Showing posts with label tamil movie. Show all posts
Showing posts with label tamil movie. Show all posts

Monday, June 16, 2008

கமல் படத்தை நானும் பார்த்துட்டேன்.

கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமுன்னு. 'கமலோட படம் இருக்கு. வாங்கிட்டு வரட்டுமா?' முந்தாநாள் கோபால் மலேசியாவிலே இருந்து ஃபோன் செஞ்சப்ப , 'வெல்லம் வேணான்னு சொல்லமுடியுமா?' கட்டாயம் வாங்கியாங்க. ஆனால் எல்லாம் கள்ளக்காப்பியா இருக்கப்போகுது. ப்ரிண்ட் எப்படி இருக்கோ? நல்லாச் செக் பண்ணிட்டு வாங்குங்க. நல்லாத்தான் இருக்கு. கடைவச்சே விக்கறதாலே பிரச்சனை இருக்காது'ன்னார்.


இப்படி இங்கெ ஒரு வீடியோக் கடையில் நிறையப் படங்கள். எல்லாம் மலிவா( நியூஸிக் காசுக்கு) இருக்கு. சில பெயர்களைச் சொல்லி வாங்கிவரேன்னு சொன்னார். ஆசைஆசையா விவரமெல்லாம் கேட்டுட்டு, 'கொண்டுவந்துருங்க'ன்னுட்டேன்.


கொண்டுவந்ததில் இதுவரைப் பார்க்காத படம் ஒன்னு இருக்கு. அதுதான் இன்னிக்கு:-)

முதல்நாள் முதல் காட்சி(நம்ம வீட்டில்!)


சென்னைத் தெருக்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு. கடற்கரையில் கூட்டமே இல்லை. ஒரு சின்னப் பொண்ணுப் பாடிக்கிட்டேக் கைமுறுக்கு வித்துக்கிட்டுப் போறாள். ஈவ் டீஸிங் ஒன்னும் இல்லை.அவனவன் பாட்டுக்கு அவனவன் சோலியைப் பார்த்துக்கிட்டு இருக்கான்.


தர்மநியாயம் எல்லாம் தவறாமக் கடைப்பிடிக்கும் ஊர் மக்கள். நாயகி பஸ் ஏறும்போது கீழே விழுந்த புத்தகத்தை நாயகன் எடுத்துத் தர்றான். இதுலே என்ன அதிசயம்? நிதானமா அவன் எடுத்துத் தரும்வரை பஸ்ஸைக் கிளப்ப விசில் கொடுக்காம, 'சாவு கிராக்கிகளா...சீக்கிரம் ஏறுங்க. இது என்ன ஒங்கப்பன் வீட்டு வண்டியா?'ன்னு கேக்காம பொறுமை காக்கும் கண்டக்டர் உலக மகா அதிசயம் இல்லையா?


"சரிதான்.மெட்ராஸ்க்குப் புதுசுன்னு சொல்லி இருப்பான். டாக்ஸிக்காரன் சுத்தோ சுத்துன்னு சுத்தி மீட்டர் 20 ரூபாய் ஆனதும் கொண்டுவந்து விடுவான்'
இப்படி(யும்) ஒரு வசனம்!!!!


கதாநாயகனைவிட விஜயகுமார் முகத்தில் நல்ல களை. ஹேண்ட்சம்!
மெட்ராஸில் முதல் சூப்பர் மார்கெட் டி யூ சி எஸ்.
படத்தோட கதை புஷ்பா தங்கதுரை.


வெறும் 32 வருசத்துலே ஊரையே நெரிசலாப் பண்ணி அசிங்கம் செஞ்சுவச்சுட்டாங்களேன்னு இருக்கு. முட்டுக்காடு படகு ஜோர்.


ஆமாம். ......கறுப்பு வெளுப்புப் படத்தில் ஊதாப்பூ எங்கே தெரியுது?