Showing posts with label Rasberry. Show all posts
Showing posts with label Rasberry. Show all posts

Wednesday, December 10, 2008

ரத்னேஷ்: சீனியர் & ஜூனியர்.

இந்த வருசம் நம்ம வீட்டுத் தோட்டத்துலே மகசூல் தாராளமா இருக்கு.

டாக்குட்டர் வேற பழங்கள் சாப்புடுங்கன்னு சொல்லிட்டார்.அதுவும் ஃப்ரெஷாச் சாப்புடுங்கன்னு.

இதைவிட ஃப்ரெஷுக்கு எங்கே போறது?



தினம் ஒரே ஒரு கை(அளவா இருக்கணுமுலே?) நிறையப் பறிச்சோமா, தின்னோமா ன்னு இருக்கணும்.

கோபால் வேற ஊருலே இல்லீங்களா.......

தனியாவே முழுங்க வேண்டியதாப் போச்சுங்க(-:








பழுக்காமக் காயா இருக்கும்போது பார்க்க அவ்வளோ அழகா இல்லை(-:

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று. வலது பக்கம் பூ.



ராஸ்பெர்ரி பல நிறங்களில் இருக்குது. ஒரு ஏழெட்டு வகை கறுப்பு, மஞ்சள் ( இதை கோல்டன் ராஸ்பெர்ரின்னு சொல்றாங்க) பர்ப்பிள், லேசா ஆரஞ்சு ன்னு. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த அழுத்தமான பிங்க், ரெட் இதுதான்.

வைட்டமின்கள் ஏ, கே, சி, மாங்கனீஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலெட், பொட்டாசியம், இரும்புச்சத்துன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இந்த ராஸ்பெர்ரியில் அடங்கிக்கிடக்கு. இத்தனைக்கும் ரொம்பச் சின்னப் பழங்கள். ஒவ்வொன்னும் 3 கிராம் எடை இருந்தாவே அதிகம்.

இந்தச் செடிகளில் பூக்கும் பூவுலே, இருக்கும் நெக்டர் (தேன்னு சொல்லலாமா) வண்டுகளுக்கும் தேனீக்களுக்கும் ரொம்பப் பிடிக்குமாம். ஆமாம்ப்பா. ஒரே பம்பிள் பீ கூட்டமா மொய்ச்சுக்கிட்டு இருக்கு அங்கே.

இந்த செடியின் ( செடி என்ன செடி? புதர்ன்னு சொல்லலாம்) இலைகள் மருத்துவ குணம் நிறைஞ்சதாம். மூலிகை தேநீர் போட்டுக் குடிக்கலாமாம். பெண்களுக்கு வரும் மாதவிலக்கு சம்பந்தமான வலிகளுக்கு கைகண்ட நிவாரணியாம் இந்த இலை போட்டுச் செஞ்ச 'டீ'.

இந்தப் பழங்களும் லேசுப்பட்டதில்லை. பட்டியலைப் பாருங்க.
inflammation, pain, cancer, cardiovascular, disease, diabetes ,allergies, age-related cognitive decline, degeneration of eyesight with aging......

பேசாம சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்துன்னு சுருக்கமாச் சொல்லிக்கலாம். தினமும் சாப்பிட்டா மேற்கண்ட வியாதிகள் வராம உடலைப் பேணிக்கிட்டு, உடல் பலத்தோடுத் தினம் தினம் பதிவு எழுதலாம்,இல்லை.

ஆனால் வெறும் கோடைகாலத்துலே மட்டும்தான் பழங்கள் சீஸன். குளிர் வந்தவுடன் இந்தச் செடிகளும் இலைகளை உதிர்த்துட்டுக் குச்சிகுச்சியா நிக்குது. வெறுங்குச்சின்னுட்டு இதையெல்லாம் பிடுங்கிப்போடப் பார்த்தவர்கிட்டே இருந்து நம்ம செடிகளைக் காப்பாத்துன பெருமை யாருக்குன்னு உங்களுக்குத் தனியாச் சொல்லணுமாக்கும்!

இந்தச் செடிகளுக்குத் தானாவே அப்படியே பரவிப் பல்கிப் பெருகும் குணம் இருப்பது நல்லதாப் போச்சு. ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இந்தச் செடிகளை நடணுமாம். சில வருஷங்களில் அப்படியே எல்லா இடத்தையும் அடைச்சுப் புதர்கள் உருவாகிரும். (நம்ம வீட்டுலே முந்தி இருந்த பாட்டி செஞ்ச கைங்கரியம். இப்ப நமக்கு பலன் தருது)


ஆமாம் இப்ப எதுக்கு இப்படி ஒரு தலைப்புன்னு கேக்கறீங்களா?

ம்ம்ம்ம்ம் மாட்டீங்களே..... அதையும் இவளே சொல்லிட்டு போட்டுமுன்னுதானே?


போனவருசம் ராஸ்பெர்ரி பதிவு போட்டப்ப,


RATHNESH said...

மேடம்,

// பழங்களைத் தினம் பறிச்சு ஃப்ரெஷா முழுங்கிக்கிட்டு இருக்கேன், can you ever get fresher than this?னு:-)))'

தினம் பழம் சாப்புடணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க:-)//

ஒருவார காலத்துக்குள் உங்களுக்கு உத்தரவாதமாக வயிற்றுவலி வரா விட்டால் ஒர் தமிழ்ப் பழமொழியே தப்பாகிவிடும் அபாயம் இருக்கிறதே!


இந்தவருசம் என்னன்னா அவரை ஆளையே காணோம். அஸாம்லே இணையம் இணைப்பு எல்லாம் சரியாச்சோ என்னவோ..........

இந்தப் பதிவுதான் நம்ம ரத்னேஷுக்கு நாமெல்லாம் சேர்ந்து அனுப்பும் ஃப்ரெண்ட்ஷிப் கார்ட்.

வாங்கப்பா எல்லாரும். கார்டுலே (பின்னூட்டக்)கையெழுத்துப் போட்டுப்போங்க.