Friday, January 11, 2013

இதுக்குமேலே வண்டி ஓடாது......

தேசிய நெடுஞ்சாலை  எண் ஒன்று.  இன்றைக்குப்  பயணம் இதில்தான், தென் திசை நோக்கி. சரியா 30 கிலோ மீட்டர்.  அறையைவிட்டுக்  கிளம்புனதும்    ஒரு கிலோ மீட்டரில் இருக்கும் 'மேரி'யம்மன் கோவிலுக்குப்போயிட்டுப் போகலாமுன்னு  போனால் கோவில்  கதவு சாத்திக்கிடக்கு.  படிக்கட்டுவரை போய் கதவைத் தள்ளிப் பார்க்கலாமான்னா  ஒரே மழை.  காருக்குள்  இருந்தே கும்பிடு ஒன்னு போட்டுட்டு ரெண்டு க்ளிக்கிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.


 கடலை ஒட்டிய சாலைதான். வளைவுகளில்  இடம் வலமுன்னு கடல்கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு.  நல்லநாளிலேயே நாழிப்பால். இப்போ கனத்த  மழை வேற. சாலை ஜிலோன்னு கிடக்கு. எப்பவாவது ஒரு வண்டி நானும் வரேன்னு தலைவிளக்கைப் போட்டுக்கிட்டுக் கடந்து போகும்.


ஊர் எல்லையில் வரவேற்பு போர்டு.  ப்ளஃப் அடிக்காமச் சொல்றேன் ஊர் பேரே ப்ளஃப்தான். இடப்பக்கம் பிரியும்  ரோடு நம்மை துறைமுகத்தில் கொண்டு தள்ளிருது. சௌத் போர்ட்.  சின்ன, பெரிய கப்பல்கள் ரெண்டு மூணு, ஏராளமான படகுகள்,  காற்றின் ஒலியோடு போட்டிப்போடும் கடலலைகள் ஓசை.






கடல்மியூஸியம் ஒன்னு இருக்கு.  10 மணிக்குத்தான் திறப்பாங்களாம்.  35 நிமிசம் இருக்கு. அதுவரை  தேவுடு காக்கணுமா என்ன?  கொஞ்ச தூரத்தில்  Stewart Island  Experience Ferry Terminal இருந்துச்சு. உள்ளே நுழைஞ்சு விவரம் கேட்டுக்கிட்டோம்.  ஒம்பதரைப்படகு  கிளம்ப ரெடி. ஓடிப்போய் ஏறலாமா?  ஊஹூம். நடக்காத காரியம். குறைஞ்சது 20 நிமிசம் முன்னாலே வந்து செக்கின் செய்யணுமுன்னு விதி.  எட்டிப்பார்த்தேன். படகு  சொன்ன நேரத்துக்கு  டாண்ணு புறப்பட்டுப்போகுது!


இன்வர்கார்கிலில் இருந்து  ஆறு பேர் பயணிக்கும் சின்ன விமான சர்வீஸ் ஒன்னு இருக்கு. குறைஞ்சபட்சம் 2 பேர் இருந்தால்தான் வண்டியை வெளியே எடுப்பாங்க.  அதுலே போகலாமான்னு   ஒரு நினைப்பு . ஆனால் இப்படி மழை அடிக்கும்போது நாங்க ரெண்டு டிக்கெட்ஸ் இருந்தாலுமே கேன்ஸலாக வாய்ப்பு உண்டு. பேசாம ஃபெர்ரியே   எடுக்கலாம்.  என்னுடைய ஸீ சிக்னெஸுக்கு  முன் ஜாக்கிரதையா மாத்திரைகள் எல்லாம் பயணத்துக்கு வாங்கி வச்சுருக்கேன்.  அது அறையிலே இருக்கு.  பேசாம நாளைக்கு பதிவு செஞ்சுக்கலாம்.  வருசம் முழுசும் காலை 8 மணிக்கு ஒரு போட்  இருக்குன்னாலும் இப்ப கோடைகாலம்(???!!!) என்பதால் இந்த 9.30 எக்ஸ்ட்ரா  போட்.   எட்டுமணி வேணாமுன்னு கோபால் சொன்னார்.  நானும் சரின்னேன்!!!!  மறுநாளைக்கு டிக்கெட் எடுத்தாச்சு.


