Wednesday, November 16, 2016

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 97)

நம்ம ஹயக்ரீவாவில் இருந்து  ஒரு  பதினேழு கிமீ போறோம். நேத்து நம்ம நண்பர் வெங்கட்நாகராஜ், சில  கோவில்களைப் பற்றிச் சொன்னதும், அவைகளையெல்லாம் நம்மவர் எழுதிவச்சுக்கிட்டார். வைணவர்களுக்கு எப்படி 108 திவ்ய தேசங்கள் வரிசை இருக்கோ  அதே போல சிவனை பூஜிப்பவர்களுக்கு  பாடல் பெற்ற தலங்கள் என்று ஒரு வரிசை இருக்கு.  274 கோவில்கள்!  அதுலே இந்த திருப்பைஞ்ஞீலி 62 வது கோவில்.

கொள்ளிடம் பாலம் கடந்து மண்ணச்சநல்லூர்வரை போய், அங்கிருந்து லெஃப்ட் எடுக்கணும். முப்பத்தியஞ்சு நிமிட்லே போய்ச் சேர்ந்தோம். கோவிலைதேடும் அவசியமே இல்லாமல்   ஒரு  நுழைவு வாசல் கண்ணுலே பட்டது. முகப்பில் இருக்கும் அலங்கார வளைவிலேயே ட்ரெய்லர் காமிச்சுட்டாங்க. ரிஷப வாகனத்தில் சிவனும் பார்வதியும், சிவனுக்கு வலப்பக்கம் மூஷிக வாகனத்தில் புள்ளையார், இடப்பக்கம் மயில் மேல் முருகன்!
மேலே பழைய படம்.
இப்போ....இப்படி.       சுவர் சுத்தமா   இருந்தா  சனத்துக்குப் பிடிக்காது  :-(
இந்த அலங்கார வாசலின் சுவர்தான் உள்ளூருக்கு நோட்டீஸ்போர்டு :-(
 உள்ளே போனால் முதலில் கோபுரம் கட்டப்படாத மொட்டை  (கோபுர) வாசல். ராஜகோபுரம் கட்ட ஆரம்பிக்குமுன் எதோ காரணத்தால்  வேலை நின்னு போயிருக்கு. நம்ம ஸ்ரீரங்கத்தில்கூட இப்படித்தான் பலவருசங்களாக் கிடந்த மொட்டைக் கோபுரம் அஹோபில மடத்தின் 44 வது பட்டமாகப் பொறுப்பு எடுத்துக்கிட்ட ஸ்ரீ அழகியசிங்கர் ஜீயர் அவர்களின்  முயற்சியால் இப்போ நாம் பார்த்து ரசிக்கும் ராஜகோபுரமாகக் கட்டப்பட்டதைப்போல இதுக்கு எப்போ யார் மூலமாக வேளை வரப்போகுதோ?

மேலே இருக்கும் சிற்பங்களை நம்ம கேமெராக் கண்ணை அனுப்பிப் பார்த்தால்....  அந்தத் துல்லியம் தெரிவதுடன்,  எட்டுக்கால் பூச்சிகளின் குடும்பங்கள் அங்கு குடி இருப்பதும் தெரியவந்தது!

இப்ப இருக்கும் மொட்டைக் கோபுரத்துக்குள்ளே சிற்ப வேலைகள் அபாரம்! பளிங்குக் கல்லால்  கட்டப்பட்டு இருக்கும் சமணக்கோவில்களில் இருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் போலவே இங்கே!  அதுவும் கருங்கல்லில்! சின்னச்சின்ன சிற்பங்களில் எப்படித்தான் இவ்வளவு அழகைக் கொண்டுவந்தாங்களோ!


கடந்து வெளிப்ரகாரத்துக்குள்  காலடி வைக்கிறோம்.  கண்ணுக்குமுன் திருவந்திக்காப்பு மண்டபம். அதுக்குப்பின் ஒரு அஞ்சுநிலைக் கோபுரத்தின் வழியா கோவிலுக்குள் போறோம்.


