Wednesday, August 29, 2018

நைராவின் அம்மம்மா நம் தோழி என்று கூறிக்கொண்டு... (பயணத்தொடர், பகுதி 2 )

ரொம்ப லேட்டாத் தூங்கப்போனதால் காலை எட்டேகாலுக்குத்தான் விழிப்பு.  நிதானமாக் குளிச்சு முடிச்சுக் கீழே ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனப்ப மணி ஒன்பதேகால்.  லோட்டஸில் சௌத், நார்த் இந்திய வகைகள்னும், கூடவே வெள்ளைக்காரர் வகைன்னு  ப்ரெட், ம்யூஸ்லி வகைகளும், கூடவே பழங்களும், வேகவைச்ச முட்டைகளும் இருக்கும். இதெல்லாம் போதாதுன்னு ஒரு இனிப்பும் உண்டு.

தோசையோ, ஆம்லெட்டோ வேணுமுன்னால் சொன்னவுடன் செஞ்சு தருவாங்க. இத்தனை இருந்தாலும் எனக்கென்னவோ ரெண்டு வடையும் ஒரு இட்லியும்தான்.  சில சமயம் ரெண்டு இட்லி ஒரு வடையாவும் இருக்கும்:-) இதுக்கு ஒரு மூணு வகைச் சட்னிகளும்!  அப்புறம் இட்லி மொளகாய்ப்பொடியும், நெய்யும் வைக்க ஆரம்பிச்சாங்க :-)
ஒரு துரும்பையும் நகர்த்தாம இப்படி சாப்பிடக் கசக்குதா?  முதல் நாளை இனிப்போடு ஆரம்பிக்கலாமேன்னு  கொஞ்சம் கேஸரியும் எடுத்துக்கிட்டேன். சாப்பிட்டு முடிச்சதும்,  நானும் இவரும் ஒன்னுபோல நினைச்சோம்.....  வண்டி பதினொன்னரைக்குச் சொல்லி இருக்கு. இப்ப மணி பத்துதான்.  கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாமா? சனிக்கிழமை வேற!

ஆட்டோ பிடிச்சு வெங்கடநாராயணா ரோடு, திருப்பதி தேவஸ்தான வாசலில் இறங்கி, உள்ளே போய் பெருமாளை ஸேவிச்சுக்கிட்டோம். அவ்வளவாக் கூட்டமில்லை.  சின்னதா ஒரு சரம் துளசிமாலை, எதோ போனாப் போகட்டும்றதுபோல் பெருமாளுக்குச் சார்த்தி இருக்கு.  சில வருசங்களுக்கு முன்னேயே 'துளசியைக் கொண்டுவர வேண்டாம்'னு அறிவிப்பு பார்த்துருக்கேன். ப்ச்.....

முந்திமாதிரி தீபாராத்தி முடிஞ்சதும்,  பட்டர் தீபத்தை நம்ம முன்னால் நீட்டறது கூட இல்லை.... ஓரமா வச்சுடறார். நகர்ந்து போகும் வரிசை,   அப்படியே போகும்போது தீபத்தைக் கையால் தொட்டு(!!!) கண்ணில் ஒற்றிக்கலாம். ஆச்சு. பின்வாசலில் வெளியேறினால், கண் முன் ரெங்கன். தேவியரும், ஆண்டாளும், ஆஞ்சியும் இன்னும் சில உற்சவமூர்த்திகளோடு  கிடப்பான்.  ஒரு கும்பிடு போட்டுட்டு நம் வலப்பக்கம் போனால் தட்டுலே கொஞ்சம் துளசி, ஒரு பெரிய தூக்குலே டயமண்ட் கல்கண்டுன்னு இருக்கும்.  எப்பவாவது இங்கே துளசித் தீர்த்தமும் கிடைக்கும்.  இதுக்கு அடுத்துள்ள கவுன்ட்டரில் லட்டு விற்பனை.

