Showing posts with label Kris shop. Show all posts
Showing posts with label Kris shop. Show all posts

Sunday, July 13, 2008

புதுத் துடைப்பமும் புதுக் கேமெராவும்

மனுசனைச் சும்மா இருக்க விட்டாலும்.............
ஃப்ரீயாக் கொடுத்தா ஃபினாயிலும் குடிப்போமுன்றது இவுங்களுக்கு எப்படித் தெரியும்? நான்பாட்டுக்கு அக்கடான்னு நிம்மதியா இருந்தேன், நான் உண்டு என் கோபால் & கோகி உண்டு, அப்புறம் என் பதிவும் தமிழ்மணமும் உண்டுன்னு.


250 டாலரை அனுப்பி எதாவது வாங்கிக்கோன்னு சொன்னாங்க. பரவாயில்லையேன்னு உடனே புகை விட வேணாம். கேஷாக் கொடுக்கலை. எல்லாம் வவுச்சர்தான். உள்ளூர்க் கடைகளில் செலவு செய்யறமாதிரி கொடுக்கக்கூடாதா? ஊஹூம்...... இருந்துக்கிட்டே வாங்காதே பறந்துக்கிட்டே வாங்குன்னு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் க்ரிஸ் ஷாப்லே வாங்கிக்கணுமாம்.


தூக்கிக் கடாசலாமுன்னா மனசு கேக்குதா? ஓடிப்போய் அவுங்க தளத்துலே என்னென்ன கிடைக்குதுன்னு பார்த்தால்.........வாசனை திரவியம்(??) முதல் தங்கமுலாம் பூசுன சொப்ஸ்டிக் வரை என்னென்னமோ கிடக்கு. எனக்கு இதைப் பிடிச்சுத் தின்னத் தெரியாது அதனால் வேணாமுன்னுட்டேன்.


யோசிச்சுப் பார்த்து நல்லதா எதாவது வாங்கிக்கலாம். அதான் கோபால் எப்பவும் போய்வந்துகிட்டுத்தானே இருக்காருன்னு ஒரு அசட்டை. திடீர்னு ஒரு நாள் இவர் சொல்றார், "வவுச்சரோட ஆயுள் அடுத்த மாசம் முடியப்போகுது. சீக்கிரம் எதாவது பார்த்துச் சொல்லு"


ஒன்னும் சரியாத் தேறலை. ஸ்வராஸ்கி கிறிஸ்டல் நெக்லெஸ் 190க்கு போட்டுருக்கு. வெள்ளியில் செஞ்சது. மகள் போட்டுக்குவாள்னு அதை வாங்கச் சொன்னேன். இன்ஃப்ளைட்லே வாங்கிவந்தார். அதுக்கப்புறமும் 60 மிச்சம் கிடக்கு. விட்டுறமுடியுதா? காலாவதி ஆக ஜஸ்ட் ஒரு நாள் இருக்கும்போது ஒரு டைட்டானியம் 4GB பென்ட்ரைவ் வாங்கிவந்தார். பத்தோ, பதினைஞ்சோ கூடப்போட்டுக் கொடுத்தாராம். தொலையட்டும். எப்படியோ 250 செலவு செஞ்சுட்டேன்னு நிம்மதியா இருந்தா அடுத்த வாரமே தபாலில் இன்னொரு இடி வந்து விழுந்தது. இன்னொரு 250 வவுச்சர்:-)


ஆளும்பாழுமாக்காம இந்த முறை உஷாரா இருக்கணும். வாண்ட் லிஸ்ட்லே இப்ப இருப்பது டிஜிட்டல் வீடியோ கேமெரா. தேடிக்கிட்டே வந்தா...ஆ...ஆப்ட்டுடுச்சு. The RANGER HD DVGenius 700 Digital Video Camcorder. பேரே பிடுங்கித் தின்றது மாதிரியில்ல இருக்கு!!!!சினிமா குவாலிட்டியில் படம் எடுக்கலாமாம்..அட! பரவாயில்லையே. எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவங்க எடுத்த சினிமாவையே பார்க்கறது? இனிமே சொந்தப் படம்தான். ஜோதிகா கிட்டே கேட்டுப்பார்க்கணும்:-)))



