Wednesday, December 13, 2017

பாண்டியில் பதிவர் சந்திப்பு ! (இந்திய மண்ணில் பயணம் 88)

மரத்தாண்டை ஆல்ட்டோ நிக்குதான்னு பாருங்க......  நம்ம சீனிவாசனிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன்.   என் கண்ணும் தேடுச்சுன்னாலும்....  எட்டரை மணி இருட்டுலே என்னாத்தன்னு  கண்டேன்.  நம்ம சீனிவாசன் தொழில்முறை ஓட்டுனர் என்பதால் அவர் கண்ணு கண்டு பிடிச்சுறாதா என்ன?


நண்பர் வீட்டுக்குச் சரியான பாதையில்தான் போறோமான்னு தெரிஞ்சுக்க அவரை செல்லில் கூப்டு விசாரிச்சதில்தான்  'அந்த அடையாளம்' சொன்னார் :-)

வண்டி கண்ணில் படுமுன்னேயே   மனிதர் கண்ணில் பட்டுட்டார். முதல்முறை நேரில் சந்திக்கப்போறோம். ஆனால் முகம் ரொம்பவே பரிச்சயமா இருக்கே!  எல்லாம்  ஃபேஸ்புக் காமிக்கும் ஃபேஸ் காரணம் :-)

வணக்கம், ஹலோ , ஹை எல்லாம் சொல்லிட்டு வீட்டுக்குள்ளே கூப்ட்டுப் போறார்.  அவருடைய தங்க்ஸ்  கண்ணும், முகமும்  சிரிக்க  நம்மை 'வாங்க'ன்னாங்க.

சிலரைப் பார்த்ததும் மனசுக்குச் சட்னு பிடிச்சுப்போகுது பாருங்க.... இவுங்க அந்த வகை!  எனக்குப் பொதுவா கண்ணைப் பார்த்துப்பேசும் பழக்கம் இருப்பதால்....  சிரிக்கும் கண்கள்  கிட்டத்துலே கூப்புட்டுப் போயிரும் :-)
நண்பர், பல்துறை மன்னன்!  எழுத்தாளர், பாடகர்,  இசை அமைப்பாளர்,  இப்படி இருந்தாலும்.... ஒரு பெரிய  நிறுவனத்தில் உயர் அதிகாரியாக(வும்) இருக்கார்.  நாம் சந்திக்கும் சமயம்,  (ஆஃபீஸ்)வேலையில் இருந்து  ஓய்வுன்னு  ஆகி இருக்கார்!   இதில்லாம   பல நிறுவனங்கள்,  அவுங்க  ஸ்டாஃப் மேனேஜ்மென்ட் பயிற்சிக்கு இவரைக் கூப்பிட்டு  நடத்திக்கறாங்க.

   ரொம்பவே பேத்துவாரோன்னு   வலைப்பதிவு பெயரை வச்சு நினைக்கப்டாது கேட்டோ!  அவருடைய இதயம்தான்  பேத்துமாம் :-)  இதுதான்  அவருடைய வலைப்பதிவின் பெயர்.  புது வாசகர்கள் எட்டிப் பார்க்கலாம் !  ஏமாறமாட்டீர்கள் !!! சுயமுன்னேற்றக் கட்டுரைகளின் ஸ்பெஷலிஸ்ட்!


இப்பெல்லாம் வலைப்பதிவில் இவரைக் காணோம். எங்கே...   முகநூலில் முழுகி முத்தெடுத்துக்கிட்டு இருக்காரே! 

உங்க எல்லாருக்கும் தெரிஞ்சவர்தான் இவர்!   இல்லையோ!!!
பதிவர் சந்திப்புகளில் கொஞ்சம் பேச்சு சுவாரஸியம் வேற மாதிரி. அந்தக் காலத்தில் பிரபல பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளரைப் பார்க்கும்போது  வரும் பிரமிப்பெல்லாம்  வர்றதில்லை. அதான் பதிவுகளில் பின்னூட்டமா பேசிக்கிட்டு இருக்கோமே... அதை மிஞ்ச  இப்ப  ஃபேஸ் புக்  வந்துருச்சு. முகம் பார்க்கலையே தவிர நிமிட்டுக்கு நிமிட்  சொல்றதைச் சொல்லிக்க முடியுதே!

அதுக்காகப் பேசாமல் இருப்போமோ?  ஒன்னரை மணி நேரம் அடிச்சு ஆடுனதுதான்!   எல்லா Bபாலிலும் சிக்ஸர்!  அடிச்சவங்க யாரு தெரியுமோ?   ஜவர்லாலின்  தங்க்ஸ்!!!  இவுங்க மட்டும் எழுத வந்துருந்தா....   ஹைய்யோ!!!
 சிரிச்சுச் சிரிச்சு மாளலை!   பெரிய பதவியில் இருக்காங்க.  விஆர்எஸ்ஸுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்களாம். இனி  ஜாலியா பயணங்கள் போக ஆசைன்னாங்க.  ஹைய்யா.... நம்ம கூட்டம் :-)

சாப்பிடச் சொல்லி ரொம்பவே வற்புறுத்துனாங்கதான்.  தோசைன்னு ஆசை காமிச்சாங்க.  ஆனால் மனசு நிறைஞ்சு போயிருந்ததால் பசியே இல்லை....


