Monday, October 03, 2005

நியூஸிலாந்து. பகுதி 10


தெற்குத்தீவு

நம்முடைய ·பெரி இப்போது தெற்குத் தீவின் மேலெ உள்ள 'பிக்டன்' என்ற இடத்திற்கு வந்து விட்டது. காரையும் வெளியே எடுத்தாயிற்றல்லவா?
நேரே 'ஹைவே #1 'இல் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்!


இந்த ரோடு , தெற்குத் தீவின் கோடிவரை செல்லும்! நாம் போகும் வழியில், 'ப்ளென்ஹெம்' என்ற ஊரைத் தாண்டுவோம். இது, திராட்சைத்
தோட்டத்திற்குப் பெயர் பெற்றது. ( ஹைதராபாத் ஞாபகம் வருதா? ) இந்த திராட்சைகள் எல்லாம் 'ஒயின்' செய்யவே பயன்படுகின்றன!
நிறைய ஒயின் தொழிற்சாலைகள் இங்கே இருக்கின்றன. அது இருக்கட்டும். நாம் ஒரு நல்ல ஊரைத் தாண்டவேண்டும்.


இதன் பெயர் 'கைக்கோரா' இங்கே விசேஷமாகப் பார்க்க வேண்டியது, 'கடல் சிங்கங்கள்!'


'ஸீ லயன், ஸீல் 'என்னும் பிராணிகளை அதன் இயற்கைச் சூழலில் பார்க்கக்கூடிய இடம். 'ஸில் காலனி' என்னும் இடத்திற்கு போகவேண்டும்.
இது கைக்கோராவிலே உள்ள இடம்தான். நல்ல சாலை வசதிகள் உண்டு. அங்கே போனால், ஆயிரக்கணக்கான கடல் சிங்கங்களைப்
பார்க்கலாம்! கூட்டம் கூட்டமாக, வெயிலில் பாறைகளின் மேல் தூங்கிக்கொண்டும், தண்ணீரில் குதித்து விளையாடிக்கொண்டும், மற்ற சிங்கங்
களுடன் சண்டை போட்டுக்கொண்டும், இது எதுவுமே போரடித்தால், தன்னைத்தானே சொரிந்துகொண்டும் இருக்கும் இவைகளைப் பார்ப்பதே
ஒரு ஆனந்தம்! அதிலும் சின்னச் சின்னக் குட்டிகளைப் பார்த்தால், 'குறு குறு' என்ற பார்வையுடன் அழகாக இருக்கும்.


இங்கே இந்த ஊரில்தான், 'வேல் வாட்ச்' என்னும் திமிங்கிலச் சுற்றுலா இருக்கிறது. அமெரிக்காவில், 'சாண்டியேகோ' என்னும் இடத்தில் உள்ள
கடல்வாழ் உயிர்கள் உள்ள பூங்காவில், திமிங்கிலங்களைப் பார்த்தவர்களுக்கும் இது வேறு விதமான விஷயம்!. திமிங்கிலத்தை அதன் இயற்கைச்
சூழலில் பார்க்க இதைவிட வசதியான இடம் ஏதுமில்லை என்பதே என் எண்ணம்.


படகில் சென்றும் பார்க்கலாம் அல்லது 'ஹெலிக்காப்டர்' மூலமாகவும் பறந்து பார்வையிடலாம்! இங்கே கோடைகாலமான டிசம்பர் மாதம் முதல்,
·பிப்ருவரி மாதம் வரை, உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்கள் இந்த கடல்வாழ் உயிரினங்களைப் பார்க்கவே, முக்கியமாகத் திமிங்கிலங்களைப்
பார்க்கவே ஏராளமாக வருகின்றனர்!சில சமயங்களில், திமிங்கிலங்கள் ஏதோ காரணத்தினால், கரையில் வந்து ஒதுங்கி, தற்கொலை செய்துகொள்கின்றன! அப்போது, எந்த ஊர்க் கரை
யில் அவை வந்து சேர்கின்றனவோ, அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் எப்படியாவது அவைகளை மீண்டும் கடலில் கொண்டு சேர்க்கவும்,
உதவி வரும்வரை அவை உயிர் பிழைத்திருக்க, அவைகளின் மேல் நீரை வாரி வாரி ஊற்றிக் கொண்டிருப்பதையும் அடிக்கடி தொலைக்காட்சியில்
பார்க்க முடியும். அங்கே உள்ள பள்ளிகளில் இருந்து, எல்லாப் பிள்ளைகளும் இந்த உயிர் மீட்புப் பணியில்தான் ஈடுபட்டு இருப்பார்கள்.


