Saturday, October 28, 2006

ராணியம்மா (A t d - பகுதி 4)

பட்டம் சூட்டுனப்ப வெறும் 19 வயசுதானாம் மகாராணி விக்டோரியாவுக்கு. இளமை, செல்வம், எல்லாம் சேர்ந்து இருந்த காலம். நல்லா 'நிகுநிகு'ன்னு இருந்துருக்காங்க. இவுங்களுடைய முடிசூட்டுவிழா சமயம், அப்ப இருந்த கோலத்தை அப்படியே சிலையா செஞ்சு இந்த குவீன் விக்டோரியா பில்டிங்லே வச்சுருக்காங்க. கட்டிடம் பழைய கால ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு. எங்கே பார்த்தாலும் ஸ்டெய்ன் களாஸ் பெயிண்டிங். ஒரு 200 வருசமாயிருக்குமோ இதை கட்டி? ஆஸிக்கு வெள்ளைக்காரங்க வந்து இப்ப 219 வருஷம் ஆச்சே. விசாலமான நீண்ட ஹால்கள். மாடிப்படிகள். ரெண்டு பக்கமும் ஏராளமான அறைகள். ஒவ்வொரு அறையுமே ஒவ்வொரு கடைகளா இருக்கு.


இந்தக் கட்டிட விவரம் கொஞ்சம் பார்க்கலாமே! சரியாச் சொன்னா, முந்தி சிட்னி மார்கெட் இருந்த இடத்துலேதான் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கு. 108 வயசுதானாம் இதுக்கு. கட்டி முடிச்ச வருஷம் 1898. அப்ப இங்கே recession காலம். ரொம்ப நெருக்கடியான நிலமை. காசு டைட். நிறைய திறமை உள்ள கட்டிடக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கித் தரலாம்ன்னு அரசாங்கம் இந்தக் கட்டிடத்தை விமரிசையாக் கட்டணுமுன்னு தீர்மானிச்சது. ச்சும்மா சொல்லக்கூடாது, நல்லா இழைச்சு இழைச்சுக் கட்டுன கட்டடம். ரெண்டு தெருவை அடைச்சு பிரமாண்டமாக் கட்டுனாங்க. முன் வாசல் பார்க் தெரு. பின் வாசல் மார்கெட் தெரு. வலது பக்கம் , இடது பக்கம் வெவ்வேற தெருக்கள். அந்தக் காலத்துலே இது உள்ளெ டெய்லர் கடைகூட இருந்துச்சாம். அப்புறம் பியானோ ட்யூன் செய்யறவங்க, கைரேகை பார்க்கறவங்க, குறி சொல்றவங்கன்னு பலதரப்பட்ட வியாபாரம் நடந்துருக்கு அங்கே.


1959லே இந்தக் கட்டிடத்தை இடிச்சுட்டு அங்கெ வேற கட்டிடம் கட்டலாமுன்னு ஒரு திட்டம் போட்டாங்களாம். நல்ல காலம்!அப்படி ஏதும் நடக்கலை. அதுக்கப்புறம் ஒரு புனரமைப்பு நடந்துருக்கு. ஏற்கெனவே அங்கே தரையில் இருந்த டைல்ஸ் எல்லாத்தையும் கவனமாப் பிரிச்செடுத்து திரும்ப பழைய அழகு கெடாம சீர் செஞ்சுருக்காங்க. 19ஆம் நூற்றாண்டு மாடிப்படிகள் இன்னும் அங்கே இருந்தாலும், காலத்தின் தேவைக்கு எஸ்கலேட்டர்கள் அங்கங்கே போட்டு வச்சுருக்காங்க.கண்ணை உறுத்தாமப் பழமையும் புதுமையும் ஒண்ணாக் கை கோர்த்து நிக்குது. ஒரு மலேசியன் கம்பெனிதான் இந்த புனர்ஜென்மம் கொடுத்தது:-)


ஏற்கெனவே சொன்ன ராணியம்மாவின் சிலை, அப்படியே சிம்மாசனத்தில் உக்கார்ந்த கோலத்தில் சுழலும் கண்ணாடிப்பெட்டிக்குள்ளே. முடி சூட்டப்பட்ட கிரீடம், செங்கோல்,இன்னும் வெவ்வேறு கிரீட வகையறாக்கள் எல்லாம் அச்சு அசலாய்! என்னதான் உதவியாளர்கள் இருந்தாலும் 19 வயசுப் பொண்ணுக்கு இவ்வளொ பெரிய ராஜாங்க பாரம்ன்றதுகுருவி தலையில் பனங்காய் வச்ச மாதிரிதான் இருந்துருக்கும்,இல்லே? பாவம், எட்டு மாசக் குழந்தையாஇருந்தப்பவேத் தன்னுடைய தகப்பனை இழந்துட்டாங்களாம். இங்கே எங்க ஊர்லேயும் ஒரு விக்டோரியா சதுக்கம்இருக்கு, கூடவே ஒரு சிலையும். நல்ல குண்டு உடம்புள்ள 66 வயசு மகாராணி.



