Wednesday, June 03, 2020

துர்தேவதை இடம்தேடி அலைஞ்சுருக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 60 )

அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர்,  நம்ம இந்தியப்பயணத்தில்  இன்னொரு குட்டிப்பயணம் விட்டுப்போச்சுன்றதை மெள்ள ஞாபகப்படுத்தினார். அதெல்லாம் தன்னுடைய வேலைன்னால்  மறதியே வராது......  ஊர் திரும்புமுன் 'கட்டாயம்' போய் வரணும்.  ஜஸ்ட்  ஒரு நாள் ஒதுக்கினால் போதுமாம்.  கூட்டிக்கழிச்சுப் பார்த்தால்.... அதுவுஞ்சரிதான்னு  நினைக்கும்படி ஆச்சு.  பயணத்தோடு பயணமா, இந்தியா திரும்பினவுடனே அங்கேயும் போயிட்டு  வந்துட்டால், மிச்சம் இருக்கும்  மூணு நாட்களில் நமக்கு மூட்டை முடிச்சு கட்ட வசதின்னு  குட்டிப்பயணத்துக்குத் திட்டம் போட்டோம்.
ப்ளஸ் அண்ட் மைனஸ் எல்லாம் 'விவாதிச்சு' குட்டிப்பயணத்துக்கு  இங்கிருந்தே டிக்கெட் போட்டாச்.  விவாதத்தில் நேரம் ஓடிப்போச்சு என்றது உண்மை.....  அப்புறம் பார்த்தால் டின்னர் டைம் வந்துருக்கு..........
 பாலத்தில்  போக்குவரத்து... அதிகம்.....

நல்லபடியா 'நம்ம சோறு' தின்னு எத்தனையோ நாளானமாதிரி  ஒரு தோணல். எண்ணி அஞ்சுநாள்தான் ஆகி இருக்கு ! கீழே இருக்கும் மஹாராஜாவுக்குப் போனோம். ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழையும் இடத்துலேயே  தந்தூருக்குத் தனி ரூம்.  அட்டை ரொட்டிகளைப் பார்த்த பயத்தில் நானும் வேணாமுன்னு நான்  சொன்னேன்.



ஜீரா ரைஸ்,  பனீர் டிக்கா மஸாலா,  ஸ்வீட் லஸ்ஸி.  ஒரு மரக்குழலில் சோறு வந்துச்சு. சோறு உள்ளே போனதும் கொஞ்சம் உயிரும் வந்துச்சு.



மறுநாள் நமக்கு ஃப்ரீ டே !  எனக்கான சில பொருட்கள் வாங்கிக்க எற்கெனவே திட்டம் போட்டு வச்சுருந்தேன், மனசுக்குள்.

ராத்திரி தூங்கும் சமயம்....   சைத்தான் வந்து  'நம்மவர் ' மனசுலே இடம் பார்த்து உக்கார்ந்துட்டான்னு எனக்குத் தெரியாது.... (அவருக்கும் தெரிஞ்சுருக்காதுதான் !)

பொழுது விடிஞ்சதும்......  தினம் தினம்தான் அவதி அவதின்னு ஓடியாச்சே....   இன்றைக்கு எல்லாம் நாம் மட்டும்தானேன்னு  நிதானமாவே எழுந்தோம்.  வெளியே பார்த்தால்.....  பயங்கரமான  பனிமூட்டம். பனிமூட்டம் விலகட்டும்,  வெளியே போகலாம்.
ப்ரேக்ஃபாஸ்ட் போகும்போதே மணி பத்து.  ப்ரஞ்ச்சாக இருக்கட்டும்.    கொஞ்சம் நல்லாவே சாப்ட்டால்  லஞ்ச் ஸ்கிப் :-)
சாப்பிட்டானதும் கீழ்தளத்துலே கொஞ்சம் சுத்திப் பார்க்கப் போனோம்.  க்றிஸ்மஸ் அண்ட் நியூ இயர் அலங்காரங்கள்தான்  அதிகம்.......


வரவர எல்லா நாடுகளிலும் குறிப்பா இந்தியாவிலும் கூட   சுமார் ஒரு மாசத்துக்கு முந்தியே  அலங்காரம் ஆரம்பிச்சுருது.  க்றிஸ்டியன் கன்ட்ரீஸ் என்ற வெள்ளைக்கார நாடுகளில் கூட  இந்தப் பண்டிகைக்கு இவ்ளோ அலங்காரம் இருக்காது போல !
இந்தியாவில் இப்படி மாசக்கணக்கா அலங்காரம் செஞ்சு  ஹிந்துப் பண்டிகையைக் கொண்டாடறோமா ?  அதுதான் ஏராளமான பண்டிகைகள் இருக்கேன்னு நினைச்சாலும் நாடு முழுசும் கொண்டாடும் தீபாவளிக்கு ? ( புடவைக்கடைகள் அலங்காரம் இதில் சேர்த்தி இல்லை  கேட்டோ ! அது விற்பனைத்தந்திரம் !  )


ஹொட்டேலையும் சுத்திப் பார்த்துக்கிட்டே கெஸீனோ வாசலுக்கு வந்துருந்தோம். ஒரு அரைமணி ஆடலாம்னு பார்த்தால்.......உள்ளே போக பாஸ்போர்ட் காமிக்கணும்....  யார் இதுக்காக மீண்டும் அறைக்குப் போறதுன்னு சோம்பல்.....  ஆட வேணாம்.... போகட்டும்....  முதலில் பனிப்புகை விலகட்டும்..... கடைகளுக்குப் போகலாம்.

