Wednesday, September 14, 2005
டாக்டர் டாக்டர்
நம்ம ராமநாதனோட பதிவுலே இருக்கற பின்னூட்டங்களைப் படிச்சதும் அதிலேயும் குறிப்பா கணேஷ்( கோகணேஷ்)
எழுதுனதைப் படிச்சவுடனே எனக்கும் ஒரு டாக்டரைப் பத்தி எழுதணுமுன்னு தோணுச்சு.
எல்லாம் கொசுவத்தி எடுத்துக் கொளுத்தி வச்சுகுங்க. ச்சின்னது போதும்!
அப்ப நாங்க பூனாவுலே இருந்தோம். நாங்க இருந்தது ஒரு பஜார். (அதான் சிலப்ப பஜாரித்தனம் வந்துருதோ?
போட்டும்) அந்தக் கடைத்தெருவிலேயே ஒரு க்ளினிக் இருந்தது. பத்தடிக்கு எட்டடின்னு ஒரு சின்ன இடம்தான்.
அதையே ரெண்டாத்தடுத்து வச்சிருந்தாங்க. முன்னாலே நீளமா ரெண்டு பெஞ்சு எதிரும் புதிருமா. பாதிபெஞ்சு
வெளியே ஃப்ளாட்பாரத்திலே நீட்டிக்கிட்டு இருக்கும். உள்ளே ஒரு மேஜை& நாற்காலி.அடுத்து திரை போட்டு மறைச்ச
இடத்துலே ஒரு எக்ஸாமினிங் டேபிள். பெருசாக் கற்பனை எல்லாம் வேணாம், அதுவும் பெஞ்சேதான். ஆனாக்
கொஞ்சம் அகலம் ஜாஸ்தி. காலையிலே 10 முதல் 2 வரை.அப்புறம் மாலையிலே 6 முதல் 9/10வரை. எப்படியும்
ஒரு நாளைக்கு நூறு, நூத்தம்பது ஆளுங்க வந்துருவாங்க.
காலையிலே ஒம்போது மணிக்கே நோயாளிங்க கூட்டம் திபுதிபுன்னு வந்துரும். அங்கே வேலை செய்யற பையன், கடையை, ச்சீச்சீ
க்ளினிக்கைத் திறந்து வச்சு, வந்தவங்களுக்கெல்லாம் டோக்கன் கொடுத்துருவான். ச்சின்னப்பையந்தான். ஒரு 13
இல்லேன்னா 14 வயசு இருக்கும். டீன் ஏஜுக்கே உரிய சுபாவங்களும், பழக்கங்களும் அவன்கிட்டே குறைவில்லாமல்
இருந்துச்சு. அப்பப்பத் திரையத் திறந்துகிட்டு உள்ளே போய் அங்கே 'வாஷ் பேசின்' இருக்கற சுவத்துலே
மாட்டியிருக்கற கண்ணாடியிலே 'அழகு' செஞ்சுக்கிட்டு வருவான். சீப்பும் கையுமாத்தான் தரிசனம்.
டாக்டர் பேரு 'அஷோக் குலிவால்'.ச்சின்ன வயசுதான். ஒரு பஜாஜ் ஸ்கூட்டர்லே வருவார் பத்துமணி வாக்கிலே. அவரு தனியாக்
கம்பவுண்டரு வச்சுக்கலே. நம்பர் பிரகாரம் பேஷண்டைப் பாப்பார். அந்தப் பையனும் நம்பர்ங்களைப் பார்த்து
மராத்திலே பேசிக்கிட்டே நம்பருங்களைச் சத்தமாக் கூப்பிட்டுகிட்டே வரிசையா அனுப்பி வைப்பான்.
எல்லாம் அக்கம்பக்கத்துலே இருக்கற ச்சின்ன காவ்( கிராமம்)லே இருந்து வர்றவங்க.
