தமிழ்நாடு முழுசும் குறிப்பா மதுரையிலே சித்திரை(த்திரு)விழா கோலாகலமா நடக்கும்போது மருதைக்காரர்களைக் கண்டு லேசா புகை வரும் சமயம், இங்கே சண்டிகரிலும் முதல்முறையா சித்திரை விழா கொண்டாடப்போறோமுன்னு கோவிலிலே பேனர் பார்த்ததும் அட்ரா சக்கை. எல்லாம் நாம் இங்கே வந்த நேரம்னு குஷி ஆகிப்போச்சுங்க.
வாராந்திரப் பத்திரிகைகளின் விற்பனையைக் கூட்ட நாம் தென்னிந்தியக் கடைக்குப்போனால்.... அங்கே நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகருடன் (எதிர்பாராத) சந்திப்பு. அவர் மகள்தான் என்னை தூரத்துலே இருந்து பார்த்துட்டு நியூஸிலாந்த் ஆண்ட்டி அந்தக் கடையில் இருக்காங்கன்னு சொல்ல..... அதானே யானையை யாராவது ஒளிச்சு நிறுத்த முடியுமா? :)))
நாளைக்கு விழா இருக்குன்னார். 'பார்த்தேன். வர்றோமு'ன்னு சொன்னேன். பட்டி மன்றம் நடக்கப்போகுது. நீங்கதான் பட்டிமன்ற மக்களுக்கு வரவேற்பும் வாழ்த்துரையும் சொல்லணுமுன்னார். அதெல்லாம் நல்லாப் பேசுவாங்கன்னு கோபால் ஜால்ரா அடிக்க சரின்னு முடிவாச்சு.
அப்பதான் சொல்றார் 'மறுநாள் தமிழ்காலனியில் நிகழ்ச்சிகள். அதுக்கடுத்த நாள் ஞாயிறுதான் தமிழ் மன்றத்தில்'! அடராமா..... எங்கே இருக்கு இந்த தமிழ்க்காலனி இந்த சண்டிகரில்? எண் தெரியலைன்னா அதோ கதி இல்லையோ!!!!
"முப்பத்தி எட்டு டி செக்டரில் இருக்கும் கோவிலுக்கு வந்துருங்க"
அட! அங்கேயும் நம்ம கோவில் இருக்கா? இங்கே வந்து ஒரு வருசம் ஆகப்போகும் நிலையில் இப்பத்தான் 'உண்மை' வெளியே வருது!!!!
மறுநாள் சனிக்கிழமை வந்தே வந்துருச்சு. இன்னும் பட்டிமன்ற வரவேற்புக்கு தயாரிப்பு ஒன்னும் நடக்கலை. இது என்னடா நமக்கு வந்த நிலமைன்னு மண்டைக்குடைச்சலோடு நேத்து வாங்கியாந்த குங்குமத்தைத் திறந்தால்...... கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்துச்சு நம்ம சாலமன் பாப்பையா அவர்கள் எழுத்தில். பட்டிமன்றம் எப்போ எப்படி ஆரம்பிச்சது, எப்படி வளர்ந்ததுன்னு தொடர் பகுதியில் எழுதி இருக்கார்! ( இங்கே சிலவாரங்கள் தாமதமாகத்தான் பத்திரிகைகள் வருது) சாமி...காப்பாத்திட்டேன்னு அதை ஒருமுறை வாசிச்சு மனசில் வச்சுக்கிட்டேன். நம்ம பாப்பையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
நம்ம கார்த்திகேயஸ்வாமி கோவிலுக்குப்போய் கடவுளர்கள் அனைவரையும் சேவிச்சுக்கிட்டு (வழக்கமான சனிக்கிழமை விஸிட் இது) புது சேதி எதாவது இருக்கான்னு ஆராய்ஞ்சால் மஞ்சள் அழைப்பிதழ் ஒன்னு கண்ணில் பட்டது. ஓம் சக்தி அம்மனின் அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகப் பத்திரிகை.
முத்துமாரியம்மன் கோவிலில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஓம்சக்திக்குப் புதுசா ஒரு தனிச்சந்நிதி கட்டி இருக்காங்க.!
ஆறரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். நாம் முப்பத்தி எட்டு டி யில் தேடித்தேடி அலைஞ்சு மத்ராஸி மந்திர் கிதர் ஹைன்னு கண்ணில் பட்டவர்களையெல்லாம் கேட்டுத் தெளிஞ்சு அங்கே கால் வச்சப்ப ஆறேகால். வரவேற்பு கமிட்டியா அங்கே நின்னவங்க நம்மை ஆர்வமா வரவேற்று கோவிலைச் சுத்திக் காமிக்க ஒருத்தரை நம்மோடு அனுப்பி வச்சாங்க.அருமையா மேடை அமைப்பு, பச்சைத் தரை விரிப்பில் வரிசையா இருக்கைகள் எல்லாம் அமர்க்களம். கடைசிநேர மைக் டெஸ்ட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. மூணுமாசக்குழந்தையில் இருந்து பதிமூணு வயசுப்பிள்ளைகள் வரை ஓட்டம் ஆட்டமுன்னு கலகலப்பா இருக்கு!
கோவில்
முத்துமாரியம்மன் கருவறை
கோவிலுக்குள் நுழைஞ்சோம். குட்டியா ஒரு ஹால். அதில் ஒரு பக்கம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கொண்டுருக்காள். நேரெதிரா இருக்கும் பிரமாண்டமான அரசு, அதன் சுவட்டில் மனுஷ்ய ரூப சிவன் தவம் செய்ய, இந்தப்பக்கம் சிவலிங்க, ஒன்னு இருக்கு. முத்து மாரிக்கு வலது பக்கம் குட்டியா ஒரு தனி அறை. மேடையில் சிகப்புத் துணியால் மூடி இருக்கும் விக்ரகம். மறுநாள் காலை கும்பாபிஷேகம் ஆனதும் திரைவிலக்கி நமக்கு தரிசனம் தரப்போகிறாள்.கோவிலுக்கு வயசு 25. 1986 இன் கட்டி இருக்காங்க. இதுக்குமுன்னே சத்தாரா என்னுமிடத்தில் இருந்த தமிழ்க்குடும்பங்களை அரசாங்கமே இங்கே இடம் பெயர்த்தது 1981 இல். நூறு குடும்பங்கள் இந்த 38 டி செக்டரின் இந்தப் பகுதியில். தமிழ் காலனின்னு பெயரும் வச்சாச்சு. குடியிருப்புகளுக்குப் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் அஞ்சு வருசம் கழிச்சுச் சின்னதா உண்டாக்கின கோவில் இந்த ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில். இப்போ இத்தனை வருசம் கழிச்சு இது விதிமுறைகளை மீறி அரசாங்க அனுமதி இல்லாமக் கட்டுனது. இதை இடிக்கப்போறோமுன்னு பேச்சு வந்து இந்த மாதம் ஏப்ரல் 11 (சரியா போனவாரம்) இடிக்கும் தேதி முடிவாகிருச்சு. இது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். ஒன்னும் செய்ய முடியாதுன்னு அதிகாரிகள் சொல்லிட்டாங்க.
இருபத்தியஞ்சு வருசமாக் கோவிலாப் புழங்குனதை விட்டுட முடியுமான்னு நம்ம மக்களுக்குப் பயங்கர டென்ஷன். உள்ளூர் பாராளுமன்ற அங்கத்தினரும் யூனியன் கேபினட் மினிஸ்டருமான பவன் குமார் பன்ஸால்கிட்டே முறையிட்டு இப்போ இடித்தல் தள்ளிப் போடப்பட்டிருக்கு. ஆனாலும் எப்போ என்ன ஆகுமோன்ற பதைபதைப்புதான். இதுக்கிடையில்தான் ஓம் பராசக்தி சந்நிதி ஒன்னு புதுசாக் கட்டுனது.திரு.பொன்னம்பலம்
கோவிலை நமக்குச் சுத்திக் காட்டிய உளுந்தூர் பேட்டைப் பொன்னம்பலம் அவர்கள் மேற்படித் தகவல்கள் எல்லாம் சொன்னார். இங்கே இருக்கும் நூறு குடும்பங்களில் 95 சதவீதம் உளுந்தூர்ப்பேட்டைக்காரர்கள்தானாம்!!!!பள்ளிக்கூடம் இருக்கா? அங்கே தமிழ் சொல்லித்தர்றாங்களான்னு கேட்டதுக்கு இருக்காம். அஞ்சாப்புவரை தமிழும் ஹிந்தியுமா சொல்லித்தர்றாங்க. அதுக்குப்பிறகு பிள்ளைங்க ஹிந்திப் பள்ளிக்கூடத்துக்குத்தான் போக வேண்டி இருக்குனார்.