வாசலில் ஒரு மகளிர் குழு வரிசையா உக்கார்ந்து தேவாரப் பாடல்களைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஓதுகிறார்கள் என்று சொல்லணும், இல்லே?  கையில் புத்தகம் இருந்தது.  மாசத்தின் முதல் ஞாயிறு இந்தக் கோவிலுக்காம். இப்படி வெவ்வேற ஞாயிறுகளில் வெவ்வேறு கோவில்கள்.  அனுமதி கேட்டு க்ளிக்கினேன்.

கொடிமரம் பலிபீடம் பக்கத்தில் இருக்கும் நந்தி, சுயம்புவாம்!
பொதுவா சிவன் கோவில்களில் இருக்கும் நவகிரக சந்நிதி இங்கே இல்லை.  ஒரு சதுரமேடையில் இருக்கும் ஒன்பது குழிகளில் தீபமேத்தி இதையே நவகிரக சந்நிதியாக் கும்பிடறாங்க.
மண்டபத்தைக் கடந்து மூலவரை ஸேவிக்கப்போனால்  ஒன்பது படிகள் இறங்கித்தான் போகணும். இந்த ஒன்பது படிகளுமே நவகிரகங்கள் ஈசனுக்கு முன் தவம் செய்யும் அடையாளமாம். (படியாய் கிடந்து  உன் பவளவாய்...... காண்பேனே ! )
முன் மண்டபத்தின் ஓரத்தில் வாகனங்கள் தூசு படிஞ்ச நிலையில்.......  :-(  சித்திரையில் ப்ரம்மோத்ஸவம் வரும்போது  சுத்தம் செய்வாங்க போல. இப்ப தை தானே நடக்குது. இன்னும் மூணு மாசம் இருக்கு........  பார்த்துக்கிட்டே வரும்போது ஒரு கருட வாகனமும் கண்ணில் பட்டது!  சிவன் கோவிலில் கருடனா............  ஆஹா.....  இன்னொருக்கா உத்துப் பார்த்தால் கருடன் இல்லையோன்னு கூட சம்சயம்.....   ஒருவேளை எனக்கு மட்டும்தான் கருடனாத் தோணுதோ....  ஙே....

வெளிப்ரகாரத்தை வலம் வர்றோம்.  இங்கே இந்தக் கோவிலின் தனிச் சிறப்பான எமன் சந்நிதி! நல்ல கூட்டம்!  தீபம் கொளுத்தறதில் மக்கள் மும்முரமா இருக்காங்க. எமன் எப்படி இங்கே?

திருக்கடையூரில்  மார்க்கண்டேயரைக் கூட்டிப்போக எமன் வந்துட்டான்.  பதினாறு வரைதான் ஆயுசு என்ற கண்டிஷனோடு பிறந்தவர் இவர்.  என்னைக் காப்பாத்தறது உம் பொறுப்புன்னு  சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு கிடக்கும் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வீசுன பாசக்கயிறு  சிவலிங்கத்தையும் சேர்த்தே இறுக்குது.  அதுவரை பொறுமையா இருந்த சிவன், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு எமனைத் தன் காலால் எட்டி உதைக்கிறார்.  எமனும் எமலோகத்துப் போகும்படி ஆச்சு இந்த சம்ஹாரத்தால்!
எமன் இல்லாதபடியால்..... பூமியில் மரணம் என்பதே இல்லாமல் போய் பூ பாரம் அளவுக்கதிகமாகி, பூமாதேவியால்  தாங்க முடியாமல் ஈசனிடம் வந்து 'ஓ'ன்னு அழுதாங்க.

மனம் இரங்கிய சிவன்   (பொம்னாட்டிகள் அழுதா அவருக்குத் தாங்காது கேட்டோ!) எமனை  ஒரு குழந்தையா தன் காலடியில் பிறக்க வச்சார்.  'தர்மம் தவறாமல் நடந்துக்கோப்பா' ன்னு புத்திமதி சொல்லி எமலோகத்துக்கு அதிபதியா பதவியைத் திரும்பக் கொடுத்து அனுப்பி வச்சார்.
இங்கே எமனுக்கான சந்நிதியில் சிவன் பார்வதிக்கு நடுவில் முருகன் இருக்க, கீழே காலடியில் குழந்தை உருவில் எமன் இருக்கார்.எமனுக்கு அதிகாரம் கொடுத்ததால் அதிகாரவல்லவர் என்ற பெயருடன்  ஈசன் இருக்கார்.  படிகள் இறங்கிப்போகணும். குடவரையில் சந்நிதி.
எமனுக்குக் கிடைச்ச  நல்லது நமக்கும் கிடைக்குமுன்னு நம்புன சனம்,  இங்கே வந்து இழந்த பதவிக்காகப் பூஜை செய்யுது! இங்கே வந்து  கும்பிட்டால் எம பயம் இருக்காதுன்ற நம்பிக்கை வேற ! தகவலா எழுதிப் போட்டுருக்கு தேவஸ்தான  நிர்வாகம்! நம்பணும். நம்புனால்தான் வாழ்க்கை! நம்புனால்தான் கடவுளும்!