'கைக்கோரா'வை விட்டு வந்துகொண்டே இருந்தால் அடுத்த பெரிய ஊர் 'கிறைஸ்ட்சர்ச்'தான். ஆனால், நாம் ஊருக்குள்ளெ போகாமல்,
இதே ஹைவேயில் பயணத்தைத் தொடரலாம். இந்த 'கிறைஸ்ட் சர்ச்'சைக் கடைசியாகப் பார்க்கலாம். எப்படியும், நாம் திரும்பிப் போகவேண்டிய
பன்னாட்டு விமான நிலையம் இங்குதானே உள்ளது!


போய்க்கொண்டே இருந்தால் 'டிமரு' என்ற சிறிய ஊர் வரும். இங்கே ஒரு துறைமுகம் இருக்கிறது. கப்பல் வழியாக வியாபாரங்களுக்கு
உதவி என்பதைத் தவிர விசேஷமாக ஒன்றுமில்லை.


அடுத்து வருவது 'ஓமரு' என்னும் ஊர். இங்கே 'பெங்குவின்' பறவைகளைப் பார்க்கலாம், அதன் இயற்கைச் சூழலில்! காலையில் இரை தேடி,
இவை கடலுக்குள் சென்றுவிடுமாம். பிறகு அங்கேயே பகல் முழுதும் இருந்துவிட்டு, மாலையில் கொஞ்சம் இருட்டின பிறகுதான் இவைகள்
கரைக்குத் திரும்பி வருமாம். இந்த 'பெங்குவின் பறவை காலனி' யில் செடி, புதர்களுக்கு நடுவேயெல்லாம், கூடு ( வீடு) செய்து
வைத்துள்ளனர்.


கான்சர்வேஷன்( இதற்குத் தமிழில் என்ன?) துறையினர் இந்தப்பகுதியை, அதன் இயற்கைத் தன்மை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.


மாலை, இருட்டுவதற்கு முன், நாம் அங்கே போய், இவர்கள் கட்டிவைத்துள்ள பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்துவிட வேண்டும். அங்கிருந்து
நாம் கடல் தண்ணீரைப் பார்க்கமுடியும். முதலிலேயே சொல்லிவிடுவார்கள் நாம் என்னென்ன செய்யக்கூடாது என்று!


பேசக் கூடாது( இதுதான் ரொம்பக் கஷ்டம்..) டார்ச் லைட்டோ, ·ப்ளாஷ் உள்ள கேமெராவோ உபயோகிக்கக்கூடாது. எழுந்து நடக்கக்கூடாது.
அசையாமல் ஓரிடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும்.


நாமெல்லாம், தண்ணீரையே பார்த்துக் கொண்டிருப்போம். நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், பாதுகாவலருக்கு எப்படியோ தெரிந்துவிடும்.
நமக்கு எச்சரிக்கை விடுவிப்பார். அதன்பின் ஒரே அமைதிதான்.


நாமெல்லாம், அண்டார்டிக்காவில் உள்ள 'எம்பரர் பெங்குவின்' போல'மெகா சைஸில்' ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் இங்குள்ளவை
மஞ்சள் கண் பெங்குவின்கள். கோழியைவிடச் சின்ன சைஸில் இருக்கும்! சுமார் ஒரு அடி உயரம் இருக்கும்!