அதனாலே ஹிந்தி தெரியாது. மராத்திதான் பேசுவாங்க. நம்பர் சீட்டை வாங்கி இடுப்புலே சொருகிக்கிட்டு
அக்கம்பக்கம் இருக்கற கடைகளுக்கு உலாப் போறதென்ன, டீக்கடையிலே போய் டீ வாங்கி, சாஸர்லே ஊத்தி
ஆறவச்சு ஆத்திஆத்திக் குடிக்கிறதென்ன, புள்ளைங்களுக்கு வெள்ளாட்டுக் காட்டறேன்னு ரோட்டோரக்கடைகளுக்குக்
கொண்டு போறதென்ன, ஒண்ணும் இல்லேன்னா இருக்கவே இருக்கு 'தம்பாக்கு'!
இத்தினிபுகையிலையையும், கொஞ்சம் சுண்ணாம்பையும் எடுத்து( எல்லாம் இடுப்புலே ஒரு பையிலே அடக்கம்.
குழலாட்டம் ஒரு ச்சின்னத் தகரடப்பியிலே சுண்ணாம்பு, ஒரு காகிதப்பொட்டலத்துலே புகையிலை) இடது
உள்ளங்கையிலே வச்சு, வலது ஆள்காட்டி விரலாலே தேய்தேய்ன்னு உருட்டித் தேய்ப்பாங்க.அப்புறம் அதைச்
சுருட்டி அப்படியே எடுத்து,வாயை ஆன்னு தொறந்து கைக்கு எட்டுறவரை உள்ளே கொண்டுபோய் கடவாய்ப்
பல்லுக்குப் பக்கத்திலே கன்னத்துலே அதுக்கிட்டாங்கன்னா அவ்வளோதான். புளிச் புளிச்சுன்னு எச்சி துப்பிக்கிட்டே
ரோடோரமா குத்துக்கால் போட்டு உக்காந்துக்கிட்டு 'கப்பா மாரி'க்கிட்டு இருப்பாங்க. பூனாக் குளுருலே இளவெயிலுக்கு
இதமா இருக்கும்.
ஜென்மமே சாபல்யமானதுபோல முகத்துலே ஒரு நிம்மதி, புன்னகை எல்லாம் குடிவந்துரும்! ஒரு நாளாவது சரியான
நம்பர் உள்ளே போனதா இருக்காது. பையன் கத்தக் கத்த வேற யாராவது கிட்டேப் போய் நிப்பாங்க. கையைத்திறந்து
நம்பரைக் காட்டுனா அதுக்கும், இவன் கூப்புட்டதுக்கும் சம்பந்தமே இருக்காது. வேற வழி இல்லாம அவுங்களை உள்ளெ
அனுப்பிருவான். இதுதான் அங்கெ வாலாயம்.
நோயாளியை 'ஸ்டெத்'வச்சுப் பார்த்துட்டு, தண்ணிமருந்தைக் (கலக்கிவச்சிருக்கறது)குப்பியிலே ஊத்திக் கொடுத்துட்டு
ரெண்டு ரூபா வாங்கிக்குவார் டாக்டர். ச்சும்மாச் சொல்லக்கூடாது, கைராசி! நம்மூர்லே வெளியே வர்ரதுக்கு முன்னாலே
என்ன சாப்புடணுமுன்னு டாக்டரைக் கேக்கற வழக்கம் இருக்குல்லே, அதை மட்டும் மறக்காம ஒவ்வொருத்தரும்
கேப்பாங்க. அவரும் சளைக்காம'கிச்சடி'ன்னு சொல்வார். சகலருக்கும் கிச்சடிதான். பாரபட்சமே கிடையாது இதுலெல்லாம்!
ஒரு ஜலதோஷம், காய்ச்சல்ன்னா நாங்களும் அங்கேதான் போவோம். வீட்டுக்கு எதிர்வரிசை. இதைவிட 'ஹேண்டி'யா
வேற என்ன இருக்கு? நமக்கோ அங்கே ஸ்பெஷல் மரியாதை. மராத்தி தெரியாததாலே இங்கிலிப்பீஸ்லேதான்
பேசறது. அப்ப ஹிந்தியும் தகராறாச்சே. டாக்டர் வந்தாச்சான்னு கேட்டாவே போதும்,பையன் ஒரு நடுக்கத்தோட நம்மளை
உள்ளெ போகச் சொல்லிருவான்.
