மொட்டை வெயிலில்! இன்னும் ரெண்டரை மணி நேரத்தைப் போக்கணுமே. ரொம்ப மெதுவாவே அந்த வெறுஞ்சோத்தைத் தின்னாலும் முப்பது நிமிசத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியலை(-: இடைப்பட்ட நேரத்துக்குப் பூம்புகார் போயிட்டுவரலாமுன்னு வினோத் சொல்படிக் கிளம்பியாச்சு. வேகாத வெய்யில்வேற மண்டையைப் பிளக்குது. அங்கே போய் இறங்குனா...... 'முந்தி இது ஆரம்பிச்சக் காலக்கட்டங்களில்' பார்த்த மாதிரி இல்லாமல் என்னவோ வித்தியாசமா இருந்துச்சு. (1972 வது வருசம் போயிருக்கேன்) அப்போ எல்லாம் பிரமாண்டமா இருந்ததா நினைப்பு. இப்ப என்னடான்னா.....சுவரில் புடைப்புச் சிற்பங்களா பலகைபலகையாப் பதிச்சு வச்சுருக்காங்க. அதுக்குக் கீழே ஆங்கில விளக்கங்கள். கண்ணகி சிலையைத் தனியாக ஒரு இடத்திலும் மாதவியைத் தனியாக ஒரு இடத்திலும் அப்பப் பார்த்த நினைவு. இப்போ? ரெண்டு பொண்டாட்டியை நியாயப்படுத்தும் விதமா..... தோட்டத்தில் ரெண்டு சிலைகளும் ஒரே மட்டத்தில். நடுவில் ஒரு சிலம்பு. நாமும் இவர்களை ஒன்னாப் படமெடுக்க முடியாதபடி உள் முற்றவாசல் அடைச்சு வச்சுருக்காங்க. அதுலே இருந்த துளைகளின் வழியா தனித்தனிப் படமா எடுத்தார் கோபால்.
(மாதவிக்குத் தலைக்கோல் பட்டம் கிடைச்சதாம்)
வெளியே படிகளில் நல்லா ஜில்லுன்னு காத்து வருதேன்னு கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். (இதே மாதிரிதான் எல்லாக் கோயில்களிலும் கோபுரவாசலில் நல்லாக் காத்து வருது. வாசல் உயரம் கூடுதலா இருப்பதாலேன்னு நினைக்கிறேன்) நம்மைப்போலவே அங்கே இருந்த இரு இளைஞர்களிடம் ஊர் உளவாரம் பத்தித் தெரிஞ்சுக்கப் பேச்சுக் கொடுத்தால்..... அரசியல் வியாதிகளைக் கிழிகிழின்னு கிழிச்சாங்க. அரசாங்கத்துலே இருக்கும் லஞ்ச லாவண்யங்களைச் சொல்லிப் புலம்புனாங்க. ரோடு சீரமைக்க காண்ட்ராக்ட் எடுத்த கதையைச் சொல்லி அழுதாங்க. இவரோட ரோட் ரோலர் அங்கே வேலை செய்யுதாம். கூட இருக்கும் நண்பர் அதன் ஓட்டுனராம். ஒரு கட்சியும் சரி இல்லை. வேற வழியும் தெரியலை. இதுதான் பல இளைஞர்கள் மனசுலே இருக்கு.பூம்புகார்லே இருக்கோமுன்னு வீட்டுக்குச் செல்பேசினால்...... அங்கே கடற்கரையில் மீன் வறுத்து விக்கறாங்கன்னு தகவல் வருது!! வம்பே வேணாம். ச்சும்மாக் கடற்கரையைப் பார்க்கலாமுன்னு போனால் சில கடைகள் இருந்துச்சு. சங்கு, சோழிகள் அதுலே செஞ்ச கைவினைப்பொருட்கள் இப்படி விற்பனை. அதுக்கு எதிர்ப்பக்கம் சில கைவண்டிகளில் மீன் வறுத்து வித்துக்கிட்டு இருக்காங்க. கிடைச்ச தகவல் மெய்:-)
மூணரை ஆனதும் கிளம்பினோம். நேராக் கீழப்பெரும்பள்ளம். கேதுவின் ஸ்தலம். ரெண்டு பஸ் நிறைய கர்னாடகாவில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள். கோவிலுக்கு வெளியே மண்டபத்தினருகில் அடுப்புப் பத்தவச்சு பெரிய பெரிய பாத்திரங்களில் சமையல் நடக்குது. சிலர் காய்கறிகள் வெட்டிச் சிறுமலையாக் குவிச்சுக்கிட்டு இருந்தாங்க. கோவிலுக்குப் பின்னாலே ஓடும் வாய்க்காலில் குளிச்சுத் துவைச்சுன்னு சிலர். கோவிலைச் சுற்றி இருக்கும் வீடுகளின் வேலியில் புடவைகளும் உள்ப்பாவாடைகளுமாக் காய்ஞ்சுக்கிட்டு இருக்கு! கோயில் குருக்களின் வீடு ( பெயர்ப்பலகை இருந்துச்சே) வசதியான முறையில். முன்பக்கம் ஓய்வெடுக்கும் மக்கள் கூட்டம்.