தமிழ்நாட்டின் டிவி சேனல் எல்லாம் பார்க்கறீங்களான்னா.... இல்லையா பின்னே? அதெல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோமுன்னு சொன்னார். அப்போ அங்கே வந்த சிறுமிகளைப் பார்த்து ஒரு சின்னப் புன்முறுவல் வீசி பெயர் என்ன? தமிழ் தெரியுமா ன்னு கேட்டேன். அடுத்த நொடியில் நான் ஒரு பலாப்பழமானேன். சிறுமிகளும் சிறுவர்களுமா மொய்ச்சுக்கிட்டாங்க.லக்ஷ்மி, நித்யா மணிஷா, பூஜா, பாவனா, ஸ்நேகா ஷீதல், சிம்ரன், ரியா, சுமன், ஈஷா அன்னு ஆகாஷ், விஜய், மணிகண்டன், ராகினி, முஸ்கான், சிராக், வர்ஷா, சஞ்சனா, பவன், விஷாகான்னு என் பெயரை எழுதிக்குங்க என் பெயரை எழுதிக்குங்கன்னு பிள்ளைகள் ஆசையாப் பெயரைச் சொல்லிக்கிட்டே போக எல்லை கடந்த ஆர்வம் பொங்கி பக்கத்துவீட்டுப் பசங்க பெயெரெல்லாம் வந்து விழுது!!!!!
காந்தீயவாதி கருப்பையா
ஒரு வழியா ஏழுமணிக்கு எல்லாம் ரெடியாகி மேடையில் கருப்பையா என்றவர் வரப்போகும் நிகழ்ச்சிகளை அறிவிச்சுக்கிட்டு இருந்தவர், திருமதி துளசி கோபாலை வரவேற்புரை அளிக்க மேடைக்கு அழைச்சார். 'கிளம்பு கிளம்பு'ன்னு நம்மை நல்லா மாட்டிவிட்ட கோபால், அடுத்து திரு கோபால் அவர்களை தலைமை தாங்க மேடைக்கு அழைச்சதும் பேய்முழியோடு மேடையில் வந்தமர்ந்தார்:-) சித்ரா என்ற பெண்மணியையும் மேடைக்கு வரச்சொன்னார்கள். இன்றைய கலைநிகழ்ச்சிகளுக்கான கலைஞர்களை ஏற்பாடு செய்து மதுரையில் இருந்து அழைச்சு வந்தவங்க இவுங்களும் திரு. கருப்பையாவும்தான். இந்த ரெண்டு பேரும்தான் கன்யாகுமரியில் தொடங்கி இந்தியா முழுசும் சைக்கிளில் பயணம்போய் வந்த காந்தீயவாதிகள்.
லட்சிய சிதம்பரம் என்றவர் காந்தியடிகளைப்பற்றிப் பாடி வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களோடு முடிச்சார். சைக்கிள் பயணச் சித்ரா
பதிவின் நீளம் கருதி பாக்கி நாளைக்கு:-)
Monday, April 18, 2011
நாங்களும் கொண்டாடுவொம்ல...............
Posted by
துளசி கோபால்
at
4/18/2011 03:23:00 PM
28
comments
Labels: அனுபவம் Chandigarh
Monday, November 15, 2010
படிச்சவனா நீயி...................ச்சே ச்சே....:(
போன பதிவிலே PIN குறிப்பைப் போட்டுட்டுப் போனவ , ஊரெல்லாம் சுத்திட்டு இப்பதான் திரும்பி வந்தேன். அந்த ஆலாபனை அப்புறம் வச்சுக்கலாம். இப்போ Pin க்கு மங்களம் பாடிக்கறேன்.