முதலில் ரெண்டு மூன்று பறவைகள் கடற்கரையில் தோன்றும். தண்ணீரிலே வந்து கரை ஏறியவைதான். அப்படியே அங்கேயே நின்றுகொண்டிருக்கும்.
நேரம் போகப் போக நூற்றுக் கணக்கில் வந்து சேரும். மணலிருந்து ஏறி நாம் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குமுன் 'பாதையைக் கடக்க' எல்லாம்
வரிசையில் நின்று கொண்டிருக்கும். அவர்கள் கூட்டத் தலைவன் வந்து, போகலாம் என்று சொன்னால்தான் போகவேண்டுமாம்!


ஆரம்பப் பள்ளிகளில், முதலாம் வகுப்புப் பிள்ளைகளை நினைவூட்டும் விதத்தில், அந்த வரிசையில் பேச்சும், ஒன்றை ஒன்று தள்ளுவதும்,
இடிப்பதும், வரிசையில் இருந்து தள்ளிவிடுவதுமாக ஒரே கலகலப்பாக இருக்கும். அல்லது இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். அபிமான
நடிகரின் படம் முதல் நாள் முதல் ஷோவுக்கு ரசிகர் கூட்டம் அலைமோதுவதைப்போல! ஒரே 'கல பிலா' சத்தம்தான்.


ஆஹா, இதோ வந்துவிட்டார், தலைவர்! தலைவர் முதலில் பாதையை இரண்டுபக்கமும் பார்த்துவிட்டு, ஏதோ கட்டளை இட்டவுடன், எல்லாம்
வரிசையாகப் பாதையைக் கடந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லும். அந்த மெல்லிய இருட்டிலும் எப்படியோ தங்கள் வீடுகளை அடையாளம்
கண்டு கொள்ளுமாம்!


இவ்வளவு நேர்த்தியான ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் இவை உண்மையிலேயே அதிசயப்பறவைகள்தான்! இவைகளை இந்த இடத்தில் மட்டுமே
நாம் காணமுடியும் என்பதால், சுற்றுலா வரும் கூட்டத்தினர் தவறாமல் இங்கு வருவார்கள்.


இந்த 'ஓமரு'விலிருந்து கிளம்பி அதே ஹைவே நம்பர் ஒன்றில் போனோம் என்றால் அடுத்துவரும் பெரிய ஊர் 'டனேடின்'. இந்த ஊர்
'ஸ்காட்லாந்து' மக்கள் முதலில் குடியேறிய இடம். ஆகவே எல்லா இடங்களிலும், கட்டிடங்களும், மற்ற அலங்காரங்களும் நமக்கு
'ஸ்காட்டிஷ்' நாகரிகத்தையே நினைவூட்டும் விதமாக இருக்கும்.


இங்கே ஒரு பல்கலைக் கழகம் உள்ளது. கல்வி ஆண்டில் மட்டுமே ஏராளமான மாணவர் கூட்டத்தோடு 'கல கல'
வென்று இருக்கும் இந்த ஊர், பல்கலைக் கழக விடுமுறை தொடங்கியதும் ஒரு நான்கு மாதத்திற்கு 'வெறிச்'சென்று ஆகிவிடும்! ஆனால்
அதே சமயம் இங்கு கோடை காலம் என்பதால், சுற்றுலாப் பயணிகள் அந்த இழப்பை ஈடுசெய்து விடுவார்கள்.


இந்த நகரின் முந்திய 'மேயர்' ஒரு இந்தியப் பெண்மணி! இவர் மேயர் பதவியை ஒன்பது வருடங்கள் வகித்தார்! 'க்ளென் டர்னர்' என்ற
கிரிக்கெட் ஆட்டக்காரை மணந்தவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஒன்பது வருடங்கள் அதாவது மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு
வென்றது போதும் என்று, இந்த முறை இவர் தேர்தலுக்குப் போட்டியிடவில்லை.போன வாரம்தான் இங்கே நகராட்சித் தேர்தல் நடந்துமுடிந்தது!


