Friday, May 25, 2012
அத்தைமடி மெத்தையடி எல்லாம் அந்தக் காலம்!
Posted by
துளசி கோபால்
at
5/25/2012 02:13:00 PM
22
comments
Labels: அனுபவம்
Wednesday, May 23, 2012
கண் முன் எழுந்த கோபுரம் !!!
நான் நினைச்சுக்கூட பார்க்கலை இப்படி ஒரு அனுபவமும் வாய்க்கப் போகுதுன்னு! சண்டிகரில் போய் குப்பை கொட்ட வாய்ச்சதும் சனிக்கிழமைக்குக் கோவில்தேடி, பஞ்ச்குலா என்ற இடத்தில் பெருமாளைக் கண்டேன். அங்கே கீதா & சீனிவாசன் என்ற இளம்தம்பதிகளைச் சந்திக்க நேரிட்டது. சாமி கும்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் சாஸ்திரத்துக்காக முன்வாசல் படிகளில் உக்கார்ந்து இருந்தப்ப .... இவுங்களும் வந்து உக்கார்ந்தாங்க. கீதா (அப்புறம் பெயர் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்) வின் புடவையில் யானை எம்ப்ராய்டரி! நல்லா இருக்குன்னு ஹிந்தியில் சொன்னேன். கொஞ்சம் முழிச்சாங்க! அதையே இங்கிலிபீஸில் சொன்னதும் அவுங்களுக்கு மகிழ்ச்சி!
பேச்சுவாக்கில் அவுங்க கோயமுத்தூர்ன்னு சொன்னதும், ஊருக்குபோய் வரும்போது யானை டிஸைனில் புடவை வாங்கி வரவான்னு கேட்டதும் மகிழ்ச்சி என் பக்கம் வந்துச்சு! அப்பதான் சொன்னாங்க சண்டிகரில் ஒரு முருகன் கோவிலும் இருக்குன்னு! விலாசம் கேட்டால் சரியாச் சொல்லத் தெரியலை. அவுங்க மொஹாலியில் இருக்காங்க. இந்த பஞ்ச்குலாவும் மொஹாலியும் சண்டிகருக்கு ரெண்டு கைகள் போல! பஞ்ச்குலா ஹரியானாவையும் மொஹாலி பஞ்சாபையும் சேர்ந்தவை. வசந்தி என்றவுங்களுக்கு எல்லா விவரமும் தெரியுமுன்னு சொல்லி அவுங்க தொலைபேசி எண்களைக் கொடுத்தாங்க.
இந்த பெருமாள் கோவிலுக்கு முதல்முறையா வந்தோமுன்னும் சொன்னாங்க. இதுலே ஒரு வியப்பு என்னன்னா........ இந்த சந்திப்புக்குப் பிறகு அவுங்களைக் காணோம். ஊருக்குப் போனவுங்க திரும்ப வரவே இல்லை! ஒருவேளை பெருமாளே நமக்கு கீதோபதேசம் சொல்ல அவுங்களை அனுப்புனானோ என்னவோ!
தென்னிந்தியர்களுக்கு இந்தக் கோவில் ஒரு மீட்டிங் ப்ளேஸ். கோவையைச் சேர்ந்த ஜோடியைச் சந்திச்சோம். இந்த ஊர் வந்து ஒன்னரை வருசமாச்சாம். முதல்முறையா இந்தக்கோவிலுக்கு வந்துருக்காங்க. பாலாஜியைத் தேடித்தேடி இப்போதான் கிடைச்சாராம்!!!! இங்கே தமிழ்ச்சங்கம் ஒன்னு இருக்குன்னு இவுங்க மூலமாத் தெரியவந்துச்சு. விலாசம், தொலைபேசி எண் எல்லாம் வாங்கிக்கிட்டோம். நல்ல நட்புணர்வு உள்ள இளம் தம்பதிகள். யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு
மேற்படி பாரா ரெண்டு வருசத்துக்கு முன்னே எழுதிய ஒரு பதிவில் இருந்து!