இப்ப இருக்கற ராணி எலிஸபெத், இங்கே சிட்னி மக்களுக்கு ஒரு லெட்டர் போட்டுருக்காராம். அதை 2085 வது வருசம்தான் அப்ப இருக்கப்போற மேயர் படிக்கணுமுன்னு சொல்லிட்டாங்களாம். அப்படி என்னாதான் எழுதி இருப்பாங்க? அதையும் இங்கேதான் பாதுகாப்பா வச்சுருக்காங்களாம். அங்கங்கே பழைய வரலாறுகள், பழைய படங்கள்ன்னு நாள் முழுசும்சுத்திப் பார்க்கும்படியான விசேஷம் இந்தக் கட்டிடத்துலே இருக்கு.
இங்கே ஒரு பேனாக் கடை இருக்குங்க. கடையோட கதவின் கைப்பிடியே ஒரு பேனா போல இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சது.ஆயிரம் டாலருக்கெல்லாம் இந்தக் கடையிலே பேனா இருக்கே....... இதை யாராவது வாங்குவாங்களான்னு எப்பவும்நினைச்சுக்குவேன். நமக்கெல்லாம்தான் இப்ப கையிலே பேனா புடிச்சு எழுதற வழக்கம் அறவே போயிருச்சே.(-:



இங்கே மத்தியில் வட்டமா உள்ள உசந்த கூரையில் ஒரு மணிக்கூண்டு தொங்குது. இது எனக்கு ரொம்பவே பிடிச்ச கடிகாரம். ஒரு கோட்டை போன்ற சதுர அமைப்பு. அதுலே ரெண்டு பக்கம் கண்ணாடி கூண்டு. உள்ளெ பழைய பிரிட்டனின்சரித்திரக்காட்சிகள் . ஆறு பொண்டாட்டிக்காரரான எட்டாவது ஹென்றி, துரோகின்னு குற்றம் சாட்டி, தலையைத் துண்டிக்கப்பட்ட முதலாம் சார்லஸ் , எட்மண்ட் அயர்ன்சைட், ஹெரால்ட் ஹேர்புட் இவுங்க இங்கிலாந்து அரசர்களானது,வைக்கிங்குகளோடு நடந்த போர்ன்னு சில. 1, 2, 3, 4,ன்னு ஒவ்வொரு முழு மணியாகறப்பவும் மணிக்கூண்டுலே மணியடிச்சு முடிச்சதும், இந்தக் கோட்டையில் ஒரு ஷோ நடக்குது. இதுலே சார்லஸ் தலையை வெட்டுனதுதான் கடைசி சீன். குப்புறப்படுத்து இருக்கறார் சார்லஸ் .முகமூடி போட்டுக்கிட்டு இருக்கற ஒருத்தர் ஒரு கோடாலியை உயர்த்தி ஒரே போடு. தலை துண்டாகிக் கீழே விழும்! எப்பவும் ஒரு ஏழெட்டுப்பேராவது ஒவ்வொரு முழு மணிக்கும் அங்கெ நின்னு வேடிக்கை பார்க்கறதுதான். நானும்முழு மணியாற சமயம் அந்த ஏரியாவுலே இருந்தா விடாமப் போய் பார்த்துருவேன். நல்ல தலை வெட்டினான் தம்பி!


இது பிரிட்டிஷ் சரித்திரமுன்னா அடுத்த பகுதியிலே இன்னொரு கடிகாரத்தைத் தொங்கவிட்டு ஆஸ்த்ராலியன் சரித்திரம் சொல்றாங்க. இதுவும் ஒலிம்பிக்ஸ் கால உபயம் போல இருக்கு. இங்கத்துப் பழங்குடிகள்இருந்த காட்சி,வெள்ளையர்கள் கப்பலில் வந்தது, பழங்குடிகளின் பிள்ளைகளைப் பெற்றொர்களிடமிருந்து பிரிச்சுக்கிட்டுப் போனது, முதுகுத்தோல் உரியும் அளவுக்கு சாட்டையடி கொடுத்தது இத்தியாதிகள். ஒரு அடி உயரத்துலே ஒரு அபாரிஜன்( இங்கத்துப் பழங்குடி) கையிலே ஒரு நீண்ட கழி வச்சுக்கிட்டு இந்தப் படங்களையெல்லாம் வட்டமாச் சுத்திவர்றது மாதிரி ஒரு அமைப்பு. அந்தந்தப் படங்கள் கிட்டே வரும்போது அந்தப் படத்துக்கு பளிச்சுன்னு விளக்கு வரும். விளக்கேற்றியவ(ன்)ர்:-)