வேண்டுதல்களுக்கு முடிவே கிடையாதா? ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையும், அதுக்கடையாளமாக இடுப்பு முழுசும் சரடு கட்டி நிற்கும் மரமும்
கோயில் திறந்ததும் முதல்ஆளாப்போய்க் கும்பிட்டுக்கிட்டு நேரா திருவெண்காடு.
திருவிழா முடிஞ்ச இடம் போல இருக்குன்னு உவமை சொல்வாங்க பாருங்க.அதேதான். முதல்நாள் உண்மைக்குமே திருவிழா நடந்து முடிஞ்சதாம். கோயில் வெளிப்பிரகாரம் முழுசும் பந்தலுக்கு நட்ட மூங்கில்களும் குப்பைகளுமா களேபரம். கோயில் உள்ளே போக முடியாதபடி பெருங்கதவு அடைபட்டு இருக்கு. திட்டிவாசல் கதவையும் திறக்க முடியலை. உள்ப்பக்கமா அதுக்குப் போட்ட தாழ்ப்பாள் எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு இருக்காம்.'தாழ் திறவாய் மணிக்கதவே தாழ் திறவாய்.
மறை நாயகன் முகம் காணத் தாழ் திறவாய்
ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்'
ஏ.பி.நாகராஜன் புண்ணியம் கட்டிக்கிட்டார் மகாராஜன் குரலில்
மனசுக்குள் என்னையே நான் பாராட்டிக்கிட்டு முணுமுணுத்துக்கிட்டு இருந்தேன் பாட்டை. (சீனுக்கு ஏத்தது சட்னு நினைவுக்கு வந்துருச்சே)அங்கிருந்த சப்பரம் ஒன்னை உருட்டிக்கிட்டுப்போய் அதுமேலே ஏறி மதில்வழியா கோயில் ஊழியர் ஒருத்தர் உள்ளே இறங்கிக் கதவைத் திறந்தார். இந்தக் கோயில் பற்றி வால்மீகி ராமாயணத்துலேயே குறிப்புகள் இருக்காம். சுமார் மூவாயிரம் ஆண்டுகள் ஆச்சு இதை கட்டின்னு சொல்ராங்க. அங்கிருந்த பெரிய குளத்தில் தெப்போற்சவம் முடிஞ்ச அடையாளமா ட்ரம் மிதவைகளைக் கழட்டி எடுத்துக்கிட்டு இருந்தாங்க,. கோலாகலமா இருந்துருக்கும்போல. மிச்ச எச்சங்களைப் பார்த்தே மனசு கணக்கு போட்டுருச்சு.
செல்லம்போல அட்டகாசமான நந்தி ஒன்னு. பளபளன்னு ஜொலிச்சுக்கிட்டுக் கம்பிக்கூண்டில் உக்கார்ந்துருக்கு. சாப்பாடு ரொம்ப பலமோ என்னவோ..... அருமையா நாக்கை நீட்டி மேலுதட்டைத் துழாவியடி ...அடடா நகையும் நட்டுமா என்ன ஒய்யாரம். பக்தர்களுடைய புலம்பல்களைக் கேட்டுக்கேட்டுக் காதுகூட விடைச்சு ,நிமிர்ந்துருக்கு:-) இது புதனுக்குரிய ஸ்தலம். ஆச்சு சாமி கும்பிட்டாச்சு.