புதிய மேயராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஒரு சீனர். ஒரு சீனர் மேயரானது இதுவே முதல் முறை!


இந்த ஊரில் இன்னுமொரு விசேஷம் உண்டு. உலகத்திலேயே மிகவும் உயர்ந்த சரிவுள்ள தெரு இங்கேதான் இருக்கின்றது! புதுக் கார்
வாங்கியவுடன், அநேகமாக எல்லோருமே ஒருமுறை, இந்தத்தெருவில் பயணம் செய்ய விரும்புகின்றனர். கார் எஞ்சின் பலத்தை அறிய இது
ஒரு நல்ல வாய்ப்பாம்! செங்குத்தாக தெரு மேலே போகிறது. ஒருமுறை மேலே போய்விட்டு, திரும்பி வரும்போது, அதல பாதாளத்தில் விழுவது
போன்ற உணர்வில் நமக்கு வயிறு கலங்கிவிடும். ஆனால், இதை அனுபவித்து உணர்வதற்காக எப்போதும் இந்தத்தெருவில் கார் நடமாட்டம்
இருந்துகொண்டே இருக்கும்! இந்தத் தெருவின் பெயர்'பால்ட்வின் ஸ்ட்ரீட்' 38 டிகிரி கோணத்தில் உயர்ந்துள்ளது. சின்னத்தெருதான்.நடந்தும்
போகலாம். மேலே நமக்காக ஒரு குடிநீர் குழாய் வசதியும் உண்டு! ( ஏறுவதற்குள் மூச்சிளைத்து, தொண்டை காய்ந்துவிடுமே, அதற்கான
முன் எச்சரிக்கை!)


இங்கே ஒரு கடற்புறா காலனியும் உண்டு. 'ஆல்பட்ராஸ்' என்னும் பிரமாண்டமான பறவைகளின் குடியிருப்பு இது. இவைகள் இரண்டு
இறக்கையையும் விரித்தால் வரும் நீளம் ஆறு அடிக்கும் மேலே! இவைகளைச் செல்லமாக 'ஆல்பி' என்று அழைக்கின்றனர்! எல்லா இடங்களிலும்
பறவைகளுக்குத் தொந்திரவில்லாமல், பார்வையாளர் போய்ப் பார்ப்பதற்குத் தகுந்த முறையில் ஏற்பாடுகள் நல்ல முறையில் செய்திருக்கின்றனர்.மீண்டும் அதே ஹைவேயில் பயணம் செய்தால், 'இன்வெர்கார்கில்' என்ற சிறிய ஊரை அடையலாம். இங்கெல்லாம் இயற்கை அழகுதான்.
அதைக் கடந்து பயணம் செய்தால், ப்ள·ப்' என்னும் ஊரை அடைவோம். இதுதான் தெற்குத் தீவின் கடைசியில் உள்ள ஊர். கோடியில்
இருப்பதே இதன் பெருமை. இந்த ஊரில், 'பாவா' என்று அழைக்கப்படும் கடல் சிப்பிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு வீடு இருக்கிறது.
இது ஒரு தனி மனிதரின் சொந்தப் பொழுது போக்காக ஆரம்பித்ததாம். இந்த 'பாவா' சிப்பிகள் மிகவும் அழகான வண்ணங்களில் இருக்கின்றது!
இவைகளை அணிகலன் செய்யவும் உபயோகிக்கிறார்கள். நீலமும், பச்சையுமாக அசப்பில் பார்த்தால், நம் தேசீயப் பறவையான மயிலின்
இறகுகளை நினைவூட்டும் வர்ணங்கள்!இங்கிருந்து படகில் பயணம் செய்தால் வரும் மற்றொரு சிறிய தீவுதான், 'ஸ்டூவர்ட் ஐலண்ட்' எனப்படுவது. இந்தத்தீவுடன் இந்த நாட்டின்
எல்லைக்கோடு முடிவடைகிறது! மொத்தமே முப்பது ஆட்கள்தான் இங்கெ வசிக்கின்றனர்! இங்கிருந்து நேரே போனால் நீங்கள் தென் துருவத்தை
அடைந்துவிடலாம்!