இந்த அபாரிஜன்கள் பார்க்கறதுக்கு நம்ம ஊர் மலைவாழ் மக்கள் இருளர்கள் இருக்கறாங்களெ, அவுங்க மாதிரியேஅச்சு அசலா இருக்காங்க. உலகம் இப்ப இருக்கறது மாதிரி கண்டங்கள் பிரியாம மொத்தமா இருந்தப்ப இந்தப் பகுதிஇந்தியாவோடு ஒட்டி இருந்துச்சாம். இவுங்க உடம்பெல்லாம் சாம்பல் பூசிப்பாங்க. இதுவும் விபூதி பூசற மாதிரின்னு எங்கியோ படிச்சேன். நம்ம சங்கராச்சாரியார் ( பெரியவர்) இருந்தார் இல்லையா, அவர் கூட இவுங்களைப் பத்தி இப்படிச்சொன்னாராம். இங்கே ஒரு சாவ்னீர் விக்கும் கடையில் வாசலில் ஒரு சின்ன சிற்பம் வச்சிருக்காங்க. அபாரிஜன்கள் சிலர் பாறைமேலே உக்காந்துக்கிட்டு வெள்ளையான ஒரு கலவையை விரலால் தொட்டு புள்ளிப்புள்ளியா அலங்கரிச்சுக்கறது.ஒருத்தருக்கு இன்னொருத்தர் விலா எலும்புகளில் பொட்டு வச்சுக்கிட்டு இருப்பார். இன்னொருத்தர் அவரோட நண்பருக்குக்குக் கண்ணுக்கடியில் வெள்ளை பூசுவார். எதோ கண்ணை நோண்டுற மாதிரி இருக்கும். எனக்குப் பிடிச்ச சிற்பம். எதுக்கெடுத்தாலும்பிடிச்சிருக்குன்னு சொல்றாளே..... மண்டை சரியில்லையோன்னு நினைச்சுக்காதீங்க. எனக்கு எல்லாமே பிடிச்சுத்தான் இருக்கு,அதுக்கென்ன இப்ப?



சிட்னியிலே 960 (சபர்ப்) பகுதிகள் இருக்காம். இன்னும் ஒரு 40 இருந்தா ரவுண்டா ஆயிரம் ஆயிருக்காது? கூடியசீக்கிரம் வந்துரும். அதான் சிட்டி வளர்ந்துக்கிட்டே போகுதே! இங்கே ஜனத்தொகை அம்பது லட்சம். அடேயப்பா...எங்க நியூஸியின் மொத்த ஜனமே 41 லட்சம்தான். ஒரு நகரம்= ஒரு நாடு( நாட்டுக்கும் குறைவு!) வேலை வாய்ப்புகள்நிறைய இருக்கு. எங்கே பார்த்தாலும் கடை கண்ணிகளில் கூட 'வேலை காலி இருக்கு, உள்ளெ வந்து விசாரிச்சுட்டுப்போ'ன்னுபோர்டு தொங்குது. அதுவும் கிறிஸ்மஸ் சீஸன் வேறவருதே!



இன்னிக்குத் திங்கக்கிழமை. காலையில் 8 மணிக்கெல்லாம் கிளம்பி எங்க இவர் வேலைக்குப் போயிட்டார். இனி என் ராஜ்ஜியம். நம்ம தோழி ஒருத்தர் ஒம்போதரைக்குள்ளெ வரேன்னு சொல்லி இருந்தாங்க. 25 வருசப்பழக்கம். ஃபிஜியில்இருந்த காலம் முதல் நண்பர்கள். அங்கே 'கூ' வந்த பிறகு மக்கள்ஸ் புலம் பெயர்ந்தது இங்கே நியூஸிக்கும் ஆஸிக்கும்தான்.அப்ப இந்த அரசாங்கங்கள் இரக்கத்தோடு நடந்துக்கிட்டது உண்மைக்குமே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.


