தேசிய நெடுஞ்சாலை எண் ஒன்று. இன்றைக்குப் பயணம் இதில்தான், தென் திசை நோக்கி. சரியா 30 கிலோ மீட்டர். அறையைவிட்டுக் கிளம்புனதும் ஒரு கிலோ மீட்டரில் இருக்கும் 'மேரி'யம்மன் கோவிலுக்குப்போயிட்டுப் போகலாமுன்னு போனால் கோவில் கதவு சாத்திக்கிடக்கு. படிக்கட்டுவரை போய் கதவைத் தள்ளிப் பார்க்கலாமான்னா ஒரே மழை. காருக்குள் இருந்தே கும்பிடு ஒன்னு போட்டுட்டு ரெண்டு க்ளிக்கிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
கடலை ஒட்டிய சாலைதான். வளைவுகளில் இடம் வலமுன்னு கடல்கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு. நல்லநாளிலேயே நாழிப்பால். இப்போ கனத்த மழை வேற. சாலை ஜிலோன்னு கிடக்கு. எப்பவாவது ஒரு வண்டி நானும் வரேன்னு தலைவிளக்கைப் போட்டுக்கிட்டுக் கடந்து போகும்.
ஊர் எல்லையில் வரவேற்பு போர்டு. ப்ளஃப் அடிக்காமச் சொல்றேன் ஊர் பேரே ப்ளஃப்தான். இடப்பக்கம் பிரியும் ரோடு நம்மை துறைமுகத்தில் கொண்டு தள்ளிருது. சௌத் போர்ட். சின்ன, பெரிய கப்பல்கள் ரெண்டு மூணு, ஏராளமான படகுகள், காற்றின் ஒலியோடு போட்டிப்போடும் கடலலைகள் ஓசை.

கடலை ஒட்டிய சாலைதான். வளைவுகளில் இடம் வலமுன்னு கடல்கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு. நல்லநாளிலேயே நாழிப்பால். இப்போ கனத்த மழை வேற. சாலை ஜிலோன்னு கிடக்கு. எப்பவாவது ஒரு வண்டி நானும் வரேன்னு தலைவிளக்கைப் போட்டுக்கிட்டுக் கடந்து போகும்.
ஊர் எல்லையில் வரவேற்பு போர்டு. ப்ளஃப் அடிக்காமச் சொல்றேன் ஊர் பேரே ப்ளஃப்தான். இடப்பக்கம் பிரியும் ரோடு நம்மை துறைமுகத்தில் கொண்டு தள்ளிருது. சௌத் போர்ட். சின்ன, பெரிய கப்பல்கள் ரெண்டு மூணு, ஏராளமான படகுகள், காற்றின் ஒலியோடு போட்டிப்போடும் கடலலைகள் ஓசை.
கடல்மியூஸியம் ஒன்னு இருக்கு. 10 மணிக்குத்தான் திறப்பாங்களாம். 35 நிமிசம் இருக்கு. அதுவரை தேவுடு காக்கணுமா என்ன? கொஞ்ச தூரத்தில் Stewart Island Experience Ferry Terminal இருந்துச்சு. உள்ளே நுழைஞ்சு விவரம் கேட்டுக்கிட்டோம். ஒம்பதரைப்படகு கிளம்ப ரெடி. ஓடிப்போய் ஏறலாமா? ஊஹூம். நடக்காத காரியம். குறைஞ்சது 20 நிமிசம் முன்னாலே வந்து செக்கின் செய்யணுமுன்னு விதி. எட்டிப்பார்த்தேன். படகு சொன்ன நேரத்துக்கு டாண்ணு புறப்பட்டுப்போகுது!