இந்தச் சிறிய தீவைச் சென்றடைவதற்கு, ஒரு சிறிய விமானமும் உண்டு என்றாலும், கால நிலையை அனுசரித்தே படகும் விமானமும் தங்கள்
சேவையைச் செய்கின்றன. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமலேயே, இந்தச் சேவைகள் சிலசமயம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது!


பயணக்கதை எழுதும் சிறப்பான எழுத்தாளர் 'திரு மணியன்' அவர்களை யாருக்காவது நினைவிருக்கின்றதா? அவர், தனது தென்கோடியை
நோக்கிய பயணக்கதை எழுத இங்கு வந்திருந்தபோது, எங்களுடன் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவருக்கும், 'ஸ்டூவர்ட் தீவு' போகும்
வாய்ப்புக் கிட்டவில்லை.இந்த நாட்டின் கடைசி எல்லை வரை போகமுடியாததில் அவருக்கு ரொம்ப வருத்தம்தான்!இங்கிருந்து நீங்கள் திரும்பி, இதே வழியாகவும் வரலாம். அல்லது, இயற்கை அழகை ரசித்துக்கொண்டே,'குவீன்ஸ் டவுன்' என்னும் ஊரின்
வழியாகவும் 'கிறைஸ்ட்சர்ச்' வந்து சேரலாம்.இந்த 'குவீன்ஸ் டவுன்' உங்களுக்குத் தமிழ், ஹிந்தி திரைப்படங்களின் மூலம் பரிச்சயமான
ஊர்தான். பரந்து விரிந்த நீர்நிலைகளிலும், பனி படர்ந்த மலைகளிலும், நம் கதாநாயகனும், நாயகியும் பாடி ஆடுவதைத்தான் பல படங்களிலும்
பார்த்திருப்பீர்களே!


இந்த இடத்தில்தான், 'பஞ்சி ஜம்ப்' என்னும் மிகவும் உயரத்திலிருந்து, கீழே குதிக்கும் பொழுது போக்கு விளையாட்டு நடக்கிறது! குதிப்பதற்கு
முன், உங்களின் எடையை சரிபார்த்து, அதற்கேற்ற அளவிலான கயிறுகள் உபயோகித்து, கால்களைக் கட்டிக் கொண்டு தலைகீழாக குதிக்க
வேண்டும்! ஒரு ஆற்றுப் பாலத்தில் நின்றுதான் குதிப்பீர்கள். கீழே தண்ணீரைத் தொட்டவுடன், அங்கே தயாராக உள்ள படகில் உங்களைத்
திருப்பி அழைத்து வருவார்கள். உங்கள் 'தாவல்' வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு வழங்கப்படும்! மேலும் நீங்கள் குதித்தற்கான
சான்றிதழும், 'நான் பஞ்சி ஜம்ப் செய்தேன்' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட ஒரு 'டி சர்ட்'ம் உண்டு! இவையும் சுற்றுலாப் பயணிகளைக்
குறிவைத்தே நடக்கும் ஒரு தொழிலாகிவிட்டது! நல்ல பாதுகாப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும், குதித்தபின், திரும்பிவரும்போது,
'குடல் எல்லாம் தொண்டை வரை' வந்த உணர்வுதானாம்! இந்த 'த்ரில்'க்கும் கூட்டம் வருகிறது!


அடுத்த வாரம் பார்க்கப் போவதுதான், தெற்குத் தீவின் மிகப் பெரிய ஊரான 'கிறைஸ்ட் சர்ச்'. இதுதான் நான் வசிக்கும் இடம்.