தோழி ஒரு டீச்சர். இங்கே வந்த பிறகு பகுதி நேர வேலை கிடைச்சுச்சாம். கணவர் டாக்டர். இங்கே அரசாங்கம் நடத்தும் தேர்வு எழுதி, ஜெயிச்சாத்தான் மருத்துவர் தொழில் செய்ய முடியும். ச்சின்னவயசு ஆட்களுக்குப் பரவாயில்லை.ஓரளவு நடுத்தர வயசுலெ படிப்பு, பரிட்சைன்னா கொஞ்சம் கஷ்டம்தானே? அதுலேயும் மூணே மூணுமுறை தான் தேர்வு எழுத விடுவாங்க. மூணாவது முறையும் 'கோட்' அடிச்சா அவ்வளவுதான் அம்பேல். காலத்துக்கும் மருத்துவரா வேலை செய்ய முடியாது. சிலருக்கு ரெண்டு முறை தோற்றுப்போயிட்டாவே ஒருவித பயம் வந்துரும். மூணாவது முறை தேர்வு எழுத மாட்டாங்க.வேற லைன்லே வேலை தேடிக்கிட்டுப் போறவங்களும் உண்டு. போனமுறை போனப்ப, நம்ம டாக்ஸி ட்ரைவர் இப்படித்தான்ஆனவர். பாக்கிஸ்த்தான்காரர். நம்ம தோஸ்து நிதானமா ஒவ்வொரு பரிட்சையும் பாஸ் பண்ணிட்டார். வேலையும் கிடைச்சது. கான்பெரா, பிரிஸ்பேன், டார்வின்னு பல இடங்களிலே தூக்கிப் போட்டாங்களாம். குடும்பத்தை இங்கேயே விட்டுட்டு அவர்மட்டும் தனியாப்போய் பொங்கித் தின்னுக்கிட்டு வேலை பார்த்துருக்கார். இப்ப மூத்த மகளுக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரன் பேத்தியும் ஆச்சு. ஒரு மகன் இருக்கார்.


சில பல தடங்கல்களாலே அவுங்களாலே சொன்ன நேரத்துக்கு வர முடியலை. அதுக்கென்ன? கொஞ்சம் இப்படி அப்படித்தான் இருக்கும். நான் பாட்டுக்கு தமிழ்மணத்துலே மூழ்கி இருந்தேன். பத்தே முக்காலுக்கு வந்துட்டாங்கன்னு லாபியிலே இருந்து கூப்புட்டாங்க. போய்ப் பார்த்தா டாக்டரும் வந்துருக்கார்.அஞ்சு வருசமாச்சு, அவரைப் பார்த்து. தலையெல்லாம் 'கொல்'ன்னு நரை. பையனும் வந்தான். அழகான வாலிபன். 29 வயசாகப் போகுது. கால் நூற்றாண்டு கழிச்சு அவனைப் பார்க்கறேன். அக்கவுண்டண்ட்டு வேலை. ஆனா அவனுக்கு 'ஹாலிவுட்' போகணுமுன்னு ஒரு தீவிர வெறி! நடிப்புக்குன்னு மாலை நேர வகுப்புலேவேற சேர்ந்து படிச்சானாம். மூணு மாசத்துக்கு முன்னாலே LA போய், பலரைக் கண்டுக்கிட்டுவந்திருக்கானாம். இப்ப விசாவுக்கு வெயிட்டிங்.'வந்ததும் போயிருவேன்.' எதையாவது சாதிச்சாத்தான் கல்யாணமுன்னுசொல்லிக்கிட்டு இருக்கானாம். பரத நாட்டியம் கத்துக்கிட்டு அரங்கேற்றம் கூட பண்ணியிருக்கான்.


அடட... இந்தச் சான்ஸை விட்டுறக்கூடாதுன்னு நானும்,'உனக்கு நடிக்க வாய்ப்பு வந்துட்டா....உன் அம்மா ரோல் செய்யவேற யாரையும் தேடாதே. நான் இருக்கேன்'னு ஆறுதல் சொல்லி வச்சேன். யாரு கண்டா....? என்னை திடீர்ன்னு இங்கிலிபீஸ் படத்துலே பார்த்தா ஆச்சரியப்படாதீங்க:-))))


