...

வருகைக்கு நன்றி குமரன்.
நலம்தானே?