Showing posts with label அனுபவம் Chennai. Show all posts
Showing posts with label அனுபவம் Chennai. Show all posts

Monday, January 03, 2011

சிங்காரச்சென்னை. கொஞ்சம் அது கொஞ்சம் இது.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

இயல் இசை நாடக விழா, புத்தக வெளியீடுகள். நாளை தொடங்கும் புத்தகத் திருவிழா இப்படி சென்னை களைகட்டி இருக்கு! கூடவே நட்புகளையும் சுற்றத்தையும் சந்தித்ததையும் சேர்த்துக்கலாம்.

கிறிஸ்துவின் பிறப்பை இவ்வளோ அமர்க்களமா இங்கே(யும்) கொண்டாடுவதை முதன்முதலாப் பார்த்தேன்!!!! தங்கி இருந்த இடத்திலும் கூட!

ஆட்டோ ஓட்டுனராக அமைஞ்சவரின் பெயரைக்கேட்டால் 'மாரிசன்' என்றார்.

"கிறிஸ்மஸ் கொண்டாடியாச்சா?"

"இல்லைங்க. நான் இந்து."

"அப்ப பெயர்.........."

"அதுங்களா? மகாபாரத்துலே வருவாராம் அவர் பேரை வச்சுட்டாங்க."

"யூ மீன்.... பொன் மான்?"

"ஆமாம்ங்க."

"ஆஹா.... நீங்க ராமாயணத்துலே வர்றீங்க. ராமரை ஏமாத்திக் கூட்டிட்டுப்போயிட்டீங்க. நீங்க ராவணனுக்கு மாமன். மாரீஸன்."

"மாமனா!!!! இந்தப் பேரு நல்லதுல்லையாம். ஏன் இப்படி வச்சாங்கன்னு தெரியலைங்க...."

"யாரு சொன்னா நல்லா இல்லேன்னு? நீங்கதான் கதை வளர உதவுனீங்க. நீங்க இல்லேன்னா ராமாயணம் இல்லை"

"ஒரு சாமியார் சொன்னாருங்க."

போச்சுரா...... சாமியார்கள் கொட்டம் தாங்க முடியலை.

மாரீஸன்.

"நல்லவராவும் சாதுவாவும் இருக்கீங்க. இதைவிட வேறென்ன?"

எந்தவிதமான வாதமும் இல்லாம கொடுத்ததை வாங்கிட்டுப்போனார்.

'சின்னதா' ஒரு ஷாப்பிங் செஞ்சுட்டு முப்பாத்தம்மனை வணங்கி, எதிரில் கிருஷ்ண கான சபாவில் அனிதா ரத்தினத்தின் 'மில்லியன் ஸீதா'ஸ் ' போனோம். கொஞ்சம் சீக்கிரம் போயிட்டோம். முதல் நிகழ்ச்சி இன்னும் முடியலை.சஞ்சய் சுப்ரமணியம். தனி ஆவர்தனம் நடந்துக்கிட்டு இருக்கு. பலே பேஷ் பேஷ் சபாஷ் . தனி முடிஞ்சதும் 'ஆதி பகவன் முதற்றே உலகு' ஆஹா..... போன வருசமும் கேட்டது. கற்பூரம் நாறுமோ.... கமலப்பூ..... ஆரம்பிச்சார். மங்களமும் முடிஞ்சது.
துளசி அண்ட் துளசி:-)


வயிற்றுக்குணவு...காண்டீனில் சாப்பிடப்போனப்ப 'எழுத்தாளர் துளசி'யோடு சின்னதா ஒரு அறிமுகம். அமுதசுரபியில் கதைகள் வந்திருக்காம். கற்பூரம் நாறுமோ என்ன ராகமுன்னு கேட்டாங்க. 'ஙே'ன்னு முழிச்சேன். சஞ்சய்தான் சொல்லணும்.

