Tuesday, October 18, 2005

நியூஸிலாந்து பகுதி 18

சாமியோ சாமி......

வானமே தந்தை, பூமியே தாய் இப்படி எப்பவோ எங்கியோ, எந்த ஜென்மத்திலோ கேட்டமாதிரி
எனக்கு ஞாபகம். உங்களுக்கு?


கடலுக்குகொரு கடவுள் ---Tangaroa
காத்துக்கொரு கடவுள் ---Tawhirimatea
காட்டுக்கொரு கடவுள் ----Tane

சண்டைக்கொரு கடவுள் --- Tumatauenga
சமாதானத்துக்கொரு கடவுள் -- Rongo
சாவுக்கு? இருக்கே, இதுக்கும் ஒரு கடவுள். ஆனா இது, இதுமட்டும்தான் பொண்ணு.
( அழிக்கறதுக்குத்தான் பெண்ணா?) Hine-nui-te-po

தந்தையான ஆகாயம் ---Ranginui
தாயான பூமி -------Papatuanuku

இந்த எல்லா சாமிகளுக்கும் மேலான ஒரு 'சுப்ரீம் சாமி ---- Lo

நம்ம குடும்பத்துலே இறந்துபோன மூதாதையர்க்கெல்லாம் திதி பாத்து தர்ப்பணம் கொடுக்கமுடியாமப்
போச்சுன்னா, எல்லாருக்குமா சேர்த்து மாளய அமாவாசை( அதான் புரட்டாசி, மாசம் வர்ற அமாவாசை
அட இப்ப நடக்குது!)க்கு செஞ்சுறலாம். இல்லேன்னா அவுங்க ஆன்மாவெல்லாம் அங்கே(?) பரிதவிச்சுக்கிட்டு
இருக்கும்னு நம்ம சாஸ்த்திரத்துலேகூட இருக்குல்லே? எப்படியோ முன்னோர்கள் எல்லாம் நம்மைக்
கவனிச்சுக்கிட்டு இருக்காங்கன்ற எண்ணம் இங்கேயும் இவுங்க மத்தியிலே இருக்கு.

மராய்( Marae)ன்னு சொல்ற இவுங்களோட சமூகக்கூடம் ரொம்பவும் புனிதமான இடம். இறந்துபோன
முன்னோர்கள் எல்லாம் அந்த உள்புற சுவர்களிலே இருந்து( மரச்சிற்பங்களா) இருந்து பெரிய
பெரிய பளபளப்பான வட்டக் கண்ணாலே பார்த்துக்கிட்டே இருக்காங்கன்னு ஒரு ஐதீகம்.

மவோரி கார்விங்ன்னு சொல்ற இந்த மரவேலைப்பாடுகள் ரொம்ப அபூர்வமானது. மொதல்லே பார்க்கறதுக்கு
ஏன்னமோ பூதம் பூதமா முழிச்சுக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டு இருக்குறமாதிரி( நம்ம கிராம தேவதைகள்?)
தோணும். ஆனா, எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுன்றீங்க? கவனமா செதுக்கப்பட்ட சுவர்ப் பலகைகள்.

இந்த செதுக்குச் சிற்பங்கள்( கார்விங்'குக்கு தமிழிலே என்னன்னு சொல்றது?) எப்படி ஆரம்பிச்சதாம்?

அதுக்கும் ஒரு 'கதை' இருக்கு.

ருஆ ன்னு ஒருத்தர் இருந்தார். அவரோட மகன், பேர் 'மனுருஹி' ஒரு நாளு மீன் பிடிக்கப் போனவன், திரும்பிவரவே
இல்லை. மகனைக்காணோமேன்னு பரிதவிச்ச அப்பா ருஆ அவனைத் தேடிப் போறார். கடலுக்குப் போனவனைக்
கடல்லேதானே தேடணும்? அவரும் தண்ணியிலே குதிச்சுத் தேடிக்கிட்டே போறார். கடலுக்கு அடியிலே
மரச்சிற்பங்கள் எல்லாம் செதுக்கிவச்சிருக்கற ஒரு பிரமாண்டமான ஃபாரெனூயி( மீட்டிங் ஹவுஸ்) இருக்கறதைக்
கண்டிபிடிக்கறார். அது, கடல் கடவுள் 'டங்காரோஆ'வோடது. உள்ளெ மெதுவாப் போய்ப் பார்க்கறப்ப, அவரோட மகனை
இந்தக் கடவுள் ஒரு மரச்சிற்பமா மாத்திவச்சிருக்குது. ருஆவுக்கு பயங்கரக் கோவம். ஆயிரம் இருந்தாலும் அப்பாவாச்சே.
பிள்ளைப்பாசம் இருக்காதா? அங்கேயே ஒளிஞ்சிருந்து, இன்னும் என்ன நடக்குதுன்னு பார்க்கறார்.