விளக்கு வைக்கிறது இங்கே விசேஷமாம். அதுக்கு ஒரு பட்டியல் போட்டு வச்சுருக்காங்க.  பல இடங்களில்  ஒரு விளக்கு வச்சால் இதுன்னு ஆரம்பிக்கும். இங்கே டைரக்ட்டா ஒன்பதில் இருந்துதான் ஆரம்பம். ஆயிரத்தெட்டு வரை பலன்கள் போட்டு வச்சுருக்காங்க.  அவரவருக்கு என்ன வேணுமோ அத்தனை எண்ணிக்கையில் விளக்கு வச்சுக்கிட்டு இருந்தாங்க மக்கள். இங்கேதான் முக்கால்வாசிக் கூட்டம்.  நாங்களும்  கூட்டமில்லாத சந்நிதியில் போய் ஸேவிச்சுக்கிட்டோம்.
ஈசனுக்கு  ஞீலிவனநாதர் என்ற பெயருடன் நீலகண்டேஸ்வரர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர்  என்ற பெயர்களும் உண்டு. ஞீலி என்று ஒரு வகை வாழைப்பழம் இருக்காமே.... இந்த வாழைமரத்து இலை பூ காய் கனி  எல்லாமே  மனிதர் உபயோகிக்கக் கூடாதாம். முழுசும் இறைவனுக்கேன்னு  ஸ்பெஷலா படைக்கப்பட்டதாம்.  அது நிறைந்த வாழைவனமா ஒரு காலத்துலே இருந்துருக்கு இந்த இடம்.  இப்போ இங்கே வாழைன்னா கல்வாழைதான். இதுதான் கோவிலின் தலவிருட்சமும் கூட!

திருநாவுக்கரசர் (அப்பர்) ஸ்வாமிகள் ஒரு சமயம் இங்குள்ள ஈசனைத் தேடி வர்றார்.  வரும்வழியில் களைப்பும் பசியுமா தவிக்கும் சமயம், ஒரு அர்ச்சகர்  அங்கே வந்து  கட்டுச்சோறு கொடுத்துப் பசியைப் போக்கினார்.  சாப்பிட்டு முடிச்ச  அப்பர் ஸ்வாமிகள், 'திருப்பைஞ்ஞீலி கோவில் இன்னும் எவ்வளவு தூரம்' என்று கேட்க,  'இங்கே பக்கத்தில்தான் இருக்கு. வாங்க, நானே கூட்டிட்டுப்போறேன்'னு சொல்லி வழித்துணையாக் கூடவே வந்தவர், கோவில் வளாகத்துக்குள் காலெடுத்து வைத்தவுடன் மறைந்தே போயிட்டார்!


அப்பதான் இவருக்குப் புரிஞ்சது  அன்னமிட்டு, வழித்துணையாக வந்தவர் ஈசனே என்று. இறைவனின் கருணையை நினைச்சு மனம் விம்ம ஈசனைத் துதித்தவுடன் ஈசன் இவர் முன் தோன்றி அருளி, பின் லிங்க வடிவில் இங்கேயே  கோவில் கொண்டார். இவரை 'சோற்றுடைய ஈஸ்வரர்'  என்று தனிச்சந்நிதியில் வச்சு வணங்கறதோடு, வருசாவருசம் சித்திரை  மாத அவிட்டம் நட்சத்திரத்தில் 'சோறு படைத்த விழா'  கொண்டாடறாங்க!

அம்பாளுக்கு இங்கே விசாலாட்சி என்ற பெயரும்  நீள்நெடுங்கண்நாயகி என்ற பெயரும் உண்டு.  எவ்ளோ அழகான பெயர் !