ஒரு வாரம் கழிச்சு முருகன் கோவிலைத்தேடிப்பிடிச்சுப்போன வரலாறு இங்கே இருக்கு பாருங்க:-)
ஏழாம்படைவீட்டில் ஏழு வயசு பாலகனுக்கு................பூ நூல் போட்டாச்சு
இப்படியாக கோவிலுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் கூடிப்போய் இது நம்ம சொந்தக்கோவில் என்ற எண்ணம் வந்துருச்சு. சண்டிகரை விட்டு வரும்போது கோவிலை விட்டுட்டு வர்றோமேன்னு கலங்குனது நிஜம்.
போன வருசம் மார்ச் ஆறு தேதிக்கு ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டினோம். திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் அருகில் இருக்கும் Pothai Hill என்ற பொத்தை(பொதிகைமலைத் தொடர்) குன்றில் ஸ்ரீ முத்துக்கிருஷ்ணஸ்வாமி மிஷன் அமைத்து நடத்தி வந்தவர் திரு மாணிக்கவாசகம் பிள்ளை அவர்கள். அவர்களின் மறைவுக்குப்பின் அவருடைய மகள் வித்தம்மா ஆசிரமப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். குருஜி மாதாஜி வித்தம்மா என்று அறியப்படும் இவர் முன்னிலையில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
கோவிலின் பக்கத்தில் இருக்கும் மைதானத்தை நோக்கி இருக்கும்படி அமைந்த மதிள் சுவரை இடித்துவிட்டு அங்கே கோபுரவாசல் இருக்கும்படி கட்ட வேண்டும்.
வேலைகள் மளமளவென்ன நடக்கத் தொடங்கி கண் முன்னே கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது. வாரம் குறைஞ்சது மூன்று முறையாவது கோவிலுக்குப்போய் வந்துக்கிட்டு இருந்தோம். ஸ்தபதியும் அவர் குழுவும் கோவில் மாடியில் உள்ள டைனிங் ஹாலில் தங்கி இருந்தாங்க. அவுங்க சமையலுக்குன்னு ஒருத்தர் வந்து மாடியிலே சமைச்சுப் போட்டுக்கிட்டு இருந்தார்.
நிதி சேர்க்கப்படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தார் கோவில் நிர்வாகி திரு ஆல் இன் ஆல் ராஜசேகர். நல்ல மேலாண்மை திறமை இவருக்கு. கோவிலில் விசேஷ பூஜைகள் வாராவாரம் நடக்கும். அதுக்கு நிறையப்பேர் ஸ்பான்ஸார் செய்வாங்க. கோவில் கட்ட வந்து இறங்கி இருக்கும் செங்கல்லைக்கூட நாம் 'வாங்கி' கோவிலுக்குக் கொடுக்கலாம். மூணு செங்கல் 11 ரூபாய். மக்களுக்கு இது ஒன்னும் பெரிய தொகையாத் தெரியாது. சின்ன செலவில் நாமும் திருப்பணியில் பங்கு எடுத்தோம் என்ற திருப்தியும் கிடைக்கும். சிறுதுளி பெருவெள்ளம் ஆனது இப்படித்தான்! கருவறை முன் மயில்வாகனத்தருகில் ஒரு பத்திருவது செங்கல் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கணும்:-))))
கோவில் குருக்கள் திரு பிரகாஷ் அருமையா ஸ்வாமி அலங்காரங்கள் செய்கிறார். பூஜைகளையும் அழகா நடத்தறார். எல்லாம் 'முருகன் ' செயல்!
அதுக்காக கோவில் அன்னதான திட்டத்தை எல்லாம் குறைக்கவே இல்லை. எல்லா விழாக்களுக்கும் விருந்து சாப்பாடு உண்டு. அதுக்கும் நிறைய ஸ்பான்ஸார்ஸ் கிடைத்தாங்க. ஆ.வியில் கோபுரநிதி சமாச்சாரத்தை மக்களிடம் சொல்ல ஒரு கட்டுரை எழுதித்தரக் கேட்டார். அதுக்காக (நம்ம நடையைக் கொஞ்சம் மாத்திக்கிட்டு எழுதிக் கொடுத்தது இது.)
கோபுரம் எழுப்ப ஒரு கை கொடுங்களேன், ப்ளீஸ்..........