இன்வர்கார்கிலில் இருந்து ஆறு பேர் பயணிக்கும் சின்ன விமான சர்வீஸ் ஒன்னு இருக்கு. குறைஞ்சபட்சம் 2 பேர் இருந்தால்தான் வண்டியை வெளியே எடுப்பாங்க. அதுலே போகலாமான்னு ஒரு நினைப்பு . ஆனால் இப்படி மழை அடிக்கும்போது நாங்க ரெண்டு டிக்கெட்ஸ் இருந்தாலுமே கேன்ஸலாக வாய்ப்பு உண்டு. பேசாம ஃபெர்ரியே எடுக்கலாம். என்னுடைய ஸீ சிக்னெஸுக்கு முன் ஜாக்கிரதையா மாத்திரைகள் எல்லாம் பயணத்துக்கு வாங்கி வச்சுருக்கேன். அது அறையிலே இருக்கு. பேசாம நாளைக்கு பதிவு செஞ்சுக்கலாம். வருசம் முழுசும் காலை 8 மணிக்கு ஒரு போட் இருக்குன்னாலும் இப்ப கோடைகாலம்(???!!!) என்பதால் இந்த 9.30 எக்ஸ்ட்ரா போட். எட்டுமணி வேணாமுன்னு கோபால் சொன்னார். நானும் சரின்னேன்!!!! மறுநாளைக்கு டிக்கெட் எடுத்தாச்சு.
சரி, வாங்க கன்யாகுமரி போகலாமுன்னு தொணப்பி மீண்டும் ஹைவே 1 இல் வந்து சேர்ந்துக்கிட்டோம். இதுலேயே போங்கன்னு சொன்னதோடு இங்கே ஒரு கோவில் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்குமுன்னு சொல்லி வாய் மூடலை....... சின்னதா கும்மாச்சிக் கோபுரம் கண்ணில் பட்டது!!! நியூஸியின் கன்யாகுமரி. இன்னும் கொஞ்சதூரம் போனால்.... கோபுரத்துக்குக் கீழே சின்னதா ஒரு அறுகோணக் கட்டிடம். அதுக்குப்போகும் பாதை ஒன்னு சரேலுன்னு இடதுபக்கம் கீழிறங்குது.
எங்கேயும் திரும்பாம நேரா ஹைவேல போங்கன்னு 'ஆர்டர்' போட்டேன்:-) ஸ்டிர்லிங் பாய்ண்ட் ன்னு தகவல் சொல்லுது. அதையும் தாண்டுனதும் ஒரு 200 மீட்டரில் இந்த 2047 KM நெடுஞ்சாலை சட்னு முடிஞ்சு போச்சு. இதுக்குமேலே வண்டி ஓடாது... நோ நிலம்!!!!! நேராத் தண்ணியில் போய் விழலாம்.
Signpost ( கைகாட்டி மரம்?) ஒன்னு வச்சுருக்காங்க. ஆட்டொமொபைல் அஸோஸியேஷன் நியூஸியின் ஏற்பாடு. இதைப்பார்க்கவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கே வர்றாங்களாம். ஹிஹி.... சும்மா ஆயிரம் நூறுன்னு ப்ளஃப் விடுவோம் கேட்டோ:-)))) நாளுக்குப் பத்து, கணக்குன்னு சொல்லிக்கலாம். நாங்கபோய்ச் சேரும்போதே ஒரு ஆறுபேர் இருந்தாங்க.
இதுக்குத்தானே ஒத்தைக்காலில் தவம் இருந்தேன்:-))))
இப்படி ஒன்னு வச்சது 1960 ஆம் ஆண்டுதான். மரத்துலேசெஞ்சு ஒரு ஆறு இடங்களை அந்தந்தப்பக்கம் இருக்குன்னு கை காட்டிக்கிட்டு இருந்துச்சு. விஷமிகள் (இங்கெயும் இருக்காங்க! என்ன விகிதாச்சாரம் கம்மியா இருக்கும். அம்புட்டுதான். கெட்டமனசு, ஒரு நாட்டுக்கு மட்டுமா சொந்தம்?) கைவரிசை காட்டினதால் நல்ல இரும்புலே செஞ்சு சிமெண்டு போட்டு உரப்பிச்சுட்டாங்க. ஆறு இடத்துக்கு பதிலா இப்போ பனிரெண்டு இடங்கள் காமிக்குது. இங்கிருந்து நியூயார்க்கை விட தென் துருவம் ரொம்பவே பக்கம் கே ட்டோ!!!
இந்த ஊருக்கும் ஒரு ஹெரிட்டேஜ் ட்ரெயில் ப்ரோஷர் உண்டு. அதுலே கூட இதுதான் கட்டக்கடைசி. 17 வது இடம்! மற்ற இடங்களை(யும்) ஒவ்வொன்னா பார்க்கலாம். கூடவே வர்றீங்கல்லே?)