சரி, வாங்க கன்யாகுமரி  போகலாமுன்னு தொணப்பி மீண்டும்  ஹைவே 1 இல் வந்து சேர்ந்துக்கிட்டோம்.  இதுலேயே போங்கன்னு சொன்னதோடு இங்கே  ஒரு கோவில் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்குமுன்னு  சொல்லி வாய் மூடலை.......  சின்னதா கும்மாச்சிக் கோபுரம் கண்ணில் பட்டது!!!  நியூஸியின் கன்யாகுமரி. இன்னும் கொஞ்சதூரம் போனால்.... கோபுரத்துக்குக் கீழே  சின்னதா ஒரு  அறுகோணக் கட்டிடம். அதுக்குப்போகும் பாதை ஒன்னு சரேலுன்னு  இடதுபக்கம் கீழிறங்குது.


எங்கேயும் திரும்பாம நேரா ஹைவேல போங்கன்னு 'ஆர்டர்' போட்டேன்:-) ஸ்டிர்லிங் பாய்ண்ட் ன்னு  தகவல் சொல்லுது. அதையும் தாண்டுனதும்  ஒரு 200 மீட்டரில் இந்த  2047 KM  நெடுஞ்சாலை சட்னு முடிஞ்சு போச்சு.  இதுக்குமேலே வண்டி ஓடாது... நோ நிலம்!!!!!  நேராத் தண்ணியில் போய் விழலாம்.


Signpost ( கைகாட்டி மரம்?) ஒன்னு  வச்சுருக்காங்க. ஆட்டொமொபைல் அஸோஸியேஷன் நியூஸியின் ஏற்பாடு. இதைப்பார்க்கவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கே வர்றாங்களாம்.  ஹிஹி.... சும்மா ஆயிரம் நூறுன்னு  ப்ளஃப் விடுவோம் கேட்டோ:-))))  நாளுக்குப் பத்து, கணக்குன்னு சொல்லிக்கலாம்.  நாங்கபோய்ச் சேரும்போதே ஒரு  ஆறுபேர் இருந்தாங்க.







இதுக்குத்தானே ஒத்தைக்காலில் தவம் இருந்தேன்:-))))

இப்படி ஒன்னு வச்சது 1960 ஆம் ஆண்டுதான். மரத்துலேசெஞ்சு ஒரு ஆறு இடங்களை  அந்தந்தப்பக்கம் இருக்குன்னு கை காட்டிக்கிட்டு இருந்துச்சு.  விஷமிகள் (இங்கெயும் இருக்காங்க!  என்ன விகிதாச்சாரம் கம்மியா இருக்கும். அம்புட்டுதான். கெட்டமனசு, ஒரு நாட்டுக்கு மட்டுமா சொந்தம்?)  கைவரிசை காட்டினதால்  நல்ல இரும்புலே செஞ்சு  சிமெண்டு போட்டு உரப்பிச்சுட்டாங்க. ஆறு இடத்துக்கு பதிலா இப்போ பனிரெண்டு இடங்கள் காமிக்குது.   இங்கிருந்து நியூயார்க்கை விட தென் துருவம் ரொம்பவே பக்கம் கே ட்டோ!!!
இந்த ஊருக்கும் ஒரு ஹெரிட்டேஜ் ட்ரெயில்  ப்ரோஷர்  உண்டு. அதுலே கூட இதுதான் கட்டக்கடைசி. 17 வது இடம்! மற்ற இடங்களை(யும்) ஒவ்வொன்னா பார்க்கலாம். கூடவே வர்றீங்கல்லே?)