படியேறியதும் நேராகக் கண்முன்னால் கருவறை! சந்நிதியில் வள்ளி தேவசேனாவுடன் கண்களில் அருள் பொங்கி வழியக் கோவில் கொண்டுள்ளான் எங்கள் சண்டிகர் முருகன். கைகூப்பி நிற்கிறோம். இடதுபுறம் குட்டியா ஒரு ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் செல்லம் போல் நிக்கறார். சட்னு தூக்கி இடுப்பில் வச்சுக்கலாம் போல கொள்ளை அழகு. குட்டியா அழகான சந்நிதியின் வாசல் மேல்நிலையில் சீதாபிராட்டியுடன் ராமலக்ஷ்மணர்களும் அருள்பாலிக்கிறார்கள். அனுமனின் சந்நிதிக்கு நேராக சதுரமேடையும் விதானமுமாய் அழகாக அமைந்த இடத்தில் நவகிரஹ நாயகர்கள். வட இந்தியாவில் முருகா முருகா என்று சொன்னால்........ அந்த சேவற்கொடியோன் நினைப்பு வருமா..... சேவல் நினைப்புதானே வரும்? அதனால் கார்த்திகேய ஸ்வாமியாக இருக்கார்.
பல ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றை வேல் வடிவில் உருவான கோவில். தமிழ்நாட்டைவிட்டு இங்கு வந்தோருக்கு 'நான் இருக்க பயமேன்?' என்று சொல்லாமல் சொல்லி காக்கும் கரமாய் நின்ற வேல்.
(ஒவ்வொரு சந்நிதியாக் கட்டி வந்த நேரம்! பிள்ளையார் வந்துட்டார்.)
காலப்போக்கில் மெள்ள மெள்ள மூணரையடி கருங்கல் சிலையாக மூலவரும் அவருக்குப் பாந்தமான உயரத்தில் மனையாட்டிகளுமாக கருவறைக்குள்ளில் ஜொலிக்கும் நம் தமிழ்க்கடவுள் அழகன் என்றால் அவன் முருகனே என்பதில் ஐயம் உண்டோ?
ஒரே ஒரு பிரகாரம். நடுவில் திருச்சந்நிதி. அர்த்தமண்டபத்தில் மயில் வாகனத்தை தன் முன் நிறுத்தி வைத்துள்ள உற்சவர்கள். கருவறையின் சுற்றுச்சுவர்களில் அழகிய மாடங்களில் நர்த்தனகணபதி, தக்ஷிணா மூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை. பிரகாரத்தின் ஒரு புறம் கேட்ட வரம் சித்தி விநாயகர், இன்னொரு புறம் க்ருஷ்ண மாரியம்மன். சண்டிகேஸ்வரர் சாட்சிக்கு நிற்கிறார்.
நவகிரஹ சந்நிதிக்கு அருகே சதுரமான ஒரு அரங்க மேடை. பின்புலத்தில் பார்வதியின் திருக்கல்யாணக்கோலம். தங்கையை தாரை வார்த்துக்கொடுக்கும் அண்ணன் மஹாவிஷ்ணு. அழகான முகலக்ஷ்ணங்களோடு அமைந்த சுதைச்சிற்பங்கள். கோவிலில் நடக்கும் விழாக்களுக்கும், விசேஷ பூஜையாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குமான மேடை.
இந்துப் பண்டிகைகள் எல்லாமே இங்கே கோவிலில் கூடிக் கொண்டாடுறோம். முக்கியமா பிள்ளையார் சதுர்த்தி கந்த சஷ்டி, தைப்பூசம், ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி , ஒன்பது நாட்களும் நடக்கும் நவராத்திரி விழா எல்லாமே கோலாகலம்தான். ஆடிமாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் திருவிளக்கு பூஜை உண்டு. தினப்படி பூஜைகள் ஒரு பக்கம் தினசரி நடந்துகொண்டு இருக்கும்போது சனிக்கிழமைகளில் பெருமாள் முன்பு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும், பௌர்ணமி நாளில் சத்தியநாராயண பூஜையும், அன்று மாலை ஸ்ரீ கிருஷ்ணமாரி அம்மனுக்கு மஹா அபிஷேகமும் தவறாமல் நடத்துகிறார்கள்.
தர்மசாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டபடி கோவில் விசேஷங்களில் அன்னதானம், எளியவருக்கும் அனாதாலயங்களில் இருக்கும் சிறார்களுக்கும் உணவு, உடை, கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் புத்தகங்கள் இவைகளை ஏழாம்படை வீடாக சண்டிகரில் குடிகொண்ட ஸ்ரீகார்த்திகேய ஸ்வாமி தாராளமாக அருள்கின்றார்.