அடிச்சுத் தள்ளிக்கிட்டு அடுத்த ஸ்டாப் வைத்தீஸ்வரன் கோயில், செவ்வாய் கிரகநாயகன். சட்ன்னு கிளம்பிக் கஞ்சனூர் சுக்கிரனையும் சேவிச்சுக்கிட்டுச் சூரியனார் கோயிலில் நுழைந்தோம். சூரியனுடைய சந்நிதி நடுநாயகமா இருக்க மற்ற எண்மர்களின் தனித்தனிச் சந்நிதிகள் அவர்கள் இயல்பாய்ப் பார்க்கும் திசைகள் பார்த்தபடியே அமைஞ்சுருந்துச்சு. குட்டிச் சந்நிதிகள் எல்லாத்துக்கும் ஒரு வகை வெள்ளிநிற பெயிண்ட் அடிச்சுவச்சுருந்தாங்க.ஓட்டமா ஓடுனமாதிரி இன்னிக்கே எட்டு இடங்களுக்குப் போய்வந்துருக்கோம். காலையில் வந்ததும், திங்களூர் சந்திரனில் இருந்து ஆரம்பிக்கலாமுன்னு வினோத் சொன்னார்தான். ஆனா.... தஞ்சைக்குப் போகும் எண்ணம் இருந்ததால் (கார்க்கார ரஷ்யா மருத்துவரையும் சந்திக்கலாமுன்னுதான்) அப்போ பார்த்துக்கலாமுன்னு சொல்லிவச்சோம். ஒவ்வொரு கோவில் வாசலிலும் இறங்கும்போது முதலில் கோபுரத்தை ஒரு க்ளிக் செஞ்சுக்கணுமுன்னு மனசுக்குள்ளே போட்ட தீர்மானங்கள் எல்லாம் மாயமாய் மறைஞ்சுருச்சு. கோபுரவாசலைப் பார்த்ததும் கை (கெமெரா)பைக்குள் போகாமல், கால்கள் ஏதோ பசுவை நோக்கி ஓடும் கன்றுபோல கோவிலுக்குள் பாய்ஞ்சுருது. இறைவனின் திரு உளம் அதுவானால்........அதுவானால்........('சக்குபாய் நீயும் சாவுடி'ன்னு சமயசந்தர்ப்பம் இல்லாமல் சினிமா வசனம். நான் எங்கே உருப்படப்போறேன்)
எல்லாக் கோயில்களிலும் மூலவரைத் தரிசித்தாலும்..... என்னவோ அங்கெல்லாம் அவ்வளவா அலங்காரம், ஆரவாரம் இல்லாமல்தான் விரிச்சோன்னு இருக்கு. இருட்டுக் கர்ப்பகிரகத்துள் 'முணுக் முணுக்'குன்னு ஒரே ஒரு திரியின் முத்துச் சுடர் மட்டும் இருளோடு இருளாக லேசாத் தெரிய, சிவலிங்க வடிவில் உக்கார்ந்துருக்கார். (புதிய)ஆகம விதிகளின்படி 'ஓம் நமசிவாயா'ன்னு ஒலிக்கும் ஒலிப்பேழை இடைவிடாமல் அவருக்குத் துணையா இருக்கு. சிவலிங்கத்தில் ரசிச்சுப் பார்க்க ஒன்னுமில்லாததால் 'போனேன், கும்பிட்டேன்,வந்தேன்'தான்.
நவகிரகங்களின் சந்நிதிகள்தான் கோலாகலமா இருக்கு. ஒரு பதினைஞ்சு வருசமாத்தான் இப்படிக் கிரகக்கோளாறுன்னு மக்கள்ஸ் படையெடுத்து வந்துக்கிட்டு இருக்காங்களாம். இங்கேயுள்ள குருக்களுக்கும் கிரகநிலை ஓஹோன்னு இருக்கு. சில்லரை வேணுமுன்னு சொன்னப்பக் கோபால், 'இதோ வாங்கிக்கலா'முன்னு போய்க் கேட்ட இடம்? ஒரு குருக்களைத்தான். அவரும் ஆயிரம் ரூபாய்க்குச் சில்லரைகளா எடுத்துக் கொடுத்தார். இப்பெல்லாம் தட்டில் போடும் சில்லரையே 'பத்து ரூபாய் நோட்டு'களாம்.
'என்னம்மா இது எல்லாமே சிவன் கோயில்களாப் போயிருக்கோம்? உன் பெருமாளை இதுவரை பார்க்கலையே'ன்னு கோபால் திருவாய் மலர்ந்தருளினார். (ஆஹா.... பத்தவச்சுட்டேயே பரட்டை....)'நீங்க தான் எப்பப் பார்த்தாலும் 'முருகா முருகா'ன்றதால் உங்களுக்காகவே சிவன் கோயில்களாப் போயிருச்சு'ன்னேன்.
மறுநாள் எட்டுமணிக்கு வினோத்தை வரச்சொல்லிட்டு, நடந்துநடந்து வீங்கிப்போன காலுக்கு ஓய்வு கொடுத்தேன்.
தொடரும்:-)
Showing posts with label பூம்புகார். Show all posts
Showing posts with label பூம்புகார். Show all posts
Monday, March 30, 2009
பிற்பகல் அஞ்சும் கூடவே ஒரு போனஸும் (2009 பயணம்: பகுதி 4)
Posted by
துளசி கோபால்
at
3/30/2009 08:39:00 AM
45
comments
Labels: அனுபவம், நவகிரகக்கோயில்கள், பூம்புகார்
Subscribe to:
Posts (Atom)