நன்றி: சங்கமம் 2004

28 comments:

said...

test

பின்னூட்ட நாயகியின் பின்னூட்டப்பெட்டி வேலை செய்யலையோன்னு பயந்துட்டேன்:-)

said...

இப்பவே வரனும் போல இருக்கு நியுசிலாந்துக்கு.. இந்தியாவில் இருந்து போக வர எவ்வளவு செலவாகும் அப்படினு ஒரு எஸ்டிமேட் சொல்லுங்களேன் அக்கா..

said...

துளசி உங்க பதிவைப் பற்றி தினமலர் செய்தி:-)
http://dinamalar.com/2005Oct02/flash.asp

said...

வீ.எம்,

இந்தியாவுலே இருந்து இங்கே வந்துபோக ஒரு ஸ்பெஷல் டூர் டிக்கெட் 32000ம்னு கேள்வி. இங்கிருந்து இந்தியாவரணுமுன்னா 60000 ! இது அநியாயம் இல்லே?

நல்ல நல்ல டீல் வருதாமே. ட்ராவலேஜண்டுகிட்டே கேட்டுட்டுச் சீக்கிரமா வாங்க.

கணெஷ்,

அந்தச் சுட்டியை திறக்கமுடியலையேப்பா(-:
என்னன்னு வந்திருக்கு? திட்டியா?

said...

தின மலரில்..

(ஆ) துளசிக்கு "வருஷம் ஒண்ணு'

தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள்...

இன்டர்நெட் பலரை எழுத்தாளர்களாக்கி உள்ளது என்பதற்கு துளசி கோபாலின் வலைத்தளம் நல்ல உதாரணம். கடந்த ஓராண்டாக அவருக்கு தோன்றிய விஷயங்களை எழுதத் தொடங்கினார். அன்று முதல் இன்றுவரை அவரது வெப்சைட்டை பார்வையிட்டவர்களை அவர் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளாக அவர் கருதுகிறார்.

ஒரு வேளை பொழுது போக்குக்காக, நண்பர்களுக்காக எழுதவில்லை என்றால், இன்று "டிவி' முன் உட்கார்ந்திருந்திருப்பேன் என்கிறார் துளசி. நல்ல கருத்துதானே:

என்று கூறி, உங்கள் வலைதளத்திற்கு உரு சுட்டியும் கொடுத்திருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்..

said...

அன்புள்ள ஜேகே,

விவரம் தந்ததற்கு நன்றிங்க.
ஆ துளசிக்கு வருசம் ஒண்ணு?

said...

அடடா! பத்திரிகையிலேல்லாம் துளசி பத்தி செய்தி வருது.. இவ்ளோ கிட்ட இருந்தும் இன்னும் தரிசனம் பண்ணாம இருக்கிறேனே!! ஐயகோ!!!! வேலையிலே யாராவது எடுத்துச் சொல்லி விடுமுறை பெற்றுத்தாங்க! விரைவிலே என் கண்கள் பிறவிப்பயனை அடையட்டும் :O)
(நியுஸீ பார்க்க ஆசைன்னு நேரடியா சொல்லீட்டுப் போறது! அதை விட்டுட்டு.. ஷ்ரேயாவுக்கே இப்பிடி எழுதுறது 2muchசாப் படுதுதான்!;O)

said...

ஷ்ரேயா,
இந்தப் பத்திரிக்கையிலே வந்தது எனக்கே ஆச்சரியம்தான்.
மாமியார் வூட்டுலே நம்ம மதிப்பு ஏறிடுச்சுல்லே:-)

இப்பத்தான் ஊருலே இருந்து பாராட்டி தனிமடல் வந்துச்சு.

said...