நம் கோவிலில் கீர்த்தி வடதேசங்களில் பரவி, ஜம்மு, பானிபட், அம்பாலா என்ற ஊர்களில் இருந்தும் தெற்கே பெங்களூருவில் இருந்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற வந்து போகிறார்கள். காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஜகத்குரு ஸ்ரீ வித்யாபினவ கிருஷ்ணநாத தீர்த்த சங்கராச்சாரிய ஸ்வாமிகளும், ஸ்ரீ கோவர்தன பீடம் பூரி (ஒடிஸா) பீடாதிபதி ஜகத்குரு நிஸ்சலநந்தா சரஸ்வதி ஸ்வாமிகளும் நம் கார்த்திகேயஸ்வாமி கோவிலுக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளானர்.
கோவிலின் முதல் மஹாகும்பாபிஷேகம் 1992 வது ஆண்டும் இரண்டாம் முறையாக மஹா கும்பாபிஷேகம் 2002 வது ஆண்டும் நடத்தப்பட்டன, உற்சவர் இங்கே குடிகொண்டது 1996வது ஆண்டு. குறைவொன்றும் இல்லாத கோவிந்தனின் மருகனுக்கு ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மனதில் குறையாகத் தோன்றி அதற்கான முயற்சிகளை எடுத்து இந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி திருப்பணி தொடக்கமாக அஸ்திவாரம் தோண்டி அடிக்கல் நாட்டப்பட்டது. கோபுரத்தின் கூடவே ஒரு கொடிமரமும் கட்ட ஏற்பாடாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஸ்தபதிகள் வந்து வேலைகளை ஆரம்பித்து விட்டனர். பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை மனம் உவந்து முருகன் ஏற்றுக்கொள்வதில் நம் யாவருக்கும் மகிழ்ச்சி. இந்த வேலை தடைபடாமல் மளமளவென்று நடந்து முடிப்பது எல்லாம் உங்கள் கையில் இருக்கிறது. கோபுர வேலைகளுக்குத் தேவையான செங்கல், மணல், இரும்பு, சிமெண்ட்டு, ஜல்லி, பெயிண்ட் என்று உங்களுக்கு விருப்பமான பொருட்களுக்கு நன்கொடை அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தத் திருப்பணியில் சேர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
எஸ்.பி. இராஜசேகரன்,
பொதுச்செயலாளர்.
திருப்பணிக்கு நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி:
Lord Murugan Bhaktha Samajam (Regd)
Sri Karthikeya Swamy Temple
Air Force Temple Complex
sector 31 D Chandigarh- 160047
வங்கியில் நேரடியாக பணம் செலுத்த:
Canara Bank SB Account # 1625101010866
கோவிலில் வலத்தளத்தில் முழுவிவரத்தையும் பார்க்க. http://www.chandigarhtamilsangam.in/
தொலைபேசித் தொடர்புக்கு: 0172 2611191 செல்பேசி எண் 09417340609 மின்மடல்: karthikeyaswamychd@gmail.com ========================================================================
ஏற்கெனவே கருவறை விமானம் ஒன்னு அழகிய சுதைச்சிற்பங்களுடன் இருந்துச்சு. டைனிங் ஹால் வழியா அங்கே போக வழியும் இருக்கு. உயரம் குறைவு என்றபடியால் தெருவில் இருந்து பார்த்தால் இது தெரியாது. மேற்கூரை முழுதும் தளம் அமைச்சு மொட்டை மாடியாகவும் நடுவிலே ஒட்டிப் பிடிச்சதைப்போல இந்த விமானமும் இருக்கும்.
கட்ட ஆரம்பிச்சு நாலே மாசத்தில் அஞ்சு நிலையும் முடிஞ்சுருச்சு. நாங்க சண்டிகரில் இருந்து கிளம்பும் சமயம் அது. சுதைச்சிற்பங்கள் எல்லாம் இனிமேல்தான் செய்வோமுன்னு ஸ்தபதி தியாகராஜன் சொன்னார். அதுக்குதான் நாள் நிறைய ஆகுமாம்.இவருக்கு வெளிநாடுகளில் நிறைய கோவில்களுக்கு ஸ்தபதியா இருந்த அனுபவம். நம்ம சென்னை எல் பி ரோடில் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சுக்கு எதிரில் இருக்கும் மாரியம்மன் கோவில் கூட இவர் கைவண்ணம்தான். மகாபலிபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில் படிச்சவர்.