இந்தப் போஸ்டுக்கு எதிரில் லேண்ட்'ஸ் எண்ட் நியூஸிலேண்ட் என்ற பெயரில் ஒரு ஹொட்டேல் இருக்கு வித் பார் & ரெஸ்ட்டாரண்ட். இப்போதைக்கு மூடி இருக்காங்க. யாவாரம் இல்லை போல:( ஆனால் பிஸினெஸ் விக்கப் போட்டுருக்கு. யாருக்காவது கோடிக்கடை போட ஆசைன்னா, இதை வாங்கி நடத்தலாம்.
இந்த இடத்தை ஸ்டிர்லிங் பாய்ண்ட்ன்னு ஏன் சொல்றாங்க.? வில்லியம் ஸ்டிர்லிங் 1840 இல் இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் பிறந்தவர். (அப்போதான் வெள்ளையர்கள் மவோரிகள் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இப்போ சரியா கொத்ஸ்?)
வில்லியம் தன்னுடைய 20 வயதில் நியூஸிக்கு வந்து சேர்ந்தார். கடலோடி. திமிங்கில வேட்டைக்குழு தலைவர். இந்த ப்ளஃப் பகுதியில் முதன்முதலா வந்த பைலட் இவரே! ( அப்போ கப்பல் அதிகாரிக்கு கேப்டன் என்றுசொல்றதில்லையோ என்னவோ? அப்படீன்னா கேப்டன் குக்ன்னு சொல்றாங்களே அது எப்படி? ஆராயணும்) 21 வருசம் வேட்டையாடிட்டு இங்கே பக்கத்துலே டிவாய்ன்னு இருக்கும் சின்னத்தீவில் சாமிகிட்டே போயிட்டார். ஆயுசு 41 மட்டுமே!
இவருக்காக இங்கே ஒரு நடுகல் (கல்வெட்டு?) வச்சுருக்காங்க. பெரிய பாறையில் ஒரு சரித்திரக்குறிப்பு விவிலியத்தில் வரும் வசனத்துடன்.
வாங்க....கடல் & நில ஓரத்தையொட்டியே கீழிறங்கும் பாதையில் போகலாம். வளையம் வளையமா பெரிய சங்கிலி அமைப்பு. சங்கிலியின் ஒரு கண்ணூடாக பாதை போகுது. எதுக்கு இம்மாம் பெரிய சங்கிலி? அதுவும் அலுமினியத்தில்? ( இவ்ளோ பெரிய சங்கிலி தங்கத்துலே இருந்தால் நல்லாவே இருக்காது . ச்சீச்சீ. புளிச்ச பழம் :-)
சங்கிலிக் கதை ஒன்னு இப்போ சுருக்கமா :-)))
கடவுளுக்குச் சமமான சக்தி உள்ள பாலினீஸிய கடலோடி ஒருத்தர் இருந்தார். ( இங்கே இருந்து ஆயிரத்துச் சொச்சம் வருசங்களுக்கு முன்னால் வந்தவர்கள்தான் நியூஸியின் பழங்குடிகள். இங்கே இவுங்களுக்கு மவொரியர்கள் என்று பெயர். )அவருடைய பெயர் மௌஇ ( MAUI). தன்னுடைய நீளப்படகிலே கடலில் வந்துக்கிட்டே இருந்தப்ப ஒரு சமயம் மீன் பிடிக்கத் தன்னுடைய படகை நங்கூரம் போட்டு அங்கே நிறுத்தறார். அந்த நங்கூரம் போய் கடலினடியில் போய் நல்லாப் பதிஞ்சுருது.
பெரிய மீன் (திமிங்கிலமோ என்னவோ?)ஒன்னைப் பார்த்துட்டு அதைப் பிடிக்கும்போது அது படகை இழுக்க இவர் மீனை இழுக்கன்னு கொஞ்சம் ' டக் ஆஃப் வார்' நடக்க நங்கூரம் அப்படியே பதிஞ்சுருந்த பூமித்தரையோடு மேலே வந்துருது. நங்கூரச் சங்கிலியில் ஒட்டி வந்த தரை 'ரகியூரா' ( Rakiura) என்ற ஒரு சின்னத் தீவாகவும் அந்த நீளப்படகு நியூஸியின் தெற்குத் தீவாகவும், பிடிபட்ட மீன் நியூஸியின் வடக்குத் தீவாகவும் மாறி நிலைச்சு நின்னு போச்சுன்றது மவொரிகளின் பழங்கதைகளில் ஒன்னு. அப்புறம் அந்த மௌஇ என்ன ஆனார் என்றதெல்லாம் இன்னும் பெரிய கதை.
