உள்ளூர்த்தோழி சும்மா ஒரு விஸிட்ன்னு வந்துருந்தாங்க. காலை ஒரு 11 மணி இருக்கும். பகல் சமையலுக்கு என்ன செய்யலாமுன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு இருந்த நேரம். காஃபி ஒன்னு குடிச்சுட்டு ரெண்டு பேருமாக் கொஞ்சநேரம் அரட்டைஅரங்கில் இருந்தோம். அப்பதான் தோணுச்சு பரிசோதனைக்குப் புது ஆள் இருக்கும்போது...... விடமுடியுமா?
மிக்ஸட் வெஜிடபிள், தாமரைத்தண்டு துண்டுகள் சிலன்னு போட்டு ஒரு ஃப்ரைடு ரைஸ் செஞ்சேன். அதுலே துள்ஸி ஸ்டைலில் கொஞ்சம் முந்திரிப்பருப்பு , திராக்ஷை நெய்யில் வறுத்துக் கலக்கியாச்சு. ஒரு மணி போல கோபாலும் லஞ்சுக்கு வந்துட்டார்.
சாப்பாடு பரிமாறினப்ப, தொட்டுக்க பச்சடி எடுத்து விளம்பினேன். தின்னு பார்த்த தோழியின் முகம் மலர்ந்தது. அட! மாங்காய்ப்பச்சடியா!!!! அம்மச்சி எப்பவும் செய்வாங்கன்னார். தோழி மலேசிய இந்தியர். சாப்பிட்டு முடிக்குமுன் இன்னும் கொஞ்சம் எடுத்துத் தட்டுலே போட்டுக்கிட்டு, 'எவ்வளோ நாளாச்சு மாங்காய் தின்னு...... ரொம்ப நல்லா இருக்கு....'
சக்ஸஸ்!!! மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன். நேத்து கோபாலுக்கு லஞ்சுக்கு பச்சடியும் பெங்களூர் கத்தரிக்காய் கறியும் சப்பாத்தியுமா சிம்பிளா செஞ்சு கொடுத்தேன். அப்பவும் பச்சடியைத் தின்னு பார்த்துட்டு, 'மாங்காய் ஏதும்மா?? 'ன்னு கேட்டதோடு சரி. சக்ஸஸ் சக்ஸஸ்.
இரவு டின்னருக்கு மகள் வந்துருந்தாள். பரிசோதனை எலி எண் 3. பச்சடியைத் தின்னதும் நல்லா இருக்கான்னு கேட்டேன். 'நிறையதடவை செஞ்சுருக்கீங்களே. இப்ப என்ன கேள்வி. மேங்கோ இஸ் நைஸ் அண்ட் டேஸ்ட்டி '. சக்ஸஸ் சக்ஸஸ் சக்ஸஸ். வருசப்பிறப்பன்னிக்கு நம்ம ரோஷ்ணியம்மா மாங்காய்பச்சடி செஞ்சேன்னு சொல்லி பதிவில் எழுதி இருந்தாங்க. அன்னிக்கு வல்லியம்மாவிடம் பேசுனபோது இதேதான். அவுங்க மரத்துலே ஏகத்துக்கும் காய்ச்சுக்கிடக்கு. ஊறுகாய் எல்லாம் போடணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஹூம்..... கூந்தல் இருக்கறவங்க...... அள்ளி முடிஞ்சுக்கறாங்க. நாமோ......
புழக்கடையில், துவைச்ச துணிகளைக் காயப்போட்டுட்டுப் பார்வையை அகஸ்மாத்தா அந்தப்பக்கம் திருப்பினால்..... அட! எப்படி இதை மறந்தேன்? ஏகத்துக்கும் காய்ச்சு, பறிக்க ஆளில்லாமல் கீழே விழுந்து கிடக்கு.
ரோஷ்ணியம்மாவுக்கு எசைப்பாட்டு பாடியே ஆகணும். மரத்துலே இருந்து ரெண்டு பறிச்சுக்கிட்டு வந்தேன். நம்மாத்து க்ரானி ஸ்மித். அஸ்ட்ராலியாக் கண்டுபிடிப்பு. முதல்முதலா 1868 லே 'மரியா ஆன் ஸ்மித்' என்ற பெண்மணி ஓட்டுச்செடி மூலம் விளைவிச்சதாம் இது. அதான் அந்தம்மா பெயரையே வச்சுட்டாங்க. கண்டுபிடிப்பை ஆண்டுஅனுபவிக்காம அடுத்த ரெண்டாம் வருசம் அந்தம்மா சாமிகிட்டே போயிட்டாங்க. அப்போ வயசு 71.
ஒரு நாலு வருசம் முன்பு, இந்த ஆப்பிளை ஒருமாதிரி ஊறுகாய் போட்டுப் பதிவெல்லாம் போட்டாச்சு கேட்டோ:-) பார்க்கலையா? அடடா....நோ ஒர்ரீஸ். இப்பவும் க்ளிக்கிப் பார்க்கலாம்.
செய்முறை விளக்கம் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பச்சை ஆப்பிள் 2
உப்பு ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் 5
மஞ்சத்தூள் கால்தேக்கரண்டி
அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
நாட்டுச்சக்கரை அரைக் கப்
தாளிக்க:
எண்ணெய் ரெண்டு தேக்கரண்டி
கடுகு முக்கால் தேக்கரண்டி
கருவேப்பிலை ஒரு இணுக்கு.
செய்முறை:
ஆப்பிளைக் கழுவி ரெண்டா வெட்டி நடுவில் இருக்கும் விதையுள்ள கெட்டிப்பகுதியை(Core) வெட்டி எடுத்துட்டுக் கடாசிட்டு பெரிய துண்டமாப் போட்டுக்குங்க. பச்சை மிளகாயைத் துண்டுகளா வெட்டிக்கணும்.
ஒரு பாத்திரத்தில் அரைக்கப் தண்ணீர் ஊற்றி அதுலே இன்த வெட்டிய ஆப்பிள் துண்டுகள், மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அடுப்பில் வச்சு வேகவிடுங்க.( அடுப்பைப் பத்தவைக்க மறக்கவேண்டாம்) அஞ்சே நிமிசத்தில் வெந்துரும். இப்போ சக்கரையைச் சேர்க்கணும். வெல்லம் கிடைச்சால் இன்னும் நல்லது. நான் சாஃப்ட் ரவுண் சுகர் என்று இங்கே கிடைப்பதைப் பயன்படுத்துகிறேன். சக்கரை உருகிக் கலந்ததும் ஒரு கிளறு கிளறிட்டு அரிசிமாவைக் கொஞ்சம் தண்ணீரில் கரைச்சு ஊத்துங்க. எல்லாம் சேர்ந்து ரெண்டு கொதிவந்ததும், தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊத்திச் சூடானதும் கடுகு போட்டு வெடிக்கவிட்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதை எடுத்துப் பச்சடியின் தலையில் கொட்டணும்.
டடா....... மாங்காய்ப் பச்சடி ரெடி:-))))) ரொம்ப சுலபம். பத்துப்பதினைஞ்சு நிமிசத்துலே தயார். இனி பரிசோதனை எலியின் வருகைக்குக் காத்திருந்து பரிமாறவும். அம்புட்டுதான், கேட்டோ:-)))