ஆளுக்கு ஒன்னு அறுபது கொடுத்து டிக்கெட் வாங்கிக்கிட்டு மோனோ ரயில் ஸ்டேஷனுக்குள் நுழையறோம். பரவாயில்லை. சுத்தமாகத்தான் இருக்கு. எந்தப் பக்கம் போகணும் என்ற தகவல்கள் விளக்கமா இருக்கு.
எதிர்ப்பக்கம் போகும் வண்டி ஓசைப்படாமல் வந்து , நின்னு, புறப்பட்டது. ரெண்டு பெட்டிகள்தான். ரெண்டையும் இணைச்சுருக்காங்க. நம்ம சிங்காரச் சென்னையிலும் இந்த ரயில் வரப்போகுது என்பதால் கவனிச்சுப் பார்த்தேன்.
இங்கே குவாலா லம்பூருக்கு மோனோ ரயில் வந்து இந்த ஆகஸ்ட் மாசம் 31 தேதிக்கு சரியாப் பத்துவருசம் ஆகுது. பொதுவா முக்கியமான நிகழ்வுகள் இந்தத் தேதிக்குதான் ஆரம்பிக்கும். அது என்ன அதிர்ஷ்ட நாளான்னா...... அப்படித்தான் சொல்லணும். ஆகஸ்ட் 31,மலேசிய நாட்டின் சுதந்திரத் திருநாள்.
நகரின் வடக்கு, தெற்காக ரயில்பாதை. மொத்தம் 11 ஸ்டேஷன்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சால் இரவு பதினொன்னரை வரை ஓட்டம். பீக் அவரில் அஞ்சு நிமிசத்துக்கு ஒன்னு. மற்றநேரங்களில் பனிரெண்டு நிமிசத்துக்கு ஒன்னு. 244 நபர்கள் ஒரே சமயம் பயணிக்கலாம். ஆனால் இருக்கைகள் 48 நபர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் ஸ்டேண்டிங். வயசானவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இருக்கை ஒதுக்கீடுன்னு தனியா இல்லை என்றாலும் மக்கள்ஸ் புரிதலோடு அவுங்களுக்கு இடம் கொடுத்துடறாங்க.
மொத்தம் பத்து ரயில் வண்டிகள் தினம் போய் வந்துக்கிட்டு இருக்கு.
இதுவரை விபத்தே நடக்கலைன்னு நினைச்சுடக்கூடாது. மோனோ ரயில் பாதை அமைச்சு அதைப் பொதுமக்கள் பயனுக்குத் திறந்து விடுமுன் சோதனை ஓட்டங்கள் ஒரு வருசமா நடந்துக்கிட்டு இருந்த சமயம் அது. ரயிலில் இருக்கும் 13.4 கிலோ எடையுள்ள ஸேஃப்டி வீல் கழண்டுக்கிச்சு. நேரா கீழே விழுந்தது அங்கே அகஸ்மாத்தா நடந்து போய்க்கிட்டு இருந்த மனிதர் தலையில். இவர் டேவிட் செல்லையா என்ற ஒரு தமிழ்காரர். (போச்சுடா..... தலையில் விழுந்தாலும் அது தமிழ்த்தலையா இருக்கணுமா!) இவர் ஊடகவியலாளரும் கூட! மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றவர், ரயில் கம்பெனி மேலே வழக்கு தொடுத்தார்.
இப்படிப்பட்ட ஒரு விபத்து நடக்கணுமுன்னா ஆறு வித இணைப்பு அகற்றப்படணும். யாரோ 'விஷமிகள்' போல்ட்டை கழட்டி இருக்காங்க:( ரயிலில் இருந்த 23 பாதுகாப்பு சக்கரங்களையும் பரிசோதிக்கத் தவறிய மோனோ ரயில் கம்பெனி, தங்கள் தவறை உணர்ந்து பாதிக்கப்பட்ட டேவிட் செல்லையாவுக்கு ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாக் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை செட்டில் செஞ்சுக்கிட்டாங்க.