வலையில் பார்த்தால் நல்லாதான் இருக்கு. வர்ணனையோ அபாரம். ஆனா.......மெயில் ஆர்டர்லே மட்டுமே கிடைக்குமாம். அதே க்ரிஸ் ஷாப்தான். எக்ஸ்க்ளூசிவ் ஐட்டமாம். ஊனக்கண்ணுலே பார்க்க எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சா நல்லது. தேடித்தேடியும் கிடைக்கலை. சிங்கை தயாரிப்பு. (சீனா இல்லை என்பதே கொஞ்சம் மனஆறுதல்)



எப்படியும் ஒரு சுற்றுலா வருதே. அதுக்குப் பயனா இருக்குமேன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு ஆர்டர் செஞ்சாச்சு. இந்த முறை கூடப்போட்டுக் கொடுத்தது 150.

ரெண்டுவாரத்துலே (இவர் ஊரில் இல்லாதப்ப) கூரியர் வந்துச்சு. பெரிய அட்டைப் பெட்டி. ஒன்னரைக் கிலோன்னு எழுதி இருந்தது. 'பாஸ் த பார்ஸல் கேம்' போல ஒன்னொன்னாப் பிரிச்சேன். கட்டக்கடைசியில் இருந்த அட்டைப்பொட்டியிலே கைக்கு அடக்கமா ஒரு கேமெரா. கையேடைப் படிச்சப்ப, விருப்பப்பட்டால் மெமரி கார்ட் போட்டுக்கும் இடமுன்னு படம்போட்டுப் பாகங்களைக் குறிச்சிருக்கு. சரிதான். ஏற்கெனவே பில்ட் இன் மெமரி இருக்குபோல. எதுக்கும் எஸ்டி கார்ட் பொதியில் இருக்கான்னு பார்த்தால் ஒன்னுமில்லை.



இமெயில் எதுக்கு இருக்கு? தட்டிவிட்டேன் ஒன்னு. 'கஷ்டம்மர் கேர்'லெ இருந்து பதில் வருது, அதை நீயே வாங்கிக்கணுமுன்னு(-: அதுக்குள்ளே கோபால் வந்துட்டார். இன் பில்ட்லே 10 வினாடிக்கு வீடியோ எடுக்கலாம். இதுலே சினிமா எடுத்தா......விடிஞ்சது போங்க. இல்லைன்னா 12 ஃபோட்டோ. .எங்க லோக்கல் மார்கெட்டில் எல்லாம் தீப்பிடிச்ச விலையாச்சா..... மறுவாரம் இவர் சிங்கை வழியா வந்தப்ப அங்கே ட்யூட்டிஃப்ரீயில் 30க்கு ஒரு 4GB எஸ்டி கார்டு வாங்கியாந்தார். இதைவச்சு 3M லே 3680 படம் இல்லேன்னா 132 நிமிச வீடியோ ( அப்பாடி.... தமிழ்ப்படத்துக்குச் சரியா இருக்கும்)



ஆமாம். இப்ப எதுக்கு இந்தக் கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கேன்?


அந்த ஜீனியஸை சரியா இயக்க 'இந்த ஜீனியஸுக்கு'த் தெரியலை. ரெஸல்யூஷன் சரி இல்லை போல. ஃபிஜியில் எடுத்த படங்கள் எல்லாம் ரொம்பச் சுமாராத்தான் வந்துருக்கு.


அடுத்தவாரம் மெயிலில் இன்னும் வவுச்சர் மட்டும் வரட்டும்.....மவனே.........எவ்வளோ கொடுத்தாலும் தாங்குவான்னா நினைப்பு?

கேமெரா ஒன்னும் சரியில்லை. இல்லைன்னா நம்ம ரேஞ்சே வேற! அதுக்காக நல்ல பாயிண்ட் ஒன்னுமே இல்லைன்னு நினைச்சுறாதீங்க. கைப்பைக்குள்ளே வச்சுக்கும் அளவுலே அடக்கமா இருக்கு.:-) அப்ப 40GB மெமரியோட சோனி இங்கேயே சேலில் இருந்துச்சு 599க்கு. மரியாதையா அதையே வாங்கி இருக்கலாம்.




புதுத் துடைப்பம் ரொம்ப நல்லாப் பெருக்கும். புதுக்கேமெரா?
சுமாராத்தான் (படம்) எடுக்கும்.


ஆடமாட்டாதவளுக்குக் கூடம் கோணலாமே. நெசமாவா?