இன்னும் ரெண்டு இடத்துலே மேளா நடக்குதுன்னு சொன்னேன் பாருங்க. அதுலே ஒன்னு குழந்தைகளுக்கான ஸ்பெஷல். என்னதான் இருக்குன்னு எட்டிப் பார்த்துக்கலாமுன்னு போய்ச் சேர்ந்தோம். டெல்லியில் இண்டியா கேட் மாதிரி நுழைவு வாசல் வச்சுருக்காங்க. தினசரியில் இருந்த மேளா அறிவிப்பைக் கையோடு கொண்டு போனால் நுழைவுக் கட்டணம் கிடையாது என்பது முக்கியமான பாய்ண்ட்:-) ஒரு 'கட்டிங்' லே ௪ பேர் போகலாம்!வழக்கமான பொருட்காட்சிக் கடைகள் தான். நக்லி நகைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், வீட்டு அடுக்களைச் சாதனங்கள், அச்சார் (ஊறுகாய்) வகைகள், சீன வாஸ்து சாமான்கள், பொம்மைக் கடைகள், துணிமணி, செருப்பு, ஜூஸ் இப்படி ஏராளமா இருந்துச்சு. குழந்தைகளுக்கான துணிகள் ஏற்கெனவே பயன்படுத்துனமாதிரி இருக்கேன்னு பார்த்தால்............. நினைச்சது சரியாப் போச்சு. இது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான கடை(யாம்)
பெரிய பெரிய பூச்சாடிகள் விற்பனைக்கு இருக்கு. அழகுதான். சிலது மரத்தண்டை அப்படியே குடைஞ்சு செஞ்சதும் கூட. முகம், பிள்ளையார்ன்னு செதுக்கல் வேற வெளிப்புறத்தில். தூக்கிப் பார்த்தால் காத்தாட்டம் லேசு!
சப்பாத்தி மேக்கர் வச்சு தோசை சுட்டுக் காமிச்சாங்க ஒரு கடையில். சப்பாத்தி மாவு உருண்டையை வச்சு மேல் மூடியை அழுத்துனா அருமையா வட்டச் சப்பாத்தி திரட்டி சுட்டும் தருது. 'உன்னீஸ் சௌ' வாம்.
நம்மாள் உடனே 'அஸ்து' போட்டார்:(புதுவிதமான கொலுசு ஒன்னு ஹைதராபாத் சமாச்சாரம். என் சிலம்பில் முத்தும் கற்களும் உள்ள பரல் !!!!!
பான் ஸ்டால் ஒன்னு. பரத்தி வச்ச வெத்தலையில், வரிசை கட்டி நிற்கும் கிண்ணங்களில் வகைவகையா இருப்பதையெல்லாம் துளித்துளி எடுத்துப்போட்டு மடிச்சுத் தர்றாங்க.
க்ரவுண்டின் பின்பக்கம் ராட்டினங்கள் சிலவகை ஓடுது. பெரியவங்களுக்கான ஆடைகளை காஷ்மீர் அரசு பெரிய ஷெட் போட்டு விக்குது. இப்பதான் துணிமணிகளை அங்கே அடுக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. சண்டைக்கு நடுவில் துணி நெய்ய நேரம் கிடைச்சதோ!!!
புத்தகங்களுக்கு ஒரு ஸ்டால். அழகுக் குறிப்புகளுக்கான புத்தகங்கள் கொட்டிக் கிடக்குது. எல்லாம் ஹிந்தி மொழியில். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்காகக் கொஞ்சம் புத்தகங்கள் இருக்கேன்னு பார்த்தால் கட்டுரைகள், கடிதங்கள் இருக்கு. ப்ரைமரி லெவலில் இருந்து ஹை ஸ்கூல் வரை. கட்டுரை எழுதச் சொன்னால் 'யோசிச்சு' எழுத வேணாம். மனப்பாடம் செஞ்சு (பேப்பரில்) வாந்தி எடுத்தால் போதும். ச்சும்மாப் புரட்டிப் பார்த்தால் 'யானை' கண்ணில் பட்டது. வாழைப்பழத்தை உரிச்சு வாயில் திணிக்கும் கல்வி முறை.... மனசுக்கு வருத்தமா இருக்கு.வெளியேறும் வாசலுக்கு வந்துருந்தோம். வெளியே நிறைய வண்ணவண்ண பொம்மைகள். டெர்ரகோட்டா பொம்மைகளைச் சுட்டு எடுத்து வண்ணம் பூசறாங்க. ஜெய்ப்பூர் ஆளுங்களாம். சின்னதா நாலு பொம்மைகளை வாங்கிக்கிட்டு, பெயிண்ட் செய்யும் ஆட்களைப் பார்க்கும் சமயம், திடீருன்னு உரத்த குரலில் ' அடிக்காதே. நான் உன் மனைவி. உன் வீட்டு வேலைக்காரி இல்லை...'ன்னு!
சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தால் வெளியே வரும் கேட்டில் அருமையா உடை உடுத்திய ஒரு இளம் தம்பதிகள். கூட ஒரு நாலு வயசு பையன். அந்த ஆள் குழந்தையின் ஒரு கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு இருக்கார். மறுகையை அம்மா பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. 'என் குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போறேன்'னு அப்பா கத்த, 'கபர்தார். குழந்தை மேலே கையை வச்சேன்னா....பார். அவன் என் குழந்தை.' ரெண்டு பேருக்கு நடுவில் குழந்தை மாட்டிக்கிட்டு திருதிருன்னு முழிக்கிறான். முகத்தில் பயமும் அழுகையும் பொங்கி வருது.
உரையாடல்கள் கத்தல்கள் வாதங்கள் எல்லாம் சுத்தமான ஆங்கிலத்தில்.....
நல்லாப் படிச்சவங்கதான் ரெண்டு பேருமே!!!
என்னதான் ஆச்சுன்னு கோபாலைக் கேட்டா..... அந்த ஆள் மனைவியை (பொது இடத்தில்) அடிச்சுட்டாராம். கண்காட்சி பார்த்துட்டு வெளிவரும் சமயம் எதுக்கோ சண்டை வந்துருக்கு. அதுக்காக...பப்ளிக் ப்ளேஸில் (வீட்டுலே கதவைச் சாத்திக்கிட்டு அடிச்சாலும் தப்பு தப்புதான்) மனைவியைக் கைநீட்டி அடிக்கலாமா? இது தப்புன்னு அந்தக் கணவனுக்குத் தோணலையா? பேச்சு, பேச்சா இருக்கணும். அது என்ன கை நீட்டும் பழக்கம்?
இந்தமாதிரிப் புருசனுக்காக மூணு நாள் முன்னே அந்த மனைவி கருவாச் சவுத் விரதமெல்லாம் இருந்து சல்லடையில் முகம் பார்த்திருக்காங்க. கையில் போட்டுக்கிட்ட மருதாணி கொஞ்சம்கூட மங்காமல் பளிச்சுன்னு இருக்கு.
ஒன்னும் செய்யத்தோணாத நிலையில் நான் வண்டியில் ஏறிக் கிளம்பும் சமயம் திரும்பிப் பார்த்தால்.....குழந்தையின் அருகிலே மண்டி போட்டுக்கிட்டு அந்த ஆள் என்னமோ சொல்லி கெஞ்சிக்கிட்டு இருக்கார். அந்தம்மா.... முகத்தை வேற பக்கம் திருப்பி வச்சுருக்காங்க. கண்ணுலே தண்ணீர் தளும்பி வழியா யாருக்கும் தெரியாம(?) லேசாத் துடைச்சுக்கறாங்க. ச்சே.....பாவம். எவ்வளோ அவமானமா இருக்கும்? ப்ச்......:(
ஏய்யா............பார்த்தாப் படிச்சவனாட்டம் இருக்கே. மனைவியை அடிப்பது தப்புன்னு உனக்குத் தெரியவே தெரியாதா......... இது மட்டும் எங்கூரா இருந்தால் அம்புட்டுதான்.......... அந்த நபர் ஜெயிலில் 'போரிட்ஜ்' தின்னுக்கிட்டு இருப்பார், இந்நேரம்.