பேச்சு சுவாரஸியத்துலே   படங்களே எடுக்கலைன்னா பாருங்க. கெமெரா எப்படியோ  நம்மவர் கையிலே போயிருந்ததும் ஒரு காரணம்!

மத்யானம், பாரதியார் வீட்டுக்குப் போனது தெரிஞ்சுருந்தா, நானும் வந்துருப்பேனேன்னார் ஜவர்லால்.  எனக்கும் தோணலை பாருங்க....

கிளம்பும் நேரத்துலேதான் சட்னு ஒரு நாலைஞ்சு படங்கள் ஆச்சு. நம்மவர் உபயம். நான் தேன்குடிச்ச நரி(!) போல  திருமதி சுப்புலக்ஷ்மியின் பேச்சில் லயிச்சுருந்தேனே.

நேத்து அவுங்க பொறந்த நாள்.  இங்கேயும் அவுங்களுக்குப் பொறந்தநாள் வாழ்த்துகளை நம்ம அனைவரின் சார்பிலும்  சொல்லிக்கவா?
ஹேப்பி பர்த்டே சுப்புலக்ஷ்மி தொரைசாமி!  நல்லா இருங்க.

இவுங்க ரெண்டு பேரும்  எப்பவும் இதே மாதிரி இருக்கணும்.  அவுங்க பக்கங்களில் இருந்தே சில படங்களைச் சுட்டுக்கிட்டேன்.  மனைவி   சொல்றதுக்கெல்லாம்  கணவர்       'ஓம்' ன்னால் பிரச்சனையே வராதுல்லே !!!

 குறிப்பால் உணர்த்திட்டாங்க:-)

ஆமாம்.... நம்ம  ஜவர்லாலின் சின்ன வயசு படத்தைப் பார்த்தா....   நம்ம சுஜாதா நினைவு  வர்றது எனக்கு மட்டும்தானா? 
இவருடைய ரெட்டைப்பிறவி ரொம்பவே பெரியவரு!  என்ன  ஒரு ஹ விட்டுப்போச்சு, போங்க!
இவுங்களை சந்திக்கணுமுன்னா இனி பாண்டி போகத் தேவை இல்லை. சிங்காரச் சென்னைக்கே வந்தாச்சு.  அடுத்த முறை சந்திப்பு  சென்னையில்தான்!  ஓக்கே?
மஞ்சள் குங்குமம்   வாங்கிக்கிட்டு ஷெண்பகாவுக்குத் திரும்பி வரும்போது 'என்ன ஒரு பொருத்தமான ஜோடி'ன்னு நம்மவர்  வியந்து பாராட்டுனது  நெசம்!

நாளைக்குக் காலையில்  இங்கிருந்து கிளம்பறோம். நாள் எப்படி அமையுதுன்னு  பார்க்கலாம்!

தொடரும்.........  :-)

14 comments:

said...

ஆஹா... நல்ல ஜோடி. அங்கும் வாழ்த்து சொல்லி இருந்தாலும் இங்கே சொல்வதும் ஸ்பெஷல். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Mrs . ஜவர்லால்.

said...

உங்களுக்கும் வாழ்த்துகள்..
சுவாரசியமான சந்திப்பிற்கு.

said...

இனிமையான சந்திப்பு. எங்க கோபால் சாரைக் காணோம்?

பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும்போது அந்நியமாகத் தெரிவதில்லை. திருமதி கேஜி ஜவர்லால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

அருமை நன்றி வணக்கம்

said...

கோபால் அப்பா எங்க?!

said...

பதிவுகளை வாசித்து வாசித்து இந்த தங்ஸ் ரங்ஸ் போன்ற வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்துகொண்டேனா

said...

Great to hear about a lively couple. I have been an ardent fan of his wordpress site. A great missing after he is stopped updating the same.

Birthday wishes to Mrs.jawarlal

said...

வாங்க ஸ்ரீராம்.

வாழ்த்துகளுக்கு 'அவர்கள்' சார்பில் நன்றி!

said...

வாங்க ரிஷபன்.

நன்றீஸ்.

நம்ம சந்திப்புப் படங்களை போடலைன்னு இப்பவும் நினைப்பு இருக்கு :-(

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

கோபால்தான் பேச்சு சுவாரஸியத்தில் மூழ்கிட்டாரே! கெமெரா அவர் கையில் இருந்தால் அவ்ளோதான். உலகமே மறந்து போகும் அந்த கெமெரா உட்பட :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ராஜி.

அவர்தான் ஃபொட்டோக்ராஃபர். அதுவும் நான் சொன்ன பிறகுதான் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தங்கமணி, ரங்கமணி என்பதின் சுருக் அந்த தங்ஸ் & ரங்ஸ் :-)

இதுபோல நிறைய புதுச் சொற்கள் இணையத்தில் புழங்குதே!

said...

வாங்க நன்மனம்.

எனக்கும் அந்தக் குறை இருக்கு. அவர் ஃபேஸ்புக்கில் எழுதறதைக்கூட இங்கே வலைப்பக்கத்தில் போட்டு வைக்கலாம்.

தேடிப்படிக்க எளிதாகவும் இருக்கும்.