பொம்மை செய்யறதைக் கூட இருந்து பார்க்க முடியலை என்று மனவருத்தப்பட்டேன். கோபுரத்தில் வச்சுப்பிடிக்க நிறைய காங்க்ரீட் சமாச்சாரங்கள் மோல்ட் பண்ணி வச்சுருந்தாங்க.
ஆச்சு. 15 மாசங்களில் எல்லா வேலைகளும் முடிஞ்சு கோபுரம் கும்பாபிஷேகத்துக்குத் தயாரா நிக்குது. ஸ்ரீதேவி பூதேவியருடன் ஸ்ரீநிவாசப்பெருமாள், பத்மாவதித் தாயாருடன் ஸ்ரீவெங்கடேசன், பாற்கடலில் பள்ளி கொண்ட அநந்த பத்மநாபன், வெண்ணைத்தாழிக் கண்ணன், காளிங்க நர்த்தனம், ஈசனும் உமையும் என்று அருமையான சிற்பங்களுடன் நூதனராஜ கோபுரம்!
கோவிலுக்குள்ளே கடவுளர்கள் மீனாட்சி, நர்மதேஸ்வரர், காலபைரவர், பாலமுருகன், சரஸ்வதி ஆகியோருக்கு கூடுதல் சந்நிதிகளும் கட்டி இருக்காங்க.
விழாவுக்கான அழைப்பிதழ் இத்துடன் அனுப்புகிறேன். நேரில் போக முடிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் இருந்த இடத்தில் இருந்தே மானசீகமா தரிசனம் செஞ்சு அருள் பெறலாம் எங்களைப்போல!
முருகா முருகா!
PIN குறிப்பு: அதான் கோவில் கட்டி முடிச்சாச்சேன்னு இருக்காமல் பொருளுதவி செய்ய யாருக்காவது விருப்பம் இருந்தால் மேலே உள்ள இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஆவிக்கு சொன்னதே உங்களுக்கும்:-))))

5/23/2012 06:15:00 PM
14
comments
Labels: அனுபவம்
Monday, May 21, 2012
ராஜாவிடம் இருக்கும் காசெல்லாம் அவருடைய அப்பா சேர்த்ததாம்!
நெசமாவாச் சொல்றீங்க? ஆமாம் மேடம். அப்ப அவர் சேர்த்துவச்சதால்தான் என் பிழைப்பு நடக்குது! இல்லேன்னா இந்த ஜென்மத்துலே என்னாலே இவ்வளோ காசு சேர்க்க முடியுமா?
சில்லறை சமாச்சாரம்!
குவியலாக் கொட்டி வச்சுருந்த காசுகளைக் கண்டதும் கண் பெற்ற பயனைக் கண்டுகொண்டேன். அகலவிரிஞ்ச கண்களைப் பார்த்ததும் நம்ம ஆர்வம் ராஜாவுக்குப் புரிஞ்சு போச்சு. கொஞ்சம் இங்கேயே இருங்க. தோ வந்துடறேன்னு சொல்லிட்டு ஓடுனேன். காசு வெயிட் பண்ணும் ஆனால் கடவுள் வெயிட் பண்ண மாட்டாரே........ ஆனால்.....ராஜா பொறுமை காத்தார். இடம் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வாசல்.
வீட்டில் அங்கங்கே காசு வைக்கும் பழக்கம் நம்ம ஜீனில் இருக்குபோல பாட்டிக்கு இருக்கும் சில செண்டிமெண்டுகள் நம்மை அறியாமலேயே மெதுவா பேத்திகளின் மனசில் புகுந்துருது. அஞ்சறைப்பொட்டியில் கடுகு இருக்கும் பாருங்க அதுலே கைவிட்டால் காசு கட்டாயம் தட்டுப்படும். கால மாற்றத்தால் இப்ப மாடர்னா இருக்கும் மஸாலா டப்பாவிலும்....... டாலர்.