அடுத்த விபத்து 2005 இல் ரப்பர் டயர் வெடிச்சதால் ஏற்பட்டது. ரெண்டு பெண்மணிகளுக்கு கையிலும் காலிலும் அடிபட்டது. இரவு எட்டரை மணி என்பதால் ரயிலில் கூட்டமில்லை.வெறும் முப்பது நபர்கள்தான்.
மூணாம் விபத்து போனவருசம் ஆகஸ்ட் 11, 2012லே நம்ம டுன் சம்பந்தன் ஸ்டேஷனுக்குச் சமீபம். ப்ரேக்டவுன் ஆனதும் பவர் சப்ளை நின்னு போயிருக்கு.183 பயணிகள். ஏஸி வேலை செய்யாமப்போய்...... மூச்சு முட்டத்துடங்கி, கடைசியில் ரயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைச்சுருக்காங்க பயணிகள். பாவம்....ரெண்டு மணி நேரம் பொறியில் அகப்பட்ட எலிகளா ஒரே அவஸ்த்தை:( விபத்தை ஆராய்ஞ்சு, பவர் சப்ளையில் கோளாறுன்னு கண்டு பிடிச்சாங்க.
இது நடந்து ஆறே நாளில் நம்ம புகிட் பின்டாங் அருகில் இன்னொரு ப்ரேக் டவுன்.200 பயணிகள். நல்லவேலையா ஏஸி வேலை செஞ்சது. அரைமணி நேரத்தில் பழுதை சரி செஞ்சுட்டாங்க.
இப்ப எதுக்கு விபத்துக்களைப் பற்றிய விஸ்தரிப்பு? நம்மூருக்கும் மோனோ ரயில் வரப்போகுதில்லையா? அதனால் என்ன மாதிரி விபத்துக்கள் நடக்கலாமுன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லதுன்னுதான். என்னதான் கவனமா இருந்தாலும் விபத்துகள் நேருவது சகஜம்தானே? அதுவும் பவர் சப்ளை சீராக இல்லைன்னா?
நாமும் டுன் சம்பந்தன் ஸ்டேஷனில் இறங்கி வெளியே சாலைக்கு வந்தோம். ரயிலுக்குள் ஏஸி சில். வெளியே வேகாத வெயில்! நல்லவேளை நடைபாதைக்கு மேற்கூரை போட்டு வச்சுருக்காங்க. நடைபாதை நடைபாதையாகவே இருக்கு என்பது சிறப்பு. கொஞ்ச தூரம் போனதும் சாலைகள் சேரும் மையப்பகுதி. இது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதை உடனே உறுதிப்படுத்துச்சு! சென்னை வாசனை ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு:(
நாற்சந்தி மூலையில் பூமாலைக் கடைக்காரரிடம் சரவணபவன் எங்கே இருய்க்குன்னு விசாரிச்சால் இடதுபக்கம் கை காமிக்கிறார். கிட்டவா தூரமான்னால்..... தூரம்தானாம்:( வேற எதாவது நம்ம உணவுக்கடை இருக்கான்னா.. இந்தப்பக்கம் காவேரி இருக்குன்னு கை காமிச்சார். நாம் இப்போ வந்த சாலையின் மறுபக்கத்தில் பிரியும் தெரு. அடடா குதிரைக் கண்பட்டை போட்டுருந்தோம்:-)
இங்கே பொதுவா ஸ்பெல்லிங் பிரச்சனையே இல்லை. polis, Kedai, Teksi, Restoran, Sentral இப்படி எல்லாம் படு சிம்பிள் , யூ ஸீ!
சாலையைக் கடந்து எதிர்வாடைக்குப்போய் காவேரியை நோக்கி நடந்தோம். 1986 ஆண்டு ஆரம்பிச்சதாம். ஆச்சே 27 வருசம்.
அட! வடை! வெப்ப விளக்கு போட்ட கண்ணாடிப்பொட்டியில் இட்லியும் வடையும் 'ஹை'ன்னுச்சு. மனசின் குரல், 'ஆசையை அடக்கு'.