முந்தியெல்லாம் மாசத்தின் முதல் சனிக்கிழமைகளில் மட்டுமேன்னு இருந்தது இப்ப எல்லா சனிகளிலுமாம்!  விற்பனை பயங்கர சூடு பிடிச்சுருக்கு போல!  பணம் பண்ணப் பெருமாளுக்குச் சொல்லியா கொடுக்கணும்?  வெள்ளிக்கிழமையே ஒரு பெரிய  ட்ரக்கில்  திருமலையில் இருந்து  லட்டுகள் வந்து இறங்கிடுதாமே!  சொந்த பந்ததுக்குக் கொடுக்கலாமேன்னு  நாலு லட்டு வாங்கினோம்.
வெளியே போனதும்  கோவில் வாசலாண்டைக் கொஞ்சம் தள்ளி இருக்கும் பூக்கடைகளுக்குப் போனா, ' யம்மா, எப்பம்மா வந்தே?' பூக்காரம்மா சாமுண்டியின்  விசாரிப்பு.  ஒரு பதினாறு வருசப் பழக்கம். சின்னப்பொண்ணா ஒரு கைக்குழந்தையோடு இருந்தாங்க, அப்போ. பையன் இப்போ காலேஜ் சேர்ந்துருக்கானாம்.  'அடுத்ததடவை வரும்போது ஒரு வாட்ச் வாங்கியாந்து கொடும்மா'  சரின்னேன்.  முரளி எங்கேன்னதுக்கு,  கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்தவர் ஓடி வந்தார்.  ஆள் இளைப்புதான்.  சாமுண்டி நல்ல உயரம், அதுக்கேத்த உடம்பும். சின்ன சொர்ணாக்கா!  ஆனா  முகத்துலே நல்ல களை.  அதென்னவோ வருசாவருசம் திருப்பதிக்குப்போய் மொட்டை போட்டுக்கிட்டு வந்துருவாங்க. இங்கே படியளக்கும் பெருமாளுக்கு அங்கே போய் நன்றிக் கடன் !  இப்ப முடி வளர்ந்துருக்கேன்னால்.... புரட்டாசிக்கு திருப்பதி பயணம் இருக்காம்!
சாமிக்கு என்ன பூன்னு கேட்டு ரோஜாச் சரத்தை எடுக்கும்போது, 'சாமிக்கு  வேணாம். மல்லி போதும், அது எனக்கு'ன்னேன். சட்னு மல்லிச்சரத்தை நறுக்கிக் கொடுத்து, பூவச்சுக்கப் 'பின்'  வேணுமான்னு  கேட்டாங்க. அதெல்லாம் ரெடியாத்தான் வந்துருக்கேன்னேன் :-) இந்தியப் பயணம் அதுவும் சென்னைன்னா.... பூ இல்லாமல் இருக்க முடியுமோ? அங்கே வச்சுக்கிட்டால்தான் உண்டு! நியூஸியில் பூச்சரத்துக்கு எங்கே போவேன்?  காசு கொடுத்தால் வாங்கிக்கலை.  "ஐய்ய....  ச்சும்மாப் போம்மா...."

குளிரில் இருந்து வெயிலுக்குப் போனதும் பாதம் இளைக்குது போல....  சிங்கை ஏர்ப்போர்ட்டில் நடக்கும்போதே  வலக்கால் செருப்பு காலில் தங்காம சட்னு நகர்ந்து காலைவிட்டு முன்னால் போனது, இப்பக் கழண்டே போகுது. அப்பப்ப நின்னு காலை நல்லாத் திணிச்சுக்க வேண்டி இருக்கு. என்ன ஒரு சல்யம்? ஏன் இடது பாதம் இளைக்கலை?  ஙே....

லோட்டஸ் போகும் வழியில்  பாண்டி பஸாரில் செருப்புக் கடைக்குப் போயிட்டுப் போகலாம். இன்னைக்கு  ரம்ஸானுக்குக் கடைகள் திறந்துருக்குமான்னு தெரியலையே.....

போன நேரம், பாடா திறக்கலை. மோச்சின்னு ஒரு கடை திறந்துருந்துச்சு. அங்கே  செருப்பொன்னு 'போட்டுப் பார்த்து வாங்கிக்கிட்டு' லோட்டஸ் போனோம்.

பதினொன்னரைக்கு  வண்டி வரும்.  புதுசா ஒரு குழப்பம் என்னன்னா....  நம்ம டிரைவர் சீனிவாசன், இப்போ  ஸ்ரீராம் ட்ராவல்ஸ்லே இல்லையாம். நேத்து நம்மை இங்கே கொண்டுவந்து விடும்போது சொல்லி, 'இன்னொரு  வண்டிக்கு ஏற்பாடு செஞ்சாச்சு, இந்த நம்பருக்குப் ஃபோன் பண்ணி நேரம் சொல்லிருங்க'ன்னார்.