ஒரு சமயம் ஹளபேடு போனப்ப கோவில் வாசலில் பழைய காலக்காசுகள் ரூபாய், அணா, தம்பிடின்னு சொல்லும் பைசா இப்படி நாப்பது காசுகளை பேரம் பேசி 100 ரூபாய்க்கு வாங்குனேன்.
தபால்தலை சேகரிக்கும் பழக்கம்போல் வெளிநாட்டுக் காசுகள் சேகரிச்சு வைக்கும் வழக்கம் எப்படி எப்போ ஆரம்பமாச்சுன்னு தெரியலை உலகை இடம்வந்தபோது கையில் கொஞ்சம் சேர்ந்துபோன சில்லறைகள் காரணமாக இருக்கலாம். ஃபேன்ஸியாப் போட்டு வைக்கத் தேடுனதில் ஒரு முழ உசர பாட்டில் கண்ணில் ஆப்ட்டது. நம்ம கோபாலும் அடிக்கடி எங்கியாவது போய்வந்துக்கிட்டு இருக்காரா..... அவர் (நமக்காகக்) கொண்டு வரும் சில்லறைகளையும் சேகரிக்க ஆரம்பிச்சதில் 'பாட்டில் நிரம்பி வழிஞ்சதுதான் மிச்சம். இன்னொரு பாட்டில் வாங்கிக்கணும்.
ஓமான் போனப்ப பழைய வெள்ளி நாணயங்கள் அஞ்சு வாங்கியாந்தார். அதுலே ஒன்னில் அன்கட் எமரால்ட் நடுவிலே வச்சு பெண்டண்ட்டா செஞ்சது ஒன்னும் இருந்துச்சு. அழுக்கா இருந்த கருப்புக்கல்லைக் கழுவினால்.... பளீர்ன்னு பச்சை மின்னுது (வெயிலில் வச்சுப்பார்த்தால்)!!!!
சின்னத் தள்ளுவண்டியில் ஏழெட்டு கூறுகளாக் காசுகளைப்போட்டு வச்சுருந்தார் ராஜா. எப்படி இந்த வியாபாரத்தில் ஈடுபாடுன்னதுக்கு.... தகப்பனார் நிறைய கலெக்ஷன் வச்சுருந்தாராம். அதுலே இருந்து ஆர்வம், வந்துச்சுன்னார். இப்போ இதுவே பிழைப்புக்கான ஆதாரமா ஆகி இருக்கு.
கருப்புக்கண்ணாடி அணிந்தவர் ராஜா. படம் எடுக்கும்போது சாலையில் போய்க்கிட்டு இருந்த ஒருவர் எப்படி சிரிச்சமுகமா போஸ் கொடுக்கறார் பாருங்க:-))))
சோழர்கள் காலத்துக் காசுகளில் இருந்து பழைய ஓட்டைக் காலணாவரை வச்சுருக்கார். முறம் மாதிரி அப்பத்து ஆயிரம் ரூ.நோட்டு! விசேஷமா அரசாங்கம் வெளியிடும் நூறு ரூ, பத்து ரூ காசுகள். அபூர்வ கலெக்ஷ்ணா வச்சுருக்கும் பல காசுகளை தள்ளுவண்டிக்குள்ளில் இருந்து எடுத்தார். அவை எல்லாம் விற்பனைக்கு இல்லையாம். நம்ம ஆர்வத்தைப் பார்த்துட்டு.....காமிச்சாராம். அப்பாவின் கலெக்ஷன். அப்பா என்னும்போதே கண்களில் ஒரு ஒளி. ) 'அவரைப்பற்றிய விவரங்கள் பாருங்க 'ன்னு தினசரிகளில் வந்ததைக் காமிச்சார். எழுபதுகளின் கடைசியில் வந்தவை
பெயர் கத்ரிவேலு.( கதிர்வேலுவை இப்படிப் போட்டுருக்காங்களோ?) யோகா மாஸ்ட்டர். உடற்பயிற்சி ஆசிரியர். தண்ணீருக்குள்ளில் இருந்து யோகாசனங்கள் செய்வாராம்! ஏராளமான பத்திரிகை சேதிகள் கட்டிங் ஒரு பெரிய ஃபோல்டரில் இருக்கு. ஒவ்வொன்னாப்பார்க்க நமக்கு நேரம் இருந்துட்டாலும்...... ஹூம்..