எனக்கு சில பொருட்கள் வாங்கிக்கணும்...... கடைசி நாள்  ஃப்ரீ என்பதால் அப்போன்னு ஒத்திப்போட்டுக்கிட்டே இருந்தேன். 'நம்மவர்'தான்  ' கடைசி நாளில் நிம்மதியாச் சுத்திப் பார்த்துட்டு வாங்கலாம். இப்பதான் இடம் தெரிஞ்சு போச்சே'ன்னார்.  அப்போ நாக்கில்  நல்ல தேவதை உக்கார்ந்துருந்தது....

மணி பகல் பனிரெண்டரை ஆகுது இப்போ.... கிளம்பலாமுன்னு அறைக்குப் போனால்.....   இன்னும் சரியா புகை மூட்டம் விலகலை.... வெயில் வரட்டுமுன்னு சொல்லிக்கிட்டே இவர் கட்டையைக் கிடத்தினார். அடுத்த நிமிட் கொர் கொர்.....

சரி. கொஞ்ச நேரம் தூங்கட்டுமுன்னு நான் வலைமேய ஆரம்பிச்சேன்.  ஒன்னரை மணி ஆச்சு.... வெயிலும் வருது......   வெயில் வந்தாச்சுன்னு எழுப்பினால்..... ' எங்கேயும் போக வேணாம். ரெஸ்ட் எடு'ன்னு சொல்லிக்கிட்டே தூக்கத்தைத் தொடர்ந்தால்.....  எனக்கு எப்படி இருக்கும் ?

என்னதான் காதல் கல்யாணமுன்னாலும்  எப்பவும் ஈ..........ன்னு ஈஷிக்கிட்டே ஆமாஞ்சாமி போட முடியுமோ ?
கொஞ்சம் மூஞ்சு காட்டவேண்டியதாப் போச்சு.....  இதே மாதிரி.....  நடந்த சம்பவங்கள் (அது நாப்பத்திநாலு வருஷங்களுக்கு முன்னால் ஆனதுன்னாலுமே) எல்லாம்  மனசில் ஃபில்ம்  காட்ட ஆரம்பிச்சது..........

"உனக்கு அங்கெபோய் படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போடணும், அதானே ? "

That was the last straw.............   enough is enough......

'கத்திச்சண்டை' ஆரம்பம்.    ஓய்ஞ்சதும் சரி, நாம் மட்டும் போய் வந்தால்  ஆச்சுன்னால்.... அதெல்லாம் தனியாப் போகக்கூடாதுன்னு  144......

ஒரு வழியா ரெண்டரைக்குக் கிளம்பறார்.....  நான் வரலைன்னேன்...... அப்படி ஒன்னும் வாங்கிக்க வேணாம்........

சண்டை ஒத்து நைனா.... சமாதானங்காப் போத்தாமுன்னு  ஒரு வழியாப் புறப்பட்டுப்போனப்ப..... நான் வேணுமுன்னே என் செல்லையும், கெமெராவையும்  அறையிலேயே வச்சுட்டு வெறுங்கையாக் கிளம்பிப்போனேன்.....

டாக்ஸி பிடிச்சு மார்கெட் போனதும் , எதுவும்  வாங்காமல்  (மறக்காமல் தூக்கிவச்ச முகத்தோடு )  ச்சும்மாப் பார்த்துக்கிட்டே கூடப்போனேன் என்பதே உண்மை.

"என்ன வேணும், வாங்கிக்கோ.....வாங்கிக்கோ......."

"எனக்கொன்னும் வேணாம்.... வேணாம்...."

கடைசியில் ஒவ்வொரு பொம்மைக்கடையா நின்னு, 'இது வேணுமா பார், அது வேணுமா பார்...   சொல்லிக்கிட்டு இருந்தியே..... வாங்கிக்கோ.....'

தொலையட்டுமுன்னு  ரெண்டே ரெண்டு வாங்கினதும்   வெளியே வந்து நடக்கும்போது  இன்னொரு  கடையில் நம்ம ஜன்னுவுக்கு  ரெண்டு அலங்காரச்சாமான்களும் ஆச்சு......  பாவம். குழந்தை.... நம்ம சண்டையில் அதுக்கொன்னும்  வேணாமுன்னு இருக்க முடியலை.....

இதுக்கிடையில் ' படம் ஒன்னும் எடுக்கலையா ?'

கேள்வியைப் பாரு......