சொன்ன நேரத்துக்கு  'சதீஷ்' வந்தார். ஓனர் ட்ரைவர்.  தோழி வீட்டுக்குப் போறோம். என்ன வழின்னு கூகுள் மேப் பார்த்துச் சொல்லிக்கிட்டே வந்தார் 'நம்மவர்'!  இதிலும் நம்ம சீனிவாசன்  இல்லாதது கொஞ்சம் கஷ்டமாத்தான் போயிருக்கு.  அவருக்கு  எந்த இடமுன்னு பெயரைச் சொன்னால் போதும். 'டான்' னு கொண்டுபோய் சேர்த்துருவார். நம்ம  ஸர்க்யூட் எல்லாம் அவருக்கு அத்துப்படி!  மாமா வீடு, மச்சினர் வீடு, நாத்தனார் வீடு,  நேருநகர் தோழி, கோயம்பேடு  தோழி  இப்படியே சொல்லிச்  சொல்லி எனக்கு  அவுங்களோட  ஃபிஸிக்கல் அட்ரஸே மறந்தும் போச்சு!

தோழி சந்திப்புக்கு ஒதுக்கின நேரத்துக்கு முன்னாலேயே அங்கே போயிட்டோம். ஆனால் சின்னக் குழந்தை இருக்கும் வீடு. அவுங்க சௌகரியத்துக்குத் தடங்கலா,  முன்னாலே மூக்கை நீட்டவேண்டாமேன்னு  தோணுச்சு எனக்கு. அதனால் அந்த ஏரியாவில் ஒரு சின்ன ரவுண்டுன்னு போயிட்டு வரலாமுன்னு எங்கியோ சின்னத் தெருக்களில் போனதுக்கு ஒரு   துணிக் கடையை வேடிக்கை பார்க்கன்னு போய் ஒரு ஸல்வார் கமீஸ்  துணி வாங்கிக்கிட்டு, வாசலில் இளநீர் வாங்கி  மூணுபேருமாக் குடிச்சுட்டுத் தோழி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

பிறந்து  ஒரு மாசமே ஆன புத்தம் புது பூ!  இதுக்குள்ளே மற்ற தோழியரும் ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்தாங்க.  எல்லோரும் நம்ம மரத்தடி கால நட்பூக்கள்.  இத்தனை வருசங்களில் தோழியர் மட்டுமில்லாம குடும்ப நண்பர்களாவே ஆகிப்போனதால் யாரும் எந்த  வித்தியாசமும் இல்லாமப் பேச்சும் சிரிப்புமா போய்க்கிட்டு இருக்கு!
புதுக்குழந்தைதான் சத்தம் கேட்டு மிரண்டுபோயிட்டாளோன்னு.....   ஹிஹி....
தோழியின் மகளின் குழந்தை நைரா !  கொள்ளை அழகு!  மகளும் மருமகனும் வந்து எல்லோருக்கும் 'ஹை' சொன்னாங்க.  மருமகனை நானும் கோபாலும் இப்பத்தான் முதல்முறையாப் பார்க்கிறோம். கல்யாணத்துக்கு வரலை பாருங்க...  மகளும் மகனும் நமக்கு ஏற்கெனவே பழக்கமானவங்கதான் :-)
திருப்பதி லட்டு எடுத்து பிரஸாதமாத் தரும்போது முதலில் நீண்ட கை எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!  நம்ம நாத்திகப்பேரொளி, பெரியார் சீடின்னு சொன்னா நம்புங்க :-)
 சுவையான சாப்பாடும், பேச்சும் சிரிப்புமா நேரம் போனதே தெரியலை.  நாலரைமணி சுமாருக்குக் கிளம்பலாமுன்னு ஒவ்வொருத்தரா 'ஓலா, ஊபர்'னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இதுலே அமெரிக்காவில் இருந்து வந்துருந்த தோழி, அன்றைக்கு இரவு நாடு திரும்பறாங்க. பேக்கிங் இன்னும் முழுசுமா முடியலைன்னு ....  அடப்பாவமே..... சட்னு கிளம்புங்கன்னோம்.

கிளம்பறதுக்கு முன்னே  க்ளிக்ஸ் ஆச்சு :-)
கனிச்செல்லம் எங்களையெல்லாம் கண்டுக்கவே இல்லை. அவர் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருந்தார்.
நாங்களும் கிளம்பினோம்.  நேரா அறைக்கு வந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக்கிட்டு வெளியே  போகலாமுன்னு நினைப்பு.  அறைக்கு வந்ததும்  பயணக் களைப்பு இருக்கறதா நம்மவர் சொன்னாரேன்னு....   திட்டத்தை மாத்தியாச்சு.

 நாளைக்கு  எத்தனை மணிக்கு  வண்டி வேணுங்கறதை அப்புறமாச் சொல்றோமுன்னு , சதீஷை அனுப்பிட்டு இவர் வந்து படுத்தவர், தூங்கிட்டார்.

