Monday, September 04, 2006

க.க.க.கா x 2


மக்கள்ஸ் வேண்டுகோளுக்கிணங்கி நேத்துத்தான் நம்ம Baywatch பிள்ளையாரைப்படம் பிடிக்கப் போனோம். வசந்தம் தொடங்கி மூணாவது நாள். 17 டிகிரி வெய்யில்.ஆனா தெந்துருவக்காத்து வீச ஆரம்பிச்சதில் கொஞ்சம் 'சில்ன்னு ஒரு காத்து.'


வெய்யில், ஞாயித்துக்கிழமை & பகல்.இது மூணும் சேர்ந்த ஒரு சூப்பர் காம்பினேஷன்.கடற்கரை முழுசும் கூட்டமோ கூட்டம். ( நாலு பேருக்கு மேலே இருந்தால் அது கூட்டம் என்று கொள்க)


புள்ளையாரை மட்டும் புடிக்காம அந்த கேவ்ராக், குகை, அதை ஒட்டுனதண்ணி, பாறைகள், அதுலே ஒட்டிப்பிடிச்சு வளர்ந்துக்கிட்டு இருக்கற ச்சிப்பியினம்(mussels) அலை கொண்டு வந்து சேர்க்கிற(???) மீன்களைத் தின்ன வட்டம் போடும் ஸீ கல் கடல் காக்காய்கள், அதுகளைத் துரத்தும் அல்பட்ராஸ் என்னும் தாதாக்கள்,கடற்கரையில் ஓடவும் இன்ன பிற விஷயங்களுக்காகவும் வந்திருக்கும் நாய்கள், மேற்படி விஷயங்களைப்ப்ளாஸ்டிக் பையில் வாரி எடுத்துக்கிட்டுப் போகும் அப்பா அம்மாக்கள்( அட... நாய்ச் சொந்தக் காரர்கள்) எந்த ஜாதி, எந்த சைஸ் நாயைப் பார்த்தாலும் ஓடிப்போய் குசலம் விசாரிக்கும் லாஸி என்னும் வகை நாயக்கா,குளிர் காத்து அடிச்சாலும் கொஞ்சம்கூட அசராம ஈர உடையிலே கனூ (Canoe)வைத் தலையிலே சுமந்துக்கிட்டுவந்த பையன்னு கோலாகலமா இருந்துச்சா, அதையெல்லாம் முடிஞ்சவரை கேமராவுலே அடக்கிக்கிட்டு வந்தோம்.


எத்தனை படம் போட ப்ளோக்ஸ்பாட் விடுமுன்னு தெரியலை. அஞ்சோ ஆறோ?


சொல்லி முடிக்கலை. ப்ளோக் ஸ்பாட் ஒரே ஒரு படத்தை மட்டும் ஏத்துக்குமாம்.


போட்டும், இருக்கவே இருக்கு நம்ம ஃப்ளிக்கர். அதுலே நிறையப் படத்தைத் தூவி விட்டுருக்கேன்.


புள்ளையாரைப் பாத்துக்குங்கப்பா எல்லாரும்.


மதி, இப்படி முன்னாலே வந்து மொத ஆளா நில்லுங்கப்பு.


அதென்ன க.க.க.கா x 2?


கல்லைக் கண்டால் கடவுளைக் காணோம்
கடவுளைக் கண்டால் கல்லைக் காணோம்.

24 comments:

said...

படம் பாத்துட்டு உங்க எழுத்தைப்படிச்சா..அப்படியே சினிமா பாத்ததுமாதிரி இருந்திச்சி.

said...

துளசி, பிள்ளையார் நல்லாவே உருவாகி இருக்கிறார்.
மாலையும் போட்டா கம்ப்ளிட் ஆயிடும்.

கிரீடம் எல்லாம் வரைய முடியாதா?
ஏதாவது சொல்லுவாங்களோ?

said...

வாங்க தருமி.

எந்த சினிமா? 'இம்சை'யா? :-)))

said...

இன்னிக்கு நாளோட துவக்கம் பேவாட்ச் புள்ளையார் தரிசனத்தோட தான். படங்கள் எல்லாம் அருமை.

நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் பைக் வாங்குன நாளும் இதே நாள் தான். அதே நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் டெல்லியில் இருக்கும் போது எங்க உத்தராஞ்சல் மாநில கேர்டேக்கருக்குப் பெண் குழந்தை பிறந்த நாளும் இதே நாள் தான். இன்னொரு விசேஷம் பாருங்க. நான் இப்ப ராஜஸ்தான்ல இருக்குற கிளையண்ட் சைட்ல புது பிளாண்ட் ஒன்னு தொடங்க பூமி பூஜை இன்னிக்குத் தான் நடக்குது. மொத்தத்துல இந்த நாள் இனிய நாள். புள்ளையாரைக் கண்டது இன்னும் சிறப்பு
:)

said...

வல்லி,

அந்தக் கறுப்பு, வெள்ளை எல்லாமெ யாரு போட்டதோ? பெயிண்ட் கொட்டிருச்சோன்னுகூட இருக்கு.

க்ரீடம் ஐடியா நல்லாத்தான் இருக்கு. பேசாம ஒரு நாள் வரைஞ்சு வச்சுறவா?

அசப்புலே புள்ளையாராத்தான் தெரியறார் இல்லையா?

அது போட்டும். மத்த படங்களைப் பார்த்தீங்களா? ச்சுட்டி இருக்கு அங்கேயே.

said...

கைப்புள்ளெ,
இந்தநாள் நமக்கும் இனிய நாள்தான். மகளோட பிறந்த நாள்.
எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும்.

பெரியவ சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி:-))))

said...

ஒரு அற்புதக் கலைஞன் செதுக்கிய மரத்தால் ஆன யானையைக் கண்டு கூறப்பட்டது:

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை."
ம.ம.மா.யா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//இந்தநாள் நமக்கும் இனிய நாள்தான். மகளோட பிறந்த நாள்.//

தங்கள் மகளுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்.

//பெரியவ சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி:-)))) //
அதுல என்னா டவுட்டுங்கிறேன்?
:)

said...

வாங்க டோண்டு. இப்பத்தான் உங்க மினி வலைப்பதிவாளர் சந்திப்பு படிச்சுட்டு, நெய் ரோஸ்ட்டை நினைச்சுக்கிட்டே
இங்கே வந்தா நீங்க இருக்கீங்க.

நீங்க சொன்னதேதான். ம.ம.ம.யா.

நம்மாளுங்க இன்னும் நாயை வச்சும் சொல்லிட்டாங்க பார்த்தீங்களா?
கல்லைக் கண்டால் நாயைக் காணொம். நாயைக் கண்டால் கல்லைக் காணொமுன்னு.

said...

நன்றிங்க கைப்புள்ளெ.

மகளுக்குச் சொல்லிடறேன்.

இங்கே நேத்து தந்தையர் தினம்.
மகள் பிறந்த வருஷம் அந்தநாள் தந்தையர் தினமா இருந்துச்சு.

செப்டம்பர் முதல் ஞாயிறு.

said...

படங்களெல்லாம் சூப்பரா இருந்திச்சிங்க. நீங்க சொன்னா மாதிரி கல்லுல கடவுள பாக்கணும்னு நினைச்சிக்கிட்டே பார்த்தா கடவுள பாக்கலாம்.. இல்லன்னா வெறும் கல்லுதான் தெரியும்.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

கிருமிக்காய்ச்சல் போயாச்சா?

நீங்க சொன்னதேதாங்க.
கல்லும் கடவுளும்:-)))

said...

தென்கோடி பிள்ளையாரை காண வைத்த துளசியாருக்கு நன்றி.
சென்னை இராசாசி ஹால் உள்ள அரசு வளாகத்தில் மரத்தின் வேரில் ஒரு சுயம்பு விநாயகர் பார்த்திருக்கிறேன்.

பூக்களம் களை கட்டுகிறதே!
உத்திராடதின வாழ்த்துக்கள்!! சாண்டா வடதுருவத்திலிருந்து வந்தால் மாவேலி தென் துருவத்திலிருந்துதானே வர வேண்டும். :))

said...