" கெமெராவைக் கொண்டு வரலை....."   ஷாக் அடிச்சுருக்கும்......  தானே சில படங்களை க்ளிக் க்ளிக்..... (நான் அப்போ கவனிக்கலை..... கோபம் குறையாமல் இருப்பதில்  கவனமா இருந்தேன் )  

அறைக்குத் திரும்ப டாக்ஸி எடுக்க நின்னால்.....  ஒவ்வொரு ட்ரைவரும்  நம்மை ஏமாத்தக் கங்கணம் கட்டிக்கிட்டு நின்னால் எப்படி?  நியாயமான வாடகை நூறு. அதை அஞ்சாலும் ஆறாலும்  பெருக்கினால் எப்படி ?  கடைசியில் நூத்தம்பதுக்கு ஒரு வண்டி கிடைச்சது. எல்லாம்  குப்பைவண்டிகள்.....

நாலுமணிக்கு ஹொட்டேலுக்கு வந்ததும், ஒரு பாட்டம் உக்கார்ந்து அழுதுட்டுத் தூங்கிட்டேன்.....  இப்படி அந்நிய மண்ணில் கண்ணீர் விடும்படி.....    ப்ச்.....

ராத்ரி சாப்பாடு ரூம் சர்வீஸில்......
பேக்கிங் எல்லாம் ஆச்சு.......
ராத்ரி பத்தே முக்காலுக்கும்  பாலத்தில்  போக்குவரத்து குறையலை....  நைல் அட் நைட்னு  வேடிக்கை பார்த்துட்டு, இதுதான் கடைசி இரவுன்னு சின்னதா ஒரு ரெண்டு நிமிட் வீடியோவும் ஆச்சு.....

தொடரும்........... :-)



13 comments:

said...

ஹாஹாஹா
ஹிஹிஹி
கோபால் சார் - ப்ரமாதம்

said...

துர்தேவதை - :)

இப்படியும் சில நாட்கள் இருந்தால் தானே வாழ்க்கை ஸ்வாரஸ்யம்.

said...

எதோ ஒரு இன்டியூஷன் இன்னிக்கு மியாவ் இருக்கும்னு ஹாஹ்ஹா :) இருக்கானே ரஜ்ஜு ஜன்னு பக்கத்தில் :)

said...

/கோபம் குறையாமல் இருப்பதில்  கவனமா இருந்தேன் )  //
நான் கூட கோபம் வந்தா  காபி டீயில் சுகர் போட்டு கலக்காம கொடுத்துடுவேன் :)

said...

ஈஜிப்ட் பயண நிறைவுப் பகுதிக்கு வந்தாச்சா....

சண்டையும் சாமாதானமும் என்று இடுகைத் தலைப்பு வைத்திருக்கலாம்.

எப்படியோ நாலு பொம்மைகள் வேறு வாங்கிவிட்டீர்கள். வாழ்த்துகள்.

said...

எங்களுக்கும் 44 வருஷம் ஆகிவிட்டது. நாங்கள் பேசிக்கொள்வதே சண்டை போடுவது போலத்தான் இருக்கும்.  ஊடுதல் ஒரு இன்பம் என்று ஐயனே சொல்லியிருக்கிறார்.  

said...

எங்களுக்கும் 44 வருஷம் ஆகிவிட்டது. நாங்கள் பேசிக்கொள்வதே சண்டை போடுவது போலத்தான் இருக்கும்.  ஊடுதல் ஒரு இன்பம் என்று ஐயனே சொல்லியிருக்கிறார்.  

said...

வாங்க விஸ்வநாத்,

ஆமாமாம்.... கோபால் சாருக்கு ரொம்பதான் சப்போர்ட் பண்ணறீங்க.... நல்லதுக்கில்லை..... கேட்டோ ! :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சிலநாட்களா ? ஹாஹா......

said...

வாங்க ஏஞ்சல்,

தினமும் தேவை இருக்கோ இல்லையோ ஒரு பூனைப்படம் பதிவில் சேர்த்துக்கப்போறேன் :-)

நானும் கோபமா இருக்கும்போது 'இன்றைக்கு நல்லாவே சமைக்கக்கூடாது' ன்னுதான் ஆரம்பிப்பேன். ஆனால் கைக்கு ஒரு பழக்கதோஷம் இருக்கே.... அது தானாகவே நல்லா ஆக்கிரும்ப்பா....

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

நாலு எங்கே ? ரெண்டே பொம்மைதான். பேரரசி ஒன்னு, இன்னொன்னு பூனைச்சேவகி :-)

said...

வாங்க ஜயக்குமார்,

ஹாஹா...

இங்கே குரலை உயர்த்திப் பேசினால் ஒருவருக்கு ஆகாது.... சட்னு தலையைத் தூக்கிப் பார்த்துட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிருவான் நம்ம ரஜ்ஜு :-)

44 ஆ ? நாங்க சீனியர்ஸ்... 46 :-)

said...

பனி மூடியதால் வீட்டிலும் மூட்டம் வந்தது வெய்யில் வர மகிழ்ச்சியும் வந்தது. சிறுசிறு பனிமூட்டமும் வேண்டும்.

ஜன்னு கிளியோ மகாராணி ஆகிவிட்டாள்.அழகோ அழகு. ரஜ்ஜு தான் மகாராஜா என்கிறான்.