டாக்டரும், இப்ப வாரம் ரெண்டு நாள் மட்டும் ஒரு க்ளினிக்கில் வேலை செய்யறாராம். செமி ரிட்டயர்டு! வெளியே போய்ஊரைச் சுத்திக்கிட்டே பழங்கதைகள் பேசுனோம். நம்ம ஹொட்டலுக்கு தொட்டடுத்து 'பிட்'தெரு. சிட்டிமால் செண்டர்பாயிண்ட் டவர் எல்லாம் அங்கேதான். அங்கே ஒரு ஓபல் ம்யூசியம் இருக்கு. அதைக் கொஞ்ச நேரம் பார்த்தோம்.ஓபல் எப்படி வெட்டி எடுக்கறாங்கன்னு அருமையான டிஸ்ப்ளே வச்சுருக்காங்க. ஓபல் விற்பனைக்கும் இருக்கு.'ஓபல் வாங்க, வீட்டை வித்துட்டா'ன்ற பழி வராம,ஒரு கெத்தா விலையை மட்டும் பார்த்துக்கிட்டேன். அந்தக் கடையே ஒரு நிலத்தடியிலேதான் இருக்கு. எங்கே வயசானவுங்க படியிலெ இறங்க முடியாதோன்னு ஒரு 'சேர் லிஃப்ட்'கூட வச்சிருந்தாங்க.அதுலே போகணுமுன்னு எனக்கு ஒரு அல்ப ஆசை:-) ஆனா.............


வந்த நண்பர்களும் 'சிட்னியிலே இருக்கோம்'ங்கற பேரே தவிர, சிட்டிக்குள்ளே வர்றதே இல்லையாம்.போன முறை எங்களைப் பார்க்க டாக்டர் மட்டும் வந்தார். அதுக்கப்புறம் இப்பத்தானாம். இவுங்களுக்காகவே இனிமே நாம் அடிக்கடி வரணும்போல இருக்கு:-)))) அடுத்த விஸிட் Myer கடை. எலக்ட்ரானிக் பகுதி. பையனுக்கு என்னவோ அடாப்டர் வாங்கணுமாம். லேட்டஸ்ட் மாடல் மானிட்டர்கள் எக்கச்சக்கமா குவிஞ்சிருக்கு. இதுலே சில மாடல்கள் இன்னும் நியூஸிக்கு வரலை. ம்யூஸிக் கம்போஸ் செஞ்சுக்கவும், ம்யூஸிக் கீபோர்டு இணைச்சு ஒரு வகை. அட்டகாசம்.32 இஞ்சு ஃப்ளாட் ஸ்க்ரீன். வெரி ஸ்லிம், வெரி நைஸ்.


அங்கே இருந்து வெளியே வந்து அதே தெருவிலேயே நடந்து போய்க்கிட்டு இருந்தோம். சாப்புட ஒரு இடம் தேடல்தான்.போய்ச் சேர்ந்த இடம் படகுத்துறை. ஃபெர்ரி வார்ஃப். அக்கம்பக்கம் இடங்களுக்கு அங்கிருந்து படகுகள் போகுது. கண்ணுக்குமுன்னாலே சிட்னியின் லேண்ட் மார்க் சிட்னி ப்ரிட்ஜ். வலப்பக்கமா ஓபெரா ஹவுஸ். படகுத்துறையிலே கட்டடங்களைகண்டமேனிக்கும் கட்டி, இப்ப ஓபெரா ஹவுஸின் வ்யூ முக்காலே மூணு வீசம் மறைஞ்சிருக்கு. எல்லாம் சமீபத்துலே கட்டுனதாம்.
நம்ம நாட்டுலெ வெள்ளையா இருந்த தாஜ்மஹால் கட்டிடம், மதுரா ரிபைனரீ புகையாலே சாம்பக்கலரா ஆயிக்கிட்டு வர்றதைக் கவனிச்சீங்களா? இங்கே வெள்ளையா ஒரு காலத்துலெ இருந்த ஓபெரா ஹவுஸ், இப்ப என்னவோ லேசாமஞ்சள் படிஞ்சு தந்தக் கலருலே இருக்கு( இதுக்குத்தான் நல்லா பல் விளக்கணுங்கறது? ) எதனாலெ? கொஞ்சம் கவனிங்கப்பா............ ரெண்டு க்ளிக் க்ளிக்கிக்கிட்டு சாப்பாட்டுக்கடை தோதா இல்லாம, திரும்ப வந்தவழியிலேயெ நடந்து 'ஆஸ்தராலியா ஸ்கொயர்' . அங்கே இருந்த ஃபுட் கோர்ட்லெ இந்திய சாப்பாடு வாங்கித் தின்னுட்டு ( சொல்லிக்கறமாதிரி இல்லே அந்தச் சாப்பாடு. ஓசியிலே கிடைச்சதுக்குப் பழுது சொல்லலாமா? மூச்:-) வீட்டுக்கு வரலைன்னு ஒரே புலம்பல் வேற )அடுத்த பக்கம் இருக்குற ஜார்ஜ் தெரு வழியா புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம். பையன் பார்க்கிங்லே இருந்து காரை எடுத்துவரப் போனான். நாலு மணி ஆயிருச்சுன்னா ட்ராஃபிக் கூடுதல். ஒரு மணி நேரக் கார் பயணம்அவுங்க வீட்டுக்கு. ஹொட்டல் வாசலில் தலைக்கு மேலே 'மோனோ ரயில்' ரெண்டு நிமிஷத்து ஒரு தடவை,'டடக்,டடக்'ன்னு போய்க்கிட்டே இருக்கு. ('சரி..... ஞாபகம் இருக்கு, வரேன். இப்பக் கொஞ்சம் தடக்காமப்போ')


