Showing posts with label அனுபவம் NZ. Show all posts
Showing posts with label அனுபவம் NZ. Show all posts

Saturday, September 04, 2010

நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் நகரில் நிலநடுக்கம்.


நலம் நலம் நலம்



அன்பு நண்பர்களே,


அனைவரும் நலம். மகளிடம் இப்போதுதான் தொலைபேசினோம்.
அதிகாலை நாலரைக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.4 ரிக்டர் அளவு.

இப்போது அங்கே மதியம் ஒன்னரை மணி. ஏராளமாக ஆஃப்டர்ஷாக் வந்துகொண்டு இருக்கிறதாம்.

நகரின் மையத்தில் கட்டிடங்கள் இடிஞ்சு பாதிப்பு அதிகமாம். ஆனால் உயிரிழப்பு ஒன்றும் இல்லை. கடவுளுக்கு நன்றி.

விமானநிலயம் மூடப்பட்டுள்ளது.


காலையில் கணினி திறந்ததும் நம்ம கே ஆர் எஸ், குமரன், இலா, மற்ற அமெரிக்கத் தோழிகள் விசாரித்து மடல் அனுப்பி இருந்தார்கள். அப்போதுதான் விஷயமே எனக்குத் தெரிந்தது.



மகளும் இப்படி ஒரு மடல் அனுப்பி இருந்தாள் சம்பவம் நடந்த உடனே.

We had an earthquake this morning, 4.30am
Mag 7.4, 30km west and 10km down.
Lots of aftershocks, upto 5.2 mag
Central city damage.
House is ok. Power only just came back. Only a few things broken. Watching tv bulletin.
Civil defence think central city will be evacuated later today


அன்பான விசாரிப்புகளுக்கு நன்றி.



பின் குறிப்பு: இன்று மகளின் பிறந்தநாள்.