இந்தப் போஸ்டுக்கு எதிரில்  லேண்ட்'ஸ் எண்ட் நியூஸிலேண்ட் என்ற பெயரில் ஒரு  ஹொட்டேல் இருக்கு வித் பார் & ரெஸ்ட்டாரண்ட். இப்போதைக்கு மூடி இருக்காங்க.  யாவாரம் இல்லை போல:( ஆனால்  பிஸினெஸ் விக்கப் போட்டுருக்கு.  யாருக்காவது கோடிக்கடை போட ஆசைன்னா, இதை வாங்கி நடத்தலாம்.


இந்த  இடத்தை  ஸ்டிர்லிங் பாய்ண்ட்ன்னு   ஏன் சொல்றாங்க.? வில்லியம் ஸ்டிர்லிங்  1840 இல்  இங்கிலாந்தில்  கெண்ட் பகுதியில் பிறந்தவர்.  (அப்போதான் வெள்ளையர்கள் மவோரிகள் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இப்போ சரியா கொத்ஸ்?)


வில்லியம் தன்னுடைய 20 வயதில் நியூஸிக்கு வந்து சேர்ந்தார். கடலோடி. திமிங்கில வேட்டைக்குழு தலைவர்.  இந்த  ப்ளஃப் பகுதியில்  முதன்முதலா வந்த பைலட் இவரே! ( அப்போ கப்பல் அதிகாரிக்கு கேப்டன் என்றுசொல்றதில்லையோ என்னவோ? அப்படீன்னா   கேப்டன் குக்ன்னு சொல்றாங்களே அது எப்படி? ஆராயணும்) 21 வருசம் வேட்டையாடிட்டு  இங்கே பக்கத்துலே டிவாய்ன்னு இருக்கும் சின்னத்தீவில்   சாமிகிட்டே போயிட்டார். ஆயுசு 41 மட்டுமே!

இவருக்காக இங்கே ஒரு  நடுகல்  (கல்வெட்டு?)  வச்சுருக்காங்க.  பெரிய பாறையில்  ஒரு சரித்திரக்குறிப்பு விவிலியத்தில் வரும் வசனத்துடன்.


வாங்க....கடல் & நில ஓரத்தையொட்டியே கீழிறங்கும் பாதையில் போகலாம்.  வளையம் வளையமா பெரிய சங்கிலி அமைப்பு.  சங்கிலியின் ஒரு கண்ணூடாக பாதை போகுது.   எதுக்கு இம்மாம் பெரிய சங்கிலி?  அதுவும் அலுமினியத்தில்?  ( இவ்ளோ பெரிய சங்கிலி தங்கத்துலே இருந்தால் நல்லாவே இருக்காது . ச்சீச்சீ. புளிச்ச பழம் :-)

சங்கிலிக் கதை ஒன்னு  இப்போ சுருக்கமா :-)))

கடவுளுக்குச் சமமான  சக்தி உள்ள  பாலினீஸிய  கடலோடி ஒருத்தர் இருந்தார்.  ( இங்கே இருந்து  ஆயிரத்துச் சொச்சம் வருசங்களுக்கு  முன்னால் வந்தவர்கள்தான் நியூஸியின் பழங்குடிகள். இங்கே இவுங்களுக்கு மவொரியர்கள்  என்று பெயர். )அவருடைய பெயர் மௌஇ ( MAUI).  தன்னுடைய நீளப்படகிலே  கடலில் வந்துக்கிட்டே இருந்தப்ப  ஒரு சமயம்     மீன் பிடிக்கத் தன்னுடைய படகை நங்கூரம் போட்டு அங்கே  நிறுத்தறார்.  அந்த நங்கூரம் போய் கடலினடியில்  போய் நல்லாப் பதிஞ்சுருது.