ரெஸ்டோரன்னில் வாடிக்கையாளர் யாருமே இல்லை. மணி ஒன்பது. வர்றவுங்க வந்துட்டுப் போயிருக்கலாம். தனக்கு ஒரு இட்லியும் வடையும் வாங்கிக்கிட்டு, ரவா தோசைக்கு சொன்னார் கோபால். நான் ஒரு சாதா ரோஸ்ட். சட்னி, சாம்பார் ஐட்டங்களுக்கான தூக்குவாளிக்கொத்து ஒன்னு வந்து மேசையில் உக்கார்ந்தது. ஹைய்யோ! எவ்ளோ நாளாச்சு இதையெல்லாம் பார்த்து! நம்மூரில், கூடுதலாக் கொஞ்சம் சாம்பார் கேட்டால் சின்ன ப்ளாஸ்டிக் கிண்ணத்துலே இல்லே கொண்டாந்து தர்றாங்க!(எனக்கு வெறும் தோசையே போதும். காரமா இருக்குன்னு சாம்பார் சட்னிக்குத் தடா.)
உனக்கு வடை பிடிக்குமே, ஒன்னு வாங்கிக்கன்னு வற்புறுத்துனார் இவர். வாடிக்கையாளரைப் பார்த்த அதீத ஆர்வத்தில் சூடாப்போட்டுக் கொண்டு வரேன்னு பரிமாறும் நபர் உள்ளெ ஓடுனார். பார்த்தால் மொறுமொறு வடை! ரெண்டாவது விள்ளலில் தெரிஞ்சு போச்சு, வேகாமக் கிடக்கு:( ரொம்பச் சூடான எண்ணெயில் போட்டால் இப்படித்தான் ஆகும்.
அசடு வழிஞ்ச பணியாளர், வேற ஒன்னு போட்டு எடுத்து வரேன்னார். நோ சொன்னேன். கோப்பியா தேத்தண்ணியான்னவருக்கு ரெண்டாவதைச் சொன்னேன். பியர் மக் போல் உள்ள பெரிய கண்ணாடி மக்கில் ஆளுக்கு அரை லிட்டர் வந்துச்சு. சும்மாச் சொல்லக்கூடாது..... நல்ல சுவை. அதுக்காக 500 மில்லி அதிகமில்லையோ? பாலுக்கு இங்கெல்லாம் பவுடர்தான்:( ஃப்ரெஷ் பாலையெல்லாம் சிங்கைக்கு ஏற்றுமதி செஞ்சுடறாங்க போல!
கல்லா காதுக்கெட்டும் தூரத்தில். வேகாத வடைக்குக் காசு வாங்கிக்கலை. எங்கிருந்து வர்றீங்கன்னார் அவர். ஊரிலே இருந்துன்னார் இவர். இந்த ஊர் சமாச்சாரம் நமக்கு ஃபிஜியிலேயே பழக்கம். அங்கும் தமிழர்களுக்கு ஊர் என்றால் அது தமிழ்நாடுதான்.
'எல்லாம் சுத்திப் பார்த்துட்டீங்களா'ன்னார் கல்லாக்காரர். 'இன்னும் இல்லை. நேத்து ராத்திரிதான் வந்தோம். முதலில் 'பசியாறிட்டு'ப் போகலாமுன்னு இங்கே வந்தோம்' என்றேன். எனக்கும் ஏகப்பட்ட மலேசிய நண்பர்கள் இருக்காங்கல்லே:-)
பக்கத்துலே ரெண்டு தெரு தள்ளிப்போனா ஒரு பெரிய கோவில் இருக்கு. நல்லா இருக்குமுன்னார்.
முருகனாம்! ஓக்கே!
அப்பதான் ஞாபகம் வந்துச்சு..... பூமாலைக் கடைக்காரர் இருக்காருன்னா பக்கத்தில் கோவில் இருக்கணுமே! என்ன கோவிலுன்னு விசாரிக்காம விட்டுட்டமே:(
ஆனால் பூக்கடைக்கு எதிரால்லே இப்ப போய்க்கிட்டு இருக்கொம்!
தொடரும்....:-)
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.