தேடிச்சோறு நிதம் தின்று பல... சின்னஞ் சிறுகதைகள் பேசி..... இந்த நிமிசத்துக்கு பாரதியை மறக்கணும். ஒருநாள் உணவை ஒழி என்றால்.... அவ்வையார் எதிர்ப்பாட்டு பாடிட்டார்....
கடைத்தெருவுக்குள் கால் வைச்சதும்தான் காலையில் பார்த்து வச்ச எதிர்க் கடை , நினைவுக்கு வந்துச்சு. இப்போ அங்கே வியாபாரம் பார்த்துக்க வேறொரு பெண். பிரம்மன் இருக்காரான்னு பார்த்தால் நமக்காகக் காத்திருக்கார். விலை காலையில் சொன்னதேதான். நான் என்னுடைய டீலைச் சொல்லி காலையில் பார்த்த விற்பனைப்பிரிவுப் பெண், முதலாளியிடம் கேட்டு வைக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க. கேட்டாங்களான்னு தெரியலைன்னு(ம்) சொன்னேன்.
ஒரு நிமிசம் யோசிச்சதும், 'காலையில் நீங்க வந்து போன விவரம் என்னிடம் சொல்லிட்டுத்தான் போனாங்க. நீங்க சொன்ன விலைக்குத் தர்றேன்.ஆனால் நீங்க வேற யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க'ன்னாங்க. அந்த வேற யார் யாருன்னு தெரிஞ்சால் சொல்லாம இருக்கலாமேன்னு நினைச்சேன். ரெண்டரை லட்சம் கை மாறுச்சு.
உண்மையில் இது பிரம்மனான்னே எனக்கு ஒரு சந்தேகம். அஞ்சு தலையுடன் இருந்த பிரம்மனின் தலையை பொய் சொன்ன காரணத்தால் கிள்ளி எறிஞ்சார் சிவன் என்று ஒரு புராணக்கதை உண்டு. எல்லாம் அந்த அடி முடி விவகாரம்தான். முடி கண்டேன் என்று தாழம்பூவை (பொய் )சாட்சி வச்சு விட்ட ரீலுக்கான தண்டனை. இந்த தலை கொய்தல் சம்பவத்தின் பின்னே பல கதைகள் இருக்கு. சிவன், பைரவரை உருவாக்கி அவர்மூலமாகத் தலையைக் கொய்தார் என்றும், சிவனே கோபம் கொண்டு சூலாயுதத்தால் கிள்ளி எறிந்தார் என்றும், பிரம்மனொரு முறை, தான் சிருஷ்டித்த அழகியையே கண்டு காமவசப்பட்டார் என்றதால் அதற்கான தண்டனையாக அவர் தலையைக் கொய்தார் ஈசன் என்றும் வகை வகையாக நிறைய கதைகள் உண்டு. நான்முகன் அதுக்கப்புறம் என்ன தப்பு பண்ணினாரோ.... இப்ப இன்னொரு தலை அவுட். ஒவ்வொரு தலையுடன் அதற்கான ஜோடிக் கைகளும் காலி ஆனதால் இப்போ மூணு தலைகளும் ஆறு கைகளுமா இருக்கார்.
இப்போ நியூஸி வர அவருக்கு லபிச்சுருக்கு. இங்கே வந்த பிறகாவது அசட்டுத்தனமா எதாவது செய்யாம இருக்கணும். சட்டம் இங்கே அனைவருக்கும் ஒன்று என்பதால் குற்றம் செஞ்சுட்டுத் தப்பிக்க முடியாது.
இந்தக் கடையில் இன்னும் ஏராளமான கைவினைப் பொருட்கள் இருக்கு. அனைத்துக்கும் ஆசைப்பட நமக்கு ஐவேஜ் இல்லை:( பொம்மலாட்டம் பொம்மைகள் கூட இருக்கு! க்ளிக் க்ளிக்...அம்புட்டுதான்.
பிரம்மனைத் தூக்கிக்கிட்டு வலப்புறம் ஒரு பத்து கடை தூரம் போனோம். ஏற்றமான சாலை என்பதால் கால்களுக்குச் சிரமமா இருக்கு. போகட்டும் போன்னு திரும்பி இறக்கத்தில் நடந்து போய் வழியில் ஒரு இருட்டுக்கடையைக் கண்டோம். இருட்டு அதிகரிச்சால் அது நல்ல ரெஸ்ட்டாரண்டு என்று பொதுவா ஒரு எண்ணம் நிலவுது. அதுக்குத் தகுந்த மாதிரி விலையும் தாளிச்சுருவாங்க. Kids friendly ன்னு போர்டு சொல்லுது. அப்ப ஓக்கே எனக்கு:-)
சுப காரியங்களுக்கு சக்கரைக்கூடு வைப்பாங்க பாருங்க அது போல கூம்பு வடிவில் சோறு கிடைச்சது. புளிப்பே இல்லாத நல்ல தயிரில் ஒரு லஸ்ஸி. தாராளம்!