பத்து நிமிசத்துலே வரேன்னு போனவன் அவ்ளொதான். அக்கம்பக்கம் போகலாமுன்னா..... அதுக்குள்ளே அவன் வந்துட்டா? இதுவேற ஒன்வே தெரு. விட்டுட்டா மறுபடி ஊரைச் சுத்திக்கிட்டுல்லே வரணும். தெருவை அடைச்சுக்கிட்டு மூணு லைன்லேட்ராஃபிக் நெரிசல். என்ன கலர் வண்டி?ன்னு கேட்டதுக்கு மரூன் கலர். வர்ற வண்டிகளிலே எது ரொம்பவே அழுக்கா இருக்கோ அதுதான் அவுங்க வண்டியாம். ஏன்??????? சிட்னியிலே தண்ணிக் கஷ்டமாம்ப்பா. வாரம் ரெண்டுநாள் மட்டும் தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தலாமாம். அப்பக் காரு கழுவுறது? மழை வரும்போது வண்டியை வெளியிலே நிப்பாட்டிக்கணுமாம். உள்ளூர் நிலவரமெல்லாம் இப்படித்தான் வெளியே வருது இல்லெ?


ரொம்ப வறட்சி, காடு பத்திக்கிட்டு எரியறது, புயல் மழைன்னு ஆஸ்தராலியாவிலே அங்கங்கே வெவ்வேற நிலமை.அம்மாம் பெரிய கண்டம் ஒரே நாடா இருக்கறது அவுங்களோட பெரிய பலம்.சில முக்கிய நகரங்களைத் தவிர மத்த இடங்களிலே கூட்டமே கிடையாது. இன்னிக்கு, இந்த நிமிஷக் கணக்குக்கு 20 689 878. ரெண்டே முக்கால் கோடிகூட கிடையாது.


நாப்பது நிமிசக் காத்திருப்பு( நல்லவேளை, காலுலே இருந்து வேர் விடலை). லேசான தூறல், ச்சில்லுன்னு ஒரு காத்து.சனிக்கிழமை மட்டும் 35 இருந்த சூடு என்னைப் பார்த்துட்டு மறுநாளே மரியாதையா 17 ஆயிருந்தது. நியூஸி வெதரைக் கொண்டுவந்துட்டேன்னு கொஞ்சம் 'பாராட்டு' வாங்குனேன்:-)))


நாலடிக்க அஞ்சு நிமிஷம். ஒடிப்போய் நம்ம 'தலை கொடுத்தானை'ப் பார்த்துட்டு இன்னொரு ரவுண்டு வந்தா, ஒரு பாட்டில் தண்ணி 99 சதம். அதே ப்ராண்ட், அதே அளவு. 'தண்ணியில் உல்வொர்த் அடிக்கும் கொள்ளை'ன்னு ஒரு பதிவு போட்டுற வேண்டியதுதான்.


தொடரும்............

17 comments:

said...

//எதுக்கெடுத்தாலும்பிடிச்சிருக்குன்னு சொல்றாளே..... மண்டை சரியில்லையோன்னு நினைச்சுக்காதீங்க.//

என்னமோ என்னமோ பிடிச்சிருக்கு....:)

//இங்கே வெள்ளையா ஒரு காலத்துலெ இருந்த ஓபெரா ஹவுஸ், இப்ப என்னவோ லேசாமஞ்சள் படிஞ்சு தந்தக் கலருலே இருக்கு( இதுக்குத்தான் நல்லா பல் விளக்கணுங்கறது? ) எதனாலெ? கொஞ்சம் கவனிங்கப்பா.......//
இந்த வேலையை ஒரு பற்பசை கம்பெனி எடுத்து நடத்தினா நல்ல விளம்பரமா இருக்காது?

//ஒடிப்போய் நம்ம 'தலை கொடுத்தானை'ப் பார்த்துட்டு இன்னொரு ரவுண்டு வந்தா, //

அப்பா! அடுத்தவன் கஷ்டத்தைப் பார்க்க அவ்வளவு ஆவலா? ஒரு வேளை நீங்க உங்க அவரு தலையை திங்கறதுனாலதான் அடிக்கடி அப்ஸ்காண்ட் ஆகிடறாரா?

said...