கோவில் திறந்துருக்கும் நேரம் காலை 6.30  முதல்  பகல்    1 மணி வரையும்,  மாலை 4 முதல்   8 வரையும்தான்.

பிரகாரம் சுத்திவரும்போது  செந்தாமரைக்கண்ணன் சிவனுடன் சேர்ந்தே இருக்கார். கருடவாகனம் இருக்கும் காரணம் ஒருமாதிரி புரிஞ்சது :-)

கோஷ்டத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்திக்குக் காலடியில் நந்தி  இருக்கு.
ஓரளவு பெரிய கோவில்தான்.மூணு பிரகாரம். வெளிப்ரகாரத்தில் சூதமாமுனிவர்  எலுமிச்சம்பழம் மாலை போட்டுக்கிட்டு அமர்ந்த கோலத்தில் இருக்கார்.  இன்னொரு நாலுகால்  மண்டபத்தில்   இருக்கும் பெரிய நந்தி  ரொம்ப அழகா இருக்கு.

அப்பர் மட்டுமில்லாமல் சுந்தரர்,  திருஞானசம்பந்தர்  என்று 'அந்த நால்வரில்'    மூவர் பதிகம் பாடி இருக்காங்க.


கோவில் வளாகம் சுத்தமாக இருக்குன்றதைப் பார்த்து மனசுக்குத் திருப்தியா இருந்துச்சு.   மனநிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.

தொடரும்..........  :-)



23 comments:

said...

கோயில் உலாவின்போது திருப்பைஞ்ஞீலி சென்றுள்ளேன். இன்று மறுபடியும் உங்கள் பதிவு மூலமாக. நன்றி.

said...

நல்ல பெரிய கோயிலா இருக்கே. பராமரிப்பு சுமார் தான் போல.

நிறையப் பேர் தேவார திருவாசக முற்றோதல் செய்றாங்க. அது போல இந்தப் பெண்கள் நேரம் கெடைக்கிறப்போ இந்த மாதிரி செய்றாங்க போல.

இராவணன் மேலது நீறுன்னு ஞானசம்பந்தர் அப்போ பாடுனாரு. இன்னைக்குப் பாத்திருந்தா இராவணன் மேலது தூசின்னு பாடியிருப்பாரு. அவ்வளவு தூசி போட்டோலயே பளிச்சுன்னு தெரியுது.

said...

தூணில் உள்ள சிற்ப்ங்கள் ஆஹா கலைநயம்...

அருமையான இடம்...

said...

புதிய கோவிலைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பொதுவா, பதிகம் பாடப்பெற்ற சிவன் கோவில்களில், இறைவனாரின், இறைவியாரின் பெயர் ரொம்ப தூய தமிழில் அழகாக இருக்கும். நல்லா இருக்கு.

said...

//பொம்னாட்டிகள் அழுதா அவருக்குத் தாங்காது கேட்டோ!//
ஹிஹிஹி, அரசியல்ல இதெல்லா ஜகஜம் டீச்சர் (நம்ப பெருமாள் பண்ணாததா, ஹிஹிஹி);

இந்த லைனுக்கு 4 5 லைன் முன்னால தா இதுவும் வருது

// என்னைக் காப்பாத்தறது உம் பொறுப்புன்னு சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு கிடக்கும் மார்க்கண்டேயனின் //

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.

பதிவில் தகவல்கள் சரியா இருக்குதானே?

said...

வாங்க ஜிரா.

மீடியம் சைஸ் கோவில்தான். வாகனமண்டபத்தைத் தவிர மற்ற இடங்கள் பரவாயில்லாமல் சுத்தமாத்தான் இருக்கு.

எனக்கென்னவோ... சிவன் கோவில்கள் கொஞ்சம் சுத்தமா இருப்பதாகத்தான் ஒரு தோணல்....

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நமக்குத்தான் இது புதுக்கோவில். உண்மையில் கோவிலுக்கு வயசு ரெண்டாயிரம் இருக்குமாம்!

said...

வாங்க விஸ்வநாத்.