சாப்பாடு ஆன கையோடு கொஞ்சம் நடையில் கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் கண்ணில் பட்டதும் இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கலாமுன்னு போனார் கோபால். 9400 ரேட். எப்படியும் ஊர் விட்டுக் கிளம்பும்வரை தேவைதானே? அதே கடையின் மறுபுறம் ஒரு ம்யூஸிக் ஷாப். இன்னிக்குக் காலையில் நம்ம ஸென்டானா ரெஸ்ட்டாரண்டில் கேட்ட குழலிசை மனசுக்குள் ஓடிக்கிட்டே இருக்கு. இதே மெட்டுகளில் சிலபல தமிழ் சினிமாப் பாட்டுகளைக் கேட்டுருக்கேன். என்ன பாட்டுன்னுதான் சட்னு நினைவுக்கு வரலை.
ம்யூஸிக் கடையில் குழலிசை வேணுமுன்னதும் அவர் காமிச்ச சிடியைப் போட்டுக் கேட்டால்... இதுவும் தமிழ்ப்பாட்டையே நினைவு படுத்துது. நல்லமெலடி. (மனசுக்குள்ளே ஓட்டிக்கிட்டே இருந்ததில் பிடிபட்டுப்போச்சு. தொன்னூறுகளில் பிரபல இசை அமைப்பாளரின் பாட்டுகள். ஓக்கே ...இன்ஸ்பிரேஷன் யார் மூலம் யாருக்குன்னு தெரியாது என்பதால் தேவையில்லாத விவாதங்கள் தவிர்க்கப்படணுமுன்னு முடிவுக்கு வந்துவிட்டேன்) எது எப்படியோ நமக்குத் தெரிஞ்ச பாட்டாக இருக்கே என்பதில் மகிழ்ச்சியே. ஆசைக்கு ஒன்னு இருக்கட்டுமுன்னு வாங்கியாச்சு. விலைதான் அறுபதினாயிரம் ரூபாய்.
அடுத்துப் பார்த்தது ஒரு துணிமணிக் கடை. மகளுக்கு ஒன்னும் இதுவரை வாங்கலையேன்னு பார்த்து ஒரு ட்ரெஸ் வாங்கினோம். அப்படியே எனக்கு ஒரு ஸராங். அரை விலை டெக்னிக்கில் பேரம் படிஞ்சது. கடையில்வேலை செய்யும் அழகான குட்டிப்பொண் அப்பப்பக் கடை முதலாளியிடம் கேட்டுட்டு வந்து வியாபாரம் செய்யறாங்க. பெயர் கேட்டேன். புட்டு! ஆஹா.... தலைச்சன் குழந்தை! கடைக்காரம்மா மடிக்கணினியில் பயங்கர பிஸி. பணம் கொடுக்கும்போது தற்செயலாப் பார்வையில் பட்டது Zuma Game . அட! உன் கேம்தான் இவுங்க விளையாடுறாங்கன்னார் கோபால்.
சகவிளையாட்டுக்காரி என்றதும் எங்களுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டுப்போச்சு. மூளையை அலர்ட்ட்டா வச்சுக்க இப்படிப்பட்ட கேம்ஸ் ஒன்னு ரெண்டு அப்பப்ப விளையாடணும் என்ற என் அறிவுரையை முற்றிலும் ஆமோதிச்சாங்க:-)
ஆச்சு ... இன்னிக்கான கடமைகள் என்ற நிம்மதியோடு அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் பொழுது விடிஞ்சதும் எல்லாத்தையும் ஏறக் கட்டிட்டு ப்ரேக்ஃபாஸ்டுக்கு ஸென்டானா ஸன் ரைஸ் ரெஸ்ட்டாரண்டு போனால் நேற்றைப்போலவே அதே புல்லாங்குழல் இசை ! அடடா..... கேட்க எவ்ளோ இனிமை!