யாரங்கே!! துளசியைப் பற்றி எழுதிய தினமலர் நிருபருக்கு ஒரு கிளி கொடுங்க! (கிழி கொடுத்து கட்டுப்படியாகாது என்பதால் கிளி. களி கொடுக்காதவரை சரிதானே??) ;O)

said...

நியூசிலாந்திற்குப் போக முடியாத எங்களைப் போன்றவர்களுக்கு நியூசிலாந்தையே கண்முன்னே காட்டி வரும் துளசியம்மாவை தினமலர் நாளிதழ் பாராட்டியிருப்பது மிகப் பொருத்தமே. வாழ்த்துகள் அம்மா.

said...

//இந்தியாவுலே இருந்து இங்கே வந்துபோக ஒரு ஸ்பெஷல் டூர் டிக்கெட் 32000ம்னு கேள்வி. இங்கிருந்து இந்தியாவரணுமுன்னா 60000 ! இது அநியாயம் இல்லே?//

தகவலுக்கு சந்தோஷம் அக்கா, அப்படியே உங்க ஒட்டியானம் செலவ கம்மி பன்னி ஒரு 92,000 க்கு செக் அனுப்புனீங்கனா... உங்களுக்கு புன்னியமா போகும்.. ..
உங்க செக் க்கு சோர்ஸ் :திரு கோபால் அவர்களின் பேங்க அக்கவுன்ட்

said...

// துளசியம்மாவை//
இதை கவனிச்சீங்களா அக்கா????

said...

//// துளசியம்மாவை//
இதை கவனிச்சீங்களா அக்கா???? //

ஆகா! வீ.எம். இப்படிப் போட்டுக் குடுக்குறீங்களா? நான் அவங்க கிட்ட பெர்மிஷன் வாங்கீட்டேன் ஏற்கனவே.

said...

"நாம் திரும்பிப் போகவேண்டிய
பன்னாட்டு விமான நிலையம் " -
துளசி,
அப்படி ஒரு ஐடியாவில் இருக்கிறீர்களா? அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்...

said...

ராகவன்,

அது என்ன
//நியூசிலாந்திற்குப் போக முடியாத எங்களைப் போன்றவர்களுக்கு //

இங்கே இந்தியாவிலிருந்து கூட்டம்கூட்டமா டூரிஸ்ட்டுங்க வராங்களேப்பா?

கட்டாயம் நீங்களும் வரப்போறீங்க பாருங்க.

said...

வீ.எம்,

இந்தக் கணக்குலே பார்த்தா நீங்க ராகவனுக்கு 'அங்கிள்'

மாமான்னு எழுதலாமின்னு பார்த்தா..........:-)

said...

தருமி,

இந்த எண்ணம் கொஞ்சநாளா மனசுலே இருந்துக்கிட்டுத்தான் கொஞ்சம் படுத்துது.
அதுக்கே ஒரு பதிவு போட்டுறணும்:-)

said...

வீ.எம்,

இதுலே ஒரு 60,000 அடிக்க முடிவு செஞ்சாச்சா? :-)

இந்தியாவிலிருந்து வந்துட்டு அப்புறம் திரும்பிப் போகவும் சேர்த்துத்தான் 32000.

இங்கே டிக்கெட்டு எடுத்தா செலவு கூடுதல்

said...

//பின்னூட்ட நாயகியின் பின்னூட்டப்பெட்டி வேலை செய்யலையோன்னு பயந்துட்டேன்:-) //

வேலை செய்யூது!

பீட்டர் ஜாக்ஸன் இல்லாவிட்டால், நியுஸி நிலமை மாறியிருக்குமே, இல்லையா????

said...

ராமநாதன் தம்பி,

பீட்டர் ஜாக்ஸனுக்கு ஒரு வித்ததுலே நன்றி சொல்லவேண்டும்.
அவரோட படங்கள் இங்கே எடுக்கறதாலே நிறையப்பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குது.
சினிமான்றது எவ்வளவு பவர்ஃபுல் ஆனா மீடியம் பார்த்தீங்களா? உலக அளவுலே பேசப்படுதில்லே?

said...