ஆஹா...... பெருமாள் 'சேட்டைகள்' அதிகம்தான் இல்லையோ :-)

//சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு கிடக்கும் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வீசுன பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்தே இறுக்குது. அதுவரை பொறுமையா இருந்த சிவன், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு எமனைத் தன் காலால் எட்டி உதைக்கிறார். //

தன்னையும் சேர்த்து இறுக்கியதால்.... இருக்கலாம் :-)

said...

கோவில் நுழைவு முதல் நானும் உங்களை தொடர்ந்தேன், பழைய நினைவுகளோடு.

said...

இரண்டு அம்பாள்கள் உள்ளனர் இவ்வாலயத்தில். கல்யாணம் ஆகாதவர்களுக்கு அருமையான பரிகாரத்தலம் இத்தலம்.

said...

திருப்பைஞ்ஞீலி!

என்ன ஒரு பெயர்!

கோவில் சுவரில் போஸ்டர் ஓட்டுபவர்களை என்ன செய்ய! கோவிலின் பழமை மிகவும் கவர்கிறது.

said...

அழகான கோயில். அருமையான விவரங்கள். தேவாரம் ஓதும் பெண்டிர் கூடுதல் அழகு துள்சி :)

போஸ்டர் ஒட்டுபவர்களை என்ன செய்வதுன்னு ஸ்ரீராம் கேட்ட கேள்வியே எனக்குள்ளும். ஹ்ம்ம்

said...

// எனக்கென்னவோ... சிவன் கோவில்கள் கொஞ்சம் சுத்தமா இருப்பதாகத்தான் ஒரு தோணல்.... //

அப்படியாச் சொல்றீங்க? நான் போன கோயில்களை வெச்சு, எனக்கென்னவோ வைணவக் கோயில்கள் ஓரளவு பராமரிக்கப்படுதுன்னு தோணுச்சு. வைத்தீசுவரன் கோயில்லாம் கொடூரம் :(

said...

வாயில் நுழைவதே கஷ்டமாயிருக்கும் இந்தக் கோவில் போனதில்லை. எனக்குத் தோன்றுவது உங்களுக்கு பெருமாள் பக்தி அதிகம் மற்றதெல்லாம் ஒரு படிகீழேதான் நல்ல தகவல்கள்

said...

வாங்க தமிழ் இளங்கோ.

பழைய நினைவுகளை அசை போடுவதும் ஒரு சுகமே!

இதுவே எனக்குப் பழைய நினைவுதான். ஃபிப்ரவரி 7 ஆம் தேதி போன இடத்தை ( அன்று இன்னும் ஒரு அழகிய நினைவு நம் மனதில் இடம்பிடிச்சது ஞாபகம் இருக்கோ?) இப்ப நவம்பர் 15 ஆம் தேதி எழுதறேன்....

said...

வாங்க கைலாஷி.

ஆமாம்.... ரெண்டு அம்பாள் சந்நிதி!

நான் குறிப்பிடணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்து, எழுத விட்டுப்போன தகவல்.

மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

செய்யறது தப்புன்னே உணராத மாக்கள் ... :-(

தெருப்பெயர்கள் எழுதி இருக்குமிடத்தில் பெயருக்கு மேலேயே நோட்டீஸ், விளம்பரம் ஒட்டி வைக்கும் மாக்கள் :-(

இதெல்லாம் ஒரு சுதந்திரமா ?

said...

வாங்க தேனே.

யாருடைய போஸ்டர் இருக்கோ... அவுங்களுக்கு, அரசியல் போஸ்டர் என்றால் அவர்கள் சார்ந்த கட்சிக்கு நிறைய அபராதம் போடணும். நான் ஒட்டலை.....என்ற சாக்கெல்லாம் சொல்வாங்க. மன்னிப்பே கிடையாதுன்னு கடுமையான நடவடிக்கை எடுத்தாலொழிய இந்த நிலை மாறாது :-(

said...

வாங்க ஜிரா.

இக்கரைக்கு, அக்கரை பச்சையோ!!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஊரே இந்தப்பெயரில்தானே இருக்கு! வாயில் நுழைஞ்சுதானே ஆகணும்.

பெருமாள் பக்தி...... ஐயோ அது தொட்டில் பழக்கம்!

said...

ரொம்ப அருமையான கோயில்பழமைவாய்ந்தபலசிறப்புகள்உள்ளகோயில்