//உன் அம்மா ரோல் செய்யவேற யாரையும் தேடாதே. நான் இருக்கேன்'னு ஆறுதல் சொல்லி வச்சேன்.//

"ஆறுதல்!"
:-))

said...

//என்னை திடீர்ன்னு இங்கிலிபீஸ் படத்துலே பார்த்தா ஆச்சரியப்படாதீங்க:-))))//

அடடா! நம்ப‌ கோடம்பாக்கத்துக்கு ஒரு அம்மா நஷ்டம்.

said...

//இன்னிக்கு, இந்த நிமிஷக் கணக்குக்கு 20 689 878. ரெண்டே முக்கால் கோடிகூட கிடையாது.//

2,06,89,878 ரெண்டே கால் கோடி கூட கிடையாதே!

said...

கொத்ஸ்,வாங்க.

ப்ரெஸெண்ட் போட்டாச்சு.

///பற்பசைக் கம்பெனி///

பயங்கர ஐடியாவா இருக்கே! இதுவும் பிடிச்சிருக்கு:-)))

//அடிக்கடி அப்ஸ்காண்ட் ஆகிடறாரா?//

ஐய்யோ ... இப்படிக் கற்பூரப்புத்தியா? :-)))))

said...

வாங்க மதி,

உக்காந்து வரிக்கு வரி யோசிக்கறிங்கன்னு புரிஞ்சு போச்சு.:-)))))))))

//முக்கால்..... கால்...//
மில்லியன், ஹண்ட்ரெட் தெளஸண்டுன்னு சொல்லிச் சொல்லி இப்பக்
கோடிக்கணக்கு வரலைப்பா(-:

//அடடா! நம்ப‌ கோடம்பாக்கத்துக்கு ஒரு அம்மா நஷ்டம்.//
அதான் ஒரு டிவி சீரியல் போதுமுன்னு பார்த்தா........ இழுத்து இழுத்து
மெகாவா ஆக்கிட்டா? அதுலேயும் போட்டுத்தள்ளுற சீனா இருந்தாப் பொணமாப்
படுக்கவேண்டி இருக்கும்:-)

ஹாலிவுட்ன்னா எல்லாம் முன்னெயே திட்டம் இருக்கும். போனமா, நம்ம சீனை
நடிச்சமா வந்தமான்னு இருக்கலாமுன்னுதான்....

said...

என்னங்க வைசா,

நீங்கதான் இப்ப 'ஆட்டம்' போடுவீங்களே.... அப்புரம் செடிக்கு எதுக்குத் தண்ணி ஊத்தணும்?
விண்டர் வந்துக்கிட்டு இருக்கேப்பா...........

said...

மதி நீங்க விழிப்பா இருக்கீங்களா னு
ட்டீச்சர் டெஸ்ட் பன்றாங்க. அவ்வளவுதான்
இதைவிட, அப்பப்ப உய்....உய்..னு
சவுண்டு கொடுப்பாங்க, பசங்களுக்கு
காது சரியா கேக்குதானு டெஸ்ட் பண்ண
ஏதுக்கும் கொஞ்சம் பஞ்சு வாங்கி
வச்சுக்குங்க

said...

வாங்க சிஜி.

'ஆஜர்'போட்டாச்சு.

மதி,
உங்களுக்கு என்னமோ சொல்றாரு பாருங்க நம்ம சிஜி.

Over to மதி:-))))

said...

இருந்த ஓபெரா ஹவுஸ், இப்ப என்னவோ லேசாமஞ்சள் படிஞ்சு தந்தக் கலருலே இருக்கு( இதுக்குத்தான் நல்லா பல் விளக்கணுங்கறது? ) எதனாலெ? கொஞ்சம் கவனிங்கப்பா
நல்லா கவனீக்கிறீங்க.
அதைத்தவிர ஹாலிவுட் ஆசை வேற.
தண்ணிக் கஷ்டமா சிட்னீல?
அடடா, நாளைக்கப் போலாம்னு இருந்தேன்.

சாப்பாடு வேற கிடைக்காதா.
ஆளைவிடு,
மழை நிக்காமப் பெய்தாலும்
நல்லா சாப்பிடுவோம்.
நல்லா எழுதி இருக்கிங்க துளசி.
எனக்கும் பிடிச்சிருக்கு.:-)

said...

வாங்க வல்லி.