கடல் சாமி 'டங்காரோஆ' வோட பிள்ளைங்க எல்லாம் தூங்கறதுக்குக்காக அந்த இடத்துக்கு வராங்க.படுத்துத் தூங்கிட்டாங்க.
அப்ப ஓசைப்படாம நம்ம ருஆ போய் அவரோட மகன் மனுருஹியோட சிற்பத்தையும், இன்னும் கைக்கு எட்டுன
சில சிற்பங்களையும் எடுத்துக்கிட்டு, அந்த ஃபாரெனூயிக்கு தீ வச்சுடறார். அப்புறமும் அந்தக் கதவுக்குப் பக்கத்துலே
ஒளிஞ்சு நிக்கறார். கையிலே 'படு'(patu)ன்னு சொல்ற தடியை வச்சிருக்கார். எரியற தீயிலிருந்துத் தப்பிக்கறதுக்காக
கடல்சாமியோட பசங்க வெளியே ஓடிவராங்க. அவுங்க வரவரத் தடியாலே ஒவ்வொருத்தரையும் ஒரே போடாப்
போட்டுக் கொன்னுக்கிட்டே இருக்கார். அப்படியும் சிலர் தப்பிச்சுப் போயிடறாங்க. அப்படிப் போனவங்கதான் 'சுறா மீன்,
ஸ்டிங்ரே,ஆக்டோபுஸ், ஸ்நாப்பர்'ன்னு சிலர். இவுங்களை இப்பவும் கடலிலே பார்க்கலாம்.

வருத்தத்தோட கரைக்குத் திரும்புன ருஆ, தன் மகனோட சிற்பத்தையும், இன்னும் கொண்டு வந்திருந்த சிற்பங்களையும்
மத்த மவோரிங்களுக்குக் காமிச்சு, அவுங்களுக்கெல்லாம் இந்த சிற்பக்கலையான 'ஃபகைரோ( whakairo)வைச்
சொல்லிக்கொடுத்தார். (இவுங்க மொழியிலே wha என்பதை ஃப ன்னு உச்சரிக்கிறாங்க)


*************************************************************************************

8 comments:

said...

ஹையா..இன்னும் ராமனாட்தன்கூட வரலை...நாந்தான் wharst-ஃப்ர்ஸ்ட்! (மாவோரில wha அப்டிங்கிறத இப்படித்தான் சொல்லுவாங்கன்னு டீச்சர் சொன்னாங்க, சரியா டீச்சர்?)

said...

தருமி,

கிளாஸுக்கு ஃபர்ஸ்ட்டா வந்ததுக்குப் பாராட்டுக்கள்.

//நாந்தான் wharst-ஃப்ர்ஸ்ட்! (மாவோரில wha அப்டிங்கிறத இப்படித்தான் சொல்லுவாங்கன்னு டீச்சர் சொன்னாங்க, சரியா டீச்சர்?) //

குதிரைக்கு குர்ரம்னா ஆனைக்கு அர்ரமா?

இது கொஞ்சம் worst ஆப் போச்சுல்லே!

ஆமா., கதைங்க புரியுதா?

said...

துளசி
என்ன ரசிகர் கூட்டம் குறைவா இருக்கு. ஊரெல்லாம் சுத்திட்டு கடைசியா வரமேன்னு பார்த்தேன், ஆனாலும் முன்னுரிமை கிடைச்சிட்டுது.

said...

தாணு,

எல்லா'பசங்களும்' கிளாஸுக்கு ஒரே நேரத்துலே வராங்களா என்ன? எல்லாம் கொஞ்சம் முன்னே பின்னேதான்.:-)

வேற் ஒரு 'தீ' பிரமாண்டமா எரியுதே. அதுலே இந்த 'விளக்கு'(!) இருக்கற இடம் தெரியாம இருக்கு.

said...

அடேங்கப்பா என்ன கத...என்ன கத....ஆனா நல்லாத்தான் இருக்கு.

கதை சொல்வதும் அறிவு வளர்ச்சி என்கிறது அறிவியல். ஒங்களுக்கு எவ்வளோ அறிவுன்னு எப்படி அளக்குறது!!!!!!!!!!!!!!!

said...

ராகவன்,
அறிவை அளக்க இன்னும் கொஞ்சநாளுலே எதாவது வந்துரும்:-)

ஆமா, இது லொள்ளா இல்லே நிஜமா?

said...

அக்கா,
இந்த மாதிரி விளங்காத பேரெல்லாம் கொடுத்தா உங்க பதிவையும் தூக்கிடப் போறாங்க.. ;)

-------
இதப் பாத்தாச்சா?
இ.பி: 5

மணி நாலரையாச்சு! குட் நைட்!

said...

அய்யய்யோ, நிஜமாவா? மவோரிங்க பேரே அதுதானே நான் எப்படி அதையெல்லாம் மாத்தமுடியும்?(-:

பேசாம தமிழ்சினிமாக்காரங்க பேரை வச்சுறவா?:-))))