இன்னொரு இடத்தில், அதான் ராம்லீலாவில் ராவணனை எரிச்சாங்க பாருங்க அந்தப் பெரிய மைதானத்தில் ஹோம்ஷோ மேளா நடக்குது. இங்கே சண்டிகரில் நான் பார்த்தவரையில் பாராட்டப்பட வேண்டிய அம்சமா ரெண்டு விஷயம் இருக்குது. இப்படிக் கூட்டங்கள், விழாக்கள் நடக்கும் சமயம் புல்தரையா இருந்தாலும் முழுசுக்கும் ஒரு தரைவிரிப்பு பச்சை, நீலம், சிகப்புன்னு போட்டு வச்சுடறாங்க. சிகப்பு விரிப்பா இருந்தா இருந்தா...........அட! ரெட் கார்பெட் வரவேற்பு ன்னு (என்னைப்போல )அல்பமா சந்தோஷப்பட்டுக்கலாம்:-)))) குப்பைகூளங்கள் அட்லீஸ்ட் கண்மறைவாப் போவதால் முகம் சுளிக்காம வலம் வரமுடியுது.ரெண்டாவது விஷயம், அரைவட்ட வடிவில் ஷெட் போட்டு வச்சுடறாங்க. உள்ளே நுழைஞ்சதும் 'ப' வடிவில் வரிசையா ஸ்டால்கள். அப்படியே போய் பார்த்துக்கிட்டே வெளியில் வந்து அடுத்த ஷெட்டில் நுழைஞ்சுறலாம். பரபரன்னு இரும்புக்கம்பி ஃப்ரேம்கள் வச்சு மேலே ஷேடுக்கு, ஷீட்ஸ் போட்டு வைக்கிறாங்க. பார்க்கவும் நீட்டா இருக்கு. இதுமாதிரி தமிழ்நாட்டுலே இருக்கா? பார்த்த நினைவு இல்லை. ஐலண்ட் க்ரவுண்டில் பொங்கல் சமயம் கண்காட்சிக்குப் போனப்ப............ யக்:(
இதை ஒரு பிஸினெஸ்ஸா எடுத்து நடத்தலாம். அழகா நீட்டா இருந்தா மக்கள் விரும்பமாட்டாங்களா என்ன?
பத்து ரூபாய் கட்டணம். உள்ளே போனோம். எள் போட்டால் எண்ணெய் எடுத்துருக்கலாம்! ஹைதராபாத் கம்பெனி ஒன்னு செருப்பு ஷூ ஸ்டேண்ட் விக்குது. மூணு , நாலு, அஞ்சுன்னு அடுக்குகள். அப்படியே மூடி வச்சுரலாம். சுவரில் மாட்டி வைக்கும் விதம், இடமும் அடைக்காது.வாஸ்து சமாச்சாரங்கள், புத்தர் காலடிகள்ன்னு கொஞ்சம். அடுக்களை சாதனங்கள், மைக்ரோவேவ், ஃப்ரிட்ஜ், ஹீட் பம்ப்ஸ், ஏர் கண்டிஷனர், டிவி, கம்ப்யூட்டர்ன்னு பொருட்கள் குமிஞ்சுகிடக்கு. பாத்ரூம் டிஸைன்ஸ், பாத் டப், ஃபர்னிச்சர்ஸ் இப்படி ஒரு பக்கம். காஃபி மெஷீன்கள் எக்கச்சக்கமா விற்பனைக்கு இருக்கு. வட இந்தியாவில் டீ புழக்கம்தான் கூடுதல் அவுங்களை காஃபி பிரியரா மாத்தப்போறாங்க போல!