இன்னும் மழை ஓயலையா?(-:

நாளைக்கு வேணாம். ரெண்டு நாள் கழிச்சுப் போங்க. அதுக்குள்ளே 'தண்ணி'
சரியாகலாம்:-))))

சாப்பாடு கிடைக்குதப்பா. இந்தக் கடைதான் த்ராபை(-:

முந்தி போன மாதிரி வெறுமனே வேடிக்கை பார்க்க முடியுமா?
இப்ப எழுத்தாளர் க்ரீடம் சூட்டிக்கிட்டேனே:-))

அதான் 'கவனம்' கூடி இருக்கு.
நாமெல்லாம்தானே நாட்டின் முதுகெலும்பு? :-)

said...

//அப்பப்ப உய்....உய்..னு சவுண்டு கொடுப்பாங்க//
டீச்சரோட ஸ்பெஷலிட்டியே அதுதானே 'சிவா'ஜி!
அவங்க சத்தத கேக்க(படிக்க)த்தானே இத்தன மாணவ‌ர்கள் வர்றோம். இல்லன்னா "இன்றுபோய் நாளை வர்ரேன்"னு போய்கிட்டே இருக்கமாட்டோம்.

said...

//எழுத்தாளர் இந்நாட்டு முதுகெலும்புனு தட்னான் பாரு.//

"யாரு உங்களையா?"

//ஆஹ்ன்ன்.நாந்தான் மேடைலே இருந்தேனே, கையைத் தட்றான் தட்றான் தட்டிக்கிட்டே இருக்கான்//:-)0)
சினிமா பாத்து முடிக்கலியா. ஒரு விமரிசனமும் வரல்லை?

said...

மதி,

வரவர வகுப்புலே ஒரே சத்தம். டீச்சர் சொல்றதைக் காதுலே வாங்காம 'பசங்க' ஒருத்தரோடு ஒருத்தர்
பேசறது கூடிப்போச்சு. விசிலடிச்சு அடக்கலாமுன்னா , எனக்கு விஸில் அடிக்கத் தெரியலைப்பா:-))))
'மைக்கேல் அப்பா 'மாதிரி இருக்கேன்.:-)
அதுக்குன்னு ஒரு வகுப்பு இருக்கான்னு தெரியலை:-)

said...

வல்லி,

கல்யாணப்பரிசா? பார்த்து ரொம்பவருசமாச்சு. இப்பப்போய் எப்படி விமரிசனம் போடறதுன்னு ஒரு யோசனை:-)))))))))

said...

//இப்ப இருக்கற ராணி எலிஸபெத், இங்கே சிட்னி மக்களுக்கு ஒரு லெட்டர் போட்டுருக்காராம். அதை 2085 வது வருசம்தான் அப்ப இருக்கப்போற மேயர் படிக்கணுமுன்னு சொல்லிட்டாங்களாம். அப்படி என்னாதான் எழுதி இருப்பாங்க//

இதுல ஏதோ விவகாரம் இருக்கு டீச்சர்; நீங்க தான் அது என்னன்னு கொஞ்சம் தோண்டித் துருவணும்! ராணியம்மா சிட்னி மக்கள் எல்லாரும் சேர்ந்து மருத நாயகம் படத்துக்காக, உண்டியல் குலுக்கி, பணம் சேருங்கன்னு எழுதி இருப்பாங்களோ? :-)

அது சரி; நீங்க ஏன் அந்த 19 வயது ராணி சிலை படத்தைப் போடவில்லை? வடையெல்லாம் பதிவில் படமாய் வரும் போது, ராணியின் படத்தைத் திட்டமிட்டு பிளாகவுட் செய்தது ராஜத்துரோகம்! இதை வரலாறு மாணவர்கள் (மாணவிகள் அல்ல...) எல்லாரும் வன்மையாகக் கண்டிக்கிறோம்!

said...

KRS,

இன்னும் 79 வருசம் கழிச்சு ஃபண்ட் திரட்டி மருதநாயகம் எடுத்துறலாம். பிரச்சனை
இல்லை. ஆனா அதுவரைக்கும் நான் இருப்பேனான்னு தெரியலையே, பின்னே படத்துக்கு
விமரிசனம் யார் எழுதுவா? :-))))))))


ராணி சிலையை பல போட்டோக்கள் எடுத்த போட்டொக்ராஃபர் படத்தை இங்கே கணினியிலே
போடும்போது கொஞ்சம்(???) சொதப்பிட்டார். ஒருவேளை மாணவர்களை
நல்லவழியிலே கொண்டு போகணுமுன்னு நினைச்சிருப்பாரோ?

மணிக்கூண்டு படத்துலே பின்புலத்துலே இடது பக்கம் கவனமாப் பாருங்க. ராணி இருக்காங்க.