பெரிய மீன் (திமிங்கிலமோ என்னவோ?)ஒன்னைப் பார்த்துட்டு அதைப் பிடிக்கும்போது  அது படகை இழுக்க இவர் மீனை இழுக்கன்னு  கொஞ்சம் ' டக் ஆஃப் வார்'  நடக்க நங்கூரம் அப்படியே பதிஞ்சுருந்த பூமித்தரையோடு மேலே வந்துருது. நங்கூரச் சங்கிலியில் ஒட்டி வந்த தரை  'ரகியூரா' ( Rakiura)  என்ற ஒரு  சின்னத் தீவாகவும்  அந்த நீளப்படகு  நியூஸியின் தெற்குத் தீவாகவும், பிடிபட்ட மீன் நியூஸியின் வடக்குத் தீவாகவும் மாறி நிலைச்சு நின்னு போச்சுன்றது   மவொரிகளின் பழங்கதைகளில் ஒன்னு.  அப்புறம் அந்த மௌஇ என்ன ஆனார் என்றதெல்லாம்  இன்னும் பெரிய கதை.

 ( போன வருசம் ,மவொரி கதைகள் புத்தகத்தை மொழி பெயர்க்கலாமுன்னு  வாங்கியாந்துருக்கேன்.  கிடைக்கும் நேரத்தைப்பொறுத்து  வேலையை ஆரம்பிக்கணும்)



உள்ளூர் கம்யூனிட்டி ட்ரஸ்ட் ஆரம்பிச்சு 20 வருசம் முடிஞ்சதையொட்டி   2008 வது ஆண்டு இந்தச் சங்கிலியை  பழங்குடிகளுக்கும்  இந்த ஊருக்கும்  இருக்கும் பாரம்பரிய உறவுகளின் குறியீடா  இங்கே  அமைச்சு இருக்காங்க.  சங்கிலியின் மறு முனை  ரகியூரா தீவில்  (  இதுதான் இப்போ ஸ்டீவர்ட் ஐலேண்ட்)  உள்ள லீ பே  ( Lee Bay) என்ற இடத்தில்   இருக்கு!


அலை வந்து மோதும் சிறு பாறைகளும், கடலோரச்செடிகளும் புதர்களுமா  வளைஞ்சும் நெளிஞ்சும் இருக்கும்  பாதையினூடாக நாம்  நடந்து போறோம்.  பாதிவழியில்  ஒரு கக்கூஸு.  நியூஸி (தெற்குத்தீவின் )யின்  கடைசிக் கழிவறை இதுதான்!  எல்லாம்  பரிசுத்தமாக  இருக்கும் நவீன கழிப்பறை இது.  நாடு அசிங்கப்படக்கூடாது என்பதில் அரசு கவனமா இருக்குன்னு எனக்கு ஒரே பெருமை.  (இந்தியாவைப்பத்தி  நான் வாயைத் திறக்க மாட்டேன் கேட்டோ!)


இன்னும் நாலடி வைக்கக் கோவில் இப்போ நல்லாவே கண்ணுக்குத் தெரியுது.  அது கடலில் இருக்கும் இன்னொரு பெரிய பாறையில் கட்டப்பட்டுள்ளது.   ஒரு நாப்பதடி தூரம் இருக்கும்.  அங்கே போக ஒரு மரப்பாலம். பாலம் கடந்து போய் நாலைஞ்சு படிகளோடு இருக்கும் கோவில் வாசலில் நின்னோம். பூட்டப்பட்டிருக்கு. உள்ளே என்ன ?  அம்மனோ? சாமியோ?  ஊஹூம்.


கடற்பாறைகளில்  படகுகள் வந்து மோதிவிடாமல் எச்சரிக்கை செய்யும் லைட் ஹவுஸா இந்த இடம் 1877 முதல் இயங்குது. இப்போ நாம் பார்க்கும் இந்த அறுகோண வடிவக் கட்டிடம் 1912 ஆம் ஆண்டு,  பழசுக்குப் பதிலா  கட்டப்பட்டது.  வெளியே மரத்தில் டெக் போட்டு கொஞ்சம் சரித்திர பூகோள விவரங்கள் வச்சுருக்காங்க.  படிச்சுப்பார்த்துட்டு க்ளிக்கிட்டு இருக்கும்போது  நாலு பேர் வந்தாங்க.  (ஆஸிகள்) அஸ்ட்ராலியாக்காரர்கள்.  எல்லாம் பைக்கீஸ்.  மோட்டர்சைக்கிளில்  தெற்குத்தீவைச் சுத்தறாங்களாம்.