லோட்டஸில் வைஃபை நல்லாவே வேலை செய்யுது :-)

ஏழரை மணி போல ராச்சாப்பாட்டுக்குன்னு  ஒரு ஆட்டோ புடிச்சு, நம்ம பாண்டிபஸார் கீதா கஃபேக்குப் போய்  ஒரு செட் பூரியும், ஒரு தோசையுமா  முடிச்சதும்,  ரெண்டு கடை தள்ளிப்போய்  டிஸ்ப்ளேயில் இருந்த  ஸல்வார் கமீஸ் செட்டைப் பார்த்துட்டு உள்ளே போனேன்.
போனமுறை இங்கே வாங்கி இருப்பதால்  துணிகளின் தரம் பற்றி பிரச்சனை இல்லை.  நல்லி, குமரன், போத்தீஸ் வகையறாக்களுக்கு இந்தப் பயணத்திலும்  போகப்போறதில்லை என்ற எண்ணம் இருந்தது.
இது வட இந்தியாவில் இருந்து  வரவழைச்சு விற்கும் வட இந்தியர் நடத்தும் கடைதான். (சென்னையில் முக்கால்வாசி வியாபாரம் நார்த்தீஸ்தானே? ) ஒன்னுக்கு மூணா  இப்போ அண்ணந்தம்பிகள் மூணு பேர் அடுத்தடுத்துக் கடை வச்சுருக்காங்களாமே! ரெண்டு கடைகளில் பார்த்து நாலுசெட் துணிகள் வாங்கினதோடு அறைக்குத் திரும்பியாச்சு.

இன்றையப் பொழுது இப்படிப்போச்சு!

தொடரும்.......:-)

9 comments:

said...

பின்னூட்டம் தெரிய.... நம்ம வெங்கட் நாகராஜின் ஆலோசனையின் படி... :-)

said...

நட்புகளின் சந்திப்போடு சுகமான ஆரம்பம்.

இட்லி-வடை இல்லைன்னா வடை-இட்லி! :) தட்டில் வெண்ணை தானே இருக்கிறது, நெய்?

தொடரட்டும் அனுபவங்கள்.

முதல் கருத்தில் நானும்! - நன்றி! :)

said...

மதிய, வீட்டு சாப்பாடு படம் வரலை என்று ஞாபகப்படுத்திவிட்டு ...
தொடரக் காத்திருக்கோம் (எப்போதும் போல்);

said...

சுவையான சாப்பாடு... சுவையான சந்திப்புகள்... கலக்குங்க...!

நான் பதிவிட்டதும் கமெண்ட் போடாமலேயே கமெண்ட் பாக்சில் ஒரு டிக் மட்டும் போட்டு விடுவேன். கமெண்ட்ஸ் மெயிலுக்கு வந்து விடும்! அப்புறம் பதில் கொடுப்பதெல்லாம் இருக்கவே இருக்கு!

said...

குழந்தையைப் பாக்கப் போறோங்குற பேர்ல பெரிய பதிவர் சந்திப்பே நடந்திருக்கே. அடடா!

பிஞ்சுப் பூங்குழந்தைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் + ஆசிகள்.

// திருப்பதி லட்டு எடுத்து பிரஸாதமாத் தரும்போது முதலில் நீண்ட கை எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்! நம்ம நாத்திகப்பேரொளி, பெரியார் சீடின்னு சொன்னா நம்புங்க :-) //

அவங்க கொள்கைல சரியாத்தான் இருக்காங்க. பிரசாதமா இருந்தாலும் பிற சாதமா நினைக்கிறதில்லை. நல்லதுதானே. லட்டு லட்டுதானே. :)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சிலநாட்களுக்கு முன்னே ப்ளொக்ஸ்பாட்டே உனக்கு வர்ற பின்னூட்டங்களை மெயிலில் அனுப்பவான்னு கேட்டது. முதல்லே இப்படி இருந்ததை ஏன் நிறுத்துச்சோ தெரியலைன்னாலும்.... அனுப்புன்னு க்ளிக் பண்ணினபிறகு ப்ராப்லம் ஸால்வ்டு :-)

சட்னி எல்லாம் கொஞ்சம் காரமாத்தான் இருக்குன்னு இட்லிக்கு வெண்ணை :-)

said...

வாங்க விஸ்வநாத்,

பேச்சு சுவாரஸியத்துலே படம் எடுக்க விட்டுப்போச்சு. அதுதான் நோ படம் :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

இப்ப குழப்பம் தீர்ந்துருச்சே! உங்களுக்கும் தானே?

said...

வாங்க ஜிரா.

அவரவருக்கு அவரவர் கொள்கை! அவுங்க நம்பலைன்னா சாமிக்கு என்ன நஷ்டம்?