//இதுலே ஒரு 60,000 அடிக்க முடிவு செஞ்சாச்சா? :-)//

ஹாஹா.. அக்கா, இங்கே இருந்து அவ்ளோ தூரம் உங்களை பார்க்க சும்மா கை வீசிட்டு வர முடியுமா? அது தப்பில்லையா ..உங்களுக்கு , கோபால் சாருக்கு.. அப்புறம் குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வர வேண்டாமா?? அதுக்கு தான் அந்த 60,000 :)

//மாமான்னு எழுதலாமின்னு பார்த்தா..........:-) //
என்னனு சொல்றது ....? எவ்வளவு நல்ல வார்த்தை இப்படி ஆகிப்போச்சே :(

//ஆகா! வீ.எம். இப்படிப் போட்டுக் குடுக்குறீங்களா? //
ராகவன் , போட்டுக் குடுக்கலைங்க.. ஒரு சின்ன வயசு பையன் உங்க வலைக்கு வந்துட்டு போயிருக்காருனு சொன்னேன்.. நீங்க அவங்களை அம்மா னு கூப்பிடலாம்.. உங்களுக்கு என்ன மிஞ்சி போனா ஒரு 13 , 14 வயதிருக்குமா?? :)

said...

// கட்டாயம் நீங்களும் வரப்போறீங்க பாருங்க. //

ஆகா! இப்பவே போகனும் போல இருக்கே. கண்டிப்பா ஒரு நாள் வரனும். lord of the rings எடுத்த இடமெல்லாம் பாக்கனும். அப்புறம் அந்த பெங்குயின் கூட்டங்கள்....

// ராகவன் , போட்டுக் குடுக்கலைங்க.. ஒரு சின்ன வயசு பையன் உங்க வலைக்கு வந்துட்டு போயிருக்காருனு சொன்னேன்.. நீங்க அவங்களை அம்மா னு கூப்பிடலாம்.. உங்களுக்கு என்ன மிஞ்சி போனா ஒரு 13 , 14 வயதிருக்குமா?? :) //
சின்னப் பையனா!!!!!!!!!!!! வெளங்கும். நீங்க சொன்ன ரெண்டு வயசையும் கூட்டி கூட ஒன்னு சேருங்க. (சின்னப்பையன்னு சின்னப்புள்ளதனமா இருக்குற என் எழுத்து நடையை வெச்சு சொன்னீங்களா?)

said...

என்னங்க இங்கே தகராறு? ஓ..... வயசுக்கணக்கா? எல்லோரும் இப்ப கூட்டல் கணக்குப் போடுங்க. 13+14+1= ?

said...

அடடே! கண்டுபிடிச்சிட்டீங்களா? இப்பவும் ஒங்களை துளசியம்மான்னே கூப்பிடலாம்தானே?

said...

இந்த எண்ணம் கொஞ்சநாளா மனசுலே இருந்துக்கிட்டுத்தான் கொஞ்சம் படுத்துது//
எல்லோருக்கும் இந்த 'மண்ணாசை' வந்திடுமோ?

said...

இடங்களை நேர்ல பாத்த மாதிரி இருக்கு .

said...

கல்வெட்டு,

சொன்னது கொஞ்சமே கொஞ்சம்தான். அதனாலே நேரிலே ஒரு நடை வந்து பார்த்துட்டுப் போயிறது 'பெட்டர்'

said...

தருமி,

இந்த 'மண்ணாசை'க்குன்னே ஒரு பதிவு போடணும்:-)

ராகவன்,

பேசாம ஊரோடொத்துவாழுங்க.
எங்க வீட்டுலே எங்க ச்சின்னப்பாட்டியை எங்க அம்மா, சித்திங்க, மாமாங்க எல்லாம் அக்கான்னே கூப்புடுவாங்க. அதான் சொல்லிட்டேன்.