நல்ல பெரிய பைக். சும்மா ஓட்டிப்பார்க்கலாமான்னு  நினைச்சேன்:-))))
திரும்பி நடந்து  ஸைன் போஸ்டுக்கு வந்து  இன்னும் கொஞ்சம் க்ளிக்கிட்டு  17 இல் ஒன்னு போச்சு இன்னும் 16 இருக்குன்னு புறப்பட்டோம்.



தொடரும்............:-)






37 comments:

said...

அதென்னங்க, ஆஸ்த்ரேலியா ஆளுங்க அம்மாம் பெரிசா இருக்காங்க. உங்களைப் பார்த்தா பிக்மீஸ் மாதிரித் தெரியுது?

said...

//சும்மா ஓட்டிப்பார்க்கலாமான்னு நினைச்சேன்:-))))//

எப்படி இருந்துது ஓட்டிய அனுபவம்.. :P

அப்போ வந்த போது இன்வர்கார்கில் போக நேரம் கிடைக்கலை, அதை இப்போ பார்த்தாச்சு..!

said...

படங்களுடன்,நீங்க விவரமாக கொடுத்திருக்கிற தகவல்களை படிக்கும் பொழுது உங்க கூடவே பயணம் செய்வதாக உணர முடியுது மேடம். அடுத்த பதிவுக்காக ஆவலோட காத்திருக்கிறேன்.

said...

வெறும் 18958 கி.மீதானா?.. லண்டனுக்குப் பொடிநடையாவே போயிரலாம் போலிருக்கே :-)))

said...

குமரியில்லாத கோவிலுக்கா போனீங்க:)

பைக்கர்ஸ் வெரி ஸ்வீட். உங்கபோஸ் அதைவிட ஸ்வீட்.படங்களைப் பார்த்துக் கிட்டே இருக்கலாம் மாதிரி ஆசையா இருக்கு.
சாப்பாட்டுக்கு என்ன செஞ்சீங்க.

said...

படங்களுடன், பாடக்குறிப்பும் எடுத்துக்கொண்டேன். :)


நன்றீஸ்

said...

ஒத்தக்காலில் நின்னு சாதிச்சிட்டீங்களே..

said...

கார்ல மட்டும் போகலாம் துளசி டீச்சர்! பைக்கு-ன்னா எனிக்கு பயம் கேட்டோ?

என் எல்லா இடமும் ஆளரவமே இல்லாமல் இருக்கு? மக்கள் தொகை ரொம்பவும் குறைச்சலோ?

இல்லை விடுமுறைக்கு ஊருக்குப் போயிட்டாங்களா?

இதைபோல கதை சொல்லிகிட்டே கூட்டிக்கிட்டுப் போனீங்கன்னா அலுப்பு தெரியாது.

பயணத்தைத் தொடருங்கள். கூடவே வருகிறோம்.

ஒரு சின்ன உதவி:
உங்கள் பதிவுகள் இமெயிலில் வர என்ன செய்ய வேண்டும்.
follow button - கூடக் காணுமே!

said...

சரித்திர தகவல்களை தெரிந்து கொண்டேன் டீச்சர். படங்கள் பிரமாதம். தொடர்ந்து வருகிறேன்.

said...

இங்கே ஒரு கோவில் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்குமுன்னு சொல்லி ......

கடல் ஓரங்களைப்பார்த்தால் மனம் கோவிலைத்தான் தேடுகிறது ..திருச்செந்தூர் முருகனைப் பார்த்தகண்கள்.....

இவ்வளவு பெரிய கடல் கரை வீணாப்போகுதே ஒரு கோவில் இல்லாமல் என்று மகன்களிடம் சொல்லிய நினைவுகள் தங்கள் பதிவைப் பார்த்ததும் மனதில் நங்கூரமிட்டன ...

said...