பாதாம் ,பிஸ்தா, முந்திரி, உலர்ந்த பழங்கள் இவைகளை மெல்லிசா நமக்குத் தேவையான அளவில் ஸ்லைஸ் செஞ்சுக்க ஒரு சின்ன காட்ஜெட் ஒன்னு வாங்கினேன். சமைத்த உணவுகளை அலங்கரிக்க நல்லா இருக்கும். நம்ம தென்னிந்த உணவுகளில் சுவை அருமையா இருந்தாலும் அதை விளம்பும்போது ப்ரசண்டேஷன் பற்றி நாம் ஒரு கவனமும் எடுத்துக்கறதில்லை என்பது கொஞ்சம் விசனம்தான்:( இனிமே பாருங்க நம்ம வீட்டில் ஒரே சீவல்தானாக்கும்:-)))))))
கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் ஆட்கள் கில்லாடிகளா மாறி இருப்பதால் ரூபாய் நோட்டு அசலா இல்லை போலியான்னு கண்டு பிடிக்க ஒரு சின்ன மெஷீன் விற்பனைக்கு இருக்கு. பேட்டரியில் வேலை செய்யுது. ஆனா ஒவ்வொரு நோட்டா வச்சுப் பரிசோதிக்கணும். கூடவே சுமந்துக்கிட்டுக் கடைகண்ணிக்குப் போகமுடியுமான்னு தெரியலை!
நாட்டின் வெவ்வேற மாநிலங்களில் இருந்து வந்து கடை போட்டுருக்காங்க. தமிழ்நாடு மட்டும் மிஸ்ஸிங்:( அண்டை நாடுகள் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்ளாதேஷ் கடைகள் கூட இருக்கு. எதிரி நாட்டுலே(???) செஞ்ச பளிங்குப் பழங்கள் ஒரு சின்ன ட்ரே வாங்கிக்கிட்டேன். மொழுமொழுன்னு அட்டகாஸம்! கடைக்காரப் பையர், நான் சென்னை சீமாட்டின்னதும், க்ரிக்கெட் பற்றிப் பேச ஆரம்பிச்சு உங்க ஊர் 'கேங்கூலி' எனக்குத் தெரியுமுன்னு சொன்னார்! வங்கமும் தமிழும் ஒன்னா இருக்கட்டும். நமக்கென்ன யாதும் ஊரேதானேன்னு தலையாட்டிட்டு வந்துட்டேன்:-)National Bank for Agricuture and Rural Development (NABARD) மகளிர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பொம்மைகள் செஞ்சு வச்சுருந்தாங்க. என்னவோ மாதிரி இருக்கேன்னு விசாரிச்சேன். பழந்துணியில் செஞ்சு களிமண் பூசி அதுக்கு மேலே சாணி போட்டு மெழுகிவச்ச ' கையால் செய்யப்பட்ட சிற்பங்கள்'. புதுமைதான்! லேடீஸ் ஒன்லி ஸ்பெஷல்ஸ்!! குருஷேத்ரத்தில் முழு மகாபாரதக் கதையையும் இப்படிப் பொம்மைகளாலே செஞ்சு வைக்கும் ப்ராஜக்ட் ஒன்னு நடந்துக்கிட்டு இருக்காம். இன்னும் ரெண்டு வருசத்துலே வேலை முடிஞ்சு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப் போறாங்களாம்!
மறுநாளும் இன்னொரு இடத்தில் காஷ்மீரத்துக் கம்பளி ஆடைகள் கண்காட்சியை மந்திரி வந்து திறந்து வச்சார். வேணாம் வேணாமுன்னு நான் சொன்னாலும் அங்கே ஒரு 'அசல்' காஷ்மீர் ஷால் வாங்கிக் கொடுத்தார் கோபால். வீட்டுக்குப் போகும் வழியில் அந்தத் துறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியான நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்துச்சு. அந்த அசல் இங்கே லூதியானாவில் நெய்யப்பட்டதாம். 'காஷ்மீர் இருக்கும் கதியில் இதெல்லாம் எங்கே?' ன்னார்!!!!
ரெண்டு மூணு நாளா அடிச்சவரையும் அடி வாங்குனவங்களையும் பற்றியே நினைவு ஓடுச்சு. சமாதானம் ஆகி இருக்குமா? குழந்தை எப்படி, எங்கே இருப்பான்?
அப்புறம்? காலம்............. மறக்கடிச்சதுலே இதுவும் ஒன்னா ஆகி இருக்கு.
PIN குறிப்பு: அடுத்த பதிவுகள் பயணத்தொடரா ஆரம்பிக்கும். கபர்தார்:-)))))))
Posted by
துளசி கோபால்
at
11/15/2010 06:01:00 PM
25
comments
Labels: அனுபவம் Chandigarh