( போன வருசம் ,மவொரி கதைகள் புத்தகத்தை மொழி பெயர்க்கலாமுன்னு வாங்கியாந்துருக்கேன். கிடைக்கும் நேரத்தைப்பொறுத்து வேலையை ஆரம்பிக்கணும்)
உள்ளூர் கம்யூனிட்டி ட்ரஸ்ட் ஆரம்பிச்சு 20 வருசம் முடிஞ்சதையொட்டி 2008 வது ஆண்டு இந்தச் சங்கிலியை பழங்குடிகளுக்கும் இந்த ஊருக்கும் இருக்கும் பாரம்பரிய உறவுகளின் குறியீடா இங்கே அமைச்சு இருக்காங்க. சங்கிலியின் மறு முனை ரகியூரா தீவில் ( இதுதான் இப்போ ஸ்டீவர்ட் ஐலேண்ட்) உள்ள லீ பே ( Lee Bay) என்ற இடத்தில் இருக்கு!
அலை வந்து மோதும் சிறு பாறைகளும், கடலோரச்செடிகளும் புதர்களுமா வளைஞ்சும் நெளிஞ்சும் இருக்கும் பாதையினூடாக நாம் நடந்து போறோம். பாதிவழியில் ஒரு கக்கூஸு. நியூஸி (தெற்குத்தீவின் )யின் கடைசிக் கழிவறை இதுதான்! எல்லாம் பரிசுத்தமாக இருக்கும் நவீன கழிப்பறை இது. நாடு அசிங்கப்படக்கூடாது என்பதில் அரசு கவனமா இருக்குன்னு எனக்கு ஒரே பெருமை. (இந்தியாவைப்பத்தி நான் வாயைத் திறக்க மாட்டேன் கேட்டோ!)
இன்னும் நாலடி வைக்கக் கோவில் இப்போ நல்லாவே கண்ணுக்குத் தெரியுது. அது கடலில் இருக்கும் இன்னொரு பெரிய பாறையில் கட்டப்பட்டுள்ளது. ஒரு நாப்பதடி தூரம் இருக்கும். அங்கே போக ஒரு மரப்பாலம். பாலம் கடந்து போய் நாலைஞ்சு படிகளோடு இருக்கும் கோவில் வாசலில் நின்னோம். பூட்டப்பட்டிருக்கு. உள்ளே என்ன ? அம்மனோ? சாமியோ? ஊஹூம்.
கடற்பாறைகளில் படகுகள் வந்து மோதிவிடாமல் எச்சரிக்கை செய்யும் லைட் ஹவுஸா இந்த இடம் 1877 முதல் இயங்குது. இப்போ நாம் பார்க்கும் இந்த அறுகோண வடிவக் கட்டிடம் 1912 ஆம் ஆண்டு, பழசுக்குப் பதிலா கட்டப்பட்டது. வெளியே மரத்தில் டெக் போட்டு கொஞ்சம் சரித்திர பூகோள விவரங்கள் வச்சுருக்காங்க. படிச்சுப்பார்த்துட்டு க்ளிக்கிட்டு இருக்கும்போது நாலு பேர் வந்தாங்க. (ஆஸிகள்) அஸ்ட்ராலியாக்காரர்கள். எல்லாம் பைக்கீஸ். மோட்டர்சைக்கிளில் தெற்குத்தீவைச் சுத்தறாங்களாம்.
நல்ல பெரிய பைக். சும்மா ஓட்டிப்பார்க்கலாமான்னு நினைச்சேன்:-))))
திரும்பி நடந்து ஸைன் போஸ்டுக்கு வந்து இன்னும் கொஞ்சம் க்ளிக்கிட்டு 17 இல் ஒன்னு போச்சு இன்னும் 16 இருக்குன்னு புறப்பட்டோம்.
தொடரும்............:-)