ஸீதா, மந்தரை, சபரி, சூர்ப்பநகை, அகல்யா இப்படி உலகெங்கும் பெண்கள் சீதைகளாகவே........
அனிதா
போனவாரம் ப்ரீவ்யூ நிகழ்ச்சிக்குப் பிறகு இன்னைக்குத்தான் முதல் ஆட்டம். எனக்கென்னவோ இது முழுக்க முழுக்க வெஸ்டர்ன் ஆடியன்ஸுக்காக தயாரிக்கப்பட்டதோன்னு சம்சயம். அனிதாவின் நடனம் பார்ப்பது இதுதான் முதல்முறை எங்களுக்கு. ம்யூஸிக் பார்ட்டி ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்னும் கொஞ்சம் விவரம் வேணுமா? இங்கே பாருங்களேன்.

மறுநாள் காலை ரெண்டாம் முறையா வெங்கியுடன் சந்திப்பு. உண்டியல் திறந்து எண்ணறாங்க. பக்கெட் பக்கெட்டா நோட்டுகளும் சில்லறையும். ஒன்னும் செய்யாம.....நின்னவாக்குலே சம்பாத்யம். கொடுத்து வச்சவர்.


அன்று மாலை 12 புத்தகங்களின் வெளியீடு. அதில் 33.33 சதம் நமக்குத் தெரிஞ்சவுங்க!

சிலரையும் பலரையும் பார்க்கவும் ஒரு சிலருடன் ரெண்டு சொற்கள் பேசவும் முடிஞ்சது.

சங்கர்ஸ், எறும்பு, சுரேகா



சூர்யா, சுரேகா


கிருஷ்ணன் ரஞ்சனா & முருகேச பாண்டியன்


காவேரி கணேஷ் & உண்மைத்தமிழன்.


சங்கர்ஸ், எறும்பு, சுரேகா, பாலபாரதி, பட்டர்ஃப்ளை சூர்யா, க்ருஷ்ணப்பிரபு, காவேரி கணேஷ், உண்மைத்தமிழன் ('த்' இருக்கு. கவனிக்கவும்) அதியமான், ரவிச்சந்திரன், நர்சிம், க்ருஷ்ணன் ரஞ்சனா, விதூஷ், லக்ஷ்மி பாலகிருஷ்ணன். பேச்சு மும்முரத்தில் சிலரைப் படமெடுக்க மறந்துட்டேன்:(
பச்சைச் சட்டையில் சாரு (அரங்கின் வெளியே) முன்னைக்கு இப்போது இன்னும் இளமையா இருக்கார். சொல்லவும் செஞ்சேன். கொஞ்ச நேரத்தில் பா.ரா வையும். முதலில் சட்னு அடையாளம் புரியலை! முன்னைக்கு இப்போது வயதானவராத் தெரியறார். ஹேர் ஸ்டைல் மாற்றமோ? நாலு வயசு கூடி இருக்கு. சந்திச்சும் வருசம் நாலாச்சே!
ப ரா & தலை

வடை?


உடையா இல்லை வடையான்னு புதுசா ஒரு சந்தேகம்! விக்கி சொல்லுது
Jayachamaraja Wodeyar வோடெயார்ன்னு ...... பட்டிமன்ற டாபிக்!
ஹோப் ப்ரியா
சிவஞானம் ஜி

மூன்றாம் நாள் பதிவர் சந்திப்பு. ஒன் டு ஒன் என்ற வகையில். வல்லி சிம்ஹன், சிஜி(சிவஞானம்ஜி) அலைகள் அருணா, நானானி. ப்ரியா ( ஹோப் பவுண்டேஷன்) இந்தக் கூட்டத்தில் அநந்த பத்மநாபனையும். வழக்கம்போல் நிச்சிந்தையான கிடப்பு. போனால் போகட்டுமுன்னு தங்கரதத்தில் சேவை சாதிச்சார். எல்லாம் அன்றுபோலவே இன்றும்.
அரங்கில் விசாகா ஹரி. சொல்லமுடியாத கூட்டம். தெருவை அடைச்சுத் தரையில் பிளாஸ்டிக் ஜமக்காளம் விரிச்சு .......அங்கங்கே CCTV வச்சு அமர்க்களம் போங்க. எனக்குத் தெரிஞ்சவரையில் சென்னைக் கோவில்களில் காலத்துக்கேற்ற முறையில் கவர் செய்வது நம்ம 'பதுமன்'தான்.

மிச்சம் அப்புறம் பார்க்கலாமே