பிள்ளையாரப்பா டால‌ர கொங்சம் இப்படி கொட்டப்பா!
பளார் பளார் பளார் (கன்னத்துல போட்டுகிட்ட சத்தம்)
தொபுக் தொபுக் தொபுக் (தோப்புக்க‌ரணம் போட்டாச்சு). கொஞ்சம் லேட்டா வந்தாலும், முதல்ல வேண்டிகிட்டது நானாக்கும்.
பிள்ளையார கண்டா, கேவ் ராக்கக் காணும், கேவ் ராக்கக் கண்டா, பிள்ளையார காணும்.
ஆகா அருமையான த‌ரிசன‌ம்.
மாமா பாதி மனசோட தான் ஒத்துக்கிட்டு இருந்தா ஆன்மீகக் கண்ணோட பாக்கச் சொல்லுங்க.

said...

பிள்லையார் கூட நீங்க எடுத்துகிட்ட லாங் ஷாட் படத்த பாத்துட்டு எங்கே tbr,Joseph அது சிலுவை மாதிரி தெரியுதுன்னு சொல்லிடுவாரோன்னு பய‌ந்தேன். நல்ல வேளை அவ‌ருக்கும் பிள்ளைய‌ராவே காட்சி கொடுத்துட்டார்.

said...

பாத்திங்களா, பிள்ளையா‌ர பார்த்த ப‌ரவச‌த்துல மறந்துட்டேன். உங்கள் மக‌ளுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

said...

எனக்கு பிள்ளையார்தான் தெரியறார்.

தங்கள் மகளுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்.

said...

துளசி அக்கா!
பிள்ளையாருக்கு; எப்போ கோவில் கட்டப் போகிறீர்கள்! குடமுழுக்கு அழைப்பு வையுங்கோ!
யோகன் பாரிஸ்

said...

வாங்க மணியன்.

//சென்னை இராசாசி ஹால் உள்ள அரசு வளாகத்தில் மரத்தின்
வேரில் ஒரு சுயம்பு விநாயகர் பார்த்திருக்கிறேன்//

அப்ப அடுத்தமுறை அவரைக் கட்டாயம் விஸிட் செஞ்சுரணும்.

உத்திராட திவசம் 'காரணவரு'க்கு ஓணக் காழ்ச்சகள் வைக்கணும் இல்லையா?
இன்னிக்குத்தான் திருவோணம். நைவேத்தியமா ஒரு பதிவு போட்டுருக்கேன்.

said...

மதி,

சிலுவை மாதிரி தெரிஞ்சாலும் தப்புல்லேங்கறேன். நமக்கு எல்லாரும் ஒண்ணுதாம்ப்பா.

இங்கே மக்கள்ஸ் டவல், அது இதுன்னு அந்த 'கல்' மேலே போட்டு வச்சுருப்பாங்க சிலநாள்.
என்னன்னு சொல்ல முடியும்? தேவுடா உனக்கு இந்த கதியான்னு பார்த்துட்டு வர்றதுதான்(-:

மகள் கிட்டே சொல்லிட்டேன். நன்றின்னு சொல்லச் சொன்னாள். நானும் இந்த நன்றி நவிலல்லே
கலந்துக்கறேன்.

said...

அட நம்ம நட்சத்திர சிபி!!! வாங்க வாங்க.
திங்கள் செவ்வாய்ன்னு லிஸ்ட்டுபோட்டுக்கிட்டு வெளுத்து வாங்குறீங்க. இந்த பிஸியிலும் இங்கே..........

புள்ளையார் கிருபையாலே நல்லா இருங்க. வாழ்த்து(க்)கள்.

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னதுக்கு நன்றிங்க.

said...

யோகன்,

உங்களுக்கென்னப்பா தேரில் பவனி. இங்கே அப்படியா?

என் கண்ணுக்கு மட்டுமே அவர் புள்ளையார். மத்தவங்களுக்கு....?ஹூம்....

கோயில் கட்டணுமுன்னா அவரே ஏற்பாடு பண்ணிக்கிட்டாத்தான் உண்டு.

said...

பேவாட்ச் பிள்ளையார் அருள். பேவாட்ச் பிள்ளையார் கோவிலின் நிரந்தர ட்ரஸ்டி துளசியம்மாவிற்கு எங்கள் வணக்கங்கள்.

said...

வாங்க கொத்ஸ்.

என்னத்தை ட்ரஸ்ட்டி? நான் ஒருத்திதான் இங்கே ''ட்ரஸ்ட்'
செஞ்சுக்கிட்டு இருக்கேன் அவர் புள்ளையார்தான்னு:-))))