பழைய காலக் காசுன்னதும் சட்ன்னு நம்ம ராமன் அவர்களின் ஞாபகம் வந்துச்சு. இவர்கிட்டே இருப்பது பொக்கிஷம்! காசு மட்டுமா..... பழங்கால அரிய பொருட்கள் வகைவகையா வீட்டில் வச்சுருக்கார். பர்மனென்ட் கொலு! ஒவ்வொன்னுக்கும் தனிப்பெயர்கள். நான் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை! அவர்வீட்டுக்கு அவசரடி விஸிட் போனதில் கண்ணால் கொஞ்சம் அள்ளிக்கிட்டு வந்தேன். கையிலேதான் கேமெரா இருந்துச்சே.... க்ளிக்காவது செஞ்சுருக்கலாமுல்லெ? கண்கள் விரிய வா பொளந்து நின்னதுலே கைகள் அதுபாட்டுக்கு தேமேன்னு நின்னுபோச்சு:(
மதுரை நாயகர் காசுகள் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு இருக்கார். எம்பத்தி ஆறு காசுகளின் படங்களும் அதன் எடை உட்பட மொத்த விவரங்களும் அதுலே இருக்கு. ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு அருமையான துணை! எனக்குக்கூட ஒரு பிரதியில் கையெழுத்துபோட்டு பரிசளித்தார்.
ஒருவகையில் பார்த்தால் ராமன் நமக்கெல்லாம்கூட சொந்தம்தான். பிரபல பதிவரும் நம்ம துளசிதளம் (சரித்திர) வகுப்பில் சட்டாம்பிள்ளையாகவும் இருக்கும் கொத்ஸின் உடன்பிறந்தவர்!
இவரைப்பற்றி நம்ம பா ரா ஒருசமயம் எல்.பி.ரோடில் அரிக்காமேடு என்று பதிவு செஞ்சுருக்கார்.
ரெண்டு மாசம் முந்தி சண்டே மார்கெட்டில் ஒரு பிஸ்கட் டின்னில் முக்காவாசி வரும் காசுகளை 25 ன்னு சொன்னார் கடைக்காரர். 20க்கு பேரம் படிஞ்சது. வீட்டிற்கு வந்து பார்த்தால்..... அடிச்சேன் லக்கி ப்ரைஸ்ன்னுதான் சொல்லணும். ஒரு ஆறேழு நாட்டுக் காசுகள் இருக்குன்னாலும் (commemorate coins) உள்ளூர் விசேஷ வெளியீடுகள் நாலைஞ்சு இருக்கு. அதுலே 1967 இல் ஷில்லிங், பென்ஸ் காலம் மாறி தசாம்ச நாணயங்கள் வந்ததை சிறப்பிக்கும் ஒன்னும் 1981 இல் மாட்சிமை தாங்கிய ராணியம்மா வருகையை முன்னிட்டு வெளியிட்டதும் இருக்கு.
ஆல்ப்ளாக்ஸ் ஆட்டக்காரர்களுக்காக வெளியிட்ட நினைவுக் காசுகளும் அதுலே நிறைய இருந்தன. ஸ்கூல் பசங்க பார்த்தால் விடாது!
உள்ளூரில் தபால்தலை, காசுகள், இப்படி சேகரிப்பு ஐட்டம் விற்கும் ஒரு கடை முந்தி சிட்டி செண்டர் பக்கம் இருந்து நிலநடுக்கத்தால் ரெட் ஸோனில் மாட்டிக்கிட்டு இப்போ காணாமப் போனவைகளில் ஒன்னா ஆகிப்போச்சு. நமக்குக் கிடைச்ச காசை செலவில்லாமல் மதிப்பீடு செஞ்சுக்க எதாவது வகை இருக்கான்னு தேடுனப்ப நம்மூர் ட்ரேட் மீ Trademe ஆப்ட்டது. இவ் வகைக் காசுகளைத் தனித்தனியா விக்கறாங்க. ஒவ்வொன்னும் 80, 100ன்னு விலை போட்டு வச்சுருக்காங்க. ஆஹா..... இருவதே டாலர்க்கு உண்மையாவே லக்கி ப்ரைஸ்தான்.

5/21/2012 03:27:00 PM
35
comments
Labels: அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
.jpg)