இன்னிக்கு பழவகைகளில் ஒரு வித்தியாசமான ஒன்னு இருந்துச்சு. ஸ்நேக் ஸ்கின் ஃப்ரூட்! பெயர்ப் பொருத்தம் சூப்பர். நான் மட்டும் ஒன்னு எடுத்துக்கிட்டு வந்தேன். Salak என்றுபெயராம். உள்ளே மூன்று சுளைகள். கொட்டை ரொம்பப்பெருசு. சதைப்பற்று கொஞ்சூண்டுதான். நல்ல முதிர்ந்த பலா, ஜஸ்ட் பழுக்குமுன் உள்ள சுவை. (பலா சிப்ஸ்க்கு இப்படி உள்ள பலாக் காயைத்தான் வெட்டுவோம். எல்லாம் கேரள வாழ்க்கை அனுபவம்தான்)
அப்புறம் வாழை இலையில் மடிச்சு வேகவச்ச ரெண்டு சமாச்சாரங்கள். க்ளூட்டோனியஸ் அரிசிமாவு தண்ணீர் சேர்த்துப் பிசைஞ்சு, அதை சின்ன வட்டமாகப் பரத்தி நடுவில் நாட்டுச்சக்கரையும் உலர்ந்த திராக்ஷையும் வைத்து மூடி , மாவை இலைக்குள் பொதிஞ்சு ஆவியில் வேக வச்சுருக்காங்க. இன்னொன்னு தேங்காய் வெல்லம் அரிசி மாவு குங்குமப்பூ சேர்த்து செஞ்ச இலைக் கொழுக்கட்டை.
பரிமாறும் பெண்களிடம் என்ன ஏதுன்னு விசாரிச்சேன். ஒருத்தர் பெயர் புட்டு இன்னொருத்தர் காடெக். எல்லாமே கொள்ளை அழகு! ஹெலிகோனியா (heleconia)க்கள் அட்டகாசம். இந்த வகையில் மட்டும் 200 விதச் செடிகளிருக்காமே! என்ன ஒரு இனிய சூழல். விட்டுப் பிரிய மனமே இல்லை:(
போயிட்டு வரேன்டா குரங்கன்மாரே!
அறைக்கு வந்ததும் கோபால் இன்னொருமுறை டிக்கெட் சமாச்சாரங்களைச் செக் பண்ணியவர், அடடா..... ஃப்ளைட் 12 மணிக்கு நினைச்சு புத்ராவை எட்டு மணிக்கு வரச்சொல்லிட்டேன். இப்பப் பார்த்தால் ஃப்ளைட் 2 மணிக்குதான் என்றவர் புத்ராவுக்கு ஃபோன் செஞ்சு பத்து மணிக்கு வரச் சொல்லிட்டார். முன்னமே தெரிஞ்சுருந்தால் இங்கே பெரிய க்ராஃப்ட் மார்கெட் இருக்காமே போய் வந்திருக்கலாம்:( எவ்வளவு தூரமோ என்னவோ..... போகட்டுமுன்னு சொல்லிட்டு இவர் ஒரு தூக்கம் போட ஆரம்பிச்சார்.
நான் ஒருத்தி..... வாயிலே இருக்கு வழி என்பதைச் சுத்தமா மறந்து போயிருந்தேன். ஸென்டானாவைச் சுற்றிப்பார்த்துக் கிட்டும் மைனாக்களோடு பேசிக்கிட்டும். செடி கொடி மரங்களை க்ளிக்கிக்கிட்டும் அவைகளிடம் போய் வாரேன்னு சொல்லிக்கிட்டும் திரிஞ்சேன்.
அறைக்குத் திரும்பினால் இவர் தூக்கம் முடிச்சு சாருகஸேரயில் உக்கார்ந்துருக்கார். அதைப் பிரிய மனமில்லை போல! அங்கே பாருன்னு கண்ணைக் காமிச்சார். பக்கத்து அறையைச் சுத்தம் செய்யப் பணிப்பெண்கள் கைவண்டியைத் தள்ளிக்கிட்டு வர்றாங்க. யாருன்னு பார்த்தால்..... அட... நேத்து பார்த்தப் பள்ளிக்கூடச் சிறுமிகள்..... ஓஹோ அதுதான் ஒன்பது மணியாகட்டுமுன்னு காத்திருந்தாங்களோ!
குடும்பத்துலே பெண் குழந்தைகள் தாய் தகப்பனுக்குச் சுமையா இருக்காமல் எதாவது ஒரு வேலை தேடிக்கிட்டு சம்பாரிச்சுப் போடுறாங்களாம். கேக்கவே எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு. உண்மைதான். இதுவரை எல்லா இடங்களிலும் பார்த்த இளம்பெண்கள் மனசில் வந்து போனாங்க.
தொடரும்.............:-)