டாக்டர் நம்மைச் செக் பண்ணிட்டு, மருந்து மாத்திரை எழுதிக் கொடுப்பாரு. ரெண்டுகடை தள்ளி இருக்கு மெடிகல் ஸ்டோர்ஸ்.
நமக்கு ஒருநாளும் தண்ணி மருந்து பாக்கியம் இல்லை. எங்களுக்குள்ளெ நடக்குற ' இங்கிலிப்பீஸ் உரையாடல்'
திரைக்கு அந்தப் பக்கம் கூடி இருக்குற ஜனங்களால் ஆவலாகக் கவனிக்கப்படும். வெளியே வந்தவுடனே சிலர்
'சலாம் மேம்சாப்' சொல்லுவாங்க. ரொம்ப இன்னொசெண்டான மக்கள். நமக்கும் அதே ரெண்டு ரூபாதான். எப்பவாவது
ஊசி போட்டா அஞ்சு ரூபா. ஒரே தடவையிலே சரியாவும் போயிரும்!
நமக்குத்தான் கால்லே சக்கரமாச்சே. அந்த ஊரை விட்டுப் போயாச்சு. மூணுவருஷம் கழிச்சு, ஒரு ஹாலிடேக்கு
அங்கே போயிருந்தோம். அப்ப நாம முந்திக் குடியிருந்த இடத்துலெ இருக்குற பழைய நண்பர்களைச் சந்திக்கப்
போயிருந்தொம்.( எனக்குத்தான் எங்கே போனாலும் ச்சீக்கிரம் ஒரு நட்புவட்டம் கிடைச்சிருமே!)
அப்ப பேச்சுவாக்குலே, அஷோக் டாக்டர் எப்படி இருக்கார்? கல்யாணம் ஆயிருச்சா? க்ளினிக் இன்னும் நடக்குதா?ன்னு
கேட்டேன்.
அப்ப திடுக்கிடற மாதிரி சொல்றாங்க, 'அவர் இறந்து போயிட்டார்'னு. அய்யய்யோ என்னாச்சுன்னு கேட்டதுக்கு,
ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சாம். ஒரு நாளு பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போறப்ப எதிர்லே வந்த லாரி மோதிருச்சாம்.
ஆள் ஸ்பாட்லேயே அவுட்டாம். அய்யோ....
அப்புறம் இன்னொரு திடுக்.
அவர் 'டாக்டரே' இல்லையாம். போலி? உண்மைக்குமே அவர் கம்பவுண்டராம்! அடப்பாவமே.
Posted by
துளசி கோபால்
at
9/14/2005 08:36:00 AM
21
comments
Monday, September 12, 2005
ஏங்க, வாங்கிறலாமா?
" எதாவது வாங்கணுமா? சொல்லு. போறப்ப ரெண்டு நாள் அங்கெ தங்கறேன்தானே. அப்ப நேரம் இருக்கும்."
" இல்லே, போறப்ப வாங்குனா அதையெல்லாம் எடுத்துக்கிட்டு உங்க டூர் முடியறவரை தூக்கிக்கிட்டு அலையணும்.
அதனாலே திரும்ப இங்க வர்றதுக்கு முன்னாடி வாங்கினா கொஞ்சம் செளகரியமா இருக்கும்"
" என்ன வேணுமுன்னு சொல்லேன். சீக்கிரம் கெட்டுப் போற சாமானா?"
" ச்சீச்சீ, கெடவே கெடாதுங்க"
" அப்புறம் என்ன? போறப்பவே வாங்கிடறேன்."
" அதுவந்து......."
" சீக்கிரம் சொல்லும்மா, ஏகப்பட்ட வேலை இருக்கு. இன்னும் துணிமணி பேக்கிங்கே ஆரம்பிக்கலை"
"திரும்ப வர்றப்ப எவ்வளவு நேரம் இருக்குமுன்னு சொல்லுங்க"
" அங்கே பாரு, மேசை மேலே ஐட்டினரி இருக்கு. அதுலே பாரேன்"
" ம்ம்ம்ம்...... ஒரு அஞ்சுமணி நேரம் இருக்குன்னு அந்த 'நரி'லே போட்டுருக்குங்க. அதுலே ஒரு மணி நேரத்தைக்
கழிச்சாலும் நாலுமணி இருக்கே. டாக்ஸி எடுத்துக்கிட்டு நேரே செராங்கூன் ரோடு போய் வாங்கிட்டு வந்துரலாம்."