படங்களூம் பகிர்வும் அருமை.
கொஞ்சம் மெலிந்து விட்டீர்கள் போல் உள்ளது.

said...

பைக் அட்டகாசமாக இருக்கு.நெடுந்தொலைவுக்கு ஏற்ற பைக் என்று நினைக்கிறேன்.

said...

கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். தப்பு வந்தாச் சொல்லிருவோமுல்ல. இப்போ சரியா இருக்கு :))) (இங்க யாரு ரீச்சர், யாரு வகுப்பு லீடர்ன்னே கன்பியூஸ் ஆவுதே)

Bluff - இதுக்கு பல விதமான அர்த்தம் உண்டு என்பது தெரியும்தானே!!

said...

ஒத்தைக்கால் தவம் பலிச்சதே :) நடனம் ஆடுறா மாதிரியே இருக்கு துள்சி:)

எக்ஸெலண்ட் போட்டோஸ்.

said...

அங்கே ஒரு கன்யாகுமரி இருக்கிறது இப்போதான் தெரியும். நானும் அங்கன வரணுமென்ரு ஒத்தைக்காலில் தவமிருக்கப்போறேன் :)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இந்தியர்களில் குறிப்பா தமிழர்களுக்கு கொஞ்சம் உசரம் குறைவுதானே.

இப்போதைய தலைமுறையினர் உசரமாத்தான் வளர்ந்துக்கிட்டு இருக்காங்க.

நாங்க பழம்பெருசுகள்,இல்லையோ:-))))

said...

வாங்க பொற்கொடி.

ஓட்டிப் பார்க்கலாமுன்னா ஹெல்மெட் அளவு சரியா இல்லையேப்பா:-))))

said...

வாங்க ராம்வி.

கூடவே வர்றதுக்கும் உற்சாகம் கொடுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நடுநடுவுலே கடல் வந்துருதேப்பா. ஸ்விம்ஸூட் கையோடு கொண்டு போகணும்,ஆமா:-))))

said...

வாங்க வல்லி.

கோவிலுக்குப் பக்கம்போனதும் குமரி வந்துறமாட்டாளா என்ன?:-))))

சாப்பாட்டுக்கு மெனெக்கெட்டலைய வேணாம். இப்பெல்லாம் அங்கங்கே இண்டியன் சாப்பாட்டுக்கடைகள் அட்லீஸ்ட் ஊருக்கு ஒன்னு இருக்கு. சூப்பர் மார்கெட்டில் ரெடி டு ஈட் கறீஸ் கிடைக்குது. வாங்கிவந்து மைக்ரோவேவில் 3 நிமிஷம் வச்சால் போதும்.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

பாருங்க, நீங்க ஒருத்தர்தான் நம்ம வகுப்பில் குறிப்பும் கையுமா இருக்கீங்க.
அதுக்கே ஒரு சபாஷ் போடணும்.

போனஸ் மார்க் பத்து:-))))

said...

வாங்க கயலு.

குமரியம்மன் சொல்லிக் கொடுத்ததை மறக்க முடியுமா? :-)))

இங்கே வட்டவடிவமான பள்ளம் இருக்கு. சுத்தி ஒரு மரத்தடுப்பு. நம்மூரா இருந்தால் அதுலே கால்தடம் ஒன்னு செதுக்கி இங்கேதான் அம்மன் நின்னதுன்னு சொல்லிருவாங்க.

அங்கே கால் பதிக்கப்பார்த்தால் மழை ஈரம்.தடக்ன்னு உள்ளெ போயிருச்சுன்னா?

மெள்ள ஒரு கால் பாதுகையை மட்டும் வச்சுக் கிளிக்கிக்கிட்டேன்.

வம்பு வேணாமுன்னு படம் போடலை கேட்டோ:-)))))

said...

வாங்க ரஞ்ஜனி.