"இன்னும் என்னா வேணுமுன்னு சொல்லலியே?"
" ஒண்ணு செய்யுங்களேன். போறப்ப நேரம் இருக்கே, அப்ப கடையிலே போய் செலக்ட் செஞ்சு வச்சிட்டு, திரும்ப
வர்றதுக்கு முன்னாலே போய் கலெக்ட் செஞ்சுக்கலாமே"
" அதுவும் நல்ல ஐடியாதான். ஆனா நான் வேலை முடிச்சு ஹோட்டலுக்கு வரவே ஒம்போது மணியாயிரும்.
முஸ்தாபா இப்பல்லாம் 24 மணி நேரம் திறந்துதானே இருக்கு,வாங்கிரலாம். அங்கேதானே வாங்கணும்?"
" ஆமாங்க. ஆனா இப்பப் புதுசா பின்னம்பக்கம் ரோடுலே திறந்துருக்கற கடையிலே தாங்க வாங்கணும்."
" அது நகைக் கடையாச்சேம்மா. வாங்கிரலாம் வாங்கிரலாம். உனக்கா, பொண்ணுக்கா? கம்மலா, மோதிரமா?
மோதிரம்னா சரியான அளவைச் சொல்லு. போனமுறை மாதிரி 'லூஸ்'ஸா இருந்துரப்போகுது!"
"இருங்க , இஞ்சு டேப்பைக் கொண்டு வாரேன்"
" மோதிரத்துக்கு எதுக்கு இஞ்சு டேப்புல்லாம்? அளவு மோதிரத்தைக் கொண்டா, என் விரல்லே போட்டுப் பாத்துக்கறேன்"
" இல்லீங்க. என் தலையோட சுத்தளவைப் பாக்கணும்"
" எதுக்கு?"
" நம்மல்லாம் அப்பப்பக் கோயிலுக்குப் போறமுல்லே?"
" ஆமாம். அதுக்கும், தலைக்கும் என்ன சம்பந்தம்?"
" கோயிலுக்குப் வர்ற பெண்ணைப் பார்த்தா அம்மனே நேரில் வர்றான்னு நினைச்சுக் கையெடுத்துக் கும்பிடுற
மாதிரி இருக்கணுமாம். நம்ம மதுரை ஆதீனம் சொல்லியிருக்கார். என்ன இருந்தாலும் பெரியவரு. அவர்பேச்சை
எப்படிங்க கேக்கமா இருக்கமுடியும்? அதான் ஒரு கிரீடமும், பட்டைபட்டையா நெக்லேஸ், கல்லுவச்ச மாங்கா
மாலை, வைரத்துலே ஒரு ஒட்டியாணம், ரெண்டு கைநிறைய அடுக்கடுக்கா வளை, இன்னும்.... கொஞ்சம் இருங்க. சாமிப் படத்தைப் பார்த்து லிஸ்ட்
சொல்றேன். நீங்க உங்க எலெக்ரானிக் டைரிலே குறிச்சுக்குங்க. மறந்துறப்போகுது. கொஞ்சம் கனம்குறைஞ்சதாப்
பாருங்க. எல்லாம் சேந்து ஒரு 200 பவுனுக்குள்ளே அடங்கறமாதிரி. கனம் கூடுனா கிரீடம் தலையை அழுத்தி அந்த
வலிவேற வந்துறப்போகுது? என்னங்க நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டேப் போறேன்,ஒரு 'உம்'கூடப் போடாமப்
பொட்டியை அடுக்கிட்டே இருக்கீங்களா?"
" ..............................."
" ஐய்யய்யோ, என்னங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படிப் பேச்சு மூச்சில்லாமக் கிடக்கறீங்க?என்னங்க என்னங்க...."
Posted by
துளசி கோபால்
at
9/12/2005 01:28:00 PM
74
comments