ஆஹா.... நியூஸியைப்பற்றீய புத்தகம் ஒன்னு இருக்கு. ச்சான்ஸ் கிடைச்சால் படிச்சுப்பாருங்க.

மொத்த நாட்டுக்கும் 4 மில்லியன் சனம். 48 மில்லியன் ஆடுகள் என்ற கணக்கு.

உங்களுக்காக ஒரு சுட்டி இங்கே:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2010/06/blog-post_12.html


ஃபாலோயர்ஸ் ஆப்ஷன் வச்சுக்கலை. படி படின்னு நிர்பந்திக்கிறமாதிரி இருக்குன்னுதான்........

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

ந்ன்றீஸ்ப்பா.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஒருவகையில் பார்த்தால் கோவில் இல்லாததுகூட, இங்கெல்லாம் சுத்தமாக இருப்பதின் காரணமா இருக்கலாம்.

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை மனக்கண்ணால் கண்டு ஆராதிச்சுக்கணும்.

said...

வாங்க கோமதி அரசு.

மெலிஞ்சுட்டேனா!!! ஆஹா...

கொஞ்சம் சக்கரையை உங்க வாயில் போட்டுக்குங்க:-)

மெலியற உடம்பா இது? க்ளோஸப்பா இருந்துருந்தா கதை கந்தல்:-)))

said...

வாங்க குமார்.

பார்வைக்கும் அழகுதான். ஆனால் தூக்கி நிறுத்த ஒரு சின்ன யானையைக் கூடவே கொண்டு போகணும்போல இருக்கே:-))))

said...

வாங்க கொத்ஸ்.

மாணவர், டீச்சராக் கூடாதா என்ன?

சுவாமிமலை சமாச்சாரம் நினைவிருக்கா:-))))

//Bluff - இதுக்கு பல விதமான அர்த்தம் உண்டு என்பது தெரியும்தானே!!//

ஹைய்யோ... தெரிஞ்சதால்தானே ஃபோட்டோ எவிடென்ஸ் தர்றேன்:-)))

said...

வாங்க கவிதாயினி.

புதுப்புத்தகத்துக்கு இனிய பாராட்டுகள்.
எண்ணிக்கை 20 ஆச்சா?

ஒத்தக்காலில் நின்னா சாதிக்கலாமுன்னு பகீரதன் முதல் குமரியம்மன் வரை சொல்லிட்டுத்தான் போயிருக்காங்க.

கிளம்பி வாங்க. ரெண்டு பேருமா அங்கே போய் ரெண்டு காலில் ( ஆளுக்கு ஒன்னு) நிற்கலாம்:-)))

said...

படங்கள் பிரமாதம் / பிரம்மாண்டம். மெகா ஆஸ்திரேலியர்களுக்கேற்ற மெகா பைக்! இனிய பொங்கல் வாழ்த்துகள்.

said...

நல்ல இளைசிட்டிங்க. புதுவருட ரிசல்யூஷன்ஸ்ஸா? ஆல் தி பெஸ்ட்.
நல்ல அருமையா படங்களோட கலக்கிட்டிங்க.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

said...

வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

said...

ஒற்றைக் காலில் நிற்காமலேயே நமக்குப் பார்க்கக் கிடைத்துவிட்டதே :))

அருமை. மிக்கநன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் காணும் பொங்கல் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க விஜி.

சாப்பிடன்னு இன்னொரு பிறவி எடுக்கமுடியுமா? வேணாமுன்னு இப்பவே நல்லா சாப்பிடத் தொடங்குனதும் உடம்பு இளைக்குது போலிருக்கு.

"உடம்பு பூரா வினை.ஒட்டமாட்டேங்குது பாரேன்":-)))) ஒரு காலத்தில் காதுகுளிரக்கேட்டவை.

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் காணும் பொங்கல் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க மாதேவி.

ஆஹா... அதான்ப்பா...கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது:-))))

said...

வாங்க கவிஞரே!

வணக்கம்.முதல் வருகைக்கு நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.